Feb 5, 2011

ரேம் பிரச்சனைகள்Fatal Exception 0x has occurred at xxxx:xxxxxxx
வீட்டுக் கணினி பயனாளர்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளுள் ஒன்று கீழ்கண்ட “எரர் மெசேஜ்” , ஒரு நீலத்திரையில் “Fatal Exception 0x has occurred at xxxx:xxxxxxx“எனற வகையில் சில ஹெக்ஸாடெசிமல் எண்கள் குறிப்பிடப்பட்டு நாம்
செய்து கொண்டுள்ள வேலையை கெடுத்து ,எங்கே பிரச்சனை , ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலா அல்லது வேறெங்குமா என்று குழம்ப வைக்கும் .
மேற்கண்ட வகையறா எரர் மெசேஜ் , விண்டோஸ் வகை ஆப்பரேட்டிங் சிஸ்டம் வைத்திருப்பவர்களுக்கு , லினக்ஸ் பயனாளர்கள் கெர்னல் லோட் ஆகும்போது இதே போல சில அட்ரஸ் ரேஞ்சுகளை உற்றுக்கவணித்தால் பார்க்கலாம் , சில நேரங்களில் “கெர்னல் பேனிக்”எரர் மெசேஜும் கிடைக்கும் .
சரி இப்போது இந்த வகை எரர் மெசேஜுகள் எதனால் வருகின்றன என்று பார்ப்போம் .
கள்வர் காம்போனென்ட்
இந்த வகை எரர் கோடுகள் பெரும்பாலும் ரேம் பழதடைந்தாலோ அல்லது ரேமிலுள்ள தகவலை ஆப்பரேட்டிங் சிஸ்டத்தால் திரும்ப பெற முடியாமல் போனாலோ கிடைக்கும் .
அல்லது பிரச்சனை உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இன்ஸ்டாலேசன் சம்பந்தமாக இருக்கலாம் .
முதலில் உங்களுக்கு வரும் எரர் மெசேஜில் என்ன இருக்கிறது என்பதை படித்துப்பாருங்கள் . முடிந்தால் ஒரு பேப்பரில் அதை நோட் செய்துகொண்டு அதை அப்படியே கூகுளிட்டு தேடுங்கள் .
நம்முடைய ரேம் ஒரு விதத்தில் நாம் ஒரு காலத்தில் படித்த பைனரி முறையில் வேலை செய்கிறது எனலாம் .அதாவது 256 MB ரேமில் அதற்க்குத்தகுந்த மெமரி மாட்யூல்கள் இருக்கும் . ஒவ்வொரு மாட்யூலிலும் தகவல்கள் துளித்துளியாக சேகரிக்கப்படும் , ஒவ்வொரு தகவலுக்கும் ஒரு அட்ரஸ் இருக்கும் . அந்த அட்ரஸ் தான் மேற்கண்டஎரர் கோடில் இருக்கும் 0x has occurred at xxxx:xxxxxxx”எனும் வரியில் வரும் எண்கள் .
பெரும்பாலும் இவை ஹெக்ஸாடெசிமல் கோடில் இருக்கும் . அதாவது அந்த அட்ரஸில் உள்ள தகவலை தன்னால் மீட்க முடியவில்லைஎன்று கணினி அறிவிக்கும் தகவல்தான் அந்த எரர் மெசேஜ் .
காரணங்கள்
ரேம் பழுதாவதற்க்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன . அதில் முதன்மையானது வோல்டேஜ் ஸ்திரமில்லாமல் இருப்பது (voltage fluctuation) , யூபிஎஸ்  சரியில்லாமல் இருப்பது எஸஎம்பஎஸ் தேவைக்கு அதிகமாக பவர் சப்ளை செய்வது போன்றவை முக்கிய காரணிகள் . ஆகவே முடிந்த வரை பவர் பிளக்ட்சுவேசனில் இருந்து கணிணியை காக்க முயலுங்கள் .
சோதனை முறைகள்
இந்த வகை எரர் மெசேஜுகளை நீங்கள் அடிக்கடி எதிர்கொள்ள நேரிட்டால் முதலில் உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மீண்டும் நிறுவிப்பாருங்கள் . மீண்டும் இது தொல்லை கொடுத்தால் கீழ்கண்டவற்றுல் எதையாவது ஒன்றை இணையத்தில் இருந்து பதிவிறக்கி உபயோகித்துபாருங்கள் .
  1. மெம்டெஸ்ட் .
இது வல்லுனர்களால் முதலிடத்திற்க்கு பரிந்துரைக்கப்படுகிறது .http://www.memtest86.com/#download0 என்ற இணையதளத்தில் இதனை இலவசமாக பதிவிறக்கி ஒரு பிளாப்பியிலோ அல்லது சிடியிலோ அதனை காப்பிசெய்து ,பையாஸில் “பூட் ப்ரம் சிடி/அல்லது பிளாப்பி” தேர்வு செய்யவேண்டும் , பிறகு கணினியை ரீஸ்டார்ட் செய்தால் மெம்டெஸ்ட் அப்ளிகேஷன் ரன்னாக ஆரம்பிக்கும் .
பெரும்பாலும் இது பிரச்சனையை கண்டுபிடித்தால் உடனடியாக சொல்லிவிடும் ,எதற்க்கும் ஒரு நாள் முழுக்க மெம்டெஸ்டை ரன் செய்வது நல்லதுஎன்று பரிந்துரைக்கப்படுகிறது .
2. விண்டோஸ் மெமரி டையாக்னோஸ்டிக்ஸ் .
இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது . இதனையும் http://oca.microsoft.com/en/windiag.asp என்ற இணையதளத்தில் இதனை இலவசமாக பதிவிறக்கலாம் ,ஒரு பிளாப்பியிலோ அல்லது சிடியிலோ அதனை பதிவு செய்து மேலே குறிப்பிட்டது போல பையாஸில்”பூட் ப்ரம் சிடி/அல்லது பிளாப்பி” தேர்வு செய்து கணினியை ரீஸ்டார்ட் செய்தால் அப்ளிகேஷன் ரன்னாக ஆரம்பிக்கும் . இதனையும் ஒரு நாள் ஓடவிடுவது நல்லது .
இந்த சாப்ட்வேர்கள் ரேம் மெமரியில் எந்தெந்த மாட்யூல்கள் சரியாக வேலை செய்யவில்லைஎன்பதை ரிப்போர்ட் செய்யும் . ஒருவேளைஎந்த ரிப்போர்ட்டும் வரவில்லைஎன்றால் நீங்கள் நிம்மதிப்பெருமூச்சு விடலாம் , உங்கள் ரேமில் பிரச்சனை இல்லை . ஆனால் சில மாட்யூல்களில் பிரச்சனை என்று வந்தால் நிச்சயம் ரேம் பழுதடந்துவிட்டதுஎன்று பொருள் . ஒருவேளை ரேமின் எல்லா மாட்யூலிலும் பிரச்சனை என்று வந்தால் பிரச்சனை உங்கள் ரேமில் இல்லை , மாறாக ரேமினை மதர்போர்டில் சொருகும் ஸ்லாட்டில் பிரச்சனை எனக்கொள்ளலாம் . அப்படி இருந்தால் ரேமினை ஸ்லாட் மாற்றி சொருகிப்பாருங்கள் , ஒருவேளை ஒழுங்காக வேலை செய்ய வாய்ப்பிருக்கிறது .
ஆனால் ஒன்று நிச்சயம் , ரேமில் பிரச்சனை என்றால் , அதை சரிசெய்ய இயலாது . ரேமை மாற்றுவதுதான் ஒரே வழி . அதேபோல மதர்போர்டு ஸ்லாட்டில் பிரச்சனைஎன்றாலும் அதனை சரிசெய்வது குதிரைக்கொம்புதான் .
குறிப்பு: மேற்கண்ட தகவல்கள் கடந்த இரண்டு மாதங்களாக நான் அனுபவித்த பிரச்சனைகளுக்கும் , தீர்வு தேடி அலைந்த இணைய பக்கங்களிலும் கண்டவை . கணிப்பொறியியலில் வல்லமை பொருந்திய வலைப்பதிவர்கள் யாரேனும் இதில் குற்றம் கண்டால் தயை கூர்ந்து தெரிவியுங்கள் , திருத்திக்கொள்கிறேன் . வணக்கம் . 
Previous Post
Next Post

0 Comments: