Apr 29, 2015

வங்கி ஏடிஎம், டெபிட் கார்டு ரகசிய எண்களை பெற்று பல லட்சம் ரூபாய் மோசடி டெல்லியில் 2 ஆசாமிகள் கைது

* வாட்ஸ் அப்பில் வெளியான தகவலை வைத்து போலீஸ் நடவடிக்கை- பரபரப்பு தகவல்கள்

சென்னை : வங்கி அலுவலர் போல் போனில் தொடர்பு கொண்டு வாடிக்கையாளர்களின் வங்கி ஏடிஎம் மற்றும் டெபிட் கார்டின் ரகசிய எண்களை பெற்று பல லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் 2 பேர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர். வாட்ஸ்அப்பில் வெளியான தகவலை வைத்தே அவர்கள் பிடிபட்டனர் என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. வாட்ஸ்அப்பில் கடந்த சில நாட்களாக பல நல்ல தகவல்களும், மிரட்டல்களும் வெளியாகி வருகின்றன. சில நாட்களுக்கு முன் வாட்ஸ் அப்பில் வெளியான தகவலில், வங்கி அதிகாரி போல ஒருவர், வாடிக்கையாளரை மிரட்டும் தகவல்கள் அதில் இடம்பெற்றிருந்தது. இதேபோல பலருக்கும் அந்த போன் வந்திருந்தது.

அதில் அடையாளம் தெரியாத நபர்களின் போனில் இருந்து பல்வேறு நபர்களுக்கு அழைப்பு வந்திருந்தது. எதிர் முனையில் பேசிய ஆசாமிகள் “நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் இருந்து பேசுகிறோம். உங்களது ஏடிஎம் கார்டின் ஆயுட்காலம் முடிய போகிறது. நீங்கள் உங்களது ஏடிஎம் கார்டு ரகசிய எண் மற்றும் கார்டின் மேல் பொறிக்கப்பட்டுள்ள எண்ணை உடடியாக தெரியுங்கள். தெரிவித்தால் தொடர்ந்து ஏடிஎம் கார்டு செயல்பாட்டில் இருக்கும். இல்லை என்றால் இன்று மாலைக்கு பிறகு கார்டை உபயோகப்படுத்த முடியாது. அது செயல் இழந்து விடும் என்று தெரிவித்தனர். இதனால், பயந்து போன வங்கி வாடிக்கையாளர்கள் இதை உண்மை என நம்பி வங்கி ஏடிஎம் மற்றும் டெபிட் கார்டு எண்களை கொடுத்தனர். அவர்கள் கொடுத்த சில மணி நேரத்தில் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் இருந்து ஆயிரம் மற்றும் லட்சக்கணக்கான பணம் மாயமானது. இதில், பொதுமக்கள் மட்டும் அல்லாமல் பல போலீசாரும் பணத்தை பறி கொடுத்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்ையை பொறுத்தவரை ஐசிஐசிஐ வங்கியின் பகுதி மேலாளர் பிரகாஷ் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில், தங்களது வாடிக்கையாளர்கள் 42 பேரிடம் இருந்து ரூ.5 லட்சம் வரை அபேஸ் செய்யப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். அதன்படி, மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், அன்பழகன், எஸ்ஐக்கள் செல்வராணி, மீனாப்பிரியா ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

முதல் கட்டமாக போன் அழைப்பு எங்கிருந்து வருகிறது என ஆய்வு செய்தனர். அப்போது, சம்பந்தப்பட்ட அழைப்பு டெல்லியில் இருந்து வருவது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தனிப்படை டெல்லி விரைந்தது. செல்போன் டவர் லொக்கேசனை அடிப்படையாக வைத்து டெல்லி உத்தம் நகர், ஹாஸ்டல் சாலை, ஏ1 பிளாக்கில் பதுங்கி இருந்த தீப்குமார் (33), அதே பகுதியை சேர்ந்த அவரது கூட்டாளி பிரவின் குமார் காசியப் (32) இருவரையும் கைது செய்தனர். பின்னர், அவர்கள் நேற்று சென்னை கொண்டு வரப்பட்டனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளான அஸ்ரப் அலி, அவரது கூட்டாளி சன்னி இருவரையும் பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர். மோசடி குறித்து தீப் குமார் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம்:

7ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். பிரவின் குமார் காசியப் பட்டப்படிப்பு படித்துள்ளார். இருவரும் டெல்லி உத்தம் நகரில் சிவ சக்கி டெலிகாம் என்ற சிம்கார்டு கடை நடத்தி வந்தோம். தங்களிடம் ஏராளமானவர்கள் புதிய சிம்கார்டுகளை வாங்கி செல்வார்கள். சிம்கார்டுகளை பெற அவர்களின் முகவரிக்கான சான்று மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் புகைப்படத்தை கொடுப்பார்கள். நாங்கள் அவர்களிடம் கூடுதலாக முகவரி சான்று மற்றும் புகைப்படத்தை பெற்று வைத்துக் கொள்வோம். அவற்றை வைத்து எங்களுக்கு தேவையான சிம்கார்டுகளை பெற்றுக் கொள்வோம். போலியான கையெழுத்துக்களையும் நாங்களே போட்டுக் கொள்வோம். இப்படி பெறும் சிம்கார்டுகளை டெல்லியை சேர்ந்த அஸ்ரப் அலி மற்றும் சன்னி ஆகியோரிடம் கூடுதலான விலையில் விற்பனை செய்வோம். இதில், எங்களுக்கு பணம் குவிந்தது.

மோசடியாக பெறப்பட்ட சிம்காட்டு மூலம் வாடிக்கையாளர்களை தொடர்புகொண்டு வங்கியில் இருந்து பேசுகிறோம் என்று கூறி லட்சக்கணக்கான பணத்தை அஸ்ரப் அலியும், சன்னியும் மோசடி செய்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டுமே எங்களிடம் அவர்கள் கொடுத்தனர். நாங்கள் கைது செய்யப்பட்டதை தெரிந்து கொண்ட இருவரும் நைசாக தப்பி விட்டனர் என்று தீப் குமார் வாக்குமூலமாக கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

மோசடி நடந்தது எப்படி?

தீப்குமார் மற்றும் பிரவின் குமார் காசியப் இருவரிடமும் போலி சிம்கார்டுகளை பெற்றுக் கொண்ட அஸ்ரப் அலியும் அவரது கூட்டாளி சன்னியும் ஆடம்பர அறை ஒன்றை எடுத்துள்ளனர். அவற்றில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளை தெரிந்தவர்களை தனித்தனியாக தேர்வு செய்துள்ளனர். அவர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுத்து பணியில் அமர்த்தி உள்ளனர். தமிழ் தெரிந்த வாடிக்கையாளர்களை ஏமாற்ற வேண்டும் என்றால் தமிழ் தெரிந்த பணியாளர் பேசி சம்பந்தப்பட்ட வங்கி வாடிக்கையாளரின் ரகசிய எண்ணை பெறுவார். மலையாளம் தெரிந்த வாடிக்கையாளர் என்றால் மலையாளம் தெரிந்த பணியாளர் பேசுவார். இப்படி அனைத்து மொழி தெரிந்த வாடிக்கையாளர்களையும் கும்பல் வளைத்து போட்டுள்ளது.

தேவையான தகவல்கள் கிடைத்த உடன் மின்னல் வேகத்தில் கிடைத்த ரகசிய எண்களை போலியாக கார்டு ஒன்றை தயாரிக்க தனி கும்பல் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கும்பலின் பின்னணியில் 50க்கும் மேற்பட்டவர்கள் உள்ளதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது உடந்தையாக இருந்தவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய புள்ளிகள் தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளனர்.

Apr 9, 2015

பேஸ்புக் நிறுவனத்தின் புதிய இணையதளம், என்ன எதிர்பார்க்கலாம்..?

பேஸ்புக் நிறுவனம் தனித்துவம் வாய்ந்த இணையதளம் ஒன்றை உருவாக்கியுள்ளது, இதன் மூலம் தனது மெசேஜிங் கருவியான மெசன்ஜரை இணையத்திற்கு கொண்டு வந்துள்ளது. தற்சமயம் ஆங்கிலத்தில் மட்டும் இருக்கும் இந்த இணைதளத்தில் விரைவில் மற்ற மொழிகளும் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
வாடிக்கையாளர்கள் இந்த தளத்தில் தங்களது நண்பர்களுடன் சாட் செய்தல், வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளுதல், ஃபைல் மற்றும் வாய்ஸ் மெசேஜ் போன்றவைகளை அனுப்ப முடியும்.

வாட்ஸ்ஆப் போன்று வாடிக்கையாளர்கள் இதனை பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. Messenger.com மூலம் பேஸ்புக்கில் பல அம்சங்களை புதிதாக சேர்க்க முடியும் என்றும் கூறப்படுகின்றது. இதன் முக்கிய அம்சமாக பணம் பறிமாற்றம் இருக்கும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
தற்போது வரை பேஸ்புக்.காம் இல் இருந்து சாட் சேவையை நிறுத்தவது குறித்து முடிவு செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும், ஓஎஸ் எக்ஸ் பயன்படுத்துபவர்கள் தனியாக மெசன்ஜர் ஃபார் மேக் என்ற செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும். இதோடு இது பேஸ்புக்கின் அதிகாரப்பூர்வ சேவை இல்லை என்றாலும் இந்த சேவை இலவசமாக கிடைப்பது ஓஎஸ் எக்ஸ் பயனாளிகளுக்கு சற்று ஆறுதலான விஷயமாக இருக்கும்.

ஆக்டா கோர் பிராசஸர் கொண்ட லெனோவோ பி70 ரூ.15,999க்கு வெளியானது !!!

 
லெனோவோ பி70 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது, இன்று முதல் அந்நிறுவனத்தின் இணையத்தில் முன்பதிவுகள் துவங்கியதோடு இதன் விலை ரூ.15,999 என நிர்ணயக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி முதல் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாதத்தில் சீனாவில் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

டூயல் சிம் கொண்ட லெனோவோ பி70 ஆன்டிராய்டு கிட்காட் மூலம் இயங்குவதோடு 5 இன்ச் ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளேவும் கொண்டிருக்கின்றது. 1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் பிராசஸர், 2ஜிபி ராம் மற்றும் 16 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக மெமரியை 32ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 
 
கேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 5 எம்பி முன் பக்க கேமராவும் இருக்கின்றது. இதோடு 4ஜி LTE, 3ஜி, GPRS/ EDGE, Wi-Fi 802.11 b/g/n, GPS/ A-GPS, மைக்ரோ யுஎஸ்பி மற்றும் ப்ளூடூத் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் இருக்கின்றது. இதோடு 4000 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுவதோடு 3 மணி நேரத்தில் முழு கருவியை சார்ஜ் செய்யும் வசதியும், 15 நிமிடம் சார்ஜ் செய்தால் 4 மணி நேரம் பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெனோவோ நிறுவனம் சமீபத்தில் டால்பி அட்மோஸ் ஆடியோ தொழில்நுட்பம் கொண்ட ஏ7000 ஸ்மார்ட்போனை ரூ.8,999க்கு வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது. 4ஜி சேவை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னது இந்த கருவிகளின் விற்பனையை நிறுத்திட்டாங்களா?, சொல்லவே இல்லை..!!!

1.நோக்கியா லூமியா 1020 
 
 
நோக்கியா லூமியா 1020 இந்த ஸ்மார்ட்போன் 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நிறுத்தப்பட்டது.

2.சர்ஃபேஸ் 2 
 
 
சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் குறைந்த விலையில் சர்ஃபேஸ் 3 வெளியிட்டதை தொடர்ந்து சர்ஃபேஸ் 2 நிறுத்தப்பட்டது.


3.நைக் ஃபூயல் 
 
 
நைக் நிறுவனம் அதிகம் பிரபலமான நைக் ஃபூயல் கருவியை 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நிறுத்தியது.

4.சாம்சங் கேலக்ஸி கே சூம் 
 
 
சிறந்த கேமரா ஸ்மார்ட்போன் என எதிர்பார்க்கப்பட்ட இந்த கருவியை சாம்சங் நிறுவனம் வெளியிட்ட 6 மாதங்களில் நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

5.கூகுள் க்ளாஸ் 
 
 
கூகுளின் பிரபல கூகுள் க்ளாஸ் எதிர்பார்த்த வெற்றி பெறாததை தொடர்ந்து விற்பனை நிறுத்தப்பட்டது.


6.மோட்டோரோலா 
 
 
 
 மோட்டோ ஜி முதல் தலைமுறை மோட்டோ ஜி ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் இருந்து நிறுத்தப்பட்டு விட்டது.


7.நோக்கியா எக்ஸ் 
 
 
கடந்த ஆண்டு நோக்கியா எக்ஸ் ஆன்டிராய்டு ஸ்மார்ட்பன்களை வெளியிட்ட நோக்கியா நிறுவனம் குறைந்த விற்பனையை காட்டி வெளியான சிறிது காலத்திலேயே நிறுத்தியது.


8.கூகுள் நெக்சஸ் 5 
 
 
நெக்சஸ் 5 அசிதகம் விற்பனையான ஆன்டிராய்டு போன் என்றாலும் கூகுள் நிறுவனம் கடந்த மாதம் இதன் விற்பனையை நிறுத்தியது.


9.சியோமி 
 
 
ரெட்மி 1எஸ் மற்றும் எம்ஐ3 சியோமி நிறுவனம் எம்ஐ3 மற்றும் ரெட்மி 1 எஸ் போன்களை இந்தியாவில் விற்பனை செய்வதை நிறுத்தி விட்டது.


10.ஃபயர்பாக்ஸ் ஸ்மார்ட்போன் 
 
 
 ஃபயர்பாக்ஸ் இயங்குதளம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன்கள் உலகளவில் மோசமான தோல்வியை தழுவியது.

ஏசஸ் சென்போன் 2 வெளியீட்டு தேதி வெளியானது !!!

 
ஏசஸ் நிறுவனம் வாடிக்கையாளர் மின்சாதன விழாவில் ஏசஸ் சென்போன் 2 ZE551ML, ஏசஸ் சென்போன் 2 ZE550ML, மற்றும் ஏசஸ் சென்போன் 2 ZE500CL என்ற மூன்று வகைகளை அறிமுகப்படுத்தியது. இருந்தும் இந்தியாவில் இந்நிறுவனம் எந்த மாடலை வெளியிட இருக்கின்றது என்ற தகவல்கள் தொடர்ந்து மர்மமாகவே இருக்கிந்றது.
 
 ஏசஸ் நிறுவனம் சென்போன் 2 வகைகளை கடந்த மாதம் தாய்வான் நாட்டில் வெளியிட்டதை தொடர்ந்து ஐரோப்பாவில் சமீபத்தில் வெளியிட்டது. டாப் என்டு சென்போன் 2 64 ஜிபி இன்டர்னல் மெமரி, 4 ஜிபி ராம் கொண்டிருப்பதோடு இந்தியாவில் இதன் விலைௌ ரூ.19,900 வரை இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

மைக்ரோசாப்ட் லூமியா 640 ரூ.11,999 வெளியானது !!!

 
மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லூமியா 640 மற்றும் 640 எக்ஸஎல் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் ரூ.11,999 மற்றும் 15,799க்கும் வெளியிட்டது. இவை இரண்டும் ப்ளாப்கார்ட் தளத்தில் விரைவில் விற்பனைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
லூமியா 640 ஸ்மார்ட்போன் 5 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே, 8 எம்பி ப்ரைமரி கேமரா, 1 எம்பி முன்பக்க கேமரா கொண்டுள்ளது. இதோடு டூயல் சிம் ஸ்லாட் மற்றும் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் 1 ஜிபி ராம் மற்றும் 2500 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

லூமியா 640XL 5.7 இன்ச் டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, 13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமராவும் லூமியா 630யில் இருப்பது போன்ற ராம் மற்றும் பிராசஸர் கொடுக்கப்பட்டுள்ளதோடு 3000 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது. 
 
இரு கருவிகளும் விண்டோஸ் போன் 8.1 மற்றும் லூமியா டெனிம் அப்டேட் கொண்டிருக்கின்றது. 8 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் ஆன்டிரைவ் ஸ்பேஸ் 30 ஜிபியும் வழங்கப்படுகின்றது.

Apr 8, 2015

மனம்விட்டு பேசுங்கள்…! மன முறிவை தவிருங்கள்…! ஒரு வியட்நாமியக் கதை… !

ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள்…

மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது…

அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி…

இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள்…

மகனை ஈன்றெடுத்த மனைவி, கணவன் உயிரோடு வீடு திரும்ப வேண்டும் என தினமும் பிரார்த்தனை செய்கிறாள்…

அதிர்ஷ்டவசமாக போரில் தப்பி பிழைத்த வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக வீடு திரும்புகிறான்…

அவன் கண்ணிலும், மனைவி கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர்…
மூன்று வயது மகன் புரியாமல் விழிக்கிறான்… 

கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய சாமான்கள் வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும், தந்தையும் மட்டுமே இருக்கிறார்கள். கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப் பார்த்து வீரன் கேட்கிறான். “அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய்?” அந்தச் சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு சொல்கிறான். “நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்லை” வீரன் மகனைக் கேட்கிறான். “பின் யார் அப்பா?” “தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார். அம்மா உட்காரும் போது அவரும் உட்கார்வார். படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார். அவர் தான் என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்” வீரன் அதிர்ச்சியில் உறைந்து நின்றான்…
சாமான்கள் வாங்கி வந்த மனைவி கணவனிடம் திடீர் மாற்றத்தைக் கண்டாள்… அவன், அவள் சமைத்ததை உண்ணவில்லை… அவளை அவன் தொடவில்லை… அவள் அவன் அருகில் வருவதைக் கூட அவன் மறுத்தான்… 

இரண்டு நாட்கள் இப்படியே நிகழ மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள்… மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் படுத்துக் கொள்ளச் செல்லும் போது தந்தையின் நிழலைக் காண்பித்து மகன் உற்சாகமாக, “இதோ என் அப்பா…” திகைத்த வீரன் மகனை விசாரிக்க… உண்மை வெளி வந்தது… அதாவது, தந்தை போரில் இருந்த போது, ஒரு நாள் தாயின் நிழலைப் பார்த்து மகன், “இது யார்?” என்று வெகுளித் தனமாய் கேட்டிருக்கிறான்… மகன் தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள், “இது தான் உன் தந்தை” என்று சொல்லியிருக்கிறாள்… சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து வந்திருக்கிறான்… இப்போது உண்மையை உணர்ந்த வீரன் தாங்க முடியாத குற்றவுணர்ச்சியாலும், துக்கத்தாலும் மனமுடைந்து போகிறான்… இந்தக் கதையில் மகன் சொன்னதைக் கேட்டதும் வீரன் தன் மனைவியிடம் விளக்கம் கேட்டிருக்கலாம்… அல்லது, மனைவியும் கணவனின் நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டிருக்கலாம்…

இருவரும் வெளிப்படையாக மனம் விட்டுப் பேசியிருந்தால் அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றிருக்கும்… ஆனால் கணவன் தன் மனைவியின் நடத்தை மோசமாக இருந்திருக்கிறது என்று தானாக முடிவெடுத்து அப்படி வெறுப்புடன் நடந்து கொண்டான்… மனைவியாவது ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று அவனைப் பதில் சொல்ல வற்புறுத்தியிருக்கலாம்… அப்படிச் செய்யாமல் தானாக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். ஒரு குடும்பமே தகர்ந்து போனது வாய் விட்டுக் கேளாமல், மனம் விட்டுப் பேசாமல் இருந்ததனால் அல்லவா?… எதையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும், தவறாக ஆக்கி விடுவதும் சுலபம்… சந்தேகக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எத்தனை தப்பர்த்தங்களும் நம்மால் காண முடியும்… இந்த முட்டாள்தனத்தில் பலியாவது உறவுகளும், நட்புகளும், சந்தோஷங்களும் தான்… நீங்களாக எதையும் அனுமானிக்காதீர்கள்… அவர்களுக்குப் புரியும் என்று நீங்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள்…

தவறு என்று நினைப்பதை உங்கள் குடும்பத்தினரிடமும் சரி, நண்பர்களிடமும் சரி கண்டிப்பாகத் தெரிவியுங்கள்… அதைக் கேட்டு அவர்கள் சொல்லும் காரணங்கள் நியாயமானவையாகக் கூட இருக்கலாம்… அப்படியில்லையென்றாலும் நீங்கள் சொன்ன பிறகு தவறு என்பதைப் புரிந்து அவர்கள் திருத்திக் கொள்ளவோ, மீண்டும் அப்படிச் செய்யாமலிருக்கவோ வாய்ப்புகள் உள்ளன அல்லவா?…

அதேசமயம், உங்கள் தவறுகளை சுட்டிக் காட்டினால், அதை சரி செய்ய கூடிய மனபக்குவத்தில் நீங்களும் இருங்கள்… இப்படி அவ்வப்போதே சரி செய்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்வது மனம் விட்டுப் பேசுவதாலேயே… இது ஒரு கதை தானே என்றோ, தத்துவம் தான் என்றோ, அறிவுரை என்றோ எண்ணி அலட்சியமாக எடுத்து கொள்ளாதீர்கள்… “தும்பை விட்டு வாலை பிடித்து பிடித்து என்ன பயன்?”

என்ற பழமொழி போல…

எதுவும் கை மீறிய பின்னர் ஏற்படும் வருந்தத்தை தவிர்க்கவே என இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளலாம்… இதே போன்று மனம் விட்டுப் பேசாததால், நண்பர்கள், பெற்றோர்கள், சகோதர, சகோதரிகள், உற்றார், உறவினர்கள், முதலாளி, தொழிலாளி என பல வகைபட்ட உறவுகளில் பிரிவுகள், வருத்தங்கள் என்று நிஜ வாழ்க்கையில் அன்றாடம்

ஐபிஎல் கிரிக்கெட் 2015 போட்டி அட்டவணை !!!

வேகம், விறுவிறுப்பு, பரபரப்பு, சிக்ஸர் மழை என கிரிக்கெட் பிரியர்களுக்கு விருந்தளிக்கவுள்ள 8-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.

போட்டி அட்டவணைக்கான விவரங்கள்:20 பேர் கொலையில் அதிர்ச்சி தகவல்கள்’

ஆந்திர மாநிலம் சேஷாசலம் மலைப்பகுதியில் 20 தமிழர்கள் ஆந்திரக் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகியுள்ளன என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஆந்திர மாநிலம் சேஷாசலம் மலைப்பகுதியில் 20 தமிழர்கள் ஆந்திரக் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகியுள்ளன. இது எதிர்பாராமல் நடந்த மோதலின் விளைவு அல்ல…. திட்டமிட்டு நடத்தப்பட்ட போலி மோதல் படுகொலைகள் என்று நம்புவதற்குத் தேவையான அனைத்து ஆதாரங்களும் வெளியாகியிருக்கின்றன.
சேஷாசலம் மலைப்பகுதியில் உள்ள ஈதலகுண்ட, சீக்கட்டி தீகலகோண ஆகிய இடங்களில் தான் இந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அப்பகுதியில் இருந்த செம்மரங்களை வெட்டிக் கடத்தும் முயற்சியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்; அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றபோது, கற்களை வீசியதால் தற்காப்புக்காக சுட்டோம் என்று ஆந்திரக் காவல்துறையினர் கூறுவதை ஏற்க முடியாது. ஏனெனில், தொழிலாளர்கள் சுட்டுகொல்லப்பட்ட இடங்களில் ஒன்றான ஈதலகுண்டு பகுதியில் செம்மரங்களே கிடையாது. அதுமட்டுமின்றி அப்பகுதியில் புதர்களைத் தவிர வேறு எதுவும் கிடையாது. அப்பகுதியில் தொழிலாளர்கள் செம்மரம் வெட்டினார்கள் என்றும், காவல்துறையினர் சென்றபோது மறைந்திருந்து கற்களை வீசித் தாக்கினார்கள் என்பதும் பொய்களால் புனையப்பட்ட கட்டுக்கதை என்பதை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?

கொல்லப்பட்ட தொழிலாளர்கள் வெட்டி வீழ்த்தியதாக கூறி பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் அனைத்து பல ஆண்டுகள் பழமையானவை ஆகும். பழைய வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட அந்தக்கட்டைகளை அங்கு போட்டு காவல்துறையினர் நாடகம் ஆடியுள்ளனர். அக்கட்டைகளில் பழைய வழக்கு எண் எழுதப்பட்டிருப்பதும், அதை மறைக்கும் நோக்குடன் அவற்றின் மீது காவல்துறையினர் பெயிண்ட் பூசியிருப்பதுமே இது நாடகம் என்பதை வெட்ட வெளிச்சமாக்கும். பழையக் கட்டைகளா… புதிய கட்டைகளா? என்பதைக் கூட பார்க்காமல் இந்த படுகொலைகள் குறித்த தங்களின் கருத்தை விசாரணை அதிகாரிகள் நம்பிவிடுவர் என்று காவல்துறையினர் கருதிகிறார்கள் என்றால் அவர்களின் படுகொலைகளுக்கு ஆந்திர அரசும், அதன் விசாரணை அதிகாரிகளும் எந்த அளவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.

மோதலின்போது தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தால் அவர்களது உடலின் பல பகுதிகளில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த காயம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொல்லப்பட்ட 20 பேருக்கும் மார்பு மற்றும் நெற்றியில் தான் குண்டு பாய்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, மிகவும் நெருக்கத்தில் வைத்து அவர்களது உடலில் குண்டு பாய்ச்சப்பட்டிருக்கிறது. அவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நெருக்கமாக நிற்கவைத்து தான் சுட்டுக் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகத்தை இவை உறுதி செய்கின்றன. தொழிலாளர்களின் உடல்களில் நெருப்புக் காயங்களும் காணப்படுவதால் கொல்லப்படுவதற்கு முன்பு அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது.

ஆந்திரக் காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படைத் தலைவரான காந்தராவ், கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழகக் காவல்துறை அதிகாரிகளுக்கு எழுதியிருந்த கடிதத்தில், தமிழகத் தொழிலாளர்கள் ஆந்திராவுக்கு செம்மரம் வெட்ட வந்தால் அவர்களைச் சுட்டுக் கொல்வோம் என்று எச்சரித்திருந்தார். தமிழகத் தொழிலாளர்களை சுட்டு கொல்ல வேண்டும் என்ற வெறி அவருக்கு இருந்ததையே இது காட்டுகிறது. அதுமட்டுமின்றி, தமிழர்களை சுட்டுக்கொல்ல முடிவு செய்துவிட்டு, அதற்கான காரணத்தை உருவாக்குவதற்காகக் கூட இப்படி ஒரு கடிதத்தை காந்த ராவ் எழுதியிருக்கக் கூடும்.

கொல்லப்பட்ட தொழிலாளர்களின் உடல்கள் காவல்துறையினரால் கையாளப்பட்ட விதம் இன்னும் கொடுமையானது. விலங்குகளின் உடல்களை எடுத்து வருவதைப் போல மூங்கிலில் கட்டித் தொங்கவிடப்பட்ட நிலையில்தான் தொழிலாளர்களின் உடல்கள் கொண்டு வரப்பட்டன. ஒரு குறிப்பிட்ட தொலைவுக்குப் பிறகு அசுத்தமான டிராக்டரில் ஒன்றின் மீது ஒன்றாக உடல்களைப் போட்டு குப்பையைப் போல அள்ளிச் சென்றுள்ளனர். படுகொலைகள் நடந்த இடத்திற்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் செல்வதற்கு பாதை உள்ளது. அப்பாதையில்தான் பத்திரிகையாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவ்வாறு இருக்கும்போது, தமிழகத் தொழிலாளர்களின் உடல்களை மிக மோசமான முறையில் ஆந்திரக் காவல்துறையினர் கையாண்டது அவர்களின் மனதில் புதைந்து கிடக்கும் தமிழகத் தொழிலாளர்களுக்கு எதிரான வன்மத்தையும், வெறுப்பையும்தான் காட்டுகின்றன.

ஏற்கனவே நான் கூறியதைப்போல சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் அனைவரும் அதிக கூலிக்கு ஆசைப்பட்டு போன அப்பாவிகள்தான். ஆந்திரத்தைச் சேர்ந்த மாஃபியா கும்பல்கள்தான் செம்மரங்களை கடத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. அவர்களுக்கு ஆந்திரத்திலுள்ள அனைத்துக் கட்சி அரசியல்வாதிகளுடனும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இந்தக் கூட்டணி ஆந்திர வனத்தை மொட்டையடித்து வருகிறது. இதை மூடி மறைக்கவே அப்பாவித் தமிழர்களைக் கொன்று கடத்தல்காரர்களாக சித்தரித்து தங்களை உத்தமர்களாகக் காட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

தமிழகத் தொழிலாளர்கள் 20 பேரும் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் தெளிவாக இருப்பதால், அதன் அடிப்படையில் சிறப்பு அதிரடிப்படைத் தலைவர் காந்தாராவ் உள்ளிட்ட காவல்துறையினர் மீது கொலை மற்றும் கூட்டுச் சதி வழக்குத் தொடர்ந்து கைது செய்ய வேண்டும். ஆந்திர அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலைகள் குறித்து அம்மாநில அரசே விசாரிப்பது முறையாக இருக்காது. எனவே, இது பற்றி உச்ச நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரிக்க வேண்டும்.

தமிழக தொழிலாளர்கள் கொல்லப்பட்ட விஷயத்தில் தமிழக அரசு அலட்சியமாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மும்பையில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதை, பிகார் மாநில அரசு தேசிய பிரச்னையாக்கியது. இப்போது, 20 தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் நியாயமான விசாரணை நடத்தும்படி ஆந்திரத்திடம் தமிழகம் கெஞ்சுகிறது. இது தவறான அணுகுமுறையாகும். உடனடியாக குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரின் கவனத்திற்கு இதைக் கொண்டு சென்று தமிழர்களின் படுகொலைக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி உள்ளார்.

Apr 7, 2015

4 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட ஐபோன் 6சி !!!

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த கருவிகளாக ஐபோன் 6எஸ், ஐபோன் 6 எஸ் ப்ளஸ், மற்றும் ஐபோன் 6சி இந்தாண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஐபோன் 5எஸ் மற்றும் ஐபோன் 6 ஸ்மார்ட்போன்களை விட ஐபோன் 6சி விலை குறைவாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

ஐபோன் 6சி படங்களை பார்க்கும் போது ஐபோன் 5சி போன்று காட்சியளிக்கின்றது. கேமரா ப்ளாஷ் வடிவம் வித்தியாசமாக இருக்கின்றது. மேலும் கேமராவும் ஐபோன் 6 மற்றும் 6 ப்ளஸ் போன்று இருக்காது என்றே தெரிகின்றது. 
 
பல இணையதளங்களிலும் இதே புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாவதால் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 5சி போனுக்கு பதிலாக 6சி போனினை அறிமுகப்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போதைக்கு ஐபோன் 6சி இந்திய மதிப்பில் ரூ.25,000 முதல் 31,000 வரை இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

5 எம்பி முன்பக்க கேமரா கொண்ட இன்டெக்ஸ் அக்வா ட்ரீம் ரூ.10,390 !!!

இன்டெக்ஸ் நிறுவனம் அக்வா ட்ரீம் ஸ்மார்ட்போனை நிறுவனத்தின் இணையத்தில் ரூ.10,390க்கு கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளது. தற்சமயம் வரை விற்பனை குறித்த தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை, இருந்தும் இது குறித்த அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்டெக்ஸ் அக்வா ட்ரீம் டூயல் சிம் கொண்டு ஆன்டிராய்டு 4.4.2 கிட்காட் மூலம் இயங்குகின்றது. இதோடு 5.5 இன்ச் ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளேவும் கொண்டிருக்கின்றது.

இந்த ஸ்மார்ட்போனானது 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மீடியாடெக் பிராசஸர் மற்றும் 1ஜிபி ராம் கொண்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 8 ஜிபி இன்டர்னல் மெமரியும், மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது. மேலும் 13 எம்பி ஆட்டோ போகஸ் ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. 
 
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 3ஜி, GPRS/ EDGE, Wi-Fi 802.11 b/g/n, மைக்ரோ யுஎஸ்பி மற்றும் ப்ளூடூத் ஆகியவை வழங்கப்பட்டுள்ளதோடு 2300 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.


இந்தியாவில் ரூ.8,999க்கு வெளியானது லெனோவோ ஏ7000 !!!

லெனோவோ நிறுவனம் ஏ7000 ஸ்மார்ட்போனை இந்தியாவில் ரூ.8,999க்கு வெளியிட்டது. இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகின்றது. இதன் முன்பதிவுகள் இன்றே துவங்கிவிட்டதும் குறிப்பிடத்தக்கது. 
 
 ப்ளாஷ் விறப்னை குறித்து லெனோவோ கூறும் போது, "விற்பனைக்காக 4 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. லெனோவோ ஏ7000 ரூ.8,999 விலைக்கு விற்பனை செய்யப்பட முக்கிய காரணம் வாடிக்கையாளர்களுக்கு பட்ஜெட் விலையில் கிடைக்க வேண்டும் என்பதே ஆகும்" என தெரிவித்துள்ளது.

மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் விழாவில் அறகிமுகப்படுத்தப்பட்ட லெனோவோ ஏ7000 விலை இந்தியாவில் ரூ.10,400 வரை இருக்கலாம் என்று கூறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. லெனோவோ ஏ7000, 5.5 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே, 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் சிப்செட் மற்றும் 2ஜிபி ராம் கொண்டிருக்கின்றது. கேமராவை பொருத்த வரை 8 எம்பி ஆட்டோபோகஸ் ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 
 
மெமரியை பொருத்த வரை 8 ஜிபி இன்டர்னல் மெமரியும், மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது. டூயல் சிம் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆன்டிராய்டு லாலிபாப் 5.0 மூலம் இயங்குகின்றது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 4G LTE, Wi-Fi, GPS/ A-GPS, ப்ளூடூத் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி இருப்பதோடு 2900 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

Apr 5, 2015

லாவா NKS 101 டேப்லட்

லாவா நிறுவனம் லாவா ஐரிஸ் 444 மற்றும் லாவா NKS 101 டேப்லட் ஆகிய இரண்டு புதிய தயாரிப்புகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. லாவா
ஐரிஸ் 444 ஸ்மார்ட்போன் ஏற்கனவே சில்லறை விற்பனையாளர் வழியாக ரூ.3,199 விலையில் கிடைக்கிறது. லாவா NKS 101 டேப்லட் பற்றி நிறுவனத்தின் வலைத்தளத்தில் விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் இல்லாமல் பட்டியலிடப்பட்டுள்ளது. 

லாவா ஐரிஸ் 444 ஸ்மார்ட்போன்: டூயல் சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்) -ஆதரவு கொண்ட லாவா ஐரிஸ் 444 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4 இன்ச் WVGA TFT டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இதில் 256MB ரேம் உடன் இணைந்து 1GHz சிங்கிள் கோர் கார்டெக்ஸ் A7 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. 

லாவா ஐரிஸ் 444 ஸ்மார்ட்போனில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 512MB உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 2 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்கள், ஜிபிஆர்எஸ்/எட்ஜ், Wi-Fi 802.11 b/g/n, FM ரேடியோ, ஜிஎஸ்எம், மைக்ரோ-யுஎஸ்பி, மற்றும் ப்ளூடூத் ஆகுயவை வழங்குகிறது.

ஸ்மார்ட்போனில் 1400mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. இந்த கைப்பேசியில் 123x63.2x11mm நடவடிக்கைகள் மற்றும் 116 கிராம் எடையுடையது. லாவா ஐரிஸ் 444 ஸ்மார்ட்போன் Flipkart வழியாக டூயல் டோன் பிளாக் மற்றும் ப்ளூ வண்ண வகைகளில் கிடைக்கும். மேலும், இதில் அச்செலேரோமீட்டர் சென்சார் கொண்டுள்ளது.

லாவா NKS 101 டேப்லட்: அடுத்ததாக, லாவாவின் புதிய டேப்லட்டான, லாவா NKS 101 டேப்லட்டில் ஆண்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 1280x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 10.1 இன்ச் HD LCD மல்டி டச் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இதில் 1ஜிபி ரேம் உடன் இணைந்து 1.6GHz டூயல் கோர் (குறிப்பிடப்படாத சிப்செட்) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. 

லாவா NKS 101 பட்டியலின்படி, மைக்ரோSD அட்டை வழியாக விரிவாக்கக்கூடிய 32ஜிபி அல்லது 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 2 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்கள், Wi-Fi, மைக்ரோ-யுஎஸ்பி, OTG மற்றும் ப்ளூடூத் ஆகுயவை வழங்குகிறது. ஸ்மார்ட்போனில் 7600mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. மேலும், இதில் அச்செலேரோமீட்டர் சென்சார் கொண்டுள்ளது.

லாவா ஐரிஸ் 444 ஸ்மார்ட்போன் முக்கிய அம்சங்கள்:
 • டூயல் சிம்,
 • 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4 இன்ச் WVGA TFT டிஸ்ப்ளே,
 • 256MB ரேம்,
 • 1GHz சிங்கிள் கோர் கார்டெக்ஸ் A7 ப்ராசசர்,
 • மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 512MB உள்ளடங்கிய சேமிப்பு,
 • 2 மெகாபிக்சல் பின்புற கேமரா,
 • 0.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
 • ஜிபிஆர்எஸ்/எட்ஜ்,
 • Wi-Fi 802.11 b/g/n,
 • FM ரேடியோ,
 • ஜிஎஸ்எம்,
 • மைக்ரோ-யுஎஸ்பி,
 • ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட்,
 • 1400mAh பேட்டரி.

லாவா NKS 101 டேப்லட் முக்கிய அம்சங்கள்:
 • 1280x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 10.1 இன்ச் HD LCD மல்டி டச் டிஸ்ப்ளே,
 • 1ஜிபி ரேம்,
 • 1.6GHz டூயல் கோர் (குறிப்பிடப்படாத சிப்செட்) ப்ராசசர்,
 • மைக்ரோSD அட்டை வழியாக விரிவாக்கக்கூடிய 32ஜிபி அல்லது 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
 • 2 மெகாபிக்சல் பின்புற கேமரா,
 • 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
 • Wi-Fi,
 • மைக்ரோ-யுஎஸ்பி,
 • OTG,
 • ப்ளூடூத்,
 • ஆண்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன்,
 • 7600mAh பேட்டரி.

ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியாகுமா மைக்ரோசாப்ட் லூமியா 640, 640XL

மைக்ரோசாப்ட் நிறுவனம் லூமியா 640, 640XL ஸ்மார்ட்போன்களை மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் விழாவில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் இந்நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வெளியிட தயாராகிவிட்டது. அதன் படி ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெற இருக்கும் வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழ்கள் அனுப்பும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. லூமியா 640 ஸ்மார்ட்போன் 5 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே, 8 எம்பி ப்ரைமரி கேமரா, 1 எம்பி முன்பக்க கேமரா கொண்டுள்ளது. இதோடு டூயல் சிம் ஸ்லாட் மற்றும் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் 1 ஜிபி ராம் மற்றும் 2500 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

லூமியா 640XL 5.7 இன்ச் டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, 13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமராவும் லூமியா 630யில் இருப்பது போன்ற ராம் மற்றும் பிராசஸர் கொடுக்கப்பட்டுள்ளதோடு 3000 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது. இரு கருவிகளும் விண்டோஸ் போன் 8.1 மற்றும் லூமியா டெனிம் அப்டேட் கொண்டிருக்கின்றது. 8 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் ஆன்டிரைவ் ஸ்பேஸ் 30 ஜிபியும் வழங்கப்படுகின்றது.

கணினியில் இருந்து கண்களைக் காக்க

கணினியில் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு கண்கள் உலர்ந்து பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு விடுகிறது. அதாவது கணினியில் வேலை செய்யும்போது கண் இமைகள் இமைப்பதற்கு குறைந்து விடுகிறது. இதனால் கண் வறண்டு போகிறது. இதனை தவிர்க்க ஓரு மணிக்கொரு முறை கண்களுக்கு ஓய்வு கொடுக்கவேண்டும்.

அந்த சமயத்தில் கண்களை உள்ளங்கையில் அடிப்பாகத்தால் லேசாக அழுத்திவிடவேண்டும். மற்றும் பச்சை அல்லது நீல நிலத்தில் உள்ள பொருட்களை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருக்கலாம். இந்த நிறங்கள் கண்களுக்கு இதமானவை. 2 மணி நேரத்திற்கு ஒரு முறை கண்களை சுழல விட வேண்டும். அவ்வப்போது கண் இமைக்கப்படுகின்றதா என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.

அதிக நேரம் கணினியில் வேலை செய்ய வேண்டி வந்தால் அவ்வப்போது எழுந்து பச்சையான மரங்களைப் பார்த்துவிட்டு வந்து அமர்ந்து பணியாற்றலாம். மேலும் நீண்ட நேரம் கணினிமுன் உட்காருவதை முடிந்த வரை தவிருங்கள்.

Apr 4, 2015

மனதை கொள்ளையடிக்கும் சிக்கிம் மாநிலம்

இந்தியாவின் இமயமலைத்தொடரில் அமைந்துள்ள சிக்கிம் மாநிலம் பல்வேறு சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கிறது.

7096 சதுர கிலோமீற்றர் பரப்பளவு மட்டுமே கொண்ட சிறிய மாநிலமான சிக்கிமில் வருடம் முழுவதும் சீரான பனிப்பொழிவும், மிதமான வானிலையும் நிலவுகிறது.

ஏறத்தாழ 28 மலைச் சிகரங்களும், 227 அதிக ஆழமான ஏரிகளும், 80 பனி மலைகளும் சிக்கிமில் இருக்கின்றன.

மேலும் தனிச்சிறப்பாக சிக்கிமில் 100 நதிகளும், சில சிறிய நதிகளும், வெந்நீர் ஊற்றுகளும் அமைந்துள்ளன.

பார்க்க வேண்டிய இடங்கள்

தீஸ்தா நதி

ஆசையாக சவாரி செய்வதற்கு ஏற்ற நதி தான் தீஸ்தா நதி. இவை சிக்கிம் மாநிலத்தில் உள்ள நீளமான நதியாகும்.

இந்த நதியை கடந்து செல்லும்போது அழகிய வெப்பமண்டல இலையுதிர் மரங்களையும், அல்ஃபைன் தாவரங்களையும் பார்க்கலாம்.

சீறிப்பாய்ந்து செல்லும் இந்த நதி வங்கதேசத்தில் உள்ள பிரம்மபுத்திரா ஆற்றுடன் கலக்கிறது, இங்கு சுற்றுலா செல்பவர்கள் கண்டிப்பாக குளிர்ச்சியான தீஸ்தா நதியில் படகு சவாரி செய்யாமல் இருக்க மாட்டார்கள்.

ரும்டெக் மடம்

சிக்கிம்மின் தலைநகரான கேங்டாக் அருகே ரும்டெக் மடம் அமைந்துள்ளது. அதிகளவில் புத்தர்கள் வசிக்கும் இந்த மடம் தர்மசக்ரா மையம் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த மடத்தில் புத்தர்களின் மகாகுரு என்றழைக்கப்படும் Padmasambhava என்பவர், போதனைகளை ஆற்றி வருகிறார்.

கடுமையான தியானத்தை மேற்கொண்டு வரும் இவரது உடல் வஜ்ரமாக மாறியுள்ளது, புத்தரின் ஆயிரம் விளக்குகள் தொடர்பான கோட்பாடுகளை பரப்பி வருகிறார்.

அங்கு வசிக்கும் புத்தர்களுக்கு இவரது வாக்கு வேதவாக்காக உள்ளது, சிக்கிம் சுற்றுலா செல்லும் பயணிகள் இந்த மடத்திற்கு சென்றால் இவரது போதனைகளை கேட்கலாம்.

வெந்நீர் ஊற்றுக்கள்

சிக்கிம்மில் அமைந்துள்ள வெந்நீர் ஊற்றுகள் சுற்றுலாப்பயணிகளை மிகவும் கவர்கின்றன.

அங்குள்ள வெந்நீர் ஊற்றுகளில் Yumthang வெந்நீர் ஊற்று அனைவரும் அறிந்ததே. இங்கு செல்பவர்கள் குளிப்பதற்காக இரண்டு குளங்கள் அமைந்துள்ளன.

இந்த குளங்களில் உள்ள தண்ணீர் குளிப்பதற்கு கொஞ்சம் இதமான சூடாக இருக்கும், மேலும் இவ்வெந்நீர் ஊற்றுகளில் கந்தகத்தின் அளவு அதிகமாக உள்ளது. எனவே இந்த ஊற்றுகள் மருத்துவ குணங்கள் கொண்டவையாக கருதப்படுகின்றன.

மேலும் இவ்வெந்நீர் ஊற்றுக்களின் சராசரி வெப்பநிலையானது, 50°C வரை இருக்கும்.

மற்றுமொரு Reshi நீருற்று ராங்கித் ஆற்றின் அருகில் அமைந்துள்ளது, இதில் சல்பர் குறைவாக இருப்பதால் தோல் நோய்களுக்கு மருந்தாக அமைகிறது. இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு வசதியாக குடிசைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கஞ்சன்ஜங்கா சிகரம்

இமாலய மலைத்தொடர்களில் அமைந்துள்ள மிகப்பெரிய மலை தான் கஞ்சன்ஜங்கா. திபெத்துக்கு தெற்கு பகுதியிலும், நேபாளத்துக்கு கிழக்கு பகுதியிலும் அமைந்துள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 8586 மீற்றர் உயரமுள்ள இந்த சிகரம்தான் 1852-ஆம் ஆண்டு வரை உலகின் மிக உயரமான சிகரமாக கருதப்பட்டு வந்தது. பின்னர் நடந்த கணக்கெடுப்புகளில் எவரெஸ்ட் சிகரமே உயர்ந்தது என்றும் இது மூன்றாவது உயரமானது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கஞ்சன்ஜங்கா என்றால் பனியின் ஐந்து புதையல்கள் என்று அர்த்தம். அதாவது இதில் பனி படர்ந்த ஐந்து முகடுகள் உள்ளன. இதில் 4 முகடுகள் 8400 மீற்றருக்கு மேல் உயரமானவை.

இந்த சிகரத்தில் இருந்து பார்த்தால் பனிபடர்ந்துள்ள டார்ஜிலிங்க மலையின் அழகை ரசிக்கலாம்.

பனிசூழ்ந்து காணப்படும் இந்த சிகரம், பார்ப்பதற்கு வானத்தில் ஒரு சுவர் தொங்கி கொண்டிருப்பது போன்று காட்சியளிக்கும்.

இந்தியாவின் வழியாக இந்த சிகரத்திற்கு செல்வதற்கு அனுமதிகள் அதிகமாக வழங்கப்படுவதில்லை. ஆனால் நேபாள் வழியாக சென்றால் விரைவில் இந்த சிகரத்தை அடைந்து விடலாம்.

உலகத்தின் 3வது உயரமான சிகரமாக இருந்தாலும், மலை ஏறுபவர்கள் மத்தியில் இன்றளவும் பிரபலம் அடையவில்லை, குறைந்த அளவு நபர்களே இந்த சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளனர்.

பல ஆண்டுகாலமாக இந்த சிகரத்தில் ஒரு மர்மம் நிலவி வருகிறது, கஞ்சன் துங்கா பகுதியில் ஓரு அரக்கன் இருப்பதாகவும், அது பார்ப்பதற்கு ஒரு விகாரமான பனி அரக்கன் போன்று இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1925ம் ஆண்டு ஒரு பிரித்தானியா குழு அங்கு சென்றபோது, வித்தியாசமான இரு கால் தடங்களை பார்த்துள்ளார்கள்.

இதுதொடர்பாக, அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் கஞ்சன்துங்கா அரக்கன் என்று கூறியுள்ளனர், ஆனால் இது உண்மையா? அல்லது மக்களின் கட்டுக்கதையா? என்பது குறித்து இன்று வரை புரியாத புதிராக உள்ளது.

உங்களைத் தலைவனாக்கும் பத்து பண்புகள்!நீங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். உங்களை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தும்போது நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில தகுதிகள் உள்ளன. நீங்கள் அந்தத் தகுதிகளை வளர்த்துக்கொண்டு அதனை மேம்படுத்தினாலே போதும். அது நீங்கள் யாராக இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும். அனைவருமே சிஇஓ ஆக ஆசைப்படுவார்கள். ஆனால், ஒரு சிலர் மட்டும்தான் சிஇஓ ஆகிறார்கள். காரணம் என்ன என்றால், அவர்கள் மற்றவர்களிடமிருந்து தனித்துத் தெரிவதுதான். இந்தத் திறனை வளர்த்துக்கொண்டால் மட்டுமே தலைவனாக முடியும். இந்தத் திறனை வளர்த்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

முடிவெடுப்பதில் உங்களின் பங்களிப்பை அதிகப்படுத்துங்கள்!

அலுவலகம் சில சமயங்களில் எடுக்கும் ஒரு முடிவு சிறப்பானதாக இல்லாமல் இருக்கலாம். அதனை நிர்வாகத்துக்குப் பயந்து மற்றவர்களும் அதனை ஆதரிக்கலாம். ஆனால், உங்களுக்குச் சரியில்லை என்றால் அதனைத் தெரிவிக்கத் தயங்காதீர்கள். அப்படியே உள்ளதைத் தெரிவியுங்கள். முடிவுகளில் உங்களின் பங்களிப்பை அதிகரியுங்கள், அது உங்களின் தலைமைப் பண்பை வெளிச்சம்போட்டு காட்டும். அலுவலக நிர்வாகமும் இதனைத்தான் விரும்பும்.

புதிய உத்திகளை வகுப்பவராக இருங்கள்!

எல்லாரும் செய்வதையே செய்பவர் தலைவனாக இருக்க முடியாது. தலைவன் என்பவர் புதிதாக ஏதாவது ஒன்றை செய்து அதன்மூலம் தன்னைத் தனித்துக் காட்டிக்கொள்ள வேண்டும். அப்படி காட்டிக்கொள்ளாவிட்டால் அவர்கள் தலைவனாக நீண்ட காலம் நிலைக்க முடியாது. அதற்குப் புதிய உத்திகளைக் கையாள வேண்டும். புதிய உத்திகள் ஒருவேளை கண்டுபிடிக்கப்படவில்லை எனில், இன்று நம் கைக்குள் செல்போன் வடிவில் கணினி வந்திருக்காது. ஓர் அறை அளவிலான கணினியாகவே இருந்திருக்கும்.

அப்டேட் ஆகுங்கள்!

உங்களை நீங்களே அப்டேட் செய்து கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு வயதானவராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆறு வயது குழந்தை இன்றைக்கு இணையதளத்தில் அப்டேட்டாக இருக்கும்போது, அந்தப் போட்டியைச் சமாளிக்க அறுபது வயதுகாரரும் கணினி பயில வேண்டியுள்ளது. நீங்கள் அப்டேட் ஆகவில்லை எனில், உங்களைவிட அப்டேட்டாக உள்ள ஒருவர் உங்களைக் கடந்து வெற்றியடைய முடியும். இன்றைக்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கும் தொழிலதிபர்களைவிட, இன்றைக்கு என்ன தேவை என யோசிக்கும் தொழிலதிபர்கள்தான் அதிகம். அப்படி யோசிப்பதால்தான் இன்றும் அவர்கள் தலைவர்களாகத் தங்களை மேம்படுத்திக் கொள்கின்றனர்.

ரிஸ்க் எடுங்கள்!

சில விஷயங்களில் உங்களைச் சுற்றியுள்ள குழுக்கள் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று கூறுவது உண்டு. ஆனால், அதனைப் பற்றி கவலைப்படாமல் உங்களுக்கு சரி என்றுபட்ட விஷயத்தில் ரிஸ்க் எடுங்கள். ரிஸ்க் எடுக்கும் விஷயத்தை நன்கு புரிந்துகொண்டு இதனைச் செய்தால் வெற்றி மட்டும்தான் கிடைக்கும் என்ற நம்பிக்கை உங்களிடம் இருந்தால் எவ்வளவு பெரிய ரிஸ்க்கையும் எடுங்கள். அது உங்களது தலைமைப் பண்பை அதிகரிக்கும். ரிஸ்க் எடுப்பது எவ்வளவு வெற்றியை தரும் என்பதற்கு உதாரணம், அனைவரும் இன்டர்நெட் என்ற விஷயத்தைத் தேடலுக்குப் பயன்படுத்தியபோது, இதனை ஒரு சமூக விஷயத்துக்குப் பயன்படுத்த முடியும் என்று களமிறங்கிய மார்க் ஜூக்கர் பெர்க் எடுத்த ரிஸ்க் இன்று, ஃபேஸ்புக் இல்லாமல் இருந்தால் இயங்க முடியாது என்ற மனிதர்களை உருவாக்கியுள்ளது.

குறுகிய இலக்குகளில் திருப்தி அடையாதீர்கள்!

ஒரு வேலைதான் ஒதுக்கப்பட்டது, அதனைச் செய்துமுடித்துவிட்டேன் என்று குறுகிய இலக்குகளில் திருப்தி அடையாதீர்கள். அலுவலகம் ஒரு விஷயத்தைக் குறுகிய நேரத்தில் அவசரமாக முடிக்கத் திட்டமிட்டால், அதனை முடிப்பவர் நீங்களாக இருக்க வேண்டும் என நிர்வாகம் முடிவெடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். இந்தச் சூழலை நீங்கள் உருவாக்கிவிட்டால் உங்களது ஆளுமைத்திறன் மீதான நம்பிக்கை அதிகரிக்கும், அது உங்களைத் தலைவனாக்கும்.

சுய மதீப்பீடு தேவை!

உங்களுக்கு என்று ஒரு மதிப்பீட்டையும், இலக்கையும் நிர்ணயித்துச் செயல்படுங்கள், அது கட்டாயம் நிறுவனத்தின் இலக்கைவிட சற்று அதிகமாக இருக்கும்படி அமைத்து, அதனை நீங்கள் அடையும்போது உங்கள் திறனும், இலக்குகளைக் கையாளும் விதமும் உங்களது தலைமைப் பண்பை தனித்துக் காட்டும். எல்லாரும் கூகுளில் தங்கள் இணையதளம்தான் முதலில் தோன்ற வேண்டும் என்று நினைக்கும்போது, அவர்கள் இணையதளத்தில் தேட என் இணையதளத்துக்குத்தான் வர வேண்டும் என்று யோசித்த கூகுள் நிறுவனர்களின் தலைமைப் பண்புக்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

அலுவலகத்தில் கற்றுக்கொள்ளுங்கள்!

அலுவலகத்துக்குச் செல்கிறேன். அங்கு எனக்கு வேலை ஒதுக்கப்படுகிறது. அதனைச் சிறப்பாகச் செய்கிறேன் என்று மட்டும் இல்லாமல், அலுவலகச் சூழலில் அதிக மனிதர்களை உயர்மட்ட அதிகாரிகள் எப்படிக் கையாளுகிறார்கள், வேலையைத் தட்டிக்கழிக்கும் நபரிடம் எப்படி வேலை வாங்கப்படுகிறது என்று நுணுக்கமான விஷயங்களைக் கற்றுக்கொள்ளுங்கள். நேர மேலாண்மை, அலுவலக விதிமுறைகளைப் பின்பற்றுவது போன்ற செயல்களில் இருந்து ஆளுமை பண்பை கற்றுக்கொள்ளுங்கள். அது நீங்கள் தலைவனாகும்போது உங்களது வேலையை எளிமையாக்கும்.

குழுவாகச் செயல்படுங்கள்!

நான் சிறப்பாக வேலை செய்கிறேன் என்று மட்டும் எண்ணாமல், உங்கள் குழுவில் சற்று குறைவான நிலையில் இருக்கும் சக ஊழியரையும் இலக்குகளை நோக்கி இழுத்துச்செல்லுங்கள்.

ஒரு குதிரை வண்டியில் இரண்டு குதிரைகளும் சம வேகத்தில் பயணித்தால்தான் வெற்றி என்பதால் மற்றவர்களையும் உங்கள் வேகத்துக்கு மாற்ற முயற்சி செய்யுங்கள். அப்படி செய்யும்போது உங்கள் தலைமைப் பண்பும், குழுவின் வேலைதிறனும் தனித்துத் தெரியும்.

பொறுப்பை உணர்ந்து செயல்படுங்கள்!

வேலை செய்வது மட்டும்தான் என் வேலை. அதனால் வரும் லாபம், நஷ்டம் எல்லாம் நிர்வாகம் சம்பந்தப்பட்டது என நினைக்காதீர்கள். நீங்கள் செய்யும் வேலைதான் உங்கள் நிறுவனத்தின் லாபத்தை நிர்ணயிக்கும். அதேநேரத்தில், உங்கள் நிறுவனம் லாபத்தில் இயங்கினால் மட்டுமே உங்களால் வேலையில் தொடர முடியும். உங்கள் நிறுவனத்தின் லாபமும், உங்கள் செயல்திறனும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்பதை உணருங்கள். அந்தப் பொறுப்புணர்ச்சி உங்களைத் தலைவனாக்கும்.

நீங்களே தலைவன்!

நீங்கள் வேலை செய்யும் துறையில் உங்கள் உயர் அதிகாரி உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்று கவலைப்படாமல் நீங்கள் அவர் இடத்தில் இருந்து உங்கள் இடத்தில் இருப்பவர் என்ன வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ, அந்த வேலையைச் செய்யுங்கள். அதில் வெற்றியடையும்போது நீங்களே உங்களைத் தலைவனாக உணருவீர்கள்.
இந்தப் பத்து பண்புகளையும் வளர்த்துக்கொள்ளும்போது நிச்சயம் நீங்கள் உங்கள் அலுவலகத்தில் பணிபுரிபவராக இல்லாமல் தலைவராக மட்டுமே இருப்பீர்கள்.

உடலோடு ஒட்டிக் கொள்ளும் புதிய டேப்லெட்!

இனி செல்போன்களையும், டெப்லெட்டுகளையும் கையில் எடுத்துச் செல்லாமல், நமது உடல் பகுதியில் ஒரு பாகமாக, நமது உடலோடு சேர்த்துக்கொள்ளும் புதிய தொழில்நுட்பம் கண்டு பிடிக்கபப்ட்டுள்ளது.சிறிய வளையல் அளவிலான ஒரு நவீன பிரேஸ்லெட்டில் தொடுதிரை (டச் ஸ்கிரீன்) தொழில்நுட்பத்தை தொடுதோல் (டச் ஸ்கின்) தொழில்நுட்பமாக ஒரு நிறுவனம் சுருக்கி விட்டது.

சீக்ரெட் பிரேஸ்லெட் (Cicret Bracelet) என பெயரிடப்பட்டுள்ள இந்த உபகரணம் நமது மணிக்கட்டில் தொடுதிரையின் பிம்பத்தை பாய்ச்சும். ஸ்மார்ட் போனில் தோன்றுவது போலவே அனைத்து ’ஐகான்’களும் உங்களது மணிகட்டில் தெளிவாக தோன்றும். தொடுதிரையை நீவிவிட்டு உருட்டி விளையாடுவது போலவே, உங்கள் கையின் மணிகட்டை நீவிவிட்டு நீங்கள் ஒவ்வொரு ‘அப்ஸ்’-சுக்குள்ளும் செல்லலாம்.

வெப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். வீடியோ எடுக்கலாம். வாட்ஸ்அப்பில் வந்த படங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை படிக்கலாம். விரல்களை குவித்தும், விரித்தும் (மணிக்கட்டு) திரையின் அளவை தேவைக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம். தொலை தூரத்தில் உள்ள கைபேசிக்கு வரும் அழைப்புக்கு கூட நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டே ‘கூலாக’ பதில் சொல்லலாம். முழுக்க தண்ணீரில் மூழ்கியிருக்கும் நிலையிலும் இந்த சீக்ரெட் பிரேஸ்லெட் பழுதாகாது.

உங்கள் பிரேஸ்லெட்டில் உள்ள ஒரு ‘பிக்கோ ப்ரொஜெக்டர்’ மூலம் உங்கள் கரத்தின் முழங்கை பகுதியில் பாய்ச்சப்பட்டு, (மணிக்கட்டு) திரையில் தோன்றும் ‘கமாண்ட்’ பொத்தான்களின் மூலம் நீங்கள் இடும் கட்டளைகள் மீண்டும் பிரேஸ்லெட்டில் உள்ள ‘ப்ராஸெஸருக்கு’ அனுப்பப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் இவை அத்தனையும் செயலாற்றுகின்றது.

உங்கள் கை மணிக்கட்டுக்கும், கட்டளையிடும் விரலுக்கும் இடையே பாயும் லேசர் கதிர்களின் வாயிலாக நீங்கள் விரும்பும் வகையில் இது செயல்படும். நீடித்த பேட்டரி மற்றும் 10 கண்ணைக் கவரும் வண்ணங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த சீக்ரெட் பிரேஸ்லெட்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியர்கள்‬ உலக அளவில்


1. அமெரிக்காவில் மருத்துவமணையில் 38% மருத்துவர்கள் இந்தியர்கள்.

2. அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவணமான நாசாவில் 36% சதவித வேலை செய்யும் பணியாளர்கள் இந்தியர்கள்.

3. அமெரிக்காவில் வசிக்கும் 12%அராய்ச்சியாளர்கள் இந்தியர்கள்.

4. உலக அளவில் பல கிளைகள் கொண்ட IBM நிறுவணத்தில் பணியாற்றும் 28% பேர் இந்தியர்கள்.

5. INTEL நிறுவணத்தில் வேலை செய்யும்17% பேர் இந்தியர்கள்.

6. உலகில் தலை சிறந்த நிறுவணமான மைக்ரோசாப்ட microsoft நிறுவணத்தில் 34% அதிகமாக வேலை செய்பவர்கள் இந்தியர்கள்.

7. உலக பணக்காரரும், இங்கிலேந்தில் நம்பர் ஒன் செல்வந்தரும், இரும்புகளின் ராஜா என் அழைக்கப்படும் லச்சுமி மிட்டல். ஒரு இந்தியர்.

8. ஆராய்ச்சி படிப்பு முடிப்போரின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிஎச்.டி., பட்டம் பெற்றவர்கள் எண்ணிக்கை 17 ஆயிரத்து 898. தற்போது இது, 18 ஆயிரத்து 730 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கு காரணம் இந்தியாவின் உயர்கல்வி முறை சிறப்பாக இருப்பது தான் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உயில் எழுதும்போது கவனிக்க வேண்டியவை


சொத்தை பங்கீடு செய்வதற்கு நடைமுறையில் இருக்கும் ஆவணங்களில் உயிலுக்கும் இடம் உண்டு. தனது காலத்துக்கு பிறகு தன்னுடைய சொத்து தான் விருப்பப்பட்டவர்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கம் உயில் எழுதுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. பொதுவாக ஒருவருடைய சொத்து அவருடைய இறப்புக்கு பிறகு அவருடைய வாரிசுகளுக்கு போய் சேரும்.

சுயசம்பாத்திய சொத்து

ஆனால் உயில் அப்படிப்பட்டதல்ல. தன்னுடைய வாரிசுகளுக்கும் எழுதி வைக்கலாம். மற்றவர்களுக்கும் எழுதி வைக்கலாம். வாரிசு இருந்தும், அவர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு எழுதி வைத்தால் வாரிசுகள் அதை எதிர்க்க முடியாது. ஆதலால் பிரியமானவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் உயிலை எழுதி வைக்கலாம்.

எனினும் உயில் எழுதுவதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. ஒருவர் தான் உரிமை கொண்டாடும் அத்தனை சொத்தையும் உயிலாக எழுதிவைக்க முடியாது. தன்னுடைய சுய சம்பாத்தியத்தில் சம்பாதித்த சொத்துக்கு மட்டுமே உயில் எழுதி வைக்க முடியும். தன்னுடைய தந்தை வழியில் வந்த பூர்வீக சொத்துக்கு உயில் எழுதி வைக்க முடியாது.

விருப்பப்பட்ட நபர்கள்

அந்த சொத்தை பாக பிரிவினை மூலம் தனது பெயருக்கு பதிவு செய்து இருந்தாலும் அதற்கு உயில் எழுதி வைக்க முடியாது. அந்த சொத்துக்கு வாரிசுகள்தான் உரிமை கொண்டாட முடியும். ஆனால் முழுக்க, முழுக்க தன்னுடைய சம்பாத்தியத்தில் சேர்த்த சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் உயில் எழுதி வைக்க முடியும். எனினும் அது தன்னுடைய உழைப்பினால் மட்டுமே சேர்க்கப்பட்ட சொத்து என்பதை உறுதிபடுத்தி கொண்டால் மட்டுமே எழுதும் உயில் செல்லுபடியாகும்.

ஒருவர் சுயமாக சேர்த்த சொத்தை தன்னுடைய வாரிசுகளுக்கு எழுதி வைப்பதிலும் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. அவர் தன்னுடைய வாரிசுகளை மட்டுமே கருத்தில் கொண்டு உயில் எழுதி வைத்தால் அந்த சொத்தை பங்கு பிரிப்பதற்கு வாரிசு கள் மட்டுமே உரிமை கொண்டாட முடியும். அந்த சொத்து மனைவிக்கு கிடைப்பதில் சிக்கல் எழுந்துவிடும்.

மனைவிக்கு சொத்து

வாரிசுகளுக்கு எழுதி வைத்தால் மனைவிக்கும் அதில் பங்கு கிடைத்துவிடும் என்று கருத முடியாது. அந்த சொத்துக்கு மனைவி எந்த வகையிலும் உரிமை கோர முடியாத நிலை ஏற்பட்டு விடும். எனவே ஒருவர் சுய சம்பாத்தியத்தில் சேர்த்து வைத்த சொத்தை தன்னுடைய வாரிசுகளுக்கு உயில் எழுதி வைப்பதாக இருந்தால் மனைவியையும் ஒரு பங்குதாரராக சேர்த்து உயில் எழுதுவது நல்லது.

அதேபோல் தன்னுடைய சுய சம்பாத்திய சொத்து முழுவதையும் மனைவி பெயரில் மட்டும் எழுதி வைப்பதும் சிக்கலை ஏற்படுத்தும். உயிலில் மனைவி பெயரை மட்டும் குறிப்பிட்டால் வாரிசுகள் உரிமை கொண்டாட முடியாது. தனது மனைவி பெயரில் எழுதி வைத்தால் வாரிசுகளுக்கு சொத்து போய் சேர்ந்துவிடும் என்று கருதிவிட முடியாது. அது அவருடைய மனைவிக்கு மட்டுமே உரிய சொத்தாக மாறிவிடும்.

விருப்பப்படி சொத்து பங்கீடு

அவர் அந்த சொத்தை யாருக்கு கொடுக்க விரும்புகிறாரோ அவருக்குதான் அந்த சொத்து போய் சேரும். நான்கு வாரிசுகளில் மூன்று பேருக்கு மட்டுமே சொத்தை பாகம் பங்கிட்டு பகிர்ந்து கொடுத்தால் அது செல்லுபடியாகும். நான்காவது வாரிசு தனக்கு பாகம் பிரித்து தரவில்லை என்று எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. மேலும் வாரிசுகளுக்கும் சம அளவில் சொத்து பிரிக்கப்பட வேண்டும் என்று நிர்பந்திக்கவும் முடியாது. மனைவி தனது காலத்துக்கு பிறகு ஒவ்வொருவருக்கும் எவ்வளவு பங்கு என்று குறிப்பிடுகிறாரோ அந்த பங்கை மட்டுமே பெற முடியும்.

ஒருவருக்கு அதிகமாக கிடைத்தால் மற்றவர் அதை எதிர்க்க முடியாது. இதனால் வாரிசுகளுக்கு இடையே தேவையற்ற பிரச்சினைகள் எழக்கூடும். மேலும் மனைவி வாரிசுகளை தவிர மற்ற வேறு யாருக்கு வேண்டுமானாலும் சொத்தை பிரித்து கொடுக்கலாம். அது அவருடைய சொத்தாகவே கருதப்படுவதால் அவருடைய விருப்பப்படியே உயில் சொத்துக்கான பங்கீடு அமையும். ஆகவே உயில் எழுதும்போது யாருக்கு சொத்து கிடைக்க வேண்டும் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும்.

வாட்ஸ் அப்பில் வெளிவந்த பின்னரும் பெண் போலீசார் ஏமாந்தனர்


டெபிட், கிரெடிட் கார்டுதாரர்களை நூதன முறையில் ஏமாற்றி பணத்தை கையாடல் செய்யும் கும்பலை சேர்ந்த மோசடி ஆசாமி ஒருவன் வாடிக்கையாளரை ஏமாற்ற முயற்சிக்கும் உரையாடல் வாட்ஸ் அப்பில் வந்த பின்னரும் அவன் கடந்த சில நாட்களில் மட்டும் 5க்கும் மேற்பட்ட பெண் போலீசாரை ஏமாற்றியுள்ளான். இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் பல்வேறு வங்கிகள் எஸ்எம்எஸ், இமெயில் மற்றும் பல்வேறு அறிக்கைகள் மூலம் டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் மோசடி குறித்து எச்சரிக்கிறது. மேலும் வங்கி கணக்கு எண், பாஸ்வேர்ட் உள்ளிட்ட எந்த எண்ணையும் வாடிக்கையாளர்களிடம் வங்கி நிர்வாகம் கேட்காது என்று எச்சரிக்கின்றனர். ஆனால், படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை பலத் தரப்பினரும் இந்த எச்சரிக்கையை கண்டுகொள்வதில்லை. ஆனால், ஏமாந்த பிறகு வங்கி மற்றும் போலீஸ் நிலையங்களில் ஏறி இறங்கி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் நடந்த வங்கி மோசடி குறித்த வாட்ஸ் அப் தகவல் வெளியாகி உள்ளது. அதில் வாடிக்கையாளர் ஒருவரை எப்படி ஏமாற்ற முயற்சி நடக்கிறது அதை அவர் சாமர்த்தியமாக எப்படி கேள்வி கேட்டு முறியடிக்கிறார் என தெரிய வருகிறது.

ஏடிஎம் ஹெல்ப்லைனிலிருந்து பேங்க் மேனேஜர் பேசுகிறேன் உங்க ஏடிஎம் கார்டு ரினியூவல் பண்ணனும், இன்று மாலையோடு உங்கள் கார்டு கெடு முடிந்து விடுகிறது,  மாஸ்டர் கார்டு, விசா கார்டு எல்லா கார்டும் இன்றோடு முடியுது சார். எல்லா கார்டையும் ரினியூவல் பண்ணனும் இல்லன்னா கார்டு காலாவதியாயிடும். அதன் பிறகு கார்டு வாங்க நீங்க புதிதாகத்தான் விண்ணப்பிக்கணும். ரினியூவல் இல்லன்னா கார்டு காலாவதி ஆகிவிடும். நான் உங்களுக்கு உதவி செய்றேன், கார்டு மேல் இருக்கும் 16 இலக்க எண்ணை சொல்லுங்கள் என சாமர்த்தியமாக கேட்கிறார். ஆனால் உஷாரான வாடிக்கையாளர் நீங்கள் என் பெயரை அல்லது அக்கவுண்ட் நம்பரை சொல்லுங்கள் என்று கேட்டவுடன் அந்த ஆசாமி போனை வைத்து விடுகிறான். இந்த தகவல் வாட்ஸ்அப்பில் பரவி இது போல் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை உலாவியது.

ஆனாலும் அந்த மோசடி ஆசாமி தனது செயலை நிறுத்தவில்லை. சென்னை காவல் துறையில் உள்ள சியூஜி எண்ணில் உள்ள பெண் போலீசார் செல்போன் எண்களை மட்டும் எடுத்து மேலே குறிப்பிட்டுள்ளது போல் பேசியுள்ளான். இதில் பல பெண் போலீசார் எங்கே தங்களது ஏடிஎம் கார்டு காலாவதி ஆகிவிடுமோ என பயந்து கார்டு நம்பரை கூறியுள்ளனர். இதில் மேற்கு மண்டலத்தில் உள்ள காவல் நிலையத்தை சேர்ந்த ஒரு பெண் காவலர் நம்பரை சொன்னவுடன் ரூ.12 ஆயிரம் அவரது அக்கவுண்டிலிருந்து எடுக்கப்பட்டு விட்டது. சில பெண் போலீசார் அவனது மோசடி அறிந்து கேள்வி கேட்டால் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டிவிட்டு போனை வைத்து விடுகிறான். அவனது போன் நம்பரை போலீசார் எடுத்துவிட்டனர். இது பற்றி மேலதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்துள்ளனர். அவனது போன் நம்பரை (09631064316) போலீசார் தங்களுக்குள் பரிமாறி உஷாராக இருக்கும் படி தகவல் அனுப்பி வருகின்றனர்.

Apr 3, 2015

குடும்பபெண்களை குறி வைக்கும் போலி கஸ்டமர்கேர் நிறுவனங்கள் …,உங்களுக்கு 10,000 ரூபாய் பரிசு உங்கள் பெயர் முகவரி தாங்கள் என்றும்…,உங்கள் கணவரின் குடிபிரச்சனைக்கு நாங்கள் இலவசமாக சிகிச்சை அளிக்கிறோம் என்றும்….உங்கள் பிள்ளைகளின் படிப்பு செலவுக்கு உதவித்தொகை தருகிறோம் என்றும்…..நீங்கள் வீட்டில் இருந்தப்படியே 10,000-20,000 சம்பாதிக்கலாம் படிப்பு முக்கியம் இல்லை நாங்கள் தேவையான பயிற்சி அளிப்போம் என்றும்…..

நீங்கள் உங்கள் கணவர் குடும்பத்தினரிடம் பெறும் கொடுமை அனுபவிக்கிறீர்கள் நாங்கள் சமூகப்பணி செய்கிறோம் உங்களுக்கு உதவுவோம் என்றும்….உங்கள் SIM card கேன்சல் ஆகபோகிறது காரணம் உங்கள் கணவர் பெயரில் கார்ட் இருக்கிறது உங்கள் ID நாங்கள் சொல்லும் முகவரிக்கு அனுப்புங்கள் என்றும்….,

இப்படி பலகோணங்களில் நம் அன்றாட தேவை மற்றும் பிரச்சனைகளை சொல்லி நமக்கு private number ல் இருந்து தொலைபேசி அழைப்பு வரும்….இன்னும் ஒருபடி மேலே போய் உங்கள் கணவருக்கும் அவருடன் வேலை செய்பவருக்கும் தப்பான உறவு,என்னிடம் அதற்கான ஆதாரம் இருக்கிறது என்றும்….அழைப்பு வருகிறது பெண்களுக்கு…‪#‎உண்மை‬ எப்படி இந்த பெண்கள் பிரச்சனைகள் அவர்களுக்கு தெரிகிறது???

எப்படி இவர்கள் தொலைபேசி எண்கள் அவர்களுக்கு கிடைக்கிறது????

ஏன் பெண்களை மட்டும் மையப்படுத்தி இந்த நாசவலை பின்னப்படுகிறது????இதற்கு காரணங்களை விளக்கினால் யாராலும் நம்பமுடியாது .

1.பெரும்பாலும் ஆண்கள் அவர்கள் பற்றிய எல்லா விவரங்கள் மனைவியிடம் தெரிவிப்பது இல்லை அதனால் பெண்கள் ஒரு சந்தேகத்துடன் தான் வாழ்கிறார்கள்.

2.ஆண்கள் சம்பாதித்தாலும் பெண்கள் தான் மொத்த குடும்பப்பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்.

3.குடிப்பழக்கம் இல்லாத ஆண்கள் தற்போது குறைவு தான் நம் சமூகத்தில்…இப்படியாக ஏதோ ஒரு பொது விஷயம் கூட தொலைபேசி அழைப்பை ஏற்கும் பெண்ணிற்கு சொந்த பிரச்சனையாகவே தெரியும்.உண்மை

அதுசரி எப்படி அந்த பெண்கள் தொலைபேசி எண்கள் இவர்களுக்கு கிடைக்கிறது???

நம்மை சுற்றி இருக்கும் நபர்களில் நல்லர் கெட்டவர் என்று கலந்தே இருக்கிறார்கள். தனியாக இருக்கும் பெண்கள்,கணவர் வெளிநாட்டில்
இருக்கும் பெண்கள்,குடும்பச்சுமையை சுமக்கும் பெண்கள் என்று நம்மை சுற்றி இருக்கும் பல ஆயிரம் கண்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது இவர்கள் மூலம் பெண்கள் பற்றிய விவரம் அறிகிறார்கள்.

உண்மை கஸ்டர்கேர்களில் பணிபுரியும் நபர்கள் எந்த அளவுக்கு நப்பகமானவர்கள் என்று யாருக்கு தெரியும்?

பெண்கள் வெளிநாட்டில் இருக்கும் கணவருடன் பேசுவது,தோழிகளுடன் பேசுவது என்று அதை ஒட்டுக்கேட்டு அவர்கள் பிரச்சனைகளை அறிகிறார்கள்.
ஏன் குடும்பபெண்களை குறிவைக்கிறார்கள்????

1.பெரும்பாலும் குடும்பபெண்கள் ஒருவகையான மனஅழுத்தம் மற்றும் விரக்தியில் வாழ்கிறார்கள்.

2.ஆறுதலும் அரவணைப்பும் இல்லாமல் அதற்காக ஏங்கிகிறார்கள்.

3.அவர்கள் இந்த நாசக்கார கயவர்களிடம் சிக்கினால் பிரச்சனை வெளியே வராது.அந்த பெண்கள் இதை அவர்கள் எதிர்கால வாழ்க்கையை
மனதில்கொண்டு இரகசியமாகவே கையாள்கிறார்கள்.

4.குடும்பபெண்களிடம் இருந்த பணம் பறிப்பது எளிது.இப்படி பலகாரணங்கள் சொல்லலாம்.

இந்த நாசகார காமவெறியர்கள் பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாத்து தான் அவர்கள் தங்கள் பொருள் மானம் மரியாதை இழக்க காரணங்களாக
இருக்கிறது.#உண்மை

தொலைபேசியும் தொலைத்தொடர்பு சாதனங்களும் நமக்கு பயணளிக்கவே கண்டுபிடிக்க பட்டாலும், இதிலேயும் சில ஏமாற்று யுக்திகளை கண்டறிந்து சில குடும்ப பெண்களை குறிவைத்து சீரழிவை ஏற்படுத்த முயல்கிறது,

சில கயவரகளின் கூட்டம்.. விழிப்புணர்வோடு இருப்போம் இடர்களை தவிர்ப்போம் ..

ஆண்கள் ஆரோக்கியத்தைக் காக்க கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்கள்!

இன்றைய காலத்தில் ஆண்களின் ஆரோக்கியம் மிகவும் மோசமாக உள்ளது. அதற்கு ஆண்கள் தங்களின் நண்பர்களுடன் சேர்ந்து அதிகம் ஊர் சுற்றி, அதனால் கண்ட கண்ட உணவுப் பொருட்களை உட்கொண்டு, உடலில் கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, உடலுக்கு வேண்டிய சத்துக்களைப் பெறாமல் இருக்கின்றனர். இதனால் அவர்களுக்கு விரைவில் இரத்த அழுத்தம், இதய நோய், நீரிழிவு போன்ற நோய்கள் தாக்குகின்றன.

இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டுமெனில், ஆண்கள் அன்றாடம் ஒருசில உணவுப் பொருட்களை உண்ணும் உணவில் சேர்த்து வர வேண்டும். முக்கியமாக காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகம் உட்கொண்டு வர வேண்டும். முக்கியமாக கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டதால், ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ஆண்கள் குறிப்பிட்ட உணவுகளின் மீது ஆர்வத்தைக் காட்ட வேண்டும்.

ஆண்கள் தங்களின் ஆரோக்கியத்தைக் காக்க கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்களைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தவறாமல் உணவில் சேர்த்து வாருங்கள்.

தக்காளி தக்காளியில் உள்ள லைகோபைன் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், பல்வேறு நோய்களில் இருந்து நல்ல பாதுகாப்பு அளிக்கும். முக்கியமாக ஆண்களுக்கு ஏற்படும் புரோஸ்டேட் புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து தக்காளி நல்ல பாதுகாப்பு வழங்கும்.

கடல் சிப்பி ஒவ்வொரு ஆண்களும் சாப்பிட வேண்டிய கடல் உணவு தான் கடல் சிப்பி. இது இயற்கையான பாலுணர்வைத் தூண்டக்கூடிய உணவுப் பொருள். அதுமட்டுமின்றி, இது விந்தணுவின் எண்ணிக்கை மற்றும் தரத்தையும் அதிகரிக்கும். எனவே ஆண்கள் இதனை உட்கொண்டு வந்தால், படுக்கையில் நன்கு சிறப்பாக செயலாற்ற முடியும்.

பூண்டு கடல் சிப்பியைப் போன்றே, பூண்டையும் ஆண்கள் உணவில் சேர்த்து வர வேண்டும். இதனால் செரிமான பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

தானியங்கள் தானியங்களில் நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளது. இதனை ஆண்கள் உணவில் சேர்த்து வந்தால், உடலுக்கு வேண்டிய ஆற்றலை அதிகரித்து, தற்போதைய ஆண்களுக்கு அதிகம் ஏற்படும் மன அழுத்தத்தை நீக்கும்.

கானாங்கெளுத்தி மீன் மீன்களில் கானாங்கெளுத்தி மீனை ஆண்கள் சாப்பிட்டு வந்தால், தசைகளின் வளர்சிசி அதிகரிப்பதோடு, உடற்பயிற்சியின் போது ஆண்களின் ஆற்றலும் தக்க வைக்கப்படும்.

முட்டை முட்டையில் உள்ள கோலைன் என்னும் வைட்டமின் ஞாபக சக்தியை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, இதுவும் ஜிம் செல்லும் ஆண்களின் தசை வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

ப்ராக்கோலி ப்ராக்கோலியில் இரும்புச்சத்து, கால்சியம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி போன்றவை வளமாக நிறைந்துள்ளது. இவற்றை ஆண்கள் தங்கள் டயட்டில் சேர்த்து வந்தால், உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, எலும்புகள் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை அடைந்துவிடும்.

ப்ளூபெர்ரி ப்ளூபெர்ரிகளில் ப்ளேவோனாய்டுகள் வளமாக நிறைந்துள்ளது. இந்த பழத்தை ஆணக்ள் சாப்பிட்டு வந்தால், ஆண்களின் புரியும் திறன் அதிகரிக்கும். இதனால் அலுவலகத்தில் சிறப்பாக செயலாற்ற முடியும்.

மாதுளை மாதுளையில் வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கனிமச்சத்துக்கள் வளமாக உள்ளது. இதனால் ஆண்களை அதிகம் தாக்கும் கொலஸ்ட்ரால் குறைவதோடு, உயர் இரத்த அழுத்தமும் குறையும்.

பாதாம் பாதாமில் புரோட்டீன், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. இவை அனைத்தும் இதயம், செரிமான மண்டலம் மற்றும் சருமத்திற்கு நல்லது. எனவே திருமணம் ஆவதற்கு முன் தினமும் பாதாமை உணவில் சேர்த்து வாருங்கள்.

திணை தானியங்களில் ஒன்றான திணையை ஆண்கள் உணவில் அவ்வப்போது சேர்த்து வர வேண்டும். இதன் மூலம் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் ஆண்கள் குறிப்பிட்ட வயதிற்கு பின் ஆரோக்கியமாக இருக்க, இவற்றை அவசியம் சாப்பிட வேண்டும்.

மாட்டிறைச்சி மாட்டிறைச்சியில் தசைகளின் வளர்ச்சிக்கு அவசியமான அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் ஆண்களுக்கு தேவையான இரும்புச்சத்து மற்றும் ஜிங்க் அதிக அளவில் நிறைந்திருப்பதால், இவற்றை கண்டிப்பாக ஆண்கள் அவ்வப்போது உட்கொண்டு வர வேண்டும்

மைக்ரோமேக்ஸ் போல்ட் S300 மற்றும் போல்ட் D320


மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இரண்டு 3ஜி செயல்படுத்தப்பட்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன்களான போல்ட் S300 மற்றும் போல்ட் D320
ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு போன்களும் கருப்பு வண்ணத்தில் வருகிறது மற்றும் வோடபோன் பயனர்களுக்கு இரண்டு மாத இலவச டேட்டா பிளான் தொகுக்கப்பட்டு வருகிறது. மைக்ரோமேக்ஸ் போல்ட் S300 செவ்வாய்க்கிழமை முதல் சந்தையில் ரூ.3,300 விலையில் கிடைக்கும் மற்றும் மைக்ரோமேக்ஸ் போல்ட் D320 ஏப்ரல் மத்தியில் இருந்து கிடைக்கும், எனினும் விலை விவரங்கள் பற்றி இன்னும் வெளியிடப்படவில்லை. 

மைக்ரோமேக்ஸ் போல்ட் S300 : டூயல் சிம் ஆதரவு கொண்ட மைக்ரோமேக்ஸ் போல்ட் S300 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.4.3 கிட்கேட் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4 இன்ச் WVGA டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இதில் 512MB ரேம் உடன் இணைந்து 1GHz சிங்கிள் கோர் ஸ்ப்ரெட்ரம் SC7715 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. மைக்ரோமேக்ஸ் போல்ட் S300 ஸ்மார்ட்போனில் 0.3 மெகாபிக்சல் முன் மற்றும் பின்புற கேமரா கொண்டுள்ளது. 

இந்த ஸ்மார்ட்போனில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்கள், 3ஜி, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், Wi-Fi, ஜிபிஎஸ், மைக்ரோ -யுஎஸ்பி, FM ரேடியோ, ஜிஎஸ்எம், மற்றும் ப்ளூடூத் 2.1 ஆகியவை வழங்குகிறது. மைக்ரோமேக்ஸ் போல்ட் S300 ஸ்மார்ட்போனில் 1200mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. மேலும், இதில் அச்செலேரோமீட்டர் சென்சார் கொண்டுள்ளது.

மைக்ரோமேக்ஸ் போல்ட் D320 : டூயல் சிம் ஆதரவு கொண்ட மைக்ரோமேக்ஸ் போல்ட் D320 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 480x854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.5 இன்ச் FWVGA டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இதில் 512MB ரேம் உடன் இணைந்து 1.2GHz டூயல் கோர் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. மைக்ரோமேக்ஸ் போல்ட் D320 ஸ்மார்ட்போனில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 3.2 மெகாபிக்சல் பின்புற கேமரா, மற்றும் 0.3 மெகாபிக்சல் முன் எதிர்க்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. 

இந்த ஸ்மார்ட்போனில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்கள், 3ஜி, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், Wi-Fi 802.11 b/ g/ n, ஜிபிஎஸ், மைக்ரோ -யுஎஸ்பி, மற்றும் ப்ளூடூத் ஆகியவை வழங்குகிறது. மைக்ரோமேக்ஸ் போல்ட் D320 ஸ்மார்ட்போனில் 1600mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. மேலும், இதில் ப்ரொக்ஷிமிட்டி சென்சார், அச்செலேரோமீட்டர், மற்றும் ஆம்பிஎண்ட் லைட் சென்சார் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது.

மைக்ரோமேக்ஸ் போல்ட் S300 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
 • டூயல் சிம்,
 • 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4 இன்ச் WVGA டிஸ்ப்ளே,
 • 512MB ரேம்,
 • 1GHz சிங்கிள் கோர் ஸ்ப்ரெட்ரம் SC7715 ப்ராசசர்,
 • 0.3 மெகாபிக்சல் முன் கேமரா,
 • 0.3 மெகாபிக்சல் பின்புற கேமரா,
 • மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
 • 3ஜி,
 • ஜிபிஆர்எஸ்/எட்ஜ்,
 • Wi-Fi,
 • ஜிபிஎஸ்,
 • FM ரேடியோ,
 • ஜிஎஸ்எம்,
 • மைக்ரோ -யுஎஸ்பி,
 • ப்ளூடூத் 2.1,
 • ஆண்ட்ராய்டு 4.4.3 கிட்கேட்,
 • 1200mAh பேட்டரி.

மைக்ரோமேக்ஸ் போல்ட் D320 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
 • டூயல் சிம்,
 • 480x854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.5 இன்ச் FWVGA டிஸ்ப்ளே,
 • 512MB ரேம்,
 • 1.2GHz டூயல் கோர் ப்ராசசர்,
 • 3.2 மெகாபிக்சல் பின்புற கேமரா,
 • 0.3 மெகாபிக்சல் முன் எதிர்க்கொள்ளும் கேமரா,
 • மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
 • 3ஜி,
 • ஜிபிஆர்எஸ்/எட்ஜ்,
 • Wi-Fi 802.11 b/ g/ n,
 • ஜிபிஎஸ்,
 • FM ரேடியோ,
 • ஜிஎஸ்எம்,
 • மைக்ரோ -யுஎஸ்பி,
 • ப்ளூடூத்,
 • ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட்,
 • 1600mAh பேட்டரி.

ஆதார் எண்ணை வாக்களர் அட்டையுடன் இணைப்பது எப்படி ?

 
தமிழகத்தில் ஆதார் எண்கள் அடிப்படையில், புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியை தேர்தல் துறை தொடங்க உள்ளது. ஆதார் எண்களை,
வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க மத்திய மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கையைத் தொடங்கியுள்ளன. ஆதார் அட்டை எண்ணில் போலி இடம் பெற முடியாதென்பதால், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையுடன், அந்த எண்ணை இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

வாக்களர் அட்டையுடன் இணைப்பது எப்படி

ஆதார் எண்ணை இணைக்கும் முகவரி : லிங்க்

முகப்பு பக்கம்: லிங்க்

ஆதார் எண்ணை இணைக்கும் முகவரியை ஓபன் செய்து அதில் கேட்கும் தகவல்களை உங்கள் ஒட்டர் ஐடி தகவல்களை கொடுத்து சர்ச் செய்யவும்.

பின் உங்கள் முழு விவரத்தையும் காட்டும். அதில் Feed Aadhaar Number என்னும் இடத்தில் வைத்து கிளிக் செய்து பின்வரும் விவரங்கள் சேர்க்கவும்.

*ஆதார் பெயர் 
* EPIC எண் 
* ஆதார் எண் 
* மொபைல் எண் 
மற்றும் / அல்லது
* மின்னஞ்சல் முகவரி 

சமர்ப்பிக்க பொத்தானை அழுத்தி சமர்பிக்க வேண்டும்.

மொபைல் மூலம் சமர்பிக்க வேண்டுமா

ECILINK <ஆதார் எண்>

எ.கா ECILINK IJH3456780 123456789123 அனுப்பு பொத்தானை அழுத்தி சமர்பிக்க வேண்டும்.