Jul 31, 2015

எல்லோரும் அவர கவிதையா சொல்றாங்க,அவர் வரலாறு சொல்றாங்க....!


எல்லோரும் அவர கவிதையா சொல்றாங்க,அவர் வரலாறு சொல்றாங்க....!
அவர் போட்டோ போட்டு சொல்றாங்க...!
நான் இயல்பா பேசி சொல்றங்க....!!
முகநூல்ல,
எங்கு பார்த்தாலும் ‪#‎அப்துல்கலாம்‬ ஐயாவோட முகம்,கண்ணீர் அஞ்சலி வார்த்தைகள், டி.வி.சேனல்கள்ல அவர பற்றின பல தொகுப்புகள்...!
சரி..என அவரோட நிகழ்வுகள் கொண்ட வீடியோக்கள் ஒவ்வொண்ணா அப்லோட் பண்ணி,பார்த்துட்டே வந்தேன்...!
அவர் முகம்,
பேச்சுகள்,நாட்டின் மேல் வைத்த அக்கறை,குழந்தைகள் மேல் வைத்த பாசம்...என...,,,,,,,,
என் கண்ணில் கண்ணீர் வருவதை என்னாலயே தடுக்க முடியல...
ஒரு பேட்டியில ...அவர்கிட்ட கேட்ட கேள்வி...
,"..ஐயா...நீங்க ஒரு விஞ்ஞானி, குடியரசு தலைவர்,அறிவியல் கண்டுபிடிப்பாளர்,என பன்முகம் கொண்டிருக்கீங்க..உங்களுக்கு பிடிச்ச பணி எது...??
அதுக்கு..
அவர்....""ஆசிரியர் பணி"" ..தான் எனக்கு பிடிச்ச பணி என சொன்னார்....!
இவர் போல ஓர் ஆசிரியர் கிட்ட படிச்ச அத்தனை மாணவர்களும் வைரமா ஜொலிப்பாங்க என்பது மட்டும் நிச்சயங்க....!!
அவர் இந்த உலகத்த விட்டு உயிர் நீத்த சமயத்தில்....!
எங்கோ ஓர் இடத்தில் பிள்ளைகள் பிறந்திருப்பாங்க...!
அதில் ஏதோ ஒரு பிள்ளையா நம்மோட அப்துல்கலாம் ஐயா பிறந்திருப்பார்.....!
என நான் நம்புறேங்க...!
நன்றிங்க.....‪#‎முத்துமுத்து‬

தமிழர்கள் அனைவரும் பெருமை படவேண்டிய சம்பவம்

தமிழர்கள் அனைவரும் பெருமை படவேண்டிய சம்பவம்

ஒரு ஒரு இந்திய குடி மகனும் மறக்காமல் தெரிந்து கொள்ள வேண்டியது


ஒரு ஒரு இந்திய குடி மகனும் மறக்காமல் தெரிந்து கொள்ள வேண்டியது.........................
குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் உடலுக்கு 96 வயது ஏர்மார்ஷல் அர்ஜான் சிங் தள்ளாத வயதிலும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.ஆனால் நமது முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு மட்டும் உடல்நிலை குறைவால் இறுதி அஞ்சலியில் கலந்துகொள்ள முடியவில்லை என்று அறிக்கை விடுத்துள்ளார்.நம் தமிழ்நாடு வளராதவதற்கு காரணம் இப்படி பட்ட முதலமைச்சர்கள் இருப்பதால்தான் மக்களே................................

கலாமிற்க்கு முன் !!

கலாமிற்க்கு முன் !!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
கலாமிற்க்குப் பின் !!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவன் கலாமென்றே
இனி காலத்தால் அறியப்படும் !!
கலாம்
மனிதர் அல்ல
மந்திரம்
கலாம்
இறந்தநாளல்ல
இன்று
கனவுகளின் பிறந்த நாள் !!
பாப்பாரப்பட்டி நாகராஜன்
ஜூலை 30 2015

ஏவுகணை மூலம் மல்லிகைப்பூவை அனுப்பி சமாதானமும் செய்யலாம்’ அப்துல்கலாமின் வார்த்தையை நினைவுகூர்ந்த நேர்முக உதவியாளர்
‘ஏவுகணை மூலம் அணு ஆயுதம் மட்டுமல்ல, மல்லிகைப் பூவை அனுப்பி சமாதானமும் செய்யலாம்’ என்று அப்துல்கலாம் அடிக்கடி கூறியதை அவரது நேர்முக உதவியாளர் நினைவுகூர்ந்தார்.

அப்துல்கலாமின் உதவியாளர்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்துல்கலாம் கவுரவ பேராசிரியராக பணியாற்றியபோது அவருக்கு பல்கலைக்கழகம் சார்பில் நேர்முக உதவியாளராக நியமிக்கப்பட்டவர் எஸ்.பாபு. அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் எஸ்.பாபு பேசியதாவது:-

மாணவர்களின் உயர்வையும், நம் தேசத்தின் உயர்வையும் எப்போதும் நினைத்து 84 வயதிலும் ஓய்வின்றி உழைத்த அப்துல்கலாமின் இழப்பு நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. தினசரி காலை 4½ மணிக்கு எழுந்து பகவத்கீதை, குரான் படிப்பார். 5 மணி முதல் 6½ மணி வரை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபயிற்சியில் ஈடுபடுவார். 

அப்போது மாணவர்கள் குறுக்கிட்டு சந்தேகங்களை கேட்டால் உடனடியாக பதிலளிப்பார். பாதுகாவலர்கள் தடுத்தாலும், மாணவர்கள் கேள்வி கேட்பதை தடுக்காதீர்கள் என்று கூறுவார்.

ஏவுகணை

ஏவுகணை மூலம் அணு ஆயுதங்களையும் அனுப்ப முடியும், சமாதானத்துக்காக மல்லிகைப் பூவையும் அனுப்ப முடியும் என்று அடிக்கடி மாணவர்களிடம் அவர் கூறுவார். காலை உணவை முடித்துக் கொண்டு பல்கலைக்கழகத்தில் அவருக்கான அறைக்கு சென்று பணியாற்றுவார். சில நேரங்களில் பகல் உணவை கூட சாப்பிடமாட்டார். தொடர்ந்து இரவு 12 மணி வரை பணியாற்றுவார். 

பல்கலைக்கழக விருந்தினர் அறையில் அப்துல்கலாம் தங்கியிருந்தபோது தான், அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் தொலைபேசியில் ‘நீங்கள் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளீர்கள்’ என்ற செய்தியை கூறினார். அதற்கு அவர் தன்னுடன் பணியாற்றும் பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், நண்பர்கள், உறவினர்களுடன் கலந்துபேசி பின்னர் அறிவிப்பதாக கூறினார். அதனை நினைக்கும்போது இப்போதும் எங்களுக்கு மெய்சிலிர்க்கிறது.

இவ்வாறு அவர் பேசினார். 

எளிமையான மனிதர்

அப்துல் கலாமின் கார் ஓட்டுனர் வி.பாலாஜி கூறும்போது, ‘‘மிகவும் எளிமையான மாபெரும் விஞ்ஞானியை நாம் இழந்துவிட்டோம். அவருடன் 11 மாதங்கள் கார் ஓட்டுனராக பணியாற்றிய அனுபவம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத அங்கமாகிவிட்டது. அவரிடமிருந்து ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை, சாலை விதிகளை மதிப்பது போன்ற வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் கற்றுக்கொண்டேன்’’ என்றார்.

பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவி ஜோதி கூறும்போது, ‘‘அப்துல் கலாம் எழுதிய ‘அக்னி சிறகுகள்’ புத்தகத்தை படித்து தான் அவரை போன்று ஒரு விஞ்ஞானியாக வரவேண்டும் என்ற ஆர்வத்தில், தற்போது ஆராய்ச்சி துறையில் மாணவியாக பயின்று வருகிறேன். அவர் நம்மிடம் தான் வாழ்ந்து வருகிறார்’’ என்றார்.

ஆராய்ச்சி மாணவர் ஜெனீக்ஸ் ரினோ உள்ளிட்ட சிலர் அப்துல்கலாம் மறைவையொட்டி கவிதைகளை வாசித்தனர்.

தமிழர்கள் அனைவரும் பெருமை படவேண்டிய சம்பவம்

தமிழர்கள் அனைவரும் பெருமை படவேண்டிய சம்பவம் தமிழரின் மறைவுக்கு அமெரிக்கா வெள்ளைமாளிகையில் அரைக்கம்பத்தில் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது

ஐந்து பேருக்காவது எழுதப் படிக்கக் கற்றுக்கொடுங்கள் !

ஐந்து பேருக்காவது எழுதப் படிக்கக் கற்றுக்கொடுங்கள் !
"முதியோர்கள் ஒரு நாட்டின் சொத்து. அவர்களைக் கைவிட்டுவிடாதீர்கள். மாணவர்களின் முதல் கடமை... படிப்பது. இரண்டாவது கடமை... படிக்கச் சொல்லிக் கொடுப்பது. விடுமுறை தினங்களில் ஐந்து பேருக்காவது எழுதப் படிக்கக் கற்றுக்கொடுங்கள். மூன்றாவது... சேவை!
ஒவ்வொருவருக்கும் இரண்டு இதயங்கள் இருக்கின்றன. ஒன்று, உயிரியல் இதயம். இரண்டாவது, இரக்கமுள்ள இதயம். மருத்துவமனைகளுக்குச் சென்று சேவையாற்றுங்கள். அப்போதுதான் உங்களுக்குள் இருக்கும் இரக்கம் உள்ள இதயம் துடிப்பதை உணர முடியும்''
இவ்வாறு சொன்னவர் அப்துல் கலாம் .....

மாமனிதனின் அப்துல்கலாம் ஜனாதிபதி ஆன கதை.மாமனிதனின் அப்துல்கலாம் ஜனாதிபதி ஆன கதை.
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
அப்துல்கலாம் என்ற மாமனிதன் பாரதத்தின் குடியரசு தலைவராக ஆனதை நாம் அறிவோம் ஆனால் அது நடந்தது எப்படி என்பதையும் சேர்த்து தெரிந்து கொண்டால் நல்லது தானே. இதோ அதன் பின்னணி தகவல்கள்.

(இவர்களை பாராட்டு விதமாக இந்தத் தகவலை பகிரவும்)

2002ல் ஜனாதிபதி தேர்தல் வருகிறது என்பதை உணர்ந்த ஒரு இளம் பாஜக வக்கீலின் மனது பாஜகவை சார்ந்த நம்மவர் யாரையும் கொண்டு வர முடியாதே என துடிக்கிறது. பாஜகவால் போதிய பலத்துடன் தனது சொந்த வேட்பாளரை நிறுத்தி வைக்க முடியாத அரசியல் சூழ்நிலை. 23 கட்சிகளின் கூட்டணியும் அந்தரத்திலேயே தொங்கிக் கொண்டு இருந்தது. என்னதான் மக்களவையில் பலம் இருந்தாலும் மாநிலங்கள் அவையிலும், பிற மாநிலங்களிலும் பாஜகவால் பெரிதாக தங்களுக்கான ஆதரவை உருவாக்க முடியாதகாலக்கட்டம். அப்போதுதான் அந்த 30 வயது வழக்குரைஞரின் மனதில் இந்த யோசனை தோன்றியது. போக்ரான் அணுகுண்டு சோதனை மற்றும் ஏவுகணை நாயகனும், தலைசிறந்த சமூக சிந்தனையுடன் கூடிய முஸ்லீமுமான டாக்டர் அப்துல்கலாமை ஜனாதிபதி ஆக்கினால் என்ன என்று. 2 சக்கர வாகனத்தில் வேகமாக சென்று கொண்டு இருந்த அவன் வண்டியை பிரேக் அடித்து தனது செல்போனில் கட்சியின் மாநில சட்டசபைத் தலைவராக அன்று இருந்த திரு. கே.என். லட்சுமணன் அவர்களை அழைக்கிறான். தனது மனதில் தோன்றிய எண்ணத்தை காரண காரியங்களுடன் விவரிக்கிறான். அவனது வாதத்தை ஏற்ற கே.என். லட்சுமணன் உடனடியாக அவனிடம் அதை அப்படியே எழுதிக் கொடுக்குமாறு கூறுகிறார். அவனும் உடனடியாக அதை செய்து அவரிடம் நேரில் சென்று வழங்குகிறான். கடிதம் அன்றைய கட்சித்தலைவராக இருந்த தமிழகத்தை சார்ந்த ஜனா. கிருஷ்ணமூர்த்தியிடம் வழங்கப்படுகிறது. அங்கிருந்து அத்வானி-வாஜ்பாய் என பயணப்பட்டு கருத்தொற்றுமை ஏற்ப்படுகிறது.

கலாம் அவர்களிடம் பேசி அவரை ஒப்புக்கொள்ள வைக்க தனிமனித ஒழுக்கத்திலும், புத்திசாலித்தனத்திலும் அவருக்கு இணையான ஒரு மனிதன் வேண்டும் என்ற விதத்தில் அவரிடம் பேசும் பொறுப்பு திரு. எஸ். குருமூர்த்தி அவர்களிடம் வழங்கப்படுகிறது. மாயக்கண்ணனை போல ஒரு புன்முறுவலுடன் எதையும் சாதிக்கும் திரு. குருமூர்த்தி பேசினால் கலாம் வேண்டாம் என்றா சொல்ல முடியும். அவரும் சம்மதிக்கிறார். காங்கிரசின் திட்டத்தை முறியடிக்க மூலயாம் சிங் யாதவின் உதவியை நாடுவதாக திட்டமிடப்படுகிறது. அப்துல்கலாம் அவர்களை ஜனாதிபதி ஆக்குவது பாஜகவின் திட்டமில்லை, மூலயாம் சிங்கின் திட்டத்தை பாஜக ஏற்பது போன்ற ஜோடனை உருவாக்கப்படுகிறது. மூலயாம் முன்மொழிகிறார், பாஜக வழிமொழிகிறது… ஒரு மாமனிதனின் உச்சம் தொட்ட கதை இது.

காங்கிரஸ் தனது தரப்பில் முன்னாள் மஹாராஷ்டிர கவர்னராக இருந்த அலெக்சாண்டர் அவர்களை கொண்டு வரத்திட்டமிடுகிறது. நடுவில் லக்ஷ்மி செகால் வந்து முளைக்கிறார். ஆக இந்தத்திட்டம் முறியடிக்கப்பட்டு பெரும் ஆதரவுடன் டாக்டர் அப்துல் கலாம் ஜனாதிபதியாகிறார்.

தமிழன் என்று சொல்லடா... தலைநிமிர்ந்து நில்லடா...

இருவரும் விஞ்ஞானிகள் தான், ஒருவர் மண்ணையும் ஒருவர் விண்ணையும் ஆராய்ந்தனர்..

ஒருவர் தேசத்தின் பாதுகாப்பிற்கும்ஒருவர் மண்ணின் நலனிற்கும் பாடுபட்டவர்கள்
இன்று இருவருமே இவ்வுலகில் இல்லை... ஆனால் அவர்கள் விட்டுச்சென்ற வழித்தடம் அழியவில்லை...


அவர்கள் இருவருமே பாடுபட்டது இளையதலைமுறைக்கும் அடுத்து வரும் தலைமுறைக்கும்தான்....

நாம் அவர்கள் காலத்தில் அவர்களுடனே வாழ்ந்தோம் என்று சொல்லவதில் பெருமையை விட...

அவர்களின் பெருமையை வரும் தலைமுறைக்கும் உணர்த்த அவர்கள் வழி நடப்போம்...என்பதை உறுதிகொள்வோம்


தமிழன் என்று சொல்லடா... தலைநிமிர்ந்து நில்லடா...
தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு

@தமிழர்கள்

கலாம் பிறந்த நாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க கோரி பிரதமரிடம் விஜயகாந்த் மனு

கலாம் பிறந்த நாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க கோரி பிரதமரிடம் விஜயகாந்த் மனு 


Dr. கலாம் அவர்கள் எழுதிய இந்த சூப்பர் ஹிட் பாடல் யார் யார் கேட்டு இருக்கீர்கள் ? பாருங்கள்.

அப்துல்கலாம் சிற்பம்

* களிமண்ணால் அப்துல் கலாம் உருவம் வடிவமைத்தல்.
* அப்துல்கலாம் சிற்பம்
********************************
அப்துல் கலாம் மறைவையட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாரதி பூங்கா அருகில் புதுவை சிற்ப கலைஞர் முனுசாமி களிமண்ணால் அப்துல் கலாம் சிற்பத்தை வடிவமைத்த போது எடுத்த படம்.

ராஜபக்சே வருகையின் போது எழுந்து நிற்காத தன்மானச் சிங்கம் அப்துல் கலாம் !!!

ராஜபக்சே வருகையின் போது எழுந்து நிற்காத தன்மானச் சிங்கம் அப்துல் கலாம் !!!

சிவனைப் பற்றி அப்துல் கலாம் கூறியவை

சிவனைப் பற்றி அப்துல் கலாம் கூறியவை :இந்திய விஞ்ஞானிகள் உட்பட கடவுள் துகள் என்ற ஆராய்ச்சியில் உலகத்திலிருந்துபல நூறு விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். இந்த ஆராய்சியின் நோக்கம் பூமி எப்படி உருவானதுஎன்பது தான். அதன் அடிப்படையில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். உலக நாடுகள் அமெரிக்கா உட்பட மொத்தம் 118 நாடுகள் இந்த ஆராய்சியை மேற்க்கொள்ளக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர். ஏனெனில் இந்த ஆய்வை மேற்கொள்ள பூமியை ஆழமாகத் தோண்டும் போது அதனால் பூமிக்கு ஆபத்து வரும் என்று கருதினர். உடனடியாக விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்கள் அங்கே ஒர் சிவபெருமான் சிலையை அங்கே வைத்து ஆராய்சியை மேற்க்கொள்ளுங்கள் என்று கூறினார், ஏன் என்று மற்ற விஞ்ஞானிகள் காரணம் கேட்க...?! அதற்கு அவர் கூறிய காரணம் சிவபெருமான் நடராஜராக ஆடும் தத்துவமே இந்தஉலகம்mஇயங்குகிறது.மேலும் தமிழ்ப் புராணங்களில் ஒன்றான அகத்தியர் நூலில் அணுவும் நானே அண்டமும் நானே என்று சிவபெருமான் கூறியிருப்பாதக கூறினார். விஞ்ஞானிகள் 1938 ஆம் ஆண்டுதான் அணுவையே கண்டறிந்தனர். அதற்குப் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே இந்த கருத்து அகத்தியரால் முன்மொழியப்பட்டதையும் அவர் விளக்கினார், மேலும் இந்த உலகத்தைப் படைத்தது சிவபெருமான் தான் அந்தச் சிலையை வைப்பதால் பூமிக்கு எந்த ஆபத்தும் வராது என்பதையும் கூறினார். அங்கே சிவபெருமான் நடனமாடுவதைப் போல் ஒரு சிலையை வைத்து அந்த ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்து நோபல் பரிசையும் தட்டிச்சென்றுள்ளனர்..முடிந்தவரை இந்த பதிவை பகிரவும்..ஒரு தமிழனாக அப்துல் கலாமை நாம் மதித்தே ஆகவேண்டும்..!
அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்,..!
இரங்கலுடன் உங்கள் தோழி. Divya Devi

டாக்டர் கலாமின் சுவாரசியமான தகவல்


குருவாயூரப்பன், நலமா இது டாக்டர் கலாம் திருவனந்தபுரத்தில் ஒரு சாதாரண ஓட்டல் உரிமையாளரிடம் உரிமையோடு கேட்ட கேள்வி. ஆம், ஓட்டல் பெயரிலேயே அதன் உரிமையாளரை அழைத்து உரிமை கொண்டாடியவர் டாக்டர் கலாம்.டாக்டர் கலாம் திருவனந்தபுரம் வி.எஸ்.எஸ்.சி.யில் பணியாற்றிக்கொண்டிருந்த காலத்தில் தம்பானுார் காந்தாரியம்மன் கோயில் பக்கம் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்தார். அதன் பக்கத்தில் ஒரு சிறிய ஓட்டல் உண்டு. அதன் பெயர் குருவாயூரப்பன் ஓட்டல். அதை பரமேஸ்வரன் நாயர் என்பவர் இன்னும் நடத்திக்கொண்டிருக்கிறார். இந்த ஓட்டலில்தான் டாக்டர் கலாம் அன்று உணவு சாப்பிட்டது.அது பற்றி பரமேஸ்வரன் நாயர் இப்படி கூறுகிறார்: காலையில் இரண்டு ஆப்பம், ஒரு கப் பால், மதியம் சாதம், தயிர், கூட்டு எடுத்துக்கொள்வார். இரவு சில நாட்கள்தான் சாப்பிடுவார். சில நாட்களில் சாப்பிட்டு விட்டு சிந்தனையில் அப்படியே சென்று விடுவார். நாங்கள் எதுவும் கேட்க மாட்டோம். அடுத்த நாள் வந்து நினைவோடு அந்த பணத்தை தந்து விடுவார். அவர் அறையில் புத்தகங்கள் நிறைந்திருக்கும். யாராவது சென்றால் இருக்க கூட இடம் இருக்காது.

காலங்கள் உருண்டன. அவர் ஜனாதிபதி ஆன பின் ஒரு முறை திருவனந்தபுரம் வந்த போது அவரை பார்க்கும் ஆர்வத்தில் ஒரு பூங்கொத்துடன் சென்றேன். பாதுகாப்பு அதிகாரிகள் என்னை அவர் அருகில் செல்லவிடவில்லை. ஏதோ ஒரு ஆர்வத்தில் கையை துாக்கி காட்டினேன். என்னை பார்த்து விட்ட அவர் என்னை அருகில் அழைத்தார். நான் மரியாதையாக பூங்கொத்தை கொடுத்தேன். 'என்ன குருவாயூரப்பா சவுக்கியமா, சுகமா' என்று அன்போடு கேட்டார்.என்னை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்தார். நானும் அவரது அழைப்பை ஏற்று மனைவி லலிதாம்பிகையுடன் சென்றேன். எங்களுக்கு அவர் விருந்தளித்தார். அவர் ஆசையாக அணியும் நீல நிற உடை எடுத்து சென்றோம். அதை வாங்கி விட்டு எங்களிடமே தந்து விட்டார்.அவர் மறைந்தார் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. அவர் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
Thanks : dinamalar

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்
1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம்.
2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான்.
3. நாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவர். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை ‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர்.
4. நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக பெருந்தலைவர் காமராஜர் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். அதுபோல திருமணம் செய்தால் அறிவியல் வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது என்று திருமணம் செய்ய மறுத்தார் அப்துல் கலாம்.
5. இவரது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் காந்திய கொள்கைகளை பிரதிபலித்தது.
6. மாணவ, மாணவிகளைப் பார்த்ததும் அவர் பூரித்துப் போவார். அவர்கள் அருகில் சென்று பேசாமல் இருக்க மாட்டார்.
7. ஜனாதிபதியாக இருப்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத சில மரபுகள் இருந்தன. பதவியேற்ற முதல் நாளே அந்த மரபுகளை உடைத்தவர் அப்துல் கலாம்.
8. ‘‘அக்னிச் சிறகுகள்’’ எனும் நூல் அப்துல் கலாமின் சுய சரிதையாக வெளி வந்துள்ளது.
9. அப்துல் கலாம் நிறைய கவிதைகள் எழுதியுள்ளார். அந்த கவிதைகளின் வரிகள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வார்த்தைகளாக உள்ளன.
10. அப்துல் கலாம் தன்னடகத்தின் உச்சமாக திகழ்ந்தவர். அவரைப் போன்று பணிவான மனிதர்களை காண்பது அரிது என்று உலக தலைவர்களே வியந்துள்ளனர்.
11. நான் என்ற அகந்தை எண்ணம் அவரிடம் துளி அளவு கூட இருந்ததில்லை. சிறு வயது முதல் வாழ்நாளின் இறுதி வரை அமைதியானவர், அன்பானவர் என்ற பாதையில் இருந்து அவர் விலகாமலே இருந்தார்.
12. ‘‘நான் யார் தெரியுமா’’ என்ற ரீதியில் அவர் ஒரு நாள் கூட செயல்பட்டதில்லை. ஒரு தடவை அவர் வெளிநாடு சென்றிருந்த போது விமான நிலைய அதிகாரிகள் அவர் அணிந்திருந்த கால் ஷூ–வை அகற்றி சோதித்த போது, சிரித்துக் கொண்டே முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்.
13. எந்த ஒரு இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தி பரபரப்பு ஏற்படுவதை அவர் ஒரு போதும் விரும்பமாட்டார். ஜனாதிபதியாக இருந்த போது ஒரு நாள் டெல்லி ஜும்மா மசூதிக்கு தொழ சென்ற அவர் இடம் நெருக்கடி காரணமாக கடைசி வரிசையில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று இறைவனை தொழுதது குறிப்பிடத்தக்கது.
14. எந்த அளவுக்கு அவர் தன்னடக்கம் கொண்டிருந்தாரோ, அதே அளவுக்கு அவர் தன்னம்பிக்கையிலும் உச்சத்தில் இருந்தார். ‘‘நீ முயன்றால் நட்சத்திரங்களையும் பறிக்கலாம்’’ என்று அடிக்கடி கூறுவார்.
15. இந்திய அரசியல்வாதிகளிடம் இவர் அடிக்கடி உதிர்த்த வார்த்தை – ‘‘தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள். அது தான் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்’’
16. உலகத் தலைவர்களில் அப்துல் கலாம் அளவுக்கு இளைய சமுதாயம் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை யாருமே உன்னதமான பதில்களை அளித்ததில்லை.
17. அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது?’’ என்று கேட்டாள். அதற்கு அப்துல் கலாம், ‘‘பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது பகல். படா விட்டால் இரவு. இதில் நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை’’ என்றார்.
18. அப்துல் கலாம் மிகப்பெரிய உறவு, நட்பு வட்டாரத்தைக் கொண்டவர். ஆனால் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர் யார் ஒருவருக்கும், எதற்கும் சிபாரிசு செய்ததே இல்லை.
19. ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கூட, அந்த மாத சம்பளத்தை வாங்கி அதில் ஒரு பகுதியை தன் குடும்பத்துக்கு அனுப்புவதை அப்துல் கலாம் வழக்கத்தில் வைத்திருந்தார்.
20. அப்துல் கலாமின் நெருங்கிய உறவினர்கள் எல்லாம் இன்றும் நடுத்தர வர்க்க வாசிகளாகவே உள்ளனர். அப்துல் கலாமின் கறை படாத நேர்மைக்கு இது ஒன்றே சிறந்த எடுத்துக்காட்டு.
21. அப்துல் கலாம் எந்த ஒரு காலக்கட்டத்திலும், எந்த ஒரு பதவியையும் எதிர்பார்க்காதவர். ஜனாதிபதி வேட்பாளராக அவர் பெயர் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு வரை அவர் தன் விரிவுரையாளர் பணியில் சுறுசுறுப்பாக இருந்தார்.
22. அப்துல் கலாம் இளம் வயதில் விமானி ஆக வேண்டும் என்று ஆசைப்பாட்டார். அது கிடைக்காததால் பாதுகாப்புத்துறை தொழில் நுட்ப படிப்பைத் தேர்வு செய்தார்.
23. அனைத்து வளங்களும் நிறைந்த இந்தியா 2020–ம் ஆண்டில் உலகின் வளர்ந்த 5 நாடுகளில் ஒன்றாக திகழும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இந்தியர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தினார்.
24. திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் 1954–ம் ஆண்டு பி.எஸ்.சி படித்த அப்துல் கலாம் அந்த பட்டத்தை வாங்காமல் விட்டு விட்டார். 48 ஆண்டுகளுக்கு பிறகு அதை கேட்டுப் பெற்றார்.
25. யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனகசுந்தரம் என்ற சன்னியாசியிடம் அப்துல் கலாம் ஆங்கிலம் கற்றுக் கொண்டார்.
26. ராமேசுவரம் மாவட்ட கல்விக் கழக பள்ளி அறிவியல் ஆசிரியர் சிதம்பரம் சுப்பிரமணியத்திடம் இருந்துதான் அறிவியல் ஆர்வத்தை கலாம் பெற்றார்.
27. அப்துல் கலாமின் நீண்ட நாள் காலை உணவு ஒரே ஒரு ஆப்பம். ஒரு தம்ளர் பால். வேறு எதையும் சாப்பிட மாட்டார்.
28. அப்துல் கலாமிடம் ஒரு பழமையான வீணை உண்டு. எப்போதாவது நேரம் கிடைத்தால் அந்த வீணையை வாசிப்பார்.
29. சிறு வயதில் கிணற்றுக்குள் கலாம் கல்லைத் தூக்கிப் போட்டார். அதில் இருந்து குமிழ், குமிழாக வந்தது. அது ஏன் வருகிறது என்று அப்துல் கலாம் கேட்டார். அவர் கேட்ட முதல் அறிவியல் கேள்வி இது தான்.
30. ராமேஸ்வரத்தில் உள்ள லட்சுமணத் தீர்த்தத்தில் தை மாதம் விழா நடத்தும் போது அப்துல் கலாம் குடும்பத்தினருக்கு ‘‘சந்தனப்பாடி’’ என்று ஒரு மரியாதை கொடுத்தனர். அந்த அளவுக்கு அப்துல் கலாம் குடும்பத்தினருக்கும் இந்துக்களுக்கும் நெருக்கம் இருந்தது.
31. அப்துல் கலாமுக்கு மிகுந்த இசை ஞானம் உண்டு. தியாகராஜ கீர்த்தனைகளில் சில கிருதிகளை அவர் தெரிந்து வைத்திருந்தார்.
32. 1950–களில் திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்த போது அசைவம் சாப்பிட்டால் அதிகம் செலவாகிறது என்று அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினார். பிறகு அதுவே நிரந்தரமாகிப் போனது.
33. 1998–ம் ஆண்டு மே மாதம் 11–ந் தேதி பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தி உலக அரங்கில் தன்னை வல்லரசாக அறிவித்தது. இதற்கு அடித்தளம் அமைத்தவர் அப்துல் கலாம்தான்.
34. 1958–ல் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் அப்துல்கலாம் வேலைக்கு சேர்ந்த போது அவருக்கு மாத சம்பளமாக ரூ.250 வழங்கப்பட்டது.
35. இந்திய ராணுவத்தில் உள்ள திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் அகிய ஏவுகணைகள் அப்துல் கலாம் திட்ட இயக்குனராக இருந்த போது வடிவமைக்கப்பட்டு வந்தவையாகும்.
36. இந்தியாவுக்காக இவர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கிய போது அமெரிக்கா உள்பட பல நாடுகள் இவரை ஆச்சரியத்துடனும், மிரட்சியுடனும் பார்த்தன.
37. போலியோ நோயாளிகளுக்கான எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும் இருதய நோயாளிகளுக்கான எடை குறைந்த ஸ்டெண்ட் கருவி ஆகியவை இவர் கண்டு பிடித்தவையாகும். அந்த ஸ்டெண்டுக்கு ‘‘கலாம் ஸ்டெண்டு’’ என்றே பெயராகும்.
38. தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் அப்துல் கலாம் படித்துள்ளார். குறிப்பாக திருக்குறளை கரைத்து குடித்திருந்தார் என்றே சொல்லலாம்.
39. இவர் எழுதிய ‘‘எனது பயணம்’’ என்ற கவிதை நூல் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
40. எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது இவரது பழக்கம். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கூட உழைப்பதற்கு தயங்க மாட்டார்.
41. குடிப்பழக்கம், ஊழல், வரதட்சணை போன்ற 5 தீய பழக்கங்களை கைவிட நாம் ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டெல்லி காந்தி சமாதியில் எழுதி வைக்க அப்துல் கலாம் அறிவுறுத்தி அதை அமல்படுத்தினார்.
42. இந்திய பாதுகாப்புத்துறையின் ஆய்வுக்கு முதலில் வெளிநாட்டு கருவிகள், பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றை நிறுத்தி விட்டு முழுக்க, முழுக்க உள்நாட்டு பொருட்கள் மூலம் ஆய்வு பணிகளை அப்துல் கலாம் செய்ய வைத்தார்.
43. அப்துல் கலாம் ஒரு போதும் நன்றி மறக்காதவர். தனது ஆசிரியர்கள், நண்பர்கள், உதவி செய்தவர்கள் என அனைவரையும் அடிக்கடி நினைவுப்படுத்தி பேசுவார்.
44. அப்துல் கலாமிடம் நகைச்சுவை உணர்வு அதிகம் உண்டு. நெருக்கடியான சமயங்களில் கூட அவர் நகைக்சுவையை வெளிப்படுத்த தயங்கியதில்லை.
45. இளைஞர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று அப்துல் கலாம் மிகவும் விரும்பினார். ஒரு தடவை மைசூரில் நடந்த விழாவில் அவர் பேசுகையில், ‘‘இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞனுக்கும் கட்டாயம் 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும்’’ என்றார்.
46. பணம், வயது, சாதி, இனம், மதம், மொழி என்பன போன்றவற்றில் கலாம் வேறுபாடு பார்த்ததே இல்லை. இந்த அரிய குணத்தை அவர் தம் தந்தையிடம் இருந்து பழக்கத்தில் பெற்றார்.
47. அப்துல் கலாம் தினமும் திருக்குரான் படிக்கத் தவறியதில்லை. அதில் அவருக்கு பிடித்த வரிகள் எவை தெரியுமா?. ‘‘இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்’’ எனும் வரிகளாகும்.
இந்த வரிகள், என்னுடைய எல்லா சோதனை நாட்களிலும் என்னை கரை சேர்த்த வைர வரிகள் என்று அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார்.
48. சென்னை மூர் மார்க்கெட்டில் உள்ள ஒரு பழைய புத்தகக் கடைகளில் 1950–களில் அப்துல் கலாம், ‘‘த லைட் பிரம் மெனி லேம்பஸ்’’ என்ற புத்தகத்தை வாங்கினார். கடந்த 60 ஆண்டுக்கும் மேலாக அதை அவர் பொக்கிஷமாக வைத்திருந்தார்.
49. அறிவியல் தொழில் நுட்பத்துக்கு மிகவும் உதவும் பெரிலியம் தாது பொருளை வெளிநாடுகள் இந்தியாவுக்கு தர மறுத்தன. உடனே இதுபற்றி கலாம் ஆய்வு செய்தார். இந்தியாவின் பல பகுதிகளில் பெரிலியம் மண்ணில் அதிக அளவில் கலந்து இருப்பதை கண்டுபிடித்தார்.
இதைத் தொடர்ந்து பெரிலியம் மணல் கலவையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உலக நாடுகள் பிறகு போட்டி போட்டு இந்தியாவுக்கு பெரிலியம் கொடுத்தன.
50. ஒரு தடவை காந்தி சமாதிக்கு சென்ற அப்துல் கலாம், ‘‘காந்தியின் வாழ்க்கை அனுபவங்களை குழந்தைகளிடம் பரப்ப நான் சபதம் ஏற்கிறேன் என்று குறிப்பு எழுதினார். அதன்படி ஜனாதிபதி பதவி காலம் முடிந்த பிறகும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று பேசிவந்தார். நேற்று அவர் கடைசி மூச்சும், இந்த பணியில்தான் நிறைவுற்றது ,,..
நன்றி மோகன்தாஸ் சாமுவேல்