Mar 30, 2011

சூப்பர் பேட்டரி: “அதிக சக்தியை சேமிக்கும்”

சூப்பர் பேட்டரி: “அதிக சக்தியை சேமிக்கும்”
ஒரு பக்கம் என்னடான்னா, இன்னும் 100 வருஷத்துல உலகம் அழியப்போகுதுன்னு சின்னம்மை நோயை ஒழிச்சுக்கட்டின உலகின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளுள் ஒருவரான, ஃப்ராங்க் ஃபென்னர் சொல்றாரு! அவரு சொல்றதுக்கு ஏத்த மாதிரிதான் இருக்கு உலக வெப்பமயமாதல் மற்றும் உலக தட்ப வெட்ப மாற்றங்களினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றங்கள், பாதிப்புக்கள் குறித்த அன்றாடச் செய்திகள்!
இப்படித்தான், 2000-மாவது வருஷம் உலகம் அழியப்போகுதுன்னு வந்த பீதியை/புரளியை உண்மைன்னு நம்பி, நடந்த காமடி கூத்துகள், சில வன்முறைகள் பத்தி நாம செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் படிச்சு/பார்த்து இருப்போம். அதேமாதிரி சமீபத்துல, 2012 ஆம் வருஷம் உலகம் அழியப்போகுதுன்னு வந்த செய்தி/புரளியைப் பார்த்துட்டு, முன்னாடி செஞ்ச மாதிரியே காமெடிக்கூத்துகளையும், வன்முறைகளையும் செஞ்சோமுன்னா, அதைவிட பைத்தியக்காரத்தனமான/முட்டாள்தனமான விஷயம் வேற எதுவும் இருக்க முடியாது!
“ஆமா, இதையெல்லாம் இப்போ எதுக்கு நம்மகிட்ட சொல்றான் இவன்” அப்படீன்னு மனசுக்குள்ள நீங்க முனுமுனுக்கிறது எனக்கு நல்லாவே கேக்குதுங்க. அதாவது, உலகம் அழிவதற்க்கான ஆபத்துகளும், பாதிப்புகளும் ஒருபக்கம் நடந்துகிட்டு இருக்க அதை எப்படி எதிர்கொண்டு சமாளிப்பது அப்படீன்னு மறுபக்கம் ஆய்வுகளும், சுற்றுச்சூழலை பாதிக்காத, இருக்கும் குறைந்த வசதிகளைப் பயன்படுத்தி அதிக நன்மைகளை பெறும் புதிய கண்டுபிடிப்புகளும் நடந்துகிட்டு இருக்குங்கிறத அவ்வப்போது மேலிருப்பானில் நீங்க படிச்சிருப்பீங்க…..
அந்த வரிசையில உலகின் தேவைகளை, சுற்றுச்சூழலையும் பாதிக்காமல், ஆனால் குறைந்த செலவில் அதிக நன்மைகளை அள்ளிதரக்கூடிய வகையில், நவீன தொழில்நுட்பம் மற்றும் ஆய்வுகளின் துணையுடன், சிறிய அளவுடைய ஆனால் அதேசமயம் அதிகமான சக்தியை சேமித்து வைக்கக்கூடிய ஒரு அட்டகாசமான மின்கலத்தை (battery) வெற்றிகரமாக கண்டுபிடித்திருக்கிறார்கள் அமெரிக்காவின், வாஷிங்டன் மாநில பல்கலைக்கழக விஞ்ஞானி ச்சூங் ஷிக் யூவும் அவரது  துணை விஞ்ஞானிகளும்/மாணவர்களும்!
அந்த மின்கலத்துக்கு சூப்பர் மின்கலம்னு (Super battery) பேரு வச்சிருக்காங்க. அதுக்கு ஏன் அப்படியொரு பேரு, அந்த மின்கலத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன, அதை எப்படி உருவாக்கினாங்க அப்படீன்னு பிரிச்சி மேயத்தான் இந்த பதிவு. வாங்க கெளம்புவோம்…..

சூப்பர் பேட்டரியும், சூப்பர் அதிக அழுத்தமும்!

முதல்ல இந்த புதிய மின்கலத்துக்கு ஏன் சூப்பர் பேட்டரி அப்படீன்னு ஒரு பேருன்னு கேட்டா, சூப்பர் அழுத்தம் (super-high pressures) கொடுத்து உருவாக்கப்பட்டதுனாலயும், அசாத்தியமான அளவு சக்தியை ஒரு சின்ன வடிவத்துக்குள்ள சேமித்து வைக்கக்கூடிய மின்கலம் இது என்பதாலேயும்தானாம்!
இந்த மின்கலத்தின் அடிப்படை என்னன்னா, இயந்திர சக்தியை () வேதியல் சக்தியாக () மாற்றி ஒரு பொருளினுள் சேமித்து வைக்க முடியும் என்பதுதான் என்கிறார் ச்சூங்! உதாரணத்துக்கு, அணு சக்தியை எடுத்துக்கொள்ளுங்கள். யுரேனியம் அல்லது ப்ளூடோனியம் அணுவுக்குள் ஒரு நாட்டையே அழிக்கக்கூடிய வேதியல் சக்தியை எப்படி சேமிக்க முடியுமோ அதேபோலத்தான் இந்த சூப்பர் மின்கலமும்!
ஐய்யய்யோ, அப்போ இந்த மின்கலமும் ஒரு அணுகுண்டு மாதிரியான்னு கேட்கக்கூடாது! ஏன்னா, இந்த மின்கலத்தின் தயாரிப்பு தத்துவம்தான் அணுகுண்டுக்கு சற்று ஒப்புமையுடையதே தவிர, சூப்பர் மின்கலத்துக்கும் அணுகுண்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நினைவில் கொள்க! சக்தி அளவினடிப்படையில் இந்த சூப்பர் மின்கலம் அணுசக்திக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது என்கிறார் ச்சூங்!
சூப்பர் பேட்டரி உருவானது எப்படி?

வைரத்தாலான ஆன்வில் செல் என்னும் (diamond anvil cell) ஒரு கருவி ஒரு சின்ன பகுதிக்குள் அசாத்திய அளவிலான அழுத்தத்தை (more than million atmospheres) ஏற்படுத்த வல்லது. இந்த கருவியினுள் செனான் டைஃப்லூரைடு (xenon difluoride (XeF2)) என்னும் வெள்ளை கட்டிகள் வடிவிலான வேதியல் பொருளை செலுத்தி, அளவுக்கதிகமான அழுத்தத்திற்க்கு (more than a million atmospheres) அந்த வெள்ளைக் கட்டிகளை உட்படுத்துவதன்மூலம், அவற்றிர்குள்ளிருக்கும் வேதியல் இணைப்புகள் ஒன்றாகச் சேர்ந்து உறுதியான முப்பரிமான வடிவத்திற்க்கு மாறிவிடுகிறது (tightly bound three-dimensional metallic “network structures”)! இந்த அளவிலான அழுத்தம் பூமியின் ஆழமான பகுதிகளில் இருக்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது!
அதெல்லாஞ்சரி, இதனால நமக்கு என்ன பயன்?

இந்த வகையான வேதியல் பொருள்கள் மூலமாக, புதிய எரிசக்திகள், சக்தி சேமிக்கும் கலங்கள் (), ஆபத்தான வேதியல் மற்றும் உயிரியல் பொருள்களை  அழிக்கவல்ல மருந்துகள் (super-oxidizing materials) மற்றும் அதிக வெப்ப சூப்பர் கடத்திகள் ( high-temperature superconductors) போன்ற பல்வேறு பொருள்களை உருவாக்கலாம் என்கிறார் விஞ்ஞானி ச்சூங்!
பரவாயில்லை, இந்த மாதிரியான புதிய பொருள்களின் வருகை இந்த உலகின் அத்தியாவசியத் தேவைகளான எரிசக்தி, மின்சாரம் போன்றவற்றை பூர்த்தி செய்ய, மனித வாழ்வை இன்னும் சுலபமாக்கினால் நல்லதுதானே?!
ஆமா, சூப்பர் பேட்டரி பத்தி நீங்க என்ன நெனக்கிறீங்க?

Mar 25, 2011

30 இலட்சம் நூல்களுடன் கூடிய கூகுள் ஈ புக் ஸ்டோர்

30 இலட்சம் நூல்களுடன் கூடிய கூகுள் ஈ புக் ஸ்டோர்
கூகுள் நிறுவனம் வெகுநாட்களாகச் சொல்லி வந்த தன் மின் நூல்கள் விற்பனை இணைய தளத்தினைத் திறந்துவிட்டது. http://books.google.com/books என்ற முகவரியில் இதனைக் காணலாம்.

இந்த நூல்களில் பலவற்றை இணைய வெளியில் வைத்துப் படிக்கலாம். இதன் பி.டி.எப். பதிப்பு சில நூல்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தால், அவற்றை இலவசமாகத் தரவிறக்கம் செய்து படிக்கலாம்; நண்பர்களுக்கு அனுப்பலாம்.

கம்ப்யூட்டர், ஆண்ட்ராய்ட் சிஸ்டம், ஐ-போன், ஐ-பாட் என எந்த டிஜிட்டல் ரீடிங் வசதி கொண்ட சாதனத்திலும் இதில் உள்ள நூல்களைப் படிக்கலாம். இதனால், ஒரு குறிப்பிட்ட நூலில் 34 பக்கங்களை ஐ-பாட் மூலம் படித்துவிட்டுப் பின் இன்னொரு நாளில், உங்கள் லேப் டாப் கம்ப்யூட்டரில் 35 ஆம் பக்கத்திலிருந்து தொடர்ந்து படிக்கலாம்.

அல்லது கூகுள் தரும் வெப் ரீடர் அப்ளிகேஷன் மூலமாகவும் நூல்களைப் படிக்கலாம். நூல்களின் விலை 5.49 டாலர் முதல் 19.99 டாலர் வரை உள்ளது. நூல்களை அவற்றின் ஆசிரியர் கள் வாரியாகவும், தலைப்பு வாரியாகவும், சில முக்கிய சொற்கள் வாரியாகவும் தேடிக் கண்டறிந்து பயன்படுத்தலாம்.

நூல்கள் பிரசுரிக்கப்பட்ட ஆண்டு வாரியாகவும் பார்க்கலாம். இலவசமாய்க் கிடைக்கக் கூடிய நூல்களை மட்டும் தேடிப் பார்க்கலாம். கூகுள் நிறுவனத்தின் தேடுதல் தளம் இதிலும் தரப்பட்டு, நாம் சொற்களை டைப் செய்திடுகையிலேயே, நீங்கள் தேடும் நூல்கள் இதுவோ என்று அடுத்தடுத்து காட்டப்படுகின்றன.

நூல் பிரசுரித்தவர்கள், கூகுள் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, தங்கள் நூல்களை இதில் பட்டியலிட்டு விற்பனையை மேற்கொள்ளலாம். கூகுள் அனைத்து நூல் ஆசிரியர் களையும், பிரசுகர்த்தர்களையும் இந்த தளத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

கம்ப்யூட்டர் நீண்ட நாட்கள் உழைக்க சில டிப்ஸ்


கம்ப்யூட்டரில் சிக்கல் வருவதற்கு முன்பே, கீழே கொடுக்கப்பட்டுள்ள சில எளிய வழிகளின் மூலம் சிக்கல்கள் நேராதவாறு பராமரிக்கலாம்.
கம்ப்யூட்டர்களை சீரான இடைவெளியில் ஸ்கேன் செய்யுங்கள்
வாரம் ஒரு முறை ஸ்கேன் டிஸ்க் கொண்டு கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்வதால் ஹார்டு டிஸ்கில் உள்ள பிழைகள் சரி செய்யப்படுகிறது
அப்டேட்களுடன் கூடிய ஆன்ட்டிவைரஸ் மென்பொருளை இன்ஸ்டால் செய்யுங்கள்.
எந்த வைரஸ் ஒழிப்பு மென்பொருட்களை நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் வாங்கி இன்ஸ்டால் செய்ய வேண்டும். அதேபோல் வைரஸ் ஸ்கேனிங் நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொள்வதும் அவசியம்.
சில வைரஸ் ஒழிப்பு மென்பொருட்கள் ஆன்லைனிலேயே கிடைக்கும். ஆனால் இவற்றை டவுன்லோடு செய்யும்போது அதிக எச்சரிக்கை தேவை. ஏனெனில் இந்த மென்பொருள்களே ஒரு வைரஸ் பரப்பும் உத்தியாக இருந்து வருகின்றன.
ஃபயர்வால் இன்ஸ்டால் செய்யுங்கள்
இணையதளங்களுக்கு அடிக்கடி செல்லும் பழக்கமுடையவரானால், ஃபயர்வால் இயக்குவது மிகவும் அவசியம். அதிகாரப்பூர்வமற்ற, தேவையற்ற விஷயங்கள் உங்கள் கம்ப்யூட்டர்களை ஊடுருவதிலிருந்து ஃபயர்வால் தடுக்கும். .இந்த வசதியை, Start=> programs=> accessories=> Systemtools=> Security center சென்று இயக்கலாம்.
டீஃப்ராக் செய்யவும்
டீஃப்ராக்மென்டேஷன் என்பது நம் கம்ப்யூட்டரின் ஹார்டு டிஸ்கை ஒழுங்கமைக்கும் செயல்பாடு. அதாவது, நிறைய புரோகிராம்களை இன்ஸ்டால் . இதனால் கம்ப்யூட்டரின் வேகம் அதிகரிப்பதோடு, தேவையற்றவை தவிர்க்கப்படும். நம் இயக்கத்துக்கு தகுந்தாற்போல் இந்த வசதியை இயக்கலாம்.
டிஸ்க்கை சுத்தம் செய்யுங்கள்
உங்கள் கம்ப்யூட்டரின் செயல்திறனைத் துரிதப்படுத்த, டிஸ்க் க்ளீன் அப் மிகவும் அவசியம். நாம் ஏற்கனவே நீக்கி விட்ட கோப்புகளின் மீதங்களையும் இது முற்றிலும் நீக்கிவிடும்.
இணையதள டவுன்லோடுகளை குறையுங்கள்
இணையதளங்களிலிருந்து இலவச மென்பொருள் பலவற்றை டவுன்லோடு செய்வோம். குறிப்பாக அதிகாரபூர்வமற்ற இசை இணைய தளங்களுக்கு சென்று பாடல்களை டவுன்லோடு செய்வோம். இவற்றிலெல்லாம் கம்ப்யூட்டரை இயங்க விடாமல் செய்யும் திங்கிழைக்கும் மென்பொருட்கள் இருக்கும். எனவே குறைந்த அளவில் டவுன்லோடுகளை வைத்துக் கொள்வது நலம்.
பயன்படுத்தாத புரோகிராம் களை ரத்து செய்யுங்கள்
இனிமேல் இந்த புரோகிராம் தேவையில்லை என்ற நிலை ஏற்படும்போது, கன்ட்ரோல் பேனலில் உள்ள Add/remove programs பயன்படுத்தி அதனை நீக்கி விடுங்கள். இதனால் டிஸ்கில் அதிக இடம் கிடைக்கும், கம்ப்யூட்டரின் செயல்திறன் அதிகரிக்கும்.
கம்ப்யூட்டரை சுத்தம் செய்யுங்கள்
கம்ப்யூட்டரின் உட்பகுதிகளில் தூசு தங்கி விடாமல் இருக்க, வாரம் ஒரு முறை துணியால் துடைத்து தூசுகளை அகற்றுங்கள்.
தோழியர்களே இப்படி நீங்களும் உங்களுக்கு தெரிந்த டிப்ஸ்களை பதிவு செய்யுங்கள் அனைவருக்கும் பயன்படும்

Mar 20, 2011

கணினியை பராமரிக்கும் வழி முறைகள்

கணினியை பராமரிக்கும் வழி முறைகள்
கம்ப்யூட்டர்களை சீரான இடைவெளியில் ஸ்கேன் செய்யுங்கள்
வாரம் ஒரு முறை ஸ்கேன் டிஸ்க் கொண்டு கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்வதால் ஹார்டு டிஸ்கில் உள்ள பிழைகள் சரி செய்யப்படுகிறது
அப்டேட்களுடன் கூடிய ஆன்ட்டிவைரஸ் மென்பொருளை இன்ஸ்டால் செய்யுங்கள்
எந்த வைரஸ் ஒழிப்பு மென்பொருட்களை நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் வாங்கி இன்ஸ்டால் செய்ய வேண்டும். அதேபோல் வைரஸ் ஸ்கேனிங் நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொள்வதும் அவசியம்.
சில வைரஸ் ஒழிப்பு மென்பொருட்கள் ஆன்லைனிலேயே கிடைக்கும். ஆனால் இவற்றை டவுன்லோடு செய்யும்போது அதிக எச்சரிக்கை தேவை. ஏனெனில் இந்த மென்பொருள்களே ஒரு வைரஸ் பரப்பும் உத்தியாக இருந்து வருகின்றன.
ஃபயர்வால் இன்ஸ்டால் செய்யுங்கள்
இணையதளங்களுக்கு அடிக்கடி செல்லும் பழக்கமுடையவரானால், ஃபயர்வால் இயக்குவது மிகவும் அவசியம். அதிகாரப்பூர்வமற்ற, தேவையற்ற விஷயங்கள் உங்கள் கம்ப்யூட்டர்களை ஊடுருவதிலிருந்து ஃபயர்வால் தடுக்கும். .இந்த வசதியை, Start=> programs=> accessories=> Systemtools=> Security center சென்று இயக்கலாம்.
டீஃப்ராக் செய்யவும்
டீஃப்ராக்மென்டேஷன் என்பது நம் கம்ப்யூட்டரின் ஹார்டு டிஸ்கை ஒழுங்கமைக்கும் செயல்பாடு. அதாவது, நிறைய புரோகிராம்களை இன்ஸ்டால் . இதனால் கம்ப்யூட்டரின் வேகம் அதிகரிப்பதோடு, தேவையற்றவை தவிர்க்கப்படும். நம் இயக்கத்துக்கு தகுந்தாற்போல் இந்த வசதியை இயக்கலாம்.
டிஸ்க்கை சுத்தம் செய்யுங்கள்
உங்கள் கம்ப்யூட்டரின் செயல்திறனைத் துரிதப்படுத்த, டிஸ்க் க்ளீன் அப் மிகவும் அவசியம். நாம் ஏற்கனவே நீக்கி விட்ட கோப்புகளின் மீதங்களையும் இது முற்றிலும் நீக்கிவிடும்.
இணையதள டவுன்லோடுகளை குறையுங்கள்
இணையதளங்களிலிருந்து இலவச மென்பொருள் பலவற்றை டவுன்லோடு செய்வோம். குறிப்பாக அதிகாரபூர்வமற்ற இசை இணைய தளங்களுக்கு சென்று பாடல்களை டவுன்லோடு செய்வோம். இவற்றிலெல்லாம் கம்ப்யூட்டரை இயங்க விடாமல் செய்யும் திங்கிழைக்கும் மென்பொருட்கள் இருக்கும். எனவே குறைந்த அளவில் டவுன்லோடுகளை வைத்துக் கொள்வது நலம்.
பயன்படுத்தாத புரோகிராம் களை ரத்து செய்யுங்கள்
இனிமேல் இந்த புரோகிராம் தேவையில்லை என்ற நிலை ஏற்படும்போது, கன்ட்ரோல் பேனலில் உள்ள Add/remove programs பயன்படுத்தி அதனை நீக்கி விடுங்கள். இதனால் டிஸ்கில் அதிக இடம் கிடைக்கும், கம்ப்யூட்டரின் செயல்திறன் அதிகரிக்கும்.
கம்ப்யூட்டரை சுத்தம் செய்யுங்கள்
கம்ப்யூட்டரின் உட்பகுதிகளில் தூசு தங்கி விடாமல் இருக்க, வாரம் ஒரு முறை துணியால் துடைத்து தூசுகளை அகற்றுங்கள்.
தோழியர்களே இப்படி நீங்களும் உங்களுக்கு தெரிந்த டிப்ஸ்களை பதிவு செய்யுங்கள் அனைவருக்கும் பயன்படும்

virus தாக்கிய fileஐ திரும்ப பெறுவது எப்படி

நீங்கள் pen Drive உபயோகிப்பவராக இருந்தால் நிச்சயம் இந்த பிரச்சினைக்கு உட்பட்டு இருப்பீர்கள் .இனிமேல்  வைரஸ் தாக்கிய பைலை எப்படி திரும்ப பெறுவது என்று பார்ப்போம்.1.pen Drive இல் இருந்த பைல் ஐ Antivirus  அழித்த பிறகு காணவில்லை

2.pen Drive இன் used space கூடதலாக காட்டுகிறது ஆனால் அதற்குறிய பைல் pen drive இல் இல்லை

3.நீங்கள் மீளப்பெற நினைக்கும் பைல் இப்படியாக இருக்க வேண்டும்.(.DAT,.FLV,.MP4,.VOB,.MP3,.ZIP,.RAR,.PDF,.HTML,.RTF,.DOC,.JPG,.PNG,.TXT.....)

4.நீங்கள் மீளப்பெற நினைக்கும் பைல் .exe இல் இருந்தால் மீளப்பெற முடியாது.

இந்த செய்திக்கு உங்கள் பிரச்சினை பொருந்தினால் நிச்சயமாக fileஐ திரும்ப பெறமுடியும் .

இதை நிச்சயமாக மீளப்பெற முடியும் என்பதற்குரிய காரணம் என்ன வென்றால் உங்களுடைய pen drive இல் ஒரு போல்டருக்குல் வைரஸ் இருந்தால் Antivirus software அந்த Virus ஐ அழித்து விட்டு அந்த Folder ஐ system Hidden செய்து விடும்.ஆனால் அந்த போல்டர் உங்களுடைய pen drive இல் தான் இருக்கிறது.system Hidden Folder ஐ எப்படி தெரிய வைப்பது என்று பார்ப்போம்.
start > control panel > folder Options > view

Show hidden files and folder என்பதை தெரிவு செய்து கொண்டு Hide protected operating system files [Recommended] என்பதை கிளிக் செய்யுங்கள்.ஒரு செய்தி வரும் அதற்கு yes என்பதை கொடுத்து விட்டு OK செய்து கொள்ளுங்கள்.
இப்போது உங்களுடைய pen Drive இற்குல் செல்லுங்கள் அந்த பைல் இருப்பதை காணலாம்.
இந்த செயலை மேற்கொள்ளும்போது நீங்கள் நல்ல antivirus பயன்படுத்துவது நல்லது பாதுகாப்பாகவும் இருக்க்கும்.

உங்கள் கணினியில் Whoa! Google Chrome has crashed

உங்களது கணினியில் "Whoa! Google Chrome has crashed "இது போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து வருகிறதா நீங்கள் கவலை பட வேண்டாம் .எனக்கும் இந்த பிரச்சினை வந்தது அதை எளிதாக சரி செய்து விட்டேன் .

 • Go to Start menu > Run.

 • நீங்கள் பயன்படுத்தபடும் OS ஐ பொருத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள CODE ஐ COPY செய்து RUN Dialog box இல் paste செய்யவும். Windows
  • Windows XP: %USERPROFILE%\Local Settings\Application Data\Google\Chrome\User Data\
  • Windows Vista and Windows 7:%LOCALAPPDATA%\Google\Chrome\User Data\
  Mac OS X~/Library/Application Support/Google/Chrome/Default
  Linux~/.config/google-chrome/Default

 • Click OK.

 • ஒரு  window  open ஆகும் ,அதில் "Default" folder ஐ "Backup என்று rename செய்யுங்கள் "

 • Move the "Backup" folder from the "User Data" folder up one level to the "Chrome" folder.

  முக்கியமானது உங்களின் bookmark பகுதியை மட்டும் முன்னதாகவே save செய்து கொள்ளவும் .
   
   

  Virus வந்த pen drive ஐ Format பாதுகாப்பது செய்வது எப்படி ?

  நாம் நமது Pen Drive ஐ Format செய்யும் போது நமக்கு சில சமயம் அது Format ஆவது இல்லை.  முக்கிய காரணமாக வைரஸ் தான் இருக்கக் கூடும். இதனை எப்படி சரி செய்வது என்றும், அதோடு ஒரு pen drive வாங்கினால் அதை எப்படி பாதுகாப்பது என்றும் தெரிந்து கொள்ளலாம். 
   இப்போது அதே இடத்தில உங்கள் pen drive மீது ரைட் கிளிக் செய்து format கொடுக்கவும்.
   இப்போது Format ஆகிவிடும் பின்னர் மீண்டும் ரைட் கிளிக் செய்து அதற்க்கு லெட்டர் add செய்து விடவும், இல்லை என்றால் உங்கள் pen drive my computer இல் தெரியாது.
   
   
   இந்த முறையில் format ஆகவில்லை என்றால் உங்கள் கம்ப்யூட்டர் அந்த pen drive ஐ format செய்யாது. வேறு கம்ப்யூட்டர் இல் முயற்சி செய்யவும்.

   
   

   எப்படி pen drive ஐ பாதுகாப்பது? 
   

   1 . இன்று எல்லா pen drive களும் ஒரே தரத்தில் கிடைத்தாலும் நண்பர்களிடம் கேட்டு விட்டு அவர்கள் எத்தனை நாட்கள் பயன்படுத்தி உள்ளனர் என்பதை பொருத்து அதை முயற்சி செய்யலாம். (முழுவதுமாக நம்ப முடியாது )
   
   2 . Browsing Center களில் பயன்படுத்த வேண்டாம்.
   
   3 .  மூச்சுக்கு முன்னூறு முறை Format அடிக்காதீர்கள்.  தேவை இருப்பின் மட்டும் செய்யவும்.
   
   4 . Pen drive வேறு யாரிடமாவது கொடுத்து இருந்தால் பின்னர் வாங்கும் போது ஸ்கேன் செய்து வைரஸ் இருந்தால் மட்டும் Format செய்யலாம்.
   
   5 . டெல்லியில் Electronic பஜாரில் மட்டும் pen drive ஐ வாங்க வேண்டாம்.
   
   6 . தண்ணீரில் விழுந்து விட்டால் தலைதெரித்து கம்ப்யூட்டர் இல் செருக வேண்டாம். அதை நன்றாக காயவைத்து மட்டும் தண்ணீர் போய்விட்டது என்று தெரிந்த பின் மட்டும் செருகவும்.
   
   7 . Pen drive சொருகியவுடன் ஸ்கேன் செய்ய சிறந்த சாப்ட்வேர் 
   USB-Disk-Security
  முதலில் format செய்யும் பிரச்சினையை சரி செய்வோம்.
  உங்களால் உங்கள் pen drive ஐ நேரடியாக Format செய்ய இயலவில்லை எனில்

   Right Click “My Computer”
  –>Manage
  –> Disk Management
  –> Right Click your Pen drive
  –> “Change Drive Letter And Paths”
  Select ஆகி உள்ள letter ஐ  remove செய்யவும்.
   

  டவுன்லோட் செய்யுங்க INTERNET EXPLORER 9

  டவுன்லோட் செய்யுங்க INTERNET EXPLORER 9
  தன்னுடைய பிரவுசர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் ஒன்பதாவது பதிப்பினை (IE9) மைக்ரோசாப்ட் நிறுவனம் நேற்று முன்தினம் வெளியிட்டது.
  பிப்ரவரி முதல் வாரத்தில், இதன் இறுதி சோதனைப் பதிப்பு (Release Candidate) வெளியானது . இது ஒரு “மிக மிக அழகான இணையம்’ என இந்த தொகுப்பின் உருவாக்க குழுவின் மூத்த இயக்குநர் ரையன் காவின் அடிக்கடி குறிப்பிடுவார். அதனாலேயே இதன் முழுமையான தொகுப்பினை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
  கடந்த ஏழு மாதங்களில் 3 கோடியே 60 லட்சம் பேர், சோதனைத் தொகுப்புகளை டவுண்லோட் செய்து பயன்படுத்தி வந்தனர் என்று மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. பதிப்பு 8 வந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பதிப்பு 9 வெளியாகிறது.
  பதிப்புகள் 7க்கும் 8க்கும் இடையே, இரண்டு ஆண்டுகள் ஐந்து மாத இடைவெளி இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ன் பயன்பாடு இன்னும் பெரிய அளவில் இல்லை. இதுவரை சோதனைப் பதிப்பின் பயன்பாடு 0.6% என்ற அளவில் மட்டுமே உள்ளது.
  இதுவரை வந்த இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர்களைக் காட்டிலும், காட்டப்படும் இணைய தளச் செய்திகளுக்கு இந்த பிரவுசர் அதிக இடம் தரும். விண்டோஸ் டாஸ்க் பாரில், இணைய தளங்களை “பின் அப்’ செய்திடலாம்.
  இதன் மூலம் இணைய தளங்கள், கம்ப்யூட்டர் புரோகிராம்கள் போலச் செயல்படலாம். ஏறத்தாழ விண்டோஸ் 7 சிஸ்டத்தில் உள்ளது போல ஜம்ப் லிஸ்ட் போலச் செயல்படும். மேலும் இதன் மூலம், நாம் ஒரு இணைய தளத்தில் குறிப்பிட்ட தகவல் பக்கத்திற்கு நேரடியாகச் செல்ல முடியும். இயக்க செயல்முறைகளிலும் நிறைய மாறுதல்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.
  பிரவுசர் இயங்கி திரைக்கு வர மிகக் குறைவான நேரமே எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதற்கு இந்த பிரவுசரில் பயன்படுத்தப்படும் சக்ரா (Chakra) எனப்படும் புதிய ஜாவா இன்ஜின் தான் காரணம். Chrome, Opera, Firefox, மற்றும் Safari பிரவுசர்களைக் காட்டிலும் இது வேகமாக இயங்கக் கூடியது என நிரூபிக்கப்பட்டுள்ளதாக, மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இதன் பாதுகாப்பு அம்சங்களும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
  இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 பிரவுசர் விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டம் பயன்படுத்து பவர்களுக்கு மட்டுமே. இன்றைக்கு விண்டோஸ் பயன்படுத்துபவர்களில் 45.3% பேர் இன்னும் எக்ஸ்பி தான் பயன்படுத்தி வருகின்றனர்.
  இவர்களுக்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 எட்டாக் கனிதான். இவர்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 உடன் நிறுத்திக் கொள்ள வேண்டியது தான். இந்த இடைவெளியினை, மற்ற @பாட்டி நிறுவனங்கள் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் பிரவுசர்களை அமைத்து வருகின்றனர்.
  இதன் சோதனைத் தொகுப்பு வந்த காலத்திற்குப் பின்னர், இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் பயன்பாடு மொத்தத்தில் 3% குறைந்துள்ளது. இந்த வேளையில் பயர்பாக்ஸ் பதிப்பு 4 பிரவுசரின் முழுத் தொகுப்பினை வெளியிட மொஸில்லா தயாராகி வருகிறது.
  இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு9 வெளியீட்டிற்குக் காத்திருந்தது. நவம்பர் 2009க்குப் பின்னர், பயர்பாக்ஸ் பிரவுசரின் பங்கும் 3% குறைந்தது. அப்போது பயர்பாக்ஸ் 24.7% பேரால் பயன்படுத்தப்பட்டது.
  புதிய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பினை டவுண்லோட் செய்திட விரும்புபவர்கள் http://download.cnet.com /83012007_42003127912.html என்னும் முகவரிக்குச் சென்று தரவிறக்கம் செய்து கொள்ளலாம்

  NOKIA PC SUITE பயன்படுத்துவது எப்படி?


  வணக்கம் நண்பர்களே நாம் இன்று NOKIA PC SUITE பற்றிதெரிந்து கொள்வோம்.
  எத்தனை நிறுவனங்கள்  போன்களை அறிமுகப்படுத்தியபோதும்இந்தியாவை பொறுத்த வரை NOKIA வை அடித்துக்கொள்ள ஆள் இல்லை என்பதை அதன் ஒவ்வொரு புதியமாடல்களும் நிரூபித்து வருகின்றதுஅதன் PC Suite என்றApplication இன்று முக்கியமான ஒன்றாக உள்ளதுஇதுநோக்கியாவின் S40,S60 மாடல் போன்களுக்குபயன்படுகின்றது.
  கீழே உள்ள படம் நோக்கியா PC suite  காண்பிக்கின்றது.  இதனை இலவசமாக Download செய்ய கீழே  நீங்கள் இதை உங்கள் கம்ப்யூட்டர் இல் INSTALL செய்த பின்னர் மேலே உள்ள WINDOW தெரியும்.

  இப்போது உங்கள் PHONE ஐ கம்ப்யூட்டர் உடன் இணைக்க data  cable தேவைப்படும். பெரும்பாலும் போன் உடனேயே அது வந்து விடும். இல்லையென்றால் கடைக்கு சென்று உங்கள் போனை காட்டி data cable வாங்கிக் கொள்ளவும்.

  இதை நீங்கள் கம்ப்யூட்டர் மற்றும் உங்கள் PHONE உடன் இணைக்கவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டர் இல் உள்ள pc suite ஐ ஓபன் செய்யவும்.(இதன் icon உங்கள் tool bar லேயே இருக்கும். போனை  இணைத்து இறுதி இருந்தால் பச்சை நிறத்தில் indicate செய்யும் )  

    

  இப்போது கீழே உள்ள விண்டோ வரும். மேலே  உள்ளதற்கும்(PC suite படம் ) இதற்கும் இப்போது உள்ள வித்தியாசம் இது போனின் மாடலை காண்பிக்கின்றது.


  இனி அதன் ஒவ்வொரு ஐகானின் பயன்களை தெரிந்து கொள்வோம்.

  BACK UP

   இது BACK UP க்கு உதவும். இதனை கிளிக் செய்து நாம் நம் போனில் இருந்து தேவையானவற்றை நமது கம்ப்யூட்டர்க்கு BACK UP எடுத்து கொள்ளலாம். இதை மீண்டும் நீங்கள் உங்கள்  போனில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

  SYNCHRONIZE

  இது உங்கள் போனில் நீங்கள் புதியதாக சேர்த்த, மாற்றிய போன் நெம்பர்களை synchronize செய்ய பயன்படுகிறது. நெம்பர்கள் போன் மெமரியில்  இருப்பது அவசியம்.

  CONNECT TO THE INTERNET

  இது PC suite இன் மிக முக்கியமான ஐகான். இதனைக் கொண்டு  நம் போனின் மூலமாக கம்ப்யூட்டர் இல் இன்டர்நெட் connect செய்யலாம். இது பற்றி பின்னர் ஒரு போஸ்ட் மூலம் விரிவாக காண்போம்.

  CONTACTS

  இது உங்கள் போன் மெமரியில் உள்ள நெம்பர்களையும் காண்பிக்கும்.
  இதன் மூலம் எளிதாக எல்லா எண்களையும் உங்கள் கம்ப்யூட்டர்க்கு copy செய்து கொள்ளலாம்(ctrl+a, copy and save in a new folder in computer). மற்றும் எளிதாக குரூப்களை உருவாக்கி கொள்ளலாம். நேர விரயம் ஆகாது.

  MESSAGES

   இது உங்கள் மெசேஜ் களை காட்டும்.  இதன் மூலம் நீங்கள் உங்களுக்குபிடித்த மெசேஜ்களை  கம்ப்யூட்டர்க்கு copy செய்து கொள்ளலாம். 160 எழுத்துக்கு மேல் இருந்தால் 2   மெசேஜ் ஆக copy ஆகி விடும். (ctrl+A, copy in specific folder and save in new folder in computer ).  

  CALENDER

  இது காலண்டர்.

  FILE MANAGER

   இது உங்கள் போனின் gallery .   இதன் மூலம் நீங்கள் உங்கள் போன் அல்லது மெமரி கார்ட்க்கு தேவையானவைகளை  copy செய்து கொள்ளலாம். இது கொஞ்சம் மெதுவாக இருக்கும்.

  TRANSFER MUSIC

  இது உங்கள் போன் க்கு கம்ப்யூட்டர் இல் இருந்து பாடல்களை COPY செய்து கொள்ள உதவும் 

   STORE IMAGES

   இது உங்கள் போனில் உள்ள வீடியோ மற்றும் இமேஜ்களை  கம்ப்யூட்டர்க்கு copy செய்து கொள்ள உதவும்

  TRANSFER VIDEOS

  இது உங்கள் போன்க்கு வீடியோக்களை  copy செய்யவும் அதில் உள்ள வீடியோக்களை காட்டவும் உதவும்.

   INSTALL APPLICATIONS

   நீங்கள் உங்கள் போனுக்கு தேவைப்படும் application , கேம்  களை கம்ப்யூட்டர் இல் download   செய்து   பின்னர் இதன் மூலம் இன்ஸ்டால் செய்து விடலாம்.

  S40= Java Applications, S60= symbian SIS application.

  UPDATE PHONE SOFTWARE'S

   இது உங்கள் போன்க்கு புது software வந்து இருந்தால் அதனை UPDATE செய்ய உதவும். இது குறிப்பிட்ட மாடல்களுக்கு மட்டுமே பொருந்தும். முயற்சித்து பாருங்கள்.

   DOWNLOAD MAPS

   இது நோக்கியா MAP களை டவுன்லோட் செய்து கொள்ள உதவுகிறது.  இது குறிப்பிட்ட மாடல்களுக்கு மட்டுமே பொருந்தும். முயற்சித்து பாருங்கள்.

  மொபைல் தகவல்களை Online இல் பேக்கப் செய்ய ஒரு தளம்

  நாம் மொபைலில் அதிகம் தகவலை சேமித்து வைத்துகொள்கிறோம் நாம் பயன்படுத்தும் மொபைலில் இருக்கும் தகவல்களை எளிதாகஆன்லைன் மூலம் பேக்கப் செய்து வைக்கலாம்.மொபைல் மட்டும் இப்போது கையில் இருக்கிறது எந்த மென்பொருள் கொண்டு அத்தனை தகவல்களையும் சேமிக்கலாம் என்று நினைக்கும்அனைவருக்கும், பிரபலமான அனைத்து மாடல் மொபைல்-களும்துணைபுரியும் வகையில் ஆன்லைன் மூலம் நம் மொபைல் தகவல்களை பேக்கப் செய்து வைக்க ஒரு தளம் உதவுகிறது

   
  தளத்திற்கான சுட்டி


  சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, ஒரு பயனர் கணக்கை துவங்கி கொள்ளவும்.
  இந்த வசதி மூலமாக உங்களுக்கு தேவையான தகவல்களை ஆன்லைன் மூலம் நம் மொபைல் தகவல்களை சேமிக்கலாம்.

  Mar 17, 2011

  தமிழில் டைப் - Xp Office Word - Tamil Type  நமது கணினியில் தமிழில் Type செய்ய இன்றும் இ-கலப்பை, தமிழ் முரசு, அழகி, போன்ற மென்பொருள் அதில் உள்ள Font’s - களை பயன்படுத்தி வந்தோம் இதனால் பல இடங்களில் நமது செய்தி மற்றும் விரிவுரை Open செய்ய முடியாது சின்ன சின்ன கட்டங்கள் ஆகா தோற்றமளிக்கும் இதற்கு காரணம் நாம் பயன்படுத்தும் முறையே இப்போது அந்த குறையை போக்க Microsoft தனது Office Word-க்குவுரிய அந்த நாட்டின் மொழிகளுக்குகான துணை மென்பொருள் மற்றும் Font’s & Key Board Drive-யும் வழங்கிவுள்ளது. இதன் உதவியுடன் நமது செய்தி மற்றும் விரிவுரை அழகிய தமிழில் படிக்க எங்கும் எளிதில் உபயோகப்படுத்தலாம்.


  முதலில் மென்பொருள் நிறுவிய பின் கீழ்க்கண்ட வழி முறைகளை கொண்டு Office Word-ல் தமிழ் Key Board Drive சேர்த்துக்கொள்ள வேண்டும்.

  1. Start

  2. Control Panel

  3. Regional and Language options

   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
  4.      கிளிக் To Details

  5. கிளிக் To Tamil Key Board and கிளிக் Add Batten

  6. Restart

  இப்போது உங்கள் Xp Office Word - டில் தமிழில் டைப் செய்து பயன்படுத்தலாம் Key Board Language Bar, இப்போது கீழே தோற்றம் அளிக்கும் வேண்டிய Short Cut Key மாற்றி கொள்ளலாம்.  தமிழ் எழுத்து - அனிமேஷனில்  பொங்கல் வந்துவிட்டால் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சொல்ல ஆசை பிறக்கும் இன்று வாழ்த்துச்சொல்ல பல வழிகள் ( SMS, MMS, E-Card ) இருந்தாலும் தமிழ் ஏழுத்துக்கள் பயன்படுத்தி அதுவும் அனிமேஷனனில் நமக்கு பிடித்த அனிமேஷனை தேர்ந்து எடுத்து தமிழ் வாக்கியத்தை இந்த தளத்தில் உருவக்கி பின் அதில் கிடைக்கும் லிங்க்-கை காப்பி செய்து E-mail மூலம் நமக்கு வேண்டியவர்களுக்கு அனுப்பலாம் அவர்கள் அந்த லிங்க்-கை கிளிக் செய்து நமது வாழ்த்தை கண்டு மகிழலாம்  எடுத்துக்காட்டாக இரண்டு மாதிரி கீழே உள்ளது

   
  1
   
  2
   
  யூனிக்கோடு, இ-கலப்பை, அழகி, போன்றவற்றை பயன்படுத்தலாம்,  
   
  இத்துடன் வரும் சிறப்பு நாள் வாழ்த்துக்கள் அந்தந்த வார,மாத, சிறப்புக்களை தெரிந்து கொண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்  அனிமேஷன் தளம் செல்ல - கிளிக்

  Wifi தொழிநுட்பம்

  Wifi தொழிநுட்பம்  ஹார்டுவேர் இன்னோவேசனின் உச்சமாக யாரோ Wifi அலைகளிலிருந்தும் மின்சாரம் தயாரிப்பதை கண்டுபிடித்திருக்கின்றார்களாம். வீட்டில் சும்மா கிடக்கும் பிளாக்பெர்ரி உங்கள் வீட்டு Wifi அலைகளிலிருந்து மின்சாரத்தை உறிஞ்சி எடுத்து, அது கொண்டு தன் பேட்டரியை தானே சார்ஜ்செய்ய முடியுமாம். Airnergy WiFi Harvesting Chargerஎன்கின்றார்கள். இந்த எக்ஸ்ட்ரீம் டெக்னாலஜி எந்த அளவுக்கு சாத்தியமென தெரியவில்லை. அப்படி பார்க்கபோனால், இவ்வளவு கொடுரமான மின்அலைகளின் மத்தியில் தான் நாம் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றோமா? நவீன கால மன அழுத்தங்களுக்கெல்லாம் இந்த தொலைப்பேசி மற்றும் வைஃபை அலைகள் தான் காரணமா? இந்த அலைகள் நம் மூளையில் ஓடிக்கொண்டிருக்கும் மெல்லிய உயிரியல் மின்னோட்டங்களையும் கிளறிவிடுமே. இப்போது புரிகின்றது மொத்தமாய் கரண்ட் போனவுடம் நமக்கு கிடைக்கும் அந்த ஆன்ம நிசப்ததின் இரகசியம்.

  இணையத்தில் அனைத்து வகை வீடியோக்களை வேகமாக தரவிறக்க

   நாம் இணையத்தில் பல எண்ணற்ற வீடியோக்களை காண்கிறோம். நமக்கு பிடித்த பாடல்கள், படங்கள், நகைச்சுவை மற்றும் தொழில்நுட்பம் இப்படி ஏராளமான வீடியோக்களை நாம் இனையத்தில் பார்த்து ரசிக்கிறோம். இந்த வீடியோக்களை பார்க்கவே இணையத்தில் பல தளங்கள் இருந்தாலும் Youtube, Daily motion, Meta cafe போன்ற தளங்கள் பிரபலமானவை. 
  ஒருசில வீடியோக்களை நாம் பார்க்கும் போது நாம் அதை நம் கணினியில் சேமித்து கொள்ளலாம் என்று தோன்றும். ஆனால் இந்த தளங்களில் நாம் வீடியோவை பார்க்க மட்டுமே முடியும் தரவிறக்க முடியாது. இதை போக்கவே ஒரு சூப்பர் மென்பொருள் உள்ளது.
  பயன்கள்:   
  •  உபயோகிப்பதற்கு மிகவும் சுலபமானது. 
  • இது முழுக்க முழுக்க இலவச மென்பொருள்.
  • நமக்கு தேவையான வீடியோவின் url கொடுத்து START பட்டனை அழுத்தினால் போதும் அந்த வீடியோ நம் கணினியில் சேமிக்க பட்டு விடும்.
  • வீடியோ டவுன்லோட் திறன் மிகவும் வேகமாக உள்ளது.
  • வீடியோவை தரவிறக்கும் போதே நமக்கு தேவையான பார்மட்டில் மாற்றும் வசதி(AVI,MP4,WMV)
  • வீடியோவில் உள்ள பாடலை மட்டும் தனியே பிரித்தெடுக்கும் வசதி.
  • இப்படி ஏராளமான வசதிகளை பெற்று உள்ள இந்த மென்பொருளின் அளவு 7.19 MB மட்டும் தான்.
  பயன் படுத்தும் முறை:
  • இந்த மென்பொருளை தரவிறக்கியவுடன் உங்களுக்கு வரும் EXE பைலை இரண்டு முறை க்ளிக் செய்து உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.
  • இப்பொழுது டெஸ்க்டாப்பில் உள்ள சார்ட்கட் பைலை ஓபன் செய்து கொள்ளுங்கள் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • இங்கு நீங்கள் தரவிறக்க வேண்டிய வீடியோவின் URL காப்பி செய்து அங்கு கொடுக்க பட்டிருக்கும் URL என்ற இடத்தில் பேஸ்ட் செய்யவும்.
  • அடுத்த கட்டத்தில் SAVE TO என்ற இடத்தில் உங்கள் வீடியோ சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்யவும்.
  • அடுத்து OUTPUT என்ற இடத்தில் நீங்கள் இந்த வீடியோவின் வகையை(FORMAT) தேர்வு செய்து கொள்ளவும். மாற்றவேண்டாம் என்றால் WITH OUT CONVERSION என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.
  • அடுத்து  கீழே உள்ள START என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்கள் உங்கள் வீடியோ நீங்கள் தேர்வு செய்த இடத்தில் வந்திருக்கும். உங்களுக்கு கீழே இருப்பதை போல செய்தி வரும்.


  அவ்வளவு தான் இந்த முறையை பயன்படுத்தி இணையத்தில் உள்ள வீடியோக்களை எளிதாக தரவிறக்கி கொண்டு நினைத்த நேரத்தில் பார்த்து ரசித்து கொள்ளலாம். 

  ISO இமேஜ்களை பெண்ட்ரைவ் மற்றும் CD/DVDக்களில் பூட்டபிள் பைல்களாக மாற்ற

  ISO பைல்களை பூட்டபிள் பைல்களாக மாற்றம் செய்ய நாம் நீரோ அல்லது Poweriso, MagicISO, ISO Burner இதில் எதாவது ஒரு ரைட்டிங் சாப்ட்வேரினை பயன்படுத்தியே மாற்றம் செய்வோம். ISO பைல்கள் பெரும்பாலும் அதிக அளவுடையதாகவே இருக்கும். இந்த ISO பைல்களை நாம் பெண்ட்ரைவ்களில் பூட்டபிள் பைல்களாக மாற்றம் செய்ய ஒரு அருமையான மென்பொருள் உள்ளது. ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தினை நாம் USB வழியாக பூட் செய்ய இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த மென்பொருளானது Freeware அப்ளிகேஷன் ஆகும். 

  மென்பொருளை தரவிறக்க சுட்டி
  இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பின் இந்த மென்பொருளை Unzip செய்துகொள்ளவும்.  IsoBurner என்பதன் மீது வலதுகிளிக் செய்து தோன்றும் பாப்அப் விண்டோவில் Run as Administrator என்பதை தேர்வு செய்யவும். பின் ஒப்பன் ஆகும் விண்டோவில் உங்களுக்கு விருப்பமான தேர்வை ஒகே செய்து விட்டு Next பொத்தானை அழுத்தி பூட்டபிள் பைலை உருவாக்கி கொள்ள முடியும். 

  இந்த மென்பொருளின் உதவியுடன் நாம் பெண்ட்ரைவுகளிளும் பூட்டபிள் பைல்களை உருவாக்க முடியும். நேரிடையாக CD/DVDக்களில் ISO இமேஜ்களை  ரைட் செய்யவும் முடியும்.

  ட்ரைவர்களை அப்டேட் மற்றும் பேக்அப் செய்ய - SlimDrivers

  விண்டோஸ்ஆப்ரேட்டிங் சிஸ்ட்டம் நிறுவும் போதே அதனுடன் சேர்த்து ட்ரைவர்களையும் இன்ஸ்டால் செய்ய வேண்டும். சவுண்ட், வீடியோ, ஈதர்நெட் என அனைத்துக்கும் தனித்தனியாக ட்ரைவர்களை நிறுவ வேண்டும். அதுவும் ட்ரைவர் பேக்அப் இல்லாமல் ஒரு கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவிய பிறகு அந்த கணினிக்கு தேவையான ட்ரைவரை இன்ஸ்டால் செய்ய வேண்டுமெனில் பெரும் அவஷ்த்தைதான். புதிதாக இணையத்தில் இதற்கான ட்ரைவரை தேடிப்பிடித்து பதிவிறக்கி இன்ஸ்டால் செய்ய வேண்டும். இல்லையெனில் நம்முடைய நண்பர்களிடம் இருக்கும் ட்ரைவர் சீடியை வாங்கி இன்ஸ்டால் செய்ய வேண்டும். இது சில நேரங்களில் காலை வாரிவிடும். குறிப்பிட்ட ட்ரைவர் மட்டும் நமக்கு கிடைக்காது. இது போன்ற பிரச்சினைகளை தீர்க்க ஒரு அருமையான மென்பொருள் உள்ளது.

  மென்பொருளை பதிவிறக்க சுட்டி


  இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். ஒப்பன் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் Start Scan என்னும் பொத்தானை அழுத்தி ஸ்கேன் செய்யவும். சிறிது நேரத்தில் உங்களுடைய கணினியானது சோதிக்கப்பட்டு குறிப்பிட்ட ட்ரைவர் அப்டேட் காண்பிக்கப்படும். வேண்டிய ட்ரைவர்களை அப்டேட் செய்து கொள்ளவும்.  இந்த மென்பொருளின் உதவியுடன் ட்ரைவர்களை பேக்அப் மீண்டும் ரீஸ்டோரும் செய்து கொள்ள முடியும்.


  இப்போது நீங்கள் உங்கள் கணினியில் உள்ள ட்ரைவர்களை பேக்அப் செய்து மீண்டும் நிறுவிக்கொள்ள முடியும். இந்த மென்பொருளானது இலவச மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் விண்டோஸ் XP, Vista மற்றும் 7 ஆகிய இயங்குதளங்களில் வேலை செய்யக்கூடியது ஆகும்.

  ஜிமெயிலை பேக்அப் எடுக்க - IMAPSize

  ஈமெயில் சேவையில் முதலிடத்தில் இருக்கும் ஜிமெயில் நிறுவனம் சேமிப்பு பெட்டகமாக சுமார் ஏழு ஜிபி வரை (7557 MB) இலவசமாக வழங்குகிறது. ஜிமெயில் பயன்படுத்தாத இண்டர்நெட் பயனாளர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு ஜிமெயில் நிறுவனத்தின் ஈமெயில் சேவையை தற்போது அனைவரும் பயன்படுத்தி வருகிறனர். நாம் தினமும் பல ஈமெயில்களை அனுப்பவும், ஈமெயில்களை பெறவும் செய்கிறோம். குறிப்பிட்ட காலத்தில் ஜிமெயில் நிறுவனம் வழங்கிய முழு சேமிப்பு இடமும் சேமிக்கப்படும் போது, புதியதாக நினைவகத்தை விலை கொடுத்து கூகுள் நிறுவனத்திடம் இருந்து வாங்க வேண்டும். இல்லையெனில் நம்முடைய ஈமெயில்களை நீக்கம் செய்ய வேண்டும். இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படும் போது ஈமெயிலகளை பேக்அப் செய்து மீண்டும் வேறொரு ஜிமெயிலில் அப்லோட் செய்து கொள்ள முடியும். இதற்கு ஒரு மென்பொருள் உதவி செய்கிறது.

  மென்பொருளை தரவிறக்க சுட்டி


  இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் Account > New என்பதை தேர்வு செய்து உங்களுடைய பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு பின் Sever என்ற இடத்தில் imap.gmail.com என்பதை உள்ளிட்டு ஒகே செய்யவும்.

  இப்போது உங்களுடைய கணக்கானது பரிசோதிக்கப்படும். பின் Account-> Account Backup எனபதை தேர்வு செய்யவும். இப்போது உங்களுடைய ஈமெயில் அக்கவுண்ட் பட்டியலிடப்படும். அதில் உள்ள லேபிள்களை தேர்வு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.  பேக்அப் சேமிக்க வேண்டிய  இடத்தை தேர்வு செய்து கொள்ளவும். பின் Back up பொத்தானை அழுத்தி பேக்அப் செய்து கொள்ளவும். இந்த மென்பொருளின் சிறப்பம்சமே ஒரு ஜிமெயில் அக்கவுண்டில் பேக்அப் செய்து கொண்டு மற்றொரு அக்கவுண்டில் அப்லோட் செய்து கொள்ள முடியும். ஜிமெயில் நிறுவனம் ஆரம்பித்த போது பயனர் கணக்கு தொடங்கிய பலருக்கும் தற்போது முழு சேமிப்பு இடமும் நிறைந்திருக்கும். அவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கூகுள் நிறுவனம் ஜிமெயில் சேவையை தொடங்கிய வருடம் 2004 ஆகும். இண்டர்நெட் இணைப்பு அதிவேகமாக இருந்தால் மட்டுமே இவையணைத்தும் சாத்தியம் ஆகும். இல்லையெனில் வேலை தாமதப்படும். ஒரு முறை முயன்றுதான் பாருங்களே.

  மென்பொருட்கள் இல்லாமல் USB Drive களை பார்மெட் செய்ய:

  நம்மிடம் உள்ள தகவலை வெளியே எடுத்துச்செல்ல பெரும்பாலும் நாம் பயன்படுத்துவது CD,DVD,Pen Drive,Usb Drive போன்றவைகள் ஆகும். நாம் வைத்துள்ள Drive களை வைரஸ் அல்லது வேறு சில காரணங்களினால் பார்மெட் செய்ய நேரும். அப்போது வைரஸ் பிரச்சினையின் காரணமாக பார்மெட் செய்வதில் பல பிரச்சினைகள் நேரும். பார்மெட் செய்ய இயலாது. இதனை சரிசெய்ய ஒரு எளிய மென்பொருள் உள்ளது.  Disk Formatter என்னும் மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். கணினியுடன் இணைக்கபட்ட மென்பொருளை காட்டும், Format என்ற பொத்தானை அழுத்தி Format செய்து கொள்ள முடியும்.இதன் சிறப்பு வசதி மென்பொருள் வெறும் 50kb அளவு உடையது ஆகும். FAT32 and NTFS format களை உடையது ஆகும்.

  மென்பொருளை பதிவிறக்க: Disk Formatter 

   
  மென்பொருட்கள் இல்லாமல் USB Drive களை பார்மெட் செய்ய:
  எந்தவித மென்பொருளும் இல்லாமல் கணினியில் நிறுவியுள்ள ஆப்ரேட்டிங்சிஸ்ட்டம் மூலமாகவே USB Drive களை பார்மெட் செய்ய முடியும்.
  முதலில் Start->Rum->cmd என்று தட்டச்சு செய்து command prompt யை ஒப்பன் செய்ய வேண்டும். பின் My computer யை ஒப்பன் செய்து Drive எந்த கோலன் என்பதை குறித்துகொண்டு command prompt ல் Format என டைப் செய்து F:G:H:I:J: இது போல எந்த கோலன் என்பதை Format கோலன், உதரணாத்திற்க்கு G: கோலன் என்றால் format g: என்று டைப் செய்து Enter Keyயை அழுத்தவும்.


  அடுத்ததாக பார்மெட் செய்ய ரெடி, என்று Enter கீயை அழுத்த சொல்லும் பின் எண்டர் கீயை அழுத்தவும்.


  பார்மெட் ஆக தொடங்கும், ஒரு சில வினாடிகளில் பார்மெட் ஆகிவிடும்.


  விரும்பினால் Drive க்கு பெயரை இங்கேயே எழுதலாம்.
  அவ்வளவு தான் இனி Drive களை பார்மெட் செய்வது எளிதாகும்.

  எம்.எஸ் - ஆப்பிஸ் 2010-ல் கிளாசிக் மெனுவை உருவாக்க சிறிய மென்பொருள்

  ஆப்பிஸ் தொகுப்பில் சிறப்பு வாய்ந்த தொகுப்பு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆப்பிஸ் தொகுப்பாகும். இந்த ஆப்பிஸ் தொகுப்பின் அன்மைய வெளியிடான ஆப்பிஸ் 2010, இந்த ஆப்பிஸ் தொகுப்பானது முந்தைய வெளியீடுகளை விட சிறப்பு வாய்ந்தது ஆகும். இதில் புதிய பரிமாணங்கள் இணைக்கப்பட்டுள்ளது. நாம் பழைய ஆப்பிஸ் தொகுப்பில் பணியாற்றும் போது எளிமையாக பணியாற்ற முடியும் இதற்கு உதவியாக மெனுபார்கள் இருக்கும். இதனால் நாம் ஆப்பிஸ் தொகுப்பில் பணியாற்றும் நேரத்தினை குறைக்க முடியும். ஆப்பிஸ் 2000, 2003 போன்றவற்றில் மெனுபார்கள் தனித்தனியே இருக்கும், இதனால் புதியவர்களுக்கு ஆப்பிஸ் தொகுப்பில் பணியாற்றுவதில் எந்த வித சிரமமும் ஏற்படாது, ஆனால் தற்போதைய ஆப்பிஸ் தொகுப்பான எம்.எஸ் - ஆப்பிஸ் 2010-ல் இது போன்ற வசதி எதுவும் இல்லை. இந்த மெனுபாரில் டூல்பாரை இணைக்க ஒரு மென்பொருள் இணையத்தில் இலவசமாக மென்பொருள் கிடைக்கிறது.
  மென்பொருளை தரவிறக்க சுட்டி


  இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து Excel, Word, Powerpoint, Onenote போன்ற டூல்பார்களை ஒகே செய்துவிடடு, Register பொத்தானை கிளிக் செய்யவும். தற்போது ஆப்பிஸ் தொகுப்பினை ஒப்பன் செய்து பார்க்கவும்.
  இந்த மென்பொருளானது Excel, Word, Powerpoint, Onenote போன்றவற்றில் மட்டுமே டூல்பார்களை உருவாக்க முடியும். அனைத்து ஆப்பிஸ் தொகுப்புகளுக்கும் டூல்பாரை உருவாக்க வேண்டுமெனில் மென்பொருளை பணம் செலுத்தி பெற வேண்டும். இனி ஆப்பிஸ் 2010 தொகுப்பிலும் இனி வழக்கம் போல செயல்பட முடியும்.