Nov 15, 2010

Excel Tips: பயனுள்ள கேமரா கருவி!

Excel 2007 பயன்பாட்டில் நம்மில் பலரும் அறியாத ஒரு பயனுள்ள கருவி Camera Tool ஆகும். இந்த கட்டளை கருவி எக்சல் பயன்பாட்டில் உள்ள எந்த ரிப்பன் மெனுவிலும் காணப்படாததால் இதை குறித்து பலரும் அறிந்திருக்க நியாயமில்லை. 

இந்த கருவியின் பயன் என்ன என்பதை முதலில் பார்க்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட ஷீட்களைக் கொண்ட ஒரு எக்சல் கோப்பை உருவாக்குகிறீர்கள். முதல் ஷீட்டில் உள்ள ஒரு குறிப்பிட்ட செல் ரேஞ்சை மட்டும் ஒரு படமாக எடுத்து மற்றொரு ஷீட்டில் ஆவணத்திற்காக தேவையான இடத்தில் படமாக இணைத்துக் கொள்ளலாம். இதிலுள்ள முக்கிய வசதி என்னவெனில், இப்படி ஒருமுறை படமாக Capture செய்யப்பட்டு, மற்றொரு ஷீட்டில் Paste செய்யப்பட்ட படத்தின் மூலமான,  cell group இல் நீங்கள் ஏதாவது மாறுதல்களை செய்யும் பொழுது, தானாகவே அந்த paste செய்யப்பட்ட படத்திலும் டைனமிக்காக மாற்றம் அப்டேட் செய்யப்படும் என்பது இதனுடைய சிறப்பம்சமாகும்.

இந்த கருவியை முதலில், உங்கள் எக்சல் பயன்பாட்டில் உள்ள Quick Access Toolbar இல் இணைக்க வேண்டும். இதற்கு எக்சலில் இடது மேற்புறமுள்ள Office Button க்கு அருகாமையில் உள்ள Quick Access Toolbar இல் உள்ள கீழ்புறம் நோக்கிய அம்புக்குறியை க்ளிக் செய்து, More Commands பொத்தானை அழுத்தவும்.
அடுத்து திறக்கும் Excel Options திரையில், Choose commands from லிஸ்ட் பாக்ஸில், Commands Not in the Ribbon  என்பதை க்ளிக் செய்யுங்கள். இப்பொழுது விரிவாக்கப்படும் கட்டளைகளில், Camera ஐ தேர்வு செய்து Add பொத்தானை அழுத்தவும்.

இப்பொழுது Camera கருவி Quick Access Toolbar இல் இணைக்கப்பட்டுவிடும்.

இனி தேவையான செல்களை தேர்வு செய்து Quick Access Toolbar இல் நாம் இணைத்த கேமரா பொத்தானை அழுத்தவும். பிறகு, பேஸ்ட் செய்ய வேண்டிய ஷீட்டிற்கு சென்று, க்ளிக் மற்றும் ட்ராக் செய்யும் பொழுது, நாம் தேர்வு செய்திருந்த செல்கள் அனைத்தும் ஒரு படமாக (picture) இங்கு இணைக்கப்பட்டுள்ளதை கவனிக்கலாம்.

இதே போன்று எக்சல் அல்லாத பயன்பாடுகளில், பேஸ்ட் கட்டளை மூலமாக, இந்த படங்களை பேஸ்ட் செய்ய முடியும்.இவ்வளவு நாள் தெரியாம போச்சே!

Microsoft Word 2007 : அவசியம் அறிந்துகொள்ளவேண்டியது.

நாம் அன்றாடம் பயன்படுத்தி வரும் மைக்ரோசாப்ட் வேர்டு 2007 தொகுப்பில், Default ஆக Calibri என்ற எழுத்துருவும், எழுத்துருவின் அளவு 11 புள்ளிகளாகவும், மற்றும் Default paragraph spacing 10 புள்ளிகளாகவும் இருக்கும். 

இதனால் அவரசமாக ஒரு கடிதம் உருவாக்கவோ, அல்லது ஏதேனும் ஆவணங்களை உருவாக்கும் பொழுதும், இதனை நமது தேவைக்கு மாற்றியமைக்க வேண்டிய நிலை உள்ளது. 2003 பதிப்பை பயன்படுத்தி வந்தவர்களுக்கு, ஒவ்வொரு முறையும் இதனை மாற்றியமைப்பது ஒரு வித எரிச்சலூட்டும் வேலையாகும். (கீழே உள்ள படத்தில் default paragraph spacing பிரச்சனையினால் ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் உள்ள இடைவெளியை கவனியுங்கள்.)

வழக்கமாக இந்த பிரச்சனைக்கு, ஒவ்வொருமுறையும், அனைத்தையும் தேர்வு செய்து வலது க்ளிக் செய்து Paragraph பகுதிக்கு சென்று,

Don't add space between paragraphs of the same style எனும் Check box ஐ க்ளிக் செய்து சரி செய்ய வேண்டியிருக்கும். இதே போலத்தான் எழுத்துரு மற்றும் அளவு. இது ஒவ்வொரு முறையும் புதிய டாக்குமெண்டை உருவாக்கும் பொழுதும் நாம் சந்திக்கிற பிரச்சனை. இதற்கான தீர்வு என்ன என்பதை பார்ப்போம். 

மைக்ரோசாப்ட் வேர்டு தொகுப்பை திறந்து கொண்டு, Home Ribbon டேபில், Change Styles என்ற பொத்தானுக்கு கீழே உள்ள வலப்புறம் நோக்கிய சிறிய அம்புக்குறியை க்ளிக் செய்யுங்கள்.இப்பொழுது திறக்கும் styles வசனப் பெட்டியில், கீழே உள்ள Manage Styles என்ற பொத்தானை க்ளிக் செய்திடுங்கள்.

அடுத்து திறக்கும் Manage Styles திரையில், Set Defaults டேபை க்ளிக் செய்யுங்கள்.

இப்பொழுதுள்ள திரையில் தேவையான Font மற்றும் Font size ஐ மாற்றிக்கொள்வதுடன், Paragraph Spacing பகுதியில் After என்பதற்கு நேராக உள்ள லிஸ்ட் பாக்ஸில் Auto என்பதை தேர்வு செய்து பின்னர், கீழே உள்ள New Documents based on this template என்பதை தேர்வு செய்து OK பொத்தானை சொடுக்குங்கள்.

அவ்வளவுதான். இதற்கு மேலாக நீங்கள் உருவாக்கும் டாக்குமெண்ட்களில் இந்த பிரச்சனை வராது. 

விண்டோஸ் 7/விஸ்டாவில் அலுப்புதரும் அறிவிப்பை நீக்க

விண்டோஸ் ஏழு மற்றும் விஸ்டா பயனாளர்கள் தங்களது இயங்குதளத்தில் அடிக்கடி ஒரு அறிவிப்பை பார்த்திருக்கலாம். Program Compatibility Assistant என்ற வசனப் பெட்டியில் 'This Program might not have installed correctly' என்ற பிழைச் செய்தி  அந்து குறிப்பிட்ட மென்பொருள் வேலை செய்தாலும் கூட, அவ்வப்பொழுது வந்து உங்களுக்கு அலுப்பைத் தந்திருக்கலாம்.

இந்த PCA என்கிற Program Compatibility Assistant கணினியை புதிதாக உபயோகிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை ஏற்படுத்துவதற்கு தேவை என்றாலும், தொடர்ந்து கணினியை உபயோகிப்பவர்கள் பெரும்பாலும் இந்த அறிவிப்பை (நமக்குத்தான் தெரியுமே.. பிறகு என்ன திரும்ப திரும்ப.. ) விரும்புவதில்லை. இதனை நீக்க என்ன செய்யலாம்?

விண்டோஸ் 7 / விஸ்டாவில் சர்ச் பாக்ஸில் gpedit.msc என டைப் செய்து Local Group Policy Editor ஐ திறந்து கொள்ளுங்கள். இதன் இடது புற பேனில் கீழ்கண்ட பகுதிக்கு செல்லுங்கள். 

User Configuration 
Administrative Templates
Windows Components
Application Compatibility

இனி இதன் வலது புற பேனில் Turn off Compatibility Assistant என்பதை க்ளிக் செய்யுங்கள். 

இப்பொழுது திறக்கும் திரையில் enabled என்பதை தேர்வு செய்து Apply மற்றும்  Close   கொடுங்கள். 

இனி உங்களுக்கு இந்த அறிவிப்பின் தொல்லை இருக்காது.

விண்டோஸ் 7 பூட் மெனுவில் தேவையற்ற OS என்ட்ரிகளை நீக்க

இப்பொழுது பலரும் தங்களது கணினிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட இயங்குதளங்களை நிறுவிக் கொள்கிறார்கள். உதாரணமாக ஒரே கணினியில் விண்டோஸ் 7 மற்றும் உபுண்டு போன்ற இயங்குதளங்களை dual boot வகையில் நிறுவிக் கொள்கிறார்கள். அதில் பலர் அந்த இரண்டு இயங்குதளங்களிலும் பணிபுரிந்தாலும் ஒரு சிலர், சில நாட்களுக்குப் பிறகு போரடித்து உபுண்டு தான் இப்பொழுது அதிகம் பயன் படுத்துவதில்லையே, அதை கணினியிலிருந்து நீக்கி விட்டால் என்ன? என்ற உந்துதலில், உபுண்டுவை நீக்கி விடுகிறார்கள்.

எல்லாம் சரிதான். ஆனால் உபுண்டு இயங்குதளம் நீக்கப்பட்டாலும் விண்டோஸ் 7 பூட் மெனுவில் ubuntu வும் பட்டியலிடப்பட்டிருக்கும். 

இந்த பூட் மெனுவிலிருந்து  ubuntu வை நீக்குவதற்கு சில மென்பொருள் கருவிகள் இருந்தாலும், இதனை விண்டோஸ் 7 -ல் உள்ளிணைந்த  bcdedit  என்ற கட்டளை கருவி கொண்டு எப்படி நீக்குவது என்று பார்க்கலாம். 

விண்டோஸ் 7 -ல் All Programs > Accessories பகுதிக்கு சென்று command prompt ஐ வலது க்ளிக் செய்து Run as Administrator -ல் க்ளிக் செய்யுங்கள். 

இப்பொழுது திறக்கும் Command prompt -ல் bcdedit என டைப் செய்து என்டர் கொடுங்கள். இப்பொழுது உங்கள் விண்டோஸ் 7 பூட் மெனுவில் உள்ள விவரங்கள் உங்கள் திரையில் தோன்றும். 

இதில் எந்த என்ட்ரியை நீக்க வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். உதாரணமாக, இதில் இறுதியாக உள்ள Ubuntu (பார்க்க description  Ubuntu) ஐ நீக்க வேண்டும் என வைத்துக் கொள்வோம். (முக்கிய குறிப்பு:- உபுண்டு மிக மிக பயனுள்ள ஒரு சுதந்திர இலவச இயங்கு தளமாகும். இதை நீக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கட்டுரை எழுதப்படவில்லை என்பதை மனதில் கொள்ளுங்கள். ஒரு சில வாசகர்களின் சந்தேகத்தை போக்குவதே இந்த கட்டுரையின் நோக்கம். விண்டோஸ் விஸ்டா / 7 அனைத்தையும் விட்டு விட்டு உபுண்டு பயன்படுத்த துவங்குங்கள் என்பதே எனது தனிப்பட்ட ஆலோசனை

இங்கு identifier என்பதற்கு நேராக உள்ள குறியீட்டை கவனியுங்கள். இதை நினைவில் வைப்பதோ அல்லது எழுதி வைப்பதோ சற்று சிரமம் என்பதால், ஒரு எளிய வழியை பார்க்கலாம். command prompt மெளஸ் கர்சரை எங்காவது வைத்து வலது க்ளிக் செய்து context மெனுவில் Mark என்பதை க்ளிக் செய்யுங்கள். 

இப்பொழுது மெளசின் இடது பட்டனை க்ளிக் செய்தபடி, identifier க்கு நேராக உள்ள குறியீட்டை முழுவதுமாக ட்ராக் செய்து தேர்வு செய்து கொள்ளுங்கள். 

தேர்வு செய்த பின்னர் என்டர் கீயை தட்டுங்கள். இப்பொழுது நீங்கள் மார்க் செய்த குறியீடு கிளிப் போர்டில் காப்பி செய்யப்பட்டிருக்கும். இனி command prompt -இல்
bcdedit  /delete 
என்று டைப் செய்யுங்கள் /delete அடுத்து ஒரு space இருக்கட்டும் (இப்பொழுது என்டர் தட்ட வேண்டாம்). Command prompt இல் எங்காவது வலது க்ளிக் செய்து context menu வில் Paste கொடுத்து என்டர் கொடுங்கள்.  (பேஸ்ட் கொடுத்தவுடன் முன்னர் கிளிப் போர்டில் நாம் காப்பி செய்து வைத்த குறியீடு  /delete இற்கு அடுத்து வரும்)

இப்பொழுது அந்த உபுண்டுவின் எண்டரி விண்டோஸ் 7 பூட் மெனுவிலிருந்து நீக்கப் பட்டிருக்கும். மறுபடியும் bcdedit கட்டளையை கொடுத்து பார்த்தால், உபுண்டு நீக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

இனி உங்கள் கணினியை ரீ ஸ்டார்ட் செய்து பார்த்தால் பூட் மெனு வராது, உங்கள் நேரம் மிச்சப் படுத்தப்படும்.

உங்கள் கணினி பிரச்சனைகளுக்கு இலவச Microsoft Fix it Center இல் தீர்வு

நமது கணினியில் உள்ள இயங்குதளத்தில் அவ்வப்பொழுது ஏதாவது பிரச்சனைகள் வருவது வாடிக்கைதான். கணினி திடீரென வேகம் குறைவது, தொங்குவது (அதாங்க Hang ஆவறது), ஆடியோ வராமலிருப்பது, மை கம்ப்யூட்டரில் ட்ரைவ்கள் காணாமல் போவது, எழுத்துருக்களை நிறுவமுடியாமல் போவது, இணைய உலாவி (Internet Explorer)  இல் பிரச்சனை (கொடுக்கும் வலை முகவரி வேறு, திறக்கும் பக்கம் வேறு) என பல பிரச்சனைகள் வருவதுண்டு.

இது போன்ற பிரச்சனைகளை இனம் கண்டு கொள்வதற்கும், தீர்வு காண்பதற்கும் நிறைய அனுபவம் தேவைப்படுகிறது. ஒரு சராசரி கணினி பயனாளரால் இவற்றை சரி செய்ய இயலுமா? இயலும் என்கிறது Microsoft  Fix it Center. மைக்ரோசாப்ட் நிறுவனம் பல வருடங்களாக சிறு சிறு பிரச்சனைகளுக்கு Fix it script களை தனது தளத்தில் வெளியிட்டு வந்தது. தற்பொழுது இவையனைத்தையும் உள்ளடக்கிய Microsoft Fix it Center (Beta) மென்பொருள் கருவியை வெளியிட்டுள்ளது. இது முற்றிலும் இலவசம் என்பது சிறப்பான விஷயம். (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது) 

இந்த மென்பொருள் Windows XP, Vista & Windows 7 ஆகிய மூன்றிலும் பயன்படும்படி வடிவமைக்கப் பட்டுள்ளது. 

இதனை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவும் பொழுது, ஒரு சில அத்தியாவசியமான கருவிகளை அதுவாகவே தரவிறக்கம் செய்து பதிந்து கொள்ளும்.    

விண்டோஸ் எக்ஸ்பியில் .NET 2.0 நிறுவப் படாமல் இருந்தால் கீழே உள்ளது போன்ற செய்தி வரும், இதில் Yes பட்டனை க்ளிக் செய்து பதிந்து கொள்ளலாம்.
பிறகு இந்த wizard இல் வருகின்ற recommended செட்டிங்க்ஸ்களை பின்பற்றுங்கள். உங்களுக்கு Online கணக்கு வேண்டும் எனில் மைக்ரோசாப்ட் தளத்தில் உருவாக்கி கொள்ளலாம். Send information about this computer to Microsoft Fix it center online என கேட்கும் பொழுது No தேர்வு செய்வது நல்லது. 

இனி Microsoft Fix it center இயங்கும் பொழுது உங்கள் கணினியில் உள்ள பிரச்சனைகள் பட்டியலிடப்படும். இவற்றில் முழு விவரம் அறிய அதற்கு நேரான detail பட்டனை க்ளிக் செய்து பார்க்கலாம்.  

தேவையான பிரச்சனையை சரி செய்ய run பொத்தானை க்ளிக் செய்து சரி செய்யலாம். தற்பொழுது இது பீட்டா வடிவில் வெளியிடப்பட்டுள்ளதால் உங்கள் கணினியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யும் என எதிர்பார்க்க கூடாது.  பெரும்பாலான பிரச்சனைகளுக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும் என நம்பலாம். 