Oct 14, 2011

குரோம் மற்றும் பயர்பொக்ஸ் உலவிகளுக்கான நீட்சி

குரோம் மற்றும் பயர்பொக்ஸ் உலவிகளுக்கான நீட்சி

இணையத்தில் நாம் தேடும் தகவல்களை மிக விரைவாக பெற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கும்.
நாம் ஏதேனும் ஒரு தகவலைப் இணையத்தில் படித்துக் கொண்டிருக்கையில் அதிலுள்ள ஒரு வார்த்தை, தகவல் குறித்து மேலும் விளக்கம் பெற விரும்பினால் தேடுதளம் செல்ல டாஸ்க் பார் சென்று டைப் செய்வோம் அல்லது அந்த வார்த்தையில் ரைட் கிளிக் செய்து நாம் விரும்பிய தேடு இயந்திரம் மூலமாக தகவல்களைப் பெற்றுக் கொள்வோம்.
இவ்வளவு சிரமப்படாமல் தேடவேண்டிய வார்த்தையை RIGHT CLICK செய்து நமக்கு பிடித்த தேடு இயந்திரத்தில் தகவலைப் பெற்றால் எவ்வளவு எளிதாக இருக்கும்.
இம்முறையில் நமது நேரத்தை சேமிக்கவே DROG AND DROP ஆட்-ஆன் குரோம் மற்றும் பயர்பொக்ஸ் உலவிகளுக்காக உள்ளது.
பயர்பொக்ஸ் உலவி: பயர்பொக்ஸ் உலவிகளுக்கான ஆட்-ஆனை இங்கு டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
இனி நீங்கள் தகவல் தேட நினைக்கும் வார்த்தையை செலக்ட் செய்து ட்ராக் செய்யவும். இப்போது கூகுள், யாகூ உள்ளிட்ட ஆறு தேடி இயந்திரங்களில் எதன் வழி தேட விரும்புகிறீர்கள் என பரிந்துரைக்கும் ஒரு சிறிய விண்டோ தோன்றும்.
இதில் எந்த தேடி இயந்திரத்தில் ட்ராக் செய்கிறீர்களோ அதன்வழி ரிசல்ட் கிடைக்கும்.
குரோம் உலவி: குரோம் உலவிக்கான ஆட்-ஆனை இங்கு டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
இது சற்று வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும். இதில் 16 கட்டங்கள், 2 ட்ராப் டவுன் மெனு மற்றும் பட்டன்கள் இருப்பதைப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கட்டத்திலும் பெயர் மற்றும் URL க்கான இடம் இருக்கிறது. கீழே உள்ள ட்ராப் டவுணில் தேடும் தகவலை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் டேபில் காட்டுவதா அல்லது புதிய டேபில் காட்டுவதா என தேர்ந்தெடுக்கும் ஆப்ஷன் உள்ளது.
நடுவில் உள்ள 4 கட்டங்கள் காலியாகவும், அதை சுற்றி உள்ள 12 கட்டங்களில் நாம் விரும்பிய தேடு இயந்திரத்தை செட் செய்து கொள்ளலாம்.

இணையத்தள மூலமாக உங்கள் வீட்டுக் கணினியை இயக்க

இணையத்தள மூலமாக உங்கள் வீட்டுக் கணினியை இயக்க

TweetMyPC நீங்கள் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் வீட்டுக் கணினியை இயக்குவதை சாத்தியமாக்கிறது.
இணையத்தளமூடக உங்கள் வீட்டுக் கணினியை இயக்க இது உதவுகிறது இந்தTweetMyPC .
TweetMyPC வேறு இடத்தில் நீங்கள் இருந்தாலும் Twitter ஊடாக உங்கள் கணினியை இயக்க உதவுகிறது.
1. இதற்காக வெறுமேனே உங்கள் கணினியில் இந்த செயலியை தறவிறக்கம்( Download) செய்யவும்..
2. பின்னர் www.Twitter.com என்ற தளத்துக்கு சென்று புதிய டியூட்டர் (Twitter) கணக்கு ஒன்றை ஆரம்பிக்கவும். இக் கணக்கு TweetMyPC க்கு மட்டும் பிரத்தியோகமானது
{Go to www.Twitter.com and create a new Twitter account for your PC (This is optional as TweetMyPC only responds for updates). This account will be used by TweetMyPC to monitor for new tweets}
3. உங்கள் பயனாளர் கணக்கை பெயர் , கடவுச்சொல் கொடுத்து  TweetMyPC இயக்கவும்.  சற்று தாமதித்து இரட்டை சொடுக்குகள் மூலம் Twitter ஐ இயக்கி TweetMyPC ஐ ஆரம்பிக்கவும்.
{Start TweetMyPC and then fill in the login details. Wait for some time for the application to verify your login details & Double click the Twitter Icon to start TweetMyPC }
அதே பயனாளர் கணக்குடன் எங்கிருந்தாவது உள் நுளையும்போது உங்கள் கணினியை நிறுத்தவோ ( Shutdown ) செய்யவோ மீள் ஆரம்பம்(Restart) செய்யவோ முடிகிறது.
சிறுவர் கூட இதை எளிதாக செயல்படுத்தலாம்
http://tweetmypc.en.softonic.com/

பெரிய (1GB) கோப்புகளை (File) அனுப்ப

பெரிய (1GB) கோப்புகளை (File) அனுப்ப

நாங்கள் ஒரு பெரிய கோப்புக்களை (File) மின்னஞ்சலில் அனுப்ப மிகவும் தடுமாறுகிறோம்.ஒரு கட்டணம் செலுத்தாமல் yahoo,  gmail, hotmail போன்றவை 10MB க்கு மேல் பொதுவாக அனுமதிப்பதில்லை.
அதற்கு மிகப்பெரிய வசதிகளை தருகிறது கட்டணம் செலுத்தாத ஒரு தளம் SendTool என்ற தளம் இதற்கு உதவிபுரிகிறது.
SendTool மூலம் உங்கள் கோப்புகளையும்(File) படங்களையும் ஏற்றிவிட்டு( upload) கிடைக்கும் தரையிறக்க சுட்டிகளை( Download link) மட்டும் நண்பருக்கு மின்னஞ்சலில் அனுப்புங்கள்..
இங்கு கடவுச்சொல் வசதியும் உண்டு (password)
SendTool eliminates the limitations of sending email attachments.
Send files of any type and any size (up to 1GB).After submitting the form above, you will receive a download link that anyone can use to download your file.

ஒரே நேரத்தில் அனைத்து தளங்களிலும் பதிவேற்றம் செய்ய

ஒரே நேரத்தில் அனைத்து தளங்களிலும் பதிவேற்றம் செய்ய
இணையத்தில் கோப்புக்களையோ (Files) அல்லது அதிகளவான படங்கள் மற்றும் மென்பொருட்களை (Softwares) பகிர்ந்து கொள்ள இந்த தளத்தை பயன்படுத்தலாம்.
ஒரே நேரத்தில் பல தளங்களுக்கு தரவேற்றப்படுகிறது (Uploading).
பின்னர் அதற்குரிய இணைப்புக்களை (Links) பெற்றுக்கொள்ளபடுதல் மூலம் அதை மற்றவர்களுக்கு  பகிர்ந்து(share) கொள்ளலாம். பின்னர் தேவை ஏற்படும் போது  உலகின் எந்த மூலையில் இருந்தாலும் குறிப்பிட்ட இணைப்புக்கள்( Links) மூலம் தரையிறக்கி கொள்ளலாம்(Download).
ஆகக்கூடியது 100MB அளவு தரையேற்றலாம்.(Upload).
சில நாடுகளில் சில இணைப்புக்கள்  ( Links ) தடைசெய்யப்பட்டு இருந்தால் இதன் மூலம்  கோப்புக்களை(Files) பரிமாறிக்கொள்ளலாம்.
தளத்தின் இணைய முகவரி   http://www.mirrorcreator.com/

இணையத்தில் குழந்தைகளை பாதுகாப்பதற்கு

இணையத்தில் குழந்தைகளை பாதுகாப்பதற்கு
இன்றைய உலகில் கற்றுக் கொள்வதற்கும் அறிவுத் தேடலுக்கும் முதல் தேவை இணைய இணைப்பும், இணையத் தேடலும் தான்.
இதில் அபாயம் தரும் இன்னொரு பக்கமும் உள்ளது. முற்றிலும் கட்டற்ற இணையம் சிறுவர்களுக்கு அபாயகரமானது.
பாலியல் தளங்களும், வன்முறையை போதிக்கும் தளங்களும் இணையத்தில் நிறைந்து கிடக்கின்றன. இவற்றைப் பார்க்காதே என்று ஒரு காவலாளி போல சிறுவர்களை எந்நேரமும் கட்டுப்படுத்துவது இயலாது.
மேலும் வரையறைகளை அமைப்பது இன்றைய டிஜிட்டல் உலகில் பெற்றோர்களுக்கும் சற்று சிரமமான செயல்பாடாக உள்ளது. இயலாததும் கூட. பெற்றோர் தடை இடுகையில் அதனை மீற வேண்டும் என்ற இயல்பு சிறுவர்களுக்கு இயல்பாகவே தோன்றுவது இயற்கையே.
இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க K9 Web Protection என்னும் புரோகிராம் நமக்கு உதவுகிறது. இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் இந்த புரோகிராம், வீடுகளில் பயன்படுத்தும் கணணிகளில் இணையத்தில் பெற்றோர் கட்டுப்பாடு விதிக்க உதவுகிறது.
உங்கள் பெர்சனல் கணணிகளில் உள்ள இணையத்தை உங்கள் கட்டுப்பாட்டிலேயே நீங்கள் அருகில் இல்லாத சூழ்நிலையிலும் வைத்திருக்க உதவுகிறது. உங்கள் குழந்தைகளை இணையம் தரும் தீமைகளிலிருந்து பாதுகாக்க உதவிடும் இதன் சிறப்பம்சங்களாவன:
1. பாலியல், போதை மருந்து, தனிநபர் டேட்டிங், வன்முறையைப் போதிப்பது, வெறுப்பினை வளர்ப்பது, இனவேறு பாட்டினைத் தூண்டுவது என 70க்கும் மேற்பட்ட பல்வேறு பிரிவுகளாக இணைய தளங்களைப் பிரித்து வைத்து தடுக்கலாம்.
2. குழந்தைகளின் வயதின் அடிப்படையில் தடுப்பு நிலைகளை அமைக்கலாம்.
3. அனைத்து தேடல் சாதனங்களிலும் SafeSearch என்ற ஒன்றை இயக்கி வைக்கலாம்.
4. குறிப்பிட்ட நேரத்தில் இணையத் தொடர்பினை ஏற்படுத்த இயலாமல் செட் செய்திடலாம்.
5. எப்போதும் அனுமதி மற்றும் எப்போதும் தடை செய்திடு என இருவகைகளாக இணையதளங்களைப் பிரித்து அமைக்கலாம்.
6. பெற்றோர் அமைத்திடும் கடவுச்சொல், மற்ற கடவுச்சொற்களையும் மீறி இருக்கும் வகையில் அமைக்கலாம்.
7. கணணி தொழில்நுட்பம் சற்று அதிகம் தெரிந்து பயன்படுத்துபவர்கள் கூட மீட்டெடுக்க முடியாத தடைகளை உருவாக்கலாம்.
8. தடை செய்யப்பட்ட தளங்களைப் பார்த்தால் அது குறித்த அறிக்கை தரும்படி அமைத்திடலாம்.
8. விண்டோஸ் மட்டுமின்றி மேக் கணணிகளிலும் இயங்கும் வகையிலும் இது தரப்படுகிறது.
K9 Web Protection என்ற இந்த புரோகிராம், மைக்ரோசாப்ட் விண்டோஸ் 7, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் எக்ஸ்பி, மேக் ஓ.எஸ். எக்ஸ் 10.4.7 மற்றும் அதற்கும் மேற்பட்ட சிஸ்டங்களில் இயங்குகிறது.
இதனை தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்திட முயற்சிக்கையில் லைசன்ஸ் கீ தரும்படி இந்த புரோகிராம் கேட்கும். லைசன்ஸ் கீயினை இலவசமாக http://www1.k9webprotection.com/ என்ற முகவரியில் உள்ள இணையதளத்தில் பெற்றுக் கொண்டு பயன்படுத்தலாம்.
இதே இணைய பாதுகாப்பு ஐ-போன், ஐ-பாட் டச் மற்றும் ஐ-பேட் ஆகிய சாதனங்களில் பயன்படுத்தும் வகைகளிலும் கிடைக்கிறது. இவற்றிற்கான அப்ளிகேஷன் ஸ்டோர்களில் k9 என டைப் செய்து தேடிப் பார்த்து தரவிறக்கம் செய்து நிறுவச் செய்திடலாம்.

இணையத்தில் Bible படிக்க உதவும் இணையதளம்.

இணையத்தில் Bible படிக்க உதவும் இணையதளம்.

ஒரு நல்ல இணையதளம் எப்படி இருக்க வேண்டும் என்று உதாரணம் காட்டக்கூடிய தளங்களின் வரிசையில் இ பைபிள் தளத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.அந்த அளவுக்கு உள்ளடக்கம் மற்றும் வடிவமைப்பு இரண்டிலுமே இந்த தளம் சிறந்து விளங்குகிறது. இ பைபில் அடிப்படையில் கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளின் இ புத்தக வடிவம் தான் என்ற போதிலும்,அதோடு இணையத்தில் பைபிள் சார்ந்த தளங்களுக்கு குறைவில்லை என்ற போதிலும் தோற்றத்திலும் சரி,பயன்பாட்டிலும் சரி மிகச்சிறந்த தளம் என்னும் எண்ணத்தை மிக எளிதாக ஏற்படுத்தி விடுகிறது.
பைபில் என்றதுமே கிறிஸ்துவர்களிலேயே கூட ஆன்மிக சிந்தனை கொன்டவர்கலுக்கு மட்டுமே ஆர்வம் ஏற்படலாம் என்ற போதிலும் இந்த தளம் இணையவாசிகளின் கவனத்திற்குறியது.
காரணம் வாசிப்பு அனுபவத்தை எந்த அளவுக்கு எளிமையாக்கி மேம்படுத்தி தர முடியும் என்பதற்கான உதாரணமாக இருக்கிறது.
பைபிலுடன் உங்களை மேலும் ஒன்றிப்போக செய்ய உதவுவதாக சொல்லும் இந்த தளம் உண்மையிலேயே அதனை மிக அழகாக செய்கிறது.
இணையத்தில் பைபிலை படிக்க விரும்பினால் எண்ணற்ற தளங்கள் இல்லாமல் இல்லை.ஆங்கிலத்தில் அதிகம் பதிப்பிக்கப்பட்ட புத்தகம் அல்லவா,இணையத்திலும் பைபிலுக்கு என்று அதிக தளங்கள் இருக்கின்றன.
இந்த தளங்களில் பைபிள் புத்தகம் பலவிதங்களில் வாசிக்க கிடைத்தாலும் இணைய வாசிப்புக்கு அவை ஏறதாக இல்லை என்றே சொல்ல வேண்டும்.முதல் பிரச்சனை பைபில் தளங்களின் வடிவமைப்பு சிக்கலானதாகவும் குழப்பத்தை ஏறப்டுத்தக்கூடியதாகவும் இருக்கின்றன.இரண்டாவது பிரச்ச்னை பைபிள் வாசகத்துக்கு அருகே இடைசெருகலாக வரும் விளம்பரங்கள் கவனத்தை சிதற வைக்ககூடும்.
இந்த இடைஞ்சல்கள் எல்லாம் இல்லாமல் பைபிளை மட்டும் படிக்க முடிந்தால் எப்படி இருக்கும்?அதை தான் இ பைபில் செய்கிறது.
இபைபில் தளத்தில் புத்தகம் பகுதியை கிளிக் செய்தால் வேதாகமத்தின் அனைத்து அத்தியாயங்களும் தோன்றுகின்றன.எந்த அத்தியாயம் தேவையோ அதை கிளிக் செய்து வாசிக்க துவங்கலாம். ஒவ்வொரு அத்தியாயத்திலும் மிக அளிதாக படிக்க கூடிய வகையில் வாசகங்கள் இடம்பெறுகின்றன.தோற்றம் ,எழுத்துரு என் எல்லாவற்றிலும் எளிமையும் தெளிவும் நெஞ்சை அள்ளுகின்றன.
ஒரு அத்தியாயத்தில் இருந்து இன்னொரு அத்தியாயத்திற்கு செல்வது மிகவும் சுலபம்.அதே போல விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடர்வதும் சுலபம்.இத்தகைய எளிமையான மின் புத்தக வடிவத்தை வேறு எங்கும் பார்த்ததில்லை என்றே சொல்லலாம்.
பைபிளை பல்வேறு மொழிகளிக் படிக்கும் வசதியும் இருக்கிறது.படித்து கொண்டிருக்கும் போதே அதே பக்கத்தில் குறிப்புகலை எழுதி வைக்கலாம்.மனதுக்கு பிடித்த வரிகளை அடிக்கோடிடலாம்.பைபில் தொடர்பான அறிஞர்களின் கருத்துக்களையும் அணுகலாம்.
மேலும் பைபிள் வாசகங்களை அப்படியே வலைப்பதிவு போன்றவற்றிலும் இடம் பெற வைக்கலாம்.
இணையத்தில் பைபில் படிக்க இதைவிட நல்ல தளம் இல்லை என்றே சொல்லலாம்.
பெரும்பாலான பைபிள் தளங்கள் விளம்ப்ர இடைஞ்சல்களோடு படிக்க இனிமையான அனுபவமாக இல்லாமல் இருப்பதால் வெறுத்து போய் இந்த தளத்தை உருவாக்கியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதில் வெற்றி பெற்றுள்ளனர் என்பதற்கு இந்த தளமே சாட்சியாக நிற்கிறது.
திருக்குறளில் துவங்கி கம்பராமாயணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களுக்கு இதே போன்ர இனிமையான வாசிப்பு அனுபவத்தை தரக்கூடிய தளத்தை அமைத்தால் நன்றாக இருக்கும்.
இணையதள முகவரி

கணணியில் உள்ள தேவையில்லாத கோப்புகளை நீக்குவதற்கு

கணணியில் உள்ள தேவையில்லாத கோப்புகளை நீக்குவதற்கு
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பதிற்க்கு ஏற்ப நம் கணணியையும் பாதுகாப்பாக வைத்து கொள்வது நல்லது.
நம் கணணியில் உள்ள தேவையில்லாத கோப்புகளை அழிக்க நம்மில் பெரும்பாலானோர் CCleaner என்ற இலவச மென்பொருளை உபயோகித்து கொண்டு இருக்கிறோம்.
கணணியில் வேண்டாத கோப்புகள், குக்கீஸ்களை மற்றும் இதர தேவையில்லாத கோப்புகளை கணணியில் இருந்து முற்றிலுமாக நீக்க உலகளவில் அனைவரும் விரும்பி உபயோகப்படுத்துவது இந்த CCleaner என்ற இலவச மென்பொருளாகும்.
இது உபயோகிப்பதற்கும் மிகவும் சுலபம் மற்றும் பயனும் அதிகம் என்பதால் அனைவரும் இதை உபயோகிக்கின்றனர்.
புதிய பதிப்பில் உள்ள பயன்கள் சில:
1. Windows8 கணணியிலும் சப்போர்ட் செய்யும் படி அமைத்து உள்ளனர்.
2. Recycle bin ல் இருந்து குப்பைகளை நீக்குவதில் இருந்த குறைபாடுகள் நீக்கப்பட்டுள்ளது.
3. Thunderbird மென்பொருளில் Cache நீக்குவதில் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.
4. Safari உலவியில் Browsing History Clean செய்வதில் இருந்த குறைகள் கலைப்பட்டுள்ளது.
5. Office 2007 மற்றும் Office 2010 போன்ற மென்பொருட்களில் மூலம் உருவாகும் சில வேண்டாத கோப்புகளை நீக்குகிறது.
6. Windows மற்றும் MAC கணணிகளில் இயங்குகிறது. 32bit-64bit ஆகிய இரண்டிலும் வேலை செய்யும்.
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்தவுடன் அந்த மென்பொருளை ஓபன் செய்தால் ஒரு விண்டோ வரும். அதில் உள்ள Analyze என்ற பட்டனை அழுத்தவும்.
இப்பொழுது உங்கள் கணணியில் உள்ள நீக்க வேண்டிய கோப்புகள் அனைத்தும் உங்களுக்கு ஸ்கேன் ஆகி வரும். அதற்கு அருகில் உள்ள Run Cleaner என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்கள் கணணியில் உள்ள அனைத்து தேவையில்லாத கோப்புகளும் அழிந்து விடும்.
உங்களுக்கு Cleaning Complete என்ற செய்தி வரும். அவ்வளவு தான் உங்கள் கணணி சுத்தம் செய்யப்பட்டு விட்டது.
தரவிறக்க சுட்டி

கணணியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு

கணணியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு
நீங்கள் அடிக்கடி சீடி பயன்படுத்துபவராக இருந்தால் இந்த சூழ்நிலையில் நீங்கள் என்றாவது சிக்கி இருப்பீர்கள்.
ஆம் உங்கள் சீடி கணணியின் சீடி டிரைவில் இருந்து வெளியே வராமல் உங்களை மோசமான நிலையில் சிக்க வைக்கும்.
எத்தனை முறை சீடி டிரைவின் எஜெக்ட் பட்டனை அழுத்தினாலும் அப்படியே டிரைவ் வெளியே வராமல் இருக்கும். இந்த சூழ்நிலையில் என்ன செய்தால் சீடி டிரைவ் திறக்கப்பட்டு சீடி வெளியே எடுக்கும்படி கிடைக்கும் என்பதனைப் பார்க்கலாம்.
முதலில் சீடி டிரைவ் திறக்கப்பட்டு சிடி இருக்கும் அந்த பிளாஸ்டிக் ட்ரே வெளியே நீண்டு வரவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். இந்த சூழ்நிலையை சமாளித்து சீடியை கீழ்க்காணும் வழிகளைக் கையாண்டு வெளியே எடுக்கலாம்.
வழி 1: மை கம்ப்யூட்டர் ஐகானில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் டெஸ்க்டொப்பில் இந்த ஐகான் இல்லை என்றால் நிச்சயம் ஸ்டார்ட் மெனுவில் இருக்கும். இதனைத் திறந்தவுடன் உங்கள் கணணியின் டிரைவ்கள் அனைத்தும் காட்டப்படும்.
இதில் Devices with removable stroage என்ற பிரிவில் சீடியின் படத்துடன் ஒரு ஐகான் இருக்கும். அல்லது சிக்கிக் கொண்ட சீடி ஏதேனும் ஒரு நிறுவனம் தந்துள்ள பேக்கேஜ் என்றால் நிறுவனம் தந்துள்ள ஐகானுடன் அந்த டிரைவ் காட்டப்படும்.
இதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் Eject என்ற பிரிவில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் சீடி டிரைவில் உள்ள எஜெக்ட் பட்டன் தேய்ந்து போய் நீங்கள் அழுத்துகையில் அதன் செயல்பாடு மேற்கொள்ளப்படாத சூழ்நிலையில் இந்த வழி செயல்படும். இதற்கும் சீடி டிரைவ் திறக்கவில்லை என்றால் அடுத்த வழியைப் பார்க்கலாம்.
வழி 2: பேப்பர் கிளிப் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். (ஜெம் கிளிப் என்றும் சிலர் இதனை அழைக்கின்றனர்) அதன் ஒரு முனையை பிரித்து நீட்டுங்கள். சீடி டிரைவின் எஜெக்ட் பட்டன் அருகே சிறிய துளை இருப்பதைக் காணுங்கள். நிச்சயம் இதுவரை நீங்கள் இதனைக் கண்டு கொள்ளாமல் இருந்திருப்பீர்கள்.
இப்போது நிச்சயம் இதன் உதவி வேண்டியதிருக்கிறது. இந்த துளையில் மெதுவாக பிரித்த பேப்பர் கிளிப்பின் சிறிய கம்பியை உள்ளே செலுத்தவும். சிறிது உள்ளே செலுத்தியவுடன் அது ஒரு இடத்திற்கு மேல் செல்லாது.
இந்த இடத்தில் சிறிய அளவில், மிகச் சிறிய அளவில் அழுத்தம் கொடுக்கவும். எஜெக்ட் செய்யும் போது இயங்கும் இன்டர்னல் லாக் உள்ள இடத்தில் இந்த அழுத்தம் கிடைப்பதால் டிரைவின் கதவு திறக்கும்.
உடனே சீடியை எடுத்துவிட்டு மீண்டும் டிரைவின் கதவினை மூடவும். மறக்காமல் பேப்பர் கிளிப் பின்னை எடுத்துவிடவும். ஏனென்றால் பலர் சீடி வெளியே வந்த சந்தோஷத்தில் பேப்பர் கிளிப்பைச் செருகியபடியே வைத்துவிடுவார்கள்.

விரைவாக மென்பொருள்களை தேடுவதற்கு ஒரு தளம்!

விரைவாக மென்பொருள்களை தேடுவதற்கு ஒரு தளம்!

கணினி என்று சொன்னால் நமக்கு முதலில் ஞாபகம் வருவது அதில் நிறுவப்படும் மென்பொருள்கள் தான். இணையத்தில் நாம் அதை தேடி கண்டுபிடித்து நிறுவிக்கொள்வோம்.
ஆனால் சில மென்பொருள்களை நாம் தேடுவது சற்று கடினமான விஷயம் அந்த நேரங்களில் நாம் தேடுபொறியின் உதவியை நாடுவோம். ஆனால் சில மென்பொருள்களை எப்படி தேடுவது என்று நமக்கு தெரியாது அந்த மாதிரியான தருணங்களில் நமக்கு ஒரு தளம் கைகொடுக்கும்.
இதுவும் ஒரு தேடுபொறி தான் ஆனால் இதில் முன்னிருப்பாக பல வகையான ஆன்லைன் சேவைகள் பட்டியலிடப் பட்டுள்ளது. ஒவ்வோற்றின் வகை மற்றும் இயல்பை பொறுத்து வகைபடுத்தப் பட்டு சேவைகள் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.
இதில் நீங்கள் எதாவது தேர்வு செய்தால் அதன் வகையை பொறுத்து உங்களுக்கு அதிகமாக பயன்படுத்தபடும் மென்பொருள் அல்லது வலைத்தளம் காண்பிக்கப்படும் அதை வைத்து நீங்கள் தேர்வு செய்யலாம்.
அதுமட்டுமல்ல நீங்கள் இதில் உங்கள் சாதனங்கள் மற்றும் இயங்குதளம் ஆகியவற்றை குறிப்பிட்டும் தேடலாம். நீங்கள் உங்கள் கைபேசிக்கான மென்பொருள் அல்லது உங்கள் ஐ-போனுக்கான மென்பொருள்களை மட்டும் தேடலாம்.
இந்த தளத்தில் ஒரு மென்பொருளை மற்ற மென்பொருளுடன் ஒப்பிட்டு காட்டுகின்றனர். இதில் நீங்கள் குறிச்சொற்கள் கொடுத்தும் தேடலாம் அதற்கும் இந்த நமக்கு உதவுகிறது.
தளத்திற்கு செல்லுவதற்கு : www.catchfree.com

ஒரே சமயத்தில் ஜந்துமொழிகளில் அர்த்தங்களை அறிந்து கொள்வதற்கு

ஒரே சமயத்தில் ஜந்துமொழிகளில் அர்த்தங்களை அறிந்து கொள்வதற்கு

ஒரே சமயத்தில் ஐந்துமொழிகளில் பொருட்களின் அர்த்தங்களை அறியலாம். இதற்கு உதவுவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது.
இதனை உங்கள் கணணியில் நிறுவியதும் ஒரு விண்டோ ஓபன் ஆகும். இதில் ஆங்கிலத்திற்கு எதிரில் உள்ள கட்டத்தில் நீங்கள் விரும்பும் ஆங்கில சொல்லினை தட்டச்சு செய்யவும்.
அதற்கு இணைய மற்ற மொழி சொற்கள் கீழே இடம்பெறுவதை காணுங்கள். சில சொற்கள் சரியான வார்ததைகளில் இல்லாதிருப்பின் அதற்கு இணையான ஆங்கில சொற்கள் உங்களுக்கு பாப்அப்மெனுவாக விரிவடையும்.
தேவையான ஆங்கில சொல்லை நாம் தேர்வு செய்துகொள்ளலாம். ஆங்கிலம் தவிர்த்து உங்களுக்கு இதர மொழிகள் தான் தெரியும் என்றால் இதில் உள்ள Source கிளிக் செய்து தேவையான மொழியை முதல் மொழியாக மாற்றிக்கொள்ளலாம்.
இணையதள முகவரி

கல்லூரி மாணவர்களுக்கு உதவும் இணையம்

கல்லூரி மாணவர்களுக்கு உதவும் இணையம்
பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் எடுத்துச் செல்ல வேண்டிய முக்கியமான பொருட்கள் என்னென்ன என்பதை விரிவாகவும் அனைவரும் புரியும் வண்ணம் பட்டியலிடுகிறது ஒரு தளம்.
சாதாரண பை வாங்குவதில் இருந்து ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து வாங்கும் நமக்கு நம் குழந்தைகள் கல்லூரிக்கு அடி எடுத்து வைக்கும் போது என்னென்ன பொருட்கள் எல்லாம் தேவை என்பதை முன்னமே நமக்கு விரிவாக தெரிவிப்பதற்காக ஒரு தளம் உள்ளது.
இத்தளத்திற்கு சென்று பள்ளிக்கு எடுத்துச்செல்ல வேண்டிய பொருட்கள் என்ன என்பதில் தொடங்கி நாம் விடுதியில் தங்குவதாக இருந்தால் என்ன பொருட்கள் எல்லாம் தேவைப்படும் என்பதை வகை வகையாக பிரித்து கூறி உள்ளனர்.
உதாரணமாக விடுதியில் நம் அறைக்கு தேவையான பொருட்கள் எவை என்பதை Room Items என்பதிலும் உடல் நிலைக்கு தேவையான பொருட்கள் என்ன என்பதை Health என்பதிலும் நம்மிடம் கணணி இருந்தால் நாம் எடுத்துச்செல்ல வேண்டிய பொருட்கள் என்ன என்பதை துல்லியமாக பட்டியலிடுகிறது.
இதில் நமக்கு தேவையான பொருட்களை சொடுக்கி அதை தேர்வு செய்யலாம். எல்லா பொருட்களையும் தேர்வு செய்து முடித்த பின் Print என்பதை சொடுக்கி பேப்பரிலும் வைத்துக் கொள்ளலாம்.
பொதுவாக வெளிநாட்டில் வசிப்பவர்களுக்குத் தான் இது பொருந்தும் என்பதில்லை. எவை எல்லாம் தேவை என்பதை முன்பே தெரிந்து கொண்டால் அதற்கு தகுந்தாற் போல் நாம் திட்டமிட்டுக் கொள்ளலாம் என்று எண்ணும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
இணையதள முகவரி

சோகங்களை பகிர்ந்து கொள்ள உதவும் இணையம்

சோகங்களை பகிர்ந்து கொள்ள உதவும் இணையம்
பேஸ்புக் யுகத்தில் டிவிட்டர் காலத்தில் எல்லாவற்றையும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள வழி இருக்கிறது.
ஆனால் நண்பர்களே இல்லாத நிலையில் இருப்பவர்கள் என்ன செய்வது? அதாவது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாத வலியும் வேதனையும் இருப்பவர்கள் நிலையை எண்ணி பாருங்கள்.
ஏதோ ஒரு பிரச்சனை வாட்டிக் கொண்டிருக்கும். பல காரணங்களினால் அவற்றை வெளியே யாரிடமும் சொல்ல முடியாமல் போகலாம் அல்லது தயக்கம் தடுக்கலாம் இல்லை மற்றவர்களிடம் சொன்னால் தவறாக எடுத்து கொள்வார்களோ என்று அஞ்சலாம்.
இத்தகைய நிலையில் இருப்பவர்களுக்காக என்றே ஒரு சமூக வலைப்பின்னல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. “விஸ்ஸ்டம்” என்னும் இந்த தளத்தின் மூலம் உள்ளத்தை வாட்டிக்கொண்டிருக்கும் சோக கதைகளை பகிர்ந்து கொண்டு ஆறுதல் அடையலாம்.
அடிப்பையில் இந்த தளம் தனியாக இருப்பதாக உணர்பவர்கள் தங்களை போலவே உள்ளவர்களோடு தொடர்பு கொள்வதற்கான வலைப்பின்னல் சேவை எனலாம்.
இந்த தளத்தில் பிரச்சனையை பகிர்ந்து கொள்பவர்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமலேயே பிரச்ச்னையை மட்டும் வெளிப்படுத்தலாம். எனவே நண்பர்களிடம் சொல்ல முடியாத விஷயத்தை கூட இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.
இப்படி பகிர்ந்து கொள்வதால் என்ன பயன்? ஒன்று மனதில் உள்ளதை இருக்கி வைத்தது போல இருக்கும். அதைவிட முக்கியமாக அதே பிரச்சனையில் அல்லது அதே போன்ற சூழலில் இருப்பவர்களை தொடர்பு கொள்ள முடியும் என்பது தான் இந்த சேவையின் தனிச்சிறப்பு.
அதாவது இந்த தளத்தில் ஒருவர் பிரச்சனையை பகிர்ந்து கொண்ட பின் அதே போன்ற பிரச்சனையை எதிர் கொண்டவரை தொடர்பு கொண்டு பேச முடியும்.
உதாரணத்திற்கு ஒருவர் மன முறிவின் வேதனையை அனுபவித்து கொண்டிருக்கும் பட்சத்தில் அவரைப்போலவே மனமுறிவுக்கு ஆளானவர் அல்லது அந்த சூழலை எதிர்கொண்டு மீண்டு வந்தவரோடு தொடர்பு ஏற்படுத்தி தரப்படுகிறது.
ஒரே படகில் பயணம் செய்பவர்கள் என்று சொல்வதை போல ஒரே சூழலில் இருப்பவர்கள் பேசும் போது மற்றவர் நிலையை எளிதாக புரிந்து கொள்ள முடியும் அல்லவா? மேலும் அந்த நிலையை எதிர்கொள்ள தேவையான ஆலோசனைகளையும் ஆறுதல் வார்த்தையையும் கூற முடியும் அல்லவா? இந்த அற்புதத்தை தான் இந்த தளம் சாத்தியமாக்குகிறது.
பிரச்சனையில் சிக்கி தவிப்பவர்களுக்கு தாங்கள் மட்டுமே அந்த நிலையில் இருப்பது போன்ற ஒரு உணர்வு இருக்கும் அல்லவா? அந்த உணர்வில் இருந்து விடுபட முதலில் உதவுகிறது இந்த தளம்.
தீராத கடன் தொல்லையோ, தலைமுடி உதிர்வதோ, மனமுறிவோ, தன்னம்பிக்கை குறைவோ, உடல் பருமனோ எந்த பிரச்சனை என்றாலும் சரி இந்த தளத்தில் அதனை பகிர்ந்து கொள்ளலாம். உடனே இந்த தளம் ஏற்கனவே சோகங்களை பகிர்ந்து கொண்டவர்களில் அதே நிலையில் இருப்பவர்களை கண்டுபிடித்து தொடர்பு ஏற்படுத்துகிறது.
அதன் பிறகு அவருடன் கருத்து பரிமாற்றத்தில் ஈட்டுபட்டு ஆறுதல் அடையலாம். கேள்விகள் கேட்டு ஆலோசனையும் பெறலாம். எல்லாவற்றுக்கும் மேல் ஒருவித நட்புணர்வு ஏற்பட்டு நமக்கென துணை இருக்கும் தெம்பை பெறலாம்.
ஒரே போன்ற பிரச்சனையில் இருப்பவர்கள் என்றாலும் ஒவ்வொருவரது கோணமும் அணுகுமுறையும் வேறுவேறாக இருக்கும். அவற்றையும் அலசிப்பார்த்து எல்லாவிதங்களிலும் ஒத்து போகிறவர்களை இணைத்து வைக்கிறது இந்த தளம்.
பகிர்வதற்கு முன்பே இந்த தளத்தில் தங்கள் பிரச்சனையை குறிப்பிட்டு அதே பிர்ச்சனையால் பாதிக்கப்பட்டவர்களையும் தொடர்பு கொள்ளலாம். யாரிடமாவது சொல்லி புலம்ப மாட்டோமா என நினைத்து கொன்டிருப்பவர்களுக்கு இந்த தளம் உற்ற நண்பனாக வழிகாட்டும்.

கணணியில் உள்ள வன்பொருள்களின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு

கணணியில் உள்ள வன்பொருள்களின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு

புதியதாக கணணி வாங்கியவர்கள் அதில் உள்ள வன்பொருள் சாதனங்களை கண்டு மிரட்சியடைவார்கள்.
சிபியு, மதர்போர்ட், ராம், கிராப்பிக்ஸ், சவுண்ட்கார்ட், ஓபரேடிங் சிஸ்டம், மவுஸ், கீ-போர்ட், நெட் ஒர்கிங், பிரிண்டர் என விதவிதமான பெயர்கள் கேட்டு ஆச்சர்யமடைவார்கள்.
ஒவ்வொன்றின் விவரங்களையும் எளிதில் அறிந்துகொள்ள இந்த சின்ன மென்பொருள் உதவுகின்றது. 916 கே.பி அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
இந்த மென்பொருளை நிறுவியதும் உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். அதில் 5 விதமான பகுதிகள் இருக்கும். இதில் உள்ள Start கிளிக் செய்தால் உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். இதில் சிபியு, மதர்போர்ட், பயாஸ் போன்ற விவரங்கள் கிடைக்கும்.
அடுத்த லெவல் செல்ல உங்களுக்கு ராம் மெமரி விவரங்களும் அடுத்த லெவலில் உங்கள் கணணியில் உள்ள வீடியோ காரட், சவுண்ட் காரட்மற்றும் ஸ்டோரெஜ் டிவைஸ் போன்ற விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
அடுத்த லெவலில் உங்களுக்கு உங்கள் கணணியில் நீங்கள் நிறுவியுள்ள ஓபரேடிங் சிஸ்டம், ஆப்டிகல் மீடியா, கீபோர்ட் மற்றும் மவுஸ் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

ஆன்லைனில் வீடியோக்களை எடிட் செய்வதற்கு

ஆன்லைனில் வீடியோக்களை எடிட் செய்வதற்கு
நம்மிடம் இருக்கும் வீடியோ கோப்புகளை எடிட் செய்ய வேண்டுமானால் வீடியோ எடிட்டிங் மென்பொருளை கண்டிப்பாக நிறுவியிருக்க வேண்டும்.
ஒரு சில வீடியோக்களை தான் எடிட் செய்ய வேண்டும் இதற்காக பெரிய தொகைக்கு வீடியோ எடிட்டிங் மென்பொருள் எல்லாம் வாங்க வேண்டாம், ஆன்லைன் மூலம் இத்தளத்திற்கு சென்று நம்மிடம் இருக்கும் வீடியோக்களை எளிதாக இலவசமாக எடிட் செய்யலாம்.
இத்தளத்திற்கு சென்று நமக்கென்று ஒரு இலவசப்பயனாளர் கணககு உருவாக்கி கொண்டு உள்நுழையலாம். வீடியோவை ஓடியோவாக மாற்ற வேண்டும் அல்லது ஏற்கனவே இருக்கும் வீடியோவிற்கு ஓடியோ மாற்ற வேண்டும், வீடியோவில் தேவையான பகுதியை வெட்ட சேர்க்க, வீடியோவீடியோவிற்கு வாட்டர்மார்க்கிங்(Water Marking) சேர்க்க, வெப் கமெரா மூலம் எடுக்கப்படும் வீடியோக்களை எடிட் செய்து விரும்பிய போர்மட்டு மாற்றலாம்.
இப்படி வீடியோ எடிட்டிங் மென்பொருள் செய்யும் அத்தனை சேவைகளையும் நாம் இத்தளத்தின் மூலம் செய்யலாம். 600 MB வரை உள்ள கோப்புகளை நாம் பயன்படுத்தலாம்.
எல்லா சேவைகளையும் இலவசமாகவே இத்தளம் கொடுக்கிறது, யூடியுப்-ம் வீடியோ கோப்புகளை எடிட் செய்யும் சேவையை கொடுக்கிறது. யூடியுப் காட்டிலும் இதில் சேவைகளை பயன்படுத்துவது எளிதாக இருக்கிறது.

கணனியில் இலவசமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க!!

கணனியில் இலவசமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க!!
உங்கள் கணனியின் மூலமாகவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இலவசமாக பார்த்து இரசிக்க ஒரு மென்பொருள் உள்ளது. இணையவசதி மட்டும் இதற்கு போதுமானது. இதில் நீங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பது முற்றிலும் இலவசம் . இதில் நீங்கள் தமிழ் உட்பட உலகின் பல்வேறு மொழிகளில் நிகழ்ச்சிகளை நீங்கள் இலவசமாக பார்க்கலாம். இந்த மென்பொருளினை தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் நிறுவிக்கொள்ள வேண்டும். இதில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உட்பட பல மொழி நிகழ்ச்சிகளை பார்க்கலாம். மேலும் முக்கியமாக உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை நீங்கள் உங்கள் கணனியில் சேமித்து வைத்து கொள்ளலாம்.
DOWNLAOD

நாடுகளின் இணையவேகம்: சுவாரஸ்ய தகவல்


பிரபல இணையம் தொடர்பான தகவல்களை வழங்கி வரும் பெண்டோ நெட்வேர்க்ஸ் எனப்படும் நிறுவனம் உலக நாடுகளின் சராசரி இணைய வேகம் தொடர்பில் ஆய்வொன்றினை மேற்கொண்டது.

சுமார் 224 நாடுகளின் இணைய வேகம் மற்றும் தரவிறக்கம் பூர்த்தியாக எடுக்கும் நேரம் என்பனவற்றை ஆராய்ந்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வானது இவ்வருடம் ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் 20 மில்லியன் கணனிகளில் இருந்தான 27 மில்லியன் தரவிறக்கங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி உலகநாடுகளின் சராசரி தரவிறக்க வேகம் 580 kpbs ஆகும்.

பல சுவாரஸ்யமான தகவல்கள் இவ்வாய்வின் போது வெளியாகியுள்ளன.

ஆம், இப்பட்டியலில் முதலிடத்தினை ஓர் ஆசிய நாடு தனதாக்கிக் கொண்டுள்ளது. அது தென் கொரியாவாகும். அமெரிக்காவிற்கு கிடைத்திருப்பது 26 ஆவது இடமாகும். அமெரிக்காவில் வேகம் வெறும் 616 kpbs. இவ்வாய்வின்படி 2 ஆம் இடத்தினை ருமேனியாவும் 3 ஆம் இடத்தினை பல்கேரியாவும் பிடித்துள்ளன.

முதல் 15 இடங்களுக்குள் ஐரோப்பிய நாடுகளே அதிகம் இடம்பிடித்துள்ளன. ஆய்வின் முடிவுகளுடன் கூடிய வரைபடம்.

இலங்கையின் வேகம் 89 kbps. எமது நாட்டின் வேகத்தினை விட நைஜீரியா, அங்கோலா, அல்ஜீரியா, நைகர், சம்பியா ஆகிய நாடுகளின் வேகம் அதிகம்.

தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைந்த கனடா, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு முதல் 15 இடங்களுக்குள் வர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

70 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய கப்பலில் 240 தொன் வெள்ளி

சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய இங்கிலாந்து கப்பலில் 240 தொன் வெள்ளி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1940ஆம் ஆண்டு டிசம்பரில் எஸ்.எஸ்.கெய்ர்சப்பா என்ற இங்கிலாந்து கப்பல் இந்தியாவிலிருந்து புறப்பட்டு இங்கிலாந்தின் லிவர்பூல் நகருக்கு சென்றது. கப்பலில் 240 தொன் வெள்ளி, இரும்பு மற்றும் தேயிலை ஆகியவை ஏற்றப்பட்டிருந்தன.

கப்பல் 1941, பெப்ரவரி 17ல் அயர்லாந்து நாட்டின் தென்மேற்கு பகுதிக்கு 300 மைல் தொலைவில் வந்த பொழுது பருவநிலை மற்றும் எரிபொருள் இல்லாமை ஆகியவற்றால் தத்தளித்து கொண்டிருந்தது. அது 2ஆம் உலக போர் நடைபெற்று கொண்டிருந்த சமயம்.

அதனை நடுக்கடலில் வைத்து ஜெர்மனி நாட்டின் நீர்மூழ்கி கப்பலான யு101 தாக்கி மூழ்கடித்தது. இதில் ஒருவரை தவிர கப்பலில் இருந்த 85 பேர் கொல்லப்பட்டனர்.

தற்போது இந்த கப்பல் அட்லாண்டிக் கடற்படுகையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் 155 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ஸ் மதிப்பிலான வெள்ளி இருப்பது தெரிய வந்துள்ளது.

உலகின் 2வது அதி உயரமான சூரிய சக்திக் கோபுரம்

உலகின் 2வது அதி உயரமான சூரிய சக்திக் கோபுரம்
 

2வது அதி உயரமான சூரிய சக்திக் கோபுரம் அரிசோனா பாலைவனத்தில் நிறுவப்படவுள்ளது. இது சுமார் 2600 அடி உயரமான புகைபோக்கியுடன் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 200 மெகாவாட் மின்சாரத்தினை உற்பத்தி செய்யமுடியும் மேலும் இதன்மூலம் சுமார் 150,000 வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தினை உருவாக்கமுடியும் எனவும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இத்திட்டமானது என்விரோ மிஷன் என்ற நிறுவனத்தினால் அமைக்கப்படவுள்ளது. இதனைக் கட்டி முடிப்பதற்கு 700 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் 1500 புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாகுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. சூரிய சக்தி, விசையாழிகள் மற்றும் உயரமான புகைபோக்கி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது. இத்திட்டமானது சூழலை பாதிக்காத, செயற்திறன் வாய்ந்த சக்தி மூலம் எனஇதனை உருவாக்கவுள்ள நிறுவனத்தினர் பெருமையுடன் தெரிவித்துள்ளனர்.

அழியாக் காதலின் அடையாளமாக தாஜ்மஹால்

சரியாகக் கவனிக்கப்படாவிடில் தாஜ்மஹால் இன்னும் 5 வருடங்களில் உடைந்து வீழ்ந்து விடுமென சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

அதன் அஸ்திவாரம் சிதைவடைந்து வருவதாகவும் ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தாஜ்மஹாலின் தூபிகளும் உடைந்து விழும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மொகலாயப் பேரரசினால் நிர்மாணிக்கப்பட்ட தாஜ்மஹால் 358 வருடங்கள் பழமை வாய்ந்தது.

காதலின் சின்னமாகவும், இந்தியாவின் முக்கிய சுற்றுலாத்தளமாகவும் இது திகழுகின்றது.

வருடாந்தம் 40 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இதனைப் பார்வையிட இந்தியாவிற்கு வருகின்றனர்.

கணணியில் எவ்வளவு நேரம் பணிபுரிந்தோம் என்பதனை அறிந்து கொள்வதற்கு

கணணியில் எவ்வளவு நேரம் பணிபுரிந்தோம் என்பதனை அறிந்து கொள்வதற்கு
 

நாம் கணிணியில் எந்த அப்ளிகேஷனில் பணிபுரிந்தாலும், விளையாட்டினை விளையாடினாலும், இணைய இணைப்பில் தளங்கள் பார்த்தாலும் மொத்த விபரங்களையும் எளிதில் அறிந்து கொள்ளலாம்.
அதுமட்டும் அல்லாமல் எந்த எந்த அப்ளிகேஷனில் எவ்வளவு நேரம் பணிபுரிந்தோம் என்பதனையும் துல்லியமான நேரம் முதற்கொண்டு அறிந்து கொள்ளலாம்.

6 எம்.பி.கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். நீங்கள் இதனை நிறுவியதும் ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். இதில் கணணி யூசேஜ் பச்சை நீறத்தில் வந்து விடும். சிகப்பு நிறம் கணணி உபயோகம் இல்லாத நேரத்தினை குறிக்கும்.

நீங்கள் எந்த எந்த அப்ளிகேஷன்களை எவ்வளவு நேரம் உபயோகித்தீர்கள் என இதில் உள்ள சார்ட் வைத்து எளிதில் அறிந்து கொள்ளலாம். எந்த எந்த அப்ளிகேஷனை நீங்கள் திறந்து பார்த்தீர்கள் என அறிந்து கொள்ளலாம்.

இதில் நேரத்தினையும் செட் செய்து விடலாம். இது தவிர அன்றைய பொழுதில் நீங்கள் எவ்வளவு நேரம் கணணியில் பணிபுரிந்தீர்கள் என்பதனையும் அறிந்து கொள்ளலாம்.

நீங்கள் அப்ளிகேஷன் டேபில் கர்சரை கொண்டு செல்ல எந்த இடத்தில் நீங்கள் எந்த அப்ளிகேஷனை பயன்படுத்தினீர்கள் என்கின்ற விவரம் தெரியும்.

வேலை தேட கைகொடுக்கும் இணையதள‌ம்.

வேலை தேட கைகொடுக்கும் இணையதள‌ம்.
வேலை தேடுபவர்களுக்கு பயோ டேட்டாவின் முக்கியத்துவம் நன்றாகவே தெரியும்.நல்ல வேலை கிடைப்பது நல்ல பயோடேட்டாவை சார்ந்தே இருக்கிறது. பயோ டேட்டா பளிச் என்று பக்காவாக இருந்தால் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்பதும் வேலை தேடும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.

ஆனால் பலருக்கும் தெரியாத விஷயம் பக்காவான பயோடேட்டாவை தயாரிப்பது எப்படி என்பது தான்!

அதிலும் புதிதாக வேலை தேடுபவர்களுக்கு இந்த குழப்பம் அதிகமாகவே இருக்கும்.

நல்ல பயோடேட்டாவிக்கு என்று எழுதப்படாத விதிகள் எதுவும் இல்லாவிட்டாலும் பலவித குறிப்புகளும் ஆலோசனைகளும் கொட்டிக்கிடக்கின்றன.இவை மேலும் குழப்பலாம்.
பயோடேட்டா விரிவாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுவதை தவறாக புரிந்து கொண்டு பக்கம் பக்கமாக பயோடேட்டாவை தயார் செய்தால் அது எதிர்பார்த்த பலனை தர வாய்ப்பில்லை.அதே போல கூடுதல் அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதற்காக ,குணா பட கமல் பாட்டு போல கொஞ்சம் மானே தேனே போட்டு கொள்ளுங்கள் என்று எதையாவது சேர்த்து கொண்டால் பயோடேட்டா பயோடேட்டாவாக இருக்காது.
பயோடேட்டா நிறுவன அதிகாரியை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக அதில் அலங்காரங்க‌ளையும் பொய்யான தகவல்களையும் இடம்பெற வைக்க வேண்டியதில்லை.
நிற்க இந்த பதிவு நல்ல பயோடட்டாவை உருவாக்குவது எப்படி என்று வழிகாட்டுவடதற்கானது அல்ல;அதற்காக என்றே உருவாக்கப்பட்டுள்ள இணையதளமான ரெஸ்யும் பேக்கிங்கை அறிமுகம் செய்வதற்கானது.

பக்காவான ,செயல்திறன் மிக்க பயோடேட்டாவை உருவாக்கி கொள்ள உதவுவதாக கூறும் இந்த தளம் மிக அழகாக அதனை செய்தும் த‌ருகிற‌து.அதையும் சுலபமாக,உடனடியாக செய்து தருகிறது.

இந்த தள‌த்திற்கு வந்த பின் ஒரு ந‌ல்ல பயோடேட்டா எப்படி இருக்க வேண்டும் என்ற கவலையோ குழப்பமோ தேவையில்லை.அதை இந்த தளம் பார்த்து கொள்கிறது.

வேலை தேடுபவரின் நோக்கம் ,கல்வி தகுதி,பணி அனுபவம் போன்ற‌ விவரங்களை சமர்பித்தால் போதும் அதை கொண்டு அழகான பயோடேட்டா ரெடியாகி விடுகிற‌து.பயோடேட்டாக்களுக்கு என்று நாலைந்து வகையான பொதுவான டெம்ப்லேட்கள் இருக்கின்ற‌ன.அவற்றில் விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம்.
அதற்கு முன்பாக பாயோடேட்டாக்களின் மாதிரியை பார்த்து கொள்ள்லாம்.துறைவாரியாக சம்பிக்கப்பட்ட பயோடேட்டாக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.எல்லாமே ஒரே பக்கம் மட்டுமே இருக்கின்றன.ஆனால் மூர்த்தி தான சிறியதே தவிர கீர்த்தி பெரிது தான்.அந்த ஒரு பக்கத்திலேயே வேலைக்கு விண்ணபிப்பவர் பற்றி தெரியவேண்டிய அனைத்து விவரங்களும் வந்து விடுகின்ற‌ன.

பயோடேட்டா என்பது வேலை தேடுபவரின் அறிமுக அட்டை என்றால் இந்த தளம் உருவாக்கி த‌ருபவை அதை கச்சிதமாக நிறைவேற்றுகின்றன.
ஆக பக்காவான பயோடேட்டாவை வெகு சுலபமாக இந்த தளத்தின் மூலம் உருவாக்கி கொண்டு விடலாம்.இது முதல் படி தான்.இந்த பக்காவான பயோடேட்டாவை அப்படியே அச்சிட்டு கொள்ளலாம்.பிடிஎப் கோப்பாக மாற்றிக்கொள்ள‌லாம்.இணையத்தின் மூலம் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் தள‌ங்கள் மூலம் பகிர்ந்து கொள்ள‌லாம்.‌

ப‌யோடேட்டாக்கள் நிறுவனங்களால் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளன போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ள‌லாம்.வேலை வாய்ப்புக்கான பயனுள்ள குறிப்புகளும் வழங்கப்படும்.பொருத்தமான வேலை வாய்ப்பு பற்றிய தகவலும் தெரிவிக்கும் வசதியும் இருக்கிற‌து.

வேலை தேடுபவர்களுக்கு கைகொடுக்க கூடிய தளம் என்ப‌தில் சந்தேகமில்லை.
இணையதள முகவரி;http://www.resumebaking.com/

மறந்து வைத்த பொருளை தேட ஒரு இணையதளம்.

மறந்து வைத்த பொருளை தேட ஒரு இணையதளம்.


காலையில் புறப்படும் அவசரத்தில் செல்போனையோ ,கைகடிகார‌த்தையோ (செல்போன் யுகத்திலும் கைகடிகாரம் கட்டுபவர்கள் நாம் மட்டுமே)எங்கே வைத்தோம் என்று தெரியாமல் தேடும் அனுபவம் நம் எல்லோருக்குமே உண்டு.இது சிலருக்கு தினசரி அனுபவமாகவும் இருக்கலாம்.இன்னும் சில நேரங்களிலோ முக்கியமான பொருளை வைத்த இடம் தெரியாமல் எல்லா இடத்திலும் தேடிக்கொண்டிருப்போம்.
இப்படி இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தில் தேடுவது தத்துவ நோக்கில் இல்லாவிட்டாலும் நடைமுறை வாழ்க்கையில் எல்லோருக்குமே ஏற்படுவது தான்.
இது போன்ற நேரங்களில் தேடும் பொருளை எங்கே வைத்தோம் என்று நினைவு படுத்தி கொள்வதற்காக மூளையை கசக்கி கொள்ளவும் நேரலாம்.அவசரத்தில் இருக்கும் போது இந்த மறதி பெரும் சோதனையாக அமையலாம்.
எல்லோருக்குமே இது போன்ற அனுபவம் எப்போதாவது எற்பட்டிருக்கலாம் என்பதால் இதனை அதிகம் விவரிக்க தேவையில்லை.விஷயம் என்னவென்றால் இந்த தேடலுக்கு தீர்வாக அமையக்கூடிய இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது என்பது தான்.
தி ஃபவுண்ட் திஸ் என்னும் அந்த தளம் மறந்து வைத்த பொருளை தேடும் போது கைகொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.உடனே பொருட்களை தேடும் போது இந்த தளம் துப்பறியும் புலிகளை அனுப்பி வைத்து உதவும் என்றெல்லாம் நினைத்துவிட‌ வேண்டாம்.
இந்த தளம் செய்வதெல்லாம் மிகவும் எளிமையானது.நீங்கள் மறந்து வைக்ககூடிய பொருட்களை பட்டியலிட்டு கொள்வதற்கான இடமாக மட்டுமே இந்த தளம் விளங்குகிறது.அதாவது உங்கள் வசம் உள்ள முக்கிய பொருட்கள் மற்றும் மறந்துவிடக்கூடிய பொருட்களை இதில் பட்டியலிட்டு அவற்றுடன் எங்கோ வைக்கிறோம் என்ற குறிப்பை எழுதி வைக்கலாம்.பின்னர் எப்பொதாவது அந்த பொருளை தேட நேரும் போது எங்கே வைத்தோம் என்று நினைவு படுத்தி கொள்ள திண்டாட வேண்டியதில்லை.
நேராக இந்த‌ தளத்திற்கு வந்து பார்த்தால் அந்த பொருளுக்கான குறிப்பில் வைத்த இடம் எது என்பதை தெரிந்து கொண்டுவிடலாம்.அவ்வளவு தான்.
ஆனால் ஒன்று ஒரே இடத்தில் பொருட்களை வைக்கும் பழக்கம் இருந்தால் தான் இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும்.இல்லை பொருட்களின் இடத்தை மாற்றும் போது அதனையும் குறிப்பிட வேண்டும்.
இருப்பினும் அடிக்கடி பயன்படுத்த தேவையில்லாத முக்கியமான பொருட்களை எங்கே வைத்தோம் என்று நினைவில் கொண்டுவர இந்த தள‌ம் உதவியாக இருக்கும்.
எல்லா பொருட்களையும் இண்டெநெட்டுடன் இணைத்து வைக்கும் காலம் இது.அந்த வகையில் மறந்து வைத்த பொருட்களை தேடும் வகையிலான இந்த தளம் தேவையானது தான்.
இணையதள முகவரி;http://www.thefoundthis.com/

Oct 11, 2011

இலவசமாக ஹெலிகாப்டரில் ஊர் சுற்றலாம்


ஊர் சுற்றுவது என்பது நமக்கு பிடித்தமான ஒன்றாகும். கொஞ்சம் பணமிருந்தால் ஊர் சுற்றலாம், அதிகம் பணம் இருந்தால் நாடு சுற்றலாம். ஆனால் இணையம் மட்டும் இருந்தால் போதும், இனி இலவசாக ஊரும் சுற்றலாம், நாடும் சுற்றலாம். அதுவும் ஹெலிகாப்டரில்!

கூகிள் மேப் (Google Map) பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். உலக வரைப்படத்தை நம் கண்முன்னே காட்டும் அதிசய தளம். இது வரை இதில் பல்வேறு வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் முப்பரிணாம பார்வை (3D View), தெருக்களின் பார்வை (Street View), சாட்டிலைட் பார்வை (Satellite View) ஆகியவை குறிப்பிடத்தக்கவை. தற்போது மேலும் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அது தான் ஹெலிகாப்டர் பார்வை (Helicopter View).

ஏற்கனவே கூகிள் மேப்பில் ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு செல்வதற்கான வழியை காட்டும் வசதி உள்ளது. தற்போது அந்த வழியினை ஹெலிகாப்டரில் இருந்து பார்ப்பது அல்லது பயணிப்பது போன்றும் காட்டுகிறது.

இதனை பயன்படுத்த, maps.google.com என்ற முகவரிக்கு செல்லவும்.
அங்கு இடது புறம்    என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.
பிறகு  A என்ற இடத்தில் நீங்கள் எங்கிருந்து செல்ல வேண்டுமோ, அந்த இடத்தை கொடுக்கவும்.
B என்ற இடத்தில் எந்த இடத்திற்கு செல்ல வேண்டுமோ அந்த இடத்தை கொடுக்கவும். பிறகு Get Direction என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.
 அவ்வாறு கொடுத்தப்பின், இரண்டு இடத்திற்குமான வழியின் வரைபடத்தை காட்டும்.
இடதுபுறம் அந்த வழிகளின் முழு விவரத்தையும் காட்டும். அங்கு 3d என்னும் பட்டன் இருக்கும். அதனை க்ளிக் செய்யவும்.
அதனை க்ளிக் செய்தவுடன் நீங்கள் வானிலிருந்து  செல்வது போன்று நகரும். இது தான் ஹெலிகாப்டர் பார்வையாம். இப்படி ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு, அல்லது ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு பயணம் செய்யலாம்.
சரி, நீண்ட தூரம் பயணம் செய்யும் போது வழியில் டீ, காபி குடிக்க என்ன செய்யுறதுன்னு யோசிக்கிறீங்களா? ஒன்னும் பிரச்சனையில்லை. அந்த வரைபடத்தில் கீழே இடதுபுறம் Play/Pause பட்டன் இருக்கும். அதனை க்ளிக் செய்து, டீ, காபி குடிக்க செல்லலாம். அப்படியே அந்த இடத்தில் பக்கத்தில் இருக்கும் ஊருக்கும் செல்லலாம்.
உதாரணத்திற்கு, சென்னை ஸ்பென்சர் ப்ளாசாவில் இருந்து மெரீனா கடற்கரைக்கு பயணிக்கும் வீடியோவை பாருங்கள்.

இலவசமாக ஹெலிகாப்டரில் ஊர் சுற்ற தயாரா?
பிற்சேர்க்கை:
இந்த வசதியை பெற நீங்கள் உங்கள் இணைய உலவியில் Google Earth Plugin-ஐ நிறுவியிருக்க வேண்டும். அதனை நிறுவ இங்கே க்ளிக் செய்யவும்.

கூகிள் தேடலில் உடனடி பதில்கள்


கூகுள் தேடுபொறியை பயன்படுத்தாத இணைய பயனாளர்கள் யாருமில்லை என்று கூட சொல்லலாம். அந்தளவு கூகுள் தேடுபொறி அனைவருக்கும் பயன்படுகிறது. ஒரு சில தேடல்களுக்கு உடனடி முடிவுகளை தருகிறது கூகிள் தளம். அதனை பற்றி இங்கு பார்ப்போம்.

[படங்களை பெரிதாக காண படங்களின் மீது க்ளிக் செய்யவும்]

உலக  நேரம்:

உலக நாடுகளில் தற்போதைய நேரத்தை அறிந்துக் கொள்ள "Time country+name"  என்று தேடவும். உதாரணத்திற்கு "Time India".


வானிலை:

உலகில் உள்ள முக்கிய நகரங்களில் இன்றைய வானிலை நிலவரம் பற்றி அறிய "Weather City+name" என்று தேடவும். உதாரணத்திற்கு "Weather Chennai".


சூரிய உதயம் & சூரிய அஸ்தமனம்:

முக்கிய நகரங்களில் இன்றைய சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் ஆகியவற்றின் நேரத்தை அறிந்துக் கொள்ள "Sunrise City+Name", "Sunset City+Name" என்று தேடவும். உதாரணத்திற்கு, "Sunrise Paris", "Sunset Paris".

கால்குலேட்டர்:

கால்குலேட்டரில் நாம் செய்யும் அனைத்து கணக்குகளையும் கூகிளில் செய்யலாம். உங்களுக்கு தேவையான கணக்கினை தேடவும். உதாரணத்திற்கு "5*9+(sqrt 10)^3".

மக்கள் தொகை:

உலக நாடுகள் மற்றும் முக்கிய ஊர்களின் மக்கள் தொகையை அறிந்துக் கொள்ள "Population City(or)country+name" என்று தேடவும். உதாரணத்திற்கு "Population India"அகராதி:

ஏதாவது ஒன்றை பற்றிய அகராதி என்னவென்று தேறிய வேண்டுமானால் "define: search+word" என்று தேடவும். உதாரணத்திற்கு "define: parotta".விமான நிலவரம்:

குறிப்பிட்ட விமானத்தின் புறப்பாடு நேரமும், வருகை நேரமும் அறிய "Flighname FlightNumber". உதாரணத்திற்கு "Emirates 547".


இவையெல்லாம் புதிய வசதிகள் இல்லை. முன்பே அறிமுகமானவைகள் தான். எனக்கு இன்று தான் தெரிந்தது. மேலும் சில வசதிகள் பற்றி இறைவன் நாடினால் பிறகு பார்ப்போம்.

உங்கள் ப்ளாக்கில் மால்வேர் உள்ளதா?மால்வேர் (Malware) என்பது கணினியை தாக்கும் மென்பொருள் ஆகும். இது தீமை இழைக்கும் மென்பொருள் என்பதால் இதனை தமிழில் "தீம்பொருள்" என்று அழைக்கிறார்கள். இதனை நம் கணினிக்கு அனுப்புவதன் மூலம் அத்தீம்பொருளை உருவாக்கியவர்கள் இணையம் மூலம் நமது தகவல்களை திருட முடியும். இங்கு ப்ளாக்கை தாக்கும் மால்வேர் பற்றி மட்டும் பார்ப்போம்.

மால்வேர் எப்படி தாக்குகிறது?

மால்வேர் நிரல்களை அல்லது மால்வேரினால் பாதிக்கப்பட்ட தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட நிரல்களை நமது ப்ளாக்கில் நிறுவுவதால் நம்முடைய ப்ளாக்கிற்கும் மால்வேர் வந்துவிடும். இதனால் சில சமயம் நம் ப்ளாக்கை பார்க்கும் அனைவரின் கணினியிலும் வந்துவிடும். சில சமயம் என்று குறிப்பிட்டதற்கு காரணம் சில மால்வேர்களினால் நமது கணினிக்கு எந்த பாதிப்பும் வராது. ஆனால் நமது ப்ளாக்கை திறந்தால் அது வேறொரு விளம்பர தளத்திற்கு redirect ஆகும். இது மாதிரியான மால்வேர்களுக்கு ஆட்வேர் (Adware) என்று பெயர். சமீபத்தில் ஒரு தமிழ் திரட்டியின் ஓட்டுபட்டையில் இந்த பிரச்சனை வந்தது. பிறகு சரிசெய்யப்பட்டுவிட்டது.


நமது ப்ளாக்கில் மால்வேர் உள்ளதா? 

இதனை கண்டுபிடிக்க கூகிள் தளம் நமக்கு உதவுகிறது. கூகிள் தேடலில் உங்கள் ப்ளாக் முகவரியைத் தேடி பாருங்கள். உங்கள் ப்ளாக்கில் மால்வேர் இருந்தால் தேடல் முடிவுகளில் உங்கள் ப்ளாக் பெயருக்கு கீழே “This site may harm your computer” என்று சொல்லும்.அந்த மால்வேர் பற்றிய மேலும் சில தகவல்களை அறிய,

http://www.google.com/safebrowsing/diagnostic?site=blogname.com 

என்ற முகவரிக்கு செல்லவும். இதில் blogname.com என்பதற்கு பதிலாக உங்கள் ப்ளாக் முகவரியை கொடுக்கவும். இதுவும் கூகிள் தரும் வசதிதான். உங்கள் ப்ளாக்கில் மால்வேர் இருந்தால் "Site is listed as suspicious - visiting this web site may harm your computer." என்று சொல்லும். மேலும்  எந்த தளத்தின் மால்வேர் உங்கள் ப்ளாக்கை தாக்கியுள்ளது? என்றும் காட்டும்.


உங்கள் ப்ளாக்கில் மால்வேர் இல்லையென்றால் 'Google has not visited this site within the past 90 days' என்று சொல்லும்.

மால்வேர் நிரலை எப்படி கண்டுபிடித்து நீக்குவது?

மால்வேர் பாதித்துள்ள ப்ளாக்கை சரி செய்வதற்கு எளிய வழி டெம்ப்ளேட் மாற்றுவது. அப்படியில்லாமல் மால்வேர் நிரலை மட்டும் நீக்க வேண்டும் என நினைத்தால் இதற்கு கூகிள் வெப்மாஸ்டர் டூல் உதவுகிறது. இது வரை நீங்கள் உங்கள் தளத்தை அதில் இணைக்கவில்லைஎனில் உடனே இணைத்து விடுங்கள்.

அது பற்றிய தொடர்: கூகிள் வெப்மாஸ்டர் டூல்

அதில் இணைத்தபிறகு உங்கள் ப்ளாக்கில் மால்வேர் வந்தால் கூகிள் வெப்மாஸ்டர் டூல் தளத்தில் பின்வருமாறு காட்டும்.


அதில் Details என்பதை க்ளிக் செய்தால் மால்வேர் உள்ள நிரலை காட்டும்.


பிறகு Blogger Dashboard => Template => Edit Html பகுதிக்கு சென்று, Expand Widget Templates என்பதை க்ளிக் செய்து, பாதிக்கப்பட்டுள்ள நிரலை நீக்கிவிட்டு, Save Template என்பதை க்ளிக் செய்யவும்.

சில முன்னேற்பாடுகள்:

இதனை நீங்கள் முன்னரே படித்திருப்பீர்கள். இப்பதிவுக்கு ஏற்றதென்பதால் இங்கு பகிர்கிறேன்.

1. வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை உங்கள் ப்ளாக் டெம்ப்ளேட்டை பேக்கப் (Backup) எடுத்துக் கொள்ளுங்கள். இதனால் மால்வேர் பாதித்தால் பழையதை பயன்படுத்திக் கொள்ளலாம். டெம்ப்ளேட்டை பேக்அப் எடுக்க,

Dashboard => Template பக்கத்திற்கு சென்று மேலே வலதுபுறம் Backup/Restore என்னும் பட்டனை க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்.

2. மாதம் ஒரு முறை உங்கள் ப்ளாக்கை பேக்கப் (Backup) எடுத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் பதிவுகள், பின்னூட்டங்கள் என அனைத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். ப்ளாக்கை பேக்கப் எடுக்க,

Dashboard => Settings => Other பக்கத்திற்கு சென்று Export Blog என்பதை க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்.

பதிவிறக்கம் செய்ததை தேவைப்படும்போது பதிவேற்றம் செய்ய விரும்பினால் Import blog என்பதை க்ளிக் செய்து பதிவேற்றம் செய்துக் கொள்ளுங்கள்.

3. நம்முடைய ப்ளாக்கை பிரபலமாக்க திரட்டிகள் பெரிதும் உதவுகின்றன. அதற்காக எல்லா திரட்டிகளின் ஓட்டுபட்டைகளையும் இணைக்காதீர்கள்.

4. நமது ப்ளாக்கை அழகுப்படுத்த பல்வேறு விட்ஜட்களை சேர்ப்போம். அவ்வாறு சேர்க்கும் முன் கவனமாக இருக்கவும். சமீபத்தில் ஆன்லைன் வாசகர்களை காட்டும் ஒரு நிரலியில் மால்வேர் இருந்தது. அதனால் புதிய தளங்களில் இருந்து விட்ஜட்களை சேர்க்க நினைத்தால் முதலில் அந்த தளத்தை கூகிளில் தேடி பார்க்கவும்.

மேலும் ஏதாவது சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

பிற்சேர்க்கை:

மால்வேர் பாதிக்கப்பட்டுள்ள கணினிகள் மூலம் பதிவிடும் போதும் உங்கள் ப்ளாக்கை மால்வேர் தாக்க வாய்ப்புள்ளது. அதனால் நல்லதொரு ஆன்டிவைரஸ் மென்பொருளை பயன்படுத்தவும். அதனை அடிக்கடி அப்டேட் செய்து வரவும்.

இணைய பாதுகாப்பு #1 - Passwords


கணினி பயன்படுத்துபவர்களில் அதிகமானோர் இணையத்தை பயன்படுத்தாமல் இருக்க மாட்டார்கள். அந்தளவு இணையத்தின் வளர்ச்சி அபாரமானது. எந்த இணையம் நமக்கு அதிகம் உதவுகிறதோ, அதே இணையம் தான் நமக்கு அதிகமான ஆபத்தையும் விளைவிக்கின்றது. அப்படிப்பட்ட இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது பற்றி பார்ப்போம்.

இது தொடர்பாக ஏற்கனவே சைபர் க்ரைம் - ஒரு பார்வை , ஈமெயில் ஐடியை பாதுகாக்க சில வழிகள் ஆகிய பதிவுகளில் ஓரளவு பார்த்திருந்தாலும், ஒவ்வொன்றை பற்றியும் கொஞ்சம் விரிவாக, தொடர்ந்து பார்ப்போம்.

நம்முடைய இணைய கணக்குகளை நாம் மட்டுமே அணுகுவதற்கு பயன்படுவது கடவுச்சொல்( Password). இணையத்திருடர்கள் நம் கணக்கை திருடுவதற்கு அவர்கள் குறி வைப்பது நம்முடைய பாஸ்வேர்டை தான். அதனை பாதுகாப்பது பற்றி கொஞ்சம் இங்கு பார்ப்போம்.

1. முதலில் உங்கள் கடவுச்சொல் எளிதில் யூகிக்க முடியாதவையாகவும், கடினமாகவும் இருக்க வேண்டும்.

2. உங்களுக்கு பிடித்தவர்களின் பெயர்கள், தொலைபேசி எண், மொபைல் நம்பர், பிறந்த நாள் இவைகளை பாஸ்வேர்டாக வைக்க வேண்டாம். உங்களுக்கு நன்கு பரிச்சயமானவர்களால் இவைகளை எளிதில் கணிக்க முடியும்.

3. எக்காரணம் கொண்டும் உங்கள் கடவுச்சொல்லை யாரிடமும் கொடுக்காதீர்கள்.

4. முடிந்தவரை உங்கள் கடவுச்சொல்லில் எழுத்துக்கள், எண்கள் ஆகிய இரண்டையும் கலந்துக் கொடுங்கள். (உதாரணத்திற்கு abcd1234)

5. டிக்சனரியில் உள்ள வார்த்தைகளை கடவுச்சொல்லாக வைக்காதீர்கள். ஏனெனில் அவ்வாறான கடவுச்சொற்களை கண்டுபிடிப்பதற்காக அகராதி தாக்குதல் (Dictionary Attack) என்னும் தொழில்நுட்பத்தை ஹேக்கர்கள் பயன்படுத்துகிறார்கள்.

6. எல்லா தளங்களுக்கும் ஒரே கடவுச்சொல்லை பயன்படுத்தாதீர்கள். ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கடவுச்சொல்லை பயன்படுத்துங்கள்.

7. உங்கள் கடவுச்சொற்களை எங்கும் எழுதி வைக்காதீர்கள். அப்படி எழுதி வைத்தால் பாதுகாப்பான இடத்தில் வையுங்கள்.

8. நீங்கள் கடவுச்சொல்லைக் கொடுக்கும் போது யாரும் பார்க்காதவாறு கொடுங்கள்.

9. முக்கியமாக உங்கள் நினைவில் இருக்கக் கூடிய சொல்லாக வையுங்கள்.

10. ப்ரவ்சிங் சென்டர்களில் கொஞ்சம் கவனமாக இருக்கவும். ஏனெனில் அவைகளில் Keystroke Logging மென்பொருள்கள் இருக்கலாம். இதன் மூலம் நீங்கள் கீபோர்டில் டைப் செய்யும் அனைத்தையும் அவர்கள் அறிந்துக்கொள்ள முடியும். On-Screen Keyboard எனப்படும் திரை விசைப்பலகை மூலம் டைப் செய்தாலும் அந்த மென்பொருள்கள் மூலம் பதிவு செய்யப்படும்.


உதாரணத்திற்கு, ஒரு மெயில்:
இதன் தகவல்களை keystroke Logging மென்பொருள் மூலம் எடுக்கப்பட்டவை:


Image Credit: Wikipedia

இவற்றிலிருந்து நமது கடவுச்சொல்லை பாதுகாக்க, கடவுச்சொல்லை கொடுக்கும் போது அதற்கு முன்பும், இடையிலும் மேலும் சில எழுத்துக்களை சேர்த்து, அவற்றை மவுஸ் மூலம் நீக்கிவிடுங்கள். இது ஓரளவு பாதுகாக்கும்.


11. மொபைல்களில் சாட்டிங் செய்யும் வசதியை அளிக்கும் மூன்றாம் நபர் மென்பொருள்களை (Third Party Applications) பயன்படுத்தாதீர்கள். அவைகள் உங்கள் மின்னஞ்சல்கள் மூலம் உங்கள் கணக்கில் உள்ள அனைத்து நபர்களின் மின்னஞ்சல்களுக்கும் ஸ்பாம் மெயில்களை அனுப்புகின்றன.


இறைவன் நாடினால் தொடரும்.....

ஆன்லைன் வாசகர்களை கண்காணிக்க...


பதிவர்களில் யாரும் தங்கள் வாசகர்களை பற்றிய விவரங்களை (Stats) அறியாமல் இருந்திருக்க மாட்டார்கள். தங்கள் ப்ளாக்கிற்கு எங்கிருந்து வருகிறார்கள்? எந்த தளங்கள் நமக்கு பரிந்துரை செய்கிறது? தேடுபொறியில் எந்த வார்த்தைகளை தேடுவதன் மூலம் வருகிறார்கள்? என்பதனை தெரிந்துக் கொள்வதன் மூலம் நம்முடைய ப்ளாக்கை இன்னும் சிறப்பாக செயல்படுத்த முடியும்.

அவ்வாறு தெரிந்துக் கொள்வதற்கு Blogger Stats பயன்படுகிறது. ஆனால் அதில் உள்ள குறைபாடு, முதல் பத்து விவரங்களை மட்டும் தான் காட்டும். முழு விவரங்களை பார்ப்பதற்கு கூகிள் அனலிடிக்ஸ் தளம் நமக்கு பெரிதும் உதவுகின்றன. உங்கள் ப்ளாக்கை அதில் இணைக்க ப்ளாக்கரில் Google Analytics-ஐ நிறுவுவது எப்படி? என்ற  பதிவை பார்க்கவும்.

தற்போது கூகுள் அனலிடிக்ஸ் தளம் நமது தளத்தில் ஆன்லைன் வாசகர்களின் விவரங்களை உடனுக்குடன் பார்க்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு Real-Time (Beta) என்று பெயரிட்டுள்ளது. தன்னுடைய மற்ற தளங்களை போல அனலிடிக்ஸ் தளத்தின் தோற்றத்தையும் மாற்றியுள்ளது கூகிள். இந்த Real-Time வசதி புதிய தோற்றத்தில் மட்டும் தான் இருக்கும். பழைய தோற்றத்தில் நீங்கள் இருந்தால், மேலே New Version என்பதை க்ளிக் செய்து புதிய தோற்றத்திற்கு மாறிக் கொள்ளுங்கள்.

அந்த பக்கத்தில் மேலே Dashboards என்னும் Tab-ஐ க்ளிக் செய்து, Sidebar-ல் Real-Time என்பதற்கு கீழே Overview என்பதை க்ளிக் செய்யுங்கள்.மேலே உள்ள படத்தில் உள்ளது போன்று விவரங்களை காட்டும். இதன் மூலம் பின்வரும் தகவல்களை நாம் அறிந்துக் கொள்ளலாம்.

Location
ஆன்லைன் வாசகர்களின் இருப்பிடத்தை அறிந்துக் கொள்ளலாம். வாசகர்கள் இருக்கும் நாட்டின் பெயரை க்ளிக் செய்தால் அவர்களின் புவியிடத்தினையும் (Geolocation) காட்டும்.
மேலே உள்ள படத்தில் பார்ப்பது என்னுடைய இருப்பிடம் (அப்படீன்னு கூகுள் சொல்கிறது). படத்தில் உள்ள +25.271139 +55.307484 என்பது Latitude & Longitude ஆகும். இதன் மூலம் தான் உலக வரைப்படத்தில் ஒரு இடத்தை கணிக்க முடியும். இந்த எண்களை + குறியையும் சேர்த்து maps.google.com தளத்தில் தேடினால் இருப்பிடத்தை காட்டும்.

இந்த  வசதியால் வாசகர்கள் (தற்போது) பயப்பட வேண்டாம். ஏனெனில் நாம் இருக்கும் நாட்டினை சரியாக சொன்னாலும், இருக்கும் இடத்தை தவறாகவே சொல்கிறது.

Traffic Sources:

வாசகர்கள் எங்கிருந்து நமது தளத்திற்கு வந்துள்ளார்கள்? என்ற விவரங்களை காட்டுகிறது.


Content:

தற்போது எந்த பக்கத்தில் வாசகர்கள் இருக்கிறார்கள்? எங்கிருந்து வந்தார்கள்? என்ற விவரங்களை காட்டுகிறது.வழக்கம் போல கூகிள் தளம் இந்த வசதியை சிலருக்கு மட்டும் தான் அறிமுகப்படுத்தியுள்ளது. உங்களுக்கு இந்த வசதி இன்னும் வரவில்லைஎன்றால், இங்கே க்ளிக் செய்து பதிவு செய்துக் கொள்ளுங்கள். நான்  கடந்த மாதம் 29-ஆம் தேதி பதிவு செய்தேன். நேற்று தான் இவ்வசதி எனக்கு வந்தது.

எனக்கு இந்த வசதி பிடித்துள்ளது. உங்களுக்கு?

மலத்தை மடியில் சுமக்கும் மழலைகள்

நாமெல்லாம் வயிறு நிறைய உண்கிறோம், உண்ட உணவு நம்மையறியாமல் ஆயிரக்கணக்கான தாக்கங்களுக்குட்பட்டு செரிமானமடைந்து கடைசியில் மலமாகின்றது. அதனை அடுத்த நாள் இலேசாக கழித்து விடுகிறோம். இதனை ஒரு பொருட்டாக நாம் கருதுவதில்லை. ஆனால், இந்த பதிவில் வரும் ஜெஸிக்காவைப் போன்று இந்த உலகில் வாழ்கின்ற பல ஆயிரம் பேருக்கு இது ஒரு பாரமான சுமை. வயிற்றில் இருக்க வேண்டிய மலத்தை மடியில் சுமப்பது, அதுவும் 24 மணிநேரமும் மடியில் சுமப்பது....


இந்தப் பூமியில் ஒருவன் 10 தசாப்தங்கள் தான் வாழ்ந்தாலும் ஏற்படக்கூடிய விபத்துக்களை விட 10 மாதங்கள் கர்ப்பத்தில் வாழ்கின்றபோது விபத்துக்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம் என்கிறது மருத்துவ உல‌கம் ஒரு குழந்தை சாதாரணமாய் பிறக்கின்றதென்றால் அது விபத்துக்களில் இருந்து தப்பிப் பிறந்த அதிர்ஷ்டசாலி என்று அர்த்தம்.

அதற்காக நாம் இறைவனுக்கு நன்றியுடையவர்களாய் இருக்க வேண்டும். சில வேளைகளில் சில சிசுக்கள் விபத்துக்களில் சிக்கிவிடுவதுடன் அதன் பாதிப்பு பிறந்தது முதல் மரணிக்கும் வரை அவர்களில் நிலைத்திருந்து நோயாளியாய் வாழ்ந்து மரணிப்பதும் நாம் காணும் யாதர்த்த நிலை.
இங்கிலாந்தின் பர்மிங்ஹாம்(Birmingham) என்ற மாநகரில் வாழும் பெற்றோருக்குப் பிறந்த மூன்றாவது குழந்தை ஜெஸிக்கா அந்நகரிலுள்ள பிரபலமானதொரு மருத்துவமனையில் சாதாரணமாகப் பிறந்தது. இந்த மருத்துவமனையில் சில மாதங்கள் நானும் கடமைபுரிந்தேன்.

சாதாரண கர்ப்பம்,சுகமான பிரசவம்.அழகிய பெண்குழந்தை பிறந்துவிட்டது. பிறந்த குழந்தை அழுதது,பால் குடித்தது. கண்களை விரித்துப் பார்த்துத் தான் வந்து சேர்ந்த இந்த விசித்திரமான பூமியை ஒருமுறை நோட்டமிட்டு விட்டு மீண்டும் தூங்கியது. குழந்தைகளுக்குரிய பண்புகளான அழுவது,பால்குடிப்பது,தூங்குவது என்ற வட்டத்திற்குள் இந்தக் குழந்தையும் வாழ்க்கையைத் துவங்கியது.பொற்றோரும் உற்றார் உறவினரும் இந்தக் குழந்தைச் செல்வம் கொண்டு வந்த பாசத்தின் மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். ஜெஸிக்கா பிறந்து இரண்டாவது நாள் மாலை வேளை குழந்தையையும் தாயையும் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல உறவினர்கள் வந்திருந்தனர்.

வீடு செல்லுவதற்கு முன்னர் சிறுவர் நோய் மருத்துவர்கள் குழந்தையைப் பரிசோதித்து திருப்தியடைந்த பின்னரே மருத்துவமனையிலிருந்து விடுவிப்பது வழக்கம். வழமைப்போல் அன்று மாலை எனக்கு தாதியிடமிருந்து அழைப்பு வந்தது: “குழந்தை ஜெஸிக்காவின் பெற்றோர் வீடு செல்ல ஆயத்தமாயிருக்கின்றனர். தயவுசெய்து குழந்தையைப் பரிசோதித்து விட்டுச் செல்லுங்கள்.”

குழந்தையை பரிசோதிப்பதற்கு முன்னால் சில கேள்விகள் கேட்க வேண்டும்.

“ குழந்தை பால் குடிக்கின்றதா?”
“ ஆமாம், ஒரு பிரச்சினையும் இல்லை”
“ அதிகம் அழுகிறதா?”
“இல்லை, சாதாரணமாய் இருக்கின்றது”
“சிறுநீர் கழித்ததா?”
 “ ஆமாம் பலமுறை. கீழாடை (Nappy) ஈரமாய் இருந்ததால் மாற்றி விட்டோம்” என்று பதிலளித்த தாய். அடுத்த கேள்விக்கு அளித்த பதில் கதையை தலைகீழாய் புரட்டிவிட்டது.

“ குழந்தை மலம் கழித்ததா?”


“இன்னும் இல்லை டாக்டர்” என்று பதில் வந்தது பதில். இரண்டு நாட்களாகி விட்டது; குழந்தை மலம் கழித்திருக்க வேண்டுமே!” என்று சொன்னவாறு நன்றாகப் பரிசோதிக்க ஆரம்பித்தேன்.


" Everything OK?-எல்லாம் சரிதானா?” என்று கேட்டார் அந்தத் தாய்.

“ஆம்” என்று சொல்ல வேண்டும் என்று எனக்கு ஆதங்கம் இருந்தபோதும்....

“இன்னும் மலம் கழிக்கவில்லை என்று சொன்னீர்கள். துரதிஷ்டவசமாக குழந்தையின் விருத்தியில் ஏற்பட்ட ஒரு விபத்தில் ஜெஸிக்கா மலம் கழிக்கும் துவாரம் இல்லாமல் பிறந்திருக்கிறாள்” என்று சொன்னபோது “What? What? What?" என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தாள் அந்தத் தாய்.
 “ மலம் கழிக்கும் துவாரம் இல்லாமல் குழந்தைகள் பிறக்க முடியுமா?”

கருப்பையில் வளரும் சிசுவின் குடல் விருத்தியடையும் போது வாயில் ஆரம்பித்த துவாரம் மலம் கழிக்கும் பின் துவாரம் வரை ஒரு குழாய்(Tube) போல் விருத்தியடையும்.

வாய் என்ற துவாரத்தில் ஆரம்பிக்கும் செரிமானத் தொகுதி, உணவுக்குழாய், இரைப்பை,சிறுகுடல்,பெருங்குடல் என்ற அமைப்பாக மாறி ஒவ்வோர் அமைப்பும் தனக்கேயுரிய தொழிற்பாட்டைச் செய்ய, உணவு செரிமானமடைய‌ கடைசியாக மலமாக மாறும். அது பெருங்குடலின் எல்லையான குதம் (Anus)என்ற மலம் கழிக்கும் துவாரத்தினூடாக வெளியேற்றப்படும். தேவையானபோது துவாரத்தைத் திறப்பதற்கும் பின்னர் அதனை மூடிவிடுவதற்கும் இறுக்கமான மூடி(Anal Sphineter) அந்த இடத்தில் இருக்கிறது.

இதுதான் இயற்கையாக இறைவன் ஏற்படுத்திருக்கும் அற்புதமான அமைப்பு. இயற்கையான இந்த அமைப்பில் சில விபத்துகள் ஏற்படும்போதுதான் படைப்பின் அற்புதத்தை, அவசியத்தை உணர முடிகின்றது.
ஜெஸிக்காவிற்கு என்ன நடந்தது? பெருங்குடல் தனது எல்லையான உடலின் வெளிப்புறத் துவாரம் (Anus) வரை விருத்தியடையவில்லை. மாறாக வயிற்றுக்குள்ளே இடையில் மூடப்பட்டுவிட்டது. அதாவது பெருங்குடலின் கடைசி 4-5 செ.மீ. தூரம் குடல் இல்லை. இதனால் செரிமானம‌டையும் பால் மற்றும் உணவு வெளியேற்றப்படாமல் குடலில் தேங்கி குடல் விரிந்து விரிந்து பெரிதாகி வீங்கும். மலம் கழிக்கும் வெளிப்புறத் துவாரம் எதுவும் இல்லாமல் சாதாரண தோலால் மூடப்பட்டு உடலின் ஏனைய பகுதிபோன்று சாதாரண தோலாக இருக்கும் இது(Imperforate Auns)  என்று அழைக்கப்படுகிறது.
வளர்ச்சியற்ற பெருங்குடல்


“ மலம் கழிக்கும் துவாரம் இல்லாமல் குழந்தைகள் பிறக்க முடியுமா?” என்று ஆச்சரியத்தோடும் ஏமாற்றத்தோடும் கண்ணீர் மலகக் கேட்டார் அந்தத் தாய்.

“ஆம் 5000 இல் ஒரு குழந்தை இவ்வாறு பிறக்க முடியும்.என்று சொன்னபோது தடுமாறிப்போன அந்தத் தாயின் வாய் வார்த்தைகள் இன்றி மெளனமாகிப் போனது.


“ஜெஸிக்கா எப்படி மலம் கழிப்பாள் டாக்டர்?” சில நிமிடங்கள் மெளனமாய் இருந்துவிட்டு மீண்டும் கேட்கிறாள் அந்தத் தாய்.


ஜெஸிக்காவின் தாயிடம் பதிலளிக்க ஆரம்பித்தேன். “ஜெஸிக்காவின் பெருங்குடலில் கடைசி 4-5 செ.மீ. விருத்தியடையவில்லை.குதம் வயிற்றுக்கு வெளியே வராமல் வயிற்றுக்குள்ளேயே மூடப்பட்டு விட்டது. இதனால் மலம் குடலில் தேங்கி பெரும் ஆபத்தை விளைவிக்கும். எனவே,கவனமாக மலத்தை வெளியேற்றி நோய்க்கிருமிகளின் தாக்கத்திலிருந்து ஜெஸிக்காவைப் பாதுகாப்பதற்காகவும் மலம் கழிக்கம் ஏற்பாட்டை செய்வதற்காகவும் வயிற்றில் ஒரு துவாரமிட்டு குடலை அந்தத் துவாரத்தினூடாக இழுத்து வந்து மலத்தை வயிற்றுக்கு வெளியே கழிக்கும் ஓர் அமைப்பைச் செய்ய வேண்டும். இதற்காக அவசரமாக அறுவைசிகிச்சை செய்ய வேண்டும்” என்று சொன்னதும் அந்தத் தாய் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்.

மலப்பை(Colostomy Bag) யோடு குழந்தை

இந்த அறுவைசிகிச்சை (Colostomy) என்று அழைக்கப்படுகின்றது. வயிற்றில் ஏற்படுத்திய இந்தத் துவாரத்தினூடாக மலம் தொடர்ந்து 24 மணிநேரமும் கொஞ்சம் கொஞ்சமாய் வந்து கொண்டிருக்கும். சாதாரணமான நிலையில் குடலின் எல்லைக்கு வரும் மலம் Rectum என்ற குடலின் பகுதியில் நாம் மலம் கழிக்கும் வரை தேங்கியிருக்கும். ஆனால், இத்தகைய நோயாளிகளுக்கு Rectum இல்லாதிருப்பதால் மலம் தேங்க முடியாது தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

இதனை வயிற்றுக்கு வெளியே சேர்த்தெடுப்பதற்கு வயிற்றில் ஏற்படுத்திய துவாரத்தில் ஒருவகைப் பை(Colostomy Bag) ஒன்று ஒட்டி வைக்கப்படும். இந்தப் பை நிறையும்போது அதனை எடுத்து வீசிவிட்டு புதிய பையை இணைக்க வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு சிலவேளைகளில் 5-6 பைகள் மாற்றவேண்டிய சூழல் ஏற்படலாம். துரதிஷ்டவசமாக வயிற்றுபோக்கு ஏற்பட்டு விட்டால் பாவம் அவர்களின் நிலைமை மிகவும் பரிதாபகரமானதாக இருக்கும்.

மலப்பை(Colostomy Bag) 

“ எனது குழந்தை வாழ்நாள் முழுவதும் மலத்தை மடியில் சுமக்க வேண்டுமா?” என்று மீண்டும் கேட்டார் அந்தத் தாய்” மலத்தை மடியில் சுமக்கும் துர்ப்பாக்கிய நிலை ஏன் எனது குழந்தைக்கு ஏற்பட வேண்டும் என்று சொல்லியவாறு அழுது கொண்டிருந்தார் அந்தத் தாய்.

அடுத்த நாள் அவசரமாக Colostomy அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது. உடலின் கீழ்ப்புறத்தில் மறைந்திருக்க வேண்டிய இயற்கைத் துவாரம் இல்லாமல் வயிற்றில் இடதுபுறமாய் துளைக்கப்பட்டு செயற்கையான துவாரம் ஏற்படுத்தப்பட்டு Colostomy Bag இணைக்கப்பட்டது.


“இந்த அழகிய வயிற்றைத் துளைத்து அசிங்கப்படுத்தாமல் உடலின் கீழ்ப்புறம் அதற்கேயுரிய இடத்தில் ஏன் செயற்கையான துவாரம் ஏற்படுத்த முடியாது? தயவுசெய்து அப்படியான ஒரு ஏற்பாட்டையாவது செய்யுங்கள்? என்று மன்றாடினாள் அந்தத் தாய்.


இந்த அழகிய வயிற்றைத் துளைத்து அசிங்கமாக்கி அதனை ஒரு மலகூடமாய் மாற்ற மருத்துவர்களுக்கும் உடன்பாடில்லை. இருந்தபோதும் வேறுவழியில்லை. அவ்வாறு செய்ய வேண்டிய ஒரு நிர்ப்பந்த சூழல்.


உடலின் கீழ்ப்புறம் மறைந்த இடத்தில் துவாரமிட முடியும். ஆனால் குடல் 4-5 செ.மீ. குள்ளமாக இருப்பதால் அதனை கீழ்ப்புற எல்லைக்கு கொண்டு வர நீளம் போதாது. மேலும் கீழ்ப்புறமாய் துவாரமிட்டால் தொடர்ந்தும் 24 மணிநேரமும் சேரும் மலத்தை சேர்த்தெடுக்கும் Colostomy Bag ஐ கீழ்ப்புறத்தில் இணைப்பதற்கு ஒரு ஆதாரம் (Base) இல்லை ஒரு ஆதாரம் இல்லாமல் Bag ஐ இணைக்க முடியாது. இப்படி பல பிரச்சினைகள் இருப்பதால் மலங்கழிக்கும் துவாரத்தை வயிற்றில் ஏற்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.


இரண்டாவது நாள் இன்பமாய் வீடு செல்ல வேண்டிய ஜெஸிக்காவின் பெற்றோரும் உறவினரும் இரண்டு வாரங்களுக்குப் பின் ஜெஸிக்கா மலத்தை  மடியில் சுமக்க,ஜெஸிக்காவை சுமந்தவாறு மருத்துவமனையிலிருந்து வெளியேறிச் சென்றபோது...


மலத்தை மடியில் சுமந்து வயிற்றை மலகூடமாக்கும் துர்ப்பாக்கிய நிலையை ஏற்படுத்தாமல் ஆரோக்கியமானவனாக என்னை வாழ வைக்கும் இறைவனுக்கு எனதுள்ளம் பல நூறு தடவைகள் (அல்ஹம்துலில்லாஹ்) நன்றி சொல்லிக் கொண்டது.

Dr.முஸ்தபா ரயீஸ் (MBBS,DCH,MD,MRCPH)

 Peadiatric Intensivst, Cardiac PICU
Hariey street Hospital,London
அல்ஹஸனாத் மாத இதழ்


நன்றி வலையுகம்