Feb 22, 2011

லேசர் கற்றையை நிறுத்தும் கருவி கண்டுபிடிப்பு

லேசர் கற்றையை நிறுத்தும் கருவி கண்டுபிடிப்பு
லேசர் ஒளிக்கற்றையை நிறுத்தும் உலகின் முதல் கருவியை யேல் பல்கலைகழகத்தின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அதிசக்தி வாய்ந்த லேசர் ஆயுதங்களை தடுக்கும் நோக்கத்துடன் இந்தக் கருவியை உருவாக்கவில்லை என ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர். அடுத்த சந்ததியினரின் சூப்பர் கம்ப்யூட்டர்களில் எலக்ட்ரானுக்கு பதிலாக ஒளி பயன்படுத்தப்படும் பட்சத்தில் தங்களது கண்டுபிடிப்பு பயன்படும் என அவர்கள் கூறினர்.
யேல் பல்கலைகழகத்தின் பேராசிரியர் டக்ளஸ் ஸ்டோன் மற்றும் அவரது குழுவினர் லேசருக்கு எந்த பொருட்கள் அடிப்படையாக உள்ளன என்பது குறித்து துவக்கத்தில் ஆய்வு செய்தனர். லேசர் வடிவமைப்பில் சமீபத்தில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
பாரம்பரிய லேசர் செயல்பாட்டுடன் அவை பொருந்துவதாக இல்லை. எனவே ஒரு லேசரை உருவாக்குவதற்கு எவை பயன்படுகின்றன என்பது குறித்து ஆய்வு செய்தோம் என டக்ளஸ் கூறினார்.
இந்த குழுவினர் கண்டறிந்த புதிய கருவி குறிப்பிட்ட அலை வேகத்தில் உள்ள 2 லேசர் கற்றைகளின் மீது கவனம் செலுத்துவதாக இருக்கிறது. சிலிகானில் உருவாக்கப்பட்ட இக்கருவி லேசரை திரும்ப பரவ செய்து செயலிழக்க செய்யும்.

விண்வெளி, காலநிலை, வளிமண்டலவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உலகின் மிகச் சிறந்த இடம்

விண்வெளி, காலநிலை, வளிமண்டலவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உலகின் மிகச் சிறந்த இடம்
இது நோர்வேயில் உள்ள ஸவல்பார்ட் தீவு. கிறீன்லாந்துக்கும், வட துருவத்துக்கும் இடையில் இந்தத் தீவு அமைந்துள்ளது.

உலகிலேயே மிகவும் சுத்தமான மற்றும் தெளிவான வளிமண்டலப் பிரதேசம் உள்ள இடம் இதுவாகும்.

அத்தோடு விண்வெளி, காலநிலை மற்றும் வளிமண்டல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உலகிலேயே மிகச் சிறந்த இடம் இதுவென்றே கருதப்படுகின்றது.

இங்கு தற்போது பல விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பக் கருவிகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

எட்டாவது உலக அதிசயமாக நியூசிலாந்து ரொடோ ஏரிக் கட்டிடத்தலம்

எட்டாவது உலக அதிசயமாக நியூசிலாந்து ரொடோ ஏரிக் கட்டிடத்தலம்
8th 
wonder Rotorua lake buildings of New Zealandஇந்தியாவின் தாஜ்மகால், சீனாவின் பெருஞ்சுவர் உள்ளிட்ட ஏழு உலக அதிசயங்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. தற்போது எட்டாவது உலக அதிசயமாக நியூசிலாந்தில் உள்ள ரொடோ மாகானா ஏரிக்குள் மூழ்கி கிடக்கும் மொட்டை மாடி கட்டிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை 60 மீட்டர் ஆழத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. இவை 19 ம் நூற்றாண்டை சேர்ந்தவை எனறு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எரிமலைகளின் சீற்றத்தால் கடந்த 125 ஆண்டுகளுக்கு முன்பு ஏரிக்குள் மூழ்கியிருக்கலாம் என கிவி மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

தண்ணீருக்குள் மூழ்கி கிடக்கும் இந்த மொட்டை மாடிக் கட்டிடங்கள், இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் ராட்சத கேக் வடிவத்தில் உள்ளது. அது கடந்த 1886 ம் ஆண்டு ஏரிக்குள் மூழ்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த ஏரியானது நியூசிலாந்தின் ஜியோ தெர்மல் பகுதியில் உள்ள வடக்கு தீவில் அமைந்துள்ளது. இதை தண்ணீருக்குள் மூழ்கி பார்க்க அதி நவீன ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. இதன் மூலம் நியூசிலாந்து சுற்றுலா வளர்ச்சி பெறும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

டவர் இல்லாமல் செயல்படும் மொபைல்போன் கண்டுபிடிப்பு

டவர் இல்லாமல் செயல்படும் மொபைல்போன் கண்டுபிடிப்பு
Mobile 
phone works without cell tower operationsமொபைல்போன் டவர்கள் மூலமாக சிக்னல்களை பெற்று தான் தற்போது மொபைல் போன்கள் இயங்கி வருகின்றன. டவர்கள் இல்லாவிட்டால் மொபைல் போன்கள் இயங்காது. ஆனால் அமெரிக்க விஞ்ஞானிகள் டவர்கள் இல்லாமலேயே செயல்படக் கூடிய நவீன செல்போன் தொழில் நுட்பத்தை அவர்கள் உருவாக்கி உள்ளனர். பிளைண்டர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் செயல்படும் சர்வதேச குழு சாப்ட்வேர் ஒன்றை உருவாக்கி உள்ளது.

இந்த சாப்ட்வேர் அழைப்புகளை ஒரு மொபைல் போனில் இருந்து இன்னொரு மொபைல் போனுக்கு ரிலே செய்ய உதவும். இதன் மூலம் டவர்கள் இல்லாமலேயே செல்போன்கள் இயங்கும். ஒரே ஒரு ஆபரேடிவ் டவர் மட்டும் இருக்கும். அதோடு எல்லா மொபைல் போன்களும் இணைக்கப்பட்டு இருக்கும். செயல்படும் (ஆபரேடிவ்) டவரில் இருந்து சிக்னல்கள் பெறப்பட்டு அவை சிக்னல்கள் இல்லாத பகுதிகளுக்கு மொபைல் போன்கள் மூலமாகவே அஞ்சல் செய்ய இந்த நவீன சாப்ட்வேர் உதவும்.

வைரஸ்களைக் கண்டறிய ஒரு கையடக்கக்கருவி

வைரஸ்களைக் கண்டறிய ஒரு கையடக்கக்கருவி
ஒருவர் வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என்பதை சில நிமிடங்களில் கண்டுபிடிக்கக்கூடிய ஒரு கருவியை ட்வெண்டி பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த ஆஸ்டெண்டம் என்னும் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
மாதிரிக்கருவி மட்டுமே இப்போது உருவாக்கப்பட்டுள்ளது. வணிகரீதியிலான கருவி 2010 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரும். இந்தக்கருவி அதிவேகத்தில் இயங்கி வைரஸ்களைக்கண்டுபிடிப்பது மட்டுமின்றி எங்கும் எளிதில் எடுத்துச்செல்லக்கூடியதாக இருப்பது ஒரு கூடுதல் சிறப்பு.
Virus Detector ஒவ்வொரு நுண் உயிரியுடனும் வினைபுரியக்கூடிய ஓர் எதிர் உயிரி உண்டு. இந்த எதிர் உயிரியை நாம் ஏற்பி (receptor) என்கிறோம். கருவியில் உள்ள நுண்குழாய்களில் இந்த ஏற்பி உட்பூச்சாக பூசப்பட்டிருக்கும். இப்போது பீதியைக்கிளப்பி வரும் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு எதிர் உயிரி கண்டுபிடிக்கப்பட்டவுடன் ஒரு சில நிமிடங்களில் வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதை இந்தக்கருவியைக்கொண்டு தெரிந்து கொள்ளலாம். பயங்கரமான வைரஸ்நோய்கள் வேகமாகப்பரவுவதை தடுப்பதற்காக இதுபோன்ற விரைவான சோதனைக்கருவிகள் அவசியம் இல்லையா
வைரஸ்கள் இருப்பதைக்கண்டுபிடிப்பது மட்டுமின்றி, பாக்டீரியா, புரதங்கள் மற்றும் டி என் ஏ மூலக்கூறுகள் இவற்றையும் இந்தக் கருவியைக்கொண்டு கண்டுபிடிக்க இயலும். இக்கருவியை பயன்படுத்துவோருக்கு சிறப்புப்பயிற்சிகள் ஏதும் தேவையில்லை என்பது கூடுதல் சிறப்பு.
இந்தக்கருவியில் இரண்டு பகுதிகள் உள்ளன. முதற்பகுதி ஒரு சின்னஞ்சிறிய ஆய்வகத்தை உள்ளடக்கிய ஒளிஉணரும் ‘சில்லு’ (chip) ஆகும். இரண்டாவது பகுதி எளிதில் எடுத்துச்செல்லக்கூடிய ஒரு (portable detector) ஏற்பியாகும். ‘சில்’லில் உள்ள பல்வேறு துளைகள் வழியாக சோதனைக்கு உட்படுத்தப்படுபவரின் இரத்தம் அல்லது எச்சில் மாதிரி உள்ளே செலுத்தப்படுகிறது. இந்த துளைகளின் உட்புறம் நுண் உயிரிகளுடன் வினைபுரியும் ஏற்பிகள் உட்பூச்சாக பூசப்பட்டுள்ளன. குறிப்பிட்ட அதிர்வெண்கொண்ட லேசர் ஒளிக்கற்றையும் இந்த நுண் உயிரிகளுடன் அனுப்பப்படுகிறது. ஏற்பிகளாகிய எதிர் உயிரிகளுடன் வைரஸ்கள் வினைபுரியும்போது லேசர் ஒளிக்கற்றையின் அதிர்வெண் மாறுபடுகிறது. இக்கருவியில் பெறப்படும் அளவீடுகள் மிகநுண்ணியதாக இருப்பதால் குறிப்பிட்ட வைரஸை இனங்காணுவது மிக எளிதான காரியம். மேலும் ஒவ்வொரு வைரஸிற்கும் வெவ்வேறு அளவில் இந்த அதிர்வெண் மாற்றம் இருக்கும்.

ஹார்ட்டிஸ்க் இட பற்றாகுறை ..?

ஹார்ட்டிஸ்க் இட பற்றாகுறை ..?
கணினி வாங்கும் பொழுது நீங்கள் போதுமான கொள்ளளவு கொண்ட ஹார்ட்டிஸ்க் வாங்கி இருப்போம். பெரும்பாலானோர் வீடியோ , மென்பொருள்களை தரவிறக்கி உபயோகித்து விட்டு அவற்றை அளிக்க மறந்து இருப்போம். நாளடைவில் பாடல்கள், வீடியோ கோப்புகள், மென்பொருள்கள் என்று பெரிய கோப்புகளால் ஹார்ட்டிஸ்க் நிரம்பி வழிய ஆரம்பித்து விடும்.அதிக இடம் எடுத்து கொண்டுள்ள கோப்புகள் எங்கு சேமித்து வைத்தோம் என்று மறந்து இருப்போம். அந்நேரங்களில் உங்கள் கணினியும் வேலை செய்ய திணறும். "Low Disk Space" என்று எச்சரிக்கை செய்தி தரும்.இத்தருணங்களில் கணினியில் தேங்கி உள்ள கோப்புகளை தேடி கண்டுபிடித்து அளிக்க வேண்டும்.ஹார்ட்டிஸ்கில் எங்கு பெரிய அளவு கொண்ட கோப்புகள் இருக்கின்றன என்பதை கண்டறிவது கடினமான விஷயம். இந்த பெரிய கோப்புகளை அழித்தாலே பெரும்பாலான இடத்தை காலியாக வைத்து கொள்ளலாம்.இதனை செய்ய Primitive File Size Chart என்ற இலவச மென்பொருள் உதவுகிறது. இதனை இந்த லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள். இதனை இன்ஸ்டால் செய்ய தேவை இல்லை. தரவிறக்கிய கோப்பை திறந்தாலே போதுமானது.
இது விண்டோஸ் 2000/2003/XP/Vista/7 இயங்குதளங்களில் இயங்கும். இதன் மூலம் நீங்கள் பெரிய கோப்புகளை , அவை உள்ள போல்டர்களை கண்டறியலாம். பின்பு அந்த போல்டர்களுக்கு சென்று அந்த கோப்புகளை அழித்து கணினியின் ஹார்ட்டிஸ்க் இடத்தை மிச்சப்படுத்தி கொள்ளுங்கள்.

Feb 20, 2011

பூட்டாகாத கணினியை யுஎஸ்பி வாயிலாக உயிரூட்டுவது எப்படி

பூட்டாகாத கணினியை யுஎஸ்பி வாயிலாக உயிரூட்டுவது எப்படி

பூட்டாகாத கணினியை யுஎஸ்பி வாயிலாக உயிரூட்டுவது எப்படி?

எப்பொழுதுமே நமது கணினியானது Hard Disk ( வன் வட்டு ) இன் உதவியில் boot ஆகி இயங்க ஆரம்பிக்கும்.
Boot என்பது கணினியை ஆரம்பிக்கும் செயல்.

ஏதாவது பிரச்சினைகளால் நமது கணினி Boot ஆகாமல் தவிக்க நேரிடலாம். அப்போது Floppy,CD,DVD வாயிலாக boot செய்து கணினியைத் துவக்கி பிரச்சினையை ஆராய்ந்து தீர்வைத் தேடலாம்.

ஆனால் பல நேரங்களில் நம்மிடம் Boot Floppy யோ, வேறு Booting நினைவகங்களோ இல்லாமல் இருக்கும். இன்றைய தலைமுறை இணைஞர்களிடம் USB கருவிகள் கண்டிப்பாக இருக்கின்றன. இவர்களுக்காகப் பிரத்தியேகமாகப் படைக்கப்பட்டிருக்கிறது ஒரு இயங்குதளம்.

இந்த இயங்குதளத்தை உங்கள் USB நினைவகத்தில் ஏற்றிவிட்டு, அதன்மூலமே கணினியை Boot செய்வது மட்டுமின்றி, கணினியையே இயக்கலாம்.செயலிழந்து கிடந்த கணினியை இந்த USB யில் இருந்தபடி boot செய்து இயக்கி உங்களது பழைய தகவல்களை மீட்டெடுக்கலாம்.

கோப்பு இங்கே

WinRar கொண்டு இதை விரித்தெடுத்தபிறகு கிடைக்கும் Readme.txt கோப்பைப் படித்து அதன்படி செயல்படவும்..

ஹார்ட் டிஸ்க் அன்றிலிருந்து இன்று வரை

ஹார்ட் டிஸ்க் அன்றிலிருந்து இன்று வரை
நம் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் தான் அனைத்து டேட்டாக்களும் பதிவு செய்யப்படுகின்றன. இங்குதான் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமர்ந்து கொண்டு கம்ப்யூட்டரை இயக்குகிறது. ஏறத்தாழ 50 ஆண்டுகளா கத்தான் ஹார்ட் டிஸ்க் கம்ப்யூட்டரின் ஓர் இன்றியமையாத உறுப்பாக இயங்கி வருகிறது. கம்ப்யூட்டர் பயன்பாடு வந்த தொடக்கத்தில் ஹார்ட் டிஸ்க் என்பதே இல்லை. இப்போது 2 டெராபைட் கொள்ளளவு கொண்ட ஹார்ட் டிஸ்க்குகள் வந்துள்ளன. ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை 1 ஜிபிக்கும் குறைவான அளவுள்ள ஹார்ட் டிஸ்க்குகளே புழக்கத்தில் இருந்தன.

ஹார்ட் டிஸ்க்கின் விலை வேகமாகச் சரிந்து, தற்போது யாவரும் வாங்கும் வகையில் மலிவாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஒரு ஹார்ட் டிஸ்க் பதிந்து கொள்ளும் டேட்டா அளவு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த ஹார்ட் டிஸ்க் வந்த பாதையினை தொடக்கம் முதல் இங்கு காணலாம்.

1956

ஐ.பி.எம். நிறுவனம் தன்னுடைய RAMAC 305 என்ற சிஸ்டத்தில் மிகப் பெரிய அளவிலான கொள்ளளவுடன் கூடிய ஹார்ட் டிஸ்க்கினை இணைத்து அறிமுகப்படுத்தியது. இந்த மிகப் பெரிய கொள்ளளவு எவ்வளவு தெரியுமா? 5 எம்.பி. அப்போது அது உண்மையிலேயே மிகப் பெரிய அளவிலான திறன் தான். ஒரு எம்பி டேட்டா கொள்ளளவிற்கு 10 ஆயிரம் டாலர் விலை எனக் குறிக்கப்பட்டது. இதன் திட அளவு இரண்டு ரெப்ரிஜிரேட்டர் அளவிற்கு இருந்தது. இதில் 24 அங்குல அளவுள்ள 50 பிளாட்டர்கள் இருந்தன.

1961

ஐ.பி.எம். ஹார்ட் டிஸ்க்கிற்கான டிரைவ் ஹெட் காற்றில் இருக்கும் வகையில் அமைத்தது.

1961

பைரண்ட் கம்ப்யூட்டர் 90 எம்பி திறனுடன் ஹார்ட் டிஸ்க்கைக் கொண்டு வந்தது. 39 அங்குல அகலத்தில் 24 டிஸ்க்குகள் கொண்டதாக இது அமைந்திருந்தது.

1963
முதல் முதலாக கம்ப்யூட்டர் சிஸ்டத்திலிருந்து வெளியே எடுக்கக் கூடிய ரிமூவபிள் ஹார்ட் டிஸ்க்கினை ஐ.பி.எம். உருவாக்கியது. இதன் திறன் 2.69 எம்.பி.; 14 அங்குல அளவில் 6 பிளாட்டர்கள் இருந்தன.

1966

புதுவிதமான ரெகார்டிங் ஹெட் கொண்ட ஹார்ட் டிஸ்க்க்னை ஐ.பி.எம். உருவாக்கியது. திறன் 29.17 எம்.பி.

1971

ட்ரேக் சர்வோ சிஸ்டம் கொண்ட முதல் ஹார்ட் டிஸ்க்கினை ஐ.பி.எம். கொண்டு வந்தது. இது 100 எம்பி திறன் கொண்டிருந்தது.

1973

நவீன வின்ச்செஸ்டர் ஹார்ட் டிரைவினை ஐ.பி.எம். கொண்டு வந்தது. 14 அங்குல பிளாட்டர்கள் 11 இருந்தன. திறன் 100 எம்பி.

1975

ஐ.பி.எம். 62 ௲ ரோட்டரி ஆக்சுவேட்டருடன் வந்த முதல் ஹார்ட் டிஸ்க். 5 அல்லது 9 எம்பி திறனுடன் அமைந்தது.

1976

43 எப்.டி. கிறிஸ்டல் என்னும், முதல் வளைந்து கொடுக்கக் கூடிய டிஸ்க் டிரைவ்; இரு பக்கமும் எழுதக் கூடியது. 8 அங்குல அகலத்துடன் 0.568 எம்பி கொள்ளளவு கொண்டது.

ஷுகார்ட் அசோசியேட்ஸ் என்னும் நிறுவனம் முதல் 5.25 அங்குல அகலத்தில் ப்ளெக்ஸிபிள் டிஸ்க்கினைக் கொண்டு வந்தது. இதில் 0.2188 எம்பி டேட்டா பதியலாம்.

1979

பியுஜிட்ஸு நிறுவனம் 10.5 அங்குல அகலத்தில் ஹார்ட் டிஸ்க் டிரைவினைத் தந்தது. ஆறு பிளாட்டர்கள் உள்ளன.

ஸீகேட் டெக்னாலஜிஸ் நிறுவனம் எஸ்.டி. 506 என்ற 5.25 அங்குல ஹார்ட் டிஸ்க்கினை 5 எம்.பி திறனுடன் கொண்டு வந்தது. இதில் 4 பிளாட்டர்கள் இருந்தன.

1980
முதல் கிகாபைட் அளவிலான ஹார்ட் டிஸ்க். ஐ.பி.எம். கொண்டு வந்த இந்த ஹார்ட் டிஸ்க் ஒரு ரெப்ரிஜிரேட்டர் அளவு இருந்தது. 250 கிலோ எடையுடன் 40 ஆயிரம் டாலர் மதிப்பு கொண்டிருந்தது.

1981

சோனி நிறுவனமும் டிஸ்க் தயாரிப்பு பணியில் இறங்கியது. 3.5 அங்குல ப்ளெக்ஸிபில் டிஸ்க்கினைக் கொண்டு வந்தது.கொள்ளளவு திறன் 0.4375 எம்பி.

1983

ரோடிம் முதல் 3.5 அங்குல ஹார்ட் டிஸ்க்கினைத் தயாரித்து வழங்கியது.இதில் இரண்டு பிளாட்டர்கள் இருந்தன. அளவு 10 எம்பி.

1986

அதிக திறனுடன் இயங்கும் ஸ்கஸ்ஸி ஹார்ட் டிஸ்க் டிரைவுடன் ஆப்பிள் நிறுவனத்தின் மேக் கம்ப்யூட்டர் வெளியானது.

1988

கானர் நிறுவனம் ஒரு அங்குல உயரத்திலான 3.5 அங்குல ஹார்ட் டிரைவினைத் தயாரித்து வழங்கியது. இன்று வரை இதுதான் லேப்டாப் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படுகிறது. முதலில் இது 31 எம்பி திறன் கொண்டதாக அமைந்தது.

1992

ஸீ கேட் நிறுவனம் அதிர்வுகளைத் தாங்கக் கூடிய முதல் 2.5 அங்குல டிஸ்க் டிரைவினைத் தயாரித்து வழங்கியது.

1993

முதல் 7200 ஆர்.பி.எம். வேக ஹார்ட் டிஸ்க் டிரைவினை (Barracuda ST12550) ஸீ கேட் தயாரித்து வழங்கியது. இதில் 3.5 அங்குல அளவிலான பிளாட்டர்கள் பத்து அமைந்திருந்தன.

1996

மிக அதிக அளவிலான ஸ்டோரேஜ் டென்சிட்டி கொண்ட மீடியத்தினை ஐ.பி.எம். தந்தது. ஒரு சதுர அங்குல இடத்தில் நூறு கோடி பிட் டேட்டாவினை இதில் அமைக்க முடியும்.

1997

ஸீகேட் முதல் 10,000 ஆர்.பி.எம். வேக ஹார்ட் டிஸ்க் டிரைவினை வழங்கியது. முதலில் 3.5 அங்குல பிளாட்டர்களுடனும் பின் 3 அங்குல பிளாட்டர்களுடனும் அமைந் திருந்தது.

1999
மைக்ரோ டிரைவ் என அழைக்கப்படும் மிகச் சிறிய ஹார்ட் டிஸ்க்கினை ஐ.பி.எம். வழங்கியது. இதில் ஒரு அங்குல பிளாட்டர்கள் இருந்தன. ஒரு பிளாட்டரில் 340 எம்.பி. டேட்டா பதிய முடிந்தது.

2000
அதிவேக இயக்கத்துடன், 15000 ஆர்.பி.எம்., ஹார்ட் டிஸ்க் டிரைவினை ஸீ கேட் தயாரித்து வழங்கியது.

2002

பெர்பென்டிகுலர் மேக்னடிக் ரெகார்டிங் டெக்னாலஜி அடிப்படையில் ஹார்ட் டிஸ்க் இயங்க முடியும் என ஸீ கேட் காட்டியது. இதன் மூலம் ஒரு சதுர அங்குல சிப்பில் 100 கிகா பிட்ஸ் தகவல்களைப் பதிய முடியும்.

2005

ஹிடாச்சி முதல் 500 ஜிபி ஹார்ட் டிஸ்க்கினை வெளியிட்டது.

2006

நோட்புக் கம்ப்யூட்டர்களில் பயன்படக் கூடிய Momentus 5400.3 என்னும் 2.5 அங்குல முதல் ஹார்ட் டிரைவினை ஸீ கேட் தந்தது. இதன் கொள்ளளவு திறன் 160 ஜிபி.

Barracuda 7200.10 7200.10 என்ற பெயரில் 750 ஜிபி திறன் கொண்ட ஹார்ட் டிரைவினை ஸீ கேட் வெளியிட்டது.

2007

முதல் 1 டெரா பைட் ஹார்ட் டிஸ்க்கினை ஹிடாச்சி நிறுவனம் டெஸ்க் ஸ்டார் 7கே 1000 என்ற பெயரில் வெளியிட்டது. இதில் 3.5 அங்குல அளவிலான பிளாட்டர்கள் ஐந்து இருந்தன. ஒவ்வொரு பிளாட்டரும் பி.எம்.ஆர். தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி 200 ஜிபி டேட்டாவினைப் பதிந்தன.

2008

லேப் டாப் கம்ப்யூட்டரில் பயன்படுத்த ஹிடாச்சி, 2. 5 அங்குல அளவிலான ஹார்ட் டிரைவினைத் தந்தது. இதில் இரண்டு பிளாட்டர்கள் 5,400 ஆர்.பி.எம்.வேகத்தில் சுழன்றன.

2009

வெஸ்டர்ன் டிஜிட்டல் முதல் 2 டெரா பைட் ஹார்ட் டிஸ்க்கினைக் கொண்டு வந்தது. நான்கு 3.5 அங்குல பிளாட்டர்கள் இதில் உள்ளன. ஒரு பிளாட்டரில் 500 ஜிபி டேட்டா பதியமுடியும்.

வெஸ்டர்ன் டிஜிட்டல் மேலும் ஒரு சாதனையை மேற்கொண்டது. முதல் 1 டெரா பைட் ஹார்ட் டிஸ்க்கினை 2.5 அங்குல அகலத்தில் தயாரித்தது. லேப்டாப்பில் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தக்கூடிய இதன் பெயர் ஸ்கார்ப்பியோ புளு.

ஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி

ஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி
ஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி?

உங்கள் கணினியை வேறு எவருக்கேனும் விற்பனை செய்யும் போது கணினியில் உள்ள கோப்புகளை சுத்தமாக அழித்து விட்டு கொடுப்பீர்கள். அழிக்கும் போது Shift + Delete பயன்படுத்தினால் சுத்தமாக அழிந்துவிடும் என்று நினைத்து அழிப்பார்கள்.

ஆனால் இப்போது மீட்டு எடுக்கும் மென்பொருள்கள் கொண்டு (Recovery Software ) அழித்த கோப்புகளை திருடி அடுத்தவரின் அந்தரங்கத்தை மேய்வதில் நிறைய பேருக்கு விருப்பம். அதனால் கோப்புகளை அழிக்கும் போது அல்லது ஹார்ட் டிஸ்கை Format செய்ய வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு இந்த இரண்டு மென்பொருள்கள் உதவும். இந்த மென்பொருள்களை கொண்டு அழிக்கும் போது மறுபடியும் கோப்புகள் கிடைக்காதவாறு துடைத்து விடும்.

1.Eraserதரவிறக்கம் செய்ய.

2.Kill Diskதரவிறக்கம் செய்ய.

கணினியை ஒரே வினாடியில் ஷட்டவுன் செய்ய

கணினியை ஒரே வினாடியில் ஷட்டவுன் செய்ய
கணினியை ஒரே வினாடியில் ஷட்டவுன் (SHUTDOWN) செய்ய...

http://linoj.do.amபொதுவாக கணினியில் உள்ள ஷட்டவுன் வசதியை பயன்படுத்தி அணைக்கும் பொழுது "Saving your settings" , "Windows is Shutting down" போன்ற செய்திகள் வரும்.சில நிமிடங்களுக்கு பின்னர் தான் கணினி அணைக்கப்படும்.இதெல்லாம் மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்யும் கண்கவர் வித்தைகள் தான் . கணினியை அணைக்க சில வினாடியே போதுமானது . இந்த கண்கவர் வித்தைகளை பார்க்க விரும்பாதவர்கள் கீழ்க்கண்ட முறையை பயன்படுத்தி ஒரு சில வினாடியில் கணினியை அணைக்கலாம் . எந்த சேதமும் ஏற்படாது.

உங்கள் கணினியின் Task Manager ரை திறந்து கொள்ளுங்கள். ( Ctrl + Alt + Delete விசைகளை சேர்த்து அழுத்தினால் Task Manager திரைக்கு வரும் )

இந்த Task Manager ல் உள்ள மெனுவில் Shut Down ல் உள்ள Turn Off என்பதை Ctrl கீயை அழுத்திக்கொண்டே கிளிக் செய்யுங்கள் .

வினாடியில் கணினி அணைந்து விடும்.

ஹார்ட் டிஸ்க் பார்டிசன்களை எளிமையாக நிர்வாகிக்க

ஹார்ட் டிஸ்க் பார்டிசன்களை எளிமையாக நிர்வாகிக்க
ஹார்ட் டிஸ்க் பார்டிசன்களை எளிமையாக நிர்வாகிக்க :-

முதலில் பார்டிசன் என்றால் என்ன என்பதை பார்ப்போம். கணினியில் உள்ள ஹார்ட்டிஸ்க் பெரிய கொள்ளளவில் வரும் போது அதனை நம் வசதிக்கேற்ப வெவ்வேறு அளவுகளில் பல பகுதிகளாக பிரித்து கொள்ளலாம். அதுதான் பாடிசன் எனப்படுகிறது. புரியும் படி சொல்ல வேண்டுமெனில் கணினியில் ஹார்ட்டிஸ்க் 80GB அளவுள்ளதாக கொள்வோம்.
அதனை நம் பயன்பாட்டுக்கு C: - 20GB , D: - 30GB , E: - 30GB என்று வேண்டிய அளவுகளில் பிரித்து கொள்ளலாம். உபயோகிக்கும் போது C: - இயங்குதளம் , D: - மென்பொருள்கள் , E: - பாடல்கள் , வீடியோ என்று சேமித்து விருப்பப்படி உபயோகித்து கொள்ளலாம்.

பெரும்பாலும் இவை நீங்கள் கணினி வாங்கும் போதே செய்யப்பட்டு வந்து விடும். இதில் எனக்கு ஒரு பிரச்சினை தோன்றியது. C: -ல் 20GB மட்டும் இருந்ததால் நிறுவும் மென்பொருள்களால் நிறைந்து நாளடைவில் Disk is full என்று வந்து விட்டது. D: -ல் அதிகமான இடம் இருந்தாலும் அதனை C: -க்கு நகர்த்துவது கடினமான காரியம்.

இது போன்ற தருணங்களில் முன்பு FDISK எனும் DOS டூலை உபயோகித்து வந்தேன். மொத்த ஹார்ட்டிஸ்க்கையும் திரும்ப பிரித்து C: அதிகமாகவும் D: , E: அளவு குறைவாகவும் நிறுவ வேண்டி இருந்தது. இந்த டூலை உபயோகிக்கும் போது ஹார்ட்டிஸ்க்கில் இருந்த அனைத்து தகவல்களும் அழிந்து விடும். மீண்டும் format செய்து புதியது போல் இயங்குதளம் நிறுவி உபயோக படுத்த வேண்டி இருக்கும். :(

ஆனால் Easeus Partition Master மென்பொருளை அறிந்து கொண்ட பிறகு இந்த வேலை மிக எளிதாயிற்று. இதன் மூலம் எளிய வழி முறைகள் மூலம் பார்டிசன் அளவுகளை கூட்டலாம் / குறைக்கலாம். பார்டிசன்களை அப்படியே காப்பி செய்து கொள்ளலாம். புதிய பாடிசன்களை உருவாக்கலாம். பார்டிசன்களை நீக்கலாம். ஏற்கனவே உள்ள பார்டிசன்களை இரண்டாக பிரிக்கலாம். மேலும் பல வசதிகள் உள்ளன. பார்டிசன்களை Format செய்து கொள்ளலாம்.

இவை அனைத்தையும் உங்கள் ஹார்ட்டிஸ்கில் எவ்வித தகவல் இழப்பும் (Data Loss) இன்றி செய்ய முடியும். இந்த மென்பொருள் இல்ல பயனர்களுக்கு (Home Use) முற்றிலும் இலவசம். இதனை இந்த லின்க்கில் சென்று தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள். இது விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 2000, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7 இயங்குதளங்களில் இயங்கும்.மேலும் ஸ்க்ரீன்ஷாட்கள் .இத்தனை உபயோகித்து உங்கள் ஹார்ட்டிஸ்க் பார்டிசன்களில் தேவைக்கு ஏற்ப மாற்றங்கள் செய்து கொள்ளுங்கள். மாற்றங்கள் செய்த பின்பு மாற்றங்கள் சேமிக்கப்பட்டு உங்கள் கணினியை மீண்டும் துவக்க (Restart) சொல்லும். கணினி மீண்டும் துவங்க ஆரம்பிக்கும் போது நீங்கள் செய்த மாற்றங்கள் செயல்படுத்த படும்.

முக்கிய குறிப்பு : சோதித்து பார்க்கும் போது உங்கள் கணினியில் ஏதேனும் முக்கிய கோப்புகள் / தகவல்கள் இருந்தால் அவற்றை USB டிரைவிலோ, DVD யிலோ Backup எடுத்து கொள்ளவும். நீங்கள் தெரியாமல் ஏதேனும் தவறுகள் செய்ததால் தகவல்களை இழக்க நேரிடலாம்.

download


எல்.இ.டி' தொழில்நுட்பம்

எல்.இ.டி' தொழில்நுட்பம்
நாளுக்கு நாள் பெருகி வரும் தொழில்நுட்ப வளர்ச்சி நமக்கு புதிய அம்சங்களை தந்து வருகிறது.

அந்த வகையில் மனிதனின் வாழ்க்கையில் ஒரு குடும்ப உறுப்பினரை போல் ஆகி விட்ட டி.வி தொழில்நுட்பத்தில் இப்போது அதி உயர்வகை தொழில்நுட்பமாக இருந்து வருவது எல்.சி.டி என்னும் தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய எல்.சி.டி டிவிக்கள் தான்.

டி.வி தொழில்நுட்பத்தை பொருத்தவரை முதலில் சாதாரண வகை டிவிக்கள் வந்தன, இவைகள் பெரும்பாலும் மிக அதிக கனத்துடன் கூடியதாக இருக்கும்,அடுத்ததாக 'பிளாட்'என்று சொல்லப்படுகின்ற டி.விக்கள் வந்தன,இந்தவகை டி.விக்கள் முன்பக்கம் தட்டையாக பார்ப்பதற்கு நல்ல வடிவமைப்புடன் இருக்கும்.அதற்கு அடுத்த படியாக 'ஸ்லிம்' என்று சொல்லப்படுகின்ற டி.விக்கள்.வந்தன.இந்த வகை டி.விக்கள் அதிக கனம் இல்லாமல் எடை குறைவாக இருக்கும்.

அதற்கு அடுத்தபடியாக "பிளாஸ்மா" என்று அழைக்கப்படுகின்ற தொழில்நுட்பத்தில் டிவி.க்கள் வந்தன, இந்த வகை டி.விக்கள் மிக அகன்ற திரையுடன் காட்சியளிக்கும், சாதாரண வகை டி.வியுடன் ஒப்பிடும் போது இதன் திரைக்காட்சிகள் அற்புதமாக இருக்கும்.பிளாஸ்மாவின் முன்னேற்றமாக இப்போது சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் தொழில்நுட்பம் தான் 'எல்.சி.டி'.

மிக எடை குறைவான, அகன்ற திரையுடன், அதிநுட்பமான புள்ளிகள் இல்லாத திரைக்காட்சிகளை கலர்புல்லாக காட்டக்கூடிய டி.வியாக இந்த வகை டிவிக்கள் சந்தையில் விற்பனையில் சக்கைபோடு போடுகின்றன, இந்த வகை டிவிக்கள் சந்தையில் அறிமுகமான பொது அதிக விலையில் விற்கப்பட்டது.

ஆனால் பல்வேறு நிறுவனங்களும் இதில் போட்டி போட்டதால் இதன் விலை படிப்படியாக குறைந்து கிடைக்கின்றன.இந்த தொழில்நுட்பம் அறிமுகமானபோது பிளாஸ்மா வகை டிவிக்கள் விற்பனை குறைந்தது,மேலும் பிளாஸ்மாவுடன் ஒப்பிடும்போது எல்.சி.டி தொழில்நுட்பம் உயர்ந்ததாக உள்ளது.

ஆனால் இப்போது எல்.சி.டி தொழில்நுட்பத்தையும் தூக்கி சாப்பிடும் புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகிவிட்டது, அதுதான் 'எல்.இ.டி'தொழில்நுட்பத்தை உள்ளடைக்கிய எல்.இ.டி டிவி. இனி சந்தையில் இந்த வகை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படும் டி.விக்கள் தான் போட்டியில் களமிறங்கும்.

இந்த வகை டி.விக்களில் அகன்ற திரை, படங்களை மிகத்துல்லியமாக காட்டும்(high resulation picture engine, இன்டர்நெட் டி.வி,யு.எஸ்.பி போர்ட்,Wireless LAN Adaptor Support ,100/200Hz என்ற வேகத்தில் செல்லக்கூடிய திரைக்காட்சிகள் போன்ற புதிய தொழில்நுட்ப வசதிகள் உண்மையிலேயே நம் வாழ்க்கையை இன்னும் பரவசப்படுத்துவதாக அமையும் என்று சொன்னால் அது மிகையாகாது.

இந்தியாவை பொறுத்தவரை "சாம்சங்" நிறுவனம் தான் முதல்முறையாக இந்த வகை டி.விக்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது, ஆனால் விலை மட்டும் மிக மிக அதிகமாக உள்ளது.

இது அறிமுகப்படலம் என்பதால் விலை அதிகமாக உள்ளது, போட்டி நிலவும் போது விலையும் தானாக குறைந்து விடும். அதுவரை பொறுத்திருப்போமே?

USB Devices ஐ பாதுகாப்பாக கணனியிலிருந்து அகற்றுவதற்கான ஒரு இலவச மென்பொருள்USB Removable Devices ஐ எமது கணனியிலிருந்து பாதுகாப்பாக அகற்றுவது அவசியம். இல்லாதுவிடில் உங்கள் USB Drives களிலிருந்து சிலவேளைகளில்தரவுகளோ, கோப்புக்களோ( documents and folder) காணாமல் போகும் சந்தர்ப்பங்கள் உள்ளன. எனவே உங்கள் கணனியிலிருந்து USB Devices பாதுகாப்பாக அகற்றப்படுவது மிக அவசியம்.அவ்வாறு உங்கள் USB Devices ஐ பாதுகாப்பாக நீக்குவதற்கு என பிரத்தியேகமாக சில மென்பொருட்கள் உள்ளன. அத்தகைய ஒரு இலவச மென்பொருள் தான் USB Safely Remove.


மென்பொருளை உங்கள் கணனியில் நிறுவியதன் (Install) பின்னர் கணனியில் System Tray இல் ICON ஒன்று தோன்றும். அதில் அழுத்தி (CLICK) USB Devices ஐ பாதுக்காப்பாக உங்கள் கணனியிலிருந்து அகற்றி கொள்ளுங்கள்.
மென்பொருள் தரவிறக்க சுட்டி: Download USB Safely Remove.

Feb 9, 2011

உங்கள் தோழனாக கண்ட்ரோல் பேனல்…

உங்கள் தோழனாக கண்ட்ரோல் பேனல்…
நம் கம்ப்யூட்டர் வீட்டில் பொருட்களை அமைத்து அவற்றைப் பயன்படுத்தி அதிக பட்ச பயன்கள் பெறும் வகையில் விண்டோஸ் நமக்குத் தரும் ஓர் இடம் கண்ட்ரோல் பேனல் ஆகும். இதன் பகுதிகள் மற்றும் அவை தரும் செயல்பாடுகளை உணர்ந்து கொண்டு இயக்கினால் தான் நாம் நம் கம்ப்யூட்டரில் அதிக பட்ச பயன்களைப் பெற முடியும்.
முதலில் கண்ட்ரோல் பேனல் பகுதியில் என்ன என்ன அமைக்கப் பட்டிருக்கிறது என்று பார்க்கலாம்.ஸ்டார்ட் (Start) பட்டனைக் கிளிக் செய்து வரும் மெனுவில் கண்ட்ரோல் பேனலைத் (Control Panel) தேர்ந்தெடுத்து என்டர் செய்திட கண்ட்ரோல் பேனல் கிடைக்கும். விண்டோஸ் எக்ஸ்பி வைத்திருப் பவர்களுக்கு கேடகிரி வியூ மற்றும் கிளாசிக் வியூ (Classic View / Category View)   என இரு வகைகளில் கிடைக்கலாம். இதில் கிளாசிக் வியூவினைத் தேர்ந்தெடுத்து வியூவை மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு மாற்றிக் கொள்வதற்கான வசதி கண்ட்ரோல் பேனல் கட்டத்தில் இடது பக்கப் பிரிவில் மேலாகத் தரப்பட்டுள்ளதைக் காணலாம். அதில் கிளிக் செய்து கிளாசிக் வியூவைப் பெறவும். விண்டோஸ் 95 அல்லது 98 பயன் படுத்தியவர்களுக்கு இந்த ஒரு வியூ மட்டுமே கிடைப்பதால், அதனை வைத்திருப் பவர்களுக்குப் பிரச்னை இருக்காது.
சிஸ்டம்: கண்ட்ரோல் பேனல் தொகுப்பில் மிக மிக முக்கியமான ஒரு பிரிவு உள்ளதென்றால் அது சிஸ்டம் (System)  எனப் பெயரிடப் பட்டதுதான். உங்களுடைய கம்ப்யூட்டர் செயல்பாட்டின் பெரும் பகுதியைக் கட்டுப்படுத்தும் அனைத்தும் இந்த பிரிவில் தான் உள்ளன. இதன் மீது இரண்டு முறை கிளிக் செய்தால் ஏழு டேப்கள் அடங்கிய ஒரு டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் முதலாவது General  என்ற டேப் ஆகும். இதில் நீங்கள் பயன்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எது எனக் காட்டும். உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்துள்ள சர்வீஸ் பேக் எதுவென்றும் இங்கு தெரிந்து கொள்ளலாம். இவற்றுடன் கம்ப்யூட் டரில் உள்ள பிராசசர், அதன் வேகம், கம்ப்யூட்டரின் மெமரியின் அளவு ஆகிய வையும் தெரிய வரும். உங்கள் கம்ப்யூட்டரில் ஏதேனும் பிரச்னை என்றால் அது குறித்து ஆய்வு செய்கை யில் இவை உங்களுக்குப் பயன்படும். கம்ப்யூட்டரில் ஏதேனும் பழுது ஏற்பட்டு அது குறித்து உங்கள் மெக்கானிக் டெலிபோனி லேயே சில தகவல்கள் கேட்டால் அப்போது இதனைப் பார்த்துத் தான் தகவல்களைத் தர வேண்டியதிருக்கும்.
கம்ப்யூட்டர் நேம் (Computer Name) : அடுத்ததாக உள்ள கம்ப்யூட்டர் நேம் என்னும் டேப் உங்கள் கம்ப்யூட்டர் ஹோம் நெட்வொர்க்கில் இணைந்திருந்தால் உதவிடும்.
ஹார்ட்வேர் (Hardware): அடுத்ததாக உள்ள ஹார்ட்வேர் என்னும் டேப்பைக் கிளிக் செய்து கம்ப்யூட்டரின் உள்ளே மற்றும் வெளியே இணைக் கப்பட்டுள்ள சாதனங்களைச் சோதனை செய்திடவும் மாற்றி அமைத்திடவும் முடியும். இதனைக் கிளிக் செய்தால் வரும் திரையில் டிவைஸ் மேனேஜர் (Device Manager) என்று ஒரு பிரிவு கிடைக்கும். இதனை இயக்கினால் கம்ப்யூட்டரில் உள்ள சாதனங்களின் பட்டியல் கிடைக்கும். இவற்றில் முக்கியமானவை – டிஸ்க் டிரைவ்கள், மானிட்டர், நெட்வொர்க் கார்டு, மோடம், ஸ்கேனர், யு.எஸ்.பி. கண்ட்ரோலர்ஸ் ஆகியவை ஆகும். இந்த ஒவ்வொன்றிலும் அதன் உட் பிரிவுகளாக என்ன உள்ளது என்று அறிய விரும்பினால் அதன் இடது ஓரம் உள்ள + (பிளஸ்) அடையாளத்தின் மீது கிளிக் செய்தால் அதன் பிரிவுகள் கிடைக்கும். எந்த ஒரு சாதனத்தின் பெயர் அருகே ஒரு மஞ்சள் வண்ண ஆச்சரியக் குறி இருக்கிறதோ அந்த சாதனம் சரியாகச் செயல்பட வில்லை என்று பொருள். நீங்கள் சர்வீஸ் இஞ்சினியர் யாரிடமாவது உங்கள் கம்ப்யூட்டர் சாதனம் செயல்படா தன்மை குறித்து பேசப் போகிறீர்கள் என்றால் இவற்றை எல்லாம் குறித்து வைத்துக் கொண்டு பேச வேண்டும். டிவைஸ் மேனேஜர் செட்டிங்ஸ் எதனையும் அவற்றின் நிலை தெரியாமல் மாற்றுவது தவறு. இதனால் ஒழுங்காகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கம்ப்யூட்டரும் செயல்படாமல் போகலாம். அடுத்த பிரிவில் உள்ள டிரைவர் சைனிங் பட்டன் உங்கள் கம்ப்யூட் டருக்கு மைக்ரோசாப்ட் அங்கீகாரம் செய்யாத டிரைவர் களை அதன் சாதனங்களுக்குப் பயன்படுத்தும் வழியைத் தருகிறது. இதனை அப்படியே கிடைத்தது போல்
(Default)  வைத்திருப்பது நல்லது. அடுத்ததாக உள்ள விண்டோஸ் அப்டேட் பட்டனைக் கிளிக் செய்து வைத்தால் உங்கள் கம்ப்யூட்டர் இன்டர்நெட்டில் இணைந்திருக்கையில் கம்ப்யூட்டர் தானாக மைக்ரோ சாப்ட் நிறுவனம் தந்திருக்கும் டிரைவர்கள் மற்றும் பேட்ச் பைல்களை டவுண்லோட் செய்து கம்ப்யூட்டரில் பதிந்து விடும். இதனை கிளிக் செய்து வைத்திருப்பது நல்லது. அடுத்து உள்ள அட்வான்ஸ்டு டேப் (Advanced Tab)
நீங்கள் எதிர் பார்ப்பது போல சிக்கலானது ஒன்றுதான். நீங்கள் கம்ப்யூட் டரை செட் செய்வதில் எக்ஸ்பர்ட் ஆக இல்லை என்றால் இதனை எதுவும் செய்திடாமல் வைப்பது நல்லது. பெர்பார்மன்ஸ் (Performance) பிரிவில் கிளிக் செய்தால் ஒரு டயலாக் பாக்ஸ் கிடைக்கும். அதில் உள்ள செட்டிங்ஸ் (Settings)  பட்டன் ஓரளவிற்குச் சில அமைப்பு களை மாற்றம் செய்திட உதவிடும். விண்டோஸ் செயல்பாட்டில் உள்ள விசுவல் எபக்டுகளை, (எடுத்துக்காட்டாக ட்ரான்ஸ்பரன்சி, ஷேடோஸ் போன்றவை) மாற்றலாம். ஆனாலும் “Let Windows choose what’s best for my Computer” என்று இருப்பதைத் தேர்ந்தெடுத்து டிக் அடையாளம் ஏற்படுத்தி விட்டு சிவனே என்று இருப்பதுதான் நல்லது. இதில் உள்ள Remote  டேபை இயக்கினால் கம்ப்யூட்டர் இஞ்சினியர் எங்கோ ஓர் இடத்தில் அமர்ந்து கொண்டு உங்கள் கம்ப்யுட்டருள் புகுந்து அதன் செட்டிங்ஸை மாற்றும் வழியைத் தரலாம். ஆனால் எதற்கு இந்த வீண் வேலை என்றிருப்பதே நல்லது.
ஹார்ட்வேர் இணைத்தல்: விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டமானது உங்கள் கம்ப்யூட்டரில் எந்த ஒரு ஹார்ட்வேர் சாதனத்தை இணைத்தாலும் உடனே புரிந்துகொண்டு அந்த ஹார்ட்வேர் சாதனத்திற்கான டிரைவரை தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலிருந்து எடுத்துக் கொள்ளும். அப்படி இல்லாத நிலையில் அந்த சாதனத்துடன் வந்துள்ள டிரைவர் டிஸ்க்கை சிடி டிரைவில் போடுமாறு கேட்டுக் கொண்டு அவ்வாறு போட்டவுடன் அந்த சிடியில் இருந்து தேடி எடுத்துக் கொண்டு டிரைவரைப் பதிந்து கொள்ளும். ஆனால் ஏதேனும் ஒரு ஹார்ட் வேர் சாதனத்தைக் கம்ப்யூட்டருடன் இணைத்து அதனை உங்கள் கம்ப்யூட்டரால் புரிந்து கொள்ள முடியாமல் போனால் வேறு சில நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டியதிருக்கும். அப்போது கண்ட்ரோல் பேனலில் உள்ள Add Hardware என்ற பிரிவைக் கிளிக் செய்து அதனுள் செல்ல வேண்டியதிருக்கும். இது தொடர்ந்து வரும் டயலாக் பாக்ஸைத் தரும். இதில் உள்ள கேள்விகளுக்குப் பதில் கொடுத்துக் கொண்டே போனால் உங்கள் ஹார்ட்வேர் சாதனத்தைப் பதிந்து கொள்ளலாம்.
புரோகிராம்களை பதியவும் நீக்கவும் (Add or Remove Programs):
ஏதேனும் ஒரு சாப்ட்வேர் தொகுப்பைப் பதிகையில் அதற்கான சிடியை ஸ்லாட்டில் செருகி அதன் இன்ஸ்டாலேஷன் சிடி கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லிவிட்டால் புரோகிராம் பதியப் பட்டுவிடும். அப்படி இல்லாமல் புரோகிராம் பதிவதில் பிரச்னை இருந்தால் கண்ட்ரோல் பேனலில் உள்ள ஐகானைக் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் இடது பக்கம் உள்ள Add New Programs என்ற பிரிவைக் கிளிக் செய்திட வேண்டும். பின்னர் சிடி அல்லது பிளாப்பி என்று கேட்கும் கட்டத்தைக் கிளிக் செய்து அதன்பின் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளித்து புரோகிராமைப் பதியலாம்.
கண்ட்ரோல் பேனலில் Add or Remove Programs  பிரிவு புரோகிராம்களை நீக்குவதற்கு மிகவும் பயன்படும். இந்த பிரிவைப் பெற்று பதியப்பட்டுள்ள புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து அதில்
Remove என்ற இடத்தில் கிளிக் செய்தால் எச்சரிக்கைச் செய்திக்குப் பின்னர் புரோகிராம் நீக்கப்படும். வழக்கமாக புரோகிராம் போல் டர்களில் அன் இன்ஸ்டால் (Un instal) என்று ஒரு ஐகான் தரப் பட்டிருக்கும். அதனைக் கிளிக் செய்து புரோகிராமினை நீக்க லாம். அது போலத் தரப்படாத புரோகிராம்களில் மேலே குறிப் பிட்டவாறு செயல்படலாம். இதில் விண்டோஸ் எக்ஸ்பி கம்ப்யூட்டரில் பதியப்பட்டுள்ள புரோகிராம்கள் எவ்வளவு இடத்தை ஹார்ட் டிஸ்க்கில் எடுத்துக் கொண்டுள்ளன என்ற தகவலையும் தரும். அத்துடன் எத்தனை முறை ஒரு புரோகிராம் பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும் இறுதியாக எப்போது பயன் படுத்தப்பட்டது எனவும் காட்டும். இந்த புரோகிராம் பட்டியலில் விண்டோஸ் தொகுப்பினைச் செம்மைப் படுத்தும் சில அடிப்படை புரோகிராம்களும் இருக்கும். எடுத்துக்காட்டாக விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான அப்டேட்டிங் புரோகிராம்ஸ் பதியப் பட்டிருக்கும். இவற்றை ஹாட் பிக்ஸ் (Hotfix) என்றும் சொல்வார் கள். இப்படிப்பட்ட புரோகிராம்களை நீக்கினால் விண்டோஸ் சிஸ்டம் செயல்படுவதில் பிரச்னைகள் ஏற்படலாம். கண்ட்ரோல் பேனலைப் பயன்படுத்தி விண்டோஸ் புரோகிராமை நீக்க முடியாது. ஆனால் அதற்கான துணைப் புரோகிராம்களை நீக்கவும் சேர்க்கவும் மேம்படுத்தவும் செய்திடலாம்.
கண்ட்ரோல் பேனல் என்பது கம்ப்யூட்டரின் மிக முக்கிய பகுதியாகும். இதில் ஏற்படுத்தப் படும் மாற்றங்கள் நமக்கு விரைவான மற்றும் எளிதான பயன்பாட்டினைக் கொடுக்கும். ஆனால் அதே நேரத்தில் தவறான செட்டிங்ஸ் ஏற்படுத்தினால், பல பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். எனவே எந்த ஒரு மாற்றத்தினையும் ஏற்படுத்தும் முன், அதற்கு முன் இருந்த செட்டிங்ஸ் குறித்து குறிப்புகளைத் தயார் செய்து கொள்ளவும்.
ஏற்படுத்தும் மாற்றங்களையும் குறித்து வைக்கவும். இங்கு தரப்படாத சில பயன்பாடுகளையும் கண்ட்ரோல் பேனலில் மேற்கொள்ளலாம். முக்கிய பயன்பாடுகள் மட்டுமே இங்கு விளக்கப்பட்டுள்ளன என்பதையும் நினைவில் கொள்ளவும்.

கம்ப்யூட்டருக்கான பாதுகாப்பான மின்சக்தி

கம்ப்யூட்டருக்கான பாதுகாப்பான மின்சக்தி
இன்றைய உலகில் நாம் பல டிஜிட்டல் சாதனங்களையே நம்பி இருக்கிறோம். அவை இயங்காமல் போனால், உடனே நம் அன்றாடப் பணிகள் முடங்கிப் போகின்றன. இதனாலேயே இதற்கு மின் இணைப்பு தருவதிலும், அவற்றைச் சீராக வைத்துக் கொள்வதிலும் நாம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதுள்ளது. நம் கம்ப்யூட்டருக்கான மின்சக்தி தரும் சாதனங்களை எப்படி, எந்த வகையில் அமைத்து இயக்க வேண்டும் என இங்கு காணலாம். அவற்றின் மூலம் கிடைக்கும் மின்சக்தியின் தன்மை குறித்தும் சில விவரங்களை இங்கு பார்ப்போம்.
ஸ்பைக்ஸ், சர்ஜஸ் என்பவையெல்லாம் எதைக் குறிக்கின்றன?
டிஜிட்டல் சாதனங்களுக்கு வரும் மின்சாரம் சீராக இருக்க வேண்டும். வரையறுக்கப்பட்ட வழக்கமான வோல்டேஜ் அளவை விட்டு அதிகமாக இருந்தால் அது அதிக வோல்டேஜ் (Over Voltage) ஆகும். அதுபோல் வோல்டேஜ் அளவு குறைவாக வருவது Under Voltage ஆகும். அதிக வோல்டேஜ் பிரிவில் ஸ்பைக்கும், சர்ஜும் வருகின்றன. இந்த இரண்டுக்கும் இடையே சிறு வேறுபாடு உண்டு. மிக அதிக வோல்டேஜ் திடீரென வந்து உடனடியாக மறைந்து போவதை ஸ்பைக் என அழைக்கிறார்கள். Impulse  என்றும் இதைக் குறிப்பிடலாம். மிக அதிக வோல்டேஜ் சற்று அதிகமான நேரம் (பொதுவாக நொடியில் 1/20 பங்கு) இருந்தால் அதை சர்ஜ் எனக் குறிப்பிடுகின்றனர். வோல்டேஜ் அளவு ஆபத்தான அளவுக்கு, நேரத்துக்கு குறுகிய நேரத்துக்கு குறைந்து போவது Brownout  ஆகும். Sags  என்றும் இதைக் கூறுவார்கள்.
இதைப் பார்த்துதான் கம்ப்யூட்டர்கள் பயப்பட வேண்டும். சுத்தமாக மின் இணைப்பு துண்டாவதை Blackout  எனலாம். எலக்ட்ரோமேக்னடிக் அல்லது ரேடியோ அலை அல்லது வேறு ஏதாவது சிக்னலால் மின் இணைப்பில் இரைச்சல்கள் போன்றவை கலந்து விடலாம். இதை Line Noises என அழைக்கின்றனர். மிகக் குறைந்த நேரத்தில் ஏற்புடைய அளவை விட மிகக் குறைந்த அளவுடன் கூடிய வோல்டேஜ் இதனால் கிடைக்கும்.
பவர் கண்டிஷனிங்:
மின்சாரம் எப்போதும் சீராக வரும் என்று சொல்ல முடியாது. ஏற்ற, இறக்கத்துடன், இரைச்சல் போன்றவற்றை சுமந்து கொண்டுதான் மின்சாரம் நமக்குக் கிடைக்கிறது. Spikes, Surges, Brownouts, Blackouts, Noise  என்பவை எல்லா சாதனங்களுக்கும், குறிப்பாக கம்ப்யூட்டர்களுக்கு கேடு விளைவிப்பவை. இவை இல்லாமல் சீரான மின்சாரத்தை வழங்க சில சாதனங்கள் உள்ளன. அவை கொடுக்கிற பாதுகாப்பை Power Conditioning  அதாவது மின்சாரத்தை நிலைப்படுத்துதல் எனக் குறிப்பிடுகின்றனர்.
பவர் கண்டிஷனிங் செய்ய என்ன தேவை?
பவர் கண்டிஷனிங் செய்திட பல சாதனங்கள் நமக்குக் கிடைக்கின்றன. இவை – Surge Supressors, Spike Busters, Isolation Transformers, Servo Stabiliser, Constant Voltage Transformers or Uninterruptible Power Supply System  என அழைக்கின்றனர். நாம் பயன்படுத்தும் சாதனத்திற்கேற்பவும், நமக்கு மின்சாரம் எப்படி வழங்கப்படுகிறது என்பதற் கேற்பவும் தேவையான சாதனத்தை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.
எந்த சாதனம் சிறந்தது?
மேற்படி சாதனங்களுள் சிறந்தது யுபிஎஸ் என்ற Uninterruptable Power Supply  சாதனமே . ஸ்பைக், சர்ஜ், பிரவுன்அவுட், பிளாக்அவுட் போன்றவற்றைக் கையாளும் திறன்பெற்றது இந்த யு.பி.எஸ். ஆகும்.
மின்சாரம் தடைபடும் பொழுது எப்படி யுபிஎஸ்ஸால் மின்சாரத்தை வழங்க முடியும்?
யு.பி.எஸ்.ஸில் பேட்டரி உண்டு. அத்துடன் பேட்டரி சார்ஜர் மற்றும் இன்வெர்ட்டர் ஆகியவையும் யு.பி.எஸ். ஸில் உண்டு. பேட்டரியில் இருந்து வெளியாகிற Direct Current மின்சாரத்தை கம்ப்யூட்டருக்குத் தேவையான Alternating Current மின்சாரமாக மாற்றுகிற வேலையை இன்வெர்ட்டர் செய்கிறது. வழக்கமான மின் இணைப்பு தடைப்பட்டவுடன்,பேட்டரி மற்றும் இன்வெர்ட்டர் மூலம் இதனால் கம்ப்யூட்டருக்கு மின்சாரம் கிடைக்கிறது.
பேட்டரி தனது சக்தியை இழந்தால் என்ன செய்ய?
மின் இணைப்பு துண்டானவுடன், கம்ப்யூட்டருக்குத் தேவையான மின்சாரத்தை வழங்கும் பொறுப்பு பேட்டரியின் மேல் விழுகிறது. மின்சக்தியைத் தரத் தொடங்கும் பேட்டரி கொங்சம் கொஞ்சமாக தனது மின்சக்தியை இழந்து கொண்டிருக்கும். இந்த நேரத்தில் வழக்கமான மின்சாரம் வந்துவிட்டால் கவலையில்லை. யுபிஎஸ்ஸில் உள்ள பேட்டரி சார்ஜர், பேட்டரியை சார்ஜ் செய்ய ஆரம்பித்து விடும்.  மின் இணைப்பு துண்டாகி, பேட்டரியினால் கம்ப்யூட்டர் இயங்கி கொண்டிருக்கிறது. வழக்கமான மின் இணைப்பு இன்னும் வரவில்லை என வைத்துக் கொள்வோம். குறிப்பிட்ட அளவுக்கும் கீழ் பேட்டரியின் சக்தி இறங்கி விட்டால், பலத்த ஒலியை எழுப்பி உங்களை யுபிஎஸ் எச்சரிக்கும். அப்போது கம்ப்யூட்டரை ஆப் செய்யுங்கள். யுபிஎஸ்ஸையும் ஆப் செய்யுங்கள்.
எவ்வளவு நேரம் யுபிஎஸ்ஸால் மின் இணைப்பு துண்டான சூழ்நிலையில் தாக்கு பிடிக்க முடியும்?
அது உங்களது யுபிஎஸ்ஸின் பேக்கப் நேரத்தைப் பொறுத்தது. 5 நிமிட பேக்கப் யு.பி.எஸ்.ஸால், மின்சாரம் துண்டான பின்பு 5 நிமிடங்கள் தாக்கு பிடிக்க முடியும். அதிக நேரம் பேக்கப் கொண்ட யுபிஎஸ்என்றால் அதன் விலை சற்று கூடுதலாக இருக்கும். பேட்டரியும் பெரியதாக இருக்கும்.
பேட்டரி நேரம் போக யுபிஎஸ்ஸில் வேறு ஏதாவது கவனிக்க வேண்டிய விஷயம் உள்ளதா?
எவ்வளவு Kilo Volt Ampere திறன் கொண்ட யுபிஎஸ் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு கம்ப்யூட்டருக்கு 0.5கேவிஎ யுபிஎஸ் போதும். பல கம்ப்யூட்டர்களை யுபிஎஸ்ஸில் இணைப்பதாக இருந்தால் அதிக கேவிஏ கொண்ட யுபிஎஸ்ஸை வாங்க வேண்டும்.
என்ன பேட்டரியை பயன்படுத்துகிறார்கள்?
கார்களுக்கு பயன்படுத்துகிற பேட்டரி, லெட்-ஆசிட் பேட்டரி, நிக்கல்-காட்மியம் மற்றும் மூடப்பட்டு பராமரிப்பு தேவையற்ற பேட்டரி எனப் பல வகைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுள் மோசமானது கார் பேட்டரி. பெரும்பாலான சிறு யுபிஎஸ்களில் SMF (Sealed Maintenance Free)  பேட்டரிகளே பயன்படுத்தப்படுகின்றன. 5 முதல் 7 வருடங்கள் வரை இவை உழைக்கும்.
யு.பி.எஸ். ஸில் பிரிவுகள் உண்டா?
Online, Offline or Line interactive  என மூன்று வித யுபிஎஸ்கள் கிடைக்கின்றன. மின் இலாகா வழங்கும் மின்சாரம் நேரடியாக கம்ப்யூட்டருக்கு ஆஃப் லைன் யுபிஎஸ்ஸில் வழங்கப்படுகிறது. மின்சாரம் தடைப்பட்டால் மட்டுமே பேட்டரி மற்றும் இன்வெர்ட்டர் மூலம் கம்ப்யூட்டருக்கு சீரான மின்சாரம் செல்லும். மின் இலாகா வழங்கும் மின்சாரம் கிடைத்துக் கொண்டிருந்தாலும், ஆன் லைன் யுபிஎஸ் எப்பொழுதுமே பேட்டரி மற்றும் இன்வெர்ட்டரை சார்ந்தே உள்ளது. இவை வழங்குற மின்சாரம் மட்டுமே கம்ப்யூட்டருக்கு அனுப்படும். Ferroresonat Transformer  கொண்ட இன்டெராக்டிவ் யுபிஎஸ் சீரான வோல்டேஜை கம்ப்யூட்டருக்கு வழங்கும்.
எது மலிவானது?
ஆஃப்லைன் யுபிஎஸ்தான் மலிவானது. ஆன்லைன் யுபிஎஸ்ஸின் விலை மிக அதிகம். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட விலையில் இன்டராக்டிவ் யுபிஎஸ் கிடைக்கும்.
பிரின்டரை யுபிஎஸ்ஸில் இணைக்கலாமா?
யு.பி.எஸ் ஸின் திறன் மற்றும் இணைக்கிற பிரிண்டரைப் பொறுத்து இதற்கான விடை உள்ளது. பொதுவாக லேசர் பிரின்டரை யு.பி.எஸ்.ஸில் இணைக்கக்கூடாது. மற்ற பிரின்டர்களை இணைக்கலாம். ஆனால் உங்களிடம் அதிக கே.வி.ஏ. கொண்ட யுபிஎஸ் இருக்க வேண்டும்.

எக்ஸெல்: சில குறிப்புகள்

எக்ஸெல்: சில குறிப்புகள்
எக்ஸெல் எழுத்தின் அளவு என்ன?
மற்ற அப்ளிகேஷன் சாப்ட்வேர் போலவே எக்ஸெல் தொகுப்பிலும் எழுத்தின் அளவு பாய்ண்ட் என்றே குறிப்பிடப்படுகிறது. ஒரு பாய்ண்ட் என்பது ஏறத்தாழ ஓர் அங்குலத்தில் 72ல் ஒரு பங்கு. ஒரு செல் அல்லது செல்லில் உள்ள தகவல் ஒன்றின் எழுத்தின் அளவினை மாற்ற வேண்டியதிருப்பின் நாம் டூல் பாரினைப் பயன்படுத்துகிறோம். டெக்ஸ்ட் சம்பந்தமான டூல்களுக்கு இடது பக்கம் (பாண்ட் டூலின் வலது பக்கம்) பாய்ண்ட் அளவின் பீல்டு கட்டம் உள்ளது. இந்த பீல்டின் வலது பக்கம் உள்ள கீழ் நோக்கிய அம்புக் குறியில் கிளிக் செய்தால் எழுத்தின் பாய்ண்ட் அளவுகள் பலவற்றைக் காணலாம். டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்துவிட்டு இந்த சைஸை மாற்றினால் எழுத்துக்களின் அளவு மாறி இருப்பதனைக் காணலாம்.
ஆனால் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். கிளிக் செய்தால் கீழ் நோக்கி விரியும் அளவுகளில் மட்டுமே எழுத்தின் அளவை மாற்ற முடியும் என்பதல்ல. அளவு கட்டத்தில் சென்று எழுத்தின் அளவை கீ போர்டு வழியாக டைப் செய்து அமைக்க முடியும். எக்ஸெல் தொகுப்பினைப் பொறுத்தவரை 1 முதல் 409 புள்ளி வரை இதனை அமைக்க முடியும். (இது உங்கள் பிரிண்டரின் திறனைப் பொறுத்தது) முழு எண் அளவில் மட்டுமின்றி பாதி அளவிலும் இந்த எழுத்தின் அளவை அமைக்கலாம்.
எக்ஸெல் – ஆல்ட்+ஷிப்ட்
இங்கே எக்ஸெல் தொகுப்பில் ஆல்ட்+ஷிப்ட் கீகளுடன் பங்சன் கீகளை அழுத்தினால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளைப் பார்க்கலாம்.
F1 +ALT+SHIFT
புதிய ஒர்க் ஷீட் ஒன்று திறக்கப்படும்.
F2 +ALT+SHIFT
அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒர்க்புக் சேவ் செய்யப்படும்.
F3 +ALT+SHIFT
நெட்டு மற்றும் படுக்கை வரிசை லேபிள்கள் பயன்படுத்தி பெயர்களை உருவாக்கலாம்.
F6+ALT+SHIFT
ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க்புக் விண்டோக்கள் திறக்கப்பட்டிருப்பின் தற்போதைய ஒர்க்புக்கிற்கு முந்தைய ஒர்க்புக் விண்டோ திறக்கப்படும்.
F9 +ALT+SHIFT
திறந்திருக்கும் அனைத்து ஒர்க்ஷீட்களிலும் அனைத்து ஒர்க் புக்குகளிலும் அனைத்து கால்குலேஷன்களும் செயல்படுத்தப்படும்.
F10 +ALT+SHIFT
ஸ்மார்ட் டேக்கிற்கான மெனு மற்றும் மெசேஜ் திறக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்மார்ட் டேக் திறக்கப்பட்டிருந்தால் அடுத்த டேக் சென்று அதற்கான மெனு மற்றும் மெசேஜ் திறக்கப்படும்.
F11 +ALT+SHIFT
மைக்ரோசாப்ட் ஸ்கிரிப் எடிட்டர் திறக்கப்படும்.
F12 +ALT+SHIFT
பிரிண்ட் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்.
கண்ட்ரோல் + சி கொஞ்சம் ஜாக்கிரதை
கம்ப்யூட்டர் பயன்பாட்டில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் செயல்பாடு கண்ட்ரோல்+சி ஆகும். தகவல், டெக்ஸ்ட்,படம் என எதுவானாலும் அதனைக் காப்பி செய்து இன்னொரு இடத்தில் பேஸ்ட் செய்திட நாம் கண்ட்ரோல்+சி தான் பயன்படுத்துகிறோம். இவ்வாறு செயல்படுகையில் காப்பி செய்யப்படும் விஷயம் தற்காலிகமாக கிளிப் போர்டுக்குச் செல்கிறது. இங்கு தான் பிரச்னையே உருவாகிறது. நம் கம்ப்யூட்டர் இன்டர்நெட் தொடர்பில் இருக்கையில் இந்த கிளிப்போர்டினை யாரும் எளிய வழிமுறை யில் அணுகலாம். அதனை அப்படியே அவர்களும் காப்பி செய்து கொள்ளலாம். எனவே இன்டர்நெட் தொடர்பில் இருக்கையில் பாஸ்வேர்ட், பேங்க் அக்க வுண்ட் எண், அதற்கான தனிக் குறியிடுகள் போன்றவற்றைப் பயன்படுத்து வதற்காக கிளிப் போர்டில் காப்பி செய்து வைக்காதீர்கள். அவை மற்றவர்களால் அறிந்து கொள்ளும் வாய்ப்புண்டு. இதை சோதித்துப் பார்க்க வேண்டும் என்றால் எந்த ஒரு டெக்ஸ்ட்டையாவது கண்ட்ரோல் + சி கொடுத்து காப்பி செய்திடவும். அதன்பின் http://www.sourcecodesworld.com/special/clipboard.asp
என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். நீங்கள் காப்பி செய்த டெக்ஸ்ட் இந்த தளத்தால் அணுகி எடுத்துக் கொண்டதை நீங்கள் காணலாம். கிளிப் போர்டில் காப்பி செய்ததை ஜாவாஸ்கிரிப்ட் மற்றும் ஏ.எஸ்.பி. கொண்டு பெற முடியும் என்ற வழியில் இது நடக்கிறது. எனவே கவனமாக இருக்கவும்.

ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க்

ஹார்ட்டிஸ்க் நிலை அறிய செக் டிஸ்க்
நம் கம்ப்யூட்டர் வேலை பார்ப்பதற்கான அடித்தளமாக அமைவது ஹார்ட்டிஸ்க்தான். கம்ப்யூட்டரை இயக்கத்தொடங்கியவுடன் தொடர்ந்து சுழன்று கொண்டு இருப்பது இதுதான். வெப்பம், தூசு இவற்றிற்கெல்லாம் ஈடு கொடுத்து, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை இயக்கி, டேட்டா பைல்களை வாங்கி, பதிந்து, மீண்டும் எடுத்துக் கொடுத்து உழன்றும் சுழன்றும் வருவது ஹார்ட் டிஸ்க்.
இப்படி வெவ்வேறு வகையான பணிகளை மேற்கொள்வதால் அது பலவகையான பாதிப்பிற்கும் உள்ளாகலாம் அல்லவா? அப்படி ஆகும்போதுதான் திடீரென ஒரு நாள் ஸ்டிரைக் செய்து எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி இயங்காமல் நின்றுவிடும். அல்லது அடிக்கடி ஏதேனும் பைல்களைத் தராமல், அதனை எடுத்துத் தரமுடியாத நிலையில் இருப்பதாக அறிவிப்பு வழங்கிவிட்டு நின்றுவிடும்.
இதற்குப் பரிகாரம் தான் என்ன? இது போன்ற சின்ன சின்ன பிரச்சினைகள் ஏற்படும்போதே, அவற்றைச் சரி செய்தால் போதும். ஹார்ட் டிஸ்க் ஆங்காங்கே கெட்டுப் போகும் இடங்களெல்லாம் அடையாளம் காணப்பட்டு, அவற்றை இதன் இயக்கத்திற்கு உட்படாமல் வைத்தாலே போதும். இதற்கான சரியான சாதனத்தை விண்டோஸ் இயக்கம் கொண்டுள்ளது. அதுதான் “செக்டிஸ்க்’ என்னும் புரோகிராம்.
chkdsk.exe என்னும் பைலைப் பயன்படுத்தி ஹார்ட் டிஸ்க்கில் ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைகளை அறியலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட டிரைவில் அல்லது முழு டிஸ்க்கை இந்த பைல் சோதனை செய்து, பிரச்சினைகள் இருந்தால் அவற்றைச் சரி செய்திடும். எனவே கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் மாதம் ஒரு முறை யேனும் இந்த பைலை இயக்கிப் பார்த்தல் நல்லது. இதன் பயன்களையும், அவற்றைப் பெற இந்த பைலை எப்படி இயக்க வேண்டும் என்பதனையும் இங்கு காணலாம். மின்சாரம் நின்று போய் அல்லது மதர்போர்டில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், ஆப்பரேட்டிங் சிஸ்டமானது ஹார்ட் டிஸ்க் “அழுக்காகிவிட்டது’
(“dirty”) என்று குறித்துக் கொள்ளும். அடுத்த முறை கம்ப்யூட்டரை பூட் செய்கையில் குறிப்பிட்ட அந்த டிஸ்க்கின் பகுதியைச் சோதனை செய்து அதன் தற்போதைய நிலை குறித்து அறிவிக்கும். இந்த சோதனையை நாமாகவும் செய்திடலாம். இதற்கு முதலில் கமாண்ட் ப்ராம்ப்ட் என்னும் டாஸ் கட்டளைப் புள்ளியைப் பெற வேண்டும். ஸ்டார்ட் அழுத்திக் கிடைக்கும் ரன் விண்டோவில் “cmd” என டைப் செய்து என்டர் செய்தால் கருப்பு வண்ணத்தில் டாஸ் விண்டோ கிடைக்கும். அதில் பளிச்சிடும் கர்சரின் அருகே fsutil dirty query c: என டைப் செய்திடவும். இதற்கான விடையாக Volume c: is NOT Dirty எனக் கிடைக்க வேண்டும்.
இனி செக்டிஸ்க் கட்டளை கொடுப்பது பற்றி பார்க்கலாம். மேலே கூறியதுபோல டாஸ் விண்டோவின் கமாண்ட் ப்ராம்ப்ட் பெற்று அதில் chkdsk c:: எனத் தர வேண்டும். அல்லது
chkdsk c: /f /r எனவும் தரலாம். இதில் /f என்னும் கட்டளை டிஸ்க்கினைச் சோதனை செய்கையில் ஏதேனும் பிழைகளைக் கண்டால், தானாகவே அதனை சரி செய்திடும். //r கட்டளை பழுதாகிப் போன, மீண்டும் பயன்படுத்த முடியாத டிஸ்க்கின் பகுதிகளைக் கண்டறிந்து (bad sectors) அதிலுள்ள தகவல்களை மீட்டுத் தர முயற்சிக்கும்.
செக் டிஸ்க் புரோகிராம் செயல்படுவதற்கு டிஸ்க் லாக் செய்யப்பட வேண்டும். எனவே இந்த கட்டளை கொடுத்த பின்னர், கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திட்டால், செக்டிஸ்க் தானாக இயங்கி (இதற்கு அதிக நேரம் எடுக்கலாம்) சோதனையை முடித்தபின் மீண்டும் வழக்கமான விண்டோஸ் திரைக்கு வந்துவிடும்.
கம்ப்யூட்டரை ரீபூட் செய்தவுடன், டிஸ்க் சோதனை நடந்து முடிந்து சோதனை முடிவுகள் காட்டப்படும். கமாண்ட் ப்ராம்ப்ட் செல்லாமல், கிராபிகல் தோற்றத்திலும் செக்டிஸ்க் சோதனையை மேற்கொள்ளலாம். இதற்கு
1. ‘My Computer’ ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் ‘Properties’ தேர்ந்தெடுக்கவும்.
2. இந்த விண்டோ லோட் ஆனவுடன் ‘Tools’ என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். பின்
‘Error Checking’ பிரிவில் ‘Check Now’ என்பதில் கிளிக் செய்திடவும்.
3. பின் ஒரு சிறிய விண்டோ கிடைக்கும். அதில் உள்ள இரண்டு செக் பாக்ஸ்களில் டிக் செய்து ‘Start Now’ என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது உங்களுக்கு ஒரு செய்தி காட்டப்படும். அதில் நீங்கள் கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்தவுடன் எர்ரர் செக்கிங் தொடங்கும் எனக் காட்டப்படும். கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திடவும். எர்ரர் செக்கிங் வேலை உடன் தானாகத் தொடங்கும். டிஸ்க் லாக் செய்யப்படுவதால், உங்களால் கம்ப்யூட்டரில் எந்த வேலையையும் மேற்கொள்ள முடியாது. பணி முடிந்தவுடன், சிஸ்டம் தானாக மீண்டும் ரீ பூட் செய்யப்பட்டு விண்டோஸ் திரை கிடைக்கும்.
மேலே கூறப்பட்ட விளக்கம் செக் டிஸ்க் குறித்து, சாதாரணமாகக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவருக்கான, பொதுவான விளக்கம் தான். செக்டிஸ்க் வேலை நடக்கையில் இன்னும் ஆழமான சில செயல்பாடுகளும் மேற்கொள்ளப்படலாம். எடுத்துக் காட்டாக, செக்டிஸ்க் கட்டளை கொடுத்தபின் கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகி டிஸ்க் செக் செய்யப்படுகிறதல்லவா! அப்போது இயங்கும் பைல் Autochk.exe ஆகும். இந்த பைலை நம் விருப்பப்படி இயங்கிட வைத்திட நாம் ரெஜிஸ்ட்ரியைக் கையாள வேண்டியதிருக்கும். எனவே இது குறித்த தகவல்கள் இங்கு தரப்படவில்லை.
இனி கமாண்ட் ப்ராம்ப்ட்டில் செக் டிஸ்க் கட்டளை கொடுக்கையில் அதனை வேறு சில பணிகளைக் குறிப்பாகச் செய்திட கட்டளைகளை எப்படி அமைக்கலாம் என்று பார்க்கலாம்.
செக்டிஸ்க் கட்டளை கீழ்க்கண்டவாறு அமையலாம்; chkdsk [volume:][[Path] FileName] [/f] [/v] [/r] [/x] [/i] [/c] [/l[:size]] இதில் chkdsk என்பது டிஸ்க்கின் டிரைவ் லெட்டர் (C: D: E: போல). இதில் வால்யூம் பெயரையும் தரலாம்.
/f எனக் கொடுக்கையில் டிஸ்க்கில் உள்ள பிழைகள் குறிக்கப்படுகின்றன. இதற்கு டிஸ்க் லாக் செய்யப்பட வேண்டும். செக்டிஸ்க் புரோகிராமினால் அந்த டிஸ்க் டிரைவ் லாக் செய்யப்பட முடியாவிட்டால், ஒரு சிறிய மெசேஜ் காட்டப்படும். அதில் அடுத்தமுறை நீங்கள் கம்ப்யூட்டரை ஸ்டார்ட் செய்திடுகையில் இந்த டிரைவினை செக் செய்து கொள்ளலாமா என்று கேட்கப்படும்.
/v எனக் கொடுத்தால் ஒவ்வொரு டைரக்டரி யில் உள்ள ஒவ்வொரு பைலையும் செக் செய்கையில், அந்த பைலின் பெயர் காட்டப்படும்.
/r எனத் தரும்போது பழுதடைந்த டிஸ்க் பிரிவுகள் (bad sectors) கண்டறியப்பட்டு அதில் உள்ள தகவல்கள் மீட்டு எடுக்கப்படும். இதற்கும் டிஸ்க் லாக் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
/x இந்த கட்டளை என்.டி.எப்.எஸ் (NTFS) பைல் வகை இருக்கும் சிஸ்டங்களில் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் /x கட்டளை //f என்ற கட்டளைக்குமான பணியையும் சேர்த்தே மேற்கொள்ளும்.
/i – (NTFS) பைல்களில் மட்டுமே செயல் படும். இது, இன்டெக்ஸ் செய்யப்பட்டுள்ள வற்றைச் சற்று நிதானமாகவே செக் செய்திடும்.
/c இதுவும் (NTFS) பைல்களில் மட்டுமே செயல்படும். /c என்ற கட்டளைஜ் போல்டர் ஸ்ட்ரக்சர்களில் உள்ள சைக்கிள்களை செக் செய்யாது. இதனால் செக்டிஸ்க் பைல் இயங்குவதற்கான நேரத்தைக் காட்டிலும் குறைவான நேரத்திலேயே இது இயங்கி முடிக்கும்.
/l[:size] – என்ற கட்டளையும் (NTFS) பைல்களில் மட்டுமே செயல்படும். நீங்கள் டைப் செய்யும் அளவில் லாக் பைலை அமைக்கும். சைஸ் என்ற பாராமீட்டரை அமைக்காவிட்டால் /l என்பது அந்த லாக் பைலின் ஒரிஜினல் சைஸைக் காட்டும்.
சில முக்கிய குறிப்புகள்:
செக்டிஸ்க் பைலை இயக்க ஒரு கம்ப்யூட்டருக்குள் நீங்கள் அட்மினிஸ்ட் ரேட்டராக லாக் இன் செய்திருக்க வேண்டும். செக்டிஸ்க் இயக்கம் பைலில் உள்ள தவறுகளைச் சரி செய்திட வேண்டும் என்றால், நீங்கள் கம்ப்யூட்டரில் உள்ள எந்த பைலையும் திறந்து வைத்திருக்கக்கூடாது. பைல்கள் அவ்வாறு திறந்திருந்தால் கீழ்க்காணும் மெசேஜ் உங்களுக்குக் காட்டப்படும்.
Chkdsk cannot run because the volume is in use by another process. Would you like to schedule this volume to be checked the next time the system restarts? (Y/N)
தற்போது சம்பந்தப்பட்ட டிஸ்க் இன்னொரு செயல்பாட்டில் இயங்கிக் கொண்டிருப்பதால், செக்டிஸ்க் பைல் இயக்க முடியாது. எனவே இன்னொரு நேரத்தில் இந்த டிஸ்க் செக் செய்து கொள்ளலாமா? (சரி / வேண்டாம்)
பிறகு இன்னொரு முறை இதனைச் செக் செய்து கொள்ளலாம் என்று நீங்கள் தேர்ந்தெடுத்தால்,செக்டிஸ்க் அடுத்த முறை நிங்கள் கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்கையில் டிரைவினை செக் செய்து தவறுகளைச் சுட்டிக் காட்டும்.
டிஸ்க்கிள் உள்ள பிழைகள் எப்படி சுட்டிக் காட்டப்படும்?
செக்டிஸ்க் டிஸ்க்கின் பரப்பு முழுவதும் சோதனை செய்திடும். FAT மற்றும் NTFS பைல் வகைகளைச் சோதித்து, இரண்டிற்குமான தனித்தனி அறிக்கையினைத் தரும். அறிக்கையில் எந்த எந்த அளவில் பிழைகள் உள்ளன என்று பட்டியலிடப்படும். /f இல்லாமல் கட்டளை அமைக்கப்பட்டிருந்தால், பிழைகள் போன்ற சிலவற்றையும் காட்டும். ஏனென்றால் அதனால் டிஸ்க்கினை லாக் செய்திட இயலாது. மேலும் /f இந்த கட்டளை கொடுத்தால் தான் டிஸ்க் எர்ரர்கள் கண்டறியப்படுகையில் அவை சரிசெய்யப்படும்.
டிஸ்க்கில் பிரச்சினை உள்ள இடம் அறியப்பட்டால், அதில் உள்ள டேட்டா தவறுதல் கணக்கிடப்பட்டு கீழே கொடுக்கப்பட்டிருப்பது போன்ற மெசேஜ் காட்டப்படும். 10 lost allocation units found in 3 chains. Convert lost chains to files? (Y/N) இதில் நீங்கள் யெஸ் எனக் கொடுத்தால், விண்டோஸ், இழந்த டேட்டாவினை மீட்டு, ரூட் டைரக்டரியில் Filennnn.chk என்ற பார்மட்டில் அமையும் பைல் பெயரில் தரும். செக் டிஸ்க் தன் சோதனையை முடித்தவுடன், இந்த பைல்களைத் திறந்து அதில் தொலைந்து போன டேட்டா ஏதேனும் இருக்கிறதா என்று பார்த்து அதனை வேறு ஒரு பெயரில் சேவ் செய்து வைக்கலாம். அல்லது தொலைந்து மீட்கப்பட்ட டேட்டா சார்ந்த பைலில் சரியான இடத்தில் இணைத்து வைக்கலாம்.
கீழே எடுத்துக் காட்டாக செக் டிஸ்க் ரிப்போர்ட் மாடல் ஒன்று தரப்படுகிறது.
Volume Serial Number is B1AFAFBF
72214528 bytes total disk space
73728 bytes in 3 hidden files
30720 bytes in 12 directories
11493376 bytes in 386 user files
61440 bytes in bad sectors
60555264 bytes available on disk
2048 bytes in each allocation unit
35261 total allocation units on disk
29568 available allocation units on disk
Cx�� NTFS �� ]�h� BP C��u��, R�UPsh�i ›���m C�US�.
The type of the file system is NTFS.
CHKDSK is verifying files…
File verification completed.
CHKDSK is verifying indexes…
Index verification completed.
CHKDSK is verifying security descriptors…
Security descriptor verification completed.
12372 kilobytes total disk space.
3 kilobytes in 1 user files.
2 kilobytes in 1 indexes.
4217 kilobytes in use by the system.
8150 kilobytes available on disk.
512 bytes in each allocation unit.
24745 total allocation units on disk.
16301 allocation units available on disk.
இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மோசமடைந்த இடம் என அறியப்படும் இடங்களை bad sector என செக்டிஸ்க் அழைக்கிறது. இவற்றினால் எந்த ஆபத்தும் இல்லை. தொடர்ந்து அந்த இடங்களில் பைல்கள் எழுதப்படமாட்டாது.
செக்டிஸ்க் குறித்து இன்னும் பல தகவல்களை அறியலாம். விருப்பப் படுபவர்கள் அணுக வேண்டிய மைக்ரோசாப்ட் தள முகவரிகள் பின்வருமாறு:
http://www.microsoft.com/resources/documentation/windows/xp/all/proddocs/enus/chkdsk.mspx http://support.microsoft.com/default.aspx?scid=kb;enus;187941

பயர்பாக்ஸ் டவுண்லோட் மேனேஜர்

பயர்பாக்ஸ் டவுண்லோட் மேனேஜர்
இணையத்தில் இருந்து நமக்குத் தேவையான புரோகிராம்கள் மற்றும் படங்களை நாம் பிரவுசர்கள் தரும் வசதி மூலம் டவுண்லோட் செய்கிறோம். பயர்பாக்ஸ் பிரவுசர் தரும் டவுண்லோட் வசதி சிறப்பாகவே உள்ளது. இருந்தாலும் டவுண்லோட் செய்வதில் நமக்கு வேகம் உட்பட பல வசதிகள் கிடைக்கும் வகையில் பல டவுண்லோட் மேனேஜர் புரோகிராம்கள் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்று DownThemAll என்னும் புரோகிராம் ஆகும். இதனைப் பயன்படுத்திப் பார்க்கையில் இதன் வேக மும், டவுண்லோட் செய்யப் பட வேண்டிய புரோகிராம் களை வரிசையாக வைத்து இறக்கும் லாவகமும், இடை யே நின்று போனால், விட்ட இடத்தில் இருந்து மீண்டும் டவுண்லோட் செய்திடும் வகையும் மிகவும் சிறப்பாக உள்ளது.
இந்த புரோகிராமினை வடிவமைத்தவர்கள், இது வழக்கத்தைக் காட்டிலும் 400% வேகத்தில் பைல்களை டவுண்லோட் செய்திடும் எனத் தெரிவித்துள்ளனர். அந்த அளவிற்கு வேகம் உள்ளதா என்று அறிய முடியவில்லை என்றாலும், வேகம் அதி வேகம் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த புரோகிராமில் தரப்பட்டிருக்கும் இன்னொரு ஆப்ஷன் மிகச் சிறப்பாக உள்ளது. ஓர் இணையப் பக்கத்தில் இருக்கும் ஒவ்வொரு லிங்க் அல்லது இமேஜ் ஆகியவற்றையும் இதன் மூலம் டவுண்லோட் செய்திட முடியும். அதனால் தான் இந்த பெயர் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆப்ஷன் தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்த பக்கத்தில் உள்ள அனைத்தையும் அறிந்து கொள்கிறது. பின் பில்டர்கள் மூலம் நாம் நமக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்து அறிந்து கொள்ளலாம். எந்த பைல்கள் என்பதற்கு செக் பாக்ஸ் களைக் கொடுத்து ஆப்ஷன் கேட்கிறது. இதிலேயே டவுண்லோட் செய்வதற்கான புரோகிராம் மற்றும் படங் களுக்கு புதுப் பெயர் கொடுக் கலாம்; எந்த டைரக்டரியில் பதிய வேண்டும் என்பதனை உறுதி செய்திடலாம்; சப்டைரக்டரிகளை உருவாக்கலாம்; மேலும் இது போல பல வேலைகளை மேற்கொள்ளலாம். மேலும் இந்த இந்த பைல்களை குறிப்பிட்ட டைரக்டரிகளில் டவுண்லோட் செய்திடக் கட்டளை கொடுத்து விட்டு நகர்ந்து விடலாம். கம்ப்யூட்டர் அருகிலேயே இருக்க வேண்டும் என்பதில்லை.
பயர்பாக்ஸ் பிரவுசருக்கு இது ஓர் அருமையான தோழனாக இயங்குகிறது. மிகப் பெரிய அளவிலான பைல்களை டவுண்லோட் செய்வதற்கு இது சிறந்த துணையாக உள்ளது. இந்த புரோகிராமின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு 1.1.4 னைப் பெற http://www.techspot. com/downloads/4871downthemall.html என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். இது பயர்பாக்ஸ் பிரவுசரின் அண்மைக் காலத்திய பதிப்பான பயர்பாக்ஸ் 3.5 உடன் இணைந்து செயலாற்றுகிறது.

இன்டர்நெட் குறித்த தவறான கருத்துகள்

இன்டர்நெட் குறித்த தவறான கருத்துகள்
இன்டர்நெட் குறித்த பல தவறான கருத்துகள் எப்படியோ பரவி அனைவரிடமும் உண்மையான தகவல் என்று பதிந்து போயுள்ளன. இதற்குக் காரணம் மீடியாக்களும் சிலவற்றை நம்பி உண்மை என அவற்றைப் பரவி விட்டதே காரணம். அவை எவை என்று இங்கு காணலாம்.
1. அமெரிக்க துணை ஜனாதிபதி அல் கோர் (Al Gore) என்பவர்தான் இன்டர்நெட்டைக் கண்டுபிடித்தார். அவரே இதனை ஒரு பேட்டியில் கூறினார். இன்னொரு பக்கம் அவர் அப்படியெல்லாம் தனக்கு தேவையில்லாத பெருமையினைக் கோர வில்லை; ஆனால் இன்டர்நெட்டைக் கொண்டு வந்தேன் எனக் கூறினார் என்றும் சில இதழ்கள் எழுதின. எது உண்மை?
அமெரிக்க அதிபருக்கான தேர்தல் பிரச்சாரத்தின் போது, 1999 ஆம் ஆண்டு மார்ச் 9 அன்று சி.என்.என். செய்தி நிருபர், அல் கோரை நோக்கி தங்களிடம் உள்ள சிறப்பு என்ன என்று கேட்டார். அதற்கு அல் கோர், “நாட்டில் கல்வி, பொருளாதாரம், சுற்றுப்புறச் சூழ்நிலை பாதுகாப்பிற்கெனத் தான் பல திட்டங்களை மேற்கொண்டு வெற்றி பெற்றதாகக் கூறினார். தொடர்ந்து அதற்கு இன்டர்நெட்டினை உருவாக்குவதில் தொடக்க நிலையில் ஒத்துழைத்தேன்” என்று கூறினார். இது திரிக்கப்பட்டு இன்டர்நெட்டினை அவர்தான் உருவாக்கினார் என்று மாறி, அதுவே மறுக்கப்படாத தகவலாகவும் உறுதியானது. பின்னர் உண்மையான தகவல் தெரிவித்தது பலரைச் சென்றடையவில்லை.
2. உங்களுக்கு இன்டர்நெட் சேவை தரும் சர்வீஸ் புரவைடர் நிறுவனம் , இன்டர்நெட்டில் உங்களின் ஒவ்வொரு செயலையும் கண்டறிந்து பதிந்து வைக்கிறது. இதுவும் ஒரு கதையே. உங்களையும் உலகளாவிய இன்டர்நெட்டினையும் இணைப்பது இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் நிறுவனமே. நீங்கள் காண விரும்பும் இணைய தளங்களையும், நீங்கள் அனுப்பும் இமெயில் செய்திகளையும் இந்த நிறுவனத்தின் சர்வர் வழியாகத்தான் செல்கின்றன. இவற்றைப் பார்க்கக் கூடிய வழிகள் இந்த நிறுவனத்திற்கு உண்டு. ஆனால் இவை அனைத்தையும் பார்க்க வேண்டும் என்றால் அவற்றிற்கான கட்டமைப்பை உருவாக்க, புரோகிராம்களை எழுதி இயக்க நிறைய பணம் தேவைப்படும்.
மேலும் அவை எல்லாம் வெட்டிச் செலவாகிவிடும். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட இவற்றைப் பதிவு செய்வது இல்லை. அரசால் சந்தேகப்படும் நபர்களின் இணைய நடவடிக்கைகள் மட்டுமே கண்காணிக்கப் படுகின்றன. எனவே அனைவரது இன்டர்நெட் நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுகின்றன என்பது உண்மை அல்ல.
3. குழந்தைகள் இன்டர்நெட்டில் உள்ள பாலியியல் தளங்களினால் கெடுக்கப் படுகின் றனர். மனரீதியாகப் பாதிக்கப்படுகின்றனர். குற்றம் செய்ய தூண்டப்படுகின்றனர். இதனாலேயே பெற்றோர்கள் இன்டர்நெட் தளங்களைத் தடை செய்கின்றனர். இது முழுவதும் உண்மை அல்ல; குழந்தைகளைக் காட்டிலும் பெரியவர்களே பாலியியல் குற்றங்களை இன்டர்நெட்டின் மூலம் மேற்கொள்கின்றனர். இன்டர்நெட்டினை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர். எனவே குழந்தைகள் கெட்டுப்போகின்றனர் என்பது முற்றிலும் உண்மை அல்ல.
4. இன்டர்நெட்டில் படிப்பதெல்லாம் உண்மை. இன்டர்நெட்டில் யார் வேண்டுமானாலும் தங்களுக்கென பிளாக்கு களைத் தொடங்கித் தங்கள் கருத்துக்களை பதிக்கலாம். அப்படி இருக்கையில் இன்டர்நெட் தளங்களில் இருப்பது அனைத்தும் உண்மைத் தகவல்கள் என்று நம்ப முடியாது. யார் வேண்டுமானாலும் தங்களின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப எழுதி பிரசுரிக்கலாமே. அப்புறம் எப்படி அனைத்தும் உண்மை ஆகும்.
எனவே இணையத்தில் தகவல்களைப் படிக்கையில் அவற்றின் உண்மைத் தன்மை யினை உணர வேண்டும்.
தகவல்களைத் தரும் தளங்களின் தன்மை எப்படிப்பட்டவை என்று காண வேண்டும். அரசு, நிறுவனங்கள், அரசு ஆதரவு பெற்ற பொதுவான அமைப்புகளின் தளங்கள் தரும் தகவல்களை மட்டுமே அப்படியே எடுத்துக் கொள்ளலாம். புகழ்பெற்ற பத்திரிக்கைகளின் தளங்களும் உண்மைச் செய்திகளையே தரும். மற்றவற்றை தீர யோசித்த பின்னரே அல்லது மற்ற தளங்களையும் பார்த்த பின்னரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
5. இன்டர்நெட் உங்களை கோடீஸ்வரனாக மாற்றும். இன்று இன்டர்நெட் மூலம் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதித்தேன். பல்லாயிரக் கணக்கான டாலருக்கு அதிபதியானேன் என்பதெல்லாம் கதை. இந்த கதைகளைக் கூறி, தளங்களுக்கு இழுத்துச் சென்று நம் பணத்தைப் பறிக்கும் வழிகளாகும். இன்டர்நெட் வழியாக உங்கள் வர்த்தகத்திற்கு லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் என்பது உண்மையே. ஆன்லைன் வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும் என்பதுவும் உறுதி செய்யப்பட்டதே. ஆனால் அதற்காக இதனை விளம்பரம் மூலம் கூறி உங்களை இழுக்கும் இணைய தளங்கள் குறித்து முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இன்டர்நெட் உலகின் தொழில் நுட்ப சொற்கள்
Adware: : சாப்ட்வேர் பயன்பாடு ஒன்றினுள் விளம்பரம் ஒன்றினை, எடுத்துக்காட்டாக பேனர் விளம்பரச் செய்தி, இயக்கும் தொகுப்பு.
Auto Responder: ரெடிமேடாக ஏற்படுத்தி வைத்துள்ள இமெயில் கடிதத்தினைப் பதிலாக அனுப்பும் புரோகிராம். நீங்கள் ஊருக்குப் போகிறீர்களா? இமெயில் பார்க்காமல் இருக்கப் போகிறீர்களா? நான் ஊரில் இல்லை 10 நாட்கள் கழித்துத்தான் இதற்குப் பதில் அனுப்ப முடியும் என்ற செய்தியினை கடிதமாக அனுப்பி வைத்தால், உங்கள் இமெயில் முகவரிக்கு வரும் கடிதங்களுக்குத் தானாக இதன் மூலம் பதில் அனுப்பலாம். இன்டர்நெட் சேவை தரும் நிறுவனங்களும் இமெயில் கிளையன்ட் புரோ கிராம்களும் இந்த வசதியை வைத்திருக்கின்றன.
Bandwidth : ஒரு நெட்வொர்க் இணைப்பில் பரிமாறப்படும் டேட்டா எனப்படும் தகவல்கள் அளவு.
Browser: இன்டர்நெட்டில் உள்ள தகவல்களை எடுத்துத் தரும் சாப்ட்வேர் தொகுப்பு.
Buffer: தற்காலிகமாக டேட்டாவைச் சேமித்து வைக்கும் இடம்; இதனை புரோகிராம்களும் பிரிண்டர், சிடி ரைட்டர் போன்ற சாதனங்களும் பயன்படுத்தித் தங்களுக்கு வேண்டிய டேட்டாவைத் தங்க வைத்து எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளும்.
Cache: இதுவும் தற்காலிக மெமரிதான். நீங்கள் பயன்படுத்தும் இணைய தளங்கள் சார்ந்த தகவல்களைத் தற்காலிகமாகச் சேர்த்து வைத்துக் கொள்ளும் இடம். ஒவ்வொருமுறை நீங்கள் அதே தளத்திற்குச் செல்கையில் அல்லது ஒரே செயல்பாட்டினை மேற்கொள் கையில் இதற்கென புதிய தகவல்களைப் பெற்று செயல்படாமல் தேக்கி வைக்கப் பட்டுள்ள இந்த கேஷ் மெமரியிலிருந்து பெற்று பிரவுசர் பயன்படுத்திக் கொள்ளும்.
Cookie: வெப்சைட் உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்துக் கொள்ளும் சிறிய புரோகிராம். அந்த வெப் சைட்டைப் பொறுத்தவரை உங்கள் அணுகுமுறை மற்றும் உங்களைப் பற்றிய தகவல்கள் இதில் பதியப்படுவதால் அந்த வெப்சைட் உங்களை எளிதாக அடையாளம் கொண்டு தேவையானவற்றை எடுத்துக் கொள்ள அனுமதிக்கும்.
DNS (Domain Name System): நாம் சொற்களில் தரும் இணைய தள முகவரியினை கம்ப்யூட்டர் புரிந்து கொள்ளும் வகையில் அதன் எண் முகவரியினைத் தரும் சிஸ்டம். ஒவ்வொரு இண்டர்நெட் சேவை நிறுவனமும் இப்படி ஒரு சிஸ்டத்துடன் தொடர்பு கொண்ட பின்பே நாம் விரும்பும் இணைய தளத்தைப் பெற்றுத் தருகிறது.
Netiquette: இணையத்தில் உலவுகையில் மற்றவர்களுடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்கையில் ஆன் லைனில் தொடர்பு கொள்கையில் நாம் கடைப் பிடிக்க வேண்டிய அடிப்படைப் பண்புகளை இந்த சொல் குறிக்கிறது.
Quicktime : ஆப்பிள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மல்ட்டி மீடியா புரோகிராம். இதன் மூலம் மல்ட்டி மீடியா (ஆடியோ மற்றும் வீடியோ) உருவாக்கவும், இயக்கிப் பார்க்கவும் எடிட் செய்திடவும் முடியும். இன்டர்நெட்டில் இந்த புரோகிராம் மட்டுமே இயக்கிப் பார்க்க முடியும் பைல்களை நீங்கள் கிளிக் செய்தால் இந்த ஆட்–ஆன் புரோகிராம் வேண்டும் என்றும் அதன் தளத்திலிருந்து இறக்கிப் பதியவா என்றும் உங்கள் பிரவுசர் கேட்கும். இந்த புரோகிராமினை ஏற்கனவே பதிந்து வைத்திருந்து அதற்குப் பின் புதியதாக அது மேம்படுத்தப்பட்டு இருந்தால் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராமினை மேம்படுத்தவா என்றும் உங்கள் பிரவுசரில் செய்தி கிடைக்கும்.
Traceroute: இணையத் தொடர்பில் ஒரு கம்ப்யூட்டருக்கும் இன்னொரு கம்ப்யூட்டருக்கும் உள்ள தொடர்புப் பாதையைக் கண்டுபிடிக்கும் கட்டளைச் சொல். இந்த கட்டளைச் சொல்லை எம்.எஸ். டாஸ் பிராம்ப்டில் கொடுத்து ஏதேனும் ஒரு இணைய தளத்தின் முகவரியைக் கொடுத்துப்பாருங்கள். அப்போது உங்கள் கம்ப்யூட்டர் இணைய தொடர்பில் இருக்க வேண்டும். அந்த முகவரி குறிப்பிடும் இணைய தளம் உள்ள சர்வரை எந்த வழியாக உங்கள் கம்ப்யூட்டர் சென்றடைகிறது என்ற தகவல் கிடைக்கும்.
இன் டிசைன் கற்றுக் கொள்ளச் சிறந்து நூல்
அண்மைக் காலத்தில் புத்தகத் தயாரிப்புக்குப் பல வழிகளில் துணை புரியும் தொகுப்பாக இன்டிசைன் அப்ளிகேஷன் சாப்ட்வேர் பெயர் பெற்றுள்ளது. இதனை எளிய தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு வழி காட்டும் நூலாக “இன்டிசைன் சி.எஸ். 4 வரை’ என்ற தலைப்பில் வீரநாதன் எழுதி வழங்கியுள்ளார். கோயம்புத்தூர் பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம் வெளியிட்டுள்ளது.
டெஸ்க்டாப் பப்ளிஷிங் எனப்படும் நூல் தயாரிப்புக்குப் பெரும்பாலும் பயன்படுத் தபடும் சாப்ட்வேர் தொகுப்புகளில் பேஜ் மேக்கர் வெகுகாலமாக முன்னணியில் இடம் பெற்றிருந்தது. ஆனால் புத்தகத் தயாரிப்பில் பல சிறப்புகளைப் புகுத்த நம் தேவைகள் அதிகமான போது, பேஜ் மேக்கர் தொகுப்பின் குறைபாடுகள் தெரிய வந்தன. எனவே அவற்றை நீக்கிப் பல புதிய வசதிகளைத் தரும் வகையில் அடோப் நிறுவனம் இன்டிசைன் என்னும் டி.டி.பி. சாப்ட்வேர் தொகுப்பினை வெளியிட்டது. 1999 ஆம் ஆண்டிலேயே இது வெளிவந்த பின்னும் பேஜ்மேக்கர் தொகுப்பிலும் பல புதிய பதிப்புகள் (பேஜ் மேக்கர் 6.0., 7, 7.1 என) வெளிவந்தன. ஆனால் இன்டிசைன் அப்ளிகேஷன் புரோகிராமின் மேம்படுத்தப்பட்ட தொகுப்புகள் வெளிவந்த பின்னர், பேஜ் மேக்கர் தொகுப்பிற்கு தொடர் பதிப்புகள் வெளிவருவது நிறுத்தப்பட்டது. இதனால் பலரும் இன்டிசைன் தொகுப்பிற்கு மாறினர்.
வெகுகாலம் பேஜ் மேக்கரில் பழகியவர்களுக்கு இன்டிசைன் தொகுப்பில் பணிபுரிவது சற்று சிரமமானதாகத்தான் இருக்கும். இதனை இந்த நூலாசிரியர் வீரநாதன் உணர்ந்து, இன்டிசைன் தொகுப்பின் ஒவ்வொரு செயல்பாட்டினையும் தெளிவாகப் பட்டியலிட்டுப் படங்களுடன் விளக்கி உள்ளார். ஒவ்வொரு பக்கமும் படங்கள் கொடுத்து விளக்கி இருப்பது இந்நூலின் சிறப்பாகும். நூலின் பொருளடக்கம் மிக விரிவாக இருப்பதனால், இந்த தொகுப்பில் எந்த பிரிவில் சந்தேகம் உள்ளதோ, அல்லது எதற்கு விளக்கம் தேவையோ, அந்தப் பிரிவிற்கு எளிதாகச் சென்று தெரிந்து கொள்ள இது வழி வகுக்கிறது.
மேலும் இந்நூலுடன் தரப்படும் சிடியில் 33 பிரிவுகளில் விளக்க உரை வீடியோ கிளிப்களாகத் தரப்பட்டுள்ளன. இவற்றை வரிசையாகப் பார்க்கலாம்; அல்லது தேவைப்படும் பகுதிக்கான பைலைக் கிளிக் செய்து பார்க்கலாம். நூலில் விளக்கப்பட்டுள்ள எந்த எந்த பகுதிகளுக்கு விளக்க வீடியோ உரைகள் உள்ளன என்று நூலில் குறிக்கப்பட்டுள்ளது. இதில் தரப்படும் விளக்க உரை கை தேர்ந்த ஆசிரியர் ஒருவரின் உரை போல, கூடுதல் விளக்கங்களுடன், ஒரு நீரோடை போல ஓடுகிறது. செயல்முறைப் பயிற்சி தரும் வகையில் விளக்க உரைக்கு வீடியோ கிளிப்கள் உதவி புரிகின்றன. நூலில் தந்த விளக்கங்களுக்கு இதுவும் நல்ல தொரு துணையாக உள்ளது.
வேலை வாய்ப்பிற்கான கம்ப்யூட்டர் சார்ந்த நூல்கள், தமிழில் மிகவும் குறைவே. இந்த நூல் டி.டி.பி. துறையில், இன்டிசைன் தொகுப்பில் பணிபுரிவோருக்கு நல்லதொரு கையேடாக உள்ளது. இதன் விலை ரூ. 280. நூல் வேண்டுவோர் கோயம்புத்தூர் தொலைபேசி எண் 2323228 ஐத் தொடர்பு கொள்ளலாம்.

ஹார்ட் டிஸ்க் உருவான பாதை

ஹார்ட் டிஸ்க் உருவான பாதை
ஹார்ட் டிஸ்க் உருவான பாதை
நம் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் தான் அனைத்து டேட்டாக்களும் பதிவு செய்யப்படுகின்றன. இங்குதான் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமர்ந்து கொண்டு கம்ப்யூட்டரை இயக்குகிறது. ஏறத்தாழ 50 ஆண்டுகளா கத்தான் ஹார்ட் டிஸ்க் கம்ப்யூட்டரின் ஓர் இன்றியமையாத உறுப்பாக இயங்கி வருகிறது. கம்ப்யூட்டர் பயன்பாடு வந்த தொடக்கத்தில் ஹார்ட் டிஸ்க் என்பதே இல்லை. இப்போது 2 டெராபைட் கொள்ளளவு கொண்ட ஹார்ட் டிஸ்க்குகள் வந்துள்ளன. ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை 1 ஜிபிக்கும் குறைவான அளவுள்ள ஹார்ட் டிஸ்க்குகளே புழக்கத்தில் இருந்தன. ஹார்ட் டிஸ்க்கின் விலை வேகமாகச் சரிந்து, தற்போது யாவரும் வாங்கும் வகையில் மலிவாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஒரு ஹார்ட் டிஸ்க் பதிந்து கொள்ளும் டேட்டா அளவு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த ஹார்ட் டிஸ்க் வந்த பாதையினை தொடக்கம் முதல் இங்கு காணலாம்.
1956: ஐ.பி.எம். நிறுவனம் தன்னுடைய RAMAC 305 என்ற சிஸ்டத்தில் மிகப் பெரிய அளவிலான கொள்ளளவுடன் கூடிய ஹார்ட் டிஸ்க்கினை இணைத்து அறிமுகப்படுத்தியது. இந்த மிகப் பெரிய கொள்ளளவு எவ்வளவு தெரியுமா? 5 எம்.பி. அப்போது அது உண்மையிலேயே மிகப் பெரிய அளவிலான திறன் தான். ஒரு எம்பி டேட்டா கொள்ளளவிற்கு 10 ஆயிரம் டாலர் விலை எனக் குறிக்கப்பட்டது. இதன் திட அளவு இரண்டு ரெப்ரிஜிரேட்டர் அளவிற்கு இருந்தது. இதில் 24 அங்குல அளவுள்ள 50 பிளாட்டர்கள் இருந்தன.
1961: ஐ.பி.எம். ஹார்ட் டிஸ்க்கிற்கான டிரைவ் ஹெட் காற்றில் இருக்கும் வகையில் அமைத்தது.
1961: பைரண்ட் கம்ப்யூட்டர் 90 எம்பி திறனுடன் ஹார்ட் டிஸ்க்கைக் கொண்டு வந்தது. 39 அங்குல அகலத்தில் 24 டிஸ்க்குகள் கொண்டதாக இது அமைந்திருந்தது.
1963: முதல் முதலாக கம்ப்யூட்டர் சிஸ்டத்திலிருந்து வெளியே எடுக்கக் கூடிய ரிமூவபிள் ஹார்ட் டிஸ்க்கினை ஐ.பி.எம். உருவாக்கியது. இதன் திறன் 2.69 எம்.பி.; 14 அங்குல அளவில் 6 பிளாட்டர்கள் இருந்தன.
1966: புதுவிதமான ரெகார்டிங் ஹெட் கொண்ட ஹார்ட் டிஸ்க்க்னை ஐ.பி.எம். உருவாக்கியது. திறன் 29.17 எம்.பி.
1971: ட்ரேக் சர்வோ சிஸ்டம் கொண்ட முதல் ஹார்ட் டிஸ்க்கினை ஐ.பி.எம். கொண்டு வந்தது. இது 100 எம்பி திறன் கொண்டிருந்தது.
1973: நவீன வின்ச்செஸ்டர் ஹார்ட் டிரைவினை ஐ.பி.எம். கொண்டு வந்தது. 14 அங்குல பிளாட்டர்கள் 11 இருந்தன. திறன் 100 எம்பி.
1975: ஐ.பி.எம். 62 – ரோட்டரி ஆக்சுவேட்டருடன் வந்த முதல் ஹார்ட் டிஸ்க். 5 அல்லது 9 எம்பி திறனுடன் அமைந்தது.
1976: 43 எப்.டி. கிறிஸ்டல் என்னும், முதல் வளைந்து கொடுக்கக் கூடிய டிஸ்க் டிரைவ்; இரு பக்கமும் எழுதக் கூடியது. 8 அங்குல அகலத்துடன் 0.568 எம்பி கொள்ளளவு கொண்டது.
1976: ஷுகார்ட் அசோசியேட்ஸ் என்னும் நிறுவனம் முதல் 5.25 அங்குல அகலத்தில் ப்ளெக்ஸிபிள் டிஸ்க்கினைக் கொண்டு வந்தது. இதில் 0.2188 எம்பி டேட்டா பதியலாம்.
1979: பியுஜிட்ஸு நிறுவனம் 10.5 அங்குல அகலத்தில் ஹார்ட் டிஸ்க் டிரைவினைத் தந்தது. ஆறு பிளாட்டர்கள் உள்ளன.
1979: ஸீகேட் டெக்னாலஜிஸ் நிறுவனம் எஸ்.டி. 506 என்ற 5.25 அங்குல ஹார்ட் டிஸ்க்கினை 5 எம்.பி திறனுடன் கொண்டு வந்தது. இதில் 4 பிளாட்டர்கள் இருந்தன.
1980: முதல் கிகாபைட் அளவிலான ஹார்ட் டிஸ்க். ஐ.பி.எம். கொண்டு வந்த இந்த ஹார்ட் டிஸ்க் ஒரு ரெப்ரிஜிரேட்டர் அளவு இருந்தது. 250 கிலோ எடையுடன் 40 ஆயிரம் டாலர் மதிப்பு கொண்டிருந்தது.
1981: சோனி நிறுவனமும் டிஸ்க் தயாரிப்பு பணியில் இறங்கியது. 3.5 அங்குல ப்ளெக்ஸிபில் டிஸ்க்கினைக் கொண்டு வந்தது.கொள்ளளவு திறன் 0.4375 எம்பி.
1983: ரோடிம் முதல் 3.5 அங்குல ஹார்ட் டிஸ்க்கினைத் தயாரித்து வழங்கியது.இதில் இரண்டு பிளாட்டர்கள் இருந்தன. அளவு 10 எம்பி.
1986: அதிக திறனுடன் இயங்கும் ஸ்கஸ்ஸி ஹார்ட் டிஸ்க் டிரைவுடன் ஆப்பிள் நிறுவனத்தின் மேக் கம்ப்யூட்டர் வெளியானது.
1988: கானர் நிறுவனம் ஒரு அங்குல உயரத்திலான 3.5 அங்குல ஹார்ட் டிரைவினைத் தயாரித்து வழங்கியது. இன்று வரை இதுதான் லேப்டாப் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படுகிறது. முதலில் இது 31 எம்பி திறன் கொண்டதாக அமைந்தது.
1992: ஸீ கேட் நிறுவனம் அதிர்வுகளைத் தாங்கக் கூடிய முதல் 2.5 அங்குல டிஸ்க் டிரைவினைத் தயாரித்து வழங்கியது.
1993: முதல் 7200 ஆர்.பி.எம். வேக ஹார்ட் டிஸ்க் டிரைவினை (Barracuda ST12550) ஸீ கேட் தயாரித்து வழங்கியது. இதில் 3.5 அங்குல அளவிலான பிளாட்டர்கள் பத்து அமைந்திருந்தன.
1996: மிக அதிக அளவிலான ஸ்டோரேஜ் டென்சிட்டி கொண்ட மீடியத்தினை ஐ.பி.எம். தந்தது. ஒரு சதுர அங்குல இடத்தில் நூறு கோடி பிட் டேட்டாவினை இதில் அமைக்க முடியும்.
1997: ஸீகேட் முதல் 10,000 ஆர்.பி.எம். வேக ஹார்ட் டிஸ்க் டிரைவினை வழங்கியது. முதலில் 3.5 அங்குல பிளாட்டர்களுடனும் பின் 3 அங்குல பிளாட்டர்களுடனும் அமைந் திருந்தது.
1999: மைக்ரோ டிரைவ் என அழைக்கப்படும் மிகச் சிறிய ஹார்ட் டிஸ்க்கினை ஐ.பி.எம். வழங்கியது. இதில் ஒரு அங்குல பிளாட்டர்கள் இருந்தன. ஒரு பிளாட்டரில் 340 எம்.பி. டேட்டா பதிய முடிந்தது.
2000: அதிவேக இயக்கத்துடன், 15000 ஆர்.பி.எம்., ஹார்ட் டிஸ்க் டிரைவினை ஸீ கேட் தயாரித்து வழங்கியது.
2002: பெர்பென்டிகுலர் மேக்னடிக் ரெகார்டிங் டெக்னாலஜி அடிப்படையில் ஹார்ட் டிஸ்க் இயங்க முடியும் என ஸீ கேட் காட்டியது. இதன் மூலம் ஒரு சதுர அங்குல சிப்பில் 100 கிகா பிட்ஸ் தகவல்களைப் பதிய முடியும்.
2005: ஹிடாச்சி முதல் 500 ஜிபி ஹார்ட் டிஸ்க்கினை வெளியிட்டது.
2006: நோட்புக் கம்ப்யூட்டர்களில் பயன்படக் கூடிய Momentus 5400.3 என்னும் 2.5 அங்குல முதல் ஹார்ட் டிரைவினை ஸீ கேட் தந்தது. இதன் கொள்ளளவு திறன் 160 ஜிபி.
2006: Barracuda 7200.10 7200.10 என்ற பெயரில் 750 ஜிபி திறன் கொண்ட ஹார்ட் டிரைவினை ஸீ கேட் வெளியிட்டது.
2007: முதல் 1 டெரா பைட் ஹார்ட் டிஸ்க்கினை ஹிடாச்சி நிறுவனம் டெஸ்க் ஸ்டார் 7கே 1000 என்ற பெயரில் வெளியிட்டது. இதில் 3.5 அங்குல அளவிலான பிளாட்டர்கள் ஐந்து இருந்தன. ஒவ்வொரு பிளாட்டரும் பி.எம்.ஆர். தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி 200 ஜிபி டேட்டாவினைப் பதிந்தன.
2008: லேப் டாப் கம்ப்யூட்டரில் பயன்படுத்த ஹிடாச்சி, 2. 5 அங்குல அளவிலான ஹார்ட் டிரைவினைத் தந்தது. இதில் இரண்டு பிளாட்டர்கள் 5,400 ஆர்.பி.எம்.வேகத்தில் சுழன்றன.
2009: வெஸ்டர்ன் டிஜிட்டல் முதல் 2 டெரா பைட் ஹார்ட் டிஸ்க்கினைக் கொண்டு வந்தது. நான்கு 3.5 அங்குல பிளாட்டர்கள் இதில் உள்ளன. ஒரு பிளாட்டரில் 500 ஜிபி டேட்டா பதியமுடியும்.
2009: வெஸ்டர்ன் டிஜிட்டல் மேலும் ஒரு சாதனையை மேற்கொண்டது. முதல் 1 டெரா பைட் ஹார்ட் டிஸ்க்கினை 2.5 அங்குல அகலத்தில் தயாரித்தது. லேப்டாப்பில் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தக்கூடிய இதன் பெயர் ஸ்கார்ப்பியோ புளு.
2010: சீகேட் நிறுவனம் 4 டெரா பைட் ஹார்ட் டிஸ்க்கினை 3.5 அங்குல அகலத்தில் தயாரித்தது.

விண்டோஸிலிருந்து லினக்ஸ் மாறலாமா?

விண்டோஸிலிருந்து லினக்ஸ் மாறலாமா?
லினக்ஸ் – இது மக்களுக்காக, மக்களால் உருவாக்கப்பட்ட ஒரு மாபெரும் இயங்குதளம் என ஒரு லினக்ஸ் ரசிகர் கூறுவார். இந்த கூற்று முற்றிலும் உண்மையானதே. லினக்ஸிற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது. பொது நோக்கத்தோடு பலர் எழுதிய பல நோக்கு புரோகிராம்கள் இணைந்த தொகுப்பே லினக்ஸ்.
விண்டோஸ் விஸ்டா தொகுப்பு தந்த சில கசப்பான அனுபவங்களுக்குப் பின், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில் பலர் ஏன் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அதன் இடத்தில் பயன்படுத்திப் பார்க்கக் கூடாது என்று எண்ணி வருகின்றனர். மீண்டும் எக்ஸ்பிக்குத் திரும்பினாலும், லினக்ஸ் அனுபவத் தினையும் மேற்கொள்ள எண்ணுகின்றனர். இது வாடிக்கையாளர்களின் எதிர்செயல் மட்டுமன்று. சில கம்ப்யூட்டர் நிறுவனங்களே, விஸ்டாவை ஒதுக்கி வைத்து லினக்ஸ் சிஸ்டத்திற்குத் தாவின. எடுத்துக்காட்டாக டெல் கம்ப்யூட்டர் நிறுவனத்தைப் பார்க்கலாம். தொடக்கத்தில் டெல் தன் வாடிக்கையாளர்கள் அனைவரையும் எக்ஸ்பியிலிருந்து விஸ்டாவிற்கு மாற்றியது. இருந்தாலும் வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க பல கம்ப்யூட்டர்களிலும் எக்ஸ்பி பதிந்தே விற்பனை செய்து வந்தது. இதனால் சென்ற 2007 ஏப்ரல் முதல் மீண்டும் எக்ஸ்பிக்கு தாவியது. இதனால் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குச் சற்று வருத்தம் தான்.
ஆனால் டெல் அடுத்த மே மாதத்தில் இன்னொரு குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு வந்தது. வாடிக்கையாளர்கள் விரும்பினால் உபுண்டு லினக்ஸ் பதிப்பு 7.04 ஐப் பதிந்து தருவதாக அறிவித்தது.
உலகின் முன்னணி நிறுவனமான டெல் இவ்வாறு விடுத்த அறிவிப்பு பலரையும் லினக்ஸ் நிறுவனத்தின் பெருமைகள் பக்கம் திருப்பியது. அப்போது தான் லினக்ஸ் தொகுப்பு பிரபலமாகத் தொடங்கியது. பல நாடுகளில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர் மட்டுமின்றி, கம்ப்யூட்டர் சிஸ்டம் வல்லுநர்களும் லினக்ஸ் குறித்து சிந்தித்துச் செயல்படத் தொடங்கினர். லினக்ஸ் ஒரு திறந்த புத்தகமாய், யாரும் அறிந்துகொள்ளக் கூடிய வகையில் தன் குறியீட்டு வரிகளைக் கொண்டதாய் அமைந்ததால், பல வல்லுநர்கள் இதற்கான அப்ளிகேஷன் புரோகிராம்களை அமைத்துத் தரத் தொடங்கினார்கள். லினக்ஸ் சிஸ்டத்திலும் பல மேம்பாடுகள் உருவாக்கப்பட்டு, பல்வேறு பெயர்களுடன் இணைந்த லினக்ஸ் வெளிவரத் தொடங்கின. தற்போது விண்டோஸ் இயங்கும் கம்ப்யூட்டரிலேயே, இன்னொரு டிரைவில் லினக்ஸ் தொகுப்பினையும் பதித்து இயக்கும் பயன்பாட்டினைப் பலரும் மேற்கொண்டுள்ளனர்.
பொதுவாக ஒரு சிஸ்டத்திற்குப் பழகிய நாம், இன்னொரு சிஸ்டத்திற்கு மாறுவதற்குத் தயங்குவோம். புதிய சிஸ்டத்தின் பயன்களைக் கண்டு, அதனால் அதிகச் செலவு அல்லது செலவே இருக்காது என்று நம்பிய பின் அது குறித்து யோசிப்போம்.
பொதுவாக நம் விற்பனைச் சந்தை, பொருளின் விலை அடிப்படையில் இயங்குவதால், லினக்ஸ் இலவசம் என்ற கூற்றும், மைக்ரோசாப்ட் தன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் ஆபீஸ் தொகுப்புகளுக்கான நகல் பதிப்புகளின் பயன்பாட்டினை நெருக்கு கிறது என்ற நிலை வந்ததாலும், பலர் லினக்ஸ் சிஸ்டம் பயன்படுத்துவது குறித்து ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கி உள்ளனர். இங்கே லினக்ஸ் பயன்படுத்துவதால், அல்லது அதற்கு மாறுவதால் நாம் பெறக் கூடிய பயன்களைப் பார்க்கலாம்.
1. லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொகுப்பு முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும் ஒரு சாப்ட்வேர் தொகுப்பாகும். விண்டோஸ் போல இதனைப் பணம் செலுத்திப் பெற வேண்டிய அவசியமில்லை. இன்டர் நெட்டிலிருந்து லினக்ஸ் சிஸ்டத்திற்கான ஐ.எஸ்.ஓ. பைலை டவுண்லோட் செய்து, அதனை சிடி அல்லது டிவிடியில் பதிந்து வைத்துப் பயன்படுத்தலாம். ஒன்றுக்கு மேற்பட்ட கம்ப்யூட்டர்களில் பதியும் போது விண்டோஸ் தொகுப்பிற்கு பணம் செலுத்த வேண்டும். லினக்ஸிற்குக் கிடையாது.
2. லினக்ஸ் தொகுப்பு இறக்கிப் பதியும் போது, பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்கள் இணைந்தே இலவசமாகக் கிடைக்கின்றன. எடுத்துக் காட்டாக பி.டி.எப். ரீடர், வெப் சர்வர், கம்பைலர், ஐ.டி.இ. போன்றவற்றை எடுத்துக் காட்டாகக் கூறலாம். இவை எல்லாவற்றைக் காட்டிலும் உபுண்டு லினக்ஸ் தொகுப்பினை இன்ஸ்டால் செய்தால் ஓப்பன் ஆபீஸ் என்ற ஆபீஸ் தொகுப்பும் கிடைக்கிறது. இது எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் அனைத்து செயல்பாடுகளுக்குமான மாற்று தொகுப்பாக, இலவசமாகக் கிடைக்கும் அப்ளிகேஷன் புரோகிராமாகும்.
3. அடுத்தது பாதுகாப்பு. லினக்ஸ் சிஸ்டம் இயக்கும் பைல்களை, கம்ப்யூட்டரை வைரஸ், ஸ்பைவேர், ஆட்வேர் போன்ற கெடுக்கும் புரோகிராம்கள் பாதிப்பதில்லை. இதனால் இவற்றிற்கு எதிரான ஆண்ட்டி வைரஸ் போன்ற புரோகிராம்களை விலை கொடுத்து வாங்கிப் பதிய வேண்டியதில்லை. தொடர்ந்து அதனை அப்டேட் செய்திட காசு கட்ட வேண்டியதில்லை. பதிந்தபின்னும் பயத்துடன் இருக்க வேண்டியதில்லை.
4. விண்டோஸ் எக்ஸ்பி அல்லது விஸ்டா பயன்படுத்த, கூடுதலான அளவில் ராம் மெமரி எனப்படும் நினைவகம் தேவைப்படும். ஆனால் உபுண்டு லினக்ஸ் போன்ற சிஸ்டம் புரோகிராம்கள் இயங்க அந்த அளவிற்கு ராம் தேவைப்படாது.
5. அடிக்கடி கிராஷ் ஆகி, நீல நிறத்தில் “உங்கள் கம்ப்யூட்டர் போச்சே! மீண்டும் ரீ பூட் செய்திடுங்கள்’ என்றெல்லாம், லினக்ஸில் செய்தி வராது. இதனால் தான் தொடர்ந்த கம்ப்யூட்டர் இயக்கம் வேண்டுபவர்கள் (சர்வர் பயன்படுத்துபவர்கள்) லினக்ஸ் இயக்கத்தினை நாடுகிறார்கள்.
6. பல்வேறு கம்ப்யூட்டர் மொழிகளில் (சி மற்றும் அதன் குடும்பத்தைச் சேர்ந்த புரோகிராம் மொழிகள்) புரோகிராம் எழுத லினக்ஸுடன் கம்ப்பைலர்கள் இலவசமாகவே தரப்படுகின்றன. பைத்தன் (கதூtடணிண) மொழியைக் கற்று புரோகிராம் எழுதவும் லினக்ஸில் வழி உண்டு.
7. தொடர்ந்து லினக்ஸ் மேம்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. மேம்படுத்தப்பட்ட தொகுப்புகள் பல புதிய வசதிகளைத் தந்து கொண்டிருக்கின்றன. மேலும் இவையும் இலவசமாகவே கிடைக்கின்றன.
8. விண்டோஸ் என்னும் ஏக போக ஆப்பரேட்டிங் சிஸ்டத்திடம் இருந்து விடுதலை கிடைத்ததால், லினக்ஸ் சிஸ்டம் ரசிகர்கள் தங்களுக்கென பல இணைய தளங்களை உருவாக்கி, உலகெங்கும் லினக்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு சிக்கல்களைத் தீர்க்கும் தீர்வுகளை இலவசமாகவும் சேவையாகவும் தந்து வருகின்றனர். உங்களுக்கு என்ன பிரச்சினை என்றாலும், அதனை சர்ச் இஞ்சினில் போட்டால் அதற்கான தீர்வு ஏற்கனவே இருக்கும்; அல்லது உடனே எங்கிருந்தாவது கிடைக்கும். லினக்ஸ் பயனாளர்களுக்கு உதவிட, தமிழ் மொழி உட்பட, பல மொழிகளில் உதவி தரும் தளங்கள் இயங்குகின்றன.
நீங்கள் லினக்ஸ் பயன்படுத்தினால் விண்டோஸ் இருக்கும் கம்ப்யூட்டரிலேயே, லினக்ஸ் தொகுப்பினையும் இன்ஸ்டால் செய்து பயன்படுத்திப் பார்க்கலாம். பின் உங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேறும் என அறிந்தால் லினக்ஸோடு மட்டும் தொடரலாம். அப்படியும் கம்ப்யூட்டரில் பதிந்து பயன்படுத்தவா என்று பயந்தால், லினக்ஸ் சிஸ்டம் தரும் டீலர்கள் பலர் லைவ் சிடி என்ற ஒன்றைத் தருகின்றனர். இதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டரில் லினக்ஸ் தொகுப்பினை நிறுவாமல், லினக்ஸ் சிஸ்டத்தை இயக்கிப் பார்க்கலாம்.
9. லினக்ஸ் இயக்கம் முழுவதும் எளிமையான இன்டர்பேஸ் தரப்பட்டுள்ளது. இது கம்ப்யூட்டர் பழக்கத்தை ஒரு பிரிய நண்பனாகக் காட்டுகிறது.
10. கிராஷ் ஆகாமல் இருப்பதால், எந்தவித பயமும் இன்றி தொடர்ந்து பயன்படுத்தலாம்.
சென்னையில் லினக்ஸ் பயன்படுத்துபவர்கள் ஒரு குழு அமைத்துத் தங்களுக்குள் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதுடன், பயன்படுத்துபவர்களுக்கான அனைத்து உதவிகளையும் தந்து வருகின்றனர். இந்த குழு கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வருகிறது. http://www.chennailug.org என்ற முகவரி உள்ள இணைய தளத்தில் இது குறித்த தகவல்களைக் காணலாம். இதன் மின்னஞ்சல் குழுவிலும் சேரலாம்.
இன்னொன்றையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம், சில ஆர்வலர்களின் முயற்சியின் மூலம் தமிழிலேயே கிடைக்கிறது. ww.thamizhlinux.org, www.thamizha.org ஆகிய முகவரிகளில் இது குறித்த தகவல்களைக் காணலாம்.
லினக்ஸ் தொகுப்பு இவ்வளவு சிறப்பம்சங்களைக் கொண்டிருந்தாலும் ஏன் பிரபலமாகவில்லை? என்ற ஒரு கேள்வி எழலாம். ஏற்கனவே குறிப்பிட்டது போல, நாம் அடிப்படை விஷயங்களில் மாற்றங்களை அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை.
அடுத்ததாக, லினக்ஸ் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள சற்றுப் பொறுமை வேண்டும். படித்து நாமாக நம் அனுபவத்தின் மூலம் கற்றுக் கொள்ள வேண்டியது உள்ளது. எல்லாமே ரெடியாக நாம் பயன்படுத்த இருப்பதில்லை. சிலவற்றைக் கற்றபின்னரே பயன்படுத்தமுடியும். இந்த வகையில் http://foogazi.com/2006/11/24/20mustreadhowtosandguidesforlinux/ / என்ற முகவரியில் உள்ள தளத்தில் சொல்லப்பட்டிருப்பதனைப் பார்க்கவும்.
புதிதாக வரும் சில ஹார்ட்வேர் சாதனங்களை, லினக்ஸ் சிஸ்டம் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை. ஒரு குறிப்பிட்ட நிறுவனம் லினக்ஸ் சிஸ்டத்திற்கான பொறுப்பினை ஏற்றுக் கொண்டிருந்தால், ஒருவேளை, நமக்கு புதிய ஹார்ட்வேர் சாதனங்களுக்கான பேட்ச் பைல் கிடைத்துக் கொண்டே இருக்கும். அது இல்லாத நிலை பல வேளைகளில் ஏற்படுகிறது. இதனால் தான் விண்டோஸ் தொகுப்பிற்கு முழுமையான மாற்று சிஸ்டமாக லினக்ஸை ஏற்றுக் கொள்ளப் பலர் தயங்குகின்றனர்.
இன்னும் விண்டோஸ் இயக்கத்தில் பயன்படுத்தப்படும் சில புரோகிராம்களுக்கு இணையான லினக்ஸ் புரோகிராம்கள் உருவாக்கப்படவில்லை. இது சற்று தயக்கத்தினை ஏற்படுத்துகிறது. இருப்பினும் இப்போது நீங்கள் லினக்ஸ் தரும் பயன்களை அறிந்து கொண்டதனால், அதனைப் பயன்படுத்திப் பார்க்கும் முயற்சியில் இறங்கலாமே!
லினக்ஸ் தொகுப்பினைப் பல நிறுவனங்கள் சில வேறுபாடுகளுடன் தருகின்றன. Linspire, Red Hat, SuSE, Ubuntu, Xandros, Knoppix, Slackware, Lycoris போன்றவை இவற்றில் முக்கியமானவை. இதுவரை வந்த விண்டோஸ் இயக்கத் தொகுப்புகளை “Win9x” எனவும், “NT class” எனவும் இரண்டு பெரிய வகைகளாகக் குறிப்பிடுகிறோம். மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது விண்டோஸ் என்.டி. 3, என்.டி. 4 மற்றும் அனைத்து 9எக்ஸ் தொகுப்புகள் குறித்துக் கண்டு கொள்வதே இல்லை. லினக்ஸ் தொகுப்பின் பல்வேறு பதிப்புகளை “distros” என அழைக்கின்றனர். டிஸ்டிரிப்யூட்டர்ஸ் என்பதன் சுருக்கமே இது. பல நிறுவனங்களால் இது டிஸ்டிரிப்யூட் செய்யப்படுவதால் இந்த சுருக்கப் பெயர் உள்ளது.
பொதுவாக அனைத்து லினக்ஸ் தொகுப்புகளுக்குமான அடிப்படை இயங்கு தளம் (Kernel) ஒரே மாதிரியாகவே இருக்கும். உடன் தரப்படும் ஆட் ஆன் தொகுப்புகள் தான் வேறுபடும். லினக்ஸ் மற்றும் விண்டோஸ் – இரண்டுமே எப்போதும் டெஸ்க்டாப் மற்றும் சர்வர் என இரண்டு வகை தொகுப்புகளைத் தருகின்றன.

பயர்வால் தொல்லையை எப்படி சமாளிக்கலாம்?

பயர்வால் தொல்லையை எப்படி சமாளிக்கலாம்?
பயர்வால் – கம்ப்யூட்டர்களைத் தாக்க வரும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை நிறுத்தி நுழையவிடாமல் செய்து சிஸ்டங்களைக் காக்கும் ஒரு சிறப்பான புரோகிராம். பல இணைய தளங்கள் இத்தகைய பயர்வால் புரோகிராம்களை நமக்கு இலவசமாகத் தந்து உதவுகின்றன. கூடுதலாக வசதிகள் உள்ள பயர்வால் புரோகிராம்களை கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். இந்த பயர்வால் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டர் பயன்பாட்டின் வேகத்தை மட்டுப் படுத்துகிறது என்று நீங்கள் எண்ணினால் அதன் இயக்கத்தினை தேவையற்ற போது நிறுத்தி வைக்கலாம்; பின் தேவைப்படும்போது இயக்கலாம். இதனை எப்படி மேற்கொள்வது என்று இங்கு பார்க்கலாம்.
1. Start மெனு சென்று Control Panel செல்லவும்.
2. பின் Network Connections என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.
3. பாப் அப் ஆகும் விண்டோவில் Local Area Connection என்பதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Properties டேப் மீதுகிளிக் செய்திடவும். நீங்கள் Local Area Connection  பயன்படுத்தாமல் விர்ச்சுவல் பிரைவேட் நெட் வொர்க் வி.பி.என். அல்லது டயல் அப் இன்டர்நெட் பயன்படுத்தினால் அந்த ஐகான் மீது ரைட் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் டேப்களில் Properties  டேப் தேர்ந்தெடுத்து பின் Advanced Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. இனி பயர்வால் தேவை என்றால் “Protect my computer and network by limiting or preventing access to this computer from the Internet’ என்பதில் செக் செய்திடவும். பயர்வால் தேவை இல்லை என்றால் இந்த டிக் மார்க்கை எடுத்துவிடவும். அதன்பின் ஓகே கிளிக் செய்து வெளியே வரவும்.
5. நீங்கள் விண்டோஸ் பயர்வால் பயன்படுத்துபவராக இருந்தால் கண்ட்ரோல் பேனலில் உள்ள விண்டோஸ் பயர்வால் ஐகானில் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் On (Recommended) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பயர்வால் இயக்கம் தேவை இல்லை என்றால் Off (Not Recommended) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

வேர்ட்/எக்ஸெல் சில குறிப்புகள்

வேர்ட்/எக்ஸெல் சில குறிப்புகள்
வழக்கமான சில டிப்ஸ்கள் இல்லாமல், சில குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன. வேர்ட், எக்ஸெல் பயன்பாட்டில் இவையும் நமக்கு மிகவும் உதவியாக இருக்கக் கூடிய தகவல்களே. இப்படியெல்லாம் எக்ஸெல் தொகுப்பு நமக்கு உதவுகிறதே என்று இவற்றைப் பயன்படுத்திப் பார்த்த பின்னர் எண்ணுவீர்கள்.
ஒர்க்புக் ஒன்றை எக்ஸெல் புரோகிராமில் திறக்க விரும்பி அதற்கான மெனு கட்டளை கொடுக்கையில் நமக்கு Open டயலாக் பாக்ஸ் விண்டோ கிடைக்கும். மற்ற ஆபீஸ் புரோகிராம்களில் கிடைக்கும் விண்டோ போலவே இதுவும் இருக்கும். இதில் காணப்படும் பைல்களைப் பார்க்கையில், இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணுவோம். அவ்வாறே பைல்களைக் காட்டுமாறு இதனை செட் செய்திடலாம். எப்படி அவற்றை நாம் விரும்பியபடி பெறலாம் என்று பார்ப்போம்.
1. முதலில் Open டூல் பாக்ஸைக் கிளிக் செய்திடவும். இதனால் Open டயலாக் பாக்ஸ் கிடைக்கிறது.
2. இதில் view டூல் வலது பக்கம் கீழ் நோக்கி இருக்கும் அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். உடன் கீழ் விரி மெனு கிடைக்கும்.
3. இதில் கிடைக்கும் Arrange ஐகானை தேர்ந்தெடுக்கவும். இங்கு எக்ஸெல் தன் தொகுப்பில் பைல்களை எப்படியெல்லாம் பிரித்து வைக்கலாம் என்று காட்டும்.
4.நீங்கள் எந்த வகையில் பைல்கள் பிரிக்கப்பட வேண்டும் என விரும்புகிறீர்களோ, அந்த வகையினைத் தேர்ந்தெடுக்கவும். பின் நீங்கள் விரும்பியபடி பைல்கள் உங்களுக்குக் காட்டப்படும்.
சில சிஸ்டங்களில் இந்த Arrange ஐகான் நமக்குக் கிடைக்காமல் இருக்கலாம். அந்த சிஸ்டங்களில் Open டயலாக் பாக்ஸில் உள்ள பைல் டேப் மீது ரைட் கிளிக் செய்திடவும். அதில் இந்த பைல்களை பிரிக்கும் வசதி தரப்பட்டிருக்கும். அதனைப் பயன்படுத்தலாம்.
நீங்கள் மட்டுமே அந்த எக்ஸெல் தொகுப்பைப் பயன்படுத்துபவராக இருந்தால், நீங்கள் செட் செய்த ஏற்பாட்டினை எக்ஸெல் நினைவில் வைத்து, நீங்கள் ஒவ்வொரு முறை Open டயலாக் பாக்ஸைத் திறக்கும்போதும் அதே வகையில் பைல்களைப் பிரித்துக் காட்டும்.
எக்ஸெல்: இடையே காலி இடம்
எக்ஸெல் தொகுப்பில் சிலர் வரிசையாக அனைத்து படுக்கை வரிசைகளில் உள்ள செல்களில் டேட்டாவினை நிரப்ப மாட்டார்கள். ஒன்று விட்டு ஒன்று நிரப்புவார்கள். இடையே உள்ள காலி செல்களில் பின்னர் ஏதேனும் கணக்கிட்டு டேட்டாவினை நிரப்புவார்கள். இது நாமாக நிரப்புகையில் சரியாக இருக்கும். எக்ஸெல் தொகுப்பே டேட்டாவை நிரப்புவதாக இருந்தால் முடியாதே? அப்போது என்ன செய்யலாம் என்று பார்ப்போமா? எடுத்துக்காட்டாக பில் ஹேண்டில் என்ற ஒன்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஏதேனும் டேட்டாவை அப்படியே கீழ் உள்ள அனைத்து செல்களிலும் காப்பி செய்திட வேண்டி இருந்தாலும் அல்லது அடுத்தடுத்து சீரியல் வரிசையில் 1,2,3,4 என நிரப்ப வேண்டி இருந்தாலும் இந்த பில் ஹேண்டிலைப் பயன்படுத்துகிறோம். ஆனால் நாம் நிரப்ப வேண்டிய செல்களில் ஹேண்டிலைப் பிடித்து இழுத்தாலே டேட்டா வரிசையாக நாம் தேர்ந்தெடுத்தபடி நிரப்பப்படும். இதில் ஒரு வரிசை விட்டு ஒரு வரிசை நிரப்ப வேண்டும் என்றால் என்ன செய்யலாம்? இதற்கு முதலிலேயே ஒரு சிறிய அட்ஜஸ்ட்மென்ட் செய்திட வேண்டும். பொதுவாக பில் இன் செய்வதற்கு முதலில் டேட்டா உள்ள செல்லை தேர்ந்தெடுக்கிறோம். பின் பில் ஹேண்டில் (செல் செலக்ஷன் அவுட்லைனில் வலது மூலையில் உள்ள சிறிய கருப்பு கட்டம்) பற்றி இழுக்கிறோம். ஒன்று விட்டு ஒன்று நிரப்ப டேட்டா செல் மற்றும் அதன் கீழே இருக்கும் செல்லினையும் சேர்த்து ஹை லைட் செய்து பின் பில் ஹேண்டிலை இழுங்கள். கீழே காலியாக உள்ள செல்லினையும் தேர்ந்தெடுத்ததால் டேட்டா ஒன்றிலும் அடுத்தது காலியாகவும் தொடர்ந்து நிரப்பப்படும். ஒரு சின்ன வேலை செய்வதனால் எவ்வளவு தலைவலி, கூடுதல் வேலை மிச்சமாகிறது.
வேர்டில் டேபிள் தலைப்புகள்
வேர்டில் டேபிள் உருவாக்குகையில் ஒவ்வொரு நெட்டு வரிசைக்கும் ஒரு தலைப்பு கொடுப்போம். அந்த நெட்டு வரிசையில், எந்த பொருள் குறித்த தகவல்கள் உள்ளன என்று அறிவதற்காக இந்த ஏற்பாட்டினை நாம் மேற்கொள் வோம். சில டேபிள்கள் பல பக்கங்கள் வரை நீண்டு செல்லலாம். அப்போது ஒவ்வொரு பக்கத்திலும் அதன் நெட்டு வரிசை தலைப்புகள் இருந்தால் தான், அவற்றைப் படித்தறிய வசதியாக இருக்கும். இதற்கென ஒவ்வொரு பக்கத்தின் தலைப்பிலும் அவற்றின் தலைப்பை டைப் செய்ய முடியாது. மேலும் டேபிளில் உள்ள டேட்டாவினை எடிட் செய்கையில், கூடுதல் டேட்டா அமைக்கும் போதோ, டேட்டாவினை நீக்கும் போதோ, அடுத்த பக்க தலைப்புகள் இடம் மாறி முன்னதாக உள்ள பக்கத்திற்கோ அல்லது பக்க நடுவிலோ சென்றுவிடும்.
இந்த பிரச்சினைக்கு வேர்ட் முடிவு ஒன்று தருகிறது. எந்த தலைப்பு உள்ள படுக்கை வரிசை, ஒவ்வொரு பக்கத்திலும் வர வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அந்த வரிசைக்குக் கர்சரைக் கொண்டு செல்லவும். பின் டேபிள் மெனுவில் Heading Rows Repeat என்று இருப்பதனைக் கிளிக் செய்திடவும். இனி ஒவ்வொரு பக்கத்திலும் இந்த தலைப்பு தானாக அமைக்கப்படும்.
நீங்கள் வேர்ட் 2007 பயன்படுத்துவதாக இருந்தால், முதலில் எந்த வரிசையில் உள்ள தலைப்புகள், அடுத்தடுத்து வர வேண்டும் என எண்ணுகிறீர்களோ, அதற்கு முதலில் கர்சரை எடுத்துச் செல்லவும். அடுத்து ரிப்பனில் லே அவுட் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு டேட்டா குரூப்பில் Repeat Header Rows என்பதில் கிளிக் செய்திடவும்.
என்ன, இவ்வாறு செட் செய்த பின்னரும், உங்கள் டேபிளில் மட்டும் தலைப்புகள் அடுத்தடுத்த பக்கங்களில் தெரியவில்லையா? கவலைப்படாதீர்கள். நீங்கள் என்ன வியூவில் வேர்ட் டாகுமென்ட்டைப் பார்க்கிறீர்கள் என்பதனைக் கவனிக்கவும். நார்மல் வியூவில் இருந்தால் இந்த தலைப்புகள் அடுத்த பக்கத்திற்குச் செல்லாது. எனவே வியூவினை மாற்றுங்கள்.
எக்ஸெல் – எப்2 கீயின் பயன்பாடு
எக்ஸெல் தொகுப்பில் நீங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கையில் செல் ஒன்றில் உள்ள பார்முலா ஒன்றை எடிட் செய்திட விரும்புகிறீர்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள்? முதலில் செல்லில் கிளிக் செய்து பின் அந்த பார்முலாவில் கிளிக் செய்து கர்சரைக் கொண்டு சென்று எடிட் செய்திட முனைகிறீர்கள். எத்தனை மவுஸ் கிளிக்குகள்? உங்கள் டேபிளில் கச்சடா பொருட்கள் நிறைய இருந்து மவுஸ் நகர்த்த சரியான இடம் இல்லாமல் போனாலோ அல்லதுமவுஸ் வைத்திருக்கும் பேட் சரியாக இல்லாமல் போனாலோ இந்த கிளிக்குகள் எல்லாம் எரிச்சலைத் தரும். இதனைக் கீ போர்டு வழியாக எப்படி செய்வது என்று பார்ப்போம். பேஜ் அப் பேஜ் டவுண் மற்றும் ஆரோ கீகளை அழுத்தி முதலில் திருத்த வேண்டிய செல்லுக்குச் செல்லுங்கள். சென்ற பின்னர் F2 கீயை அழுத்துங்கள். செல்லில் பார்முலா இருந்தால் அங்கு உங்கள் பார்முலாவினை அல்லது டெக்ஸ்ட்டை எடிட் செய்திட கர்சர் சிமிட்டிக் கொண்டிருக்கும். எடிட் செய்து முடித்தவுடன் என்ன செய்யலாம்? ஜஸ்ட் என்டர் தட்டுங்கள். அவ்வளவு தான் எடிட்டிங் ஓவர்!
டாகுமெண்ட்டில் மாதம்:
வேர்டில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட் ஒன்றில் இந்த மாதம் என்ன என்று எழுதப்பட வேண்டுமா? எடுத்துக் காட்டாக ஒவ்வொரு மாதமும், ஒரு ரிபோர்ட் ஒன்றை உங்கள் நிறுவனம் உருவாக்குகிறது. அதற்கான டேட்டாவை தினந்தோறும் ஒரு டேபிளில் அமைக்கலாம். அல்லது டெக்ஸ்ட்டில் இணைக்கலாம். அப்போது அந்த மாதத்தின் பெயர் அமைய வேண்டும் என நீங்கள் விரும்பலாம். இதற்கு டேட் என்ற பீல்டைப் பயன்படுத்த வேர்ட் வசதி அளிக்கிறது. கீழ்க்காணும் முறையில் அதனை செட் செய்திடவும்.
1. எந்த இடத்தில் மாதத்தின் பெயர் வரவேண்டுமோ, அந்த இடத்தில் கர்சரை நிறுத்தவும். இந்த இடத்தில் பீல்டு உருவாக்க வேண்டும்.
2. பீல்டுக்கான வளைவான அடைப்புக் குறிகளை அமைக்க Ctrl +F9 (கண்ட்ரோல் +எப் 9)டைப் செய்திடவும். வளைவு பிராக்கெட் குறிகள் ஏற்படுத்தப்படும். உங்கள் கர்சர் இதனுள் இருக்க வேண்டும்.
3. இதில் date\@MMMM என டைப் செய்திடவும்.
4. பின் அப்டேட் செய்வதற்காக F9 அழுத்தவும்.
ஒவ்வொரு முறையும் எப் 9 அழுத்துகையில் அந்த மாதம் கிடைக்கும்.