Jul 30, 2011

உங்கள் இணையத்தின் வேகம் !!!!!

பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனங்கள் பல்வேறு கட்டணங்களுடனும், விதம் விதமாய் Condition-களுடனும் நமக்கு இணைப்பு தருகின்றன. மற்ற எதனைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்றாலும், நம்மிடம் வாங்கும் கட்டணத்திற்கேற்ற வேகத்தில் இணைப்பு கிடைக்கிறதா என்று இன்டர்நெட் இணைப்பின் வேகத்தை நாம் கணக்கிட்டுப் பார்த்து அறிய வேண்டும். இதனை எந்த வழியில் அறியலாம் என்று பார்க்கலாம்.

உங்கள் இன்டர்நெட் இணைப்பின் வேகத்தை அறிய  www.speedtest.netஎன்ற தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு வேகத்தைச் சோதனை செய்வதற்கான தொடர்பில் கிளிக் செய்தால், உடனே உங்கள் பிராட்பேன்ட் இணைப்பிற்கான Router-ருக்கும் கம்ப்யூட்டருக்குமான வேகத்தையும், இன்டர்நெட் டவுண்லோட் ஸ்பீடையும் அது அளந்துகாட்டும். கீழாக உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தின் பெயருடன், இணைப்பின் தன்மையை நட்சத்திரக் குறியிட்டுக் காட்டும். அதிலேயே வரைபடம் ஒன்று காட்டப்பட்டு அதில் இணைய இணைப்பினை நீங்கள் பெறும் நகரம் சுட்டிக் காட்டப்படும்.


தளத்திற்கு சென்றவுடன் Begin Test என்பதை Click செய்யவும் உங்கள்  இணைய வேகம் அடங்கிய தகவல்கள் இப்படி கிடைக்கும்  
 

அடுத்ததாக, நீங்கள் இன்டர்நெட் இணைப்பு பெற்று சில ஆண்டுகள் கழிந்திருந்தால், உங்களிடம் முதன் முதலில் கொடுத்த பிராட்பேண்ட் மோடம் தான் இருக்கும். இணைப்பு தரும் நிறுவனத்திடம், தற்போது அதிக வேக இணைப்பு மோடம் இருந்தால், ஒன்று உங்கள் இணைப்பிற்கென கேட்டுப் பெறவும். இன்டர்நெட் சர்வீஸ் தரும் நிறுவனங்கள் அடிக்கடி தங்களின் அடிப்படை இயக்க சாதனங்களை புதுப்பித்துக் கொள்கின்றன. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு அது போல புதுப்பித்துத் தருவதில்லை; அது குறித்த தகவல்களைக் கூடத் தருவதில்லை.

நாங்களும் உங்களை கண்காணிக்கிறோம்!

இன்று கேமரா என்றதும் நம் நினைவிற்கு வருவது கைத்தொலைபேசிதான். ஆனால் நாம் கொஞ்சம் கூட சந்தேகம் கொள்ளாத, நாம் தினமும் பயன்படுத்தி வருகின்ற பொருட்களான பேனா, சாவிகொத்து, மூக்கு கண்ணாடி, கைக்கடிகாரம், சட்டை புத்தான், சுவரில் இருக்கும் ஆணி, மின்சார பிளக், chewing gum என எதிலெல்லாமோ இன்று கேமரா வந்துவிட்டது. இது தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்றாலும் கூட இதனால் நிறைய பாதிப்புகளும் உண்டு. எதுக்கும் கள்ளக்காதல், லஞ்சம், ஊழல்பேர்வளிகள் கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது. ஆக நம்மை யார், எங்கு கண்காணிக்கிறார்கள் அல்லது படம் பிடிக்கிறார்கள், என்பது நம்மால் கண்டுபிடிக்க முடியாதபடி நிலைமையுள்ளது.

கீழே உள்ள படங்களை பாருங்கள். சாதாரணமாக அணியும் கைக்கடிகாரத்தில் சக்தியுள்ள காமெரா உள்ளது.

அடுத்ததாக பேனா, நாம் தினமும் பயன்படுத்தக்கூடியது. இந்த வகை கேமரா கையில் இருந்தால் யாராவது சந்தேகப்படுவார்களா?அடுத்தது நாம் அணியும் கண்ணாடி. இதை பார்த்தால் பாஷன் கண்ணாடி போல தோன்றும். ஆனால் அதனுள் இருப்பது சக்தி வாய்ந்த கேமரா.கீழேயுள்ளது பார்ப்பதற்கு கார் சாவிகொத்து போல தெரியும். அதனுள்ளும் அதி நவீன கேமரா இருக்கிறது. காரில் பயணம் செயும்போதும்கூட கவனம் தேவை.


இந்த கேமரா திருகு ஆணியின் தோற்றம் உடையது. எதோ ஆணி என நினைப்போம். ஆனால் இதுவும் நம்மை படம் பிடித்துக்கொண்டு இருக்கும்.


இதைப்பாருங்கள் வாயில் இட்டு சுவைக்ககூடிய சமாச்சாரம். அதன் வடிவில்கூட கேமரா.

இது நம் சட்டையின் புத்தானை போலவே இருக்கும். சட்டைபையில் போட்டிருக்கும் கருவிக்கும் இதற்கும் தொடர்பு இருந்துகொண்டே இருக்கும். இதுவும் ஒரு சக்தி வாய்ந்த கமெராதான்.

இதைப்பாருங்கள் சாதாரண மின்சார பிளக் போலவே இருக்கும். அதனுள்ளும் கேமரா.இப்படி மறைத்து வைக்கப்பட்டிருக்கும் காமெராக்களை கண்டு பிடிக்கும் கருவியும் உள்ளது. ஆனால், அதன் கண்ணில் மண்ணை தூவிவிட்டு செயல்படும் காமெராக்கள் நிறைய உண்டு. நாம் இனி எங்கேயும் ஒழிக்க முடியாது என்பதுதான் உண்மை!

எனவே கள்ளகாதல் செய்வோர், லஞ்சம் வாங்குவோர், ஊழல் பேர்வழிகள் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டியது அவசியம். ஆர். எம். வீரப்பன் ஸ்டைல்ல சொல்வதென்றால், இது காலத்தின் கட்டாயம்.

லண்டனில் போலீஸ்காரர்கள் மற்றும் கார் பார்க் செய்வதை கண்காணிப்பவர்கள், தங்கள் தொப்பியில் நவீன சிறிய காமெராவை பொருத்தியுள்ளார்கள் என்பதும் இங்கு குறிப்பிட தக்கது.

பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க.

  
சில நேரம் பென் டிரைவில் எதாவது கோப்புகளை ஏற்றும் போது
"Cannot copy files and folders, drive is Write protected . Remove write protection or use another disk " என்று பிழைச்செய்தியைக்காட்டும். நாம் என்ன தான் போராடினாலும் காப்பி செய்ய இயலாது. இது போல Format செய்யும் போதும் கோப்புகளை நீக்கும் போதும் இதே தொல்லையை கொடுக்கும். இது போல மெமரி கார்ட்களிலும் இந்த பிழைச்செய்தி வரும். இதற்க்கு காரணம் வைரஸ்கள் Registry இல் மாற்றம் செய்து விடுவது தான். இதை எப்படி நீக்குவது என்று பார்ப்போம்.


எளிமையான வழி:

Start - Run செல்லவும். பின் கீழே உள்ள வரியை காப்பி செய்து Ok கொடுக்கவும்.


reg add "HKLM\System\CurrentControlSet\Control\StorageDevicePolicies" /t Reg_dword /v WriteProtect /f /d 0

பின்னர் பென் டிரைவை எடுத்து விட்டு மறுபடியும் நுழைக்கவும்.
இப்பொழுது நீங்கள் விரும்பியபடி வேலை செய்யலாம். சரி
உங்களுடைய பென் டிரைவை Write Protected செய்ய விரும்பினால் கீழே உள்ள வரி பயன்படும்.

reg add "HKLM\System\CurrentControlSet\Control\StorageDevicePolicies" /t Reg_dword /v WriteProtect /f /d 1

சில நேரங்களில் இதை அடித்தும் உடனே மாறாவிட்டால் கணினியை ரீ ஸ்டார்ட் செய்து விட்டு பென் டிரைவை செருகவும்.

Autorun வைரஸ் கணணிக்கு வராமல் தடுப்பது எப்படி?

எல்லோரிடமும் பென் ட்ரைவ் (pen-drive) வும் அதில் சில வைரஸ் (virus)சும் காணப்படுவது வழக்கமே. எனவே நம் கணணிகளுக்கு வைரஸ் உட்புகாமலிருக்க ஒவ்வொருவரும் சில வழிகளை தேடிக்கொண்டிருப்போம். இவ்வகையில் உலகில் மிக பிரசித்திபெற்ற வைரஸ்களில் ஒன்று Autorun.inf ஆகும். இவ்வகை வைரஸ்கள் மிகவும் பயங்கரமானதும் கணணி பாவணையாளர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தக் கூடியதுமாகும். இது வின்டோஸ் ( windows ) இயங்குதளங்களிலேயே பரவலாக தாக்குகின்றது. எனவே இவ் ஒடோரன் வைரஸ் நம் கணணியை பாதுகாப்பது எப்படி?நீங்கள் முதலில் செய்யவேண்டியது உங்கள் பென் ட்ரைவரில் வைரஸ் உள்ளது என உணருவீராயின் சிறந்த அன்டி வைரஸ் (anti-virus) ஒன்றை நிறுவுங்கள் , அதுவும் எந்நாளும் update செய்து கொள்ளக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும், இவ்வரான அன்டி வைரஸ்கள் பலவும் இலவசமாக கிடைக்கின்றது. ஆயினும்  Microsoft  நிறுவனத்தின் Microsoft Essentials மிகச்சிறந்த இலவச அன்டி வைரஸ் ஆகும். இது விரைவானதும், சிறிய அளவிலான memory  யே தேவைப்படுகிறது, இது licensed வின்டோஸ் இயங்குதளங்களிலேயே பயன்படுத்த முடியும். இதை பயன்படுத்திப் பாருங்கள் "சிறந்த ஒரு அன்டி வைரஸ்" நீங்களே உணர்வீர்கள்......

MICROSOFT ESSENTIALS தரவிறக்க இங்கே சொடுக்குங்கள்

தலைப்பிற்கும் தகவலுக்கும் சம்பந்தமே இல்லையே என யோசிக்கிரீங்களா? இப்போது பார்ப்போம் எப்படி Autorun வைரஸ் ஐ தடுப்பது என்று.

01. Run command ஐ (Ctrl + R)  திறந்து gpedit.msc என டைப் செய்து ok பட்டனை அழுத்துங்கள்.
02. பின் ஒரு pop-up windows காட்சித்தரும் அதில் Administrative Templates கீழ் System என்பதை தெரிவு செய்யுங்கள்
03. அங்கு Turn Off Autoplay என்பதை டபல் கிலிக் (double click)செய்யுங்கள்.

04. பிறகு வரும் pop-up windows வில் Turnoff Autoplay  என்பதற்கு கீழுள்ள Enabled 
        என்பதையும்  Turnoff Autoplay on இல் All drives தெரிவுசெய்யுங்கள்

05. இப்பொழுு நீங்கள் பென் ட்ரைவ்வை திறக்கும்  வரை அது திறக்காது.

வைரஸ் தாக்கிய பென் ட்ரைவ் ஒன்றை திறப்பது எப்படி?

எப்பொழுதும் பென் ட்ரைவ்வை double கிலிக் செய்து திறக்காதீர்கள். இங்கு ஒரு இலகுவான வழியொன்றை தருகிறேன்.
01. Run command ஐ (Ctrl + R)  திறந்து drive வின் எழுத்தை  கீழுள்ள படத்தில்  காட்டப்பட்டுள்ளவாறு டைப் செய்து  ok பட்டனை அழுத்துங்கள்.


இவ்வாறு open செய்யிம்போது வைரஸ் நம் கணணிக்குள் உட்புகாது. இப்போது பென்டரைவரில் உங்களுக்கு தேவையானவற்றை செயற்படுத்தலாம்.

உங்களின் MOBILE PHONE தொலைந்து விட்டதா நீங்கள் கவலை பட வேண்டாம்

உங்களின் MOBILE PHONE தொலைந்து விட்டதா நீங்கள் கவலை பட வேண்டாம்

   உங்களின் MOBILE PHONE தொலைந்து விட்டதா நீங்கள்  கவலை பட வேண்டாம் .காவல் நிலையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது .உங்கள் மொபைலில் பின்புறம் IMEI என்று அழைக்கப்படும்( INTERNATIONAL MOBILE EQUIPMENT IDENTITY ) 14 இலக்க எண் மூலம் எளிதாக கண்டு அறியலாம் .இந்த IMEI NO மூலமாக தான் நமது நாட்டில் நிகழ்ந்து  வரும் குற்றங்களுக்கான தடயமாக இருக்கிறது .உங்களின் MOBILE ஐ எடுத்து அதில் உள்ள SIM ஐ மாற்றினாலும் அவர்கள் நிச்சயமாக சிக்கி கொள்வார்கள் .

இரண்டு வழிகளில் அவர்களை கையும் களவுமாக  பிடிக்கலாம் .
இந்த முறை அனைவருக்கும் பொருந்தும் அதாவது அனைத்து வகையான MOBIL PHONE கும் பொருந்தும் 
 
முதலாவது முறை :.
send an e-mail to cop@vsnl.net with the following info.
Your name:
Address:
Phone model:
Make:
Last used No.:
E-mail for communication:
Missed date:
IMEI No:


இரண்டாவது முறையில் GUARDIAN என்ற SOFTWARE ஐ உங்களின் மொபைலில் INSTALL செய்வது மூலம் இதை இன்னும் சுலபமாக கண்டுப்பிடிக்க முடியும் .நீங்கள் நினைக்கலாம் அந்த SOTWARE ஐ UNINSTALL செய்தால் அதன் பயன்பாட்டை முடக்கப்படலாம் என்று .ஆனால் அதில் PASSWORD பயன்படுத்தப்படுகிறது எனவே கொஞ்சம் சிக்கல் கலந்த விஷயம் .அவர் உங்களின் SIM ஐ REMOVE செய்து அவரோட SIM ஐ போடும்போது அவரின் MOBILE NO உங்களின் மற்றொரு REFRENCE NO க்கு ஒரு MESSAGE வரும் .எனவே அவர் தப்பிக்க முடியாது எத்தனை முறை அவர் SWITCH OFF/ON செய்தாலும் .அவரின் MOBILE NO உங்களுக்கு குறுந்தகவல்ஆக வந்துக்கொண்டே இருக்கும் .

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளத்திற்கு சென்று உங்கள் MOBIL DEVICE க்கு ஏற்றாற்போல் நீங்கள் DOWNLOAD செய்துகொள்ளுங்கள்  நண்பரே ..
GUARDIAN  software ஐ  தரவிறக்கம் செய்ய இங்கே CLICK செய்யுங்கள் .
இன்றைய  தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் .நன்றி வணக்கம் !

போலியான MOBILE PHONEஐ எப்படி கண்டுப்பிடிப்பது

போலியான MOBILE PHONEஐ எப்படி கண்டுப்பிடிப்பது
நமது அரசு ஒரு சில மாதங்களுக்கு முன்னாள் ஒரு அதிர்ச்சியான செய்தியை அறிவித்தது .IMEI NO இல்லாத மொபைல் PHONE ஐ யாரும் பயன்படுத்த வேண்டாம் மீண்டும் பயன்படுத்தினால் அவர்களின்  NETWORK தொடர்பு துண்டிக்கப்படும் .இந்த சூழ்நிலையில் அதிகமாக பாதித்த நிறுவனம் CHINA MOBILE தான் என்றே சொல்லலாம் .இந்த அறிவிப்பு கூட மக்களின் நலன் கருதியே கொண்டு வரப்பட்டது எனலாம் .இதனால் ALKATEL,SIGMATEL,SPICE,CARBOON ,GFIVE போன்ற நிறுவனங்களுக்கு நெருக்கடியை தந்தது .இபோதைக்கு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும் .நாம் வாங்கும் பரிசோதித்து வாங்குவதே நமக்கு நல்ல தீர்வை தரும் என நம்புகிறேன் .எனவே அதை எப்படி கண்டறிவது பற்றி இன்று பார்ப்போம் .உங்கள் MOBILE PHONE முகப்பு பகுதியில் PRESS *#06#  CODE ஐ அபோது உங்கள் மொபைல் SCREEN இல் முன் IMEI NO தோன்றும் .


இந்த IMEI NO ஐ உங்கள் மொபைலில் CREATE MESSAGE சென்று TYPE செய்து 53232 என்ற NO க்கு குறுந்தகவல் அனுப்பவும் .


"SUCCESS " என்று REPLY வந்தது என்றால் உங்கள் IMEI NO உண்மை என உறுதி செய்யப்பட்டது .


"INVALID IMEI " என்று REPLY வந்தால் உங்கள் IMEI NO போலியானது  என்று நீங்கள் உறுதி செய்யப்படலாம் .

Task Manager has been disabled by your administrator

Task Manager has been disabled by your administrator
உங்கள் கணினியில் சில நேரம் ctrl+alt+del  button ஐ press செய்யும்போது 

Task Manager has been disabled by your administrator இது மாதிரியான சிறிய window open ஆகும் .இதற்கு என்ன காரணம் தெரியுமா ..?இன்று இதை எப்படி நிவர்த்தி செய்வது பற்றி பார்ப்போம் .கணினி துறையில் நன்கு தெரிந்தவர்களுக்கு இது பெரிய விஷயம் கிடையாது அவர்களே சரி செய்து விடுவார்கள் .


உங்கள் கணினியின் desktop இல் 
Start>Run>gpedit.msc>ok

 

2]Double click on Administrative Templates under the User Configuration.

 

3] Now double click on System. Select Ctrl+Alt+Del options. Double click on it.

 

4]Select Remove Task Manager. Right click on it and select Properties. If this setting isenabled and users try to start Task Manager, a message appears explaining that a policy prevents the action. So by disabling the policy, you are enabling the Task Manager.((Click Setting>Select Disabled radio button>Apply/OK)

நோக்கியா மொபைலில் மறைந்துள்ள SECRET தகவல்கள்

நோக்கியா மொபைலில் மறைந்துள்ள SECRET தகவல்கள்
Code                                                     Action

*#7780#                               To restore the factory settings of mobile set

*#3283#                               To verify the set Manufacturing date

*#746025625#                   To stop the sim clock

*#67705646#                      Use to delete the operator logo

*#73#                                    Use to reset game scores and phone timers

*#0000#                               Use to display the mobile software version

*#06#                                    To display the IMEI Number of the mobile

*#92702689#                      To display the mobile warranty related settings

*#7760#                                To display the Production serial number

*#bta0#                                 Use to display Bluetooth MAC address

*#9999#                                Use to display the mobile software version

*#147#                                  If you are using Vodafone then this code will help

                                         you show the last call detail

*#2640#                               To display the mobile security code

*#7328748263373738#                     Apply to resets the set default security code

*#43#                                    To verify the call waiting status

*#2820#                                To verify the Bluetooth information

*#7370#                                To format the mobile phone memory

*#delset#                              To delete the GPRS AND EMAIL settings

#pw+1234567890+1#         To display the lock status of mobile set

#pw+1234567890+4#         To display the lock status of your SIM

எளிய தமிழில் கணினி மின்புத்தகங்கள்

எளிய தமிழில் கணினி மின்புத்தகங்கள்

நம் குழந்தைகளை ஜீனியஸ் (Genius) ஆக மாற்ற உதவும் பயனுள்ள இலவசத் தளம்.

நம் குழந்தைகளை ஜீனியஸ் (Genius) ஆக மாற்ற உதவும் பயனுள்ள இலவசத் தளம்.
சிறு குழந்தைகள் முதல் மாணவர்கள் வரை அனைவரையும் அறிவு மேதைகளாக மாற்றுவதற்கு வசதியாக உள்ள திறமையான, புத்திசாலிதனத்தை வளர்க்க கூடிய கதைகளை ஆன்லைன் மூலம் இலவச புத்தகமாக மட்டுமில்லாமல் ஆடியோவுடன்  படித்துக்கொண்டே கேட்பது போல ஒரு தளம் உருவாக்கப்பட்டுள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
படம் 1
குழந்தைகளின் அடிப்படை அறிவை நாம் சரியாக பயன்படுத்தும்படி அமைத்து விட்டால் கண்டிப்பாக அந்த குழந்தை ஒரு ஜீனியஸ் ஆக வரும் என்பதில் எவருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. புத்தகங்களை படிப்பது ஒருகலை தான் என்றாலும் அறிவுள்ள  புத்தகங்களை  ஆடியோவுடன் கேட்பது சில தளங்களில் மட்டுமே நமக்கு இலவசமாக கிடைக்கும் அந்த வகையில் அறிவுள்ள  புத்தகங்களை ஆன்லைன் மூலம் காட்டியும் படித்துச் சொல்லவும் ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://meegenius.com
படம் 2
இத்தளத்திற்கு சென்று நம் குழந்தைகளின் அறிவுப்பசிக்கு சரியான விருந்து அளிக்கும் வகையில் பல வகையான அறிவை வளர்க்கும் இலவச புத்தகங்கள் ( Free books ) கிடைக்கிறது , இதில் எந்த புத்தகத்தை படிக்க வேண்டுமோ அந்த புத்தகத்தை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நாம் தேர்ந்தெடுத்த புத்தகத்தில் ஒவ்வொரு பக்கமாக படத்துடனும் ஆடியோவுடனும் சொல்கின்றனர், காதால் கேட்டுக்கொண்டே படிப்பதால் ஆங்கில வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் என்றும் குழந்தைகள் எளிதாக புரிந்து கொள்ளலாம்,  எளிமையான ஆங்கில வார்த்தைகள் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் அனைத்து புத்தகங்களும் உள்ளது, தினமும் ஒரு புத்தகம் என்று நம் குழந்தைகள் படித்தால் கூட மூன்று மாதத்தில் அவர்கள் கண்டிப்பாக  ஜீனியஸ் தான் முயற்சித்து பாருங்கள், நம் அனைத்து செல்ல குழந்தைகளுக்கும் இந்தப்பதிவை எடுத்துச்செல்லும் பொறுப்பை உங்களிடம் ஓப்படைக்கிறோம்.
கண்டிப்பாக இந்தப்பதிவு குழந்தைகளுக்கு மட்டுமின்றி ஆங்கில உச்சரிப்பை கற்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

டிவிட்டரை பதம் பார்த்த கம்ப்யூட்டர் கொள்ளையர்கள்

டிவிட்டரை பதம் பார்த்த கம்ப்யூட்டர் கொள்ளையர்கள்
டிவிட்டரை பற்றி நாம் சொல்ல ஒன்றும் இல்லை இதன் பெருமை
அனைவருக்கும் தெரிந்ததே உடனுக்குடன் தகவல் பரிமாற்றத்தில்
தனக்கென்று ஒரு இடத்தை தக்கவைத்து இருந்தது. வந்த வேகத்தில்
டிவிட்டர் இல்லாமல் ஒன்றுமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு
உயர்ந்தது. இந்த டிவிட்டரை கூகுள் விரைவில் வாங்கினாலும் வாங்கும்
என்று கருத்துக்கள் வெளிவந்த்தாலும் இதைப் பற்றி கூகுள் பெரிதாக
எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை. ஏனென்று யோசித்தால் இப்போது
தான் தெரிகிறது டிவிட்டரின் செக்யூரிட்டி கொஞ்சம் குறைவாகத்தான்
இருக்கிறது போலும். இரண்டு மாதத்திற்கு முன் தான் ஒரு செக்யூரிட்டி
பிரச்சினையில் சிக்கி வெளிவந்தது நமக்கு தெரிந்தது தான் ( படம் 1 ).
படம் 1
இப்போது அதைவிட கொஞ்சம் அதிகமாகத்தான் பாதிக்கப்பட்டுள்ளது.
” இரணியன் சைபர் ஆர்மி ” என்று ஒரு கொள்ளை கூட்டம் சில
நாட்களுக்கு முன் டிவிட்டரை பதம் பார்த்தது ( படம் 2 -ல்
காட்டப்பட்டுள்ளது ).
படம் 2
அனைத்தும் அவர்கள் கையில் டிவிட்டரால் ஒன்றும் செய்ய முடியாமல்
தவித்தது. கூகுலில் சென்று ” Twitter”  என்று தேடியவர்களுக்கு அதிர்ச்சி
தான் படம் 3 -ல் காட்டப்பட்டுள்ளது.
படம் 3
டிவிட்டருக்கே இந்த நிலமை என்றால் அதில் கணக்கு வைத்திருக்கும்
நமக்கு என்று டிவிட்டரில் இருந்த பல பெரிய தலைகள் சொல்லாமல்
வெளியே சென்றது. இந்த நேரத்தை கூகுள் தனக்கு சாதகமாக கொண்டு
டிவிட்டருக்கு இணையான ஒன்றை உருவாக்குவதில் அதிவேகமாக
ஈடுபட்டுள்ளது.  பாதுகாப்பு இல்லாத வீட்டில் குடியிருக்க யார் தான்
விரும்புவார்கள் டிவிட்டர் வந்த வேகத்தில் சென்றாலும் ஆச்சரியப்
படுவதற்கு ஒன்றும் இல்லை. இதைப் பற்றிய வீடியோ ஒன்றையும்
இத்துடன் இணைத்துள்ளோம்.

இந்த செய்தி வந்தவுடன் அனைத்து முன்னனி நிறுவனங்களும்
இணையதள செக்யூரிட்டிக்கு என்று பல பேரை நியமித்துள்ளது.
2010 கம்யூட்டர் இணையதள செக்யூரிட்டிக்கு தான் அதிக வேலை
வாய்ப்பு இருக்கும் என்பது பல முன்னனி நிறுவனங்களின் கணிப்பு.

அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஆன்லைன் கிரெடிட் கார்டு பாதுகாப்பு வழிமுறைகள் ஸ்பெஷல் ரிப்போர்ட். – 2

அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஆன்லைன் கிரெடிட் கார்டு பாதுகாப்பு வழிமுறைகள் ஸ்பெஷல் ரிப்போர்ட். – 2
ஆன்லைன் மூலம் எந்தெந்த வழிகளைப் பயன்படுத்தி கொள்ளை
அடிக்கின்றனர் என்பதை முந்தைய பதிவில் பார்த்தோம் இன்றும்
அதன் தொடர்ச்சியாக இதன் பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி
இந்தப்பதிவில் பார்க்கலாம்.
’ ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது ‘ தினமும் இணையதள செக்யூரிட்டி
பற்றி பல புத்தகங்கள் வந்தாலும் ஏதுவுமே நடைமுறைக்கு பயன்படாது
என்று முழுமையாக படித்த பின் தான் புரியும். இப்போது இந்த குற்றத்தை
தடுப்பதற்கான சில வழிமுறைகள்.
வழிமுறைகள்:
* ஆன்லைன் மூலம் பொருட்கள் விற்கும் நிறுவனங்கள் தங்களின் வங்கி
கணக்கை கொடுத்து அதற்கு பணம் அனுப்ப சொல்லலாம்.
* இணையதளம் பயன்படுத்தும் நாம் இமெயில் மற்றும் வங்கி
கணக்கு பயன்படுத்துவதாக இருந்தால் அதற்கு தனி உலாவியும்
மற்றபடி தளங்களை பார்ப்பதற்கு தனி உலாவியும் பயன்படுத்தலாம்.
* Crack செய்து கொடுக்கும் மென்பொருளை ஒரு போதும் தரவிரக்காதீர்கள்
இதனுடன் தற்போது உங்கள் கடவுச்சொல்லை அனுப்பும் ஸ்கிரிப்ட்-மும்
கூடவே வருகின்றது.
*  பணம் அனுப்பும் தளத்தின் முகப்பில் “https” என்று இருக்கிறதா என்று
ஒரு முறைக்கு இருமுறை பார்த்துக்கொள்ளுங்கள்.
*  கடவுச்சொல் தட்டச்சு செய்யும் போது உலாவியில் ஏதாவது மெசேஸ்
வந்து Ok , close என்று இருந்தால், நீங்கள் Esc பொத்தானை மட்டும்
அழுத்துங்கள் ஏன் என்றால் ok cancel , close எதை அழுத்தினாலும் ஒரே
வேலையைத்தான் செய்யும்.
* உலாவி பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது இடையில் Close அல்லது
Restart ஆனால் கண்டிப்பாக உங்கள் கவனம் உலாவியின் மேல்
இருக்கட்டும்.( தேவைப்பட்டால் உலாவியை uninstall செய்து மறுபடியும்
Install செய்து கொள்ளுங்கள் ).
* கடவுச்சொல்லை ஒரு போதும் உங்கள் கணினியில் சேமித்து வைக்காதீர்கள்.
ஒவ்வொரு முறையும் தட்டச்சு செய்து உள் நுழையுங்கள்.
* நெட்கஃபே- களில் சென்று பேங்க் Transaction செய்வதை கூடுமானவரை
தவிர்க்க பாருங்கள், பயன்படுத்தியே ஆகவேண்டும் என்றால் Firefox
உலாவியை பயன்படுத்தி Transaction செய்யுங்கள்.
* லாட்ரியில் பரிசு விழுந்திருக்கிறது என்று வரும் இமெயிலில்
ஒருபோதும் உங்கள் கிரெடிட் கார்டு தகவல்களை கொடுக்காதீர்கள்.

நன்றி : விண்மணி

முதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை !

முதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை !
உலகில் நூற்றுக்கணக்கான மொழிகள் பேசப்படுகிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 32 மொழிகள் உள்ளது. கூகுள் இணையமானது சில குறிப்பிட்ட உலக மொழிகளை மொழிபெயர்ப்புச் செய்யும் கருவியை உருவாக்கி இருந்தது. உதாரணமாக ஆங்கிலத்தில் நாம் எழுதுவதுவதை கூகுள் கருவி உடனடியாக பிரெஞ்சு, டச், ஸ்பானிய என்று சுமார் 58 உலக மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யவல்லது. அதேபோல பிறமொழிகளையும் ஆங்கிலத்திற்கு மாற்றவல்லது. ஆனால் தற்போது நீங்கள் தமிழ் யூனிக்கோட்டில் அடிக்கும் சொல்லை அது ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பது மட்டுமல்லாது, பந்தியாக இருக்கும் வசனங்களையும் அது மாற்றுகிறது.
அதாவது தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கோ இல்லை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கோ இனி நாம் சுலபமாக மொழிபெயர்க்கலாம். ஆங்கில இணையம் ஒன்றில் நீங்கள் ஒரு செய்தியை வாசிக்கிறீர்கள், விளங்கவில்லை என்றால் அச் செய்தியை அப்படியே காப்பி பண்ணி கூகுள் மொழிபெயர்ப்பில் இட்டால் உடனடியாக அது அதனை தமிழுக்கு மாற்றிக் காட்டுகிறது. இருப்பினும் தற்போது கூகுள் இதனை ஒரு பரீட்சாத்தமகவே விட்டுள்ளது. பல லட்சம் தமிழர்கள் இதனைப் பாவிக்க ஆரம்பிக்கும்போது, சில ஆங்கிலச் சொற்களுக்கும், சில தமிழ் சொற்களுக்கு சரியான அர்த்தங்களை அவர்கள் எழுதுவார்கள். அதை திருத்தும் வசதிகளும் இருக்கிறது. திருத்தப்படும் வசனங்களும் சொற்களும் நாளடைவில் பெருகி ஒரு நேர்த்தியை அல்லது முழுமையைப் பெறும்.
திருத்தும் வசனங்களும் சொற்களும் சேமிக்கப்படுவதால், இன்னும் சில காலத்தில் கூகுள் தமிழ் மொழிபெயர்ப்பு பூரணமன நிலைபெற்ற கருவியாக உருமாற உள்ளது. அதற்கு நீங்களும் உதவலாம். உதாரணமாக ஈழத் தமிழர்கள் பாவிக்கும் பல சொற்களுக்கு அங்கே அர்த்தம் கிடையாது. கூடுதலாக தமிழ் நாட்டில் இருப்பவர்கள் தாம் வழக்கமாகப் பாவிக்கும் சொற்களை இடுகைசெய்கின்றனர். எனவே பண்டைய தமிழ் மாறாது.. பிறமொழிக் கலப்புகள் இல்லாத ஈழத் தமிழர்கள் தமது சொற்களை இட்டு அதற்கான அர்த்தத்தை கூகுள் கருவியில் சேமிக்கவேண்டும் என மனிதன் இணையம் வேண்டி நிற்கிறது. உலகில் நூற்றுக்கணக்கான மொழிகள் இருந்தாலும் கூகுளானது 63 மொழிகளையே பாவனையில் வைத்துள்ளது.
அதில் தமிழும் அடங்கும் என்பது பெருமைக்குரிய விடையமாகும். எமது மொழிபோல உலகில் வேறு எந்த மொழியும் கிடையாது என்பதே உண்மையாகும் !

கணினியில் வைரஸினால் பழுதான பைல்களை ரிப்பேர் செய்து மீண்டும் செயல்படுத்த

கணினியில் சில நேரங்களில் நம்முடைய பைல்கள் சில எதிர்பாராத பிரச்சினைகளால் பழுதாகிவிடும். அந்த பைல் பழுதாகிவிட்டால் நாம் அந்த பைலில் சேமித்து வைத்திருக்கும் அனைத்து தகவல்களையும் இழக்கும் நேரிடும். நம்முடைய பைல்கள் பழுதாக சில காரணங்கள்  நம்முடைய கணினியில் வைரஸ் புகுந்து முக்கியமான பைல்களை அழித்து விடும், எதிர்பாராத மின் வெட்டு பிரச்சினை, தொழில் நுட்ப்ப கோளாறுகள் போன்ற காரணங்களால் தான் நாம் பெரும்பாலும் நம் முக்கியமான பைல்களை இழக்க நேரிடுகிறது. இது போன்று பிரச்சினைகளை தவிர்க்க ஒரு அருமையான இலவச மென்பொருள் உள்ளது.
மென்பொருளால் ரிப்பேர் செய்யப்படும் பைல் பார்மட்கள்:
 • Word documents (.doc, .docx, .docm, .rtf)
 • Excel spreadsheets (.xls, .xla, .xlsx)
 • Zip or RAR archives (.zip, .rar)
 • Videos (.avi, .mp4, .mov, .flv, .wmv, .asf, .mpg)
 • Images (.jpg, .jpeg, .gif, .tiff, .bmp, .png)
 • PDF documents (.pdf)
 • Access databases (.mdb, .mde, .accdb, .accde)
 • PowerPoint presentations (.ppt, .pps, .pptx)
 • Music (.mp3, .wav)
இப்படி பல வகையான பைல்களை மீண்டும் ரிப்பேர் செய்து உபயோகிக்க இந்த மென்பொருள் உதவி செய்கிறது.
உபயோகிக்கும் முறை:
 • முதலில் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
 • பின்பு அந்த மென்பொருளை ஓபன் செய்து அதில் கீழே குறிப்பிட்டு இருக்கும் பட்டனை அழுத்தி உங்களின் பழுதான பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
 • பழுதான பைலை தேர்வு செய்தவுடன் கீழே உள்ள Start Repair என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்களுடைய பைல் ரிப்பேர் ஆகா தொடங்கி சிறிது நேரத்திலேயே முழுதும் சரிசெய்யப்பட்டு உங்களுடைய பைல் திரும்பவும் உங்களுக்கு கிடைக்கும்.
இந்த மென்பொருளால் குறிப்பிட்ட பைல்களை ரிப்பேர் செய்ய முடியாவிட்டாலும் கூட இந்த முகவரிக்கு repair@filerepair1.com உங்களின் பழுதான பைலை அனுப்பினால் அவர்கள் அந்த பைலை திருத்தி மீண்டும் செயல்படுத்தி தருவார்கள் என்பது இந்த மென்பொருளின் கூடுதல் சிறப்பு.
Download Link - File Repair
Vanthematharam

கணணி செய்தி VLC மீடியா பிளேயரில் யூடியூப் வீடியோவை நேரடியாக இயக்குவதற்கு

கணணி செய்தி VLC மீடியா பிளேயரில் யூடியூப் வீடியோவை நேரடியாக இயக்குவதற்கு
வி.எல்.சி மீடியா பிளேயரானது ஓடியோ மற்றும் வீடியோக்களை இயக்க உதவும் அப்ளிகேஷன் ஆகும்.இந்த பிளேயரானது தற்போது அதிகமான கணணி பயனாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு முக்கியமான காரணமே இந்த மென்பொருளுடைய எளிமையான தோற்றமும். இலவசம் என்ற ஒன்று மட்டுமே ஆகும்.
வி.எல்.சி மீடியா பிளேயரில் அதிகமான வசதிகள் மறைந்து உள்ளன. அந்த வகையில் மறைந்துள்ள வசதிதான் நேரடியாகவே யூடியூப் வீடியோவை வி.எல்.சி மீடியா பிளேயரில் இயக்கி பார்க்கும் வசதி ஆகும். இதனை செய்ய வி.எல்.சி பிளேயரை ஒப்பன் செய்யவும். பின் Media � Open Network Stream என்பதை தேர்வு செய்யவும்.
தேர்வு செய்யதவுடன் தோன்றும் விண்டோவில் வீடியோவில் URLயை பேஸ்ட் செய்யவும். பின் Play என்னும் பொத்தானை அழுத்தவும்.
இப்போது வீடியோவினை நேரடியாகவே வி.எல்.சி பிளேயரில் காண முடியும். கணணியில் ப்ளாஷ் பிளேயர் இல்லையெனில் வீடியோவினை இணையத்தில் காண முடியாது.
அதுபோன்ற சமயங்களில் இந்த வி.எல்.சி பிளேயர் உங்களுக்கு நிச்சயம் உதவி செய்யும். வீடியோவைவினை மாற்றம் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.

கணினிக்கு தீங்கு இழைக்கும் சாப்ட்வேர்களை கண்டறிந்து அழிக்க

கணினிக்கு மிகவும் அவசியமானது சாப்ட்வேர்கள் ஆகும். கணினியில் நம்முடைய வேலைகளை குறைக்கவும் சில அதிக்கப்படியான வசதிகளுக்கும் மென்பொருட்களை உபயோகிக்கிறோம். மென்பொருட்கள் இல்லாமல் கணினி இருப்பது வீண் தான். மென்பொருட்களை பிரபல கணிப்பொறி நிறுவனங்கள் தயாரித்து நமக்கு விலைக்கு தருகிறது. இந்த மென்பொருட்களை உபயோகித்தால் நம்முடைய எந்த பிரச்சினையுமின்றி பாதுகாப்பாக இருக்கும் ஆனால் நாம் பெரும்பாலும் மென்பொருட்களை காசு கொடுத்து வாங்காமல் கிராக் பதிப்பையோ அல்லது இணையத்தில் கொட்டி கிடக்கும் இலவச மென்பொருட்களை தரவிறக்கி உபயோகிக்கிறோம்.
இப்படி இலவச மென்பொருட்களை உபயோகிக்கும் போது சில மால்சியஸ் மென்பொருட்களால் நம்முடைய கணினி பாதிக்கப்படும். ஆன்ட்டி வைரஸ் மென்பொருட்களும் இந்த மென்பொருட்களை கண்டறிய முடியாததால் கணினி மேலும் மேலும் பாதிக்கப்பட்டு நாளடைவில் முற்றிலுமாக செயலிழக்கும் அபாயம் உள்ளது. இந்த பிரச்சினைகளை தவிர்க்க
மைக்ரோசாப்ட் நிறுவனம் மால்சியஸ் மென்பொருட்களை கண்டறிந்து அளிக்க ஒரு மென்பொருளை வெளியிட்டு உள்ளது. 
 • இந்த மென்பொருளை Malcious Software Removal டவுன்லோட் செய்து கணினியில் இன்ஸ்டால் செய்யும் போதே உங்கள் கணினியை ஸ்கேன் செய்ய ஆரம்பித்து விடும். 
 • உங்கள் கணினியில் உள்ள அனைத்து மென்பொருட்களும், எக்ஸ்கியுட்டபில் பைல்கள் அனைத்தும் ஸ்கேன் செய்யும். 
 • இதில் ஏதேனும் தீங்கு இழைக்க கூடிய மென்பொருட்கள் கணினியில் இருந்தால் அதை கண்டறிந்து அழித்து விடும். 
 • அப்படி உங்கள் கணினியில் எந்த மால்சியஸ் மென்பொருளும் இல்லை அனைத்து மென்பொருட்களும் நல்ல நிலையில் இருந்தால் உங்களுக்கு எந்த மென்பொருளும் பாதிக்க படவில்லை என்ற செய்தி வரும்.

உங்கள் போடோவை ஓவியமாக மாற்ற ஒரு இலவச மென்பொருள்….

உங்கள் போடோவை ஓவியமாக மாற்ற ஒரு இலவச மென்பொருள்….
போட்டோசாப் மென்பொருளில் வித விதமாக நாம் நம் போட்டோவை டிசைன் செய்ய தெரிந்துகொண்டாலும். இலவசமான ஒரு நொடியில் நம் போட்டோவை கலர் மற்றும் பென்சில் ஓவியமாக மாற்ற சிறந்த மென்பொருள் கிடைத்தால் நமக்கு மிகுந்த சந்தோசம்தான்.
அந்த சந்தோசத்தை பூர்த்திய செய்ய இதோ ஒரு சிறந்த இலவச மென்பொருள்.
Download  :http://www.fotosketcher.com/PortableFotoSketcher.exe

ஸ்கைப் கணக்கில் இருந்தவாறே பேஸ்புக் நண்பர்களுடன் அரட்டை அடிக்க

ஸ்கைப் மிக அண்மையில் தனது புதிய பதிப்பான 5.5 என்ற பீட்டா பதிப்பினை வெளியிட்டுள்ளது.
இந்த பதிப்பின் மிகப்பெரிய மாற்றமே உங்களது ஸ்கைப் கணக்கில் இருந்தவாறு உங்கள் முகபக்கத்தை(FACE BOOK) அணுகும் வசதி செய்யப்பட்டுள்ளமை ஆகும். இதன் மூலம் உங்கள் முகப்பக்கத்தில் உள்ள நண்பர்களுடன் அரட்டை மற்றும் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும்.
இதன் வசதிகள்: ஸ்கைப் கணக்கில் இருந்தவாறு முகப்பக்கத்தில் ஓன்லைனில் உள்ள நண்பர்களுடன் அரட்டை செய்யலாம். இதற்கு வசதியாக நண்பர்களின் ஓன்லைன் வருகையை ஒவ்வொரு முறையும் உங்களுக்கு தெரியப்படுத்தும்.
ஸ்கைப் கணக்கில் இருந்தவாறு முகப்பக்கத்தில் நண்பர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களை பார்க்க முடிவதுடன் அவற்றுக்கு பதில்(கமெண்ட்)அனுப்பவும், லைக்(like)பண்ணவும் முடியும்.
இந்த வசதிகளை பெற ஸ்கைப் புதிய பதிப்பினை தரவிறக்கம் செய்து நிறுவிய பின் உங்கள் ஸ்கைப் கணக்கினை திறந்து கொள்ளவும். இப்போது வலது பக்க மூலையில் FACE BOOK பட்டன் தரப்பட்டிருக்கும்.
அதனை கிளிக் செய்து உங்கள் FACE BOOK கணக்கினை அடைவதற்கான முகவரி மற்றும் கடவுச்சொல் கொடுத்து கிளிக் செய்தால் உங்கள் FACE BOOK தகவல்களை சென்றடைய அனுமதி கோரப்படும்.
நீங்கள் அனுமதி வழங்குவதன் மூலம் ஸ்கைப் கணக்கில் இருந்தவாறு FACE BOOK பக்கத்தினை அடைய முடியும்.

5 சிறந்த வீடியோ எடிட்டிங் இலவச மென்பொருட்கள் !

மென்பொருட்களில் வீடியோ எடிட்டிங் மென்பொருட்களுக்கு தனி இடம் உண்டு .
கட்டண மென் பொருட்களை போல் அத்தனை வசதிகளையும் உள்ளடக்கிய 5  வீடியோ எடிட்டிங் இலவச மென்பொருட்களை பாப்போம் .

1 .Virtual Dub
இது கிட்டத்தட்ட அடோப் பிரீமியர் மென்பொருளுக்கு இணையானது எனலாம்.வீடியோக்களை வெட்ட ,ஒட்ட ,அழகுபடுத்த முடியும் .தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் .
2 .Light  Works 

இது பல்வேறு விருதுகளை குவித்த மென்பொருள் .சினிமா  துறையில் கிட்டத்தட்ட 20  வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது .தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் .
3 .Avidemux
உபயோகிக்க மிகவும் எளிதான மென்பொருள் .வீடியோக்களை Flv,MPEG,AVI,VCD ஆகிய  ஃபார்மேட்டுகளுக்கு  மாற்றம் செய்ய முடியும் .தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் .  
4 .DebugMode Wax
இதுவும் ஒரு சிறந்த மென்பொருள்தான் .வீடியோக்களுக்கு 2D மற்றும் 3D  எஃபெக்ட்டுகள் கொடுக்க முடியும். தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் .
5 . Movie  Masher 
Online  மூலமாக வீடியோ எடிட்டிங் செய்ய சிறந்த மென்பொருள் .உபயோகிப்பது சற்று கடினம் .தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் .

அனைத்து பைல்களையும் திறந்துபார்க்க ஒரே மென்பொருள்

அனைத்து பைல்களையும் திறந்துபார்க்க ஒரே மென்பொருள்
கணினியில் பணியாற்றும் போது பல்வேறு விதமான டாக்குமெண்ட்களை கையாளுவோம், ஒரு சில பைல் பாமெட் கொண்ட் பைல்களையே அதிகமாக பயன்படுத்துவோம் குறிப்பாக வேர்ட், பிடிஎப், ஆடியோ பைல்கள், வீடியோ பைல்கள் இதுபோன்ற பைல் பார்மெட்களை தான் நாம் அதிகமாக பயன்படுத்தி வருவோம். இதுபோல் அதிகமாக பயன்படுத்தும் பைல் பார்மெட்களுக்கென மென்பொருள்களை நிறுவி பயன்படுத்தி வருவோம். ஆனால் ஒரு சில பைல்களை அவ்வபோது குறிப்பிட்ட தேவைக்காக மட்டுமே பயன்படுத்தி வருவோம். அதுபோன்ற பைல்களை காண வேண்டுமெனில் அதற்கென உரிய மென்பொருளை நிறுவினால் மட்டுமே அந்த குறிப்பிட்ட பைலை நம்மால் காண முடியும். இதனால் ஒரு சில டாக்குமெண் ட்களை நம்மால் காண முடியாமலேயே போய்விட கூடிய சூழ்நிலையும் உண்டு. இதுபோன்ற சிக்கல்களை சமாளிக்க ஒரு மென்பொருள் வழிவகை செய்கிறது. இந்த மென்பொருள் மூலமாக பல்வேறு விதமான பைல் பார்மெட் கொண்ட பைல்களை காண முடியும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி
மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்யவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் எந்த பைலினை ஒப்பன் செய்ய வேண்டுமோ அதனை திறந்து பார்க்கவும். இந்த மென்பொருளானது பல்வேறு விதமான பைல் பார்மெட்களை சப்போர்ட் செய்யக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இந்த மென்பொருளின் உதவியுடன் 75கும் மேற்பட்ட பைல்பார்மெட்களை ஒப்பன் செய்ய முடியும்.
PDF, DOC, AVI, DOCX, ZIP, JAR, XML, HTML, SWF, 7Z, PHP, XLSX, MKV, FLV, XLS, JPEG, TXT, PSD, WMV, CR2, CRW, GIF, MSG, NEF, TIFF, JPG, MOV, MP4, LOG, PNG, CS, INI, MPEG, MPG, CSS, MP3, CFG, HTM, BMP, JS, XLSM, WA, ICO, REG, DNG, ARW, MID, ORF, RAF, PEF, RESX, CF2, ERF, MEF, MRW, SR2, X3F இதுபோல இன்னும் பல பைல் பார்மெட்களை இந்த மென்பொருளானது சப்போர்ட் செய்யும். மேலும் இந்த மென்பொருள் சப்போர்ட் செய்யக்கூடிய பைல் பார்மெட்களை காண சுட்டி.

PDF கோப்புகளை சேர்க்க மற்றும் பிரிக்க

PDF கோப்புகளை சேர்க்க மற்றும் பிரிக்க
பிடிஎப் கோப்புகளை மாற்றம் செய்து உரிய கோப்பாகவும், குறிப்பிட்ட கோப்பினை மாற்றம் செய்து பிடிஎப் கோப்பாக செய்வதற்கு இணையத்தில் பல்வேறு இலவச மென்பொருள்கள் கிடைக்கிறன.
ஆனால் பிடிஎப் கோப்புக்களை உடைக்கவோ அல்லது ஒட்டுவதற்கோ மென்பொருள்கள் குறைவு. பிடிஎப் கோப்புக்களை இணைக்கவும் பிரிக்கவும் Hexonic PDF Split and Merge என்ற மென்பொருள் உதவி செய்கிறது.
இந்த மென்பொருள் மூலம் எளிமையாக பிடிஎப் கோப்புக்களை ஒண்றினைக்கவும் முடியும். மற்ற மென்பொருள்களை ஒப்பிடுகையில் சிறப்பான மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும்.
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் ஒரு முறை கணணியை மறுதொடக்கம் செய்து கொண்டு. பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் வேண்டிய பிடிஎப் கோப்பை தேர்வு செய்யது இணைத்துக் கொள்ளவும்.
பிடிஎப் கோப்பை இணைக்க வேண்டுமெனில் சாதரணமாக பிடிஎப் கோப்புக்களை உள்ளினைத்துவிட்டு பின் Start Processing என்னும் பொத்தானை அழுத்தி இணைத்துக் கொள்ள முடியும். வேண்டுமெனில் எழுத்துருவின் அளவினை மாற்றியமைத்துக் கொள்ளவும் இந்த மென்பொருள் அனுமதி செய்கிறது. Format என்னும் பொத்தானை அழுத்தி எழுத்துருவையும் மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.
மேலும் பிடிஎப் கோப்பினை சுருக்கவும் இந்த மென்பொருள் வழிவகை செய்கிறது. Layout options என்பதை தேர்வு செய்து அதில் விருப்ப பொத்தானை அழுத்தி பிடிஎப் கோப்பை தனித்தனியாகவும் பிரித்துக் கொள்ள முடியும்.
ஒரு பிடிஎப் கோப்பில் உள்ள அனைத்து பக்கங்களையும் தனித்தனியாவும் அல்லது ஒரே பக்கத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பக்கங்களையும் சேர்க்க முடியும். இதனால் அதிக பக்கங்களுடைய பிடிஎப் கோப்பை குறைந்த பக்கங்களாக குறைக்க முடியும்.
தரவிறக்கமுகவரி:
http://www.hexonic-software.com/

ஆண் குரலை பெண் குரலாகவும் , பெண் குரலை ஆண் குரலாகவும் மாற்றும் இலவச மென்பொருள்

ஆண் குரலை பெண் குரலாகவும் , பெண் குரலை ஆண் குரலாகவும் மாற்றும் இலவச மென்பொருள்
ஒரு ஆண் பேசும் குரலை நேரடியாக ஒரு பெண் பேசும் குரல் போல் மாற்ற உதவும் இலவச மென்பொருளைப்பற்றித்தான் இந்தப்பதிவு.ஆண்கள் பேசும் குரலும் பெண்கள் பேசும் குரலும் தனியாக தெரியும் ஆனால் மொபைல் போன்களில் ஆண்கள் பேசும் குரலை அப்படியே பெண்கள் பேசுவது போல் மாற்ற ஏற்கனவே பல மென்பொருட்கள் உள்ளன, ஆனால் கணினியில் ஆண்கள் பேசும் குரலை அப்படியே நேரடியாக பெண்கள் பேசுவது போல் மாற்ற ஒரு மென்பொருள் உள்ளது.
தறவிரக்க முகவரி : http://www.screamingbee.com/product/MorphVOXJunior.aspx
மேலே கொடுத்திருக்கும் முகவரியை சொடுக்கி இந்த மென்பொருளை இலவசமாக தறவிரக்கி நம் கணினியில் நிறுவலாம். மென்பொருளை இயக்கி யாருடைய குரலில் கேட்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து நாம் பேசினால் போதும், உதாரணமாக ஒரு ஆண் பேசும் போது பெண் குரலை தேர்ந்தெடுத்துவிட்டு பேச ஆரம்பித்தால் அது பெண் பேசுவது போல் இருக்கும். Man , Tiny Folks , Woman என்ற மூன்று விதமான ஆப்சன் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் இதில் Tiny Folks என்பது கார்டூன் கேரக்டர் பேசுவது போல் இருக்கும். பல சமயங்களில் சாட்டிங்கில் பேசுவது பெண் தான் என்று நினைத்திருப்போம் உண்மையிலே அவர் இது  போன்று இருக்கும் மென்பொருளை பயன்படுத்தி தான் பேசிக்கொண்டிருப்பார்.
வின்மணி

கணிதத்தை அனிமேசனுடன் வேடிக்கையாக சொல்லி கொடுக்கும் பயனுள்ள தளம்.

கணிதம் என்றாலே வேப்பங்காயாக கசக்கிறதா , கவலை வேண்டாம் புதிய பரிமானத்தில் கணிதத்தில் உங்களை திறமைசாலிகளாக மாற்ற வருகிறார்கள் இணைய கணினி ஆசிரியர்கள் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. 
சாதாரன பெறுக்கல் கூட நமக்கு வராது என்று சொல்லும் நபர்கள் முதல் , கணக்கு என்றாலே அலர்ஜி அதுவும் கூட்டல் என்றால் கூட  நமக்கு கால்குலேட்டர் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது  என்று சொல்லும் அனைவருக்கும் உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.mathsisfun.com
பள்ளியில் எனக்கு அறிவியல் நன்றாக வரும் ஆனால் கணக்கு மட்டும் சரியாக வராது என்று மாணவர் கூறினால் அறிவியல் சொல்லி கொடுக்கும் ஆசிரியர் திறமையை மட்டும் கொண்டு சொல்லி கொடுத்தால் நன்றாக இருக்காது சற்று வேடிக்கையாக கூறினால் எல்லா
மாணவர்களும் எளிதில் புரிந்து கொள்வார்கள், இதைப்போல் தான் கணித்ததை வேடிகையாக மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கிறது இத்தளம், இங்கு சென்று சாதாரண பெறுக்கல் கூட வித்தியாசமாக செய்ய சொல்லி கொடுக்கின்றனர்,  இயற்கணிதம் ( Algebra), வடிவவியல் (Geometry ) வரை அத்தனையையும் வித்தியாசமாகவும் வேடிக்கையாகவும் அனிமேசனுடனும் சொல்லிக்  கொடுக்கின்றனர் , கணிதம் என்றால் அலர்ஜி என்று சொல்லும் நபர்கள் கூட இத்தளத்திற்கு சென்றால் கணிதத்தில்  வல்லவர்களாகலாம் என்பது தான் இவர்கள் கொடுக்கும் தகவல். கணித ஆசிரியர்கள் முதல் கணிதம் விரும்பாதவர்கள் வரை அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

Internet History தகவல்களை Delete செய்ய ஒரு சூப்பர் எளிய வசதி பார்க்கும் வலைதளங்களின் தகவல்கள் History,Temporary  Files,Cookies
என்ற முறையில்  நம்முடைய கணிணினியில் பதிவாகும். சில நேரம் நமது கணினியின் வேகத்தை கூட இது பாதிக்கும். அதேபோல் நம்முடைய  Passwords,confidential Informations  கூட நம்முடைய  கணிணினியில்  பதிவாகி   சில சமயம்  மற்றவர்கள் நம் கணக்குக்குள் நுழைய கூட வாய்பிருக்கிறது. நாம் ஒரு  Browser பயன்படுத்தினால் நம்முடைய தகவல்களை Delete செய்ய  எளிதாக இருக்கும்,நாம் பல   Browsers  Google chrome,Firefox,opera,IE)  பயன்படுத்தினால் ஒரே கிளிக்கில் உங்களது தகவல்களை   Delete  செய்ய ஒரு வசதி
 இருக்கிறது பெயர் : Browser Cleaner
1.இங்கு சென்று   Browser Cleaner  தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
                                      
2.தரவிறக்கம் செய்தவுடன் Run செய்தால் கீழே உள்ளது போல் விண்டோ வரும்.
இதில் ஒவ்வொரு Tabs கிளிக் செய்து ( Internet Items,Windows items,Applications…) Clean Now  தந்தால் உங்களது தகவல்கள் Delete ஆகிவிடும்.
வேலை முடிந்தது,நீங்கள் நிறைய  Browsers பயன்படுத்தினாலும் இந்த முறையில் எளிதாக உங்க தகவல்களை Delete செய்து கொள்ளலாம்.