Aug 24, 2012

VLC Player செய்யும் விநோதங்கள் - 2

நேற்றைய பதிவில் VLC Player மூலம் Audio/Video/Subtitle போன்றவை Sync ஆகாத பிரச்சினையை சரி செய்வது எப்படி, Watermark கொடுப்பது எப்படி, Video வை வேறு Format க்கு Convert செய்வது எப்படி, Video Play ஆகும் ஸ்க்ரீன் அளவை மாற்றுவது எப்படி என்ற தகவல்களை பார்த்தோம். இன்று "Effects and Filters" பகுதியில் உள்ள வசதிகளை பற்றி காண்போம்.

முதலில் Tools --> Effects and Filters என்பதை ஓபன் செய்யவும். இப்போது பின்வருமாறு விண்டோ வரும். 
இதன் வசதிகளை ஒவ்வொன்றாய் காண்போம். 
Audio Effects:

(MP3 கேட்கும் போதும் இதை பயன்படுத்தலாம்)
Graphic Equalizer: 
சில வீடியோக்களை பார்க்கும் போது இதன் ஆடியோ வேறு மாதிரி இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றும். அதை செய்ய VLC Player-இல் உள்ள வசதி தான் இது. இதை "Enable" என்று கொடுத்து விட்டு, வலது பக்கம் உள்ள Preset என்பதில் உங்களுக்கு பிடித்த ஒன்றை தெரிவு செய்து கொள்ளலாம். 
Compressor: 
ஆடியோ கண்ட்ரோல்க்கு பயன்படும் வசதி. 
Spatializer: 
நீங்கள் இருக்கும் இடத்திற்கு எந்த விதமான ஆடியோ எபக்ட் நன்றாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதை இதில் செட் செய்யலாம். உதாரணம் பெரிய ஹால்கள், அறைகள், வகுப்பறை, தியேட்டர் என பல. நீங்களே எப்படி வேண்டும் என்று தெரிவு செய்து கொள்ளலாம். 
Video Effects: 
இதில் பல வசதிகள் உள்ளன. ஒவ்வொன்றாய் பாப்போம். 
 1. Essential : 
உங்கள் வீடியோக்கு Brightness, Contrast, Hue, Saturation மற்றும் பல Effects மாற்ற பயன்படுகிறது. டிவியில் இதை நாம் கலர் கரெக்சன் செய்ய இது போல செய்து  இருப்போம். இதை உங்கள் கணினியிலும் செய்யும் வாய்ப்பை VLC Player வழங்குகிறது. 
2. Crop :
முந்தைய பதிவில் எப்படி Crop செய்வது என்று ஒரு வழி சொல்லி இருந்தேன், அது குறிப்பிட்ட கலவையில் மட்டும் தரும். இந்த Crop-ஐ அகலம், உயரம் போன்றவற்றை உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப மாற்ற பயன்படுத்தலாம். 
3. Colors :
இதில் உங்கள் வீடியோக்கு நீங்கள் கலர் மாற்றங்கள் செய்யலாம். கலர் படத்தை கறுப்பு வெள்ளையில் பார்க்கலாம். இன்னும் பல Negative Color, Posterize, 
Gradient, Sepia என பல Effect-களை நீங்கள் உருவாக்க முடியும். 
4. Geometry :
இதில் "Transform" & "Rotate" மூலம் உங்கள் வீடியோவை நீங்கள் rotate செய்து பார்க்கலாம், "Intractive Zoom" வீடியோவில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் Zoom செய்து பார்க்கலாம், Wall மூலம் உங்கள் வீடியோவை குறிப்பிட்ட பகுதிகளாக பிரித்து, ஏதேனும் ஒரு பகுதியை மட்டும் பார்க்க விரும்பினால் பார்க்கலாம், "Puzzle Game" என்பது பெயரில் உள்ளது போல Puzzle விளையாட்டு போல உங்கள் வீடியோவை மாற்றி விடும். அதில் Black Shot தெரிவு செய்து சரியான படி Puzzle களை அடுக்க முயற்சிக்கலாம். 
5. Overlay:
இதை முந்தைய பதிவில் "Watermark ஆக நமது பெயர்/படத்தை கொடுப்பது எப்படி ?" என்று சொல்லி உள்ளேன்.
6. Atmolight :
இதற்கு Atmolight Hardware வேண்டும். இது குறித்து பின்னர் தனி பதிவாக காண்போம். 
7. Advanced :
இதில் Anti-Filckering என்பது CRT Monitor-களில் வரும் Flickering Effcet-களை நீக்க பயன்படுகிறது. இதோடு Motion Blur, Saptial Blur என்ற Blur வசதிகள் உள்ளன. இதில் Motion Blur வீடியோ frame நகரும் போது அதை காணும் வசதியை தருகிறது. (Photoshop பயன்படுத்தும் நண்பர்கள் இதை அறிவார்கள்). Clone வசதி மூலம் உங்கள் வீடியோவை இரண்டு அல்லது அதற்கு மேற்ப்பட்ட ஸ்க்ரீன்களில் காண இயலும். Water Effect, Mirror, Psychedelic, Waves, Motion Detect போன்றவை பெயருக்கேற்ற வேலைகளை செய்கின்றன. 
Synchronization

இதை நேற்றைய பதிவில்  "Audio/Video/Subtitle போன்றவை Sync ஆகாத பிரச்சினையை சரி செய்வது எப்படி? " என்ற பகுதியில் சொல்லி உள்ளேன். 


அடுத்த பகுதியில் மறுபடியும் சில அற்புதமான வசதிகளை பற்றி காண்போம்.

VLC Player செய்யும் விநோதங்கள் - 1

VLC Player நாம் அனைவரும் அறிந்த ஒன்று. எல்லோரும் அதைப் பயன்படுத்தி தான் நமது வீடியோக்களை காண்போம். வெறும் வீடியோ ப்ளே செய்யும் வசதியை மட்டும் தராமல் இன்னும் நிறைய வசதிகளை கொண்டுள்ளது இது. அவை என்னவென்று பார்ப்போம் வாருங்கள். 
1. Audio/Video/Subtitle போன்றவை Sync ஆகாத பிரச்சினையை சரி செய்வது எப்படி? 
சில சமயம் ஒரு வீடியோ நாம் ப்ளே செய்தால், அதில் உள்ளவர் பேசி முடித்த சில நொடிகள் கழித்தே ஆடியோ வரும். அதே போலவே சப்டைட்டிலும். இந்த பிரச்சினையை VLC மூலம் நீங்கள் சரி செய்யலாம். 
VLC Player-இல் Tools -> Track Synchronization என்பதில் சென்று எத்தனை நொடிகள் மாற வேண்டும் என்று கொடுத்தால் போதும்.2. Watermark ஆக நமது பெயர்/படம் கொடுப்பது எப்படி ?
சில நேரங்களில் நாம் வீடியோ எடிட் செய்யும் போது ஏதேனும் வாட்டர் மார்க் போட நினைத்து மறந்து இருப்போம், அலுவலகம் அல்லது வேறு ஏதேனும் இடத்தில் அதை ப்ளே செய்யும் போது நமது பெயர் வரவேண்டும் என்று நினைத்தால், முறையில் VLC Player-இல் அதை செய்து விடலாம். 

Tools -> Effects and Filters -> Video Effects tab-> Vout/Overlay என்பதில் இது இருக்கும். ஏற்கனவே லோகோ இருந்தால் அதை பயன்படுத்தலாம், அல்லது வெறும் வார்த்தைகளை மட்டும் பயன்படுத்தலாம், ஏற்கனவே உள்ள லோகோவையும் அழிக்கலாம். (வீடியோ ப்ளே ஆகும் போது மட்டும் இவை)3. Video வை வேறு Format க்கு Convert செய்வது எப்படி? 

நிறைய பேர் இதற்கு வித விதமான மென்பொருட்கள் பயன்படுத்தி இருப்பீர்கள். ஆனால் அவை எதுவுமே தேவை இல்லை. VLC Player ஒன்றே அதை செய்து விடும். Media-> Convert/Save இதில் Add File என்பதை கிளிக் செய்து Convert ஆக வேண்டிய வீடியோவை தெரிவு செய்து Convert/Save என்பதை கிளிக் செய்யுங்கள். 
வரும் பகுதியில் Destination File என்பதில் Output பெயர் கொடுக்கவும். இது .PS என்று முடியும். இதற்கு அடுத்து கீழே படத்தில் உள்ளது போல செட்டிங்க்ஸ் icon மீது கிளிக் செய்தால் என்ன Format என்று தெரிவு செய்யலாம். (வீடியோ கோடெக், ஆடியோ கோடெக், சப்-டைட்டில் சேர்த்தல் என பலவும் உள்ளது) 
படத்தை பெரிதாக காண அதன் மீதி கிளிக் செய்யவும். 
4. Video Play ஆகும் ஸ்க்ரீன் அளவை மாற்றுவது எப்படி? 

இது நிறைய பேருக்கு தெரிந்த வசதி என்றாலும் தெரியாதவர்களுக்கு. Video --> Crop என்பதில் உங்களுக்கு வசதியான ஒன்றை நீங்கள் தெரிவு செய்து கொள்ளலாம்.

அடுத்தடுத்த பதிவுகளில் இன்னும் அசத்தலான வசதிகள் பற்றி காண்போம்.

உங்களிடம் இருந்து Facebook எவ்வளவு சம்பாதிக்கிறது?நம்மில் சிலர் காலை முதல் இரவு வரை (மறுநாள் காலை வரை ) பேஸ்புக்கிலேயே மூழ்கி கிடக்கிறோம். கடந்த மாதம் பங்கு சந்தையில் கால் பதித்த பேஸ்புக் தனது வருமானத்தில் சில ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அத்தோடு Privacy விசயங்களிலும் கொஞ்சம் மாற்றங்கள் செய்துள்ளது. இந்த நிலையில் பேஸ்புக் பயனரிடம் இருந்து எவ்வளவு சம்பாதிக்கிறது என்று அறிவோம் வாருங்கள். 

1. முதலில் https://goprivate.abine.com/ என்ற இந்த தளத்திற்கு செல்லவும். 

2. கீழே உள்ளது போல சில கேள்விகள் இருக்கும் அவற்றுக்கு பதிலளிக்கவும். 


3. இப்போது உங்கள் மூலம் பேஸ்புக் எவ்வளவு சம்பாதிக்கிறது என்று வரும். 


இதில் 284 $ என்பது என் கணக்கின் மூலம் பேஸ்புக் சம்பாதிப்பது. இது  பேஸ்புக்கின் சந்தை மதிப்பை பொறுத்து  மாறும். அருகில் உள்ள 29.6 $ என்பது கடந்த வார சந்தை மதிப்பு. இப்போது என் மூலம் பேஸ்புக் 259$ சம்பாதிக்கிறது. ஏன் என்றால் இப்போது அதன் சந்தை மதிப்பு 27 $. 
இதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் பகிரப்படுகிறது. உங்கள் Privacy தகவலை விற்றுத் தான் பேஸ்புக் சம்பாதிக்கிறது. எப்படி என்பதை இந்தப் படத்தில் காணலாம்.  Facebook Privacy Changes [Zoom செய்து பார்க்கவும்]

Internet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க

சிலருக்கு அவர்களது internet browsing ஸ்பீட் ரொம்பவே குறைவாக இருக்கும்.இதை அதிகரிக்க எந்த சாஃப்ட்வேரும்  தேவை இல்லை.பின்வரும் படிசெய்தால் போதும்.1. XP -->கிளிக் programs--> Run

 windows 7 க்கு programs---> search box---> Type "Run"

2. Run box இல் கீழே உள்ளதை டைப் செய்யவும்

gpedit.msc
3. இப்போது வரும் புதிய விண்டோக்களில் பின்வருவதை கிளிக் செய்யவும்.


--> Computer Configuration

--> Administrative Templates

--> Network

--> QoS Packet Scheduler

--> Limit Reservable Bandwidth

4. இதில் Not Configured என்பது கிளிக் செய்யப்பட்டு இருக்கும் இதனை Enable என மாற்றி பின்னர் படத்தில் உள்ளது போல கீழே உள்ள 20 ஐ 0 ஆக்கவும்.இப்போ OK or APPLY செய்யவும்.

கவனிக்க இது 20% வேகத்தை கூட்டவே. மிக அதிகமான வேகத்தை எதிர்பார்க்க அதற்கேற்ப இணைய இணைப்பு இருக்க வேண்டும்.

Facebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்படி?

நம்மில் பெரும்பாலோனோர் இணையத்துக்கு வருவதே பேஸ்புக்கை பயன்படுத்த தான் என்ற அளவுக்கு அனைவருக்கும் அதன் மீது மோகம். நம்முடைய தனிப்பட்ட தகவல்கள் பல பேஸ்புக்கில் உள்ளது, இந்த நிலையில்  நமது அக்கௌன்ட்டை யாரேனும் ஹாக் செய்து விட்டால்? உங்களுக்கு பெரிய அதிர்ச்சியான செய்தி அது, ஹாக்கர் உங்கள் அக்கௌன்ட் மூலம் நிறைய விசயங்களை செய்து விட வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் ஹாக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்பப் பெறுவது எப்படி என்று பார்ப்போம். 

1. முதலில் www.facebook.com என்று உங்கள் அட்ரஸ் பாரில் டைப் செய்து பேஸ்புக்கை ஓபன் செய்யவும். 

2. ஒரு முறை உங்கள் தகவல்களை கொடுத்து லாக்-இன் செய்ய முயற்சி செய்யவும். 
3. லாக்-இன் ஆகாவிட்டால் இந்த இணைப்புக்கு சென்று "My Account Is Compromised" என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு வரவும். அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களில் ஏதேனும் ஒன்றை தரவும்.

4. இதில் முதல் பகுதியை பயன்படுத்தி மீட்க தான் பெரும்பாலும் வாய்ப்பு அதிகம்.

Email -sign in செய்ய பயன்படுத்தும் மின்னஞ்சல்


Phone - நீங்கள் பேஸ்புக்கில் கொடுத்துள்ள போன் நம்பர்

Facebook username:  உங்கள் Profile பக்கத்தில் நீங்கள் பார்க்கலாம். என்னுடையது  பேஸ்புக் முகவரி www.facebook.com/baleprabu. இதில் baleprabu என்பது என் User name.  உங்கள் User Name உங்களுக்கு தெரியாவிட்டால் நண்பர்களிடம் சொல்லி கேட்கலாம். அவர் உங்கள் Profile-ஐ பார்த்தால் தெரியும். ]

 நண்பர் பெயர் கொடுத்து தேடுவது கொஞ்சம் கடினமான தேடல்.


5.இப்போது நீங்கள் கொடுத்த தகவல்படி உங்கள் பேஸ்புக் கணக்கு காட்டப்படும். [இதில் வரவில்லை என்றால் Step-7 க்கு செல்லவும்]


6.உங்கள் இப்போதைய பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே செல்லலாம், அல்லது பழைய பாஸ்வேர்ட் கொடுத்து Password Reset செய்ய முயற்சி செய்யலாம். பழைய பாஸ்வேர்ட் என்றால் உங்கள் ஈமெயில் கணக்கை நீங்கள் ஓபன் செய்யும் நிலையில் இருக்க வேண்டும். அதில் உங்களுக்கு ஒரு code வரும் அதை நீங்கள் கொடுத்தால் உங்கள் பேஸ்புக் கணக்கை ஓபன் செய்ய முடியும்.

7. இதில் மீட்க முடியவில்லை என்றால் I can't identify my account என்ற பக்கத்தில் நீங்கள் தகவல்களை கொடுக்க வேண்டும். இதில் உங்கள் தகவல்களின் படி பேஸ்புக் உங்களை தொடர்பு கொள்ள வாய்ப்பு உள்ளது.

Facebook-இல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஆன்லைனில் இருப்பது எப்படி?

பேஸ்புக் பயன்படுத்தும் அனைவருக்கும் வரும் பிரச்சினை, சில முக்கியமான தருணங்களில் சாட்க்கு வரும் நண்பர்கள். அதிலும் சில முகம் தெரியாத நண்பர்கள் வந்து அதை பார், இதைப் பார் என்று விளம்பரம் வேறு செய்வார்கள். இதை தவிர்த்து நீங்கள் பேஸ்புக்கில் சிலருக்கு மட்டும் ஆன்லைனில் இருந்து, மற்றவர்களுக்கு எப்படி offline-இல் இருப்பது என்று பார்ப்போம்.  
1. பேஸ்புக்கில் நுழைந்த உடன் Chat பகுதிக்கு வரவும். அதில் settings icon >> Advanced Settings என்பதை கிளிக் செய்யவும். 
2.இப்போது கீழே வருத்துவது போல ஒரு விண்டோ வரும், அதில் "Only some friends see you…" என்பதை கிளிக் செய்யவும். அதில் யாருக்கு நீங்கள் ஆன்லைனில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்கள் பெயரை மட்டும் கொடுக்கவும். 
3. இப்போது Save செய்து விடுங்கள். 
வேலை முடிந்தது. இனி அவர்களுக்கு மட்டுமே நீங்கள் ஆன்லைனில் இருப்பீர்கள். யாரையேனும் நீக்க விரும்பினாலும், சேர்க்க விரும்பினாலும் இதே பக்கத்துக்கு வந்து செய்யலாம். 
இதே நிறைய பேருக்கு ஆன்லைனில் இருக்க வேண்டும், அடிக்கடி தொல்லை தரும் நபர்களுக்கு மட்டும் offline-இல் இருக்க விரும்பினால் பேஸ்புக்கில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் நாம் Offline ஆவது எப்படி? என்ற பதிவை பார்க்கவும்.

பெண்களின் மானத்தை விலை பேசும் Camera & face book திருகுதாளங்களும் தற்காப்பும்!

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபுறம் எம்மை தினம் தினம் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வரும் அதேவேளை மறுபுறம் எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியும் வருகிறது. எதை எந்த நோக்கதிற்காக பயன்படுத்தினால் மனிதகுலத்திற்கு நன்மை கிட்டுமோ அதை அப்படி பயன்படுத்த வேண்டும். ஆனால் இன்றைய உலகின் யதார்த்தம் அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது.
நீங்கள் நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள். பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவன் கடுமையாக தண்டிப்பவன் (அல்-குர்ஆன் 5:02)
தன் சக மனிதனுக்கு கேடுவிளைப்பதையே தனது தினசரி தொழிலாக நினைத்து செயல்பட தொடங்கி விட்டான் மனிதன். பணத்திற்காக எதையும் செய்ய துணிந்து விட்டான். அந்த வகையில் பெரும்பான்மை மக்களால் கவனிக்கபடாத உடை கழட்டும் ஒரு வக்கிர சைக்கோ கூட்டத்தை தோலுரிப்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.

கையடக்க கேமராக்கள், மொபைல் வீடியோ கேமராக்கள், மறைமுகமாக பொருத்தி பதிவு செய்யும் மிகச் சிறிய கேமராக்கள் என்பது இன்றை நவீன உலகில் மிகப் பிரபலமாக மிக சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக் கூடிய ஒன்றாக இருக்கிறது.

இதை எத்தனை பேர் நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி! மொபைல் கேமராக்கள், கையடக்க வீடியோ கேமராக்கள் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் அதை தடுக்கும்- தவிர்க்கும் வழிமுறையையும் இக்கட்டுரையில் விரிவாக காண்போம்.

பொது இடங்களில் கேமராக்கள்:

பொது இடங்களில் – குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்கட் போன்ற பொது இடங்களில் வரும் பெண்களை மொபைல் கேமராக்கள் மூலம் படமெடுத்து இன்டர்நெட்டில் வைத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலாசாரம் பெருகி வருகிறது. ஆடை விலகிய நிலையில் பல குடும்பப் பெண்களின் படங்கள், வீடியோக்களை இன்டர்நெட்டில் வெளியிட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

கேமராவுடன் உள்ள தொலைபேசிகளை கையில் வைத்துக் கொண்டு பொது இடங்களில் நடமாடும் பெண்களை அவர்கள் அறியாவண்ணம் சமயம் பார்த்து ஆபாசமாகப் படம் பிடிக்கும் ஈன மனம் படைத்தோர் இன்றிய உலகில் நம்மத்தியில் பெரும் அளவில் பெரு கிவிட்டனர்.

கல்லூரி விடுதிகளில்:

கல்லூரி மற்றும் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கும் மாணவிகள் அவர்களின் அறைகளில் – மற்றும் மலசல கூடங்கள், குளியலறைகளில் கேமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதில் கவனம் செலுத்த வேண்டும். அண்மையில் இந்தியாவில் ஒரு கல்லூரி விடுதியிலிருந்து 09 கமராக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Face Book,TWITTER- ORKUT போன்ற தளங்களில் பல பெண்கள் தங்கள் புகைப்படத்தை UPLOADசெய்து இருகிறார்கள். சில மோசடிக்காரர்கள் அதை தேடி டவுன்லோட் செய்து கொண்டு PHOTOSHOP SOFTWARE துணைகொண்டு அந்த பெண்களின் முகங்களை நிர்வாண போட்டோவோடு இணைத்து, அதை இன்டர்நெட்டில் விற்று பணம் சம்பாதிக்கின்றனர்.

மேலும் பாடசாலை மாணவிகளின் போட்டோக்களை பாடசாலைகளில் வெளிவரும் வருடாந்த இதழ், மற்றும் ஏனைய வெளியீடுகளில் தனியாகவும் குழுவாகவும் உள்ள போட்டோக்களை வெளியிடுகின்றனர். அந்தக் குழு போட்டோவில் உள்ள பெண் பிள்ளைகளின் முகங்களை வெட்டியெடுத்து வேறு ஒரு ஆடவனுடன் அல்லது நிர்வாண போட்டோவுடன் இணைத்து வலையமைப்புக்களிலும் பேஸ் புக்கிலும் பலர் பயன்படுத்தி வருகின்றனர்.

பெற்றோர்கள் தங்களது பெண் பிள்ளைகளை பேணிப் பாதுகாப்பதில் முழு மூச்சுடன் பாடுபட்டு வருகின்ற அதேவேளை, அல்லாஹ்வையும் ரசூலையும் ஈமான் கொண்ட எந்தவொரு பெற்றோரும் இதனை அனுசரிக்கவுமாட்டார்கள். இருந்த போதிலும் பாடசாலைகளில் இவ்வாறு புகைப்படம் வெளியிட்டு மாணவிகளின் எதிர்காலத்திற்கு பங்கம் விளைவிக்கும் இவ்விடயத்தை தடை செய்வதில் உரியவர்கள் சிந்தித்து செயற்படுவதுடன் பெற்றோர்களும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

நம்மையறியாமலேயே நம்மை போட்டோ, வீடியோ எடுத்து மற்றவர்களுடன் இன்டர்நெட்டில் பகிர்ந்து கொள்ளும் கலாசாரம் தற்போது மிக சாதாரணமாக எமது நாட்டிலும் பரவி வருகிறது. இது முழுக்க முழுக்க பெண்களை குறி வைத்தே நடந்து வருகிறது. அப்பாவியான பல பெண்கள் இதற்கு பலியாகி வருகிறார்கள்.

பொது மலசல கூடங்கள், குளியலறைகள், ஹோட்டல் அறைகள்:

பொது மலசல கூடங்களுக்கு செல்வோர், பொது குளியலறைகளை பயன்படுத்துதோர் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும்போது வேலை நிமித்தமாக அங்கு ஹோட்டல்கள், லொட்ஜ்களில் தங்க நேரிடும்போது அங்குள்ள அறைகளை பயன்படுத்தும் போதும், மலசல கூடம், குளியலறைகளிலும் கேமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா? என்று நன்றாக கவனித்துப் பார்க்கவும். தங்களுக்கு தெரியாமல் தங்களை, தங்கள் செயல்களை படமெடுக்கும் கேமராக்கள் அங்கு பொருத்தப் பட்டிருக்கலாம். ஆகவே கவனம் தேவை.

நெடுந்தூர பயணம் செய்யும் போது பெரும்பாலான மக்கள் பஸ் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். அவ்வாறு பஸ் பயணம் செய்யும் போது அந்த பஸ்கள் வெளி ஊர்களிலுள்ள உணவகங்களில் நிறுத்தப்படுகின்றன. அப்படி பஸ்ஸில் பயணம் செய்பவர்கள் அத்தகைய உணவங்களில் உள்ள மலசல கூடங்களைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

அப்படிப்பட்ட உணவகங்களில் உள்ள சில மலசல கூடங்களில் வீடியோ கேமராக்களை மறைத்து வைத்து விடுகின்றனர். அங்கு மறைத்து வைக்கப்பட்டு இருக்கும் கேமராக்கள் மூலமாக அவர்களை ஆபாசமாகப் படம் பிடித்து அதனை உடனே குறுந்தகடுக்கு மாற்றி விற்று விடுகின்றனர். மேலும் இவற்றை சீடியாக மாற்றுவதோடு நின்று விடாமல் அதை இணையம் வரை கொண்டு சென்றும் பணம் சம்பாதிக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, ஹோட்டலில் திருமணம் செய்து கொள்பவர்கள் அங்கே தங்கி விட்டும் வருகின்றனர். இவர்களை குறி வைத்தும் ஹோட்டல் அறைகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம். ஹோட்டலில் தங்கும்போது அது நல்ல நம்பகமான தங்கும் விடுதியா என்று முடிந்தவரை உறுதி செய்து கொள்ள வேண்டும். இந்தக் கொடுஞ்செயலை எதிர்த்து நாம் போராடுகிறோமோ இல்லையோ குறைந்தபட்சம் நாமோ நமது குடும்பத்துப் பெண்களோ இது போல பொது இடங்களில் உள்ள மலசல கூடங்களைப் பயன்படுத்துவதை தவிர்த்து விடலாம் அல்லவா?.

மருத்துவமனைகளிலும் கவனம் தேவை!

மருத்துவமனைகளுக்கு செல்லும் பெண்கள் தனியாக செல்லாதீர்கள். தங்களால் முடியுமான வரை பெண் வைத்தியர்களை நாடுவது சிறந்ததாகும். அல்லது தக்க துணையுடன் செல்ல வேண்டும். மருத்துவமனைகளிலும் தங்கள் ஆடைகளை நெகிழ்த்தும் போதும் ஆடைகளை மருத்துவ காரணங்களுக்காக விலக்கும் போதும் கவனமாக இருங்கள். கேமராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்பதை கவனித்து உறுதி செய்து கொள்ளுங்கள், மருத்துவமனைகளில் பரிசோதனைக்காக என்று எதாவது மருந்துகளை உட்கொள்ள சொல்லும் போதும் கவனம் தேவை உடனிருப்பவர்கள் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். சில மருத்துவர்கள் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து அவர்களை ஆடையின்றி படமெடுத்து- வீடியோவாகவும் புகைப்படமாகவும் இன்டர்நெட்டில் விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தும் வருகின்றனர். ஆகவே மருத்துவமனைகளுக்கு செல்லும் நமது பெண்கள் தக்க துணையுடனும் சென்று அங்கு மிக்க கவனத்துடனும் இது பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது சிறந்ததாகும்
.
புடவைக் கடைகளில் TRAIL ROOM கேமரா!

நாம் துணிக் கடைகளுக்கு செல்வது இயல்பானது. அங்கு உடைகளைப் போட்டு பார்த்து சரிபார்க்க சிறிய அறை பெண்களுக்காக பெரிய கடைகளில் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த துணிக் கடைகளின் உடைகளை போட்டு சரிபார்க்கும் அறைகளைப் பயன்படுத்தும் பெண்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.

ஏனென்றால் அங்கு ண்டிப்பாக கேமராக்கள் தங்களை கண்காணிக்கப் பொறுத்தப் பட்டிருக்கும், வேறு நோக்கத்தில் இல்லை என்றாலும் துணிகள் களவு போகிறதா? துணிகளை மறைக்கிறார்களா என்று பார்ப்பதற்காகவாவது அங்கு கேமராக்கள் பொருத்தப் பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். கேமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை என்றாலும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும்.

TRAIL ROOM CAMERAக்களை கண்டறியும் முறை:

TRAIL ROOM CAMERAல் இருந்து கொண்டு செல்போன் மூலமாக யாருகாகவாவது call செய்து பார்க்க வேண்டும். உங்கள் அழைப்பு- நீங்கள் அழைத்தவரை சென்றடைந்தால் அந்த அறையில் ரகசிய கமராக்கள் இல்லை. ஒருவேளை உங்கள் அழைப்பு நீங்கள் திரும்ப திரும்ப அழைத்தும் call செல்லவில்லை என்றால் அங்கு ரகசிய கமரா இருப்பது உறுதி என்று பொறியியலாளர்கள் கூறுகிறார்கள்.

TRAIL ROOM; கண்ணாடி

இவைகளைகப் பற்றியும் நாம் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது. கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலிப்பது ஒரு வகை. இன்னொரு வகை நாம் பார்க்கும்போது கண்ணாடியாக நம்மை பிரதிபலிக்கும். ஆனால் மறுபக்கத்திலிருந்து அதாவது கண்ணாடிக்கு அடுத்த பக்கம் பார்ப்பவர்களுக்கு ஒளிவு, மறைவு இல்லாமல் நம்மைக் காட்டும். இந்த இரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றித்தான் நாம் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த உடை மாற்றும் அறைகளில் இந்த கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது தங்களை படமெடுக்கலாம். ஆகவே இவைகளை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

உங்கள் விரல் நுனியை கொண்டு கண்ணாடியை தொடும்போது சிறு இடைவெளி தெரிந்தால் அது சாதாரண கண்ணாடி, இடைவேளை இல்லாமல் தெரிந்தால் அது உங்களை வேவுபார்க்கும் கண்ணாடி என்று அறிந்து கொள்ளலாம்.

ஹிஜாப் அணியும் பெண்களுக்கு பாதுகாப்பு!

இஸ்லாம் காட்டித்தந்த ஹிஜாப் அணியும் இஸ்லாமிய பெண்கள் இந்த பிரச்சினையில் இருந்து இயல்பாகவே பாதுகாக்கபடுவார்கள்- இன்ஷா அல்லாஹ். இருப்பினும் இவை பற்றிய விழிப்புணர்வு முழுமையாக தேவை. ஏனெனில் ஹோட்டல், தங்கும் விடுதியில் இருக்கும் தூங்கும் அறை, கழிவறை போன்ற இடங்களில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எல்லா இடங்களிலும் நாம் சந்தேகபட முடியாது, எல்லா இடங்களையும் இது நம்பகமானது என்று நம்பவும் முடியாது. ஆதலால் முடிந்தவரை நம்பகத்தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய இறுதி ஹஜ்ஜின் போது; தனது நன்நெறித் தோழர்களுக்கு ஆற்றிய உரையில் பின்வருமாறு குறிப்பிட்டார்கள். இந்த மாதமும் இந்த புனிதமிக்க மக்கமா நகரமும் இந்த நாளும் எப்படி புனிதமானதோ, அவ்வாறே ஒரு முஸ்லிமின் உயிரும் உடமையும் மானமும் மரியாதையும் புனிதமானவை என்றார்கள். (புகாரி 67)

ஆகையினால் நவீன தொழில் நுட்பத்தின் பாரதூரமான விளைவுகளில் இருந்து நம்மையும் பாதுகாத்து மற்றோரையும் பாதுகாப்பதற்கு விழிப்புடன் செயற்படுவோம்.

Aug 3, 2012

பெண்ட்ரைவ் மற்றும் போர்ட்டபிள் டிவைஸ்களை பார்மெட் செய்ய


பெண்ட்ரைவ் மற்றும் போர்ட்டபிள் ட்ரைவர்களில் வைரஸ்கள் புகுந்துவிடும் இவற்றை அழிக்க முயற்ச்சித்து பார்ப்போம் ஆனால் கடைசியில் முடியாது. இறுதியாக ட்ரைவரினை பார்மெட் செய்துவிடலாம் என்ற முடிவிற்கு வருவோம் பின் அவற்றை நம்முடைய கணினியுடன் பொருத்தி விண்டோஸ் பார்மெட் செய்வோம் ஆனால், விண்டோஸ் இயங்குதளமோ இந்த டிவைஸ்யை பார்மெட் செய்ய இயலாது என்ற கோளாரு செய்தியை காட்டும் இவற்றை சரிசெய்து எப்படியாவது பார்மெட் செய்து விடவேண்டும் என நினைப்போம் ஆனால் கடைசியில் ஏமாற்றமே மிஞ்சும். இதுபோல் விண்டோஸ் இயங்குதளத்தில் பார்மெட் ஆகாத ட்ரைவர்களை மூன்றாம் தர மென்பொருள்களின் உதவியுடன் பார்மெட் செய்து கொள்ள முடியும். இதற்கு ஒரு இலவச மென்பொருள் உதவி செய்கிறது. இவ்வாறு பார்மெட் செய்வதால் டிவைஸ்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது.

மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிகொள்ளவும். பின் கணினியை ஒருமுறை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். அதில் கணினியுடன் இணைக்கப்பட்டுள்ள போர்ட்டபிள் ட்ரைவர்கள் பட்டியலிடப்படும் அதனை தேர்வு செய்து பார்மெட் செய்து கொள்ள முடியும். ஒரு சில மெமரி கார்டுகள் விண்டோஸ் இயங்குதளத்தில் பார்மெட் ஆகாது, அதுபோன்ற ட்ரைவர் சாதனங்களை எளிமையாக பார்மெட் செய்ய இந்த மென்பொருள் மிகவும் உதவியாக இருக்கும்.

பாடல்களை கட் செய்ய - MP3 Cutter


செல்போனில் அனைவருக்கும் புதுப்புது பாடல்களை அழைப்பு ஒலியாக வைக்க விரும்புவோம். இதற்காக பாடல்களை இணையத்தில் தேடிப்பிடித்து தரவிறக்கம் செய்து பயன்படுத்துவோம். எல்லா பாடல்களும் கிடைத்து விடாது ஒரு சில பாடல்கள் முழுபாடல்களாக மட்டுமே கிடைக்கும், அதுபோன்ற பாடல்களை தனியே கட் செய்து நமக்கு வேண்டிய பகுதியை மட்டும் பயன்படுத்தி கொள்ள வேண்டுமெனில் ஏதாவது ஒரு மென்பொருளின் உதவியை நாடி செல்ல வேண்டும். பாடல்களை கட் செய்ய இணையத்தில் பல்வேறு இலவச மென்பொருள் கிடைகிறன, அந்த வகையில் நமக்கு உதவி செய்யும் மென்பொருள்தான்  MP3 Cutter.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் இந்த MP3 Cutter  மென்பொருளை ஒப்பன் செய்யவும். பின் எந்த பாடலை கட் செய்ய வேண்டுமோ அதை File வழியாக சென்று ஒப்பன் செய்யவும். பின் உங்களுடைய பாடலானது அப்லோட் செய்யப்பட்டு மென்பொருளில் ஒப்பன் ஆகும்.


பின் வேண்டிய பகுதியை தேர்வு செய்து கட் செய்து கொள்ளவும். பின் நீங்கள் கட் செய்த பாடலை சேமித்து கொள்ளவும். அவ்வளவு தான் இனி நீங்கள் விரும்பிய பாடலில் எந்த பகுதியை வேண்டுமானலும் அழைப்பு ஒலியாக மட்டுமல்ல நீங்கள் விரும்பும் பாடலாகவும் வைத்துக்கொள்ள முடியும். இந்த மென்பொருள் பாடல்களை கட் செய்ய அருமையான மென்பொருள் ஆகும்.

விண்டோஸ் ரிஸிஸ்ட்டரியை இருப்புநிலைக்கு கொண்டுவர


விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தின் முதுகெலும்பு விண்டோஸ் ரிஸிஸ்ட்டரி ஆகும். இந்த விண்டோஸ் ரிஸிஸ்ட்டரியில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அதனால் நம்முடைய இயங்குதளத்தில் பல்வேறு குறைபாடுகள் எழ வாய்ப்புண்டு. விண்டோஸ் தொடங்குவதில் இருந்து மற்ற அப்ளிகேஷன்களை பயன்படுத்துவது வரை அனைத்தும் தாமதமாகவே இருக்கும். இதுபோன்ற குறைபாடுகளை களைய வேண்டுமெனில் நம்முடைய விண்டோஸ் ரிஸிஸ்ட்டரியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை சரிசெய்ய வேண்டும். விண்டோஸ் ரிஸிஸ்ட்டரியில் ஏதேனும் மதிப்புகள் (Value) மாறியிருப்பினும் விண்டோஸ் இயங்குதளத்தில் பிரச்சினை எழ வாய்ப்புண்டு. மேலும் இருப்பியல்பு கோப்பறைகளையும் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரவும். விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை மேம்படுத்தவும், விண்டோஸ் ரிஸிட்டரியை பழைய நிலைக்கு கொண்டுவருவதன் மூலமாகவே சரிசெய்ய முடியும்.

கணினியில் பல்வேறு மென்பொருளை நிறுவி பயன்படுத்துவோம் பிடிக்கவில்லையெனில் அதனை நம்முடைய கணினியில் இருந்து அகற்றிவிடுவோம். இவ்வாறு அகற்றும் மென்பொருள்களால் விண்டோஸ் ரிஸிட்டரியில் ஏற்படும் பாதிப்புகளால் கணினியானது மந்த நிலைக்கு செல்லும், மேலும் கணினி தொடக்கத்திலும் பல குறைபாடுகள் எழ வாய்ப்புண்டு. இதனை சரிசெய்ய வேண்டுமெனில் விண்டோஸ் ரிஸிஸ்ட்டரியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும். விண்டோஸ் ரிஸிஸ்ட்டரியை இருப்பியல்பாக மாற்ற ஒரு இலவச மென்பொருள் உதவுகிறது.

மென்பொருளை பதிவிறக்க சுட்டிமென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்துகொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். இதில்  Refresh my Windows settings என்னும் பொத்தானை அழுத்தவும். பின் சிலமணி நேரங்களில் அனைத்து நடவடிக்கைகளும் முடிவுற்று முடிவுகள் தெரியவரும். விண்டோஸ் ரிஸிஸ்ட்டரி இருப்புநிலைக்கு கொண்டுவரப்பட்டது, இருப்பியல்பு கோப்பறைகள் மாற்றப்பட்டு, அனைத்தும் பழைய நிலைக்கு மாற்றப்பட்டிருக்கும். இப்போது கணினியை மறுதொடக்கம் செய்யுங்கள் முன்பு இருந்த கணிப்பொறி தொடக்கத்திற்கும், தற்போது இருக்கும் தொடக்கத்திற்கும் மாற்றம் தெரியும்.  கணினியில் இயக்கமும் வேகமடையும். பயன்படுத்தி பாருங்கள் பயனுள்ளதாக இருக்கும்.

ISO இமேஜ்களை பெண்ட்ரைவ் மற்றும் CD/DVDக்களில் பூட்டபிள் பைல்களாக மாற்ற


ISO பைல்களை பூட்டபிள் பைல்களாக மாற்றம் செய்ய நாம் நீரோ அல்லது Poweriso, MagicISO, ISO Burner இதில் எதாவது ஒரு ரைட்டிங் சாப்ட்வேரினை பயன்படுத்தியே மாற்றம் செய்வோம். ISO பைல்கள் பெரும்பாலும் அதிக அளவுடையதாகவே இருக்கும். இந்த ISO பைல்களை நாம் பெண்ட்ரைவ்களில் பூட்டபிள் பைல்களாக மாற்றம் செய்ய ஒரு அருமையான மென்பொருள் உள்ளது. ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தினை நாம் USB வழியாக பூட் செய்ய இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த மென்பொருளானது Freeware அப்ளிகேஷன் ஆகும். 

மென்பொருளை தரவிறக்க சுட்டி
இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பின் இந்த மென்பொருளை Unzip செய்துகொள்ளவும்.  IsoBurner என்பதன் மீது வலதுகிளிக் செய்து தோன்றும் பாப்அப் விண்டோவில் Run as Administrator என்பதை தேர்வு செய்யவும். பின் ஒப்பன் ஆகும் விண்டோவில் உங்களுக்கு விருப்பமான தேர்வை ஒகே செய்து விட்டு Next பொத்தானை அழுத்தி பூட்டபிள் பைலை உருவாக்கி கொள்ள முடியும். 

இந்த மென்பொருளின் உதவியுடன் நாம் பெண்ட்ரைவுகளிளும் பூட்டபிள் பைல்களை உருவாக்க முடியும். நேரிடையாக CD/DVDக்களில் ISO இமேஜ்களை  ரைட் செய்யவும் முடியும்.

கணினியை பராமரிக்க - Wondershare Live Boot 2011 இலவசமாக


நம்முடைய கணினியை பயன்படுத்தும் போது பல்வேறு விதமான பிரச்சினைகள் எழக்கூடும். உதாரணமாக விண்டோஸ் சரியாக இயங்க மறுப்பது, முதன்மை பயனாளர் கடவுச்சொல் கோளாறு இதுபோன்று பல்வேறு பிரச்சினைகள் எழும். சில நேரங்களில் நமக்கே விண்டோஸ் இயங்குதளத்தில் பல்வேறு வேலைகள் இருக்கும். விண்டோஸ் பேக்அப், வன்தட்டு சீரமைப்பு,  கடவுச்சொல் மீட்டெடுப்பு மற்றும் தகவல் மீட்டெடுப்பு போன்ற பயன்பாடுகள் ஒவ்வொன்றிற்கும் நாம் தனித்தனி மென்பொருள்களின் உதவியினை நாடி செல்ல வேண்டும். இந்த அனைத்து பயன்பாடுகளையும் உள்ளடக்கிய ஒரு மென்பொருள் உள்ளது. அந்த மென்பொருள் தற்போது இலவசமாக கிடைக்கிறது. அதுதான் Wondershare Live Boot 2012. இந்த மென்பொருள் மூலமாக 40+ மேற்பட்ட விண்டோஸ் பயன்பாடுகளை மிக எளிமையாக செய்ய முடியும்.

இலவச லைசன்ஸ் கீ பெற சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் உள்ளிட்டு Get it Now என்னும் பொத்தானை அழுத்தவும். இந்த இலவச கீயானது ஆகஸ்ட் 12 வரை மட்டுமே கிடைக்கும். தற்போது நீங்கள் குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு இலவச கீயுடன், ஒரு மின்னஞ்சல் முகவரியும் அனுப்பபட்டிருக்கும். அதை சரியாக குறித்து வைத்துக்கொள்ளவும். இந்த மென்பொருடைய சந்தை மதிப்பு $59.95 ஆகும்.


மென்பொருளை தரவிறக்க சுட்டி

சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவவும்.


இந்த மென்பொருளை முழுமையாக தரவிறக்கி உங்கள் கணினியில், மின்னஞ்சலில் வந்த மின்னஞ்சல் முகவரி மற்றும் லைசன்ஸ் கீயை பயன்படுத்தி மென்பொருளை முழுமையாக உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும்.பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.


பின் உங்கள் விருப்பபடி Wondershare Live Boot னை உருவாக்கி கொள்ள முடியும். யுஎஸ்பி ட்ரைவ் மற்றும் சீடி/டிவிடி ட்ரைவினை பயன்படுத்தி, இந்த Wondershare Live Boot 2012 னை உருவாக்க முடியும். நான் தற்போது யுஎஸ்பி ட்ரைவினை பயன்படுப்த்தி இதனை செய்யப்போகிறேன்.


தற்போது தோன்றும் விண்டோவில் How to create LiveBoot bootable USB drive? என்னும் தேர்வினை அழுத்தி, Burn USB drive Now! என்னும் பொத்தானை அழுத்தவும்.


தற்போது  யுஎஸ்பி ட்ரைவில் Wondershare LiveBoot 2012 பூட்டபிள் கோப்பாக இருக்கும். இதனை உங்கள் கணினியின் யுஎஸ்பி ட்ரைவில் இட்டு, கணினியை மறுதொடக்கம் செய்து பயாஸில் யுஎஸ்பி ட்ரைவில் இருந்து பூட் ஆகுமாறு அமைத்துக்கொள்ளவும். இல்லையெனில் பூட்டிங் அமைப்பை மட்டுமாவது யுஎஸ்பி ட்ரைவில் இருந்து பூட் ஆகுமாறு மாற்றியமைத்துக்கொள்ளவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Boot from LiveBoot மற்றும் Boot from hard diskMicrosoft என்று இரண்டு தேர்வுகள் இருக்கும் அதில் Boot from LiveBoot என்பதை தேர்வு செய்து என்டர் பொத்தானை அழுத்தவும்.


WinPE தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தற்போது விண்டோஸ் பைல்களுடன் சேர்ந்து Wondershare LiveBoot 2012 பூட் ஆக தொடங்கும்.


தற்போது கணினி வழக்கம் போல் பூட் ஆகி செயல் படும், பின் நீங்கள் Wondershare Live Boot 2012 னை ஒப்பன் செய்யவும். சாதரணமாகவே Wondershare Live Boot 2012 ஒப்பன் செய்யப்பட்டிருக்கும். பின் உங்களுக்கு வேண்டிய செயல்பாடுகளை இந்த மென்பொருளின் உதவியுடன் செய்து கொள்ள முடியும்.

இது போன்று இன்னும் பல்வேறு வசதிகள் இந்த மென்பொருளில் மறைந்துள்ளன. இந்த மென்பொருள் விண்டோஸ் பயன்பாட்டாளர்களுக்கு வரப்பிரசாதம் ஆகும். கூடவே இந்த மென்பொருள் தற்போது இலவசமாகவும் கிடைக்கிறது. விண்டோஸில் உள்ள 40கும் மேற்பட்ட பயன்பாடுகளை நம்மால் எளிமையாக செய்ய முடியும். பயன்படுத்தி பார்த்துவிட்டு பின் உங்கள் பதிலை கூறவும்.

F-Secure 2011 ஆண்டிவைரஸ் 6மாதம் இலவசமாக பதிவிறக்கம் செய்ய


கணினியில் இருக்க வேண்டிய முக்கியமான மென்பொருட்களில் ஆண்டிவைரஸ் மென்பொருளும் ஒன்றாகும். அதுவும் இணைய இணைப்பு இருந்தால் கண்டிப்பாக ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருள் நம்முடைய கணினியில் நிறுவியிருக்க வேண்டும். கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவி ஒரு மாதம் கூட இல்லை அதற்குள் கணினியில் பல வைரஸ்கள், கணினியானது மந்தமாக வேலை செய்கிறது போன்ற செய்திகளை நண்பர்களிடம் கேட்டிருக்கலாம். இதற்கு காரணம் அவர்கள் கணினியில் ஆண்டிவைரஸ் இன்ஸ்டால் செய்யாமல் இருப்பார்கள். அல்லது ஆண்டிவைரஸ் மென்பொருளை மேம்படுத்தாமல் இருப்பார்கள். இல்லையெனில் இணையத்தில் இருந்து ஆண்டிவைரஸ் மென்பொருளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவர் அது குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு வேலை செய்யாது. கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவியவுடனே இன்ஸ்டால் செய்ய வேண்டிய மென்பொருள் என்றால் அது ஆண்டிவைரஸ் மென்பொருள் மட்டுமே ஆகும். இது போன்ற ஆண்டிவைரஸ் மென்பொருட்களை பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்தினால் மட்டுமே நன்றாக இருக்கும். இல்லையெனில் அவையாவும் சிறப்பாக அமையாது பணம் கொடுத்து வாங்க முடியாத கணினி பயனாளர்கள் இலவசமாக ஆண்டிவைரஸ் நிறுவனமே கொடுக்கும் போது அதனை பயன்படுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும். அதுபோல் தான் தற்போது F-Secure ஆண்டிவைரஸ் மென்பொருளானது தற்போது 6 மாத இலவசமாக கிடைக்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, முகநூல் (Facebook) பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும். பின் Like என்னும் பொத்தானை அழுத்தவும். Like பொத்தானை அழுத்தியவுடன் முகப்புதிரையானது விலகும். அதில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரி மற்றும் நாட்டினை தேர்வு செய்யவும். இந்தியாவாக இருந்தால் (INDIA) என்பதை தேர்வு செய்து Submit பொத்தானை அழுத்தவும். உங்களுக்கான கடவுச்சொல் உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பபடும்.அடுத்ததாக மின்னஞ்சல் முகவரியை ஒப்பன் செய்து, புதியதாக வந்துள்ள மின்னஞ்சலை ஒப்பன் செய்யவும். அதில் லைசன்ஸ் கீ மற்றும். ஆண்டிவைரஸ் மென்பொருளை பதிவிறக்கம் செய்வதற்கான சுட்டி கிடைக்கும். மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி, லைசன்ஸ் கீயை பயன்படுத்தி மென்பொருளை உங்களுடைய கணினியில் முழுமையாக பதிந்து கொள்ளவும்.


இந்த லைசன்ஸ் கீயினை கொண்டு F-Secure இண்டர்நெட் செக்கியூரிட்டியை 6 மாதம் வரை மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும். இந்த ஆண்டிவைரஸ் மென்பொருளானது கணினிக்கு மிகவும் பாதுகாப்பான ஆண்டிவைரஸ் மென்பொருள் ஆகும். இண்டர்நெட் தொடர்பான அனைத்து மால்வேர்களையும் கட்டுபடுத்த முடியும். ஸ்பைவேர்கள் நம்கணினியில் இருந்து தகவல்களை திருடாமல் இருக்கவும் இந்த மென்பொருள் உதவி செய்கிறது. வைரஸ், மால்வேர் தொடர்புடைய வெப்சைட்களையும் இந்த ஆண்டிவைரஸ் மென்பொருள் முடக்குகிறது.