Jun 10, 2012

பி.எஃப் கணக்கு தகவல் - ஆன்லைனில்

பி.எஃப் கணக்கு தகவல் - ஆன்லைனில்

பி.எஃப்.( PF - Provident Fund ) கணக்குதாரர்கள் அவர்கள் கணக்கில் இருக்கும் இருப்பு தொகையை இணையதளத்திலேயே (ஆன்லைன்) பார்க்க முடியும்.

இதற்கு கீழே உள்ள பி.எஃப். அமைப்பின் இணையதள இணைப்பை கிளிக் செய்யவும்.

http://epfoservices.in/epfo/member_balance/member_balance_office_select.php

அதன் அடியில் 'Click Here to know the balance' என்கிற பகுதியை சொடுக்கினால், இன்னொரு பக்கம் தோன்றும் அதில் உங்களின் மாநிலம், நகரத்தை தேர்வு செய்ய வேண்டும்

அதன் பிறகு உங்கள் பி.எஃப். எண் மற்றும் உங்களின் பெயர் (பி.எஃப்.கணக்கில் இருப்பது போல்), உங்களின் செல்போன் நம்பர் ஆகியவற்றைக் கொடுத்தால் எஸ்.எம்.எஸ் மூலம் உங்களுக்குத் தகவல் வந்து சேரும்.

கூகுள் கிளாஸ்

குடிக்குற கிளாஸ் இல்லப்பா இது.. 
கூகுள் கண்ணாடி( Google Glass ) எப்படிச் செயல்படும் என்பதை விளக்கி வீடியோ ஒன்றைத் தயாரித்திருக்கிறது கூகுள். அதிகாலையில் படுக்கையில் இருந்து எழுந்த பயனீட்டாளர், கூகுள் கண்ணாடியை எடுத்துப் போட்டுக்கொண்டு அந்த நாளை ஆரம்பிக்கிறார். காபி குடிக்கும்போது அன்றைய நாளுக்கான திட்டங்களை அவரது காலண்டரில் இருந்து எடுத்துக்காட்டுகிறது கூகுள் கண்ணாடி. மதியம் 2 மணிக்கு நண்பரைப் புத்தகக் கடை ஒன்றில் சந்திக்கும்படி சொல்லிவிட்டு வீட்டைவிட்டுக் கிளம்புகிறார். பிடித்த இசையை ஒலிக்கச் செய்துகொள்கிறார். ரயில் நிலையம் அருகில் வரும்போது, ரயில் ரத்தாகிவிட்டது என்ற செய்தி வருகிறது. 'அதற்குப் பதில் நடந்து செல்கிறீர்களா?’ என்றபடி நடந்துபோகும் பாதையைத் தெளிவாகக் காட்டுகிறது. செல்லும் வழியில் ஒரு நிகழ்ச்சியின் போஸ்டர் பார்த்து, அதில் கலந்துகொள்ள முன்பதிவு செய்ய வேண்டும் என்பதைப் பதிவுசெய்கிறார். புத்தகக் கடை யில் நுழைந்து நண்பருக்குக் காத்திருக்கிறார். ஒரு புத்தகம் வாங்குகிறார். நண்பர் எங்கே இருக்கிறார் என்பதைக் கேட்கிறார். நண்பர் அவரது இருப்பிடத்தை 'ஷேர்’ செய்யவும் இருவரும் சந்திக்கிறார்கள்.  இருவரும் ஒரு காபிக் கடையில் காபி அருந்துகிறார்கள். அந்த இடத்தை கூகுள் கண்ணாடியில் பதிந்துகொள்கிறார். பிறகு, நடந்து வரும் வழியில் இருக்கும் அழகான ஓவியம் ஒன்றைப் புகைப்படம் எடுத்து தனது கூகுள் ப்ளஸ்ஸில் தரவேற்றம் செய்கிறார். வீடு வந்து சேர்ந்ததும், மாடிக்குச் செல்கிறார். அவரது காதலி அழைக்க 'பாடலை நிறுத்து’ என்று கட்டளையிட்டு, அவருடன் வீடியோ சாட்டில் பேசுகிறார். 'உனக்கு ஒரு ஆச்சர்யம்!’ என்றபடி மொட்டைமாடியின் முகப்பில் நின்றுகொண்டு கிதாரை வாசிக் கிறார். எதிரே கடலின் பின்னணியில் சூரிய அஸ்தமனக் காட்சியைக் காதலியும் பார்க்கும் வகையில் ஷேர் செய்துவிட்டு கிதார் வாசிக்கிறார். காதலி அதை ரசிக் கிறார்.

மேலும் தெரிந்து கொள்ள,
https://plus.google.com/111626127367496192147/posts

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=9c6W4CCU9M4

ஹார்ட் டிஸ்க் சிக்கலா??!!

chkdsk.exe என்னும் பைலை பயன்படுத்தி ஹார்ட் டிஸ்க்கில்(hard disk) ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைகளை அறியலாம். இது ஒரு DOS புரோகிராம் ஆகும். 
தேர்ந்தெடுக்கப்பட்ட டிரைவில்(drive) அல்லது முழு டிஸ்க்கை இந்த
 பைல் சோதனை செய்து பிரச்சினைகள் இருந்தால் அவற்றைச் சரி செய்திடும்.
எனவே கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் மாதம் ஒரு முறையேனும் இந்த பைலை இயக்கிப் பார்த்தல் நல்லது..
இதை பைலை இயக்க, ஸ்டார்ட் அழுத்தி கிடைக்கும் ரன் விண்டோவில் ‘command’ அல்லது ‘cmd’ என டைப்செய்து என்டர் செய்தால் கிடைக்கும் விண்டோவில் கீழ்காணும் கட்டளையை இயக்கவும்..

c:\>chkdsk e:
இது ஹார்ட் டிஸ்க்கின் 'e' டிரைவை சோதனை செய்யும்..

c:\>chkdsk e: /f /r


/f என்னும் கட்டளை டிஸ்க்கினை சோதனை செய்கையில் ஏதேனும் பிழைகளைக்கண்டால்; தானாகவே சரிசெய்துவிடும்..
/r என்னும் கட்டளை பழுதாகிப்போன மீண்டும் பயன்படுத்த முடியாத டிஸ்க்கிக் பகுதிகளை( Bad Sectors ) கண்டறிந்து அதிலுள்ள தகவல்களை மீட்டுத்தர முயற்சிக்கும்..


இந்த செக்டிஸ்க் கட்டளை கொடுத்தபின் கம்ப்யூட்டரை ரீ-ஸ்டார்ட் செய்யவும்..பூட் ஆகும் போது செக்டிஸ்க் தானாக இயங்கி விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்ட்டம் திரைக்கு வந்துவிடும்..

குறிப்பு
 • இந்த பைலை இயக்க ஒரு கம்ப்யூட்டருக்குள் நீங்கள் அட்மினாக (admin)நுழைந்திருக்க வேண்டும்.

 • ஹார்ட் டிஸக்கில் உள்ள தவறுகளை இந்த கட்டளை திருத்த வேண்டுமென்றால் நீங்கள் கம்ப்யூட்டரில் உள்ள எந்த பைலையும் திறந்து வைத்திருக்கக் கூடாது.. 
இப்பத்தான் நான் சோதனை செய்து முடித்தேன் என்னுடைய டிஸ்க்கில் இப்போதைக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை..ம்ம்..அப்பாடி..

இலவச பைல் பகிர்வு

பின்வரும் வெப்சைட்டுகள்(website) இலவச இடம் கொடுத்து நம் பைல்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள உதவுகின்றன். இந்த வெப்சைட்டுகளில் இலவச கணக்கை ஆரம்பித்தோ அல்லது ஆரம்பிக்காமலோ நம் பைல்களை(files) மற்றவருடன் பகிர்வு செய்யலாம்.. நீங்கள் உங்கள் பைலை அப்லோட்(upload) செய்தவுடன் கிடைக்கும் லிங்கை(link) மற்றவருக்கு பகிர்ந்து அதனை அவர்கள் அந்த பைலை டவுன்லோட்(download) செய்து கொள்ளுமாறு செய்யலாம்..
இதில் நீங்கள் 50 பைல்களை ஒரு பைல் 2000MB வீதம் அப்லோட் செய்து பைலை பகிர்வு(file sharing) செய்யலாம்.


http://www.freefilehosting.net/
அதிகபட்ச அப்லோட் பைல் அளவு 200MB

http://www.mediafire.com/tour/free/
அதிகபட்ச அப்லோட் பைல் அளவு(Maximum upload size) 200MB


http://www.zippyshare.com/

http://crocko.com/
அதிகபட்ச அப்லோட் பைல் அளவு 200MB

ஜிடாக் டிப்ஸ்


 •  CTRL கீ மற்றும் மவுஸ் நடுவில் உள்ள உருளையை மேலே/கீழே நகர்தவும்( CTRL + Mousewheel up/down ) உங்கள் பான்ட்டின் அளவினை கூட்டவோ அல்லது குறைக்கவோ உதவுகின்றது..
 • நீங்கள் சேட்(chat) செய்து கொண்டிருக்கும் போது அந்த நபருக்கு மெயில் அனுப்ப வேண்டும் என நினைத்தால் F9 கீயை(key) அமுத்தவும்..இது உங்களை ஜிமெயிலுக்கு அழைத்து சென்று அந்த நபருக்கு மெயில் அனுப்பும் விண்டோ திறக்கப்படும்..
 • நீங்கள் தற்போது சேட் செய்யும் விண்டோவை மூட வேண்டுமா அப்படியே ESC கீயை(key) அமுத்தினால் போதும் விண்டோ மூடப்பட்டுவிடும்..
 • நீங்கள் ஒரு நபருக்கு மேற்பட்டோருடன் ஒரே சமயத்தில் சேட்(chat) செய்து கொண்டிருக்கையில் ஒரு விண்டோவில் இருந்து மற்றோரு விண்டோவிற்கு தாவி செல்ல CTRL+I கீயை(key) அமுத்தவும்..

இம்மேஜ் ரீசைஸர்

இம்மேஜ் ரீசைஸர் ( Image Re-sizer ) விண்டோசுக்கான இம்மேஜ் ரீசைசர் இது..
இதனை டவுன்டோட் செய்து இன்ஸ்டால் செய்ததும் ஒரே கிளிக்கில் புகைப்படங்களை நமக்கு தேவையான அளவுக்கு மாற்றிக்கொள்ளலாம்..

புகைப்படத்தில் ரைட் கிளிக் செய்தால் கிடைக்கும் மெனுவில் ‘ரிசைஸ் பிட்சர்ஸ்’(Resize Pictures) ஐ கிளிக் செய்யவும்..பின்வரும் விண்டோ திறக்கப்படும்..

இதில் உங்களுக்கு தேவையான அளவை தேர்வு செய்து படங்களின் அளவை மாற்றி அமையுங்கள்.

கூகுள் டிரைவ்

கூகுள் டிரைவ்


கூகுள் அக்கவுண்ட் உள்ள யாரும் இதனை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். 5 ஜிபி[இலவசமாக] அளவிலான பைல்களை இதில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் அந்த பைல்களை, உலகின் எந்த மூலையில் இருந்தாலும், இன்டர்நெட் இணைப்பின் மூலம், கூகுள் ட்ரைவ் பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம். 


மேலும் தெரிந்துகொள்ள,
https://drive.google.com/start#home

https://drive.google.com/#my-drive

ஸ்கைபயர்

ஸ்கைபயர்
பொதுவாக மொபைல் உலாவிகளில் இணையதளங்கள் முழுமையாக தெரியாது. இணைய பக்கங்களில் உள்ள வீடியோக்களை காண முடியாது. 
 
இணையதளங்களின் வசதியை முழுமையாக உபயோகிக்க முடியாது. இது போன்று சில குறைபாடுகள் மொபைல் உலாவியில் உண்டு.ஸ்கைபயர் கணினியில் இணையதளங்கள் தெரிவது போன்று ஸ்கைபயர் மொபைல் உலாவியில் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. 
யூடியுப் போன்ற வீடியோ தளங்களில் வீடியோக்கள் உலாவியின் உள்ளேயே ப்ளே ஆகின்றன.மொத்தத்தில் ஓரளவுக்கு கணினியில் பிரவுசிங் செய்வது போன்ற அனுபவத்தை ஸ்கைபயர் தருகிறது.ஸ்கைபயரின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு 1.5 சிம்பியன் இணையங்குதளத்தை உபயோகிக்கும் மொபைல் போன்களுக்கு என்று வெளியாகி உள்ளது. இது தொடுதிரை மொபைல்களையும்( ஆன்ட் ராய்ட் போன், ஆப்பிள் ஐ பேட், ஐ போன் ) ஆதரிப்பது சிறப்பம்சம்.
வெப்சைட்:

Jun 3, 2012

காணாமல் போன CD Driveஐ கணினியில் திரும்ப கொண்டுவருவது எப்படி?

கணினியில் நாம் தேவையான கோப்புகளை நகலெடுக்க, படம் பார்க்க போன்ற வேலைகளை செய்ய உதவியாக இருப்பது CD/DVD டிரைவ் ஆகும்.  சில நேரங்களில் CD டிரைவில் CDயை போட்டு பார்த்தால் கணினியின் my computerல் CD டிரைவ் காணாமல் போயிருக்கும். நமது CD டிரைவ் நல்ல நிலையில் இருந்தும் நன்றாக வெளியில் வந்து உள்ளே செல்கிற நிலை இருப்பினும் அதற்குரிய டிரைவ் கணினியில் காட்டப்படாமல் இருக்கலாம். இதனை எப்படி சரி செய்வது?

1.  முதலில் Device Managerல் CD டிரைவ் இயல்பு நிலையில் இருக்கிறதா என்று பாருங்கள். Devise Manager செல்ல desktopல்  உள்ள my computer ஐகானை வலது கிளிக் செய்து manage மெனுவை கிளிக் செய்யவும். அதில் இடதுபக்கமுள்ள பகுதியில் Devise Manager என்பதை கிளிக் செய்தால் வலது பக்கம் நமது கணினியில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளின் பட்டியல் தெரியும். அதில் CD/DVD Rom devices என்பது enable ஆக உள்ளதா என பார்க்க வேண்டும்.
2.  உங்கள் கணினியின் CPUவில் CD/DVD டிரைவை இணைக்கும் cable சரியாக உள்ளதா என சரிபார்க்கவும்.
3.  மேற்கண்டவை சரியாக இருந்தும் கணினியில் CD டிரைவ் தெரியவில்லை என்றால் Registerல் ஒரு மாற்றம் செய்வதன் மூலம் காணாமல் போன CD டிரைவை மீட்கலாம்.
Start->Run சென்று regedit என்று type செய்து எண்டர் செய்யவும். இப்போது கணினியின் Registry Editor திறக்கப்படும். பின்னர் கீழ் உள்ள keyஐ கண்டுபிடிக்கவும். நீங்கள் தேர்வு செய்த Key சரியானது தானா என்பதை உறுதி செய்ய அதன் வலதுபக்கம் CD/DVD டிரைவ் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும்.
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\Class\{4D36E965-E325-11CE-BFC1-08002BE10318}
இந்த keyஐ கிளிக் செய்து வலது பக்கம் உள்ள பட்டியலில் UpperFilters, LowerFilters ஆகிய Subkeyகள் இருந்தால் இரண்டையும் அழித்துவிடவும். அழிப்பதற்கு வலது கிளிக் செய்து Delete கொடுக்கவும். ஒரு முறை கணினியை  Restart செய்து விட்டு பார்க்கவும்.

உங்கள் கணினியின் விவரங்களை அறிய ஒரு வழிமுறை

கணினி என்பது இப்பொழுது அனைவருக்கும் ஒரு இன்றியமையாத ஒரு சாதனமாக ஆகிவிட்டது. சிறு பிள்ளைகள் என்றால் விளையாடவும், கல்லூரி மாணவர்கள் படிப்பு சம்பந்தமாகவும் மற்றும் பிடித்தவர்களுடன் பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் அரட்டை அடிக்கவும், பெரியவர்களுக்கு அலுவலக வேலைகளை சுலபமாக்குவதற்கு என்று எல்லோருக்கும் தற்பொழுது கணினி ஒரு முக்கிய பொருளாகி விட்டது. கணினி உபயோகிக்கும் பலருக்கு அந்த கணினியின் சில அடிப்படை விஷயங்கள் கூட தெரியாது என்பது உண்மையாகும்.

ஆகவே நம் கணினி பழுதானால் service engineer என்ன சொன்னாலும் அதுக்கு தலையை ஆட்டிவிடுகிறோம்.  ஆகவே இன்றைய சூழ்நிலையில் கணினியை பற்றி சில அடிப்படை விஷயங்களையாவது தெரிந்து வைத்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.   இவைகளை எல்லாவற்றையும் ஒரே இடத்தில் சுலபமாக அறிந்து கொள்ள ஒரு இலவச மென்பொருள் உள்ளது.

மென்பொருளின் பயன்கள்:
 • இந்த மென்பொருளினால் கணினியை பற்றி அதிக தகவல்களை ஒரே இடத்தில் அறிந்து கொள்ளலாம்.
 • இந்த மென்பொருளில் உள்ள இன்னொரு வசதி இந்த விவரங்களை Picture, HTML பைல்களாக உங்கள் கணினியில் சேமித்து கொள்ளலாம்.
 • பிரிண்ட் எடுத்தல், ஈமெயில் அனுப்புதல் போன்ற முக்கியமான வசதிகளும் இதில் உள்ளது.
 • இந்த மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யாமல் நேரடியாக இயக்கலாம்.
 • இதில் நம்முடைய கீபோர்டில் Numlock, Capslock, Scroll Lock போன்ற கீகள் செயலில் இருக்கிறதா இல்லையா என்று கூட தெரியும்.
 • இந்த மென்பொருள் 1.04MB அளவே உடைய ஒரு இலவச மென்பொருளாகும்.
உபயோகிக்கும் முறை:
 • இந்த மென்பொருளை கீழே உள்ள linkல் சென்று   SimpleSysInfo 2.9   உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
 • டவுன்லோட் முடிந்ததும் இந்த மென்பொருளை நேரடியாக இயக்குங்கள்.
 • உங்களுக்கு வரும் விண்டோவில் உங்கள் கணினியின் அனைத்து விவரங்களும் வரும்.

இந்த விண்டோவில் சுமார் 10க்கும் மேற்பட்ட Tabகள் இருக்கும் அதில் ஒவ்வொன்றாக click செய்து உங்களுடைய கணினியின் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
link  -  http://wieldraaijer.nl/

வைரஸ் தாக்கிய Pen drive ல் இருந்து பைல்களை மீட்டெடுக்க

தற்பொழுது தகவல்களை சேமிக்க பயன் படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கிய மான பிரச்சினை வைரஸ் பிரச்சினை வெவ்வேறான கணினிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை பாதிக்கிறது.

இப்படி பாதிக்கும் பொழுது உங்கள் பென்ட்ரைவில் உள்ள பைல்கள் மறைக்க பட்டுவிடும் கணினியில் பென்டிரைவை ஓபன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது காலியாக இருக்கும் ஆனால் properties சென்று பார்த்தால்பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தகவல்  ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.
 

இதற்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணினியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுக்கலாம்.
1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.
2) Start ==> Run ==> CMD ==> Enter கொடுக்கவும்.

3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது என வைத்து கொள்வோம் அதற்க்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

5) attrib -s -h /s /d *.* என டைப் செய்யுங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் Space சரியாக கொடுக்கவும். உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும் உங்களின் விண்டோ இது போல இருக்க வேண்டும்.
நீங்கள் சரியாக கொடுத்து உள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.
 
சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.

  Blogல் உள்ள Links பல்வேறு நிறங்களில் ஜொலிக்க – Rainbow Effects

  Blogger பயன்படுத்தும் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் நம் links அழகாக இருக்க ஆசை படுவோம். உங்களுடைய பிளாக்கில் பல்வேறு links இருக்கும். Post title, Popular Post, Recent Post, etc.. இப்படி எல்லாமே blog ஆகத் தான் இருக்கும். அந்த linkஐ click செய்தால் தான் வாசகர்களால் முழுப் பதிவையும் படிக்க முடியும். அந்த links ஒரே நிறத்தில் தான் அனைவருக்கும்  காட்சி அளிக்கும். இப்பொழுது அந்த linkஐ பல்வேறு நிறங்களில் ஜொலிக்க வைப்பது எப்படி என பார்க்கலாம்.
  • இதற்க்கு முதலில் உங்கள் links accountல் நுழைந்து Design==> Edit Html கிளிக் செய்து இந்த கோடிங்கை கண்டு பிடிக்கவும்.
  • இந்த வரியை கண்டு பிடித்தவுடன் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து இந்த வரிக்கு மேலே பேஸ்ட் செய்யவும்.
  அவ்வளவு தான் இப்பொழுது கீழே உள்ள SAVE TEMPLATE பட்டனை அழுத்திய பிறகு உங்கள் பிளாக்கிற்கு சென்று ஏதேனும் linkகின் மீது உங்கள் கர்சரை வைத்து பாருங்கள். அந்த link பல்வேறு நிறங்களில் ஜொலிப்பதை காண்பீர்கள்.