May 11, 2013

புகைப்படங்களை ஓவியமாக, கார்ட்டூனாக மாற்றும் இலவச மென்பொருள்

 xnsketch photo effect software for free

புகைப்படங்களை கார்ட்டூன் படம், அழகிய ஓவியமாக மாற்ற இலவச மென்பொருள். 
வணக்கம் நண்பர்களே..! ஒரு படத்தை எடுப்பது என்பது தற்பொழுது உள்ள தொழிற்நுட்பத்தில் மிகச் சாதாரணமான விடயமாகிவிட்டது. அதாவது எடுத்த படத்தை ரசனை குறையாமல் வழங்குவதற்கும், சில டச்சப் வேலைகள் (Touch up work) செய்து அதைத் தரமான படமாக (Quality image) மாற்றுவதற்கும் இணையத்தில் நிறைய மென்பொருள்கள் கொட்டிக் கிடக்கின்றன. 
அவற்றில் மிக முக்கியமான மென்பொருள் போட்டோஷாப். போட்ஷாப் மூலம் நாம் நினைத்த விளைவுகளை (Photo Effects) படத்திற்கு கொண்டு வர முடியும். அவ்வாறான விளைவுகளைக் கொண்டுவர போட்டோஷாப்பில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். அதனுடன் நல்ல கற்பனைத் திறனும், கலைநயமிக்க எண்ணங்களும் சேர்ந்திருக்க வேண்டும். 
நினைத்த விளைவுகளைக் கொண்டு வர போட்டோஷாப் மென்பொருளை முழுமையாக கற்றிருக்கவேண்டும். பல ஆண்டுகள் அனுபவத்திற்கு பிறகே ஒரு தொழிற்முறை கலைஞனாக உருவெடுக்க முடியும். இவ்வளவு சிரமபட்டு, கற்றுத் தேர்ந்த கலையை, ஒரு சில மென்பொருள்கள் அப்படியே செய்து விடுவது வியப்பிலும் வியப்பு.  நாம் விரும்பிய போட்டோ எஃபக்ட்களை கொடுத்து நம்முடைய பெரும்பாலான நேரத்தை மிச்சப்படுத்துகிறது அவ்வகையான மென்பொருள். அவ்வாறானதொரு மென்பொருளின் ஒன்றுதான் xnsketch மென்பொருள் ஆகும். 
photo effect free software

 xnsketch மென்பொருளின் பயன்கள்: 


 • நினைத்த புகைப்படத்தை இந்த மென்பொருளின் மூலம் அழகிய ஓவியமாக மாற்ற முடியும். 
 • அதே படத்தை நல்லதொரு கார்ட்டூனாக மாற்றிப் பயன்படுத்தவும் இம்மென்பொருள் நமக்கு உதவுகிறது. 
 • மிகச்சிறந்த பயனர் இடைமுகத்தை (user interface) கொண்டுள்ளது. அதனால் பயன்படுத்துவது மிக எளிதாக உள்ளது. ஒரே ஒரு கிளிக்கில் வேண்டிய எஃபக்ட்களைக் கொண்டு வர முடியும். 
 • இது ஒரு போர்ட்டபிள் மென்பொருளாக இருப்பதால் கணினியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை. 
 • இந்த மென்பொருள் விண்டோஸ் (Windows), மேக்(Mac), லினக்ஸ்(linux) போன்ற அனைத்து வகை கணினி இயங்குதளிங்களில் இயக்க்கஃ கூடிய கட்டமைப்பைப் பெற்றுள்ளதால் அனைவத்து வகையான கணினி பயனர்களும் இதைப் பயன்படுத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பு. 
Xnsketch is free software. This software used to make effects on photos, images.  It is free portable software so that do not install it in computer. This xnsketch software have very important features that is 18 different effects like black strokes, white strokes, pastel, pencil sketch, colored sketch and more. Also, make Edge strength, opacity adjustment, contrast, brightness, saturation adjustments. Finally, we can save the changes of photo effects.

ரூபாய் 1000த்திற்கும் குறைவான விலையில் சூப்பர் பிராண்ட்டட் மொபைல்கள்..!

very low cost branded mobiles
மிகக் குறைந்த விலையில் சூப்பரான பிராண்டட் மொபைல்கள் கிடைக்கின்றன என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். குறைந்த விலையில் மூன்றாம்தர மொபைல்கள் சந்தையில் கிடைத்துக்கொண்டுதான் உள்ளன. ஆனால் அவற்றின் தரமும், வாழ்நாள் உழைப்பும் (Mobile life) சரியாக இருக்குமா என்றால் நிச்சமாக இருக்காது. பார்ப்பதற்கு கண்ணைக் கவரும் தோற்றத்துடன் உள்ள அந்த வகையான மொபைல்கள் ஒரு சில மாதங்களிலேயே தன்னுடைய இயக்கத்தை நிறுத்திவிடும்.
very low cost mobiles

ஆனால் பிராண்ட்டட் மொபைல்கள் அப்படியல்ல..மிகப் பெரிய முதலீட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு பல கோடி ரூபாய் விளம்பரத்திற்காக செலவிடப்பட்டு, அவற்றை வெளியிடுகின்றனர். வெளியிடப்படும் தயாரிப்புகளில் ஏதேனும் பிரச்னை என்றாலோ, அதிக வாழ்நாள் கொடுக்க முடியாது என்றாலோ நிச்சயமாக அந்த நிறுவனத்தின் பெயர் கெட்டு விடும். 
இதனாலேயே மிக கவனத்துடன் செயல்பட்டு, பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தபட்டு மிகச்சிறந்த தரமான போன்களை கொடுக்கிறது பிராண்டட் நிறுவனங்கள். அதுமட்டுமல்லாமல் சிறந்த சர்வீசையும் கொடுக்கிறது. கூடவே சக போட்டியாளர் நிறுவனங்களுடன் தங்களுடைய மார்க்கெட்டிங் நிலவரத்தை மேற்படுத்தவும் அவர்கள் பாடுபடுகின்றனர். எனவேதான் உலகில் மிகப் பலரும் பிராண்டட் தயாரிப்புகளையே விரும்புகின்றனர். 
மிகச்சிறந்த குறைந்த விலை மொபைல்களை கீழே பட்டியலிட்டுள்ளேன். 

Micromax X102

இது Dual Sim (GSM+GSM)Phone ஆகும்.
இதில் GSM900/1800 Mhz அலைவரிசையில் இயங்க கூடியது. 
1.8 இன்ச் TFT Screen திரையை கொண்டது. 
இதன் விலை ரூபாய் 667 மட்டுமே. 

Samsung Guru E1081T

இது ஒரு Candy bar phone.
GSM900/1800 MHz
1.43 இன் CSTN Screen
இதன் விலை ரூபாய் 919 மட்டுமே.


low cost mobile Karbonn K101 Karbonn K101

இது ஒரு Dual Sim, Dual Standby Phone ஆகும்.
 GSM 900 / 1800 MHz
1.8 இன்ச் QVGA Screen
இதன் விலை ரூபாய் 945 மட்டுமே.Samsung Guru E1200

இது ஒரு Dual SIM Mobile Phone
GSM 900/1800
TFT Screen, 1.52 இன்ச் அகலம் கொண்டது.
low cost mobile Spice M-4262Spice M-4262

இது ஒரு ual SIM, Dual Standby phone
Dual - Band GSM 900/1800 MHz
1.77 இன்ச் TFT LCD Screen
இதன் விலை 950 மட்டுமே.low cost mobile Nokia 1280 Nokia 1280

Basic level mobile phone
GSM 900m1800 MHz
 1.36 inches கூடிய  CSTN screen ஐ  கொண்டது. 
இதன் விலை ரூபாய் 962 மட்டுமே. low cost mobile Micromax X101 Micromax X101

Dual SIM (GSM+GSM) phone
Operate Frequencies GSM 900/1800 MHz
1.7 inches, TFT QVGA display Screen.


Spice M-5005N

low cost mobile Spice M-5005N
Dual SIM (GSM-GSM) மொபைல் போன்
GSM 900/1800 MHz
1.8 inches, LCD Display Screen.
விலை ரூபாய் 977 மட்டுமே.iBall Shaan i135

low cost mobile iBall Shaan i135
Dual Sim (GSM+GSM) Phone
GSM 900/1800 MHz
1.8 inches. TFT LCD Display Screen

1500 ரூபாயில் ஒரு இணைய தளத்தை உருவாக்க முடியுமா?

Low cost web design at Rs.1500/- only

ரூபாய் ஆயிரத்து ஐநூறுக்கு ஒரு புதிய வலைத்தளத்தை ஆரம்பிக்க முடியுமா? என்றால் கண்டிப்பாக முடியும் என்றுதான் சொல்ல வேண்டும். 

எப்படி? 

வலைத்தளத்தை (Website Creation) உருவாக்குவது முற்றிலும் இலவசமே..!
அதற்கு பிளாக்கர், வேர்ட்ப்ரஸ் (Blogger , Wordpress) தளங்கள் உதவுகின்றன. 
இலவசமாக கொடுக்குத் இத்தளங்களை உங்கள் சொந்த தளங்களாக மாற்றம் செய்வது எப்படி? 
நீங்கள் இதற்காக டொமைன் பெயரை (Get Domain Name) விலைகொடுத்து வாங்க வேண்டும். 
low cost web design at Rs. 1500/-

டொமைன் பெயர் எங்கு வாங்கலாம்? 

இணையத்தில் பல்வேறு தளங்கள் (Domain, Hosting Providers) டொமைன் பெயரை வழங்குகின்றனர். 
டொமைன் பெயரைப் பெற்றுக்கொள்ள நீங்கள் உங்கள் முகவரியைப் பயன்படுத்தி உங்கள் பெயரிலேயே வாங்கிக்கொள்ள முடியும். 
எப்போது வேண்டுமானாலும் அதை நீங்கள் அணுக முடியும். 
சரி.. அப்படியென்றால் 600 ரூபாய் செலவழித்தாலே நல்லதொரு வலைத்தளத்தை பெற்று விட முடியும். மீதம் தொள்ளாயிரம் ரூபாய் 900 எதற்கு என்கிறீர்களா? 
இங்குதான் நீங்கள் நன்றாக சிந்திக்க வேண்டும். வலைத்தளம் ஆரம்பிப்பவர்கள் அனைவருமே பிரபலமாகிவிட மாட்டார்கள். உலகளவில் பிளாக்கர் மற்றும் வேர்ட்ப்ரஸ் தளங்கள் தமிழில் மட்டும் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வலைத்தளங்கள் உள்ளன. இது 2010 ஆம் ஆண்டின் கணக்கின் படி. தற்போதைய சூழலில் ஒரு லட்சம் தமிழ் வலைப்பதிவுகள் இருக்கலாம். (தமிழ் தளங்களின் ஒப்பீட்டின்படி மட்டுமே இந்தக் கணக்கு). 

ஒரு லட்சம் தமிழ் வலைப்பூக்கள்

இதுவே உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் இயங்கும் வலைத்தளங்கள், வலைப்பூக்களுக்கு மத்தியில் உங்கள் வலைத்தளத்தையும் தரமான வலைத் தளமாக , அனைவருக்கும் தெரியும் பிரபலமான வலைத்தளமாக மாற்றி, உங்கள் கருத்துகளையும், நிறுவனங்களின் தயாரிப்புகளையும், வியாபாரங்களையும் உலக அளவில் முதன்மைப்படுத்த முடியும். 
ஒரு லட்சம் வலைப்பூக்களில் (million blogs) உங்களுடைய வலைப்பூவை பிரபலப்படுத்தவும், உங்களுடைய வலைப்பூ முதன்மை பெறவும் ஒரு சில தொழில்நுட்பங்களைக் கையாள வேண்டியுள்ளது. 
பலருக்கும் பயன்படக்கூடிய உங்களுடைய வலைத்தளம் மற்றவர்களின் பார்வைக்கு (do popular as a website your blogger blog) கிடைக்க வேண்டாமா என்ன? அதைச் செய்வதற்கும் நீங்கள் மிகச்சிறிய கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். 
இலவசமாக கிடைக்கும் மூன்றாந்தர வலைப்பூ வார்ப்புருக்களைப் (Third Party Blogger Blog Templates) பயன்படுத்துவதால், அதை உருவாக்கிக் கொடுத்தவர்களுக்கு அதில் நன்மை கிடைக்கும்படிதான் வார்ப்புருவின் கட்டமைப்பை உருவாக்கி வைத்திருப்பார்கள். ஏனென்றால் ஒரு பொருளை இலவசமா யாருமே கொடுக்க முன்வர மாட்டார்கள். அப்படி இலவசமாக கொடுப்பதால் நிச்சயம் அவர்கள் நஷ்டபட வேண்டியிருக்கும். 
ஒரு வார்ப்புருவை உருவாக்க பல மணி நேரங்கள் செலவழிக்க வேண்டியுள்ளது. ஒரு வார்ப்புரு முழுமையான வடிவத்தை கொடுக்க ஒரு வார காலம் கூட மெனக்கெட வேண்டியிருக்கும். ஒரு வார்ப்புருவை உருவாக்குவதில் அத்தனை சிக்கல்கள் உண்டு. 
சாதாரணமாக எந்த ஒரு முட்டாளும் இலவசமாக ஒரு பொருளை கொடுப்பதற்கு முன்வர மாட்டான். முட்டாளே அப்படி இருக்கும்பொழுது, புத்திசாலியாக இருக்கும் நீங்கள் நன்றாக யோசித்துப் பாருங்கள். கண்டிப்பாக இலவச வார்ப்புருக்களால் அவர்கள் நன்மையே அடைவார்கள். (ஒரு சில மூன்றாம் தர வலைப்பூ வார்ப்புருக்களில் மால்வேர்  போன்ற சங்கதிகளும் உள்ளடங்கும்.)
அவ்வாறில்லாமல் நீங்கள் விரும்பியபடி, உங்களுக்காக ஒரு குறிப்பிட்ட வலைப்பூவின் வார்ப்புருவை தனித்துவப்படுத்தி கொடுப்பதே எங்களுடைய மிக முக்கியமான வேலை. அல்லது எங்களின் சொந்த வார்ப்புருவை உங்களுக்கு உருவாக்கி கொடுக்கிறோம். 
இந்த இரண்டிற்கான வேலைகளைச் செய்யவும், உங்களுடைய வலைப்பூவை மேம்படுத்திக் கொடுக்கவும், ஒரு தரமான வலைப்பூ எப்படிப்பட்ட கட்டமைப் பெற்றிருக்க வேண்டும் என்பதையும், வலைப்பூவில் எழுதுவது பற்றிய சந்தேகங்களுக்கான விளக்கங்களை பெற்றுக்கொள்ளவும், தேவையான குறிப்புரைகள் வழங்கி உங்களை ஒரு வெற்றிகரமான வலைப்பதிவராக உருவாக்குவதற்கும் நீங்கள் கொடுக்கும் மிகச்சிறிய தொகையே அது. இவை அனைத்துமே உங்கள் விருப்பத்தின் பேரிலேயே மேற்கொள்ளப்படும். இது கட்டாயமல்ல.. 
ஆக ஒரு வலைத்தளத்தை ஒரு மிகப்பெரிய இணைதளத்தைப் போன்று  வடிவமைக்கவும், அதில் மாற்றங்களைச் செய்து கொடுக்கவும், நீங்கள் கொடுக்கும் மிகச்சிறிய தொகையே அது. 
இப்பொழுது சொல்லுங்கள்... உங்களால் ஒரு வலைத்தளத்தை ரூபாய் 1500 க்கு ஆரம்பிக்க முடியும்தானே..! மேலதிக கூடுதல் வசதிகளைப் பெறவும், வலைத்தளத்தில் முக்கியமான பணிகளைச் செய்யவும் நீங்கள் கூடுதலாக தொகையை செலுத்த வேண்டியிருக்கலாம்.

மடிக் கணினியை பாதுகாக்கும் வழிமுறைகள்..!

மடிக் கணினியை பாதுகாக்கும் வழிமுறைகள்..!
Methods of Laptop Maintenance.! மடிக்கணினி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுள்ளது. பள்ளி மாணவர்கள், வியாபாரம் தொடர்பாக வெளிநாடு செல்பவர்கள் (Business mans), சாப்ட்வேர் இன்ஜினியர்கள், கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், நிறுவனங்கள், பாமர மக்கள் என அனைத்து தரப்பினருமே லேப்டாப்பை பயன்படுத்திக் கொண்டுள்ளனர். லேப்டாப்பின் வளர்ச்சி அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுள்ளது.   லேப்டாப்பானது பல்வேறு அளவுகளில், சிறிதும் பெரிதுமாக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு கொண்டுள்ளன. பொதுவாக லேப்டாப்பை அனைவருமே விரும்பக் காரணம் எடை குறைவு, எளிதாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச்செல்ல முடிவது என காரணங்களை வரிசையாக அடுக்கலாம். இதனால்தான் மடிக்கணினியின் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது.

இதில் குறிப்பிடப்பட வேண்டிய முக்கியமான விஷயம், அவ்வாறு பயன்படுத்துபவர்கள் எத்தனைப் பேர் முறையாக மடிக்கணினியைப் பராமரிக்கின்றனர் என்பதுதான். 
மடிக்கணினியை முறையாக பராமரித்தால் நீண்ட நாட்களுக்கு எந்த ஒரு செலவும் செய்யாமல், எந்த பிரச்னையும் வராமல் வருடக்கணக்கில் புதிய மடிக்கணியின் (new laptop computer ) செயல்பாட்டை வேகத்தை உங்களால் பெற முடியும். இதற்கு குறிப்பிட்ட பராமரிப்பு வேலைகளை (Maintenance) தொடர்ந்து செய்ய வேண்டும். அவ்வாறு முறையாக பரிமரித்தால் நிச்சயம் உங்களுடைய மடிக்கணினிக்கு ஆயுள் கூடும். 

மடிக்கணினியை பராமரிக்க என்னென்ன செய்ய வேண்டும்? 

Methods of Laptop Maintenance

 • குறைந்தது ஆறுமாதங்களுக்கு ஒரு முறையாவது உங்களுடைய மடிக்கணினியில் Operating System த்தை புதுபிக்கவும்.  
 • மடிக் கணினிக்கு -ற்கு Battery மிக முக்கியம். பேட்டரியை நன்கு பராமரிக்க வேண்டும். 
 • குறிப்பாக சொல்லவேண்டுமெனில், ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு உங்களுடைய மடிக்கணினியை பயன்படுத்தமாட்டீர்கள் என்ற நிலையில், லேப்டாப்பில் உள்ள பேட்டரியை கழற்றி தனியே வைத்துவிடுங்கள். (உ.ம் - வெளியூர் செல்லும் நாட்கள்) remove battery in the laptop if you have not work on laptop two or three days
 • மடிக்கணினிக்கான உறை பையை (Use Laptop Bag) பயன்படுத்துவது உங்கள் மடிக்கணினிக்கு பாதுகாப்பைக் கொடுக்கும். 
 • மடிக் கணினியில் ஏற்படும் வெப்பத்தை வெளியேற்ற, அதற்கு தகுந்தாற் போல் உள்ள சமமான இடத்தில் வைத்து பணியாற்ற வேண்டும். 
 • மடிக்கணினிக்கு என தயார் செய்து விற்கப்படும் Laptop Stand மீது வைத்துப் பயன்படுத்துங்கள். (Use Laptop Stand)
 • அதிக தூரப் பயணங்களின் போது பயணித்தவாறே லேப்டாப் பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ள வேண்டும். 
 • லேப்டாப்பிற்கு என கொடுத்த சார்ஜரையே (Original Laptop Charger)பயன்படுத்த வேண்டும். வேறு தரமில்லாத சார்ஜரைப் பயன்படுத்தினால் வெப்ப மாறுதல், அதிக மின்னோட்டம் (High power flow) காரணமாக உங்களுடைய லேப்டாப் செயலிழந்து போகலாம். 
 • மடிக்கணினி பேட்டரியில் உள்ள மின்சாரம் குறைந்து, அதில் Low battery warning செய்தி தோன்றிய பிறகே மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டும். அல்லது லேபேட்டரி சிக்னல் கிடைத்தப் பிறகே புதியதாக சார்ஜ் செய்ய வேண்டும். 
 • முடிந்தளவு மடிக்கணினி இயக்கவிட்டு, அதில் வேலை செய்துகொண்டிருக்கும்பொழுதே சார்ஜ் செய்வதை தவிர்க்கவும். (do not charge laptop battery while working on laptop.)
 • மடிக்கணினியைப் பொறுத்தவரை, ஒரு சிறிய பிரச்னை என்றாலும் கூட, அதை நாமாவே சரி செய்ய முயற்சிப்பது தவறு. அதுவே பெரிய பிரச்னையாக மாறுவதற்கு வாய்ப்பு ஏற்படும். எனவே தெரியாத ஒன்றை செய்ய லேப்டாப் பொறுத்தவரை முயற்சிக்க கூடாது. 
 • மடிக்கணினியின் உள்ள பேட்டரியை வேறொரு மடிக்கணினிக்கு மாற்றி பொருத்தி செயல்படுத்த கூடாது.(Do not change the battery from a laptop to another laptop) ஒரு லேப்டாப்பிற்கான பேட்டரியை அதே லேப்டாப்பில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கணினி - அடிப்படைத் தகவல்கள்

கணினி - அடிப்படைத் தகவல்கள்
கணினி அடிப்படைத்தகவல்கள் (Basic information of computer)

கணினி என்பது என்ன?

கணினி என்பது பல எலக்ட்ரானிக் பொருட்களினால் உருவாக்கப்பட்டதாகும். இதில் transistors, capacitors, diodes, resistors இவைகள் அடங்கிய மதர்போர்டு, இவற்றிற்கு மின்சாரத்தை சரியானபடி பகிர்ந்தளிக்கும் SMPS போன்ற சில துணைப்பொருட்களின் தொகுப்பு கணினி. இவ்வாறு பல உறுப்புகளும் இணைந்து உருவானவையே கணினி ஆகும். இவற்றின் மூலம் ஒரு வேலையை தானாகவே, மிக துல்லியமாக செய்து முடிக்கலாம். கணினிகளில் எத்தகை வகை உண்டு? கணினியில் உள்ள உறுப்புகள் என்னென்ன? அவை எப்படி செயல்படுகின்றன? என்பதை தொடர்ந்து வரும் இடுகைகளின் ஊடாக அறிந்துகொள்வோம்.
Operating System:

இந்த இயந்திரத்தை சரியான முறையில் இயங்கச் செய்வதற்கு உதவுபவைதான் ஆபரேட்டிங் சிஸ்டம். கணினியின் மிக அடிப்படையான ஒன்றாகும். இது கணினியில் அமையப்பெற்ற அனைத்து உறுப்புகளையும் ஒன்றிணைத்து இயக்குகின்றது. நாம் Application Software களை பயன்படுத்தும்போது அதனோடு ஒன்றிணைந்து அந்த Application Software இயங்குவதற்கு ஒரு மேடையாக இருந்து அவற்றிற்குத் தேவையான சூழ்நிலைகளை உருவாக்கி கொடுக்கிறது. இதன் அமைப்பில் உள்ள கட்டளைகளுக்கு ஏற்ப, கட்டளைகளையும், அறிவுறுதல்களையும் CPU க்கு வழங்குவது Operating System.

கணினிகள் எத்தனை வகை இருக்கிறது?

கணினிகளில் நான்கு வகை கணினிகள் இருக்கிறது. அவை:

1. Personal Computers, 2. Mini Computers, 3. Mainfram Computers, மற்றும் 4. Super computers


1. பர்சனல் கம்ப்யூட்டர்

இதில் Destop, Tower, Laptop, hand Held, Network என்ற வகைகளில் கம்ப்யூட்டர்கள் இருக்கின்றன.

2. மினி கம்ப்யூட்டர்

இது ஒரு டிபார்ட்மெண்ட்இல் பயன்படுத்தவது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான கணினிகளை ஒன்றிணைத்து ஒன்றுக்கொன்று தொடர்பு ஏற்படுத்தி ஒரே நேரத்தில் அக்கணினிகளை இயக்க முடியும்.

3. மெயின் பிரேம் கம்ப்யூட்டர்

பெரிய நிறுவனங்களில் பயன்படுத்தும் கணினிகள் இவ்வகையைச் சேரும். இவ்வகை கணினிகள் பல ஆயிரம் கணினிக்களை ஒன்றிணைத்து ஒன்றுடன் ஒன்று தொடர்படுபடுத்தி ஒரே நேரத்தில் இயக்க முடியும்.

4. சூப்பர் கம்ப்யூட்டர்:

நாசா போன்ற பெரிய ஆராய்ச்சி நிலையங்களில் பயன்படுத்தப்படுவது. வேகத்தில் அதிவேகமாகவும், மில்லியன் கணக்கான வேலைகளை ஒரே செகண்டில் செய்யக்கூடியதும் இந்த வகை கம்ப்யூட்டர்கள் ஆகும்.

நான் கடந்த பதிவொன்றில் கூறியதுபோல இந்த எலக்ட்ரானிக் இயந்திரத்தை(ஆங்கிலத்தில் system unit) உடம்பு எனவும், அதை இயக்குகிற Operating System -ஐ உயிர் எனவும் கணினி வல்லுநர்கள் அழைக்கிறார்கள். Operating System System இல்லை என்றால் System unit இயங்காது. இவ்வியந்திரத்தினுள் உள்ள உறுப்புகளை Hard Ware எனவும், அதை இயக்குகிற Operating System, அதனுடன் தொடர்புடைய மற்ற Application Software களை மென்பொருள் எனவும் அழைக்கிறோம்.

அதாவது CPU என்றழைக்கப்படுகிற பெட்டியினுள் உள்ள பாகங்கள், கீபோர்ட், மௌஸ், கணினித் திரை ஆகிய அனைத்தையும் Hardware என்கிறோம். அந்த HARDWARE சாதனங்களை கட்டளைகளால் இயக்குகிற கண்ணுக்குத் தெரியாத மென்பொருள்களை Software என்கிறோம்.

இந்த அளவுக்கு குழப்பியது போதும் என நினைக்கிறேன்.

சரி உண்மையிலேயே உயிரற்ற இந்த சாதனைங்களும் உயிர்ப்பிக்கிற சாப்ட்வேர்களும் உயிரற்றவைதானே.. இவை எப்படி மனிதன் சிந்திப்பதுபோல சிந்தித்து மற்ற பாகங்களுக்கு கட்டளைகள் இடுகின்றன என்கிறீர்களா??....நாளை பார்ப்போமே...!

உங்கள் கணினியை வேகமாக நிறுத்த..

உங்கள் கணினியை வேகமாக நிறுத்த..
வேகத்திற்கு பெயர் போனது கம்ப்யூட்டர். எந்த ஒரு கணக்கு என்றாலும், எந்த ஒரு அலுவலக வேலையானாலும், டிசைனிங் வொர்க் (Designing Work) ஆக இருந்தாலும் விரைவாக செய்து முடிப்பதற்காகவே உருவாக்கப்பட்டதுதான் கணினி.. 
கணினியில் பழகி.. பழகி.. மற்ற செயல்களிலும் கூட விரைவாக
முடிவுகளை எதிர்பார்க்கும் குணத்தை சிலர் பெற்றிருப்பார்கள்.. காரணம்.. கணினி இவர்களுடன் ஒன்றிவிட்டதுதான் என்று சொல்லலாம். அதாவது ஒரு வேலையைச் சொன்னவுடன், அடுத்த நிமிடமே அது முடிந்திருக்க வேண்டும் என்னும் மனப்பாங்கை இவர்கள் கொண்டிருப்பார்கள்.
அந்தளவிற்கு இன்று கணினி மனிதர்களை ஆண்டுகொண்டிருக்கிறது. கணினியைப் பயன்படுத்தும் பலருக்கும் இவ்வாறான மனநிலையே இருக்கும். 
இதுபோன்ற சூழல் நிலவும் தற்போதையை சூழ்நிலையில் கணினி ஆரம்பிப்பதற்கும்(Startup), கணினி அணைவதற்கும்(Shutdown) சில சமயங்களில் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். கணினி ஆரம்பிப்பதற்கு ஏற்படும் நேரத்தைக்கூட சில சமயங்களில் பொறுத்துக்கொள்ள முடியும். காரணம் அனைத்து மென்பொருள்களும் இயங்கி, கணினியை உயிர்ப்பிக்க நேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால் வேலை முடிந்த பிறகு கணினியை நிறுத்தம் செய்தால் உடனே Shutdown ஆகிவிட வேண்டும் என்ற நினைப்புதான் பலருக்கும் இருக்கிறது. 
ஏனென்றால் வேலை செய்து முடித்த அந்த டென்ஷன் அப்படியே இருக்கும். அதே போல வேலை முடிந்தவுடன் அடுத்த நொடியே கணினியை விட்டு எழுந்து வெளியில் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருக்கும். அல்லது அவசரமாக வேறு ஏதேனும் முக்கிய வேலைக்கு செல்ல வேண்டியிருக்கும். 
இதைத்தான் நம்மவர்கள் "ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆற பொறுக்காது" என்பார்கள். 
(சரி.. வளா.. வளா.. கொழா.. கொழ்ழா.. ஏன் நீட்டி முழக்கறீங்க.. சொல்ல வந்ததை சொல்லிட்டு போங்கப்பூ.. புது வருசம் அதுவுமா.. ஏன் இத்தனை நீட்டி முழங்கறீங்கன்னு நீங்க சொல்வது எனக்கும் காதில் விழுறது.. )
பொதுவாகவே நான் அனைவரும் கணினியில் சந்திக்கும் ஒரு பிரச்னை  கணினியை அனைக்கும்போது(Shutdown) அது தாமதமாக நேரமெடுத்துக்கொண்டு அணைவதுதான். 
சில நேரங்களில் நீங்கள் அவசரமாக வெளியில் கிளம்ப எண்ணி உங்கள் கணினியை அணைத்துவிட Shutdown செய்வீர்கள்.. அது shutdown ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அதுபோன்ற சூழ்நிலையில் உங்களுக்கு ஏற்படும் டென்சன் இருக்கிறதே.. அப்பப்பா.. சொல்லமுடியாத அளவிற்கு டென்சன் ஏற்படும் இல்லையா? 
அதுபோன்ற சூழ்நிலைகள் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். 
இவ்வாறு கணினி அணைவதற்கு நேரம் எடுத்துக்கொள்வது ஏன் என்று பார்த்தால்.. உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்கும் மென்பொருள்களே காரணமாக இருக்கும். 
சரி.. இந்த பிரச்னையை எப்படி சரிசெய்வது?
அதற்கு எளிய வழிமுறையைச் செய்தாலே இவ்வாறான தாமதப்படுத்துதலை நீக்க முடியும். 
இதற்கு உங்கள் கணினியில் Start==>All Programs==>Run==> செல்லுங்கள். 
அதில் regedit என தட்டச்சிட்டு enter கொடுங்கள்..
தோன்றும் ரெஜிஸ்ட்ரி எடிட்டரில் (Registry Editor) இடது புறம் உள்ள பக்க பட்டையில் HKEY_LOCAL_MACHINE என்பதில்  டபுள் கிளிக் செய்யுங்கள். 
தோன்றும் கோப்புறைகளில் சிஸ்டம் (System) என்ற கோப்புறையை கிளிக் செய்து திறந்துகொள்ளுங்கள். 
திறந்த System Folder -னுள் currentcontrolset என்ற கோப்புறை இருக்கும். இதை இப்பொழுது திறந்துகொள்ளுங்கள். 
அதனுள் இருக்கும் கண்ட்ரோல்(control) எனும் போல்டரை  திறந்துகொள்ளுங்கள். இப்பொழுது வலதுபுறம் அந்த போல்டரில் உள்ள உட்பிரிவுகள் தோன்றும். அதில் வெயிட் டூ கில் சர்வீஸ் டைம் அவுட் (waittokilltimout) என்பதின் மீது Right Click செய்து மாடிஃபை(Modify) என்பதை தேர்ந்தெடுங்கள். 
இப்பொழுது தோன்றும் மெனு விண்டோவில் (Menu window) வேல்யூ டேட்டா (Value Data) என்பதில் 200(இருநூறு) என தட்டச்சிட்டு ஓ.கே(OK) கொடுத்துவிடுங்கள். 
அவ்வளவுதான்.. முடிந்தது.. இனி நீங்கள் உங்கள் கணினியை Shutdown செய்து பாருங்கள்.. இதற்கு முன்பு உள்ளதைவிட வேகமாக உங்கள் கம்ப்யூட்டர் Shutdown ஆவதை கண்கூடாக பார்ப்பீர்கள்..

லேப்டாப் கம்ப்யூட்டரில் ஏற்படும் வெப்பத்தை தடுக்க

how to avoid laptop over heating?

கணினியில் ஏற்படும் வெப்பத்தைக் குறைக்க அதிலேயே காற்றாடிகள் வைத்திருப்பார்கள்.. லேப்டாப்பில் ஏற்படும் வெப்பத்தை குறைக்கவும், காற்று பரிமாற்றம் நடைபெறவும் சிறிய துளைகள் லேப்டாப் கணினியின் அடியில் வைத்திருப்பார்கள்.
laptop with stand

நாம் அதை மடியில் வைத்துப் பயன்படுத்துப்போது வெப்பமானது வெளியேறாத வண்ணம் அத்துளைகள் அடைப்பட்டு விடுவதால் மிகுதியான வெப்பம் லேப்டாப்பிலேயே தங்கிவிடுகிறது. இதனால் விரைவாக லேப்டாப் சூடேறுகிறது. இவ்வாறு சூடேறுவதால் ஏற்படும் வெப்பத்தை குறைப்பது எப்படி, வெப்பம் அதிகளவு ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகள் என்னென்ன என்பதை இப்பதிவின் வழியே பார்ப்போம்.

laptop notebook stand
Notebook laptop stand
இத்தகை வெப்பம் அதிகரிக்கும்போது லேப்டாப்கள் தீப்பிடித்த சம்பவங்களையும் நாம் செய்திதாள்களில் படித்திருப்போம். Dell, Sony,acer போன்ற நிறுவனங்களின் லேப்டாப் கணினிகளில் உள்ள பேட்டரிகள் அதிக வெப்பத்தை வெளியிட்டதால் அவற்றுக்குப் பதிலாக மாற்று பேட்டரிகள் வழங்கப்பட்ட சம்பவங்களும் ஏற்பட்டன.

லேப்டாப் கணினிகளில் அதிக வெப்பத்தை ஏற்படுத்தும் முதற்காரணி இந்த பேட்டரிகள்தான்.. முதலில் இந்த பேட்டரிகள் தரமானதுதானா என சோத்தறிவது முக்கியம். தரமற்ற பேட்டரிகளால் அதிக வெப்பம் ஏற்படும். இது தவிர கணினியில் உள்ள எலக்ட்ரானிக் சாதனங்களாலும் வெப்பம் ஏற்படுகின்றன. இவைகளனைத்தும் கணினி இயக்கத்தை ஆரம்பித்தவுடனேயே வெப்பத்தை வெளியிட ஆரம்பிக்கின்றன். அதனால் அரை மணிநேரம் தொடர்ந்து கணினியை பயன்படுத்தாத நிலையில் கணினியை நிறுத்தி வைக்குமாறு நாளிதழ்களில் குறுந்தகவல்களாக வெளியிடுகின்றனர். காரணம் கணினி வெளிப்படுத்தும் வெப்பம் அதிகம்.
right position - laptop with stand
சாதாரணமாக நம்முடைய வீட்டில் எலக்ட்ரானிக் பொருட்களை இயக்கவிட்டு, சிறிது நேரத்தில் அதை கையால் தொடும்பொழுது இந்த வெப்பத்தை உணர முடியும். சாதாரண Desktop computer -களில் ஏற்படும் வெப்பத்தை விட Laptop computer -களில் ஏற்படும் வெப்பம் அதிகம். காரணம் லேப்டாப் கணினிகளில் குறைந்த இடத்தில் அனைத்து எலக்ட்ரானிக் சாதனங்களும் வைக்கப்படுவதால்தான். இதனால் தான் லேப்டாப் கணினிகளில் அதிகம் வெப்பம் ஏற்படுகிறது.

அடுத்து இயங்கும் வேகம் அதிகமாக இருப்பதற்காக இந்த லேப்டாப் கம்ப்யூட்டர்களில் அதிக திறனுள்ள எலக்ட்ரானிக் பொருட்கள், விரைவாக இயங்கக்கூடிய Operating system ஆகியவைகள் இடம்பெற்றுள்ளன. இதன் வேக அதிகரிப்பாலும் வெப்பம் கூடுதலாக வெளியிடப்படுகிறது. இந்த வெப்பத்தை வெளியேற்ற லேப்டாப்பினுள் வெப்பத்தை வெளியேற்றப் பயன்படும் விசிறிகள், Heat Sink தகடுகளைப் பொருத்துகின்றனர். எனினும் இதனால் போதிய அளவு வெப்பத்தை வெளியேற்ற முடியாத சூழ்நிலை. மேலும் இதில் பொருத்தப்படும் விசிறிகளின் வேகம் நாளடையவில் குறைந்துவிடுகின்றன. இதனால் வெப்பம் ஏற்படுகிறது.
லேப்டாப் ஸ்டாண்ட்

லேப்டாப்பில் ஏற்படும் அதிக வெப்பத்தை தடுக்கும் முறைகள்:

இதுபோல அதிக வெப்பத்தினால் முதலில் கணனியில் பாதிக்கப்படுவது Hardware தான். Hardware பிரச்னை ஏற்படாமல் இருக்க முதலில் வெப்பத்தை குறைக்கவும், லேப்டாப்பை குளிர்விக்கவும் செய்ய வேண்டும். இதற்கு முதலில் லேப்டாப்பைத் திறந்து அதில் பொருத்தப்பட்டிருக்கும் விசிறிகள் சரியாக இயங்குகின்றனவா என சோதிக்க வேண்டும். அதனுடைய அதிகபட்ச வேகத்தில் விசிறிகள் சுழல வேண்டும். வேகம் குறைந்தாலோ அல்லது சுற்றாமல் இருந்தாலோ சரி செய்ய வேண்டும்.
Laptop fan cleaning
Laptop fan cleaning
புதிய லேப்டாப், அல்லது இதுவரைக்கும் திறந்து பார்க்காத லேப்டாப் (laptop) எனில் அந்த நிறுவனங்களின் Service Center கொடுத்து சோதனை செய்ய வேண்டும். வீட்டிலேயே சோதனை செய்ய நீங்கள் நினைத்தால் அதற்குண்டான மென்பொருள்களைப் பயன்படுத்த வேண்டும். கணினியில் எந்தெந்த பகுதிகள் சரியாக இயங்குகின்றன என்பதைக் கண்டறிய மென்பொருள்கள் (Software Program) உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி உங்கள் லேப்டாப்பை திறக்காமலேயே நீங்கள் சோதனை செய்துகொள்ள முடியும்.வெப்பம் வெளியேறுவதற்கு அமைக்கப்படிருக்கும் காற்றுத் துளைகளை அடிக்கடி கவனிக்க வேண்டும். இதில் தூசிகள் ஏதேனும் படிந்திருக்கிறதா என்பதை சோதனை செய்து சுத்தம் செய்ய வேண்டும். காற்றுத்துளைகளில் அடைப்பு ஏற்பட்டிருந்தாலும் வெப்பம் வெளியேறாமல் அதிகரிக்கும்.

பயாஸ் சோதனை செய்தும் வெப்பம் உருவாவதனை அறிய முடியும். இதற்கு Bios settings மாற்றி அமைக்க உங்கள் லேப்டாப் நிறுவனதின் இணையத்தளத்திற்கு சென்று அவர்கள் கொடுத்திருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி Bios settings மாற்றி அமைப்பதற்கான வழிமுறைகளைக் கொடுத்திருப்பார்கள். BIOS settings Update களும் இணையதளத்தில் கிடைக்கும்.
laptop bios settings page
BIOS Settings
வெப்ப மிகுதியான பகுதிகளில் லேப்டாப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக ரேடியேட்டர், கார் என்ஜின், காற்றோட்டம் இல்லாத சிறிய அறைகள், வெட்டவெளியில் சூரிய ஒளி படும் இடங்கள் ஆகிய இடங்களில் லேப்டாப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

மெத்தைகள், தலையணை, தொடைகளின் மேல் வைத்து இயக்குவது ஆகியவைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கால் தொடைகளின் மேல் வைத்து இயக்குவதால் உடலுக்கும் கேடு விளைவிக்கும். மெத்தை விரிப்புகள், தலையணை போன்றவைகளின் மேல் வைத்து இயக்குவதால் லேப்டாப்பிலிருந்து வெப்பம் வெளியேறும் வழிகளை அவைகள் அடைத்துக்கொள்வதால் வெப்பம் அதிகமாகும்.

இதற்கு மாற்று ஏற்பாடாக இதற்காகவே தயாரிக்கப்பட்டுள்ள அலுமினிய தாங்கிகளைப் பயன்படுத்தலாம். இத்தகைய பழக்கங்களை நாம் மேற்கொண்டால் லேப்டாப் அதிக வெப்பம் ஏற்படாமல் தடுப்பதோடு, அவற்றில் ஏற்படும் பிரச்னைகளையும் தடுக்க முடியும்.

நன்றி நண்பர்களே..!


இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.ஏதேனும் சந்தேகம் எனில் மின்னஞ்சல் செய்யுங்கள்.நன்றி நண்பர்களே.. மற்றுமொரு புதிய பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம்.

கம்ப்யூட்டர்ல சி.டி மாட்டிகிச்சா...!

ஒரு ஆர்வத்தில் சி.டி. யை உங்கள் கணினியில் உள்ள DVD Drive--ல் போட்டு அதை இயக்கியிருப்பீர்கள்.
இயக்கம் முடிந்த பிறகு மீண்டும் அதை வெளியே எடுக்க முனையும்பொழுதுதான் உங்களுக்கு சிக்கலே ஆரம்பிக்கும்.. நன்றாக திறந்து மூடிக்கொண்டிருந்த டிரைவ் இப்பொழுது திறக்காமல் உங்கள் பொறுமையைச் சோதிக்கும்..

dvd emergency hole

DVD Drive Tray திறக்காமல் இருப்பதற்கான காரணங்கள்:

வழக்கம்போல முழுமுதல் காரணம் தூசிகள்தான். அதனோடு வேறேதேனும் ஒட்டும்பொருட்கள், தலைமுடி, அழுக்கு சேர்தல் போன்றவையும் காரணமாக இருக்கும். அல்லது DVD Drive Tray கதவுப் பகுதி பிளாஸ்டிக்கால் ஆனதால் அதில் ஏதேனும் விரிசல், உடைசல் ஏற்பட்டாலும் இவ்வாறு திறக்காமல் இருக்கலாம்.
இவ்வாறான தருணங்களில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
அதிகமான மன அழுத்தத்துக்கு ஆளாவீர்கள்... இப்பிரச்னைக்கு எளிய தீர்வுகள் இருக்கின்றன.
தீர்வு 1: 
உங்கள் CD Drive -மூடியின் கீழாக அருகில் பார்த்தால் ஒரு ஊசி நுழையும் அளவிற்கு ஒரு ஓட்டை இருக்கும். நன்றாக உற்றுப் பார்த்தால்தான் தெரியும். ஒரு சிலர் இதை கவனித்திருக்கமாட்டார்கள். (படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள பகுதி)
அந்த துளையில் ஒரு ஊசியை அல்லது பேப்பர் கிளிப் (paper clip) எடுத்து இலேசாக நுழைத்தால் போதும். உடனடியாக உங்களுடைய சி.டி டிரைவின் டிரே வெளியே வந்துவிடும்.
தீர்வு 2:
உங்கள் கணினியில் மைகம்ப்யூட்டர் ஐகான் மீது கிளிக் செய்யுங்கள். தோன்றும் விண்டோவில் அனைத்து டிரைவ்களும் காட்டப்படும். அதில் Devices with removable storage என்ற பிரிவின் கீழ் உங்கள் சி.டி. அடங்கிய ஐகான் (DVD Drive Icon) காட்டப்படும். அதில் ரைட் கிளிக் செய்து எஜக்ட் (Eject) என்பதைக் கிளிக் செய்யவும்.
தீர்வு 3:
இந்த வழிமுறை கொஞ்சம் நிதானமாக செய்ய வேண்டிய ஒன்று. முதலில் உங்கள் கணினியில் மின்சாரம் பாய்வதை தடை செய்ய வேண்டும். அதற்கு உங்களுடைய கணினியை shutdown செய்துவிடவும். பிறகு சி.டி. டிரைவின் டிரேவிற்கு அடியில் ஒரு பிளாட் ஸ்குரூ டிரைவை எடுத்து இலேசாக அதனடியில் செலுத்தி, DVD/CD Drive -ன் டிரேயை இலேசாக இழுக்கவும் (வேகமாக பலம்கொண்டு இழுக்கக்கூடாது). இப்பொழுது டிரே வெளியே வந்துவிடும்.
தீர்வு 4: 
இம்மூன்று வழிகளையும் பின்பற்றி DVD Drive கதவு திறக்கவில்லை என்றால் என்ன செய்வது? இருக்கவே இருக்கிறார் (Computer Doctor)கம்ப்யூட்டர் வைத்தியர் (பழுது பார்ப்பவர்). அவரிடம் சொல்லி அதனைச் சரிசெய்ய வேண்டியதுதான். ஆம் நண்பர்களே... கணினியைப் பொருத்தவரை தெரியாத செயல்களை நாம் செய்யும்பொழுது மிக கவனமுடன் செய்து பரீசித்துப் பார்க்க வேண்டும். இல்லையெனில் அதற்குரியவர்களிடம் காண்பித்து சரிசெய்வதே சிறந்த முறை.

மேற்கண்ட மூன்று வழிமுறைகளையும் பின்பற்றி DVD Tray திறக்கவில்லை என்றால் கண்டிப்பாக நீங்கள் நான்காவது வழிமுறையான கணினி பழுது பார்ப்பவரை அழைத்துதான் பிரச்னையை சரிசெய்ய வேண்டும்.