Sep 24, 2014

தமிழில் ஜாதகப்பலன்கள் பார்க்க

ஆயிரம்தான் சொல்லுங்க...தமிழில் நமது ஜாதகத்தின் பலன்கள் படித்துப்பார்ப்பதில் உள்ள சுகமே அலாதிதான்.பிறந்த குறிப்பு - ஜாதக கட்டம் -----செவ்வாய் தோஷம்-பிறந்த போது உள்ள தசை இருப்பு-ராசி மற்றும் நட்சத்திரப்பலன்கள்-கோசார பலன்கள் என இதில் இல்லாததே இல்லை என்று சொல்லலாம். 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவு்ம்.இதை இன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்தது்ம் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதி்ல் உங்கள் பெயர் - நீங்கள் ஆணா - பெண்ணா - நீங்கள் பிறந்த தேதி - அதன் கீழே பிறந்த நேரம் ஆகியவற்றை குறிப்பிடுங்கள். அதற்கும் கீழே நீங்கள் பிறந்த இடம் குறிப்பிடுங்கள்.சரியான ஸ்பெல்லிங் தெரிந்தால் தட்டச்சு செய்யுங்கள். அல்லது அதில் ஊரின் முதல் எழுத்தை கொடுத்து தேடுங்கள்.சமீபத்தி்ல் உங்கள் ஊரின் பெயர் மாறியிருந்தால் அது லிஸ்டில் வராது.(உதாரணத்திற்கு இதி்ல் சென்னைchennai என்று போட்டால் வராது - மெட்ராஸ் madras என்றால்தான் பெயர் வரும்) அப்படியும் உங்கள் ஊர் பெயர் லிஸ்டில் வரவில்லையா - கவலையை விடுங்கள் உங்கள் ஊர் அருகாமையில் உள்ள கொஞ்சம் பெரிய ஊர் பெயர் வருகின்றதா என்று பார்த்து அந்த பெயர் வந்தால் ஓ.கே.தாருங்கள். 
சில வினாடிகளில் உங்கள் ஊரின் அட்சரேகை தீர்க்க ரேகை பதிவாகும்.(ஞாபகமாக நீங்கள் பிறந்த ஊரை குறிப்பிட் வேண்டும் - மறந்தும் இப்போது நீங்கள் வசிக்கும் ஊரை குறிப்பிட வேண்டாம்.இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நீங்கள் பிறந்த நேரம் - நாள் - கிழமை சரியாக வந்துள்ளதா என சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
இந்த ஜாதகத்தில் ஒரு விஷேஷம் என்ன என்று கேட்கின்றீர்களா..இதில் இந்த பதிவை பதிவிட்டள்ள நேரத்தை ஜாதகமாக கணித்து போட்டுள்ளேன்.  க ர்சரை இப்போழுது கீழே நகர்த்துங்கள். நீங்கள் பிறந்த போது எந்த எந்த கிரகங்கள் எந்த எந்த வீட்டில் இருந்ததோ அதனை காணலாம். இதனை ஜாதகத்தின் ராசி சக்கரம் என்றும் குறிப்பிடுவார்கள்.அதன்கீழேயே உங்களுடைய தசா இருப்பு விவரம் கொடுக்கப்பட்டுள்ளதை கவனியுங்கள்.


பையனோ - பெண்ணோ ஜாதகத்தி்ல் முக்கியாக பார்க்கவேண்டியது செவ்வாய் தோஷம். இந்த சாப்ட்வேரில் அதனை சுலபமாக பார்க்கலாம்.கீழே உள்ள விண்டோவினில் பாருங்கள். இதில செவ்வாய் தோஷம் இல்லை என்று பச்சை வர்ணத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். 


இந்த ஜாதகத்தில் பாருங்கள்.இருப்பதை சிகப்பு வர்ணத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.


ஜாதகத்தில் அடுத்து என்ன திசை - புக்தி நடைபெறுகின்றது என்று பார்க்கவேண்டும். அதற்கேற்ப பலன்கள் மாறு படு்ம்.கீழே பாருங்கள் திசை மற்றும் புத்தி ஆரம்பம் மற்றும் முடிவு பற்றி போட்டுள்ளார்கள்.


இதில் நட்சத்திரப்பலன்களும் ராசியின் பலன்களையும் நாம் அறிந்து கொள்ளலாம்.இறுதியாக உள்ளது கோசார பலன்கள். அன்றைய நிலையை சுலபமாக அறிந்து கொள்ளலாம்.


உங்களின் பலன்களுக்கு ஏற்ப சுமார் 40 பக்கங்கள் வரை வரு்ம். மறக்காமல் பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். 4 வருடங்களுக்கு முன்னர் இந்த சாப்ட்வேரை ரூபாய் 2,000 கொடுத்து இரண்டு பேர் சேர்ந்து வாங்கினோ்ம்.இப்போது இந்த சாப்ட்வேரின் மதிப்பு உங்களுக்கு புரிந்திருக்கும் என எண்ணுகின்றேன். வகுப்பறை வாத்தியாரின் பதிவு மூலம் நண்பர் கரூர் தியாகராஜன் வெளியிட்டதி்ல் சுமார் 13,000 பேர் பதிவிறக்கி பயன்படுத்தி உள்ளனர். பழைய எம்.ஜி.ஆர் - சிவாஜி படங்களை புத்தம் புதிய காப்பியாக வெளியிடுகையில் மீண்டும் படம் சக்கை போடு போடும். அதைப்போலவே நானும் இந்த சாப்ட்வேரை தியாகராஜன் சார் அனுமதி பெற்று புத்தம் புதிய காப்பியாக வெளியிடுகின்றேன்.படம் வெற்றி பெற உதவுங்கள். ஜாதகம் பயன்படுத்திப்பாருங்கள்.
கருத்துக்களை கூறுங்கள்.
Previous Post
Next Post

0 Comments: