Mar 31, 2015

எனர்ஜி ட்ரிங்க்ஸ் குடிப்பதனால் ஏற்படும் அபாயங்கள்!!

விளையாட்டு வீரர்களில் இருந்து பெரும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்யும் ஐ.டி. உத்தியோகஸ்தர்கள் வரை எண்ணில் அடங்காதவர்கள் இந்த எனர்ஜி ட்ரிங்க்ஸை தினமும் குடிக்கும் மோகத்தில் திளைத்திருக்கிறார்கள். ஒரு பக்கம் இது உடலுக்கு வேண்டிய எனர்ஜியை தருகிறதென சில பேரும். இன்னொரு பக்கம் இதை வெட்டி ஃபேசனாக கருதி சில பேரும் பருகி வருகின்றனர்.

உண்மையில் இதன் தயாரிப்பு மூலப்பொருட்களில் உடலிற்கு தீங்கான இரசாயனங்களும், அதிகப்படியான செயற்கை சர்க்கரை பொருளும் மற்றும் இரசாயன வண்ண கலவைகளும் தான் பயன்படுத்தப்படுகின்றன. இது, மாரடைப்பு, நரம்பு தளர்ச்சி, டைப் 2 நீரிழிவு நோய் போன்ற பாதிப்புகள் உருவாக ஒரு வகையிலான காரணமாக அமைகிறது.

இது யாவும் ஓரிரு நாட்களில் ஏற்படும் உடல்நல மற்றம் அல்ல, ஒவ்வொரு நாளும் நீங்கள் இதை குடித்து வருவதனால் ஏற்படும் உடல்நல பாதிப்பு ஆகும். கொஞ்சம் கொஞ்சமாய் உங்கள் உடல்நலத்தை அரித்து உங்கள் உயிர் மரித்துப் போக செய்கிறது. இதோ எனர்ஜி ட்ரிங்க்ஸ் குடிப்பதனால் ஏற்படும் உடல்நல அபாயங்கள்…

மாரடைப்பு

எனர்ஜி ட்ரிங்க்ஸின் இரசாயன கோட்பாடு அனைவரது உடல்நலத்திற்கும் ஒரே மாதிரியான பயனளிக்காது. பலவீனமான இதயம் கொண்டவர்கள் எனர்ஜி ட்ரிங்க்ஸ் பருகுவதனால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

தீராத தலைவலி

நீங்கள் அதிகமாக எனர்ஜி ட்ரிங்க்ஸ் குடிப்பவாராக இருப்பின் அடிக்கடி தலைவலி வர வாய்ப்புகள் இருக்கிறது. இதில் கலக்கப்படும் காப்ஃபைன் பொருள் தான் இதற்கான காரணியாக அமைவதாய் கூறப்படுகிறது.

தூக்கமின்மை

எனர்ஜி ட்ரிங்க்ஸ் உடலிற்கு சுறுசுறுப்பை தரவல்லது. ஆனால், இதன் எதிர்வினையை அதிகமாக எனர்ஜி ட்ரிங்க்ஸ் பருகுபவர்களுக்கு தூக்கமின்மை ஏற்படுகிறது.

டைப் 2 நீரிழிவு நோய்

பல எனர்ஜி ட்ரிங்க்ஸ் பானங்களில் செயற்கை சர்க்கரை அளவு சுவையை அதிகப்படுத்துவாதற்காக சேர்க்கப்படுகின்றன. இது கணையத்தில் சுரக்கும் இன்சுலின் அளவை அதிகப்படுத்துகிறது. இதனால் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது.

நரம்பு தளர்ச்சி

எனர்ஜி ட்ரிங்க்ஸில் கலக்கப்படும் அதிகப்படியான காப்ஃபைன் உங்களுக்கு நடுக்கத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தும். நாள் போக்கில் இது நரம்பு தளர்ச்சி பாதிப்பை ஏற்படுத்துகிறது.

வாந்தி

உடல்நீர் வறட்சி மற்றும் அமில அரிப்பை ஏற்படுத்தும் எனர்ஜி ட்ரிங்க்ஸ் குடிப்பதனால் வாந்தி ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.
மற்றவை

இது தவிர சுவாசக் கோளாறு, இரைப்பை பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. எனவே, முடிந்த வரை அளவிற்கு அதிகமாய் எனர்ஜி ட்ரிங்க்ஸை பருகுவதை குறைத்துக் கொள்ளுங்கள்.

கடந்த 3 மாதங்களில் மட்டும் டெல்லியில் 1,120 குழந்தைகளை காணவில்லை

தலைநகர் டெல்லியில் இந்த ஆண்டு கடந்த மார்ச் 15-ம் தேதி வரை 1,120 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. 

தினமும் கிட்டத்தட்ட 20 குழந்தைகள் வரை காணாமல் போவதாகவும் இதில் பாதிக்கும் மேற்பட்டோரை மீட்க முடியாமல் போவதாகவும் டெல்லி போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

வீட்டுக்கு அருகில் விளையாடச் செல்வது, பள்ளிக்கு செல்வது எனப் பல்வேறு காரணங்களுக்காக வெளியே செல்லும் குழந்தைகள் வீடு திரும்பாவிட்டால் பெற்றோர்கள் படும் தவிப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இந்த வகையில் டெல்லியில் தற்போது அன்றாடம் கிட்டத்தட்ட 20 குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை தொலைத்துவிட்டு தவித்து வருவதாக கூறப்படுகிறது.

புதிய ஆண்டு பிறந்து 3 மாதங்கள் கூட நிறைவுறாத நிலையில் கடந்த 15-ம் தேதி வரை டெல்லியில் 1,120 குழந்தைகள் காணாமல் போயுள்ளன. இதில் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளே அதிக எண்ணிக்கையில் அதாவது 621 பேர் தொலைந்து போயுள்ளனர்.

டெல்லி போலீஸார் தரும் புள்ளிவிவரப்படி கடந்த ஆண்டு அம்மாநிலத்தில் 7,572 குழந்தைகள் காணாமல் போயின. இதிலும் பெண் குழந்தைகளே அதிக எண்ணிக்கையில் (4,166) உள்ளன.

இதற்கு முன் 2013-ல் 5,809 குழந்தை களும், 2012-ல் 2,686 குழந்தைகளும் காணாமல் போனவர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் டெல்லி போலீஸ் அதிகாரிகள் கூறும் போது, “பெண் குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டோர் பாலியல் தொழிலில் இறக்கப்பட்டு விடுகின்ற னர். இவர்களை கடத்திச் செல்வதற் காகவே டெல்லியில் பல கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. இவர்களின் தொடர்புகள் நாடு முழுவதிலும் பரவியிருப்பதால் இவர்களை கண்டுபிடிப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன” என்றனர்.

எனினும், காணாமல் போகும் குழந்தைகளில் சுமார் 50 சதவீதம் பேர் மட்டும் டெல்லி போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படு கின்றனர். இவர்கள் காணாமல் போவ தற்கு, பள்ளிக்குச் செல்ல விருப்ப மின்மை, குடும்பத் தகராறு உட்பட பல் வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.

இந்தக் காரணங்களை கடந்த ஆண்டு டெல்லி போலீஸார் ஆராய்ந்த போது 10 சதவீதம் பேர் குடும்பத் தகராறால் காணாமல் போயுள்ளனர். 11 சதவீதம் பேர் வீட்டுக்கு அருகிலே யும், 9 சதவீதம் பேர் வெளியில் சென்று விட்டு வீடு திரும்பும்போது வழித வறியதாலும் தொலைந்துள்ளனர். 15 சதவீதம் பேர் ஏழ்மையாலும், 11 சதவீதம் பேர் பள்ளிக்கு செல்ல விரும்பாமலும் வீட்டை விட்டு ஓடியுள்ளனர். மேலும் 8 சதவீதம் பேர் பெற்றோர் அடிப்பது மற்றும் திட்டுவதற்கு பயந்தும் எஞ்சி யவர்கள் பிற காரணங்களுக்காகவும் காணாமல் போவதாக தெரிய வந்துள்ளது.

காணாமல்போகும் குழந்தைகளில் பெரும்பாலானோர் 8 வயதுக்கும் குறைவாக இருப்பது டெல்லி போலீஸாரை கவலை அடையச் செய்கிறது. ஏனெனில், கடந்த ஆண்டு காணாமல் போய் மீட்கப்படாத 749 குழந்தைகளின் வயது 12-க்கும் குறைவாகும்.

இது குறித்து ‘தி இந்து’விடம் டெல்லி மாநில காவல்துறை இணை ஆணையர் ரவீந்திரா சிங் யாதவ் கூறும்போது, “காணாமல் போனவர் களின் புகார்கள் மீது நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளை டெல்லி நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. இப் புகார்களில் எங்களுடன் இணைந்து 10-க்கும் மேற்பட்ட அமைப்புகள் தீவிர தேடலில் ஈடுபடுகின்றன. இதற்காக ‘ஆபரேஷன் மிலாப் (மீண்டும் இணைவதற்கான நடவடிக்கை)’ என்ற பெயருடன் தனி போலீஸ் படை இயங்கி வருகிறது” என்றார்.

கடத்தலில் சம்பல் கொள்ளைக்காரர்கள் 

கடந்த 5 ஆண்டுகள் வரை டெல்லி கிரிமினல்களால் கடத்தப்படும் குழந்தைகளில் குறிப்பிட்ட சிலரை சம்பல் கொள்ளையர்களிடம் ஒப்படைக்கும் வழக்கம் இருந்தது. பிணையத் தொகை கிடைத்தவுடன் அக்குழந்தைகளை சம்பல் கொள்ளைக்காரர்கள் தாங்கள் மறைத்து வைத்திருக்கும் உ.பி., ம.பி., ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் விடுவிக்கும் வழக்கம் இருந்தது. பிணையத்தொகை கொடுக்க இயலாதவர்கள் அந்தக் கும்பலுடனே இணைந்து கொள்ளையர்களாகி விடுவது உண்டு. இந்த வகையில் ‘உ.பி.யின் வீரப்பன்’ என்று அழைக்கப்பட்ட பிரபல சம்பல் கொள்ளையன் தத்துவா, சுமார் 20 வருடங்களுக்கு முன் டெல்லியில் கடத்தப்பட்ட பெட்ரோல் பங்க் உரிமையாளர் மகனை தனது கும்பலின் அடுத்த தலைவனாக அறிவித்திருந்தார். 35 வருடங்களாக தலைமறைவாக இருந்த தத்துவா ஜூலை 23, 2007-ல் உ.பி. போலீஸாரால் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டான். சரணைடைந்த தத்துவாவின் வாரிசு உபி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்தாண்டின் பணக்கார தொழில் அதிபர்கள் இவங்க தான், பார்த்தால் ஷாக் ஆகிடுவீங்க!


உலக பணக்காரர்களை பற்றி நிறைய செய்தி படித்திருப்பீர்கள், இங்கு தொழில்நுட்ப உலகில் 2015 ஆம் ஆண்டின் கோடீஸ்வரர்களாக இருப்பவர்களின் பட்டியலை தான் பார்க்க இருக்கின்றீர்கள். இந்தாண்டின் டாப் 10 பணக்காரர்களின் பட்டியலை கீழே வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

01.பில் கேட்ஸ்
பில் கேட்ஸ் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி.
 xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
02.லேர்ரி எல்லிஸன்
ஆரக்கிள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி.
 xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
03.ஜெஃப் பெசோஸ்
உலகளவில் பிரபலமாக இருக்கும் அமேசான் நிறுவனத்தின் நிறுவனர்.
  xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
04.மார்க் சூக்கர்பர்க் 
பேஸ்புக் நிறுவனத்தின் இணை நிறுவனர் தான் மார்க், இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பே இல்லை எனலாம்.
  xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

05.லேர்ரி பேஜ்
 
கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனர் இவர் தான்.
  xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
06.ஜேக் மா
அலிபாபா குழுமத்தின் நிறுவனர்.
  xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

07.ஸ்டீவ் பால்மர் 
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி.
 xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

08.லாரென் பாவெல் ஜாப்ஸ்
கூகுள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி.
  xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
09.அசிம் ப்ரேம்ஜி
விப்ரோ நிறுவனத்தின் தலைவர்.
 xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
10.மைக்கேல் டெல்
டெல் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலமை நிர்வாக அதிகாரி.
ஆன்டிராய்டு கிட்காட் மூலம் இயங்கும் மைக்ரோமேக்ஸ் போல்ட் எஸ்300 ஆன்லைனில் ரூ.3,300க்கு கிடைக்கின்றது

பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டுள்ளது மைக்ரோமேக்ஸ் நிறுவனம். மைக்ரோமேக்ஸ் போல்ட் எஸ்300 என்ற இந்த ஸ்மார்ட்போன் ஆன்லைனில் ரூ. 3,300க்கு கிடைக்கன்றது. டூயல் சிம் மூலம் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆன்டிராய்டு கிட்காட் மூலம் இயங்குகின்றது. 4 இன்ச் டிஸ்ப்ளே கொண்டு 1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் மற்றும் 512 எம்பி ராமும் இதில் உள்ளது.

மைக்ரோமேக்ஸ் போல்ட் எஸ்300, 0.3 எம்பி ப்ரைமரி மற்றும் முன்பக்க கேமராக்களை கொண்டுள்ளது. 4 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 3ஜி, GPRS/ EDGE, Wi-Fi, GPS,மைக்ரோ யுஎஸ்பி மற்றும் ப்ளூடூத் 2.1 வழங்கப்பட்டுள்ளன. பேட்டரியை பொருத்த வரை 1200 எம்ஏஎஹ் கொடுக்கப்பட்டுள்ளது.

ஏசஸ் சென்ஃபோன் 2 இந்தியாவில் ஏப்ரல் மாதம் வெளியாகும்.

இந்தியாவில் ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில் ஏசஸ் சென்ஃபோன் 2 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் 5 இன்ச் மற்றும் 5.5 இன்ச் டிஸ்ப்ளே என இரு மாடல்களாக வெளியாவதோடு 4 ஜிபி ராமும் வழங்கப்பட்டுள்ளது.
ஏசஸ் சென்ஃபோன் 2, 64 ஜபி இன்டர்னல் மெமரி 4 ஜிபி ராம் கொண்டிருப்பதோடு இந்தியாவில் ரூ. 19,900க்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏசஸ சென்ஃபோன் 2 அந்நிறுவனத்தின் ZenUI மூலம் கூகுளின் ஆன்டிராய்டு லாலிபாப் 5.0 மற்றும் Intel Atom SoC கொண்டிருக்கும். சென்ஃபோன் 2 ZE551ML 64 பிட் 2.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் Intel Atom Z3580 பிராசஸரும், 2ஜிபி ராம் கொண்ட ஸ்மார்ட்போன் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் Intel Atom Z3560 பிராசஸரும் கொண்டிருக்கும்.

Asus Zenfone 2 Available Models

ASUS ZENFONE 2 (ZE551ML)4GB-64GB  /RS.19900(Approximately)
ASUS ZENFONE 2 (ZE551ML)4GB-32GB  /RS.18000(Approximately) 
ASUS ZENFONE 2 (ZE551ML)2GB-32GB  /RS.13900(Approximately)  
ASUS ZENFONE 2 (ZE550ML)4GB-16GB  /RS.11900(Approximately)

யு.எஸ்.பி. டைப் சி பற்றி தெரியுமா...

 
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மேக்புக் கம்ப்யூட்டரில் ஒரே ஒரு யு.எஸ்.பி. டைப் சி போர்ட் தரப்பட்டுள்ளதாகத் தகவல் வந்தவுடன், பலரும் இது குறித்து
தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். முதன் முதலில் ஆப்பிள் நிறுவனக் கம்ப்யூட்டரில் இது வந்தாலும், இந்த வகை யு.எஸ்.பி. போர்ட், ஆப்பிள் நிறுவனத்தின் தனிப்பட்ட வடிவமைப்பு இல்லை. யு.எஸ்.பி. பயன்பாட்டில், இது ஒரு புதிய கட்டமைப்பினையும் செயல்முறையினையும் கொண்டுள்ளது. இது விரைவில், தற்போது யு.எஸ்.பி. பயன்படுத்தப்படும் அனைத்து சாதனங்களிலும், பழைய முறை வடிவமைப்பின் இடத்தில் இடம் பெறும். 

யு.எஸ்.பி. சி வகை என்பது, பல புதிய வரையறையுடன் இணைந்ததாகவே இருக்கும். எடுத்துக் காட்டாக, வேகமாக இயங்கு திறனும், மின்சக்தி வழங்கும் திறனும் கொண்ட யு.எஸ்.பி. 3.1 போன்றவற்றுடன் இணைந்ததாகவே இருக்கும். 

யு.எஸ்.பி. சி வகை ஒரு புதிய சிறிய இணைப்பாகும். இந்த இணைப்பு, தற்போது வந்திருக்கும் புதிய யு.எஸ்.பி. 3.1 மற்றும் யு.எஸ்.பி. பி.டி. (USB power delivery) ஆகியவற்றுடனும் செயல்படும். இப்போது நமக்கு நன்கு அறிமுகமாகி உள்ள யு.எஸ்.பி. டைப் ஏ (USB Type-A). நாம் யு.எஸ்.பி. 1 யு.எஸ்.பி. 2 மற்றும் 3 என முன்னேறி வந்தாலும், யு.எஸ்.பி. கனெக்டர் அப்படியேதான் உள்ளது. உலகெங்கும் பயன்படுத்தப்படும் அனைத்து யு.எஸ்.பி. கனெக்டர்களும் ஒரே மாதிரியாக, ஒரே ஒரு வழியில் மட்டும் இணைக்கப்படக் கூடியதாக உள்ளது. எனவே தான், யு.எஸ்.பி. போர்ட்டில் இணைக்கும்போது, சரியாக அதனைப் பொருத்தும் வகையில் இணைக்கின்றோமா என்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும். 
ஆனால், மற்ற டிஜிட்டல் சாதனங்களும் யு.எஸ்.பி.யைப் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டன. ஸ்மார்ட் போன், டிஜிட்டல் கேமரா, கேம் கண்ட்ரோலர் எனப் பல சாதனங்களில் யு.எஸ்.பி. போர்ட் அமைக்கப்பட வேண்டிய சூழ்நிலையில், புதிய கனெக்டர் வடிவமைப்புகள் உருவாக்கப்பட்டன. அவை மைக்ரோ மற்றும் மினி யு.எஸ்.பி. கனெக்டர் என அழைக்கப்பட்டன. 

இந்த சூழ்நிலை தற்போது மாற இருக்கிறது. பல்வேறு சாதனங்களில் பொருத்துவதற்காக, பல வகைகளில் வடிவமைக்கப்பட்ட யு.எஸ்.பி. கனெக்டர்கள் இனி ஒரு முடிவுக்கு வரும். தற்போது வரும் யு.எஸ்.பி. சி வகை கனெக்டர் என்பது மிகச் சிறிய ஒன்றாக இருக்கும். பழைய யு.எஸ்.பி. டைப் ஏ ப்ளக்கின் அளவில், மூன்றில் ஒரு பங்காகவே அமையும். அனைத்து வகை சாதனங்களும் பயன்படுத்தக் கூடிய வகையில் இந்த ஒரு கனெக்டர் அமையும். நீங்கள் வெளியாக இணைக்கக் கூடிய ஹார்ட் ட்ரைவாக இருந்தாலும், அல்லது யு.எஸ்.பி. சார்ஜரைப் பயன்படுத்தி ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்திடுவதாக இருந்தாலும், ஒரே ஒரு கேபிளைப் பயன்படுத்தி இந்த கனெக்டரைப் பயன்படுத்தலாம். இந்த சிறிய கனெக்டர் அனைத்து வகை சாதனங்களிலும் இணைக்கப்படும் வகையில் செயல்படும். இந்த கேபிளின் இரு முனைகளிலும் யு.எஸ்.பி. சி வகை கனெக்டர்கள் இருக்கும். இதனை எந்த புறத்திலும், மேல் கீழாக மாற்றியும் இணைக்கலாம். இனி அனைத்து சாதனங்களும், இதில் இணைக்கப்படும் வகையில் போர்ட்களைக் கொண்டிருக்கும். பலவகை யு.எஸ்.பி. கேபிள்கள், வெவ்வேறு வகையான கனெக்டர்கள் என்று நாம் தேடிப் பயன்படுத்த வேண்டியதில்லை. சிறிய சாதனங்களில் கூட, பெரிய அளவிலான யு.எஸ்.பி. போர்ட்களைக் கொண்டு வடிவமைக்க வேண்டியதில்லை.

யு.எஸ்.பி. சி வகை போர்ட்கள் பலவகையான வழிமுறைகளைக் கொண்டதாக இருக்கும். அந்த ஒரே ஒரு போர்ட்டில், எச்.டி.எம்.ஐ., வி.ஜி.ஏ., டிஸ்பிளே போர்ட் என அனைத்து வகைகளையும் இணைக்கலாம். தற்போது வந்துள்ள ஆப்பிள் மேக் கம்ப்யூட்டரில் உள்ள புதிய வகை போர்ட் இதற்கு நல்ல எடுத்துக் காட்டாகும்.

யு.எஸ்.பி. வழி மின்சக்தி: தற்போதுள்ள யு.எஸ்.பி. பவர் டெலிவரி வரையறையும், யு.எஸ்.பி. சி வகைக்கு இணைவானதாகவே உள்ளது. தற்போது, ஸ்மார்ட் போன், டேப்ளட் பி.சி. மற்றும் பல மொபைல் சாதனங்கள், யு.எஸ்.பி. இணைப்பு வழியாகவே சார்ஜ் செய்யப்படுகின்றன. யு.எஸ்.பி. 2 வகை மூலம், தற்போது 2.5 வாட்ஸ் மின் சக்தி மாற்றப்படுகிறது. இதன் மூலம் நம் மொபைல் போன்கள் சார்ஜ் செய்யப்படுகின்றன. இதில் 100 வாட்ஸ் வரை மின்சக்தி பரிமாறிக் கொள்ளலாம். இது இரு வழிப் பாதை கொண்டதாகும். மின்சக்தியை அனுப்பவும், பெறவும் முடியும். அதே போல, மின்சக்தி பரிமாற்றத்தின் போதே, டேட்டாவும் பரிமாறிக் கொள்ள இயலும். 

யு.எஸ்.பி. சி வகை மற்றும் யு.எஸ்.பி. 3.1.: யு.எஸ்.பி. 3.1 என்பது ஒரு புதிய வகை யு.எஸ்.பி. வரையறை. யு.எஸ்.பி. 3 என்பது, கொள்கை அளவில் 5 ஜி.பி.பி.எஸ். அளவில் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளக் கூடியதாகும். யு.எஸ்.பி. 3.1, இந்த வகையில் 10 ஜி.பி.பி.எஸ். (Gbps கிகா பிட்ஸ் ஒரு விநாடியில்) டேட்டாவினைக் கடத்தும். பழைய யு.எஸ்.பி. கனெக்டர்களை, யு.எஸ்.பி. சி வகை போர்ட்களில் இணைக்க முடியாது. இதற்காக, நாம் பழைய சாதனங்களில் உள்ள யு.எஸ்.பி. போர்ட்களைப் பயன்படுத்த முடியாது என்ற முடிவிற்கு வரக் கூடாது. தற்போது புதியதாக வந்திருக்கும் யு.எஸ்.பி. 3.1. பழைய வகை யு.எஸ்.பி. இணைப்புகளையும் ஏற்றுக் கொள்ளும் வகையிலேயே இயங்குகின்றது. எனவே, புதிய வகை சி போர்ட்களில் இணைக்க, பழைய சாதனங்களுக்கு ஒரு அடாப்டர் தேவைப்படும்.

எனவே, இனி அண்மைக் காலங்களில் வரும் கம்ப்யூட்டர்கள், சிறிய யு.எஸ்.பி. சி வகை போர்ட் மற்றும் பழைய வகை யு.எஸ்.பி. போர்ட் என இரு வகைகளைக் கொண்டு அமைக்கப்பெறும் என எதிர்பார்க்கலாம். அல்லது, தற்போது வந்திருக்கும் ஆப்பிள் மேக் புதிய கம்ப்யூட்டர் போல, யு.எஸ்.பி. சி வகை போர்ட் மட்டும் இருந்தால், நமக்குத் தேவையான அடாப்டர் மூலம், சாதனங்களை இணைத்துப் பயன்படுத்தலாம். 

யு.எஸ்.பி. சி வகை என்பது, இந்த வகைப் பயன்பாட்டில், நல்ல முன்னேற்றத்தையே காட்டுகிறது. முதன் முதலாக, ஆப்பிள் நிறுவனத்தின், புதிய மேக் புக் கம்ப்யூட்டரில் தன் அறிமுகத்தினை மேற்கொண்டுள்ளது. ஆனால், இது ஆப்பிள் நிறுவனம் மட்டுமே பயன்படுத்தக் கூடிய, ஆப்பிள் நிறுவனத்தின் தொழில் நுட்பம் என யாரும் எண்ணத் தேவை இல்லை. வரும் நாட்களில் அறிமுகமாகக் கூடிய அனைத்து நிறுவனத்தின் சாதனங்களிலும் இது நிச்சயம் இடம் பெறும். 

தற்போது ஆப்பிள் நிறுவனம் தன் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் வழங்கும், லைட்னிங் கனெக்டர் கூட, யு.எஸ்.பி. சி வகை போர்ட்கள் கொண்டு மாற்றப்படலாம். மற்ற கனெக்டர்களுடன் ஒப்பிடுகையில், ஆப்பிள் தரும் லைட்னிங் கனெக்டர், புதிய வசதி அல்லது பயன்பாட்டினைத் தரவில்லை. மேலும், அது ஆப்பிள் நிறுவனத்திற்கே சொந்தமான தயாரிப்பு என்பதால், மற்ற நிறுவனங்கள் பயன்படுத்த, உரிமக் கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். எனவே, இதனை மற்ற நிறுவனங்கள் பயன்படுத்தும் என எதிர்பார்க்க வேண்டியதில்லை. ஆனால், அனைவரும் புதிய யு.எஸ்.பி. சி வகை போர்ட் மற்றும் கனெக்டர் பயன்படுத்துகையில், ஆப்பிள் நிறுவனமும் தன் லைட்னிங் கனெக்டரை மாற்றிக் கொள்ளலாம்.

கூகுள் தான் கொண்டு வர இருக்கும் ஆண்ட்ராய்ட் போன்களில், இந்த யு.எஸ்.பி.சி வகை போர்ட்டினை அமைத்துத் தர இருப்பதாக அறிவித்துள்ளது. அண்மையில், கூகுள் வெளியிட்ட புதிய குரோம் புக் சாதனத்தில் இந்த போர்ட் இணைத்துத் தரப்பட்டுள்ளது.

Mar 30, 2015

பேஸ்புக் மற்றும் ரிலையன்ஸ் வழங்கும் சலுகைகள்


ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் இணைந்து பல சலுகைகளைத் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளன. பல பயனுள்ள இணைய தளங்களை அணுகிப் பயன்படுத்த இலவச அனுமதியினை வழங்குகின்றன. Internet.org என்ற அப்ளிகேஷன் மூலம், 30க்கும் மேற்பட்ட இணைய தளங்களை இலவசமாக அணுகிப் பயன்படுத்தலாம். செய்திகள், தாய்மை நலம், பயணங்கள், சுற்றுலா, வேலை வாய்ப்புகள், விளையாட்டு செய்திகள், தொலை தொடர்பு மற்றும் அரசு தகவல்களை எந்தவித 2ஜி அல்லது 3ஜி கட்டணம் இன்றிப் பெறலாம்.

தற்போது இணைய இணைப்பினைப் பெறாமல் அல்லது பெற முடியாமல் இருக்கும் 500 கோடி மக்களுக்கு, இணைய இணைப்பினை வழங்குவதைத் தன் இலக்காகக் கொண்டுள்ளதாக முன்பு பேஸ்புக் அறிவித்திருந்தது. அத்திட்டத்தின் ஒரு முயற்சியாக, ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. Internet.org என்னும் தன் அப்ளிகேஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்தி அறிவித்துள்ளது. இதன் மூலம் பல லட்சக்கணக்கான மக்கள் அடிப்படை இணைய வசதியினை இலவசமாகப் பெறலாம். தமிழ்நாடு, மஹாராஷ்ட்ரா, ஆந்திர மாநிலம், குஜராத், கேரளா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இது அறிமுகமாகியுள்ளது. 35க்கும் மேற்பட்ட இணைய சேவைகளை இதன் மூலம் பெறலாம்.

இந்த சேவைகள் அனைத்தும் ஆங்கிலம் மட்டுமின்றி, இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி மற்றும் மராத்திய மொழிகளில் கிடைக்கின்றன. இந்த தளங்கள், இணைய அலைக்கற்றையில் குறைந்த அளவே பயன்படுத்துகின்றன. மேலும் மொபைல் போன்களுக்கேற்ற வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

மக்களுக்கு அடிப்படை பயன்களை வழங்கக் கூடிய இணைய தளங்களுக்கு இதன் மூலம் இலவச இணைய இணைப்பு கிடைக்கும். மற்றபடி பொதுவான, கட்டற்ற இணைய இணைப்பு வழங்கப்பட மாட்டாது. விக்கிபீடியா, வேலை வாய்ப்பு குறித்து தகவல் தரும் தளங்கள், சீதோஷ்ண நிலை குறித்து தகவல் தரும் தளங்கள், விளையாட்டு, செய்திகள் மற்றும் தன் பேஸ்புக் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் ஆகிய தளங்களில் கிடைக்கும் சேவை இந்த இலவச இணைய இணைப்பு திட்டத்தின் கீழ் வருகின்றன.

மற்ற மாநிலங்களிலும் இவை படிப்படியாக அமல்படுத்தப்படும். மேலும் பல இணையதளங்கள் இந்த இலவசப் பட்டியலில் இணைக்கப்பட்டு கூடுதல் பயன்கள் மக்களுக்குக் கிடைக்கும். இன்னும் 90 நாட்களில் இந்தியா முழுவதும் இந்த இலவச சேவை நீட்டிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள் Internet.org Android என்ற ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் மூலம் இந்த சேவைகளை அனுபவிக்கலாம். இது http://www.internet.org என்ற தளத்தில் கிடைக்கிறது. ஆப்பரா மினி பிரவுசரின் தொடக்க திரையிலேயே இந்த தளம் கிடைக்கிறது. அல்லது வாடிக்கையாளர்கள், இந்த சேவையைப் பயன்படுத்துவது குறித்த ஆலோசனைகளைப் பெற 180030025353 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு பேசலாம்.

எந்தவிதமான இணைய இணைப்பிற்கான டேட்டா திட்டமும் இல்லாமல், ரிலையன்ஸ் நிறுவன வாடிக்கையாளர்கள் இதனைப் பெறலாம். இந்த சேவைகள் அனைத்தும் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி மற்றும் மராத்தி மொழிகளில் கிடைக்கின்றன.

இந்த திட்டம் ஒவ்வொருவரையும் இணையத்துடன் இணைக்கும் முயற்சியாகும். இதன் மூலம் மக்கள் தங்கள் கருத்துக்களை உலகில் உள்ள மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அரிய வாய்ப்பு தரப்படுகிறது.

இதற்கு முன் இது போன்ற இலவச இணைய திட்டத்தினை கொலம்பியா, ஸாம்பியா, கென்யா மற்றும் டான்சானியா ஆகிய நாடுகளில் பேஸ்புக் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.

இந்த இலவச சேவையைத் தொடங்கி வைத்து, ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலர் குர்தீப் சிங் பேசுகையில், இதன் மூலம் இணைய இணைப்பில் செயல்படும் இந்தியக் குடி மக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் என்றும், இவற்றைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதனால், கல்வி, தகவல் தொடர்பு, வர்த்தகம் ஆகிய பிரிவுகளில் செயல்பாடுகள் மக்களிடையே அதிகரித்து, அவர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றமடையச் செய்திடும் என்றார்.

பேஸ்புக் நிறுவனத்தின் துணைத் தலைவர் கிறிஸ் டேனியல்ஸ் பேசுகையில், இந்த சேவை இணையத்தை இன்னும் பல லட்சம் இந்தியர்களிடையே கொண்டு செல்லும் என்றார். இணையம் வழி ஒவ்வொரு இந்தியரும் இணைவதற்கு நல்லதொரு கருவியாக இந்த சேவை இருக்கும். இதன் மூலம் வேலை வாய்ப்புகளும், பொருளாதார முன்னேற்றத்திற்கான சந்தர்ப்பங்களும் அதிகரிக்கும் என்றார்.

மோட்டோரோலா மோட்டோ 2nd gen மொபைல் @ 6999


மோட்டோரோலா மோட்டோ 2nd gen மொபைல் அம்சங்கள்:


 • டூயல் சிம்,
 • 540 x 960 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.5 இன்ச் WSVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே,
 • 1ஜிபி ரேம்,
 • 1.2GHz குவாட்கோர் ப்ராசசர்,
 • 5 மெகாபிக்சல் பின்புற கேமரா,
 • VGA கேமரா,
 • மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
 • 3ஜி,
 • Wi-Fi 802.11 b/ g/ n,
 • ப்ளூடுத்,
 • FM ரேடியோ,
 • மைக்ரோ-யுஎஸ்பி,
 • ஜிபிஎஸ்/எ-ஜிபிஎஸ்,
 • ஆண்ட்ராய்டு 5.0,
 • 2390mAh பேட்டரி.

செல்போன் கதிர்வீச்சு உயிருக்கு எமன்!

செல்போன் கதிர்வீச்சு உயிருக்கு எமன்!

எச்சரிக்கும் மருத்துவர்கள்
 
செல்போன் பற்றிய பீதியை மத்திய அரசே பற்ற வைத்துள்ளது. கடந்த வாரத்தில் மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை வெளியிட்ட விளம்பரத்தில் செல்போனை எப்படி பயன்படுத்தக் கூடாது என்று சொல்லி இருந்த கட்டளைகள் மரண பயத்தை விதைப்பதாக உள்ளன. ஏன் இந்தத் திடீர் விளம்பரம்..?

மனிதன் கண்டுபிடித்தப் பொருட்கள் அனைத்தும், ஆக்கத்துக்கும் அழிவுக்கும் அடிப்படையாக இருக்கின்றன என்ற கூற்று அடிக்கடி நிரூபிக்கப்பட்டு வருகிறது. தொலைத் தொடர்புக்குப் பயன்படுத்தப்படும் செல்போனும் இதுக்கு விதிவிலக்கல்ல. செல்போன் கதிர்வீச்சால் மனிதனுக்குப் பாதிப்பு என்று ஆய்வுகள் மூலம் சொல்லப்பட்டாலும், யாரும் அதைப் பயன்படுத்தாமல் இருக்கப் போவதில்லை.  ஆனால் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று மக்களுக்கு உணர்த்தவே அந்த அறிவிப்பை மத்திய அரசு செய்துள்ளது.

இதுபற்றி மூளை நரம்பியல் நிபுணர் அலீமிடம் பேசினோம்.

‘இன்று செல்போன் இல்லாத மனிதனை வேற்றுகிரகவாசிபோல பார்க்கும் மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள். செல்போன்கள் முழுக்க முழுக்க மின்காந்த அலைவரிசையில் இயங்குபவை. மக்களின் அதிகபட்ச பயன்பாடு காரணமாகக் கண்களுக்குப் புலப்படாத இந்த மின் அலைவரிசைகள், நம் பூமிப்பந்தில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. இவற்றின் பயன்களைப்போலவே, இவற்றால் சில பாதிப்புகளும் இருக்கின்றன. இந்தக் கதிர்வீச்சினால் அதிகம் பாதிக்கப்படுவது மூளைதான். 20 சதவிகிதம் முதல் 60 சதவிகிதமான நோய்கள் இதன் மூலம் ஏற்படக்கூடியதாக உள்ளன என்பது கண்டறியப்பட்டுள்ளது. மின்காந்த அலைகளான செல்போன் அலைகள், நமது உடலில் செயல்படும் மின்சாரத்துடன் இடையீடு செய்யும். இவை மக்களுக்கு கண் எரிச்சல், தலைவலி, வாந்தி போன்ற பாதிப்புகளை அடிக்கடி ஏற்படுத்துவதாகச் சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

ஒவ்வொரு செல்போனிலும் இருந்து பேசும் நேரத்துக்கேற்ப கதிர்வீச்சின் தன்மை (Specific Absorption Rate -SAR)  அளவிடப்படும்.  ஒரு கிராம் மனித திசுவுக்கு சராசரியாக 1.6W/kg என்ற அளவில் இருத்தல் வேண்டும். இந்த அளவானது, சீன தயாரிப்பு செல்போன்கள் அனைத்திலும் மாறுபட்டு இருக்கும். அவற்றைப் பயன்படுத்துவதால் பாதிப்பு அதிகளவில் இருக்கும். அவை சாதாரண பிரச்னைகள் முதல் காதுகேளாமை வரை ஏற்படுத்தும். அதிகப்படியான கதிர்வீச்சு காரணமாக மூளைப் புற்றுநோய்க்கட்டிகள் வரும் ஆபத்து குறித்தும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. எனினும், அவை இன்னும் நிரூபிக்கப்படவில்லை. குழந்தைகளுக்கு மண்டை ஓடு மிகவும் மெல்லியதாக இருக்கும். கதிர்வீச்சு காரணமாக பிற்காலத்தில் அவர்கள் அதிக பாதிப்புக்கு ஆளாக நேரிடும்.

இதுமட்டுமில்லாமல், நரம்பியல் தொந்தரவாகத் தலைவலிப் பிரச்னை ஏற்படலாம். தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்புவதாலும் கைகளைத் தொடர்ந்து ஒரே கோணத்தில் வைத்து பயன்படுத்துவதாலும் மூட்டு எலும்புகள் பாதிப்படையலாம். தோள்பட்டையில் செல்போனை வைத்துச் சாய்ந்தபடி பேசுவதால் தோள்பட்டை வலி, கழுத்து வலி ஏற்படும் ஆபத்து உள்ளது. அதிகப்படியாக பயன்படுத்துவதால், கற்றலில் குறைபாடு, ஞாபகமறதி, தூக்கமின்மை, இதயத் துடிப்பு அதிகரித்தல், உடல் சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகப்படியான கதிர்வீச்சு காரணமாக விந்தணுக்களின் எண்ணிக்கையில்கூட பாதிப்பு ஏற்படும் என்கிற அதிர்ச்சித் தகவலும் உண்டு. இதுபோன்ற பிரச்னைகளைக் கருத்தில்கொண்ட அரசு,  செல்போன் டவர்களில் இருந்து வெளிப்படும் எலக்ட்ரோ மேக்னடிக் கதிர்வீச்சின் தற்போதைய அளவை, 10 மடங்கில் இருந்து ஒரு மடங்காகக் குறைக்கப்படவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், அதிகப்படியாக செல்போன்கள் பயன்படுத்துவதை நாம் தவிர்க்க வேண்டும்’ என்று எச்சரித்தார்.


தேசிய தொலைத்தொடர்புத் துறை ஊழியர்கள் சம்மேளனத்தின் சென்னை தொலைபேசி மாநில சங்கத்தின் செயலாளர் சி.கே.மதிவாணனிடம் பேசினோம். ”சில தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட அளவைவிட அதிகமாக ரேடியோ அலைவரிசைகளைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் செல்போன் சிக்னல் சரியாக இருக்கும். ஆனால், இது மனிதர்கள், பறவைகள் மற்றும் சூழலுக்குத்தான் ஆபத்து.  1 வாட் (செல்போன் வெளிப்படுத்தும் கதிர்வீச்சின் அளவு) ஆற்றல் மூலம் மைக்ரோவேவ் அடுப்பில் ஒரு லிட்டர் நீரை 1 டிகிரி செல்சியஸ் வரைச் சூடாக்க 500 விநாடிகள் தேவைப்படுகின்றன. நாம் தொடர்ந்து மொபைல் போனில் பேசுவதால் காதுமடல்கள் மூலம் உள்ளிருக்கும் உறுப்புகளுக்கும் வெப்ப அதிகரிப்பால் பாதிப்பு ஏற்படும். அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் தங்களுக்கு என வரையறுக்கப்பட்ட அளவை மட்டுமே பயன்படுத்துகின்றனர். அதனால்தான், அவர்களுடைய சிக்னல் அளவு குறைவாக உள்ளது என மக்கள் தெரிவிக்கிறார்கள். சிக்னல் நன்றாகக் கிடைக்க வேண்டும் என்பதற்காகச் செய்யும் ஏற்பாடு, மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும்’ என்றார்.

திடீரென்று மொபைல் ரிங்டோனோ அல்லது குறுஞ்செய்தியோ வந்ததுபோல் இருக்கும். ஆனால், போனை எடுத்துப் பார்த்தால் எதுவும் இருக்காது. அதேபோல அடிக்கடி போனை எடுத்துப் பார்க்கத் தூண்டும். இது சாதாரண விஷயமாகத் தோன்றலாம் ஆனால், இதுவும் ஒருவகை மனநோய் பாதிப்புதான். இதன் பெயர் ‘ரிங்டோன் ஃபோபியா.’ இப்படியாக, போனை எடுத்துப் பார்ப்பது அடிக்கடி நிகழ்ந்தால் நம்மை அறியாமலேயே டென்ஷன், பதற்றம், கோபம், முரட்டுத்தனம், படபடப்பு ஆகியவை நமக்கு ஏற்படும். இது  தொடர்ந்தால் செல்போனைக் கண்டாலோ எரிச்சல் வந்துவிடும். இந்தப் பிரச்னைகளுக்குச் சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல், கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் ஒரு கட்டத்தில் மனநோய்கூட ஏற்படலாம்.

ஆபத்தையும் கையோடு சேர்த்தே வைத்திருக்கிறோம். ஜாக்கிரதை!


செல்போனை ஜாக்கிரதையாகப் பயன்படுத்த சில யோசனைகள்!

செல்போனைப் பயன்படுத்தும்போது காது மடலில் வலி, காது சூடாதல் போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். அதனால் ஹேண்ட்ஸ் ஃப்ரீ பயன்படுத்துவதன் மூலம் செல்போன் கதிர்வீச்சு பாதிப்புகளில் இருந்து ஓரளவு தப்ப முடியும்.

உங்கள் செல்போனின் சிக்னல் குறைவாக இருக்கும்போது, செல்போனில் பேசுவதைத் தவிர்க்கவும். ஏனெனில் அந்த நேரத்தில் செல்போன், சிக்னலை முழுமையாகப் பெற அதிக அளவு கதிர்வீச்சை வெளிப்படுத்தும்.

செல்போன் பேசும்போது மூளையின் செயல்பாடு சற்றே அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டு உள்ளது. எனவே, ஒரே பகுதியில் போனை வைத்துப் பேசாமல் அவ்வப்போது மாற்றி மாற்றி வைத்துப் பேசுங்கள்.

தலையணைக்கு அடியில் செல்போனை வைத்துவிட்டுத் தூங்கும் பழக்கத்தைத் தவிர்க்கவேண்டும். காரணம் ரேடியோ அலைவரிசைகள் மூளையைப் பாதிக்கும் வாய்ப்புள்ளது.

காதில் செவித்திறன் கருவிகள் ஏதேனும் பொருத்தியிருந்தால், குறிப்பிட்ட அந்தப் பகுதியில் இருந்து 15-30 செ.மீ தூரத்துக்கு செல்போனைத் தள்ளியே வைத்துப் பேசுங்கள்.
மொபைல் வாங்கும்போதே அதனின் ஷிகிஸி  அளவை சரி பார்த்துக்கொள்ளவும்.
அழைப்பு இணையப்பெற்ற பிறகு போனைக் காதில் வைத்துப் பேசவும். காரணம், முதல் ஒலியானது அதிக அளவில் தொடங்கி, பின்னர் தேவையான அளவுக்குக் குறையும். அழைப்பு இணையும் சமயத்தில் அதிக ஆற்றல் வெளிப்படும்.

செல்போன்களை சட்டையின் இடதுபக்க பாக்கெட்டில் வைத்தால், கதிர்வீச்சின் மூலம் இதயம் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. எனவே அதைத் தவிர்க்கவும்.

போனில் பேசும்போது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்துப் பேசவும். கைகளால் முழுவதுமாகப் பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். வைப்ரேட் மோடில் செல்போனை வைத்திருப்பதைத் தவிர்க்கவும். பாக்கெட்டில் வைத்திருப்பதால் இதன் மூலம் ஏற்படும் அதிர்வலைகள் அதிகமாக உடல் பாகங்களைத் தாக்குகின்றன. மிக முக்கியமாக போனில் செலவிடும் நேரத்தைக் குறையுங்கள். அழைப்புகளுக்கான நேரத்தையும் கட்டுப்படுத்தினால் உடல்நலன் பாதுகாக்கப்படும்.

நன்றி- விகடன்

பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!

பிரேசில் உணர்த்தும் உலக அபாயம்!

ந்தப் பிராந்தியம்தான் அந்த நாட்டின் ஆன்மா; இதயப் பகுதி. அதைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் வசிக்கும் இரண்டு கோடி மக்கள் குடிநீருக்கு அல்லாடுகிறார்கள். அங்கே இருக்கும் ஆறு, அணை, குளம், குட்டை என நாட்டில் ஒட்டுமொத்தத் தண்ணீர் கையிருப்புமே 10 சதவிகிதத்துக்கும் கீழ் (ஒரு நாட்டின் தண்ணீர் வளம் அந்த அளவுக்குக் குறைவதை ‘டெட் வால்யூம்’ என அபாயகரமாகக் குறிப்பிடுவர்). நாடு, கிட்டத்தட்ட பாதிப் பாலைவனம் ஆகிவிட்டது.  வாரத்தில் ஐந்து நாட்களுக்குக் குழாய் களில் தண்ணீர் வராது. இரண்டு நாட்களுக்கு மட்டும் அதிகாலை, நள்ளிரவுகளில் அவ்வப்போது வரும். பிடித்துவைத்து வாரம் முழுக்கக் குடித்துக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் தண்ணீரை அதிகமாகப் பயன்படுத்தினால், அபராதம். இதனால் கூரையில் விழும் மழை நீரைக்கூடச் சேமித்துக் குடிக்கிறார்கள். தண்ணீர்ப் பஞ்சம் காரணமாக, கிட்னி பிரச்னை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு டயாலிசிஸ் செய்வதைக்கூட நிறுத்திவைத்திருக்கிறார்கள். 

தண்ணீர்ப் பஞ்சம் காரணமாக இத்தனை தண்ணீர்த் தகராறுகள் அரங்கேறுவது எங்கே தெரியுமா? உலகிலேயே தண்ணீர் வளம் மிக அதிகமாக இருக்கும் பிரேசில் நாட்டில்! அதிலும் குறிப்பாக, சுமார் இரண்டு கோடி பேர் வசிக்கும் பெரிய நகரான சவ் பாலோ நகரில்தான்.

உலகின் அடர்த்தியான, வளமான அமேசான் காடு, உலகின் அதிக அளவு தண்ணீர் பாயும் அமேசான் ஆறு… ஆகியவை இருப்பதும் அதே பிரேசிலில்தான். பக்கத்து நாடுகளில் இருந்து பல ஆறுகள் பிரேசிலில் பாய்ந்து கடக்க, உலகின் மிக அடர்த்தியான நிலத்தடி நீர்வளமும் அந்த நாட்டுக்கே சொந்தம். ஆனால், அங்குதான் தலைவிரித்தாடுகிறது உலகின் மிக மோசமான தண்ணீர் பஞ்சம்… ஏன்?

பதில் வழக்கமானதுதான்… காடுகள் மற்றும் மரங்கள் அழிப்பு. அதன் விளைவே இப்போது பதறவைக்கிறது.

தண்ணீர், காய்கறி, கனிகள், தங்கம், வைரம், நிலக்கரி… என பிரேசிலில் இயற்கை வளங்கள் திக்கெட்டும் குவிந்துகிடக்கின்றன. இதனால், எதையுமே அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தியே பழகியவர்கள் சவ் பாலோ நகர மக்கள். அதில் முக்கியமானது… தண்ணீர்!

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், குடி தண்ணீரைக் காசு கொடுத்து வாங்குவோம் என நாம் நினைத்திருக்கவே மாட்டோம். அதுபோலத்தான் அந்த நகர மக்களும் குடிநீர்ப் பஞ்சம் வரும் எனக் கனவிலும் எதிர்பார்க்கவே இல்லை. இரண்டுமே இப்போது நடந்துவிட்டன!

அரிசி, பருப்புக்காக ரேஷனில் நிற்பதுபோல தண்ணீரைச் சின்னச் சின்னக் குடுவைகளில் பிடித்துச் செல்ல, அந்த நகர மக்கள் வரிசையில் காத்துக்கிடக்கிறார்கள். அமேசான் காடு, ஆறு மற்றும் அதன் கிளை ஆறுகள் தரும் தண்ணீர் வளம் தவிரவும், மழையாகப் பொழியும் தண்ணீர் அதிகபட்சமாக மறுசுழற்சியாவதும் அங்கேதான். இத்தனை சாதகங்கள் இருந்தும் தண்ணீர் வளத்துக்கு பெரும் பாதகம் ஏற்பட காரணம் என்ன? காடுகளைக் கண்மூடித்தனமாக அழித்ததும் எகிறிக்கொண்டே இருக்கும் மக்கள்தொகையும்தான்  எனச் சொல்லப்பட்டாலும், வேறு பல காரணங்களும் பின்னணியில் ஒளிந்திருக்கின்றன என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

தொழில் வளர்ச்சி என்ற பெயரில் காட்டை அழித்தது ஒரு பக்கம் இருக்க, விவசாயத்தைப் பெருக்குகிறேன் என்றும் காட்டை அபகரிக்கிறார்கள். சோயா, பாதாம் போன்ற பணப் பயிர்களை விளைவித்து, அவற்றின் ஏற்றுமதி மூலம் அந்நிய செலாவணியைப் பெருக்க ஊக்குவிக்கிறது அரசாங்கம். மேலும், தண்ணீரை உருவாக்கும், சேமிக்கும் காடுகளை அழித்து, பெருமளவில் தண்ணீரை உறிஞ்சும் பணப்பயிர்களை விளைவிப்பதற்காக, காடுகளின் விஸ்தீரணத்தையும் சரசரவெனக் குறைத்தது. இதுபோக மாட்டு இறைச்சி மற்றும் இரும்பு உற்பத்தி, கரி, வைரம் போன்ற பொருட்களைத் தோண்டும் சுரங்கத் தொழில் பெருக்கம் என பிரேசிலில் நடைபெற்ற ஒவ்வொன்றும் இயற்கையின் அடிமடியிலேயே கை வைத்திருக்கிறது. இதனாலேயே பருவநிலை தாறுமாறாக மாறி, கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை அளவு குறைந்தது.


இத்தனைக்கும் இந்த அபாயங்களை பல வருடங்களுக்கு முன்னரே சுட்டிக்காட்டினார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். ஆனால், அரசாங்கம் அதைக் கண்டுகொள்ளவில்லை. வகைதொகை இல்லாமல் புதுப்புது தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதிலேயே பரபரப்பாக இருந்துவிட்டு, இப்போது சாமானியனின் குடிநீர் தேவையைக் கட்டுப்படுத்த சட்டம் போடுகிறது. இதனால் ‘அல்லையன்ஸ் ஃபார் வாட்டர்’ என்ற தன்னார்வ அமைப்பு மூலம் பொதுமக்களே தண்ணீரைச் சேமிக்கும், நிர்வகிக்கும் வேலைகளை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர்.

தண்ணீர், மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கே திண்டாடும் பிரேசிலின் பொருளாதாரத் தள்ளாட்டம், சர்வதேச அரங்கில் அந்த நாட்டின் மீதான நம்பகத்தன்மையை சீர்குலைத்திருக்கிறது. பிரேசிலின் இந்த நிலை, மற்ற உலக நாடுகள் அனைத்துக்கும் ஒரு பாடம்.

தற்போது சவ் பாலோவின் சரிபாதி மக்களுக்குக் குடிதண்ணீர் வழங்கும் கன்டரைரா அணையில் ஐந்து சதவிகிதக் கொள்ளளவுக்கே தண்ணீர் இருக்கிறது. பருவமழை பெய்யாவிட்டால், அடுத்த நான்கைந்து மாதங்களில் அந்தத் தண்ணீரும் மொத்தமாகத் தீர்ந்துவிடும். எனில், அது மூன்றாம் உலக யுத்தத்துக்கான தொடக்கப்புள்ளியாகக்கூட இருக்கக்கூடும்.

அமேசான் காட்டின் அரியவகை மூலிகைகளை அழித்ததால், என்னவெல்லாம் நடக்கிறது பாருங்கள்!

Mar 29, 2015

கார்ட்டூன்கள் குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகள்!

கார்ட்டூன்களை ரசிப்பது ஒரு வகையில் பயனுள்ள பொழுதுபோக்காக இருந்தாலும், கார்ட்டூன் மீதான மோகத்திற்கு அடிமையாக மாறும்போது கதை வேறாகிறது. கார்ட்டூன்கள் குழந்தைகளை எவ்வாறு பாதிக்கின்றது என்பது உங்களுக்கு தெரியுமா? மேலும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். கார்ட்டூன்கள் குழந்தைகளின் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத பாகமாக மாறி வருகின்றன. குழந்தைகளை உணவு உண்ண வைப்பதற்காகவும் , தங்களுக்கு ஓய்வு வேண்டும் என்பதற்காகவும், தங்களின் வேலைகளில் தொந்தரவின்றி ஈடுபடவும், குழந்தைகளை கார்ட்டூன் திரைகளின் முன் விட்டுச் செல்லும் பல பெற்றோர்கள் இங்கு உள்ளனர்.

நீங்கள் அத்தகைய பெற்றோர்களில் ஒருவராக இருந்தால், குழந்தைகைளின் வளர்ச்சியில் கார்ட்டூன்கள் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது. தினமும் கார்ட்டூன் பார்ப்பது குழந்தைகளை இப்பழக்கத்திற்கு அடிமை ஆக்குகிறது. இது அவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சியை பாதிக்கிறது.

கார்ட்டூன்கள் பார்க்கும் பழக்கத்திற்கு அடிமையாவது குழந்தைகளின் கற்பனைத் திறனை பாதிப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவர்கள் உண்மையான உலகத்தினின்றும் , அனுபவங்களினின்றும் விலக்கி வைக்கப்படுகின்றனர். படுக்கையில் இருந்து கார்ட்டூன் பார்ப்பதை விட வெளியில் சென்று விளையாடுவதில் பல நன்மைகள் உள்ளன. கார்ட்டூன்கள் குழந்தைகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் பற்றி இன்று விவாதிக்கலாம்.

மொழிவளர்ச்சி குறைபாடு பெரும்பாலான கார்ட்டூன்கள் சரியான சொல்லகராதியை உபயோகிப்பதில்லை. இது உங்கள் குழந்தைகளையும் தவறான மொழி ஆளுமையை பின்பற்ற செய்கிறது. குழந்தைகள் சாதாரணமாக பேசுவதை விட்டு தங்களுக்கு விருப்பமான கார்ட்டூன் கதாபாத்திரங்கள் போல பேச முயற்சிக்கின்றன.இது கார்ட்டூன்கள் குழந்தைகளை பாதிக்கும் விதங்களில் ஒன்றாகும்.

பார்வைக் குறைபாடுகள் தொடர்ச்சியாக கணினி மற்றும் டேப்லெட்களின் பிரகாசமான ஒளிக்கு ஆட்படுவது உங்கள் செல்லக் குழந்தைகளின் கண்களுக்கு ஏற்றதில்லை.இத்திரைகளின் மும் கணிசமான நேரத்தை செலவிடுவது நாளாவட்டத்தில் உங்கள் குழந்தையின் கண் பார்வையை பாதிக்கும்.

குறைவான உடல் உழைப்பு கார்ட்டூன்களுக்கு அடிமையாவது குழந்தைகளை அதிக நேரம் வீட்டினுள்ளே இருக்க வைக்கிறது . வெளியே விளையாடுவதில் கிடைக்கும் மகிழ்ச்சியை அவர்கள் உணர்வதில்லை. வெளியே விளையாடுவது அவர்களுக்கு இயற்கையை தெரிந்து கொள்ள உதவுவதோடு அவர்களை துடிப்போடு இருக்க வைக்கிறது.

மனவியல் குறைபாடுகள் கார்ட்டூன்கள் முன் அதிக நேரம் செலவழிப்பது குழந்தைகளின் தனிமை மனப்பான்மைக்கும் , அலட்சிய மனப்பான்மைக்கும் மூல காரணங்களில் ஒன்றாகும். இதனால் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இருப்பதில்லை. இது அவர்களின் சமூக நடத்தையையும் பாதிக்கிறது.

தவறான உணவு முறை கார்ட்டூன் பார்க்கும் பழக்கத்திற்கு அடிமையான குழந்தைகள் திரைக்கு முன் அமர்ந்து சாப்பிடவே முற்படுவர். இதுவே குழந்தைகளின் தவறான மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறைக்கு மூல காரணமாகும். குழந்தைப் பருவத்தில் ஒருவர் பழகும் உணவு முறையே இறுதி வரை நிலைத்திருக்கும்.

பாதிக்கப்படும் சமூக வாழ்க்கை கார்ட்டூன் பார்க்கும் பழக்கத்திற்கு அடிமையாவது குழந்தைகளின் சமூக வாழ்வை பாதிக்கிறது . பிற சமவயது குழந்தைகளுடன் விளையாடுவதில் அவர்களுக்கு ஈடுபாடு இருப்பதில்லை. இது அவர்களை சமூக வாழ்வினின்றும் தனித்திருக்க செய்கிறது. சமூகத்தோடு ஒன்றி இருக்கப் பழகாவிடில் குழந்தைகள் எதிர்காலத்தில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம்.

வன்முறை குழந்தைகள் பலவிதங்களில் பெற்றோரை விட மேம்பட்டவர்களாக இருக்கின்றனர். நாம் ஒரு காலத்தில் டாம் அன் ஜெர்ரி கார்ட்டூன் பார்ப்பதை விரும்பினோம். ஆனால் நமது குழந்தைகள் வன்முறை சார்ந்த கார்ட்டூன் மற்றும் வீடியோ கேம்களை விரும்புகின்றனர். இது கார்ட்டூன் குழந்தைகள் மீது ஏற்படுத்தும் தீவிரமான விளைவுகளில் ஒன்றாகும். குழந்தைகள் தாமாக எந்த பழக்கத்தையும் வளர்த்துக் கொள்வதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் என்ன சொல்லிக் கொடுக்கிறீர்கள் , என்ன செய்கிறீர்கள் என்பதில் இருந்தே குழந்தைகளின் பழக்கங்கள் உருவாகின்றன. கார்ட்டூன் குழந்தையை எவ்வாறு பாதிக்கும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். குசந்தைகள் கார்ட்டூன் பார்க்கும் நேரத்தை புத்திசாலிதனமாக முறைப்படுத்துவதோடு அவர்களை வெளியே விளையாடவும் பழக்கப்படுத்துங்கள்.
 Source:Indru Oru Thagaval.com

Mar 28, 2015

காரின் வேகத்தை தானாக குறைக்கும் புதிய தொழில்நுட்பம்

இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஐரோப்பாவில் வெளியாக இருக்கும் ஃபோர்டு எஸ்-மேக்ஸ் காரில் வேகத்தை கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. இன்டலிஜென்ட் ஸ்பீடு மீட்டர் என்று அழைக்கப்படும் புதிய அம்சமானது இரு நேசன்ட் ஆட்டோமோட்டிவ் தொழில்நுட்பங்களான ஸ்பீடு லிமிட்டர் மற்றும் டிராபிக் சைன் ரெக்கங்னிஷன்களை கொண்டுள்ளது. 
 
காரின் வேகத்தை தானாக குறைக்கும் புதிய தொழில்நுட்பம் டிராபிக் சைன் ரெக்கங்னிஷன் தொழில்நுட்பத்தில் காரின் முன்பக்கத்தில் கேமராவும் பின்புறம் ஒரு கேமரவும் கணினியுடன் இணைக்கப்பட்டு முக்கிய குறியீடுகளை பதிவு செய்யும். கடந்த சில ஆண்டுகளாக சில கார்களில் குறியீடுகளை கவனித்து அதற்கேற்ப எச்சரிக்கைகளை டிஜிட்டல் டேஷ்போர்டில் காண்பிக்கும். இங்கு, ஃபோர்டு நிறுவனம் இரு தொழில்நுட்பங்களையும் இணைத்து வேக குறியீடுகளை பார்த்து தானாக காரின் வேகத்தை குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் இல்லாமல் சத்தத்தை கொண்டு தீயை கட்டுப்படுத்த முடியும்

இசையை கொண்டு தீயை கட்டுப்படுத்த முடியும் என்கிறார்கள் விர்ஜினியாவை சேர்ந்த இரு பொறியாளர்கள். லோ-ஃப்ரீக்வன்சி சவுன்டு ஏற்படுத்தும் அலைகளை கொண்டு தீயினை கட்டுப்படுத்த முடியும் என இவர்கள் நிரூபித்துள்ளனர். இந்த ப்ரோடோடைப் எக்ஸ்டிங்யூஷரை கணினி பொறியாளர் மேஜர் வியட் ட்ரியான் மற்றும் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மேஜர் செத் ராபர்ட்சன் இணைந்து தயாரித்துள்ளனர். 
 
நீர் இல்லாமல் சத்தத்தை கொண்டு தீயை கட்டுப்படுத்த முடியும் இந்த தொழில்நுட்பம் முற்றிலும் ஒலியின் மூலம் ஏற்படும் அலைகளை சார்ந்தே இயங்குகின்றது. அதிக ஃப்ரீக்வன்சி இருக்கும் ஒலி தீயை வைப்ரேட் ஆக்கும், அதனால் குறைந்த ஃப்ரீக்வன்சிகளான 30 முதல் 60 ஹெர்ட்ஸ் சரியாக தீயில் இருக்கும் காற்றை திக்குமுக்காடச் செய்யும் என்பதை கண்டறிந்தனர். இதையடுத்து சவுன்டு ஃப்ரீக்வன்சி ஜெனரேட்டர் ஒன்று தயாரிக்கப்பட்டது, இது ஒலி அலைகளை சீராக வெளியேற்ற உதவும். 
 
இந்த கருவி சாராயத்தை கொண்டு எரியூட்டப்பட்ட சிறிய அளவிளான தீயை கட்டுப்படுத்தியது. தற்சமயம் வீட்டு பயன்பாட்டிற்கு உகந்ததாக இந்த கருவி இருக்கின்றது.

Mar 27, 2015

இந்தியாவில் ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியாகின்றது லெனோவோ ஏ7000


லெனோவோ நிறுவனம் பட்ஜெட் விலையில் லெனோவோ ஏ7000 ஸ்மார்ட்போனை இந்தியாவில் ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியிட இருக்கின்றது. இந்த ஸ்மார்ட்போனில் டால்பி அட்மோஸ் சவுன்டு இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட லெனோவோ ஏ7000, 5.5 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே, 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் சிப்செட் மற்றும் 2ஜிபி ராம் கொண்டிருக்கின்றது.

கேமராவை பொருத்த வரை 8 எம்பி ஆடடோபோகஸ் ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 8 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது. டூயல் சிம் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆன்டிராய்டு லாலிபாப் 5.0 மூலம் இயங்குகின்றது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 4G LTE, Wi-Fi, GPS/ A-GPS, ப்ளூடூத் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி இருப்பதோடு 2900 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

60 நொடிகளில் ஒரு லட்சம் முன்பதிவுகளை கடந்தது ஹூவாய் ஹானர் 4எக்ஸ்

ஹூவாய் நிறுவனம் ஹானர் வகையை சேரந்த 4 எக்ஸ் ஸ்மார்ட்போனின் ப்ளாஷ் விற்பனையை மார்ச் 24 ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு அறிவித்தது. இம்முறை 24 ஆம் தேதி துவங்கிய முன்பதிவு 29 ஆம் தேதி நள்ளிரவு வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டு, இது வரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான முன்பதிவுகளை கடந்துள்ளது.
மார்ச் மாதம் 30 ஆம் தேதி ஹானர் 4எக்ஸ் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் ப்ரெத்யேகமாக விற்பனை செய்யப்படுகின்றது, ஏற்கனவே முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் 30 ஆம் தேதி மதியம் 2 மணி முதல் போனினை வாங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ.10,499க்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹானர் நிறுவனம் முன்பதிவு செய்தவர்களை தேர்வு செய்து லிமிட்டெட் எடிஷன் போன்களை 1 ரூபாய்க்கு வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Mar 7, 2015

ஆசஸ் Fonepad 7 (FE171CG) & மெமோ பேட் 8 (ME581CL) டேப்லட்

ஆசஸ் நிறுவனம் Fonepad 7 (FE171CG) மற்றும் மெமோ பேட் 8 (ME581CL) ஆகிய இரண்டு டேப்லட்டையும் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆசஸ்
Fonepad 7 (FE171CG) டேப்லட் ரூ.10,999 விலையிலும் மற்றும் ஆசஸ் மெமோ பேட் 8 (ME581CL) டேப்லட் ரூ.19,999 விலையிலும் Flipkart வளைத்தளத்தில் பிரத்யேகமாக கிடைக்கும். 

ஆசஸ் Fonepad 7 (FE171CG) டேப்லட் : டூயல் சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்) கொண்ட ஆசஸ் Fonepad 7 (FE171CG) குரல் அழைப்பு டேப்லட்டில் ZenUI உடன் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் மூலம் இயங்குகிறது. இந்த டேப்லட்டில் கைரேகை எதிர்ப்பு படலம் மற்றும் 178 டிகிரி பரந்த கோணம் உடன் 1024x600 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 7 இன்ச் WSVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. 

இதில் 2ஜிபி ரேம் உடன் இணைந்து 1.2GHz இன்டெல் ஆட்டம் Z2520 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. ஆசஸ் Fonepad 7 (FE171CG) டேப்லட்டில் 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. இதில் மைக்ரோSD அட்டை வழியாக 64ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு, வருகிறது. 

டேப்லட்டின் இணைப்பு விருப்பங்கள், 3ஜி, Wi-Fi 802.11 b/ g/ n, ப்ளூடுத், FM ரேடியோ, மைக்ரோ-யுஎஸ்பி, மற்றும் ஜிபிஎஸ்/எ-ஜிபிஎஸ் போன்றவை வழங்கியுள்ளது. இந்த டேப்லட்டில் 3950mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது, 110.6x196x7.9mm நடவடிக்கைகள் மற்றும் கருப்பு, வெள்ளை, சிவப்பு மற்றும் தங்கம் வண்ண வகைகளில் கிடைக்கிறது. மேலும், இதில் காம்பஸ்/மக்னேடோமீட்டர், ப்ரொக்ஷிமிட்டி சென்சார், அச்செலேரோமீட்டர் மற்றும் ஆம்பிஎண்ட் லைட் சென்சார் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது.

ஆசஸ் மெமோ பேட் 8 (ME581CL) டேப்லட் : ஆசஸ் மெமோ பேட் 8 (ME581CL) டேப்லட் உலகின் மெல்லிய 8 இன்ச் LTE டேப்லட் ஆகும். இந்த டேப்லட்டில் 299 கிராம் எடையுடையது மற்றும் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் மூலம் இயங்குகிறது. ஆசஸ் மெமோ பேட் 8 (ME581CL) டேப்லட்டில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் 1920x1200 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 8 இன்ச் முழு ஹச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. 

இதில் 2ஜிபி ரேம் உடன் இணைந்து 2.3GHz 64பிட் இன்டெல் ஆட்டம் Z3580 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. ஆசஸ் மெமோ பேட் 8 (ME581CL) டேப்லட்டில் 5 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 1.2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. இதில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு, வருகிறது. 

டேப்லட்டின் இணைப்பு விருப்பங்கள், 3ஜி, 4G LTE, Wi-Fi 802.11 a/ b/ g/ n/ ac, ப்ளூடுத் 4.0, ஜிபிஎஸ், மைக்ரோ-யுஎஸ்பி, மற்றும் NFC போன்றவை வழங்கியுள்ளது. இந்த டேப்லட்டில் 4350mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. மேலும், இதில் காம்பஸ்/மக்னேடோமீட்டர், அச்செலேரோமீட்டர் ஆம்பிஎண்ட் லைட் சென்சார் மற்றும் கைரோஸ்கோப் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது.

ஆசஸ் Fonepad 7 (FE171CG) டேப்லட் அம்சங்கள்:

 • டூயல் சிம்,
 • 1024x600 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 7 இன்ச் WSVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே,
 • 2ஜிபி ரேம்,
 • 1.2GHz இன்டெல் ஆட்டம் Z2520 ப்ராசசர்,
 • 8 மெகாபிக்சல் பின்புற கேமரா,
 • 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
 • மைக்ரோSD அட்டை வழியாக 64ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
 • 3ஜி,
 • Wi-Fi 802.11 b/ g/ n,
 • ப்ளூடுத்,
 • FM ரேடியோ,
 • மைக்ரோ-யுஎஸ்பி,
 • ஜிபிஎஸ்/எ-ஜிபிஎஸ்,
 • ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட்,
 • 3950mAh பேட்டரி.

ஆசஸ் மெமோ பேட் 8 (ME581CL) டேப்லட் அம்சங்கள்:

 • 1920x1200 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 8 இன்ச் முழு ஹச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே,
 • 2ஜிபி ரேம்,
 • 2.3GHz 64பிட் இன்டெல் ஆட்டம் Z3580 ப்ராசசர்,
 • 5 மெகாபிக்சல் பின்புற கேமரா,
 • 1.2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
 • மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
 • 3ஜி,
 • 4G LTE,
 • Wi-Fi 802.11 a/ b/ g/ n/ ac,
 • ப்ளூடுத் 4.0,
 • ஜிபிஎஸ்,
 • மைக்ரோ-யுஎஸ்பி,
 • NFC,
 • ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட்,
 • 4350mAh பேட்டரி,
 • 299 கிராம் எடை.

கார்பன் ப்ளாட்டினம் P9 ஸ்மார்ட்போன்

கார்பன் நிறுவனம் ஒரு புதிய ப்ளாட்டினம் ஸ்மார்ட்போன் தொடரை விரிவுபடுத்தி ப்ளாட்டினம் P9 கைப்பேசியை ரூ.8,899 விலையில் இ-காமர்ஸ்
வளைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. எனினும் நிறுவனம் ஸ்மார்ட்போனை பற்றி வளைத்தளத்தில் பட்டியலிடப்படவில்லை. 

டூயல் சிம் கொண்ட கார்பன் ப்ளாட்டினம் P9 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட் மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் 540x960 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6 இன்ச் qHD ஐபிஎஸ் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இதில் 1ஜிபி ரேம் உடன் இணைந்து 1.3GHz குவாட் கோர் (குறிப்பிடப்படாத சிப்செட்) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. கார்பன் ப்ளாட்டினம் P9 ஸ்மார்ட்போனில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. 

இந்த ஸ்மார்ட்போனில் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்கள், 3ஜி, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், Wi-Fi 802.11 b/g/n, ஜிபிஎஸ், FM ரேடியோ, மைக்ரோ-யுஎஸ்பி மற்றும் ப்ளூடுத் போன்றவை வழங்கியுள்ளது. இதில் 2500mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் கருப்பு வண்ணத்தில் ஸ்னாப்டீல் வழியாக கிடைக்கும். மேலும், இதில் காம்பஸ்/மக்னேடோமீட்டர், ப்ரொக்ஷிமிட்டி சென்சார், மற்றும் அச்செலேரோமீட்டர் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது.

கார்பன் ப்ளாட்டினம் P9 ஸ்மார்ட்போன் குறிப்புகள்:

 • டூயல் சிம்,
 • 540x960 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6 இன்ச் qHD ஐபிஎஸ் டிஸ்ப்ளே,
 • 1.3GHz குவாட் கோர் (குறிப்பிடப்படாத சிப்செட்) ப்ராசசர்,
 • மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
 • 1ஜிபி ரேம்,
 • 8 மெகாபிக்சல் பின்புற கேமரா,
 • 8 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
 • 3ஜி,
 • ஜிபிஆர்எஸ்/எட்ஜ்,
 • Wi-Fi 802.11 b/g/n,
 • ஜிபிஎஸ்,
 • FM ரேடியோ,
 • மைக்ரோ-யுஎஸ்பி,
 • ப்ளூடுத்,
 • ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட்,
 • 2500mAh பேட்டரி.

Mar 6, 2015

கடலுக்குள் நீர்வீழ்ச்சி' இந்திய பெருங்கடலில் ஆபூர்வமான சேட்டிலைட் புகைப்படம்


இந்திய பெருங்கடலில் உள்ள மொரிசியஸ் தீவு அருகே ஆழ்கடலுக்குள் நீர்வீழ்ச்சி போன்று இருக்கும் புகைப்படம் வானில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

உலகில் பசிபிக், அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு அடுத்தபடியாக பெரிய கடலாக விளங்குவது இந்திய பெருங்கடலாகும். தெற்கே தெற்கு பெருங்கடலும், மேற்கே ஆப்பிரிக்காவும், வடக்கே ஆசியாவும், கிழக்கே ஆஸ்திரேலியாவும் இப்பெருங்கடலின் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் மொத்த பரப்பளவு 6,85,56,000 சதுர கி.மீ. ஆகும். இந்திய பெருங்கடலின் மிக ஆழமானப்பகுதி ஜாவா நீர்வழியாகும். இதன் ஆழம் 7,258 மீட்டர் ஆகும். உலக பெட்ரோலிய பொருள்கள் உற்பத்தியில் 40 சதவிகிதம் இந்தியப் பெருங்கடலிலிருந்து கிடைக்கிறது. மற்றும் பிற அபூர்வ வளங்கள், முக்கியமான கடல்பாதைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

இந்திய பெருங்கடலில் உள்ள மொரிசியஸ் அருகே ஆழ்கடலுக்குள் நீர்வீழ்ச்சி போன்று இருப்பது தொடர்பான புகைப்படம் வானில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. பிரமிக்கத்தக்க சேட்டிலைட் புகைப்படம் வியப்பு ஏற்படுத்தும் வகையில் கடல் நீருக்கடியில் நீர்வீழ்ச்சி இருப்பதை காட்டுகிறது. கடலோரத்தில் மணல் திட்டு மற்றும் படிவம் காரணமாக இது ஏற்பட்டுள்ளது. இந்த நீர்வீழ்ச்சியை தீவில் இருந்து தென்மேற்காக கழுகுப்பார்வையுடன் மிகவும் கூர்மையாக உற்றுப்பார்த்தால் காணமுடியும். தற்போது இக்காட்சியை கூகுள் மேப்பிலும் காணமுடியும். தீவின் கடற்கரையொட்டிய பகுதியில் நீருக்கடியில் உள்ள நீர்வீழ்ச்சி தோற்றம், உண்மையில் மாயை ஆகிறது. 1810-ல் பிரித்தானிய ஆளுகைக்குட்பட்ட மொரிசியஸ் 1968-ல் சுதந்திரம் பெற்றது. 1992 குடியரசானது.

லாவா ஐரிஸ் ப்யூயல் 20 ஸ்மார்ட்போன் @ 5399/*

 
 
 
 
லாவா இண்டர்நேஷனல் நிறுவனம், அண்மையில் ப்யூயல் வரிசையில், தன்னுடைய மூன்றாவது ஸ்மார்ட் போனை விற்பனைக்கு அறிமுகம்
செய்தது. இதில், குறிப்பிடத்தக்க வகையில், 4,400 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி தரப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு, 42 மணி நேரம் தொடர்ந்து பேச முடியும். ஏற்கனவே வெளியான இந்நிறுவனத்தில் ப்யூயல் வரிசை போன்களில் இந்த அளவு திறன் கொண்ட பேட்டரி தரப்படவில்லை.

இதன் திரை 5 அங்குல அளவில் FWVGA IPS டிஸ்பிளே காட்டும் வகையாக உள்ளது. இதில் 1. 3 கிகா ஹெர்ட்ஸ் டூயல் கோர் ப்ராசசர் தரப்பட்டுள்ளது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட். இதில் எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த, ஆட்டோ போகஸ் வசதியுடன் கூடிய, 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா பின்புறமாகவும். வி.ஜி.ஏ. கேமரா முன்புறமாகவும் தரப்பட்டுள்ளது. இரண்டு சிம்களை இதில் இயக்கலாம். 2 ஜி நெட்வொர்க் அலைவரிசையில் செயல்படுகிறது. 

தொடர்ந்து ஸ்மார்ட் போனைப் பயன்படுத்துவோருக்கு வசதியாக, இந்த போனில், அதிக திறன் கொண்ட பேட்டரி இணைக்கப் பட்டுள்ளதாக, இந்நிறுவன உயர் அலுவலர் குறிப்பிட்டுள்ளார். இதில் 3.5 மிமீ ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ இணைக்கப்பட்டுள்ளன. நெட்வொர்க் இணைப்பிற்கு 2ஜி, வை பி மற்றும் புளுடூத் தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் அதிக பட்ச விலை ரூ. 5,399. தற்போது இணையதளங்கள் வழியாக இதனைப் பெற்றுக் கொள்ளலாம்.

Mar 5, 2015

ஜாவாவை வீழ்த்தும் ரூபி மொழியை கற்கும் எளிய வழி.​

ஜாவாவை வீழ்த்தும் ரூபி மொழியை கற்கும் எளிய வழி.​
நீங்கள் ரூபி கற்றுக் கொள்ள வேண்டுமா? இதோ உங்களுக்காக ஹக்கெட்டி ஹேக் (Hackety Hack).
ஹக்கெட்டி ஹேக் (Hackety Hack) என்பது ஒரு திறந்த மூல (Open Source) பயன்பாடு. இது மாணவர்களுக்கு அடிப்படை நிரலாக்க மொழியை(Programming Language) புரிந்து கொள்ள உதவும். இதனை கொண்டு ரூபி நிரலாக்க மொழியை எளிதாக கற்று கொள்ளவும், கற்பிக்கவும் முடியும். இதற்கு எந்த அடிப்படை மொழியும் தேவை இல்லை. ஹக்கெட்டி அனைத்து இயங்கு தளத்திலும் (மாக்,விண்டோஸ் மற்றும் லினக்ஸ்) இயங்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட ஒரு ஊடாடும் பயிற்சியை(Interactive Training) வழங்குகிறது. இது ஸ்க்ராட்ச்(Scartch) மற்றும் அலிஸ்(Alice) போன்ற வரைகலை(Graphical Interface) நிரலாக்க மொழிகளுடன் தொகுதிகள்(blocks) முலமும் கற்று கொள்ள இயலும். இது ஷோஸ் (Shoes) toolkitயை கொண்டு எளிதாகவும், விளையாட்டாகவும் வரைகலை முகப்பை வரைய உதவுகின்றது
ஹக்கெட்டி ஹேக் சாளரம்
splash
இதனை கொண்டு மாணவர்கள் விரைவாகவும், எளிதாகவும் தங்கள் சொந்த பயன்பாடுகளையும் (Applications), வலைதளங்களை (Websites) உருவாக்க முடியும். மாணவர்கள் நிரலாக்க மொழியில் ஒரு வலுவான அடித்தளத்தை கொடுக்கிறது ஹேக்.
மேலும் விபரங்களுக்கு
சி. சிந்துஜா சுந்தராஜ்,
ஆசிரியர்,
கட்டற்ற மென்பொருள் வன்பொருள் இயக்கம்
புதுச்சேரி