Oct 26, 2010

உலகை இயக்கிய முதல் கம்ப்யூட்டர் ஒரு பார்வை !!!!

இன்றைக்கு நமது கைகளுக்குள் இருக்கும் ஒரு சின்ன கைப்பேசியில் நவீன கணினியே இயங்குகிறது. அந்தத் தொழில் நுட்பத்தில் மகத்துவத்தையும், உன்னதத்தையும் நம்மில் பலரும் நினைத்துப் பார்ப்பதில்லை. ஏனெனில் அது இன்றைக்கு சந்தையில் எங்கும் கிடைக்கும் சாதாரணப் பொருளாகிவிட்டது.
இன்றைக்கு பல வீடுகளில் கணினி, தொலைக்காட்சியைப் போல மிக எளிதாய் நுழைந்து விட்டிருக்கிறது. அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், விற்பனை வளாகங்கள், வங்கிகள், ஆராய்ச்சிக் கூடங்கள், மருத்துவ நிலையங்கள் என எந்த ஒரு தளத்தை எடுத்துக் கொண்டாலும் கணினி இன்றி ஒரு அணுவும் அசையாது எனும் நிலமை இன்று நிலைபெற்று விட்டது எனலாம்.

 இன்றைக்கு இப்படி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, மிகச் சிறிய அளவில் நமது பைகளில் அமைதியாய் துயிலும் இந்த தொழில்நுட்பத்தின் ஆரம்ப வடிவம் எப்படி இருந்தது ? அதன் பின்னால் நிகழ்ந்த பல்லாண்டு கால உழைப்பு எப்படிப்பட்டது என்பதை பின்னோக்கிப் பார்க்கும் போது வியப்பு மேலிடுகிறது.
கணினித் துறையின் உயிராதாரமான பணிகளில் ஒன்று மென்பொருள் (கணினியை இயக்குவதற்குத் தேவையான புரோகிராம்கள்) எழுதுவது. இந்த வேலையைச் செய்பவர்களை “கம்ப்யூட்டர் புரோகிராமர்” என அழைக்கின்றனர்.
இப்போது நாம் பார்க்கும் கணினியின் தொடக்கம் சார்லஸ் பாபேஜ் (1791-1871) என்பவரால் உருவாக்கப்பட்டது. கணிதத்தையும் எந்திரத்தையும் இணைத்துப் பகுப்பாய்வுப் பொறி (Analytical Engine) என்ற முதல் கணினியை அவர் உருவாக்கினார்.
 கணினியின் ஆரம்ப வடிவம் மிகப்பெரிய அறைக்குள் திணிக்கப்பட்ட ஏராளமான இயந்திரங்கள் என்பதே வியப்பூட்டும் உண்மையாகும். அறுபது ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கணினியை வைக்க ஒரு மிகப்பெரிய அறை தேவைப்பட்டிருக்கிறது. இப்போது இருப்பது போல வசதிகள், மானிட்டர், கீபோர்ட் எதுவும் இல்லாத, புள்ளிகளும் கோடுகளும் இணைந்து செயல்பட்ட முதல் கணினியில் எடை ஆயிரம் கிலோ.
அந்தக் கணினியில் வேகமும், விவேகமும் மிகவும் குறைவு. தற்போதைய சாதாரண கணினிகளின் நினைவாற்றல் அந்த முதல் கணினியின் நினைவாற்றலை விட பத்து இலட்சம் மடங்கு அதிகம் என்றால் நினைத்துப் பாருங்கள்.

அவருடன் இணைந்து பணியாற்றியவர் புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞர் பைரன் என்பவரின் மகளான 'அகஸ்டா அடா கிங் ' என்பவர்
உலகின் முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர் ஒரு பெண். அவர் “அடா பைரன் லவ்லேஸ்” (1816-1852).
புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞரான பைரனின் மகள் இவர். மிகச்சிறந்த கணித அறிஞராகவும், இசைக் கலைஞராகவும் திகழ்ந்தார்.
தொடக்க கால கணிப்பீட்டுப் பொறிகளான அனலிட்டிக்கல் என்ஜின் மற்றும் டிஃபரன்ஸ் என்ஜினை வடிவமைத்தவர் சார்லஸ் பாபேஜ்.
தன்னுடைய 18 வயதில் பாபேஜ் உடன் சேர்ந்து பணியாற்றினார், அடா. பாபேஜ் “அனலிட்டிக்கல் என்ஜின்” வடிவமைப்பில் ஈடுபட்டபோது அதன் ஆற்றலை மற்றவர்களைவிட மிகச்சரியாக விளங்கிக்கொண்டார். அனலிட்டிக்கல் என்ஜினை இயக்கத் தேவையான புரோகிராம்களையும் எழுதினார்.

கணினிகள் மூலம் இசையமைக்க முடியும் என முன்னறிந்து கூறினார் அடா. கணினித்துறையில் நீங்காத இடம் பெற்றுள்ள இவர், தன்னுடைய 36 வயதில் புற்று நோய் காரணமாக உயிரிழந்தார்.
அவர் நினைவைப் போற்றும் வகையில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை 1980 இல் கணினி நிரல் மொழி (Programme language) ஒன்றுக்கு அடா (ADA) என்று பெயர் சூட்டியது.
பல வருடங்களுக்கு முன்னால் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது என்றாலும் . இந்த சாதனை அதிகரப்பூர்வமாக 1948ம் ஆண்டு ஜூன் 21ம் தியதி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது .
இந்த முதல் கணினி நிரூபித்த வினாடியே உலகில் மாபெரும் தொழில் நுட்ப, அறிவியல் விஞ்ஞான வளர்ச்சிக்கான முளை விட்ட வினாடி எனலாம். அந்த வினாடியைப் போல உன்னதமான நிமிடம் என் வாழ்வில் வந்ததில்லை என அதைக் கண்டுபிடித்த பேராசிரியர் பிரடி வில்லியம்ஸ் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.
1948 இல் டிரான்சிஸ்டர் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அதுவரை இருந்து வந்த வெற்றிடக் குழலுக்கு (Vacuum tube) விடை தரப்பட்டது; இதன் விளைவாக இரண்டாம் தலைமுறைக் கணினிகள் புழக்கத்திற்கு வந்தன.
1958 இல் ஒருங்கிணைச் சுற்றமைப்பு (Integerated cirucuit – IC) கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் மூன்றாம் தலைமுறைக் கணினிகள் வந்தன. இதனால் ஒரு சாதாரணச் சில்லைப் (Chip) பயன்படுத்தி பல கணினிப் பகுதிகளை இணைக்க முடிந்தது. ஒரு இயக்க அமைப்பினைப் (Operating system) பயன்படுத்தி பல நிரல்களை (Programmes) இயக்கும் வாய்ப்பும் உண்டாயிற்று. மேலும் நான்காம் தலைமுறைக் கணினி உருவாவதற்கும் வழி ஏற்பட்டது.
1971 இல் இன்டெல் நிறுவனம் கண்டுபிடித்த 4004 சில்லுவில் மையச் செயலகம் (Central Processing Unit – CPU), நினைவகம் (Memory), உள்ளீடு/வெளியீட்டுக் கட்டுப்பாட்டுச் சாதனங்கள் ஆகிய அனைத்தும் இடம்பெற்றன. ஃ 1981 இல் IBM நிறுவனம் தனியாள் கணினியை (Personal Computer – PC) அறிமுகப்படுத்தியது.
 1983 இல் தனியாள் கணினியை அவ்வாண்டின் சிறந்த மனிதனாக 'டைம்ஸ் ' இதழ் தேர்ந்தெடுத்தது.

பரம் 10000 என்னும் கணினி இந்தியாவில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மீக்கணினியாகும் (Super computer).
தற்போது அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள மொத்தக் கணினிகளின் எண்ணிக்கை உலகின் மற்ற எல்லா நாடுகளிலுள்ள கணினிகளின் எண்ணிக்கையைவிடக் கூடுதலாகும்.

அந்த முதல் விதை விழாமல் இருந்திருந்தால், அந்த முதல் மூளை எழாமல் இருந்திருந்தால் இன்றைக்கு நாம் காணும் பெரும்பாலான வளர்ச்சிகள் சாத்தியமில்லாமல் போயிருக்கக் கூடும்.

பேபி – என பெயரிட்டழைத்து இந்த மகத்தான கண்டுபிடிப்பை நிகழ்த்திய டாம் கில்பர்ன், அடா பைரன் லவ்லேஸ் , சார்லஸ் பாபேஜ் , மற்றும் பிரட்டி வில்லியம்ஸ் இவர்களில் யாருமே இன்று உயிருடன் இல்லை எனினும் அவர்களுடைய பெயர் வரலாற்றில் அழிக்கப்படாத நிலையில் அழுத்தமாக எழுதப்பட்டு விட்டது என்பது மட்டும் யாராலும் மறுக்கமுடியாத உண்மை .

நண்பர்களே மறக்காமல் உங்களது பின்னோட்டங்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் . நீங்கள் எழுதும் பின்னோட்டங்கள் மட்டுமே .இன்னும் பல அறிய படைப்புகளை உருவாக்க ஒரு புதிய சிந்தனையை தூண்டும் என்று நம்புகிறேன் .

Oct 24, 2010

பிராண்டட் கம்ப்யூட்டர் மற்றும் அசெம்பிள் கம்ப்யூட்டர் இதை பத்தி கொஞ்சம் தெரிஞ்சிக்கலாம் வாங்க...

இந்த தளத்தை தனது விருப்பமான இணைய தளமாக மாற்றிக்கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி !

உங்கள் அனைவருக்காகவும் எனது அடுத்த பதிவு....பொதுவாக நாம் கம்ப்யூட்டர் வாங்க நினைக்கும்போது சிலர் நமக்கு அட்வைஸ் செய்வது என்ன ? வாங்குவது வாங்குகிறீர்கள் நல்ல பிராண்டட் கம்ப்யூட்டராக பார்த்து வாங்கிவிடுங்கள் அதுதான் நல்லது என்று சொல்வார்கள். அவர்கள் சொல்வது சரிதான். ஆனால் அப்படி சொல்லும் சிலரிடம் பிராண்டட் கம்ப்யூட்டருக்கும் அசெம்பிள் ( நாமே பாகங்களை வாங்கி செட்டப் செய்யும்) கம்ப்யூட்டருக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டால் அவர்களால் அதற்க்கு சரியான விளக்கம் கொடுக்க முடியாது.
பிராண்டட் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தும் Geniun Intel Mother Board, Intel Processor, RAM, Hard Disk, DVD Drive போன்ற நல்ல பிராண்டட் பாகங்களை நாமும் வாங்கி அதனை நாமே அசெம்பிள் செய்தும் பயன்படுத்தலாம். அப்படி என்றால் பிராண்டட் கம்ப்யூட்டருக்கென்று சிறப்பு என்ன இருக்கிறது ?

அதனை பற்றி கொஞ்சம் பார்ப்போம்....கம்ப்யூட்டரை நாம் பெர்சனல் கம்ப்யூட்டர் அல்லது டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் ( PERSONAL COMPUTER (PC) or DESK TOP COMPUTER ) என்று எப்படி வேண்டுமானாலும் பெயர் சொல்லி அழைக்கலாம்.
இன்றைய கம்ப்யூட்டர் மார்கெட்டில் எந்த பிராண்டையும் குறை சொல்வதற்க்கு இல்லை. ஒவ்வொரு பிராண்டும் மற்ற பிராண்டை மிஞ்சும் அளவிற்க்கு சிறப்பான தகுதிகளை உள் அடக்கிய கம்ப்யூட்டர்களைதான் தயார் செய்துகொண்டு இருக்கிறது.

ACER / ASUS / COMPAQ / DELL / GATWAY / HP / LENOVO / LG / PACKARD BELL / SONY / TOSHIBA

இதுபோல் இன்னும் எத்தனையோ சிறந்த பிராண்ட் கம்ப்யூட்டர்கள் இன்றைய மார்கெட்டில் கிடைக்கிறது. இதில் எதை வேண்டுமானாலும் நீங்கள் வாங்கலாம்.

பிராண்டர் கம்ப்யூட்டரை வாங்குவதனால் நமக்கு கிடைக்கும் சில பயன்கள்:

1) ஒரு முழுமையான கம்ப்யூட்டருக்கு தேவையான அனைத்து விதமான பாகங்களும் ஒரே பேக்கிங்கில் கிடைத்துவிடுகிறது.

2) OS என்று சொல்லக்கூடிய ஆபரேடிங்க் சிஸ்டம் (Windows Xp, Windows Vista, Windows 7 போன்றவை) பிராண்டர் கம்ப்யூட்டர்களில் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டு அதனுடைய செலவையும் சேர்த்துதான் கம்ப்யூட்டரின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. எனவே பிராண்டட் கம்ப்யூட்டருக்கு என நீங்கள் தனியாக ஒரு OS CD ஐ வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

3) பிராண்டட் கம்ப்யூட்டரிகளிலும் Intel Original Mother Board தான் பொருத்தப்பட்டிருக்கு என்றாலும் அந்த மதர்போர்ட் சிறப்பாக செயல்படுவதற்கென சில ஸ்பெசல் செட்டப்புக்கள் சாப்ட்வேர்கள் மூலம் உருவாக்கப்பட்டு BIOS அப்டேசன் மற்றும் டிரைவர்ஸ் அப்டேசன் என பல வகை அப்டேசன்கள் மூலம் அந்த மதர்போர்டு சிறப்பாக செயல்பட வழி வகை செய்யப்பட்டுள்ளது.

4) பிராண்டர் கம்ப்யூட்டர் CPU Case -ல் பொருத்தப்பட்டிருக்கும் பவர் பாக்ஸ் SMPS (Switched-mode power supply) என்பது அதில் இனைக்கப்பட்டிருக்கும் ஹார்டுவேர்களுக்கென பிரத்யோகமாக தயாரிக்கப்பட்டு மதர்போர்ட், பிராசசர், ஹார்டுடிஸ்க், டி.வி.டி பிளேயர் என ஒவ்வொன்றிர்க்கும் மிக சரியான முறையில் அதன் கெபாசிட்டிக்கு ஏற்றவாரு மின்சாரத்தில் அளவை பிரித்து கொடுக்கும் வகையில் சிறப்பாக உருவாக்கப்பட்டு இருப்பதால் உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்டுவேர் பாகங்கள் விரைவில் கெட்டுப்போகமல் பாதுகாக்கப்படுகிறது.

5) இந்த பிராண்டட் கம்ப்யூட்டரை உருவாக்கும் சிறந்த நிறுவணங்கள் அதில் சேர்க்கக்கூடிய ஹார்டுவேர்களில் எதில் சிறந்தது என்று தேர்ந்தெடுக்கும் திறமை மிக்கவராக இருப்பதால் அவர்கள் இனைக்கும் ஹார்டுவேர் பாகங்கள் மிகவும் தரம் மிக்கதாக இருக்கும். எனவே நீங்கள் கம்ப்யூட்டர் பாகங்களை வாங்குவதில் அனுபவம் இல்லாதவராக இருந்தாலும் சிறந்த பிராண்டட் கம்ப்யூட்டர் வாங்குவதன் மூலம் சிறந்த ஹார்டுவேர் பாகங்களை வாங்கிவிடுகிறீர்கள்.


6) மேலும் இந்த பிராண்டர் கம்ப்யூட்டர்களை விற்பனை செய்யும் நிறுவணங்கள் அந்தந்த பிராண்ட் பெயரில் இனைய தளங்களை வைத்திருப்பதால் இவர்கள் உருவாக்கும் கம்ப்யூட்டர்களுக்கு அதில் இனைக்கும் ஹார்டுவேர் பாகங்கள் அனைத்துக்கும் அப்டேட் செய்யக்கூடிய டிரைவர்களை இனைய தளங்களில் அந்தந்த மாடல் நம்பருக்கு ஏற்ற வகையில் இனைத்து வைத்திருப்பார்கள். அதனால் உங்கள் ஹார்டுவேர் சம்பந்தமான டிரைவர்களை அப்டேட் செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை.

உதாரணத்திற்க்கு நீங்கள் DELL என்ற பிராண்ட் கம்ப்யூட்டரை வாங்கி இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் வாங்கிய கம்ப்யூட்டர் மாடலுக்கு தேவையான அனைத்துவிதமான டிரைவர் மென்பொருள்களும் இவர்களுடைய இணைய தளமான http://www.dell.com/ என்ற இடத்தில் கிடைக்கும் இதனை எப்பொழுது வேண்டுமானாலும் நீங்கள் டவுண்லோடு செய்துகொள்ளலாம்.

பிராண்டட் கம்ப்யூட்டர் வாங்குவதில் இத்தனை நல்ல விசயம் இருந்தாலும் நம்முடைய பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி அசெம்பிள் கம்ப்யூட்டர் வாங்கினாலே போதும் என்று நினைப்பவரா நீங்கள்.

உங்களுக்காக மேலும் சில விளக்கங்கள்.

ஒரு முழுமையான கம்ப்யூட்டரை உருவாக்கவேண்டுமென்றால் நீங்கள் வாங்கவேண்டிய அசெம்பிள் பார்ட்ஸ்கள்.


இந்த பாங்கள் அனைத்தையும் இனைக்கும் இடம்இத்தனை கம்ப்யூட்டர் ஹார்டுவேர் பாகங்கள் உங்களிடம் இருந்தால் ஒரு அசெம்பிள் கம்ப்யூட்டரை நீங்களே உருவாக்கி பயன்படுத்த ஆரம்பித்துவிடலாம்.

பழைய ஆப்பிஸ் Format-களில் இருந்து OFFICE-2007 Formatக்கு மாற்றுவது எப்படி?


மைக்ரோசாப்டின் ஆப்பிஸ் தொகுப்பானது 2007 தற்போது பரவலாக பயன்படுத்தபட்டு வருகிறன. இந்த ஆப்பிஸ் தொகுப்பில் ,பழைய ஆப்பிஸ் தொகுப்பில்  உருவாகிய Document களை ஒப்பன் செய்து பார்க்க முடியும் இதனை நாம் ஆப்பிஸ் 2007 தொகுப்பாக மாற்றி பயன்படுத்த முடியும். இதில் Word, Excel, PowerPoint போன்ற அனைத்து விதமான தொகுப்புகள் அனைதையுமே ஆப்பிஸ்-2007 க்கு மாற்றி கொள்ள முடியும்.


முதலில் ஆப்பிஸ்-2007 னை ஒப்பன் செய்து கொள்ளவும். உதாரணத்திற்கு வேர்ட்டினை ஒப்பன் செய்து கொண்டு, பழைய ஆப்பிஸ் தொகுப்பில் உருவாக்கிய பைலை ஒப்பன் செய்யவும், அப்பொழுது [Compatibility Mode] ல் பைலானது ஒப்பன் ஆகும்.


அதனை Convert செய்ய OFFICE பட்டனை அழுத்தி Convert என்ற பொத்தானை அழுத்தவும்.


இப்போது [Compatibility Mode] மறைந்து பைலானது எப்போதும் போல தோன்றும், இனி நீங்கள் பைலை SAVE செய்து கொள்ளவும்.

மைக்ரோசாப்ட் எக்ஸெல் மற்றும் வேர்டில் பாஸ்வேர்டு செட்டப் செய்வது எப்படி ?

கம்ப்யூட்டருக்கு புதியவர்களுக்கு

மைக்ரோசாப்ட் எக்ஸெல் மற்றும் வேர்டில் நாம் நமக்கு தேவையான முக்கியமான சில தகவல்களை டைப் செய்து சேமிக்க நினைக்கும்போது அதனை நம்மை தவிற வேறு எவரும் திறந்து பார்க்கக்கூடாது என்று நாம் நினைத்தால் அதற்க்கு நாம் நம் பைல்களுக்கும் பாஸ்வேர்டு செட்டப் செய்யவேண்டும்.

அந்த பாஸ்வேர்டை செட்டப் செய்வது எப்படி ?

Microsoft Excel (மைக்ரோசாப்ட் எக்ஸெல்)

மைக்ரோசாப்ட் எக்ஸெலை ஓப்பன் செய்து நீங்கள் ஒரு செய்தியை டைப் செய்து முடித்துவிட்ட பிறகு இங்கு குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ள Save As என்ற இடத்தை கிளிக் செய்யுங்கள் அடுத்து Excel workbook என்பதை கிளிக் செய்யுங்கள்.

அப்படி கிளிக் செய்ததும் இங்கு மேலே உள்ளதுபோல் Save As என்று ஒரு தட்டு ஓப்பன் ஆகும் இதில் நான் குறிப்பிட்டுள்ள General Options என்ற இடத்தை கிளிக் செய்யுங்கள்.

உடனே உங்களுக்கு இங்கு மேலே காண்பதுபோல் General Options என்ற தலைப்பில் ஒரு சிறிய தட்டு ஓப்பன் ஆகும். இதில் நீங்கள் Password to Open என்ற இடத்தில் மட்டும் நீங்கள் விரும்பும் ஒரு பாஸ்வேர்டை டைப் செய்யுங்கள். டைப் செய்த பிறகு அதன் கீழே உள்ள ok என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.

உடனே உங்களுக்கு அதன் அருகிலேயே மேலே காண்பதுபோல் Confirm Password என்று ஒரு தட்டு ஓப்பன் ஆகும். அதிலும் நீங்கள் முன்பு டைப் செய்த அதே பாஸ்வேர்டை மறுபடியும் டைப் செய்யுங்கள். பிறகு அதன் கீழே உள்ள ok என்ற பட்டனை கிளிக் செய்து அந்த தட்டை மூடிவிடுங்கள்.

பிறகு இங்கு குறிப்பிட்ட இடத்தில் உங்கள் பைலுக்கு பெயர் ஒன்றை டைப் செய்துவிட்டு அடுத்ததாக குறிப்பிட்டுள்ள Save என்ற பட்டனை அழுத்தி இந்த தட்டையும் மூடிவிடுங்கள். அவ்வளவுதான் இனி உங்கள் பைலுக்கு நீங்கள் பாஸ்வேர்டு சரியாக கொடுத்தால் தான் ஓப்பன் ஆகும். பாஸ்வேர்டை நீங்கள் மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
Microsoft Word (மைக்ரோசாப்ட் வேர்டு)
அதேபோல் மைக்ரோசாப்ட் வேர்டுக்கும் Save As சென்று Word Document என்பதை கிளிக் செய்யுங்கள்.

பிறகு General Options செல்லுங்கள்.

பிறகு இங்கு குறிப்பிட்ட இடத்தில் பாஸ்வேர்டு டைப் செய்து ok பட்டனை கிளிக் செய்யுங்கள்.

மறுபடியும் ஒரு முறை அதே பாஸ்வேர்டை டைப் செய்யுங்கள்.


பிறகு உங்கள் பைலுக்கு பெயர் கொடுத்து Save பட்டனை அழுத்துங்கள். அவ்வளவுதான்.

பிறகு உங்கள் வேர்டு பைலை கிளிக் செய்து ஓப்பன் செய்தால் இதுபோல் பாஸ்வேர்டு கேட்க்கும். நீங்கள் கொடுத்த பாஸ்வேர்டை டைப் செய்து ok பட்டனை கிளிக் செய்யுங்கள்.


உடனே இதுபோல் உங்கள் பைல் ஓப்பன் ஆகிவிடும்.
இந்த முறைப்படி நீங்கள் ஏற்கனவே உருவாக்கி வைத்த பைல்களையும் ஓப்பன் செய்துகொண்டு அதற்க்கு பாஸ்வேர்டு கொடுத்துக்கொள்ளலாம்.
முயற்ச்சி செய்து பாருங்கள் வெற்றி நிச்சயம்.

கூகிள் டாக் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது எப்படி ?

( கம்ப்யூட்டருக்கு புதியவர்களுக்கு)


.நாம் நம் நண்பர்களிடமும் நம் உறவினர்களிடமும் கம்ப்யூட்டரில் சாட்டிங் செய்வதென்றால் ரெம்பவும் மகிழ்ச்சி அடைவோம். அதிலும் கூகிள் டாக்கில் சாட் செய்வதென்றால் கூடுதல் சந்தோசம்தான்.

கூகிள் டாக் நம் கம்யூட்டரில் அதிக இடத்தை அடைத்துக்கொள்ளாமல் அதிக கெபாசிட்டியை எடுத்துக்கொள்ளாமல் சிறப்பாக பயன்படும் மென்பொருள். இது சாட்டிங் செய்வதற்க்கு மிகவும் சிறந்த மென்பொருளாக இருந்தாலும் இதனை முழுமையாக பயன்படுத்த தெரியாதவர்களுக்கு சிரமமாகத்தான் தெரியும்.


நீங்கள் கூகிள் டாக் பற்றி அதிகம் தெரியாதவராக இருந்தால் இந்த பதிவில் கூகிள் டாக் பற்றி உங்களுக்கு என்னால் முடிந்த சில விளக்கங்கள் கொடுத்துள்ளேன். இந்த விளக்கங்களை தெரிந்துகொண்டு நீங்களும் கூகிள் டாக்கை சிறப்பாக பயன்படுத்துங்கள்.முயற்ச்சி செய்து பாருங்கள் வெற்றி நிச்சயம்.

நன்றி அன்புடன் :இராஜா