Nov 23, 2015

மோசமாக எஸ்.எம்.எஸ். தரும் எண்களைத் தடை செய்திட

நம்மில் பலரின் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில், மிக மோசமான சொற்கள் அடங்கிய, பாலியல் தொந்தரவு தரும் வகையிலான குறுஞ் செய்திகள் எனப்படும் எஸ்.எம்.எஸ். தகவல்கள் வந்திருக்கும். இவற்றை அனுப்பிய எண்களும் இருக்கும். ஆனால், இந்த எண்களை அழைத்து ஏன் இவ்வாறு மோசமான செய்திகளை அனுப்பியுள்ளீர்கள் எனக் கேட்டால், “அனுப்பவே இல்லை” என்றும், தொடர்ந்து பேசினால், மிக மோசமான சொற்களால் திட்டுக்களும் கிடைக்கும். பலர், இந்த அவமானத்தை வெளியில் சொல்ல தயங்கி, அது பற்றி மேல் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். காவல் துறைக்குச் சென்றால், பலருக்கு இது தெரிந்துவிடும் என்ற பயமும் இருக்கும். நீங்களாகவே, இதனைத் தடுத்துவிடும் வழிகள் உள்ளன. அதனை இங்கு காணலாம்.

உங்களுடைய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில், இணையத் தொடர்பின் வழியாக, Google Play store (Android market) செல்லவும். அல்லது போன் பிரவுசர் வழியாக play.google.com என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். Google Play store அடைந்தவுடன் அதில் ““SMS blocker”” என டைப் செய்து தேடவும். அல்லது நேரடியாக https://play.google.com/store/apps/details?id=com.smsBlocker&hl=en என்ற முகவரிக்குச் செல்லவும். கூகுள் பிளே ஸ்டோரில் எஸ்.எம்.எஸ். தடுக்க கிடைக்கும் பல புரோகிராம்களில் SMS Blocker – Clean Inbox என்ற ஒன்று காட்டப்படும். அல்லது இந்த முகவரியில் இது மட்டுமே காட்டப்படும். இதனை உங்கள் மொபைல் போனில் இன்ஸ்டால் செய்திடவும். இன்ஸ்டால் செய்தவுடன், இயக்கி app preferences page என்ற பக்கத்திற்குச் செல்லவும். இங்கு •SMS blocking என்பதிலும் Spam auto blocking – என்பதிலும் On என அமைக்கவும். Country code என்ற இடத்தில் இந்தியாவிற்கான குறியீடான 91 என்பதனை அமைக்கவும். (மற்ற நாடுகளின் குறியீடுகளை அறிய http://countrycode.org/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.) இனி, ஸ்பேம் செய்திகள் வரும்போது அவை தடுக்கப்படும். குறிப்பிட்ட எண்களில் இருந்து வரும் செய்திகளைத் தடுக்க, ““Block”” என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். “Add New” என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு மூன்று ஆப்ஷன்கள் கிடைக்கும். அவை: போன் முகவரி புக்கிலிருந்து எண் தேடி எடுத்து அமைத்தல், எஸ்.எம்.எஸ். வந்த பெட்டியிலிருந்து எண் தேடி அமைத்தல், மற்றும் நாமாக எண்ணை அமைத்தல். இங்கு எண்ணை அமைக்க வேண்டும். 

அடுத்ததாக, “Filter” என்று ஒரு ஆப்ஷன் உள்ளது. இங்கு குறிப்பிட்ட சொல் அல்லது சொற்களை அமைத்து, அவை உள்ள செய்திகளை ஸ்பேம் பெட்டிக்கு அனுப்ப செட் செய்திடலாம்.

Nov 22, 2015

விஷப்பெட்டியாக மாறிவிட்ட ஃப்ரிட்ஜ்!

ஷாக்கிங் தகவல்கள்… சமாளிக்க 10 கட்டளைகள்!
‘‘குளிர்சாதனப்பெட்டி (Refrigerator) என்பது இன்று எல்லா இல்லங்களிலும் அத்தியாவசியப் பொருளாகிவிட்டது. ஆனால், பலருக்கும் தெரியாது அதில் பொதிந்துள்ள ஆபத்துகள் பற்றி!’’ என்று அதிர்ச்சி கொடுக்கும் சென்னை, இ.எஸ்.ஐ மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணர் பவானி, குளிர்சாதனப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதன் நோக்கம் தொடங்கி, அதன் பயன்பாடு திசைதிரும்பியதால் அதிகரித்துள்ள உடல்நலப் பிரச்னைகள், ஃப்ரிட்ஜுக்கான மாற்றுவழி வரை விரிவாகப் பேசுகிறார்…

குளிர்சாதனப்பெட்டி… எதற்காக?

“மருந்தையும், சமைக்காத உணவையும் குளிர்படுத்தி பாதுகாத்து நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட மின்சாதனமே, இயந்திர தொழில்நுட்ப வரலாற்றில் முக்கியக் கண்டுபிடிப்பான குளிர்சாதனப்பெட்டி. உணவுப் பொருட்கள் அதிகமாகக் கிடைக்கும் காலங்களில் அவற்றைப் பாதுகாத்து, குறிப்பிட்ட அந்த உணவுக்கு தட்டுப்பாடு வரும் காலத்தில் பயன்படுத்துவது, உணவுகளை உற்பத்தி இடங்களில் இருந்து வேறு இடங்களுக்கு பாதிப்படையாமல் எடுத்துச் செல்வது, மருந்துகளைப் பாதுகாக்கப் பயன்படுத்துவது, பால், காய்கறி போன்ற சமைக்காத உணவுகளைப் பாதுகாத்துப் பயன்படுத்துவது… இதெல்லாம்தான் குளிர்சாதனப்பெட்டி கண்டுபிடிப்பின் நோக்கங்கள்.

இன்றோ, சமைத்த உணவுகளையும் ஃப்ரிட்ஜுக்குள் வைப்பது, பல வகையான உணவுப் பொருட்களையும் வைக்கும்போது சரியாக மூடாமலும், சரிவர பிரித்து வைக்காமலும் ஸ்டோர் செய்வது, போன வாரம் வாங்கிய காளான் முதல், மிகுந்துபோன குழம்பு வரை அடைத்து வைப்பது என… ஒவ்வொரு வீட்டிலும் குளிர்சாதனப்பெட்டி, கண்ணுக்குப் புலப்படாத விஷப்பெட்டியாகத்தான் நின்றுகொண்டிருக்கிறது!

குளிர்சாதனப்பெட்டி அவசியமா?

குளிர்சாதனப்பெட்டி அவசியம் இல்லை என்பதுதான் உண்மை. நம் முன்னோர் குளிர்சாதனப் பெட்டியை அறியவில்லை; அவர்களின் ஆரோக்கியத்துக்கும் குறைவில்லை. அவர்களிடம் இருந்த சுறுசுறுப்போ, நேரமோ நமக்கில்லை என்பதால், நம் சோம்பேறித்தனத்துக்கு சாமரம் வீசும் ஃப்ரிட்ஜை சார்ந்து வாழப் பழகிவிட்டோம். முழுக்க முழுக்க, மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்களுக்காக கண்டிபிடிக்கப்பட்ட இந்த சாதனம், அவர்களின் சீதோஷ்ணம், வேலை, சூழலுக்குப் பொருந்தும். ஆனால், எல்லாவற்றிலும் ‘வெஸ்டர்னைஸடு’ ஆகும் நமக்கு, ஃப்ரிட்ஜும் விதிவிலக்கல்லாமல் போய்விட்டது. இதனால், அடிக்கடி காய்கறி வாங்க வேண்டிய வேலையும், மூன்றுவேளை சமைக்கும் வேலையும் குறையும் என்பதே பலரின் நினைப்பு. கொஞ்சம் மெனக்கெட்டால், இந்த சார்பை விலக்கலாம். இல்லையென்றால், அதில் பொதிந்துள்ள ஆபத்துகள் நம் ஆரோக்கியத்தையும், ஆயுளையும் குறைக்கும்.

செய்ய வேண்டிய விஷயங்கள்!

பெரியவர்கள், குழந்தைகள் உள்ள வீடுகளில் வயிற்றுவலி, பேதியில் இருந்து, ஒபிஸிட்டி எனப்படும் உடற்பருமன் வரை ஃப்ரிட்ஜ் உணவுகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் பல. ‘இவ்வளவு பாதிப்புகளா?! ஆனாலும், ஃப்ரிட்ஜ் இல்லாமல் இருக்க முடியாதே?’ என்பவர்களுக்கு… 10 கட்டளைகள்… இதோ!

1. 5 டிகிரி செல்சியஸ் முதல் 60 டிகிரி செல்சியஸ் வரையிலான டெம்பரேச்சரில் பாக்டீரியாக்கள் மிக வேகமாக வளரக்கூடும் என்பதால், -15 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் குளிர்சாதனப்பெட்டியின் டெம்பரேச்சரை செட் செய்ய வேண்டியது மிக முக்கியம். முடிந்தவரை 4 டிகிரி செல்சியஸ் அளவில் எப்போதும் வைத்துப் பயன்படுத்துவது நல்லது.

2.  மின்சாரம் தடைபட்டால் இரண்டு மணி நேரம் மட்டுமே குளிர்சாதனப் பெட்டியில் உள்ள உணவு கெடாமல் இருக்கும். அதற்குப் பின்னும் மின்சாரம் இல்லையெனில், உடனடியாக ஃப்ரிட்ஜில் உள்ள உணவுகளை வெளியே எடுத்து, சூடுபடுத்தி சாப்பிட்டுவிட வேண்டும். வெயில் காலத்தில், ஒரு மணி நேரத்துக்கு மேல் மின்சாரம் இல்லாமல் இருந்தாலே, உணவுகளை வெளியே எடுத்துப் பயன்படுத்திவிட வேண்டும்.

3. காய்கறி, பழங்கள், கீரைகள், உணவுகள், அசைவ உணவுகள் இப்படி அனைத்தையும் சரிவரப் பிரித்து ஸ்டோர் செய்ய வேண்டும். அதாவது, ஃப்ரீஸரில் அசைவ உணவுகள், டிரேயில் பால் பாக்கெட்டுகள், டோர்களில் கூல்டிரிங்ஸ், கீழ் டப்பாவில் காய்கறிகள், பழங்கள் போன்ற சமைக்காத உணவுகள், நடுத்தட்டில் மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்கள், மேல்தட்டில் சமைத்த உணவு… இப்படி ஒவ்வொன்றையும் அதற்கான இடத்தில் வைக்க வேண்டும். ஒவ்வொன்றையும் முறையாக இறுக்கமாகப் பேக் செய்து/ மூடி வைக்க வேண்டியது மிக அவசியம். ஒரு பொருளுக்கும் இன்னொரு பொருளுக்கும் இடையில் இடைவெளி இருக்க வேண்டியது மிக முக்கியம்.

செய்யக் கூடாத விஷயங்கள்!

4. என்னதான் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டாலும், உணவில் மாற்றம் நிகழத்தான் செய்யும். உதாரணமாக, பிரெட் உள்ளிட்ட மைதா சார்ந்த பொருட்களில் உருவாகும் பூஞ்சை, மற்ற உணவுப் பொருட்களையும் பாதிக்கும் என்பதால் நீண்ட நாட்களுக்கு எந்தப் பொருளையும் ஸ்டோர் செய்ய வேண்டாம்.

5. ஆட்டுக்கறி, கோழிக்கறி, வடித்த சாதம் போன்றவற்றில் பாக்டீரியா வளர்ச்சி அதிகமாக இருக்கும், அது மற்ற உணவுகளுக்கும் எளிதில் பரவக்கூடும் என்பதால் இவற்றை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்வதைத் தவிர்க்கவும்.
6. அதிக சூடான உணவுப் பொருட்களை ஒருபோதும் குளிர்சாதனப்பெட்டிக்குள் வைக்கக்கூடாது. அது அதிக மின்சாரம் செலவாக வழிவகுப்பதுடன், அந்த வெப்பம் ஃப்ரிட்ஜின் மொத்த டெம்பரேச்சரையும் தொந்தரவு செய்து, உணவுப் பொருட்களை பாதிக்கும்.

7. பொதுவாக, குறைந்த டெம்பரேச்சரில் இருந்து அதிக டெம்பரேச்சருக்கு உள்ளாகும்போது, அந்தப் பொருட்களில் பாக்டீரியாவின் வளர்ச்சி அதிகரிக்கும். எனவே, குளிர்சாதனப் பெட்டியில் இருந்து எடுக்கும் காய்கறிகள், உணவுகளை அவற்றிலிருக்கும் குளிர் தன்மை குறைந்ததும் சமைத்தோ, சூடுபடுத்தியோ பயன்படுத்தாவிட்டால் ஆபத்து.

8. சமைத்த உணவுகளை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்வது பரிந்துரைக்கத்தக்கதல்ல. காரணம், அதில் நுண்கிருமிகள், பாக்டீரியாக்கள் உருவாகி பாழாவதோடு, மற்ற உணவுப் பொருட்களையும் பாதிக்கும். இதில் சிலர் சமைத்து, உள்ளே வைத்து, வெளியே எடுத்து சூடுபடுத்தி, மீண்டும் உள்ளே வைத்து என்று பயன்படுத்தினால் அது உணவாக இருக்காது, விஷமாகிவிடும். 

9. கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள், நுண்சத்து குறைபாடு உள்ளவர்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது. 

10. குளிர்சாதனப்பெட்டியில் வைக்கும் உணவுகளில் புரதச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து போன்றவற்றில் பெரிதாக மாற்றம் ஏற்படாது என்றாலும், சுவை, விட்டமின் சத்து குறைவதுடன், போனஸாக பாக்டீரியா, பூஞ்சைத் தொற்று கிடைக்கும். எனவே, எச்சரிக்கை தேவை!

ஃபிரிட்ஜ்… உணவுப் பொருட்களை ஃப்ரெஷ்ஷாக எடுத்து சாப்பிடத்தானே அன்றி, அழுகும் நிலைக்கு முன்வரை வைத்திருந்து சாப்பிட அல்ல என்பதை நினைவில் கொள்க!’’

– விழிப்பு உணர்வும் எச்சரிக்கையும் தந்து நிறைவு செய்தார், பவானி! 
 

என்னதான் மாற்று?!
காய்கறிகளை வாரக் கணக்கில் வாங்கி வைக்காமல் அதிகபட்சம் இரண்டு, மூன்று நாட்களுக்கு என வாங்கிப் பயன்படுத்தலாம். தேவைக்கும் அதிகமாகச் சமைத்து, மீகுந்துவிட்டது என ஃப்ரிட்ஜுக்குள் திணிக்காமல் அளவாகச் சமைத்து அன்றன்றே சாப்பிட்டுவிடலாம். சாதம் மிகுந்துவிட்டால், வடகம் போடலாம். மீன், நண்டு போன்ற அசைவ உணவுகள், கடலில் இருந்து பிடிக்கப்பட்டு பல நாட்கள் கழித்தே நம்மை வந்து அடைகின்றன. அவற்றை மேலும் வீட்டில் ஃப்ரீஸரில் ஸ்டோர் செய்தால் கிருமித் தொற்று நிச்சயம். அது மற்ற உணவுகளுக்கும் பரவும் ஆபத்தும் உள்ளது.

ஃப்ரிட்ஜில் எவ்வளவு காலம் வைக்கலாம்? 

ஃப்ரிட்ஜ் பராமரிப்பு!
குளிர்சாதனப்பெட்டியை பராமரிக்கும் முறைகளைச் சொல்கிறார், சென்னை, ‘ஜே.கே. எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ்’ உரிமையாளர் ராமகிருஷ்ணன்…

குளிர்சாதனப்பெட்டியை எப்போதும் காற்றோட்டமான, சூரியஒளி படாத இடத்தில் வைக்க வேண்டும்.

சிலிண்டரில் இருந்து கசியும் வாயு, குளிர்சாதனப்பெட்டியில் இருந்து வரும் சிறு தீப்பொறியுடன் சேர்ந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், அடுப்பில் இருந்து ஃப்ரிட்ஜை தூரமாக வைக்கவும்.

குளிர்சாதனப் பெட்டியிலேயே குறிப்பிட்டிருக்கும் அந்தந்த பருவநிலைக்கு ஏற்ற கூலிங் அளவைப் பின்பற்ற வேண்டும். அடிக்கடி திறந்து மூடினால், அதிக மின்சாரம் செலவாகும்.

ஃப்ரீஸரில் ஐஸ் சேர்ந்துவிட்டால் ‘டிஃப்ராஸ்ட்’ ஆப்ஷனை பயன்படுத்த வேண்டுமே தவிர, கூர்மையான பொருட்களைக்கொண்டு குத்தி எடுப்பது கூடாது.

பழைய மாடல் ஃபிரிட்ஜில் பின்புறம் இருக்கும் டிரைனேஜ் வாட்டரை மூன்று நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்யவும்.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை உட்புறம் உள்ள கிளாஸ் டோர்களை வெளியே எடுத்துத் துடைக்கவும்.

வாரத்தில் ஒருநாள் சோப் பவுடர் கலந்த தண்ணீரில் மிருதுவான துணியை நனைத்துப் பிழிந்து உட்புறம், வெளிப்புறம் துடைத்து, நன்றாகக் காயவிட்டுப் பயன்படுத்தலாம். எலுமிச்சைப் பழத்தை கட் செய்து அல்லது கரித்துண்டுகளை இரண்டு மூலைகளில் வைத்தால், துர்நாற்றம் வீசாமல் இருக்கும்.

குழந்தைகளுக்கு ஆகாது… குளிர்சாதனப் பொருட்கள்!
ன்றைக்கு பெரும்பாலான குழந்தைகள் வீட்டில் ஃப்ரிட்ஜில் ஸ்டோர் ஆகியிருக்கும் சாக்லேட், குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம் வகைகளைத்தான் ஆசையாகச் சாப்பிடுகின்றன. இந்தப் பொருட்களில் உள்ள சர்க்கரையின் அளவு, குளிர்படுத்தப்படும்போது இன்னும் அதிகமாகி, குழந்தைக்கு வயிற்றுவலியில் இருந்து ஒபிஸிட்டி வரை பிரச்னைகளைத் தரும். ‘ஃப்ரிட்ஜ்ல இருந்து கூல்டிரிங்க்ஸ், சாக்லேட்ஸ் சாப்பிடக் கூடாது’ என்று குழந்தைகளை கண்டிப்பது அல்ல தீர்வு. அதை வாங்கி ஸ்டோர் செய்யாமல் இருப்பதே நிரந்தரத் தீர்வு!

மருந்துகள் பத்திரம்!
குளிர்சாதனப்பெட்டியில் மருந்துகளை ஸ்டோர் செய்யும் முறைகளைச் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற குழந்தைகள்நல மருத்துவப் பேராசிரியர் செல்வராஜ்…

‘‘இன்சுலின் போன்ற கட்டாயம் குளிர்சாதனப்பெட்டியில் வைத்தே பயன்படுத்த வேண்டிய மருந்துகளுக்கு, ஓர் இடத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும். இதன் அருகில் உணவுப் பொருட்கள், பூக்கள் வைப்பது கூடாது. மருந்து இருக்கும் சமயத்தில் அசைவ ஸ்டோரேஜ் கூடாது. மருந்தால் உணவும், உணவால் மருந்தும் பாழாகக்கூடும்.’’

டாக்குமெண்ட் பிரிண்ட் எடுக்கப் போறீங்களா!

உங்கள் டாகுமெண்ட், ஸ்ப்ரெட்ஷீட் ஆகியவற்றை அச்சிடும் முன், குறிப்பிட்ட அந்த அச்சு நகல், அவ்வளவு அழகாக இருக்க வேண்டாம்; சாதாரணமாக இருந்தால் போதும்; நம் பைலுக்குத்தான் என்று எண்ணுகிறீர்களா? அப்படியானால், அதனை draft mode ல் அச்சிடவும். இவ்வகை அச்சுப் பிரதி வேகமாக பிரிண்ட் ஆகும். குறைவான இங்க் செலவாகும். இந்த வகை அச்சு நகல் ‘draft’, ‘fast’, ‘eco’ என வெவ்வேறு வகையில் அழைக்கப்படும். உங்கள் பிரிண்டரில் இது என்னவென்று காட்டப்படும். 
 
* சில டாகுமெண்ட்களில் குறைவான வரிகள் இருக்கலாம்; அல்லது சிறிய அளவில் அச்சிட்டாலும் படிக்கும் வகையில் இருக்கலாம். அப்படிப்பட்ட டாகுமெண்ட்களை அச்சிடுகையில், தாளின் ஒரு பக்கத்தில் இரண்டு பக்கங்களை அச்சிடலாமே! 

* கூடுமானவரை உங்கள் டாகுமெண்ட்களில், போட்டோக்கள் மற்றும் பெரிய அளவிலான கிராபிக்ஸ் படங்களைத் தவிர்க்கவும். இதனால் டாகு மெண்ட் பைல் அளவு அதிகரிக்கும். அச்சிடுகையில், இந்த டாகுமெண்ட்டின் பக்கங்களை வடிவமைத்து அச்சிட, பிரிண்டர் அதிக நேரம் எடுக்கும். 

* வண்ணம் கலந்த டாகுமெண்ட் அச்செடுக்கையில், அந்த அச்சுப் பிரதி முடிவானதாக இல்லாமல், சோதனைக்குத்தான் எனில், அதனை black or grayscale என்னும் வகையில் அச்செடுக்கலாம். இதனால், நேரம் மிச்சமாகும். வண்ண மை செலவாகாது. குறிப்பாக லேசர் கலர் பிரிண்டரில் நேரம் அதிக அளவில் குறையும். 

* பிரிண்டர்கள் அச்சிடாத வேளைகளில் sleep modeக்குச் சென்று விடும். உடன் அச்சிட கட்டளை கொடுக்கையில் விரைவாகத் தயாராகிவிடும். இதனையே மின்சக்தியை நிறுத்திவிட்டால், பிரிண்டர் தயாராகும் நேரம் அதிகமாகும். பிரிண்ட் ஹெட் தயார்ப்படுத்தப்பட வேண்டும்; மை தெளிக்கும் சிறிய குழாய் முனைகள் (nozzles) சோதிக்கப்பட வேண்டும்; இவற்றைக் கலவைக்குத் தயார் படுத்த வேண்டும் என்பது போன்ற பல பணி முனைப்புகள் மேற்கொள்ளப்படும். எனவே பிரிண்டர் வேலை செய்யாவிட்டாலும், அதன் மின் சக்தியை நிறுத்தாமல் தயார் நிலையில் வைத்திருக்கலாம். அது தானாகவே sleep modeக்குச் செல்வதால், சிக்கல் இல்லை.

காஸ் ஸ்டவ் ஆறு வகை… உங்களுடையது எந்த வகை?

காஸ் ஸ்டவ் ஆறு வகை… உங்களுடையது எந்த வகை?
பொருள்களை வாங்குவதற்குமுன் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங் களை விவரிக்கும் `ஷாப்பிங் போக லாமா..?’ பகுதியில் இந்த முறை… 

கிச்சனின் ஹீரோவான காஸ் ஸ்டவ். மார்க்கெட்டில் கிடைக்கும் காஸ் ஸ்டவ் வகைகள் மற்றும் அதனைப் பராமரிக்கும் முறைகள் பற்றிச் சொல்கிறார், ‘சத்யா ஏஜென்ஸி’யின் மேனேஜிங் டைரக்டர் ஜான்சன்…
தேவைக்கு ஏற்ப தேர்வு!

காஸ் ஸ்டவ் டெக்னாலஜி முதன் முதலாக 1820-ல் அறிமுகப்படுத்தப்பட்டு, 1836-ம் ஆண்டு மார்க்கெட்டுக்கு வந்தது. இன்று கிராமத்து அடுப்படிகள் வரை ஊடுருவியிருக்கும் காஸ் ஸ்டவ், இன்னொரு பக்கம் கண்ணாடித் தகட்டில் அடுப்பு எனுமளவுக்கு நவீன பயன்பாட்டுக்கு ஏற்ற வடிவ மாற்றத்தையும் அடைந்திருக்கிறது. காஸ் ஸ்டவ் வாங்கும்போது, உங்கள் வீட்டின் சமையல் ஸ்டைல், சமைக்கும் நேரம், சமையல் அறையில் மேடையின் நீள, அகலம் என்று பல கூறுகளையும் நினைவுகூர்ந்து, அதற்குப் பொருத்தமான ஸ்டவ் ஆக தேர்ந்தெடுக்கவும்.

மாடல்கள் ஆறு!

காஸ் ஸ்டவ்வில் இப்போது மார்க்கெட்டில் இருக்கும் ஆறு வகை மாடல்கள் பற்றிய அறிமுகம் இங்கே…

1. பெரும்பாலான வீடுகளில் இருக்கும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மாடல். இதில் பர்னர் பிராஸ் மெட்டீரியலில் இருக்கும்.

2. பராமரிப்பை எளிதாக்கவென்றே அறிமுகப்படுத்தப்பட்ட கிளாஸ் டாப் மாடல், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மாடல் போலவே இருக்கும் இதில், மேலே ஒரு லேயர் மட்டும் கிளாஸ் கொடுத்திருப்பார்கள். ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் நாள்பட்ட கறைகள், எண்ணெய்க் கறை போன்றவைகளை நீக்குவது சிரமம்; இதில் எளிது.

3. ஹாப்ஸ் மாடல்… இது ஹோட்டல் பயன்பாட்டுக்கு உருவாக்கப்பட்டது.
4. குக்கிங் ரேன்ஜ்… கிளாஸ் டாப் மற்றும்  `அவன்’ சேர்ந்தேயிருக்கும் இந்த மாடலும், ஹோட்டல்களில் பயன்படுத்தக்கூடியது.

5. பர்னர் அலாய் மெட்டீரியலால் ஆன கிளாஸ் டாப் மாடல், இன்னொரு வகை.

6. அடுத்ததாக ஏர் மற்றும் ஏர் ப்ளஸ் ஸ்டவ் மாடல். இதில் கிளாஸ் பிளேட் மட்டும் இருக்கும். அதில் இரண்டு பர்னர்கள், அதனைக் கட்டுப்படுத்த ரெகுலேட்டர் கிளாஸ் மேலேயே கொடுக்கப்பட்டிருக்கும். கீழே நான்கு முனைகளிலும் இருக்கும் ஸ்டாண்டு, சுத்தம் செய்யும் மற்றும் பராமரிக்கும் வேலையை எளிதாக்கும். இது வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தக்கூடியது.
இந்த மாடல்களில், இரண்டு, மூன்று, நான்கு பர்னர்கள் வரைக் கிடைக்கும். தேவையைப் பொறுத்து தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அதேபோல ரெகுலேட்டர் ஆட்டோ இக்னிஷன் எனும் லைட்டர் இல்லாமல் ஸ்டவ்வை ஆன் செய்யும் மாடல் மற்றும் லைட்டர் உதவியுடன் அடுப்பைப் பற்றவைக்கும் மேனுவல் மாடல் என்ற வகைகளிலும், தேவையானதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

எந்த வகை அடுப்பை வாங்கினாலும், சிறப்பம்சங் களைவிட அதன் பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். அதனை எப்படி, எத்தனை நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும் என்பதை கேட்டு அறிந்துகொள்வதும் அவசியம். பிராண்டட் அடுப்புகள் 1,700 ரூபாயில் இருந்து 30,000 ரூபாய் வரை கிடைக்கின்றன.

உங்கள் சூப்பர் கிச்சனுக்கான ஸ்மார்ட் ஸ்டவ் மாடலைத் தேர்ந்தெடுத்துவிட்டீர்களா?!


ஸ்டவ்… டிப்ஸ்! 

1. அடுப்பு சற்றே உயரமான இடத்தில், சுவரை ஒட்டி இருக்க வேண்டும்.

2. அடுப்பு மீது நீரை நேரடியாக ஊற்றக்கூடாது.

3. சிலிண்டரைப் படுக்க வைக்கக் கூடாது.

4. கிளாஸ் பிளேட் பொருந்திய அடுப்புகளில் பர்னர் பக்கத்தில் உள்ள இடத்தில் சூடான பாத்திரத்தை வைக்கக் கூடாது.

5. காஸ் டியூப்பை பிராண்டடாக வாங்குவதுடன், குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்ற வேண்டும்.

6. சுத்தம் செய்யும்போது பர்னரில் கூர்மையான பொருட்களைக்கொண்டு குத்தக் கூடாது.

7. பொதுவாக, பர்னர் கனமாக இருக்கும் ஸ்டவ் மாடலாகப் பார்த்து வாங்கவும்!

வெள்ளத்தில் கார்/பைக் சிக்கினால்… இந்த 16 விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்!

வெள்ளத்தில் கார்/பைக் சிக்கினால்… இந்த 16 விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்!
‘மழைத் தண்ணியில வண்டி ஓட்டுறது செமையா இருக்கு மச்சான்…’’ என்று புளகாங்கிதம் அடைபவரா நீங்கள்? அப்படியெனில், இந்தக் கட்டுரை உங்களுக்காகத்தான்.
 
‘‘ஏரியா இருந்ததெல்லாம் ஏரியாவா மாறி, மறுபடியும் ஏரியா மாறிடுச்சு!’’ என்று ஃபேஸ்புக், வாட்ஸ் அப்களில் கவிதை எழுதுவதைக் கொஞ்சம் நிறுத்திவிட்டு, இதைக் கொஞ்சம் படியுங்கள். கார்/பைக் விஷயங்களில் மழை வெள்ளத்திடம் ஈரத்தை எதிர்பார்க்க முடியாது. சிக்கிவிட்ட உங்கள் வாகனத்தை வெள்ளத்திடம் இருந்து காப்பாற்ற… மழை நேரங்களில் கவனமாக வாகனத்தைச் செலுத்த இதோ சில டிப்ஸ்…


பைக் ஓட்டிகளுக்கு…
 
1. வாகனங்களுக்கு முதல் சிம்ம சொப்பனமே தண்ணீர்தான். அதுவும் சைலன்ஸருக்கும் தண்ணீருக்கும் சுத்தமாக ஆகாது. எனவே, சைலன்ஸர் மூழ்கும் அளவு உள்ள நீர்ப் பகுதிகளில், ‘‘கொஞ்ச தூரம்தானே.. அப்படியே ஓட்டிடலாம்’’ என்று நினைத்தீர்கள் என்றால், இன்ஜினுக்கு கண்டம். அதன் காரணமாகவே இப்போது சைலன்ஸர் உயரமாக உள்ள பைக்குகள் வர ஆரம்பித்துவிட்டன. லேட்டஸ்ட் யமஹா, ஹோண்டா, சுஸூகி பைக்குகளுக்கு எல்லாமே இப்போது சைலன்ஸர் உயரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிதாக பைக் வாங்க இருக்கிறீர்கள் என்றால், அதைக்கூட நீங்கள் பரிசீலிக்கலாம். 

2. மழை வெள்ளத்தில் பார்க்கிங் செய்யப்பட்ட கார்/பைக்குகளை, வெள்ளம் வடிந்தபிறகு, ஸ்டார்ட் செய்யவே கூடாது. முடிந்தால், பெட்ரோலையும் காலி செய்வது சாலச் சிறந்தது. சர்வீஸ் சென்டருக்குக் கொண்டு செல்வதுதான் பெஸ்ட்.

3. மழை நேரங்களில் மட்டுமல்ல; வெயில் நேரங்களிலும் ஸ்பார்க் ப்ளக்கைக் கழற்றிச் சுத்தம் செய்துவிட்டு பொருத்துவது நல்ல பலன் தரும்.

4.ஸ்பார்க் ப்ளக் எக்ஸ்ட்ரா ஒன்றை எப்போதுமே டூல் கிட்டில் வைத்துக்கொள்வது இன்னும் பெஸ்ட். பைக்குகளின் ஸ்பார்க் ப்ளக் விலை 90 முதல் 100 ரூபாய்தான்.

5. செயின் கார்டு உள்ள பைக்குகளில் பிரச்னை இல்லை. நேக்கட் பைக்குகளில் செயின் ஸ்பிராக்கெட்டுகள் ‘கார்டு’ இல்லாமல், ஓப்பனாகவே இருக்கும். இவை ஓரளவு பிசுபிசுப்புத்தன்மையுடன் இருந்தாலும், மழை நேரங்களில் மெக்கானிக்குகள் மூலம் ‘செயின்  ஸ்ப்ரே’ செய்து கொள்வது நல்லது.

6. மழை நேரங்களில் பெட்ரோல் டேங்க்கில் மிகவும் கவனம் தேவை. என்னதான் டேங்க் மூடி நன்றாக கவர் செய்யப்பட்டிருந்தாலும், ஓரம் வழியாக சில சொட்டு நீர்த்துளிகள் பெட்ரோல் டேங்கினுள் கலக்க வாய்ப்புள்ளது. பெட்ரோலில் தண்ணீர் கலந்து விட்டால், ஸ்பார்க் ஏற்படுவதில் பிரச்னை ஏற்பட்டு… வழியில் ஆஃப் ஆகி… (இன்ஜின் ஸ்டாப்) வேறென்ன..? ஸ்டார்ட்டிங் டிரபுள்தான்!


கார் ஓட்டிகளுக்கு…
 
1. பைக்கைவிட, வெள்ளத்தின் பாதிப்பு கார்களுக்குத்தான் அதிகம். இதிலும் சைலன்ஸர்/ஏர் இன்டேக்குக்குள் தண்ணீர் புகாத வரை எல்லாமே ஸ்மூத்தான். வேறு வழியில்லை என்றால், முதல் கியரில் 1,200 முதல் 1,500 ஆர்பிஎம்-முக்குள் குறைவான வேகத்திலேயே மெதுவாகச் சென்று வெளியேறுங்கள். 

2. அதிக தண்ணீருக்குள் இருக்கும்போது கார் ஆஃப் ஆகிவிட்டால், காரை ஸ்டார்ட் செய்யாதீர்கள். இது கனெக்டிங் ராடுகளில் பிரச்னை ஏற்படுத்தி, மிகப் பெரிய செலவுக்குக் கைகாட்டி விடும். தள்ளிச் செல்வதுதான் பெஸ்ட்.

3. வெள்ள நேரங்களில் எங்கெங்கு, எத்தனை அடி பள்ளம் ஏற்படும் என்பது மாநகராட்சியினருக்குக்கூடத் தெரியாது. கார்களில் சென்று சின்னப் பள்ளங்களில் விழுந்தால்கூட, சேதாரம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். வீல்கள் அடிவாங்குவதோடு இன்ஜின் சம்ப், சேஸி, பம்பர் பகுதிகள் நிச்சயம் அடி வாங்கும். 

4. பிரீமியம் கார்களில் பிரச்னை இல்லை; ஹேட்ச்பேக் கார்களில் முன் பக்க விண்ட்ஷீல்டில் என்னதான் வைப்பர் பயன்படுத்தினாலும், மழை நேரங்களில் விசிபிளிட்டி அவ்வளவாக இருக்காது. வெளியே நிறுத்தப்பட்ட காரை எடுக்கும்போது, உடனே வைப்பர் பயன்படுத்துவதால், விண்ட் ஷீல்டுகளில் ஸ்க்ராட்ச்கள் ஏற்படுவதுடன், மழை நேரங்களில் இது மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடும். எனவே, டிஷ்யூ பேப்பர், மைக்ரோ ஃபைபர் துணி அல்லது நல்ல வளவளப்பான நியூஸ் பேப்பரைக் கொண்டு அழுந்தத் துடைத்துவிட்டு வைப்பர் பயன்படுத்துவது பெஸ்ட்.

5. மழை நீர், கார்களில் பெரும்பான்மையாக கை வைப்பது எலெக்ட்ரானிக் பாகங்களில்தான். எனவே, ஜன்னலை மூடிவிட்டு, ஏ.சியை ஆன் செய்யாமல் பயணிப்பதுகூட நல்லதுதான்.

6. எலெக்ட்ரானிக் விஷயங்கள் எவ்வளவு ஆபத்து என்பதற்கு ஓர் உதாரணம்: சென்னை டிராஃபிக்கில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட ஒருவர், காரை ஐடிலிங்கில் விட்டு, ஏ.சியை ஆன் செய்துவிட்டுத் தூங்க ஆரம்பித்து விட்டார். எக்ஸாஸ்ட் வழியாக வெளியேற முடியாத காற்று, உள்ளுக்குள்ளேயே சுழன்று தீப்பிழம்பை ஏற்படுத்த, கார் தீப்பிடித்து உயிரை இழந்திருக்கிறார் ஓர் அப்பாவி.

7. பவர் விண்டோஸ் பட்டனும் எலெக்ட்ரானிக் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், இதிலும் கவனம் தேவை. கார் முழுவதும் மூழ்கிய நிலையில் உள்ளே மாட்டிக் கொண்டால், பின் பக்க விண்ட்ஷீல்டை உடைத்து வெளியே வருவது நல்லது. கண்ணாடியை விட, உயிர் முக்கியம் இல்லையா?

8. மழையில் நிறுத்தப்பட்ட காரை, மறுநாள் ஸ்டார்ட் செய்து உடனே ஆக்ஸிலரேட்டரை மிதித்து, அவசர அவசரமாகக் கிளம்புவதைத் தவிருங்கள். எப்போதுமே காரை ஸ்டார்ட் செய்துவிட்டு, ஐடிலிங்கில் சிறிதுநேரம் வைத்திருந்தபிறகு கிளம்புங்கள். டர்போ சார்ஜர், பெட்ரோல் மிக்ஸிங் என்று எல்லாமே அப்போதுதான் சீராக நடக்கும்.

9. மெக்கானிக் பாகங்களுக்கு ஏதும் பிரச்னை வராதா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஸ்டீயரிங், கியர்பாக்ஸ், கிளட்ச், பிரேக், ஹேண்ட்பிரேக் போன்றவை ஜாம் ஆக வாய்ப்புண்டு. எனவே, கிளம்பும் முன் இவற்றை நன்றாக பரிசோதித்து விட்டுக் கிளம்புவது நல்லது.

10. ரொம்ப முக்கியமான விஷயம் – ஈரமான சாலைகளில் வேகம் வேண்டாமே!

இனி இண்டர்நெட் இல்லாமலே கூகுளிடம் வழி கேட்கலாம்!

இனி இண்டர்நெட் இல்லாமலே கூகுளிடம் வழி கேட்கலாம்!


ஆனால் தங்கு தடையற்ற இணைய இணைப்பு, அதன் வேகம் போன்றவை இடத்துக்கு இடம் மாறுபடுவதால் ‘ஆஃப்லைன் ஃபர்ஸ்ட் மொபைல் டெவெலப்மெண்ட்’ உலகளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கூகுள் தன் மேப்ஸ் சேவையை, மொபைல் இணையத்துடன் இணைக்கப்படாமல் இருக்கும்போதும் பயன்படுத்த ஏதுவாக மாறுதல்கள் செய்துள்ளதாக, கடந்த வாரம் அறிவித்தது. தற்போது ஆன்ட்ராய்ட் பயனர்களுக்கும், கூடிய விரைவில் ஐஃபோன் பயனர்களுக்கும் இச்சேவை கிடைக்கும்.


இதுகுறித்து கூகுள் மேப்ஸ் டைரக்டர் சுரேன் ருஹேலா கூறுகையில், “டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வசதியை தற்போது ஆஃப்லைனிலும் கிடைக்குமாறு செய்துள்ளோம். இதனால் வீட்டிலிருந்து கிளம்பும்போதே குறிப்பிட்ட இடத்தினுடைய மேப்ஸ் டேட்டாவை டவுன்லோட் செய்து கொள்ளலாம். அதோடு அந்த இடத்திலுள்ள முக்கியமான இடங்கள், நேவிகேஷன் டைரக்‌ஷன்கள் போன்றவையும் டவுன்லோட் ஆகிவிடும். பின்னர் ஆஃப்லைனில் மேப்ஸை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன்மூலம் இந்தியர்கள் வெகுவாகப் பயனடைவார்கள் என நம்புகிறோம்” என்றார்.  

உதாரணமாக நீங்கள் திருச்சியிலிருந்து சென்னைக்கு கிளம்புகிறீர்கள். மொபைலில் வீட்டிலுள்ள வைஃபை கனெக்‌ஷனை பயன்படுத்துகிறீர்கள் என்றால், சென்னையில் நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை ‘search’ பாரில் தேடி ‘டவுன்லோட்’டை க்ளிக் செய்து தரவிறக்கிக் கொள்ளலாம். மாற்றாக மேப்ஸ் மெனுவில்  ’Offline Areas’க்கு சென்று ’+’ பட்டனை க்ளிக் செய்தும் டவுன்லோட் செய்துகொள்ளலாம். பின்னர் சென்னையில் இணைய வசதி இல்லாமலே மேப்ஸ் உங்களுக்கு வழிகாட்டும். 

அதுமட்டுமல்லாது ஆன்லைனில் இருக்கும்போது குறிப்பிட்ட இடத்தில் நிலவும் லைவ் ட்ராபிக் பற்றியும் தெரிந்துகொள்ளலாம். மொபைல், வைஃபையோடு இணைக்கப்பட்டிருக்கும்போது தானாகவே மேப்ஸ் அப்டேட் செய்து கொள்ளும்.

Nov 9, 2015

2017ல் விமானங்களின் மூலம் டோர் டெலிவரி :


ஏற்கனவே கூகுள் அதன் பலூன் சேவையின் மூலம் உலகளாவிய முறையில் அனைவருக்கும் வை-பை கிடைக்கும் வழியினை அறிமுகப்படுத்தும் முயற்சியில் மூழ்கிக்கொண்டு வருகிறது. தற்போது கூகுள் அதன் விமானக வழி டோர் டெலிவரி அமைப்பை 2017க்குள் கொண்டுவரும் முயற்சியில் உள்ளது.இதன்மூலமாக இந்த ஆளில்லா விமானத்தின் உதவி கொண்டு இணையத்தில் ஆர்டர் செய்யும் பொருள்களை 30 நிமிடங்களில் பயனர்களின் கைக்கு கொண்டு சேர்க்கும் அம்சத்தை தர உள்ளது. இந்த ஆளில்லா விமானம் உள்நாட்டிலயே கூகுளால் உருவாக்கபட்டது.கூகுளின் இந்த விங் திட்டம் முதன் முதலாக டோர் டெலிவரியை அதிகாரப்பூர்வமாக விண்ணில் செலுத்திய முதல் நிறுவனமாகும். “இந்த திட்டத்தின் மூலம் 2017 ல் வணிக வர்த்தகத்தை ஒரு படி முன்னேற்றி கொண்டுபோவதே எங்கள் குறிக்கோள்” என இத்திட்டத்தின் தலைவர் திரு.டேவிட் கூறியுள்ளார்.

Google -ன் ட்ரோன் விநியோக திட்டத்தை நாம் கேள்விப்படுவது இது புதிதாக இருக்காது ஏற்கனவே 2014-இல் இதைப்பற்றிய அறிவிப்பை கூகுள் அறிவித்திருந்தது. அதன் ஆரம்ப வேலையாக சொந்தமாக விமானம் கட்டப்பட்டு அதன் சோதனை ஓட்டம் பார்க்கப்பட்டது.கூகுளின் இந்த சேவை எங்கெங்கு இருக்கபோகிறது ? எந்த மாதிரியான தயாரிப்புகளை வழங்க உள்ளன போன்ற தகவல்களை பற்றி எதுவும் கூறவில்லை.

BBC யிலிருந்து வந்த அறிக்கையின் படி கூகுளின் ஆளில்லா விமானம் 2.3Kg பொருள்களை 30நிமிடங்களில் கொண்டு வந்து சேர்க்கும் என கூறியுள்ளனர்.கூகுளின் திட்டத்திற்கு பச்சைக் கொடி பெற்று விட்டால் அடுத்த கட்டமாக அமேசான் , அலிபாபா போன்ற வணிக தளங்களும் இத்திட்டத்தை மேற்கொள்ளும் .இத்திட்டத்தால் கடற்கரை மற்றும் மலைப் பகுதிகளிடையே வசிக்கும் மக்கள் தாங்கள் ஆர்டர் செய்த உடனே அரை மணி நேரத்திற்குள் வீட்டு வாசலுக்கு வந்த ஆர்டர் செய்த பொருள்களை பெரும் அதிசயத்தை நுகரலாம். இதனால் அவசர கால மருத்துவ விநியோகம் போன்றவற்றிற்கு பயனுள்ளதாக அமையலாம் .2017இல் ஆளில்லா விமானத்தைக் கொண்டு மின்னணு விநியோகம் ஒரு முன்னேற்றத்தினை காணும் என நம்பலாம்.

​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Frameworkகள்

​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Frameworkகள்உலகில் உள்ள இணையதளங்களில் 82% தளங்கள் PHP நிரல் மொழியில் தான் எழுதப்பட்டுள்ளன. C நிரல் மொழி தெரிந்த எவரும் PHP கற்றுக் கொள்ளலாம்.

MVC Framework என்றால் என்ன?

Model – View – Controller எனும் வகையில் ஒரு நிரல் மொழியில் எழுதப்படும் நிரல்களை ஒரு குறிப்பிட்ட வரையரைப் படுத்தி எழுதுவது MVC Framework எனப்படும்.உங்கள் PHP நிரலில் உள்ள Design சம்பந்தப்பட்ட நிரல்களை தனியாக View எனும் பகுதியிலும், Database சம்பந்தப்பட்ட வரையறைகளை Model எனும் பகுதியிலும், Features சம்பந்தப்பட்ட நிரல்களை Controller எனும் பகுதியிலும் தனித் தனியாக எழுத வைக்கும் நிரல் முறை ஆகும்.

இதனால், எதிர்காலத்தில் உங்கள் இணைய தளத்தின் டிசைன்ஐ மட்டும் மாற்ற வேண்டும் என நினைத்தால் எளிதில் View பகுதியில் உள்ள நிரலை மட்டும் மாற்றினால் போதும்.பொதுவாக MVC Frameworkகளின் மூல நிரலில், இணையத்தில் வரும் XSSபோன்ற தாக்குதல்களை தடுக்கும் வகையில் பாதுகாப்பு நிரல் தானாகவே எழுதப்பட்டு இருக்கும். நீங்கள் தனியாக Input Condition Checking, XSS filtering, SQL injection prevention நிரல்களை ஒவ்வொரு முறையும் எழுதத் தேவையில்லை.

சுருக்கமாகச் சொன்னால், நேரடியாக PHPயில் எழுதுவது என்பது வடிவேலுவிடம் லொசக், மோசக், பசக் என கராத்தே கற்பது, MVC Frameworkஇல் எழுதுவது என்பது ஜாக்கி ஜானிடம் சம்மர் கோச்சிங்கில் கராத்தே கற்பது போன்றதாகும். டெக் தமிழ் தலத்தில் PHP கற்றவர் எவரும் எளிதாக எந்த ஒரு MVC PHP Frameworkஐயும் கற்கலாம்.
  1. Yii –  – அதி வேகமான PHP MVC Framework, Blaze நிறுவனத்தில் அதிக நிரல்கள் இதில் எழுதுவோம்.
  2. CakePHP – – நாங்கள் அதிகமாக இதிலும் இணைய தளம் எழுதுவோம்.
  3. Zend – – ​PHP​ மூல நிரலையே Zend தான் நிர்வகிக்கிறார்கள்.. ​
  4. ​Symfony – –  நல்ல எளிமையான Framework
  5. CodeIgniter – –  அதிக PHP நிரலாளர்கள் இதில் எழுதுகிறார்கள்.
  6. Slim – –  இது பற்றி எனக்கு தெரியாது
  7. Phalcon – – இது பற்றி எனக்கு தெரியாது
  8. Kohana – – இது பற்றி எனக்கு தெரியாது
  9. Laravel ​​ –  இதுவும் தரமான Framework​
  10. PHP Mini