Jun 29, 2016

மைக்ரோசாப்ட் வாங்கிய ‘லிங்க்ட் இன்’ – ஏன்? எதற்காக?


ஜூன் 13 அன்று, மைக்ரோசாப்ட் நிறுவனம், சமூக வலைத்தளம் நடத்தி வரும் ‘லிங்க்ட் இன்’ (LinkdIn) நிறுவனத்தை 2,620 கோடி டாலர் கொடுத்து வாங்கியுள்ளதாக அறிவிப்பு தந்தது பலருக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது. ‘லிங்க்ட் இன்’ நிறுவனத்தின் பங்கு ஒன்றுக்கு 156 டாலர் செலுத்தி, இந்நிறுவனத்தை மைக்ரோசாப்ட் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிறுவனம் முழுமையாகக் கை மாறுவது, இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேறும். 

வர்த்தகத்தில் ஈடுபடும் வல்லுநர்கள் குறித்த டேட்டாவினை, இந்த இரண்டு நிறுவனங்களும் பெற்று வந்தன. ஒருவரின் டேட்டா வட்டம் மற்றதன் வட்டத்தில் குறுக்கிடாமல் இருந்து வருகிறது. ஏனென்றால், தனித்தனியான அடிப்படையில் இவை இயங்கின. இப்போது ‘லிங்க்ட் இன்’ டேட்டா வட்டம், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைவதால், மைக்ரோசாப்ட் தான் கொண்டுள்ள தொழில் வல்லுநர்களின் வட்டத்தைப் பெருக்கிக் கொள்ளும் நிகழ்வு ஏற்பட இருக்கிறது. 

 மைக்ரோசாப்ட் வலைப்பின்னலில், நபர் தொடர்புகள், தகவல்கள், செய்திகள், காலண்டர் பதிவுகள் மற்றும் ஆவணங்கள் என இடம் பெற்றுள்ளன. ‘லிங்க்ட் இன்’ வலைப் பின்னலில், வேலைகள், பணியாளர்கள், வல்லுநர்கள், கற்றுக் கொள்ளுதல், ஒரே வகையான பணி செய்பவர்கள், எதிர்பார்ப்புகள், வேலைக்கு சரியான நபர் தேடி எடுத்தல், பணிக்கு அமர்த்துதல் என இடம் பெற்றுள்ளன. இந்த இரண்டு வலைப்பின்னலும் இனி மைக்ரோசாப்ட் வசம் வரும். இதனால், பொதுவான தொழில் வள வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்கும். உற்பத்தி திறனும் வர்த்தக வாய்ப்புகளும் இணைந்து இந்த வாய்ப்புகளை அதிகரிக்கும்.

‘லிங்க்ட்இன்’ தன் வருமானத்தை உயர்த்த வழி தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த வர்த்தக வணிகம் தேவையா? எனப் பலரும் கருதுகின்றனர். சென்ற 2011 ஆம் ஆண்டில் ஸ்கைப் நிறுவனத்தை வாங்கிய தொகையைப் போல மூன்று மடங்கு தொகை தற்போது செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், பலர் மைக்ரோசாப்ட் எதிர்காலத்திற்கான திட்டங்கள் இன்றி இதனை வாங்கியிருக்காது என்று கருத்து தெரிவித்துள்ளனர். இதன் வழியாக, மைக்ரோசாப்ட் புதிய சகாப்தம் ஒன்றைப் படைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். 

‘லிங்க்ட் இன்’ சமூக வலைத்தளம் 2002ல் வடிவமைக்கப்பட்டு, தன் செயல்பாட்டினை 2003ல் தொடங்கியது. இதன் அடிப்படை இலக்கு, வல்லுநர்களை இணைப்பதுதான். இதன் மூலம், திறமை உள்ளவர்கள் ஒவ்வொருவரும் இணைந்து கொள்ள முடிகிறது. தங்கள் திறமையைப் பிறருக்கு அளித்து வர்த்தக வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ளலாம். தங்களுக்கு வேண்டிய திறன்களையும் பிறரிடமிருந்து பெற்றுக் கொண்டு பயன்படுத்தலாம். ஒருவருக்கொருவர் பரிந்துரையின் பேரில் வேலை வாய்ப்புகளைப் பெறலாம். சென்ற மார்ச் இறுதியில், 43.3 கோடி உறுப்பினர்கள் இதில் உள்ளனர். இவர்களில், 10.6 கோடி பேர் தொடர்ந்து இயங்கி வருகின்றனர். 

இதில் பதிந்து இயங்குபவர்கள், தங்களுக்குள் குழுக்களை அமைத்துக் கொண்டும் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம். பெரும்பாலும் வேலை வாய்ப்பு தேடும் குழுக்களாக இவை இருந்தாலும், கல்வி மற்றும் ஆய்விற்கெனப் பல பயனுள்ள குழுக்களும் இயங்கி வருகின்றன. ஏறத்தாழ ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குழுக்கள் உள்ளன. வீணான தகவல்களைப் பிறர் விரும்பாமல் அனுப்பும் ஸ்பேம் வகைத் தகவல்களும் இக்குழுக்களில் இடம் பெறுகின்றன.

அமெரிக்காவில் தன் தலைமை இடத்தைக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம், உலகின் 24 மொழிகளில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இதற்கு அலுவலகம் ஒன்று இயங்கி வருகிறது. மொத்தத்தில், இந்த நிறுவனத்தில் ஏறத்தாழ 9,500 அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மைக்ரோசாப்ட் தற்போது, தன் போட்டி நிறுவனமான, ஆப்பிள் நிறுவனத்தின் இயக்க முறைமைகளுக்குப் (ஐபோன் மற்றும் ஐ.ஓ.எஸ்.) போட்டியாக எதனையும் வடிவமைக்க முயற்சி எடுக்கப் போவதில்லை. அதற்குப் பதிலாக, 43.3 கோடி உறுப்பினர்கள் இயங்கும் இந்த சமூக வலைத்தளத்தை வாங்கியுள்ளது. உலக அளவிலான வல்லுநர்கள், பயனாளர்களுடன் மைக்ரோசாப்ட் தொடர்பு கொள்ளும் முயற்சியே இது. உலகில் ஒவ்வொரு நபரையும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைக்க இது போன்ற சமூக தளங்கள் அவசியம் என மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாகி சத்ய நாதெள்ளா கருதுகிறார். அவ்வாறு கொண்டு வருவதன் மூலம், அவர்களை மேலும் ஆக்கபூர்வமான வழிகளில், மைக்ரோசாப்ட் செலுத்த முடியும் எனத் திட்டமிடுகிறார். 

அவுட்லுக், ஆபீஸ் 365 மற்றும் மைக்ரோசாப்ட் எக்சேஞ் ஆகியவற்றை “லிங்க்ட் இன்” தளம் கொண்டிருக்கின்ற பெரிய அளவிலான டேட்டா நெட்வொர்க்குடன் இணைத்து இந்த இலக்கை அடைய சத்ய நாதெள்ளா திட்டமிடுகிறார். இந்த இணைப்பின் மூலம், இவர்களுக்கு தொழில் நுட்பத்தினையும், சேவையையும் எளிதாக வழங்க முடியும். அதன் வழியாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் சமூக அளவில் ஒரு நல்ல பலம் கொண்ட சக்தியாக மாறும். இந்த இணைப்பில் வரும் தொழில் வல்லுநர்கள், ஒருவருக்கொருவர் தங்களின் திறமையைப் பகிர்ந்து கொள்ள முடியும். 

இது அவர்களின் திறனை முழுமைப்படுத்தி, வர்த்தக வாய்ப்புகளை வளம் நிறைந்ததாக மாற்ற முடியும். மைக்ரோசாப்ட் உலகின் முதல் நிலை நிறுவனமாக இருந்தாலும், பெரிய அளவில் இதற்கு சமூக இணைப்பு இல்லை. இந்தக் குறையை ‘லிங்க்ட் இன்’ தீர்க்கும். புதிதாக, 43.3 கோடி பேர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆதரவைப் பெறுகின்றனர். இதனால், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இன்னொரு சமூகப் பரிமாணம் உறுதியாகும்.

கூகுள் தேடலில் சில வழிகள்

கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும், நாம் கூகுள் தேடல் சாதனத்தைப் பயன்படுத்தாமல் இருப்பதில்லை. இணையத்தில் நமக்கு வேண்டிய தகவல்களைத் தேடிப் பெறுவதில், கூகுள் நமக்கு பெரும் உதவி செய்கிறது. இந்தத் தேடலை இன்னும் விரைவாக மேற்கொள்ள கூகுள் சில குறுக்கு வழிகளை நமக்குத் தந்துள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

1. இணைய தளம் கட்டளை (The site: command): இந்த ஆப்பரேட்டர் மூலம், நாம் நமக்குத் தேவையான தகவல்களை, ஒரே ஒரு தளத்தில் மட்டும் தேடும்படி செய்திடலாம். எடுத்துக் காட்டாக, தினமலர் இணைய தளத்தில் மட்டும் Bluetooth என்ற சொல்லைத் தேடுவதாக இருந்தால், bluetooth site http://www.dinamalar.in எனக் கொடுக்க வேண்டும். இந்த கட்டளையானது, தினமலர் இணைய தளத்தில் மட்டும், Bluetooth என்ற சொல் உள்ள பக்கங்களைத் தேடித்தருமாறு கேட்கிறோம். இதனால், மற்ற இணையதளங்களில் இந்த சொல் பயன்பாடு உள்ளதா என்ற தேடல் மேற்கொள்ளப்பட மாட்டாது.

2. குறிப்பிட்ட வகை தளங்களில் மட்டும் தேடல் (inurl:command): இந்த ஆப்பரேட்டர் கட்டளை மூலம், நாம் தேடிப் பெற விரும்பும் தேடலை, குறிப்பிட்ட வகை தளங்களில் மட்டும் தேடும்படி அமைக்கிறோம். எடுத்துக் காட்டாக computer resources என்ற சொற்கள் சார்ந்த தகவல்களை, கல்விக்கென உள்ள தளங்களில் மட்டும் தேடிப் பெற வேண்டும் என விரும்பினால், computer resources inurl:edu என்று கொடுக்க வேண்டும்.

3. விளக்கம் வேண்டும் தேடல் (define: “word”): தேடல் கட்டத்திலேயே நாம் சிலவற்றிற்கான விளக்கம் மற்றும் விரிவான குறிப்புகளைத் தேடிப் பெறலாம். ஒரு சொல் துல்லியமாக என்ன பொருளைக் கொண்டுள்ளது என்று நீங்கள் தெரிந்து கொள்ள இந்தக் கட்டளையைப் பயன்படுத்தலாம். எடுத்துக் காட்டாக, super computer என்பதற்கான விளக்கம் தேவை எனில், define: super computer என்ற கட்டளையைக் கொடுக்கலாம்.

4. குறிப்பிட்ட சொல் உள்ள டெக்ஸ்ட் பக்கம் மட்டும் தேடிப் பெற (intext command): இந்த ஆப்பரேட்டர் கட்டளை மூலம், ஒரு குறிப்பிட்ட பொருள் குறித்துத் தேடுகையில், குறிப்பிட்ட சொல் பயன்படுத்தப் பட்டுள்ள இணையப் பக்கங்களை மட்டும் தேடிக் காட்டச் செய்கிறது. எடுத்துக் காட்டாக, soup recipes என்பது குறித்த தகவல்களைத் தேடிப் பெறுகையில், நமக்கு ‘chicken’ என்ற சொல் பயன்படுத்தப்படும் தளங்கள் மட்டும் தேடிப் பெற, soup recipes intext:chicken என்று கட்டளை கொடுக்க வேண்டும். கூகுள், chicken என்ற சொல் உள்ள, soup recipes குறித்த இணையப் பக்கங்களை மட்டும் காட்டும்.

5. ”convert’ கட்டளை: இது ஒரு ஆப்பரேட்டர் இல்லை; டூல் என்று சொல்லலாம். இது பன்னாட்டு பண மதிப்பைக் கையாள்கிறது. இந்திய ரூபாய் மதிப்பிற்கு அமெரிக்க டாலர் எவ்வளவு? என்ற வினாவிற்கு, அன்றைய பன்னாட்டளவிலான மதிப்பில் டாலர் மதிப்பைக் காட்டும். இதே போல எந்த நாட்டு கரன்சிக்கும் பெறலாம். எடுத்துக் காட்டாக, convert 100 INR to usd என்ற கட்டளைக்கு ரூ.100க்கு இணையான அமெரிக்க டாலர் எவ்வளவு என்று காட்டப்படும்.

மேலே காட்டப்பட்டுள்ள குறுக்கு வழிகள், நம் தேடலை விரைவாகவும் எளிதாகவும் மேற்கொள்ள வழி தருகின்றன. இதே போல பல குறுக்கு வழிகள் உள்ளன. இவற்றை அறிந்து நாம் தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.

தோற்றவர்களின் கதை – வால்ட் டிஸ்னி

தோற்றவர்களின் கதை – வால்ட் டிஸ்னி

தோல்விகளே மிகச் சிறந்த பரிசுகள்!
வால்ட் டிஸ்னியின் சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.  மிக்கி மவுஸ், டொனால்ட் டக் போன்ற அற்புதமான கார்ட்டூன் கதாபாத்திரங்களை உருவாக்கிய மகத்தான கலைஞர். டிஸ்னி லேன்ட் கேளிக்கைப் பூங்காக்களின் ஸ்தாபகர். வால்ட் டிஸ்னி கம்பெனியின் நிறுவனர்.
 
இந்தச் சாதனைகளின் பின் உள்ள கொடுமையான சோதனைகள் பற்றிப் பெரும் பாலானவர்களுக்குத் தெரியாது. 

தோல்விகளின் வலி மிகுந்த தனது வாழ்க்கைப் பயணம் வெற்றிகரமானதாகத் தோற்றமளிப்பது பற்றி வால்ட் டிஸ்னி இப்படிக் குறிப்பிட்டார். 

“நான் தொட்ட காரியமெல்லாம் வெற்றி பெறுவதாகவும், நான் எடுக்கும் முடிவுகள் அபூர் வமாகவே தோற்பதாகவும் சிலர் நினைக்கிறார்கள். உண்மையில் நான் எடுத்தத் தவறான முடிவுகளால் பல முறை படுதோல்வி அடைந்திருக்கிறேன். எனினும், நான் அடுத்தடுத்து முயற்சி செய்து கொண்டே  இருப்பதால், தவறுகள் வெளியில் தெரியாதபடி அதிலிருந்து வேகமாக மீண்டு வந்திருக்கிறேன். என்னைப்போல நீங்களும் அடுத்தடுத்த ஏராளமான முயற்சிகளை எடுக்கக் கற்றுக்கொண்டால் உங்களுக்கும் சராசரி வெற்றி அதிகமாகவே இருக்கும்.”  


அமெரிக்காவில் சிக்காகோ நகரில் 1901-ம் ஆண்டு பிறந்தார் வால்ட் டிஸ்னி. வறுமையான பின்னணியால் அவரது தந்தை எலியாஸ் சார்லஸ் டிஸ்னி, தனது கோபத்தை எல்லாம் குழந்தைகள் மீது காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தந்தையின் துன்புறுத்தல் பொறுக்காமல் வால்ட் டிஸ்னியின் அண்ணன்மார்கள் மூவர் ஊரைவிட்டே ஓடிவிட்டனர். சிரமங்களைச் சகித்துக்கொண்டு பள்ளி சென்றுவந்தார் வால்ட் டிஸ்னி. 

டிஸ்னி குடும்பம் கான்சாஸ் நகருக்கு இடம்பெயர்ந்தது. வால்ட் டிஸ்னியின் தந்தை 1911-ம் ஆண்டில் செய்தித்தாள் விநியோக ஏஜென்சி எடுத்தார். அதில், தனது 10 வயதிலேயே பேப்பர் விநியோகிக்கும் கடுமையான வேலையில் வால்ட் டிஸ்னி ஈடுபட்டார். இதன்மூலம் வால்ட் டிஸ்னிக்கு கிடைத்த சொற்ப வருமானத்தையும் அவரது அப்பா பறித்துச் சென்றுவிடுவார். இருந்தாலும், தனது வருமானத்தில் ஒருபகுதியை மறைத்துவைத்து சேமித்தார்.   

1917-ல் டிஸ்னி குடும்பம் மீண்டும் சிக்காகோவுக்கு இடம்பெயர்ந்தது. மெக்கின்லி பள்ளியில் சேர்ந்த வால்ட் டிஸ்னி, சிக்காகோ நுண்கலை அகாடமியில் இரவுநேரப் படிப்பில் சேர்ந்தார். பிற்காலத்தில் அவரது சாதனைப் பயணத்துக்கான படைப்பாற்றல் பயிற்சி அங்கே கிடைத்தது. 

1918-ல், முதல் உலகப்போரின்போது ராணுவ வீரராகச் சேர்ந்து போரிட விரும்பிய வால்ட் டிஸ்னியால் அதில் சேர முடியவில்லை. எனினும், செஞ்சிலுவைச் சங்கத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராகச் சேர்க்கப்பட்டு, பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கே அவரது ஆம்புலன்ஸ் மிகவும் பிரபலமாகியது. காரணம், அதன் வெளிப்புறத்தில் அற்புதமான கார்ட்டூன் சித்திரத்தை வரைந்துவைத்திருந்தார் வால்ட் டிஸ்னி.

செஞ்சிலுவைச் சங்கப் பணி முடிந்து ஊருக்குத் திரும்பிய வால்ட் டிஸ்னி, சிபாரிசுகளைப் பிடித்து கன்சாஸ் பத்திரிகை ஒன்றில் கார்ட்டூன் உதவியாளர் பணியில் சேர்ந்துவிட்டார். ஆனால், அவரது மகிழ்ச்சி நீடிக்கவில்லை. அவருக்கு அரசியல் சமூக கோபம் போதிய அளவில் இல்லை என்றும், அதனால் பத்திரிகை கார்ட்டூனிஸ்ட் வேலைக்கு அவர் ஒத்துவரமாட்டார் என்றும் விமர்சிக்கப்பட்டு, வேலையில் இருந்து சில மாதங்களில் வெளியேற்றப் பட்டார் வால்ட் டிஸ்னி.  


பின்னர், பேஸ்மன் ரூபின் ஆர்ட் ஸ்டுடியோவுக்கான எடுபிடி வேலைகள் செய்யும் பணி கிடைத்தது. அங்கேயும் கிறிஸ்துமஸ் சீசன் வியாபாரம் முடிந்தவுடன் துரத்திவிட்டர்கள்.

அந்த ஸ்டுடியோவில் வேலைபார்த்த ஐவர்க்ஸ் என்ற கார்ட்டூனிஸ்ட் வால்ட் டிஸ்னியின் நண்பரானார். இருவரும் சேர்ந்து ஐவர்க்ஸ் – டிஸ்னி வரைகலை நிறுவனத்தைத் தொடங்கினார்கள். ஆரம்பத்தில் ஒருசில வாடிக்கையாளர்கள் கிடைத்தபோதும் போதிய வருவாய் ஈட்டமுடியவில்லை. 

சுயதொழில் முயற்சியை அப்படியே கைவிட்டுவிட்டு, கான்சாஸ் சிட்டி சினிமா விளம்பர நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தனர். அந்த நிறுவனம் கட்-அவுட் முறை அனிமேஷன் என்ற பழைய தொழில்நுட்பத்தில் விளம்பரப் படங்களைத் தயாரித்து வந்தது. ‘‘செல்லுலாய்டு அனிமேஷன் என்ற புதிய தொழில்நுட்பத்தில் விளம்பரப் படங்களைத் தயாரிப்பது சிறந்தது’’ என்று வால்ட் டிஸ்னி எடுத்துச் சொன்னார். அந்த விளம்பர நிறுவனம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே அங்கிருந்தும் வெளியேறினார் வால்ட் டிஸ்னி. 

வீட்டிலேயே செல்லுலாய்டு அனிமேஷன் தொழில்நுட்பம் குறித்து பயிற்சிசெய்த அவர், ஹர்மன் என்ற நண்பருடன் இணைந்து சிறிய அனிமேஷன் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். ஈசாப் குட்டிக் கதைகள் பாணியில் “Newman’s Laugh-O-Grams” என்ற அனிமேஷன் தொடரை வால்ட் டிஸ்னி உருவாக்கினார். 

இந்தத் தொடருக்குக் கிடைத்த வரவேற்பால் உற்சாகமான வால்ட் டிஸ்னி, 1921-ம் ஆண்டில் Laugh-O-Gram ஸ்டுடியோவைத் தொடங்கினார். பிரபலமான அலைஸ் இன் வொண்டெர்லேண்ட் கதையை அனிமேஷன் படமாகத் தயாரித்தார். 12 நிமிட அனிமேஷன் படத்தைத் தயாரித்து முடிப்பதற்குள் பெரும் நிதிநெருக்கடிகளைச் சந்தித்த அந்த ஸ்டுடியோ நிறுவனம், 1923-ம் ஆண்டில் திவாலானது. பெரும் அவமானத்துடன் அந்த ஸ்டுடியோ முயற்சியைக் கைவிட நேர்ந்தது.

வேறு வழியின்றி லாஸ் ஏஞ்செல்ஸ் நகருக்குக் குடிபெயர்ந்தார் வால்ட் டிஸ்னி. தான் தயாரித்த அலைஸ் இன் வொண்டெர்லேண்ட் அனிமேஷன் படத்தை விற்பனை செய்திட அவர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இறுதியில் நியூயார்க் பட விநியோகஸ்தர் மார்கரெட் வின்க்லெர் என்பவர் வால்ட் டிஸ்னியின் அனிமேஷன் படங்களை விநியோகிக்க முன்வந்தார். 

1923-ம் ஆண்டு அக்டோபரில், வால்ட் டிஸ்னியும் அவரது அண்ணன் ராய் டிஸ்னியும் இணைந்து வால்ட் டிஸ்னி கம்பெனியை ஹாலிவுட்டில் தொடங்கினார்கள். இதனை பழைய நண்பர்களுடன் ஒரு வலிமையான அனிமேஷன் பட நிறுவனமாக வளர்க்கத் தொடங்கினார் வால்ட் டிஸ்னி. 

அலைஸ் இன் வொண்டெர்லேண்ட் அனிமேஷன் தொடருக்கான பணிகள் 1927 வரை தொடர்ந்தன. அதில் சலிப்படைந்த வால்ட் டிஸ்னி, தனது நண்பர் ஐவர்க்ஸுடன் இணைந்து Oswald the Lucky Rabbit என்ற கார்ட்டூன் கதாபாத்திரத்தை உருவாக்கினார். இந்தத் தொடரினால் அதிக லாபம் பெற்ற பட விநியோக நிறுவனமான மின்ட்ஸ், உரிய பங்கினை டிஸ்னிக்குத் தர மறுத்தது. Oswald கதாபாத்திர உரிமை தன்னிடமே இருப்பதாக மிரட்டியது. டிஸ்னி நிறுவன ஊழியர்களை வெளியேறச் செய்து, தானே தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதில், அவர்களைப் பணிக்கு அமர்த்தி டிஸ்னிக்கு நெருக்கடி கொடுத்தது. 


நெருக்கடிகளைச் சந்தித்துப் பழகிப்போன வால்ட் டிஸ்னி, விநியோக நிறுவனத்தின் மிரட்டல்களுக்குப் பணிய மறுத்துவிட்டார். வால்ட் டிஸ்னியின் நெருங்கிய நண்பரான ஐவர்க்ஸ் தவிர, பல மூத்த கலைஞர்கள் டிஸ்னியில் இருந்து வெளியேறிவிட்டனர். 

தனது நண்பர் ஐவர்க்ஸுடன் இணைந்து ‘மிக்கி மவுஸ்’ என்ற அட்டகாசமான கதாபாத்திரத்தை 1928-ம் ஆண்டு உருவாக்கினார் வால்ட் டிஸ்னி. முன்னர் திவாலாகிப்போன Laugh-O-Gram ஸ்டுடியோவில், தான் இரவுபகலாக உழைத்தபோது தன்னோடு விளையாடிய ஒரு செல்லமான எலியை மனதில்கொண்டே இந்தக் கதாபாத்திரத்தை வால்ட் டிஸ்னி உருவாக்கினார். 

மிக்கி மவுஸ் கதாபாத்திரத்தின் முதல் அனிமேஷன் படம் முடிவுற்றபோதும் உரிய விநியோகஸ்தர் கிடைக்கவில்லை. ஒருவழியாக, பவர்ஸ் சினபோன் என்ற விநியோக நிறுவனத்துடன் ஒப்பந்தம்போட்டு மிக்கி மவுஸ் படம் வெளியானது. படம் வெற்றிபெற்று, விநியோக நிறுவனம் லாபம் குவித்தது. லாபத்தில் உரிய பங்குத் தொகையை வழங்குமாறு டிஸ்னி நிறுவனம் கேட்டபோது, அதற்கு மறுப்புத் தெரிவித்த விநியோக நிறுவனம், வால்ட் டிஸ்னியின் நெருங்கிய நண்பர் ஐவர்க்ஸுக்கு ஆசைகாட்டி அவரை டிஸ்னி நிறுவனத்திலிருந்து வெளியேறச் செய்து, அவரோடு திருட்டுத்தனமாக ஒப்பந்தம் போட்டுக்கொண்டது. 

இப்படி அடுத்தடுத்த ஏமாற்றங்களைச் சந்தித்த வால்ட் டிஸ்னிக்கு நரம்புத் தளர்வு ஏற்பட்டது. நீண்ட விடுமுறை எடுத்துக்கொண்டு, கியூபா, பனாமா நாடுகளுக்குச் சென்றுவந்து தனது மனதைத் தேற்றிக்கொண்டார் வால்ட் டிஸ்னி. 

புதுத் தெம்புடன் வந்த வால்ட் டிஸ்னி, கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனத்துடன் விநியோக ஒப்பந்தம் செய்துகொண்டார். இதனைத் தொடர்ந்து மிக்கி மவுஸ் படங்கள் உலக அளவில் பிரபலமாகின. விருதுகள் தேடிவந்தன. அது, அனிமேஷன் படங்களின் பொற்காலமாக மாறியது. வால்ட் டிஸ்னிக்குப் பல வெற்றிகளைத் தந்தது.  

1939-ம் ஆண்டில் இரண்டாம் உலகப்போர் தொடங்கியபோது, ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் டிஸ்னி படங்களுக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. செலவுகள் மிக அதிகமாகிவிட்டதால், டிஸ்னி நிறுவனம் கடனில் தத்தளித்தது. கடனைச் சமாளிக்க டிஸ்னி நிறுவனம் பொதுப் பங்குகளை வெளியிட்டது. இருப்பினும் நிதிச் சிக்கல்கள் தீரவில்லை. வேறு வழியின்றி தொழிலாளர்களின் ஊதியத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளை டிஸ்னி நிறுவனம் மேற்கொண்டபோது அதற்குப் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. டிஸ்னி நிறுவனத்துக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன. 
 
1944-ம் ஆண்டில் அமெரிக்க வங்கியில் டிஸ்னி நிறுவனத்தின் கடன் தொகை 40 லட்சம் டாலராக இருந்தது. பெரும் உழைப்புடன் உருவாக்கப்பட்ட அனிமேஷன் படங்கள் சில, எதிர்பாராதத் தோல்வியைத் தழுவின. தோல்வி மேல் தோல்விகள். கடன் கொடுத்தவர்கள் துரத்திவந்து நெருக்கடி கொடுத்தார்கள்.  

கலங்கவில்லை  வால்ட் டிஸ்னி.   பின்வாங்குவதற்குப் பதிலாக விரிவாக்கம் பற்றிச் சிந்தித்தார். பொதுமக்கள் விடுமுறைகளைக் குதூகலமாகச் செலவிடுவதற்கான டிஸ்னி லேன்ட் கேளிக்கைப் பூங்காவை பிரமாண்டமாக உருவாக்கத் திட்டமிட்டார். இதற்கு நிதி வழங்க  வங்கிகள் மறுத்துவிட்டன. இந்தநிலையில், அப்போது தொலைக்காட்சியில் பிரபலமாகிவந்த டிஸ்னி லேன்ட் என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியைத் தொடங்கி, அதன்மூலமாக பெரும் நிதி திரட்டினார். 

கேளிக்கைப் பூங்காவை முதலில் ஆதரிக்காத மக்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமாக ஈர்க்கப்பட்டு தேடிவரத் தொடங்கினர். கூட்டம் குவிந்தது. இதுவரை சுமார் 70 கோடி மக்கள் அந்தப் பூங்காவைப் பார்வையிட்டுள்ளனர். உலகின் 14 இடங்களில் கிளைகள் விரிந்தன. தோல்விகளைப் படிக்கட்டுகளாக மாற்றி முன்னேறுவதில் வல்லவரான வால்ட் டிஸ்னி 1966-ம் ஆண்டில், அவரது 65-வது வயதில் புற்றுநோயால் மரணமடைந்தார். எனினும், அவர் உருவாக்கிய டிஸ்னி நிறுவனம் ஆலமரமாய் தழைத்தோங்கியபடி இருக்கிறது. அதன் ஆண்டு வருமானம் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் என்பதே வால்ட் டிஸ்னி விதைத்த நம்பிக்கை விதைகளின் வலிமையைப் பறைசாற்றுகிறது. 

மாபெரும் கனவுத் திட்டங்களை நனவாக்கிய நம்பிக்கை  நாயகன் வால்ட் டிஸ்னி  இளைஞர்களுக்குக் கூறும் அனுபவப் பாடம் இதுதான்: 

‘‘தோல்விகளே மிகச் சிறந்த பரிசுகள். நீங்கள் தோல்வி அடையும்போது அதன் அருமை உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். உங்களைக் கீழே வீழ்த்தும் தோல்விதான், இந்த உலகம் உங்களுக்குத் தரும் மிகச் சிறந்த பரிசு என்பதை பின்னர் நீங்கள் உணர்வீர்கள்.’’ 

சுசி திருஞானம்
நன்றி – விகடன்

Jun 27, 2016

கோல்டன் ஹவர்

உயிர் காக்கும் நிமிடங்கள்

 
“கொஞ்சம் முன்னாடி வந்திருக்கலாமே… 10 நிமிஷத்துக்கு முன்னாடி கூட்டிட்டு வந்திருந்தா, உயிரைக் காப்பாத்தியிருக்கலாம்” என்று ஆபத்தான நிலையில் டாக்டர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம். உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய சில பிரச்னைகளுக்கு,  ‘பொன்னான நேரம்’ (Golden hour) என்று ஒன்று உள்ளது. இந்தக் குறிப்பிட்ட நேரத்துக்குள் போதுமான சிகிச்சை கிடைக்கச் செய்துவிட்டால், உயிரிழப்பைத் தவிர்க்க முடியும் என்கிறது மருத்துவ உலகம். இரண்டு நிமிடங்களுக்கு முன்பு வந்து பிழைத்தவர்களும் உண்டு. இரண்டு நிமிடத் தாமதத்தால் இறந்தவர்களும் உண்டு. ஒரு உயிரைக் காப்பாற்றும் இந்த ஒவ்வொரு மணித் துளியின் முக்கியத்துவத்தை அனைவரும் தெரிந்துவைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்த பொன்னான நேரத்தில் உயிருக்குப் போராடும் ஒருவரை எப்படிக் காப்பாற்றுவது? அவர்களுக்குச் செய்ய வேண்டிய முதலுதவி, சிகிச்சைகள் என்னென்ன?

சாலை விபத்து
கோல்டன் ஹவர்: ஒரு மணி நேரத்துக்குள்

யாருக்கு அதிகமாக அடிபட்டு உள்ளதோ, அவரை முதலில் ஆம்புலன்ஸில் ஏற்ற உதவ வேண்டும். அடிபட்டவரைச் சுற்றிலும் கூட்டமாக நின்று வேடிக்கை பார்ப்பதால், மூச்சுவிட அதிக சிரமப்பட்டு, உடல்நிலை மேலும் பாதிக்கும்.

அதிகப்படியான ரத்தப்போக்கின்போது ஒரு சுத்தமான பருத்தித்துணியால் (துப்பட்டா, கைக்குட்டை, துண்டு) கட்டுப்போட்டால் ரத்தம் வெளியேறுவது கட்டுப்படுத்தப்படும். இதற்குப் பெயர் ‘ப்ரீ ஹாஸ்பிடல் டிராமா கேர்’ (Pre Hospital trauma care). இதனால், உயிர் பிழைக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும். அடிபட்டவரை ஒரு மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.

விபத்தில் முதுகு அல்லது கழுத்தில் காயம்
கோல்டன் ஹவர்: ஒரு மணி நேரத்துக்குள்

விபத்தில் சிக்கியவருக்குக் கழுத்து, முதுகில் காயம் ஏற்பட்டிருந்தால் அல்லது அந்தப் பகுதியில் வலிக்கிறது என்றால், இன்னும் சற்று கவனத்துடன் அவர்களைக் கையாள வேண்டும். தலை தொங்குவது போல தூக்கக் கூடாது. தலையும் உடலும் நேர்க்கோட்டில் இருப்பது போல தூக்கிவைக்க வேண்டும். கவனம் இன்றித் தூக்கும்போது, உடைந்த முதுகெலும்போ கழுத்து எலும்போ மேலும் சேதமாகி, கோமா நிலைக்குப் போகலாம். முதுகு, கழுத்து எலும்பில் அடிபட்டவர்களை நேராகத் தூக்கிவைக்க ஸ்ட்ரெச்சரோ பலகையோ இல்லை என்றால், ஆம்புலன்ஸ் வரும் வரை தூக்காமல் இருப்பதே பேருதவி. 

அடிபட்டவருக்கு ஜூஸ், பால், உணவுகளைக் கொடுக்கக் கூடாது. இதனால், வாந்தி வரக்கூடும். தலையில் அடிபட்டு இருந்தால், பெரும் சிக்கல் ஆகிவிடும். சிறிது தண்ணீர் வேண்டுமெனில் கொடுக்கலாம்.
அடிபட்ட, முதல் 10 நிமிடங்களில் செய்யக்கூடிய, முறையான முதலுதவியால் உயிர் பிழைக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.


பக்கவாதம்
கோல்டன் ஹவர்: மூன்று மணி நேரத்துக்குள்
மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய் அடைப்பு மற்றும் ரத்தக்கசிவு காரணமாகப் பக்கவாதம் வரும். தலைசுற்றல், இரண்டு நிமிடங்களுக்கு சுயநினைவு இழந்துபோதல், கை, கால் இழுத்தல், வாய் ஒருபக்கம் இழுத்தல், பேச்சுக்குழறல் என்று சொன்னால், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும். இதற்கு மூளை நரம்புகளில் ஏற்பட்ட அடைப்பைக் கரைப்பதற்கான மருந்தை மூன்று முதல் நான்கரை மணி நேரத்துக்குள் கொடுக்க வேண்டும். எனவே, பக்கவாதத்துக்கு சிகிச்சை அளிக்கும் வசதி உள்ள மருத்துவமனையை அணுகினால், பக்கவாதப் பாதிப்பில் இருந்து முற்றிலும் நீங்கலாம்.

8 முதல் 12 மணி நேரத்துக்குள் வந்தால், உயிரிழப்பைத் தவிர்க்கலாம். ஆனால், அதற்குள் மூளையில் உள்ள நியூரான்கள் அதிக அளவில் உயிரிழந்திருக்கும். இதனால், உடலின் சில செயல்பாடுகள் பாதிக்கப்படும்.

12 மணி நேரத்துக்குப் பிறகு உயிரைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு. அப்படியே உயிரைக் காப்பாற்றினாலும், கை, கால் செயல் இழப்பு போன்ற பிரச்னைகளைத் தவிர்க்க முடியாது.

குடல்வால் வெடிப்பு – வயிற்றுவலி

கோல்டன் ஹவர்: 4-6 மணி நேரத்துக்குள்

வயிற்றுவலிக்கு நிறையக் காரணங்கள் உள்ளன. சிறுநீரகக் கல் அடைப்பால் ஏற்படும் வலி, குடல்வால் வீக்கம் (Appendicitis), குடல் முறுக்கு, அடைப்பு போன்ற தீவிரமான வலி எனில், 4-6 மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

குடல்வால் பிரச்னை என்றால் வாந்தி, தீவிர வயிற்று வலி இருக்கும். இதற்கு, உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். தேவைப்பட்டால் அறுவைசிகிச்சை அல்லது மாத்திரை, மருந்துகளால் சரிப்படுத்த முடியும். மிகவும் தீவிர நிலையில் இருக்கிறது என்றால், உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். குடல்வால் வெடித்துவிட்டது என்றால், நோய்த்தொற்று குடல் முழுவதும் பரவிவிடும். இந்த நிலையில், குடல் வாலை அகற்றுவதுடன், நோய்த்தொற்றை நீக்க, குடல் பகுதியை முற்றிலும் சுத்தம் செய்ய வேண்டும்.  காலராவால் வயிற்றுப்போக்கு ஏற்படும்போது, உடலில் உள்ள நீர்ச்சத்து வெளியேறிவிடும். இதனுடன், தாதுஉப்பும் வெளியேறிவிடும். குழந்தைகளைப் பாதிக்கும்போது, உயிரிழப்பு வாய்ப்பு அதிகரிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு எலெக்ட்ரோலைட் அல்லது உப்பு சர்க்கரை நீர்க் கரைசலைக் கொடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாலே, உயிரிழப்பைத் தவிர்க்கலாம்.


பாம்புக் கடி  

கோல்டன் ஹவர்:  (3 மணி நேரத்துக்குள்)

சினிமாவில் காட்டுவது போல, பல்லால் கடித்து ரத்தத்தை உறிஞ்சுவது, கத்தியால் வெட்டுவது என வித்தைகள் எதுவும் செய்யக் கூடாது. குழாய் நீரில் நன்றாகக் கழுவ வேண்டும். கடித்த இடத்தை அதிக அசைவுகள் கொடுக்காமல் இருந்தாலே போதும். பாம்பு கடித்த, மூன்று மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வது நல்லது. மருத்துவர் ஆன்டிவெனோம் மருந்தைக் கொடுத்தால், விஷம் முறிந்துவிடும். மருத்துவமனைக்கு வராமல் தாமதித்தால், சிறுநீரகச் செயலிழப்பு, நரம்பு மண்டல பாதிப்பு, மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்படும். ஆனால், இவற்றுக்கும் சிகிச்சைகள் உண்டு. 

தீக்காயம் 

கோல்டன் ஹவர்: (உடனடி – 1 மணி நேரத்துக்குள்)

பால், சுடுதண்ணீர், கஞ்சி போன்றவை மேலே ஊற்றிக்கொண்டால், உடனே குழாய் நீரைக் காயத்தின் மேல் விட்டு, ஈரமான பருத்தித் துணி, வாழை இலையால் போர்த்தி, மருத்துவமனைக்கு உடனே கொண்டுசெல்லவும். பஞ்சு, சாக்குப் பை, சிந்தடிக் துணி ஆகியவற்றால் துடைக்கவோ, போர்த்தவோ கூடாது. நூல் நூலாகப் பிரிந்த துணியைக் காயத்தின் மேல் போர்த்தக் கூடாது. இது, காயத்தை மேலும் பாதிக்கும்.

குழந்தைகள் பொருட்களை விழுங்கிவிட்டால் (உடனடி)

குழந்தைகள் விளையாட்டாகச் செய்யும் சில காரியங்கள் உயிரிழப்பை ஏற்படுத்தலாம். கையில் கிடைக்கும் காசு, சிறிய விளையாட்டுப் பொருட்கள், பட்டாணி, வேர்க்கடலை போன்றவற்றை விழுங்கும்போது, அது மூச்சுக்குழாயில் அடைப்பை ஏற்படுத்தலாம்.  இதை, உடனடியாகச் சரிசெய்யாவிட்டால் உயிரிழப்பு ஏற்படலாம். உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.  தண்ணீர், உணவு கொடுக்கவே கூடாது.

தற்கொலைக்கு முயன்றவர்கள் (உடனடி)

பூச்சிக்கொல்லி, எலி மருந்து, வயலுக்கு அடிக்கும் மருந்தைக் குடித்துவிட்டால், உடனே மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும். மயங்கிய நிலையில் இருப்பவருக்கு, சோப்பு கரைசல், உப்புக் கரைசல் கொடுக்கக் கூடாது. இதனால், புறை ஏறி, நுரையீரல் பாதித்து உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவாகிவிடலாம்.

மாரடைப்பு, நெஞ்சு வலி 

கோல்டன் ஹவர்: 1 மணி நேரம்

இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதே மாரடைப்பு. ரத்தக்குழாயில், ரத்தம் உறையும்போதும், கொழுப்பு அடைத்துக்கொள்ளும்போதும், இதயத்தசைகள் பாதிக்கப்படும். செல்கள் உயிர்வாழ ஆக்சிஜன், ஊட்டச்சத்துக்கள் தேவை. இதை, ரத்தம் மூலம்தான் உடல் பெறுகிறது. இதயத்திசுக்களுக்கு ரத்தம் கிடைக்காமல் போகும்போது, அது உயிரிழக்க ஆரம்பிக்கிறது. எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்கு வந்து, சிகிச்சையைத் தொடங்குகிறோமோ, அந்த அளவுக்கு இதயத்திசுக்களின் உயிரிழப்பைத் தவிர்க்க முடியும்.

40 வயது கடந்த ஆண்கள், 45 வயது கடந்த பெண்கள் அவர்கள் வாழ்நாளில் சந்திக்காத வலி இடது கை, இடது பக்கத்தில் ஏற்படும், மயக்கம் வரும். இதுவே மாரடைப்பு.

மாரடைப்பில் தீவிரமானது மேசிவ் அட்டாக் (Massive attack), 50 சதவிகித இதயத் தசைகள் வேலை செய்யாமல் போக, இதயம் திணறும். அப்போது அவர்களுக்கு மூச்சு வாங்கும். அவர்களால் படுக்க முடியாது. ஆதலால், படுக்கக் கட்டாயப்படுத்தாமல் அவர்களைச் சாயவைத்து மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.

சளி, மூச்சுத் திணறல் இருப்பவர்களைப் படுக்கவைக்காமல், தலையணை வைத்து அதில் சாய்த்தது போல கொண்டு செல்லலாம். படுத்தால், மூச்சுத்திணறல் ஏற்படலாம்.

ஆம்புலன்ஸ் வருவதற்குள், ஆஸ்பிரின் மாத்திரையைத் தண்ணீரில் கலந்து உடனே குடித்துவிட வேண்டும். மாரடைப்பு நோயாளியை ஒரு மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். சீக்கிரம் சிகிச்சை எடுத்துக்கொண்டால், இதயம் பாதுகாக்கப்படும், தசைகள் அழிவது மற்றும் மாரடைப்பு திரும்ப வருவது தடுக்கப்படும்.

கவனிக்க: சர்க்கரை நோயாளிகளுக்கு பல நேரங்களில் மாரடைப்பின் அறிகுறிகள் வெளிப்படாமலேகூட இருக்கும். லேசாக நெஞ்சுவலி வந்தாலே, இவர்கள் மருத்துவமனையை அணுக வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், மனச்சோர்வு, மனஅழுத்தம், உடலுழைப்பு இல்லாதவர்கள், முதியவர்கள், 30 வயதுக்கு மேற்பட்ட ஆண், 40 வயதுக்கு மேற்பட்ட பெண் ஆகியோர் வீட்டில் கட்டாயம் ‘ஆஸ்பிரின் மாத்திரை’ வைத்துக்கொள்ள வேண்டும்.

108 நம்பர், அருகில் உள்ள மருத்துவமனையின் அவசர எண் நம்பரை பதிவுசெய்து வைத்திருக்க வேண்டும்.


சடன் கார்டியாக் அரெஸ்ட்

சீராகத் துடித்துக்கொண்டிருக்கும் இதயம் திடீரென்று, துடிப்பை நிறுத்திக்கொள்ளும். இதற்கு, சடன் கார்டியாக் அரெஸ்ட் (திடீர் இதயத்துடிப்பு முடக்கம்) என்று பெயர். பலரும் இதை மாரடைப்பு எனத் தவறாகக் கருதுகின்றனர். 

இதயத்துக்கு ரத்த ஓட்டம் குறைந்து இதயம் இயங்காமல் நிற்பது, இதயத்துடிப்பு குறைந்து அப்படியே நின்றுவிடுவது, மாரடைப்பு வருவதால், மூளையில் பாதிப்பு ஏற்பட்டு இதயம் பாதிக்கப்படுவது, சிறுநீரகச் செயலிழப்பு எனப் பல்வேறு காரணங்களால் சடர்ன் கார்டியாக் அரெஸ்ட் வரலாம்.

சடன் கார்டியாக் அரெஸ்ட் வந்து 4-10 நிமிடங்களுக்கு, எந்த ஓர் உறுப்புக்கும் ரத்த ஓட்டம் செல்லவில்லை எனில், அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்படும். உடனடியாக, அவசர உதவிக்கு அழைத்துவிட்டு, சி.பி.ஆர் எனப்படும் முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும். இதயத்துக்குத் துடிப்பு கொடுக்கும் முதலுதவி செய்ய நெஞ்சுப் பகுதியில் மசாஜ், மூச்சுக்குழாயில் ஆக்சிஜன் கொடுத்துக் காப்பாற்றலாம். மீண்டும் இதயம் துடிக்கவில்லை எனில், நிமிடத்துக்கு 100- 120 முறை அழுத்தம் கொடுக்க வேண்டும். அவருக்கு டேஃபிபிரிலேட்டர் (Defibrillator) சிகிச்சை அளிக்க வேண்டும்.

நன்றி-விகடன்

தங்க நகை வாங்கும் முன்..!

தங்க நகை வாங்கும் முன்..!
ங்க நகை வாங்கும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பதை, , சென்னை, ஜெம் அண்டு ஜுவல்லரி டெக்னாலஜி டிரெயினிங் சென்டரின் இயக்குநர் சுவாமிநாதன் வழங்குகிறார்…

1.சேதாரம்

வாங்கும் நகைகளின் வடிவமைப்புக்கு ஏற்ப சேதாரம் இருக்கும். பொதுவாக டிசைன் குறைவான நகைகளுக்கு சேதாரம் குறைவாக இருக்கும், அதிக வேலைப்பாடுகள் கொண்ட நகைகளுக்கு சேதாரம் அதிகமாக இருக்கும். இது நகைக்கடைகளுக்கு ஏற்ப மாறுபடும். சில கடைகள், சேதாரம் குறைந்தபட்சம் 2%ல் இருந்து ஆரம்பிக்கும் நகைகளை விற்பனை செய்கின்றன. சில கடைகளில் குறைந்தபட்ச சேதாரமே 9%ல் இருந்துதான் ஆரம்பிக்கும்.

2. தர முத்திரை

தங்க நகைகளில் இந்தியத் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தால் வழங்கப்படும் தரச் சான்றிதழான `பிஐஎஸ்’ (BIS – Bureau of Indian Standards) ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என்பதைப் பார்த்து வாங்கவும்.

3.ஐந்து அம்சங்கள்

`பிஐஎஸ்’ முத்திரை என்பது கீழ்க்காணும் ஐந்து அம்சங்களை உள்ளடக்கியது…
** பிஐஎஸ் முத்திரை.

** தங்கத்தின் தூய்மையைக் குறிக்கும் மூன்று இலக்க எண். உதாரணமாக, 916 என்றால், 91.6% தூய தங்கம் (22 காரட்). 875, 833, 792 என, தங்கத்தின் தூய்மைக்கு ஏற்ப இந்த மூன்று இலக்க எண் மாறுபடும்.

** `பிஐஎஸ்’ முத்திரை வழங்கிய சென்டரின் முத்திரை.

** குறிப்பிட்ட நகைக்கு `பிஐஎஸ்’ முத்திரை வழங்கப்பட்ட ஆண்டைக் குறிக்கும் ஆங்கில எழுத்து (2000-ம் வருடத்தில் இருந்து `பிஐஎஸ்’ முத்திரை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வருடம் முத்திரை வழங்கப்பட்ட நகைகளில் ‘A’ என்ற எழுத்து, 2001-ம் வருடம் முத்திரை வழங்கப்பட்ட நகைகளில் `B’ என்ற எழுத்து, 2002-ம் வருடத்துக்கு ‘C’ என்ற எழுத்து… என இப்படியே ஒவ்வோர் ஆண்டுக்கும் ஆல்ஃபபெட் வரிசை நகர்ந்துகொண்டே வரும். நடப்பு ஆண்டுக்கு, அதாவது 2016-க்கு ‘Q’ என்ற எழுத்து இருக்கும்).

**நகை விற்பனையாளரின் முத்திரை.
4.ஆன்டிக் நகைகள்

ஆன்டிக் நகைகளுக்கு  (பழங்கால) சேதாரம் 25% – 30% வரை கூட செல்லும் என்பதால், நடுத்தர வர்க்கத்தினர் இதைத் தவிர்ப்பது நலம். அதேபோல், கல் நகைகளும் ஒப்பீட்டளவில் தங்க நகைகளை விட விலையில் எகிறும் என்பது குறிப் பிடத்தக்கது.

5.மெஷின் செயின் வேண்டாம்

மெஷினில் செய்யப்பட்டும் செயின்கள் அறுந்துவிட வாய்ப்புள்ளது என்பதால் தவிர்க்கவும். ஆனால், எது மெஷின் கட் செயின், எது கையால் செய்யப்பட்டது என்பதை வாடிக்கையாளர்கள் கண்டறிந்துகொள்வது சிரமமே! நம்பிக்கையுள்ள நகைக்கடையில் வாங்கும்போது, அவர்களிடமே அதுபற்றி கேட்டுத் தெளிந்து கொள்ளலாம்.

6.காரட், 916… விளக்கம் 

தூய தங்கத்தை நகைகளாகச் செய்தால் உடைந்துவிடும். எனவே, அதன் ஸ்திரத்தன்மைக்காக மற்ற உலோகங்கள் கலக்கப்படுகின்றன. 24 கேரட் தங்கம் என்பது, 100% தூய தங்கம். 916 தங்கம் என்பது, 91.6% தூய தங்கம். அதாவது, அதில் மீதியுள்ள சதவிகிதம் மற்ற உலோகங்களின் கலவை. 22 காரட் சுத்த தங்கமான இதில், மற்ற இரண்டு காரட் உலோகக் கலவை சேர்ந்துள்ளது. இப்படி கலந்தால்தான் தங்கத்தை நகையாக வார்க்க முடியும். இதில் 19, 18, 17 காரட் எனச் செல்லச் செல்ல, தங்கத்தின் அளவு குறைந்து, மற்ற உலோகத்தின் அளவு அதிகமாகும். 

7.எடையில் கவனம்

என்னதான் நகையில் பார் கோடு இருந்தாலும், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் எடையை கண்மூடித்தனமாக நம்பக் கூடாது. சிறிய நகைக்கடை, பெரிய நகைக்கடை என எங்கு நகை வாங்கினாலும், எடை தராசில் அதை செக் செய்துவிட வேண்டியது மிகவும் முக்கியம். மேலும், பில்லில் மொத்த தொகையை மட்டும் பார்த்துவிட்டு பணத்தைச் செலுத்தாமல், செய்கூலி, சேதாரம், கற்களுக்கான விலை என்று ஒவ்வொன்றையும் நிதானமாகப் பிரித்துப் படித்துப் பார்த்து, சந்தேகம் இருந்தால் நகைக்கடையில் கேட்டுத் தெளிவுபெற வேண்டும்.

8.விலை

சுத்த தங்கத்தின் (24 காரட்) விலையும், ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) விலையும் வித்தியாசப்படும். கையில் பணம் வந்தவுடன் மொத்தமாக நகைககளில் முதலீடு செய்ய நினைக்காமல், தங்கத்தின் விலை ஏற்ற, இறக்க நிலவரத்தை சிறிது நாட்கள் கவனித்து, அது குறையவிருக்கிறதா, கூடவிருக்கிறதா என்பதை துறை சார்ந்த பத்திரிகைகள், வல்லுநர்கள் மூலமாக ஆலோசனை பெற்று, பின்னரே நகைக்கடைக்குச் செல்லவும்!

9.பழைய நகைகள்

பழைய நகையை மாற்றி புது நகை வாங்கும்போது, தரத்தை காரணம் சொல்லி பழைய நகையின் எடையில் அதிக கிராம்களை கழித்துவிடுவார்கள். எனவே, எப்போதும் இதற்கு வாய்ப்பில்லாத வகையில் `916′ நகைகளை வாங்கு வதுடன், வாங்கிய கடையிலேயே அதை மாற்ற வேண்டியதும் அவசியம்.

10.கூடுதல் வரி

ரூபாய் 5 லட்சத்துக்கு மேல் ரொக்கமாகக் கொடுத்து தங்க நகைகள் வாங்கும்போது, ஒரு சதவிகிதம் மூல வரி செலுத்த வேண்டும். அதுவே அந்த விலைக்கு தங்க காயின்கள், பார்கள் வாங்கும்போது அதற்கு வரி செலுத்தத் தேவையில்லை.  

11.`கேடிஎம்’ தவிர்க்க…

`கேடிஎம்’ (KDM) முத்திரை என்பது, நகைக்கடையால் வழங்கப்படும் உத்தரவாதம். இதன் நம்பகத்தன்மை சந்தேகத்துக்கு உரியது என்பதால், `கேடிஎம்’ என்பதை தங்கத்தின் தூய்மைக்கான சான்றாக எடுத்துக்கொள்வதைத் தவிர்த்து, `பிஐஎஸ்’ முத்திரைக்கே முக்கியத்துவம் கொடுக்கவும். 

12.ரசீது அவசியம்

தங்க நகை வாங்கும்போது அதற்கு உண்டான ரசீது வாங்குவது அவசியம். ‘வரி வேண்டாம்’ என சிலர் ரசீது வாங்காமல் விட்டுவிடுவார்கள். இன்னும் சில கடைகளில் மதிப்பீட்டு ரசீதை பில் என்று சொல்லி கொடுப்பார்கள். பின்னாட்களில் நகையிலோ அல்லது அதன் தரத்திலோ ஏதேனும் பிரச்னை என்றால், ரசீதுடனேயே சம்பந்தப்பட்ட நகைக்கடையில் அதைக் கோர முடியும் என்பதால், தவறாமல் பில் கேட்டு வாங்கவும்.

தோற்றவர்களின் கதை - ஜே.கே.ரவுலிங்

தோற்றவர்களின் கதை - ஜே.கே.ரவுலிங்


ங்கிலாந்து ராணியைவிடப் பெரிய கோடீஸ்வரப் பெண்மணி அவர். எழுத்தின் மூலமாக மட்டுமே 6,000 கோடி ரூபாய்க்கும் மேலாகச் சம்பாதிக்க முடியும் என நிரூபித்த உலகின் முதல் பில்லியனர் எழுத்தாளர் அவர். 

ஆனால், ஒரு காலத்தில் கணவனைப் பிரிந்து கைக்குழந்தையுடன் வாழும் தாய்மார்களுக்கு அரசாங்கம் தரும் சொற்ப உதவித்தொகையில் வாழ்க்கை நடத்திய பெண் அவர். மிகவும் அவமானகரமான, அடுக்கடுக்கான தோல்விகளால் புடம்போடப்பட்ட மனிதர் அவர்.

அவரது ஹாரி பாட்டர் வரிசைப் புத்தகங்கள் 40 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்றுள்ளன. 75-க்கும் மேற்பட்ட மொழிகளில் அவரது கதைகள் வாசிக்கப்படுகின்றன. எழுத்துலகில் மட்டுமல்ல… திரையுலகிலும் ஹாரி பாட்டர் படங்கள் வசூலை வாரிக்குவித்துள்ளன. இன்று, ஜே.கே.ரவுலிங் பற்றி தெரியாதவர்கள் உலகில் குறைவு.அண்மையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் கூறினார்: “நாம் தோல்விகளைப் பற்றி அதிகம் பேசுவதில்லை. தோல்விகள் தவிர்க்க முடியாதவை என்ற உண்மையைப் பற்றிப் பேசுவதில்லை. நான் வாழ்க்கையில் தோல்வி மேல் தோல்வி அடைந்து நொந்துபோயிருந்த நேரத்தில், வாழ்க்கையில் ஓரளவு வெற்றி பெற்ற யாராவது என்னிடம் வந்து, ‘நீ பல தோல்விகளைச் சந்தித்தால் மட்டுமே வெற்றி அடைய முடியும்’ என்று சொல்லியிருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.” 

இங்கிலாந்து நாட்டில் 1965-ம் ஆண்டில் பிறந்த ஜே.கே.ரவுலிங், சின்ன வயதிலேயே புத்தகங்களை தேடித்தேடி வாசிப்பதில் பேரார்வம் கொண்டிருந்தார் . அவரது எழுத்து ஆர்வத்தைப் புரிந்துகொண்ட அவரது பள்ளி ஆசிரியர்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க வழிகாட்டினர். 1982-ம் ஆண்டில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுதிய ஜே.கே.ரவுலிங், தேர்வில் நிராகரிக்கப்பட்டார். அவமானத்தில் கூனிக் குறுகிப்போன ஜே.கே.ரவுலிங், வீட்டைவிட்டு வெளியில் வருவதைப் பல நாட்கள் தவிர்த்தார்.

பின்னர் தன்னைத்தானே தேற்றிக்கொண்ட அவர், எக்ஸட்டர் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்கத் தயாரானார். தனக்குள் இருந்த எழுத்தாற்றல் ஆர்வம் காரணமாக ஆங்கில இலக்கியம் படிக்க அவருக்கு அதிக ஆசை. மிகப் பெரிய எழுத்தாளர்களின் வரிசையில், தன்னைக் கருதிய ஜே.கே.ரவுலிங், தன்னை முழுநேர எழுத்தாளராகவே மனதுக்குள் கற்பனை செய்து வந்திருந்தார். தனது ஆர்வத்தை அவர் தயங்கியபடி சொன்னபோது, ஏழ்மையான பின்னணி கொண்ட அவரது பெற்றோர், ‘‘ஆங்கில இலக்கியம் சோறு போடாது. பிரெஞ்சு மொழி படித்தால் ஓர் அலுவலக உதவியாளர் வேலையாவது கிடைக்கும்’’ என்று வாதிட்டனர். 

வேறு வழியின்றி எக்ஸட்டர் பல்கலைக்கழகத்தில், பிரெஞ்சு மற்றும் செவ்வியல் இலக்கியப் படிப்பில் சேர்ந்தார். சில நாட்களிலேயே தனக்குப் பொருத்தமில்லாத படிப்பில் சேர்ந்ததை நினைத்து நொந்துபோனார். பி.ஏ பட்டம் பெற்ற பின்னர் லண்டன் மாநகருக்குச் சென்ற ஜே.கே.ரவுலிங், ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பில் ஆராய்ச்சி உதவியாளர் பணியில் சில மாதங்கள் செயல்பட்டார். அங்கு அவருக்குக் கிடைத்த அனுபவங்கள் வித்தியாசமானவை. அப்போது கொடுங்கோலாட்சி நடந்த நாடுகளில் இருந்து தப்ப முயன்றவர்களும், தப்பி வந்தவர்களும் எழுதும் அதிர்ச்சிகரமான கடிதங்களைப் படித்துக் குறிப்பெடுத்து வந்தார். மனிதர்கள் எத்தனை மோசமான சித்ரவதைகளை அனுபவிக்கிறார்கள் என்பதை அறிந்து மனம் பதைபதைத்தார். அவர் எழுதிய நாவல்களில் இடம்பெற்ற சில அதீதச் சம்பவங்களும் கதாபாத்திரங்களும் ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் வேலையில் அவர் சந்தித்த அனுபவங்கள் அடிப்படையிலானவை. 

ஒருமுறை லண்டனுக்குச் செல்வதற்காக மான்செஸ்டர் ரயில் நிலையம் சென்றார். ரயில் வர 4 மணி நேரம் தாமதமாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. காத்திருந்த வேளையில், அவருக்கு ஒரு புத்தம் புதிய சிந்தனைக் கீற்று பளிச்சிட்டது. மந்திரஜாலப் பள்ளி ஒன்றில் படிக்கும் ஹாரி என்ற சிறுவனைப் பற்றிய காட்சிக் கதைச் சித்திரம் அது. ஒரு முழு நீளத் திரைப்படம்போல் உருவான அந்தக் கதைச் சித்திரம் அவருக்குள் புதிய உணர்வலைகளை எழுப்பியது. வீட்டுக்கு வந்த உடன் அதனைப் பக்கம் பக்கமாக எழுதத் தொடங்கிவிட்டார். 

அவர் தனது பிரமாண்டமான ஹாரிபாட்டர் நாவலை எழுதத் தொடங்கிய நேரத்தில், அவரது அம்மாவின் உடல் நலம் மோசமானது. தன்னை உயிருக்கு உயிராக நேசித்து, அரவணைத்துப் பாதுகாத்துவந்த தனது தாயாரின் மறைவு ஜே.கே.ரவுலிங்கின் வாழ்க்கையை அடியோடு புரட்டிப்போட்டது. அவரால் வேலைக்கும் செல்ல முடியவில்லை, எழுத்துப் பணியையும் தொடர முடியவில்லை. 

ஒரு மாற்றத்துக்காக போர்ச்சுக்கல் நாட்டிலுள்ள போர்டோ நகருக்குச் சென்ற ஜே.கே.ரவுலிங், அங்கு ஆங்கில ஆசிரியராக இரவு நேரப் பணியில் சேர்ந்தார். பகலில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதித் தள்ளினார். அங்கு, தான் சந்தித்த, தன்னைவிட வயதில் குறைந்த இளைஞர் ஒருவரை மணந்துகொண்டார். மகள் பிறந்தாள். மண வாழ்க்கை நீடிக்கவில்லை. கணவரால் துன்புறுத்தப்பட்டு, துரத்தப்பட்டார். மீண்டும் இங்கிலாந்துக்கு வந்து சேர்ந்தார். 

இங்கிலாந்திலும் உதவுவதற்கு யாரும் இல்லை. தந்தை மறுமணம் செய்துகொண்டு போய்விட்டார். தங்கையாலும் பெரிய உதவி செய்ய முடியவில்லை. பழைய நண்பர்கள் சிலர் சிறிதளவு பண உதவி செய்திட முன்வந்தபோதும், அதனை கைநீட்டி வாங்க மனம் இடம் கொடுக்கவில்லை. கணவனைப் பிரிந்து கைக்குழந்தையுடன் வாழும் தாய்மார்களுக்கு அரசாங்கம் தரும் சொற்ப உதவித்தொகைக்கு விண்ணப்பித்து, தனது கைக் குழந்தையுடன் போராட்ட வாழ்க்கையைத் தொடர்ந்தார்.

மற்ற குழந்தைகள் நிறைய விளையாட்டுப் பொருட்களோடு உற்சாகமாக விளையாடுவதைப் பார்க்கும் போதெல்லாம், தன் குழந்தைக்கு எதுவுமே தர முடியவில்லையே என்ற ஏக்கம் அவரது மனதை வலிக்கச் செய்தது. ஏமாற்றங்களும், சுய பச்சாதாபமும் அவரது மனநிலையைப் பாதிக்கத் தொடங்கியிருந்தன. அவரது குழந்தைக்கு ஒரு சிறிய விளையாட்டுப் பொம்மையை சமூகநலத் துறை ஊழியர் ஒருவர் இலவசமாக வழங்கியபோது, அதனைப் பிடுங்கி குப்பைத்தொட்டியில் போடும் அளவுக்கு அவர் மன அழுத்தத்தில் இருந்தார். 

மன அழுத்தத்தின் உச்சத்தில், தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் தனக்கு எழுந்ததாகவும், மருத்துவச் சிகிச்சைக்குப் பின்னர் மன அழுத்தம் குறைந்ததாகவும் அவர் பின்னாட்களில் தெரிவித்து உள்ளார். வறுமையுடன் போராட்டம் ஒருபுறம் இருக்க… துரத்தியடித்த கணவர்,  

ஜே.கே.ரவுலிங்கையும் குழந்தையையும் தேடி இங்கிலாந்து வந்துவிட்டார். போதைப்பொருளுக்கு அடிமையாகிவிட்ட அவரால் பெரும் தொந்தரவுகள். அவரிடம் இருந்து மணவிலக்கு பெற ஜே.கே.ரவுலிங் பெரும்பாடு படவேண்டியிருந்தது. 

இத்தனைச் சோதனைகளுக்கு இடையிலும், ஜே.கே.ரவுலிங்கை நம்பிக்கை இழக்காமல் வைத்திருந்தது, அவரது எழுத்துப் பணி மட்டுமே. குழந்தையை எடுத்து வெளியில் சுற்றிவிட்டு, அந்தக் குழந்தை தூங்கும் நேரமெல்லாம் எழுதுவதை வழக்கமாக்கிக்கொண்டார். பூங்காவிலோ, காப்பி கடையிலோ, வீட்டிலோ, வீதியிலோ, எங்கெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ அங்கெல்லாம் எழுதித் தள்ளினார். 


“வீடில்லாமல், பணம் இல்லாமல், கணவர் இல்லாமல், கைக்குழந்தையுடன் வாழ்ந்த அந்த நாட்களில் எனது வாழ்க்கை இருள்மயமானதாக இருந்தன. தோல்விகள் என்னைச் சூழ்ந்து நின்றன. அந்தத் தோல்விகள், என்னிடம் இருந்த தேவையற்றவை அனைத்தையும் பறித்து எறிந்து விட்டன. எதை எனது வாழ்க்கையின் தவப் பணியாக நினைத்தேனோ, அதில் மட்டுமே எனது முழு சக்தியையும் ஒன்றுகுவிக்கும்படி, தோல்விகள் என்னை விரட்டின”  என்று பின்னாட்களில் குறிப்பிட்டார் ஜே.கே.ரவுலிங்.

தனது முழு சக்தியையும் திரட்டி ஹாரிபாட்டர் முதல் பாகத்தை எழுதி முடித்தார் ஜே.கே.ரவுலிங். தனக்கு முழு திருப்தி ஏற்படும்வரை அதனை மெருகேற்றி, மிகுந்த நம்பிக்கையோடு பதிப்பகத்துக்கு அனுப்பிவைத்தார். ‘பதிப்பிக்கத் தகுந்ததல்ல’ என்ற குறிப்புடன் திருப்பி அனுப்பப்பட்டது ஹாரிபாட்டர் நாவல்.  11 பதிப்பகங்கள் நிராகரித்த அந்த நாவலை, மனம் தளராமல் 12-வது பதிப்பகத்துக்கு அனுப்பி வைத்தார் ஜே.கே.ரவுலிங். 

ஹாரிபாட்டர் நாவலின் பிரதியை ப்ளூம்ஸ்பரி பதிப்பாசிரியர் படிக்கத் தொடங்கியபோது, அவரது 8 வயது மகளும் அதனைப் படிக்கத் தொடங்கினார். அந்தச் சிறுமி, அடுத்தடுத்த அத்தியாயங்களைப் படிக்கத் தருமாறு தனது அப்பாவிடம் கெஞ்சியபோது அந்த நாவல் குழந்தைகளைக் கவரும் என்று பதிப்பாசிரியர் புரிந்துகொண்டார். 

ஜே.கே.ரவுலிங்கை அழைத்து பதிப்பு ஒப்பந்தம் போட்டார். எதிர்பாராத மாபெரும் வரவேற்பைப் பெற்றன ஹாரிபாட்டர் நாவல்கள். தொடர் தோல்விகளைத் தாங்கிக்கொண்டு மனம் தளராமல் உழைத்த ஜே.கே.ரவுலிங்குக்கு வெற்றி மேல் வெற்றி. 

ஜே.கே.ரவுலிங் ஒருமுறை மாணவர்களிடம் பேசியபோது குறிப்பிட்டார்: “உங்களில் யாரும் நான் சந்தித்த அளவுக்கு மோசமான தோல்விகளைச் சந்திக்கப் போவதில்லை. ஆனாலும் தோல்விகள் தவிர்க்க முடியாதவை என்பதையும், அவை வாழ்க்கையின் இயல்பான பகுதி என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தோல்விகளைக் கண்டு அச்சப்பட வேண்டாம்.”
 
சுசி திருஞானம்
நன்றி-விகடன்

விண்டோஸ் 10ல் ஹைபர்னேட்


பல வாசகர்கள், தங்களின் விண்டோஸ் 10 சிஸ்டத்தில், ஷட் டவுண் மெனுவில், ஹைபர்னேட் ஆப்ஷன் காட்டப்படவில்லை என்று எழுதி உள்ளனர். குறிப்பாக லேப்டாப் கம்ப்யூட்டரைத் தொடர்ந்து பயன்படுத்துபவர்கள், இந்த ஆப்ஷனை அடிக்கடி பயன்படுத்தி வந்ததாகவும், அது இல்லாதது, சிக்கலைத் தருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். பலர், அந்த ஆப்ஷன், விண்டோஸ் 10ல் இல்லை என்று எண்ணிக் கொண்டிருக்கலாம். அந்த ஆப்ஷன் மாறா நிலையில் தரப்படவில்லை; நாமாக செட் செய்து கொள்ளலாம். அதனை எப்படி செட் செய்வது என்பதனையும், ஹைபர்னேட் என்பது எந்த நிலையைக் குறிக்கிறது என்றும் பார்க்கலாம்.

பொதுவாக, கம்ப்யூட்டரில் வேலை முடிந்தவுடன், கருமமே கண்ணாக இருப்பவர்கள், பைல்கள் அனைத்தையும் சேவ் செய்து, ஒவ்வொரு புரோகிராமினையும் சரியாக மூடி, கம்ப்யூட்டரின் இயக்கத்தினையும் நிறுத்துவார்கள் (Shut Down). இதுதான் சரியான வழியும் கூட. ஆனால், இடையே சிறிது ஓய்வு எடுப்பவர்கள் (எடுக்கத்தான் வேண்டும்), கம்ப்யூட்டரை மேற்சொன்னவாறு ஷட் டவுண் செய்து, பின் மீண்டும் இயக்குவதை விரும்பவில்லை. மேலும், லேப்டாப் போன்ற கம்ப்யூட்டர்களில், அப்படியே விட்டு செல்வது, பேட்டரியின் மின் சக்தியைக் காலி செய்திடும். எனவே தான், மைக்ரோசாப்ட், Sleep மற்றும் Hibernate என இரு ஆப்ஷன்களைத் தந்தது. 

ஆனால், விண்டோஸ் 10 இயக்க முறைமையில், மற்ற ஷட் டவுண் விருப்பங்களிடையே, ‘ஹைபர்னேட்’ ஆப்ஷனைத் தரவில்லை. அதனை விரும்புபவர்கள் மட்டும் இயக்கி வைக்கட்டும் என வழியைத் தந்துள்ளது.

‘ஹைபர்னேட்’ எதற்காக?
 
விண்டோஸ் 10 சிஸ்டத்தில், ‘ஹைபர்னேட்’ நிலையை அமைக்கும் முன்னர், அது என்ன வகையான நிலை? எதற்காக அதனைப் பலர் விரும்புகின்றனர்? என்று பார்க்கலாம். ‘ஹைபர்னேஷன்’ என்பது, வழக்கமாக நாம் மேற்கொள்ளும் ஷட் டவுண் நிலைக்கும், ‘ஸ்லீப்’ நிலைக்கும் இடைப்பட்ட ஒன்றாகும். இது லேப்டாப் கம்ப்யூட்டரை இலக்காகக் கொண்டே தரப்பட்டது. நாம் நம் கம்ப்யூட்டரை ‘ஹைபர்னேட்’ நிலையில் வைக்கும்போது, அப்போது கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக்கும் நிலை சேவ் செய்யப்பட்டு வைக்கப்படுகிறது. எந்த புரோகிராம்கள் திறக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன, எந்த கோப்புகள் செயல்பாட்டில் உள்ளன என்பதை, ஹார்ட் டிஸ்க்கில் கம்ப்யூட்டர் சேவ் செய்து வைத்துக் கொண்டு, கம்ப்யூட்டரை Off நிலைக்குக் கொண்டு செல்லும். மீண்டும் கம்ப்யூட்டரை இயக்கும் போது, எந்த இடத்தில் எந்த எந்த புரோகிராம்களுடன் நீங்கள் ஹைபர்னேட் நிலைக்குச் சென்றீர்களோ, அந்த புரோகிராம்கள் இயக்கப்பட்டு, அதில் உள்ள கோப்புகள் நீங்கள் செயலாற்றத் தயாராக இருக்கும். ஸ்லீப் நிலை போல இது மின்சக்தியைப் பயன்படுத்தாது. ஆனால், அதனைக் காட்டிலும் சற்று அதிகமான நேரத்தை, மீண்டும் கம்ப்யூட்டரை இயக்க எடுத்துக் கொள்ளும்.

சரி, இதனை எப்படி விண்டோஸ் 10ல் அமைப்பது? ‘ஹைபர்னேட்’ ஆப்ஷனை எப்படி ‘பவர்’ மெனுவில் கொண்டு வருவது? Start > Power எனத் தொடங்கி, டாஸ்க் பாரில் உள்ள தேடல் கட்டத்தில் ”power options” என டைப் செய்து எண்டர் தட்டவும். இதன் முதல் விடையாக ‘கண்ட்ரோல் பேனல்’ கிடைக்கும். அதில் கிளிக் செய்திடவும். கண்ட்ரோல் பேனல் திறக்கப்பட்டவுடன், இடது பக்கம் உள்ள பிரிவில் Choose what the power buttons do என்பதைத் தேர்ந்தெடுக்கவும். மேலாக, Choose the power settings that you want for your computer என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், ஸ்குரோல் செய்து, கீழாகச் சென்று, Shutdown settings என்பதில், Hibernate என்பதன் அருகே உள்ள, சிறிய கட்டத்தில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும். இனி, ஸ்டார்ட் மெனு பெற்று, பவர் பிரிவில் கிளிக் செய்கையில், ஹைபர்னேட் பிரிவு இருப்பதனைப் பார்க்கலாம்.

கூகுளுக்குத் தகவல்களை குறைத்தே தருக


கம்ப்யூட்டர், இணையம் மற்றும் ஸ்மார்ட் போன்களில், நம்மைப் பற்றிய தகவல்களை அதிகம் பெற்றுக் கொண்டு, தன் நோக்கத்திற்காகப் பயன்படுத்துவதில் முதல் இடம் பெறுவது கூகுள் நிறுவனமே. விளம்பரங்களைத் தன் வர்த்தகத்தின் அடிப்படையாகக் கொண்டுள்ள, கூகுள் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு, மக்களும், அவர்களின் அபிலாஷைகளும் தெரிந்தாக வேண்டியதுள்ளது. எனவே, ஏதேனும் ஒரு வகையில், வழியில் நம்மைப் பற்றிய தகவல்களை கூகுள் பெற்றுக் கொள்கிறது. நாம் கூகுள் நிறுவனத்தின் பல்வேறு செயலிகளால் பயன் பெறுவதால், நம்மால் தகவல்களைத் தராமலும் இருக்க முடிவதில்லை. எனவே, இவற்றை எந்த அளவிற்குக் குறைக்கலாம் என்று பார்ப்போம்.

நீங்கள் ஆண்ட்ராய்ட் போன் அல்லது டேப்ளட் சாதனத்தைப் பயன்படுத்துபவராக இருந்தால், கூகுள் ஏற்கனவே உங்களைப் பற்றிய பல தகவல்களைப் பின் தொடர்ந்து வரும் செயல்பாட்டினை மேற்கொண்டிருக்கும். அப்படியா! என் அக்கவுண்ட்டை மூடிவிடவா? என்ற எண்ணம் உங்கள் மனதில் தோன்றும். மூடுவதற்கும் கூகுள் எளிய வழிகளைத் தரும். ஆனால், நாம் அக்கவுண்ட்டினை மூடிவிட மாட்டோம். ஏனென்றால், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நாம் அப்ளிகேஷன்களை இறக்க வேண்டும் எனில், நமக்கு கூகுள் அக்கவுண்ட் ஒரு கட்டாயத் தேவை ஆகும். பல செயலிகள் வழியாக, பல இடங்களில் நம்மைப் பற்றிய தகவல்கள், கூகுள் நிறுவனம் பெறும் வகையில் கசிகின்றன. இருப்பினும், குறைவான அளவில் நம் தகவல்களைத் தரும், சில முக்கிய வழிகளை இங்கு காணலாம்.

கூகுள் நமக்குத் தருபவை எல்லாம் இலவசமே. ஏனென்றால், கூகுள் என்னும் தொழில் நுட்ப அரக்கன், விளம்பரம் வழி பெரும் வருமானமே அதற்கு எக்கச்சக்கமாகும். இந்த விளம்பரங்கள் வழியாகவே, உங்களுக்கான விளம்பர வட்டம் கட்டப்படுகிறது. இணையத்தைச் சுற்றி வருகையில், இந்த விளம்பரங்களை ஒதுக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. கூகுள் தளத்தின் விளம்பர செட்டிங்ஸ் பக்கத்தில் (https://www.google.com/settings/u/0/ads) நீங்கள் சில நகாசு செட்டிங்ஸ் அமைப்பை மேற்கொண்டு, நீங்கள் தரும் தகவல்கள் துல்லிதமாகவும், ஆர்வம் கொண்டுள்ள விளம்பரங்கள் மட்டும் இருப்பதாகவும் ஏற்படுத்தலாம். 

கூகுள் நிறுவனத்தின் முதன்மை வர்த்தகம் தேடுதல் தான். அதில் என்ன செய்யலாம் என்று அடுத்து பார்க்கலாம். கூகுள் நீங்கள் செல்லும், பார்க்கும் அனைத்து தளங்கள் குறித்த தகவல்களைப் பதிவு செய்து வைத்துக் கொள்கிறது. பெர்சனல் கம்ப்யூட்டராக இருந்தாலும், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் கூகுள் நவ்” செயலியாக இருந்தாலும், தேடுதல் கட்டத்தில் என்னவெல்லாம் டைப் செய்கிறீர்கள் என்பதைக் கூகுள் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டுள்ளது.

அதிர்ஷ்டவசமாக, கூகுள் இந்த தகவல்கள் எல்லாம் எளிதாகக் காணும்படி, நம் அக்கவுண்ட் ஹிஸ்டரி பக்கத்தில் மேல் பகுதியில் வைத்துள்ளது. இங்கு, இவற்றை சேவ் செய்திடாமல் வைத்துக் கொள்ள செட்டிங்ஸ் பகுதியில் வழி தரப்பட்டுள்ளது. எனவே, நாம் கூகுள் எடுத்து வைத்துள்ள தகவல்களை சேவ் செய்திடாமல் நீக்கிவிடலாம். அல்லது தேர்ந்தெடுத்த சிலவற்றை மட்டும் பதியும்படி அமைத்துக் கொள்ளலாம்.

ஜிமெயில்: நாம் ஜிமெயில் செயலியைப் பயன்படுத்துகையில், கூகுள் சர்வர்கள் வழியாக நாம் அனுப்புவது அனைத்தையும் ஒரு காப்பி எடுத்து, கூகுள் வைத்துக் கொள்கிறது. மின் அஞ்சல் செயலி ஒன்றின் செயல்பாட்டின் அடிப்படையே இதுதான். ஆனால், கூகுள் அதற்கும் மேலாக ஒரு படி சென்று, நமக்கு விளம்பரங்களை அனுப்புவதற்காக, நம் அஞ்சல்களை ஸ்கேன் செய்து தகவல்களைத் திரட்டி வைத்துக் கொண்டு செயல்படுத்துகிறது. நாம் அனுப்பும் டெக்ஸ்ட்டை மட்டுமல்ல; படங்களையும் ஸ்கேன் செய்கிறது. இவ்வாறு கூகுள் செயல்படுவதை நீங்கள் விரும்பவில்லை என்றால், நம் அக்கவுண்ட்டிலிருந்து ஜிமெயில் அக்கவுண்ட்டை நீக்குவதுதான் ஒரே வழி.

தொடர்புகள் (Contacts):
ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைப் பயன்படுத்துவதில் நாம் பெறும் மிகப் பெரிய வசதி, நம் தொலைபேசி தொடர்புகளை எளிதாக, ஒரு சாதனத்திலிருந்து இன்னொன்றுக்கு மாற்றிக் கொள்வதுதான். இது எப்படி சாத்தியமாகிறது என்றால், நம் தொடர்புகள் அனைத்தும் கூகுள் அக்கவுண்ட்டுடன் ஒருங்கிணைக்கப்படுவதுதான். மொபைல் போனிலேயே, நம் தொடர்புகளின் மின் அஞ்சல் முகவரிகளும் தாமாக சேவ் செய்யப்படுவதும் இப்படித்தான். நாம் நீக்க வேண்டும் என எண்ணினால், ஒரு முயற்சியில், ஒரு தொடர்பினை மட்டுமே நீக்க முடியும். ஆனால், இந்த சாதனங்களில், நாம் நம் தொடர்புகளை சேவ் செய்து வைத்துக் கொள்வதுதான் சிறந்த வழியாகும்.

பெரும்பாலான ஆண்ட்ராய்ட் இயக்கும் சாதனங்களில், உங்கள் போன் தொடர்புகளை, உங்கள் சிம் கார்டிற்கு மாற்றுவது எனில், People என்னும் அப்ளிகேஷன் சென்று, அதில் Settings தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பின்னர், Export Contacts to SIM என்பதனைக் கிளிக் செய்திட முகவரிகள் அனைத்து தகவல்களுடன் மாற்றப்படும். ஒரு சில ஆண்ட்ராய்ட் சாதனங்களில், இந்த வழிமுறைகள் சற்று மாறுபடலாம்.

கூகுள் காலண்டர்: இதில் நாம் அமைக்கும் நிகழ்வுகள் அனைத்தும் கூகுள் தளத்தினால் ஒருங்கிணைக்கப் படுகின்றன. இங்கு மட்டும், இதில் உள்ளவற்றை முற்றிலுமாக நீக்க முடியாது. கூகுள் காலண்டருடன் அனைத்து தொடர்புகளையும் நீக்கினால்தான் அது முடியும்.

கூகுள் ட்ரைவ்: ஜிமெயில் சர்வரில், நம் மெயில்கள், தொடர்புகள் அனைத்தும் சேமிப்புக் கிடங்கில் வைக்கப்படுவது போல, ட்ரைவ் செயலிக்கான சர்வரிலும் சேமிக்கப்படுகிறதா என்பது இன்னும் தெளிவாக அறியத் தரப்படவில்லை. ஆனால், ட்ரைவ் பயன்படுத்தும் சர்வரில் சேர்த்து வைக்கப்படும் ஆவணங்கள், படங்கள், விடியோக்கள் அனைத்தும், எந்த நேரமும் கூகுள் நிறுவனம் அறியக் கிடைக்கும் வகையில்தான் பதியப்படுகின்றன. நீங்கள் உங்கள் பைல்களை அழிக்கும்போதும் பின்னர் அழித்த பின்னர், ட்ரேஷ் பெட்டியிலிருந்து நீக்கும் போதும், அவை மறைக்கப்படுகின்றன. நிச்சயமாய், அவை கூகுளின் சர்வரிலிருந்து உடனடியாக, அறவே நீக்கப்படுவதில்லை. ஆனால், உங்கள் அக்கவுண்ட்டினை வேறு யாரேனும், பின் நாளில் அணுகினால், அவர்களுக்கு நீங்கள் நீக்கியவை நிச்சயமாகக் கிடைக்காது.

உலவும் இடம் (Location): உங்கள் ஆண்ட்ராய்ட் சாதனம் இயங்கத் தொடங்கிய காலத்திலிருந்து, கூகுள் ‘லொகேஷன்’ என்னும் வசதி மூலம், நீங்கள் எங்கெல்லாம் செல்கிறீர்கள் என்பதனை அறிந்து பதிவு செய்கிறது. அந்த சாதனம் மூலம், கூகுள் மேப் பயன்படுத்துவதாக இருந்தால், இந்த டூல் தான் அடிப்படையை அமைக்கிறது. பெர்சனல் கம்ப்யூட்டரில் மேப் பயன்படுத்துகையில், லொகேஷன் டூலை நாம் இயக்காமலேயே, மற்றவை மூலம், கூகுள் நாம் இயங்கும் இடத்தை அறிந்து கொள்கிறது. இதனை நீங்கள் விரும்பவில்லை என்றால், இந்த செயல்பாட்டினை, ஆண்ட்ராய்ட் சாதனத்தில் முடக்கிவிடலாம். 

கூகுள் ப்ளே: ஆண்ட்ராய்ட் போன் வைத்திருப்பவர்கள், கூகுள் ப்ளே பயன்படுத்தாமல் இருக்க முடியாது. பல செயலிகள் இதன் வழியாகவே நமக்குக் கிடைக்கும். கூகுள், நீங்கள் இந்த ஸ்டோர் சென்று பெறும் அனைத்தையும் பட்டியலிட்டுத் தன்னிடம் வைத்துக் கொள்ளும். இது நாம் ஸ்டோரைப் பயன்படுத்த ஒப்புக் கொள்ளும் ஒப்பந்தத்தில் ஒரு நிபந்தனையாகும். ஆனால், வெளிப்படையாக இது தெரிவதில்லை. இதற்கு நீங்கள் உடன்பாடில்லை என்றால், ப்ளே ஸ்டோரினைப் பயன்படுத்தாமல் இருப்பதுதான் ஒரே வழி. ஆனால், அது சரியான வழி அல்ல. ஏனென்றால், இந்த ப்ளே ஸ்டோரில் இருந்து நீங்கள் பெற்ற அனைத்து செயலிகளையும் நீக்க வேண்டும். பின் எந்த பயன்பாடும் உங்களுக்குக் கிடைக்காது.

யு ட்யூப்: யு ட்யூப் தள செட்டிங்ஸ் அமைப்புகள் https://www.google.com/settings/accounthistory என்னும் இடத்தில் கிடைக்கும். இங்கு நீங்கள் தேடிய விடியோக்களின் பட்டியல் கிடைக்கும் இவற்றை நீக்க நீங்கள் விரும்பினால், அவற்றைத் தேடி நீக்கிவிடலாம். இங்கேயே, உங்கள் தேடலைப் பதிவு செய்ய வேண்டாம் என கூகுளுக்குக் கட்டளை இடலாம். அதே போல, நீங்கள் தேடிப் பார்த்த விடியோக்களின் பட்டியலையும் அணுகி, நீக்க விரும்புவதை நீக்கிவிடலாம்.

மேலே தரப்பட்டுள்ள தகவல்களிலிருந்து, நீங்கள் கூகுள் சர்வர்களுக்கு, உங்களைப் பற்றிய தகவல்களை, அறிந்தோ அறியாமலோ, எந்த அளவிற்குத் தருகிறீர்கள் என்பதனைத் தெரிந்து கொண்டிருப்பீர்கள். கூகுள் நிறுவனம் தரும் எந்த வசதியை நாம் பயன்படுத்தினாலும், நம்முடைய விருப்பங்கள், நம்மைப் பற்றிய தகவல்கள், அதன் சர்வரில் சென்று அடைவதையோ, அவற்றைப் பயன்படுத்தி நம்மை கூகுள் அணுகுவதையோ மாற்ற இயலாது. விருப்பப் பட்டால், நம்மிடமிருந்து செல்லும் தகவல்களைக் குறைத்துக் கொள்ளலாம். கூகுள் சேவையே, அதில் உள்ள நம் அக்கவுண்ட்டினைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கும் டூல்களைத் தருகிறது. ஆனால், இதற்கு நாம் மெனக்கெட்டு செட்டிங்ஸ் அமைத்துத் தொடர்ந்து கண்காணிக்கும் வேலையையும் மேற்கொள்ள வேண்டும். ஆண்ட்ராய்ட் சாதனங்கள், ஜிமெயில், கூகுள் மேப்ஸ், யு ட்யூப் போன்றவை எல்லாம், தகவல்களைச் சேகரிக்கும் டூல்களைத் தாங்களாகவே இயக்கித் தங்கள் பணியைத் தொடர்கின்றன. நாம் இதனை அறிந்து, ஒவ்வொரு செட்டிங்ஸ் பக்கமும் அணுகி, இவற்றைத் தடுக்கலாம். ஆனால், அவ்வாறு தடுக்கும் வேளைகளில், சில வசதிகளை இழக்க வேண்டியதிருக்கும். தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தினால், தகவல்கள் தொடர்ந்து செல்வது நிறுத்தப்படும்.

பவர் பட்டன் சிம்பலுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அர்த்தம் என்னவென்று தெரியுமா உங்களுக்கு?

பவர் பட்டன் சிம்பலுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அர்த்தம் என்னவென்று தெரியுமா உங்களுக்கு?

image

நீங்கள் இந்த சிம்பலை எல்லா இடங்களிலும் பார்த்து இருக்க முடியும். மிக பிரபலமான இந்த சிம்பலை நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் மீது எல்லோருமே பார்த்திருப்போம். நீங்கள் ஆன் செய்து ஆப் செய்யும் உங்கள் மொபைல், டிவி, லேப்டாப், மைக்ரோவேவ் ஓவன், வாஷிங் மெஷின், உள்பட அனைத்து எலக்ட்ரிக்கல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் பவர் பட்டன் மீது இந்த சிம்பள் இருக்கும்.

ஆனால் இந்த சிம்பலுக்கான அர்த்தம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? எந்த லாஜிக் அடிப்படையில் அந்த சிம்பல் டிசைன் செய்துள்ளார்கள் என்பது பற்றி உங்களுக்கு ஏதாவது ஐடியாக இருக்கிறதா?

நம்புங்கள், இந்த பவர் பட்டன் சிம்பல் குறித்து ஒரு மிகவும் இன்ட்ரஸ்டிங்கான ஒரு லாஜிக் உள்ளது. இதன் மூலம் அந்த சிம்பலுக்கான அர்த்தத்தை அறிந்து கொள்ள முடியும்.

நீங்கள் மேல சிலைடரில் இருக்கும் பவர் பட்டன் படத்தை நன்றாக உற்றுப்பாருங்கள்.. முதலில் படித்துக்கொண்டிருந்ததால், அந்த படத்தை சரியாக பார்த்திருக்க வாய்ப்பு குறைவாக இருந்திருக்கும்.

அடுத்த படத்தை மீண்டும் பாருங்கள். அதில் I மற்றும் o என்று பொறிக்கப்பட்டிருக்கும்.

3வது படத்தை பாருங்கள், உடைந்த வளையத்தில் 1 மற்றும் 0 என்று இருப்பது போல் தெரிகிறதா?

இரண்டாவது உலகப்போரின் போது என்ஜினியர்கள் பைனரி சிஸ்டத்தின்படி பவர் பட்டனுக்கு இந்த சிம்பலை பயன்படுத்தினார்கள்.

பைனரி சிஸ்டத்தின் படி 1 என்றால் ‘on’ என்றும் 0 என்றால் ‘off’ என்று அர்த்தம்.
இறுதியாக 1973ம் ஆண்டு சர்வதேச எலக்ட்ரானிக் கமிஷன்(IEC), பவர் பட்டனுக்கு அந்த சிம்பள் தான் பயன்படுத்த வேண்டும் என்று வரைமுறை வகுத்தது.

பவர் பட்டன் சிம்பள் பல்வேறு பொட்களில் இருக்கிறது. அது on மற்றும் off என்ற வடிவியே அவை செயல்படுகிறது. அதனால் தான் அவை I மற்றும் O என்று வேறுபடுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு வகையான பட்டன்களும், on மற்றும் off என்ற வடிவில் தான் உள்ளது. அதனால் தான் இந்த சிம்பல் வைக்கப்பட்டுள்ளது.

NYC condom wrapperல் இந்த பவர் பட்டன் சிம்பல் பயன்படுத்தப்படுகிறது. இந்த மாதிரியான பொருட்களுக்கு எல்லாம் பவர் பட்டன் சிம்பல் பயன்படுத்தப்படுவதை யாரும் கற்பனை செய்து கூட பார்த்திருக்க மாட்டோம்.

தோற்றவர்களின் கதை - ஸ்டீவ் ஜாப்ஸ்

தோற்றவர்களின் கதை - ஸ்டீவ் ஜாப்ஸ்

 


பல தொழில் முயற்சிகளில் தோல்விமேல் தோல்வி கண்டு, விரக்தியின் விளிம்புக்குப் பலமுறை சென்றவர் அவர். தொடர் தோல்விகளில் இருந்து ஸ்டீவ் ஜாப்ஸ் எழுந்துவந்த கதை இது…

ஐ போன், ஐ பேட், ஐ புக், ஐ மாக் கம்ப்யூட்டர் போன்ற ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் இன்று உலகெங்கும் அதிகம் விரும்பி வாங்கப்படும் உயர்தர எலெக்ட்ரானிக் பொருட்கள் என்பது உங்களுக்குத்
தெரிந்திருக்கும். அவற்றைத் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனத்தை வெற்றியின் உச்சிக்குக்கொண்டு சென்றவர் அதன் நிறுவனர் மற்றும் தலைவராக இருந்த ஸ்டீவ் ஜாப்ஸ். 2011-ம் ஆண்டில், புற்றுநோய் காரணமாக தனது 56 வயதிலேயே அவர் மறைந்தபோது அவரது சொத்து மதிப்பு 2,12,000 கோடி ரூபாய். இவை எல்லாம் வெளியில் தெரிந்த வெற்றிச் சித்திரங்கள். அதிகம் பேசப்படாத மற்றொரு பக்கம் இருக்கிறது.

வறுமை காரணமாக கல்லூரிப் படிப்பைப் பாதியில் கைவிட்டவர் ஸ்டீவ் ஜாப்ஸ். தான் கனவுகண்டு, தனது நண்பனுடன் உழைத்து உருவாக்கிய ஆப்பிள் நிறுவனத்திலிருந்து அவமானகரமான முறையில் வெளியில் துரத்தப்பட்டவர் அவர். பல தொழில் முயற்சிகளில் தோல்விமேல் தோல்வி கண்டு, விரக்தியின் விளிம்புக்குப் பலமுறை சென்றவர் அவர். தொடர் தோல்விகளில் இருந்து ஸ்டீவ் ஜாப்ஸ் எழுந்துவந்த கதை இது…   

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் 1955-ம் ஆண்டில் ஸ்டீவ் ஜாப்ஸ் பிறந்தவுடன், பால் தம்பதியருக்குத் தத்துக் கொடுக்கப்பட்டார். முழுமையான அன்புடன் வளர்க்கப்பட்டார் ஸ்டீவ் ஜாப்ஸ். எனினும், தான் தத்துக் கொடுக்கப் பட்டவன் என்ற மன உளைச்சல் அவருக்குள் தொடர்ந்து இருந்து வந்தது உண்மை. 

பள்ளிப் படிப்பின்போதே எலெக்ட்ரானிக் தொழில்நுட்பத்தின்மீதும், வரைகலையின் மீதும் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். ரீட் கல்லூரியில் பட்டப்படிப்பில் சேர்ந்த சில மாதங்களில், ஸ்டீவ் ஜாப்ஸுக்கு கல்லூரிப் படிப்பு கசந்தது. சுதந்திரச் சிந்தனையை விரும்பிய அவருக்குக் கட்டுப்பாடான கல்வி முறைக்குள் இருக்க முடியவில்லை. கட்டணம் செலுத்தத் தனது பெற்றோர் படும் சிரமத்தை உணர்ந்த அவர், கல்லூரிப் படிப்பைவிட்டு வெளியேறினார்.

வீட்டுக்கும் செல்ல இயலாமல், விடுதியும் பிடிக்காமல், பல நாட்கள் தனது நண்பர்களின் அறைகளில் மாறி மாறித் தங்கினார். உணவுக்குக் காசில்லாதபோதெல்லாம், 10 கிலோ மீட்டர் நடந்துசென்று ஹரே கிருஷ்ணா கோயிலில் வழங்கப்பட்ட இலவச உணவை வாங்கிச் சாப்பிட்டதாக அவரே பின்னாட்களில் தெரிவித்திருக்கிறார்.

கல்லூரியைவிட்டு வெளியேறிய இந்த நாட்களில்தான் ஓவிய எழுத்துப் பயிற்சி வகுப்பில் தன்னால் சேர முடிந்தது என்றும், அந்தப் பயிற்சியால்தான் பிற்காலத்தில் மாக் கம்ப்யூட்டருக்கான அழகான எழுத்துருக்களைத் தன்னால் சேர்க்க முடிந்தது என்றும் ஸ்டீவ் ஜாப்ஸ் குறிப்பிட்டார். 

1974-ம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். ஹிப்பிபோல் முடி வளர்த்து, நாடோடி போன்ற மனநிலையோடு இந்தியா வந்த அவர், ஆன்மிகத் தேடலில் இறங்கினார். லுங்கியைக் கட்டிக்கொண்டு இமயமலை அடிவாரத்துக்குப் பலமுறை பேருந்துப் பயணம் போய் வந்தார். பஞ்சை பராரிபோல் வாழ்ந்து திரிந்த இந்தக் காலகட்டத்தில் இவருக்கு வயிற்றோட்டம், தோல் வியாதி எனப் பல அவஸ்தைகள். மேலும் இமயமலையில் இருந்து திரும்பிவரும் வழியில் வரலாறு காணாத கடும் புயல் மழை. உயிர்பிழைத்தால் போதும் என்ற யதார்த்த சூழலில் ஆன்மிகத் தேடல் போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் ஸ்டீவ் ஜாப்ஸ். சாமியார்களிடம் அறிவைத் தேடுவதைவிட தாமஸ் ஆல்வா எடிசன் போன்ற அறிவியலாளர்களிடம் அறிவைத் தேடுவதே சரியானது என்ற படிப்பினையைத் தான் பெற்றதாக ஜாப்ஸ் தெரிவித்தார். 


எனினும், இந்தியப் பயணத்தின் மூலமாக எதையும் தாங்கும் வலிமையான மனப்பாங்கை அவர் வளர்த்துக்கொண்டார். ‘மன வலிமையைப் பெறுவதற்கு இந்தியாவுக்குப் போய்வா’ என்று பின்னாட்களில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க்குக்கு அவர் அறிவுரை கொடுத்ததும், மார்க் ஜக்கர்பர்க்கும் அதேபோன்ற பயணம் மேற்கொண்டதும் பலரும் அறிந்த செய்தி. 

அமெரிக்கா திரும்பிய ஸ்டீவ் ஜாப்ஸ், வீடியோ கேம் தயாரித்துவந்த அட்டாரி நிறுவனத்தில் தொழில்நுட்பப் பிரிவில் வேலையில் சேர்ந்தார். தனது நண்பர் ஸ்டீபன் வாஸ்னிக்கை சந்தித்து, நாம் இணைந்து செயல்பட்டால் வளர்ந்துவரும் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் சாதனை படைக்கலாம் என்று கூறினார்.

ஆப்பிள் கம்ப்யூட்டரை உருவாக்கி விற்பனை செய்ய இருவரும் திட்டமிட்டனர். ஸ்டீவ் ஜாப்ஸ் வீட்டின் கார் நிறுத்தும் இடத்தைத் தங்கள் தொழில்நுட்பக் கூடமாக மாற்றினர். ஸ்டீபன் வாஸ்னிக்கின் அபாரமான தொழில்நுட்ப அறிவும், ஸ்டீவ் ஜாப்ஸின் தொழில்முனைப்பும் இணைந்து ஆப்பிள் 1 கம்ப்யூட்டர் உருவாகக் காரணமாக இருந்தன.

இருப்பினும், அதனை அதிக எண்ணிக்கையில் தயாரிக்க இருவரிடமும் பணம் இல்லை. ஸ்டீவ் ஜாப்ஸ் அசரவில்லை. வீடியோ கேம் கணினிகளை விற்றுவந்த பைட் ஷாப் என்ற கடை உரிமையாளரைச் சந்தித்து, தங்களது ஆப்பிள் 1 மேசைக் கணினியின் சிறப்புகளை எடுத்துக் கூறினார். “50 கணினிகளை நீங்கள் தயாரித்துக் கொண்டுவந்தால் தலா 12,000 ரூபாய் விலையில் வாங்கிக்கொள்கிறேன்” என்று உரிமையாளர் சொன்னபோது, அதனை வணிக ஒப்பந்தமாக எழுதிக் கையெழுத்துப் போட்டு வாங்கிக்கொண்டார் ஸ்டீவ் ஜாப்ஸ். 

இந்த ஒப்பந்தத்தை எடுத்துச்சென்று, க்ரேமர் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடம் பேசினார் ஜாப்ஸ். “என்னிடம் விற்பனை ஒப்பந்தம் இருக்கிறது, ஒரு மாதக் கடன் நிபந்தனையுடன் எலெக்ட்ரானிக்ஸ் மூலப்பொருட்களை கொடுங்கள்” என்று கோரிக்கை வைத்தார். க்ரேமர் எலெக்ட்ரானிக்ஸ் விற்பனை மேலாளர், ஸ்டீவ் ஜாப்ஸின் மன உறுதியைப் பார்த்து வியந்து எலெக்ட்ரானிக்ஸ் மூலப் பொருட்களைக் கொடுத்து உதவினார். ஸ்டீவ் ஜாப்ஸும், ஸ்டீபன் வாஸ்னிக்கும் இரவு பகலாக உழைத்து, ஒரே மாதத்தில் 50 மேசைக் கணினிகளை சப்ளைசெய்து முதல் லாபத்தைச் சுவைத்தனர். 

அடுத்து, கலர் மானிட்டர், ஒருங்கிணைந்த விசைப்பலகை போன்றவற்றோடு கூடிய ஆப்பிள் 2 மேசைக் கணினியை அதிக அளவில் தயாரித்து விற்க முடிவு செய்தனர். வங்கிகள் இவர்களை நம்பி கடன் தர மறுத்தன. இதுபோன்ற தொடக்க நிறுவனங்களில் முதலீடு செய்துவந்த மைக் மற்குலாவைச் சென்று சந்தித்து தங்களது கனவுத் திட்டத்தை விவரித்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். மைக் மற்குலா இசைவு தெரிவித்தார். சுமார் ஒன்றரை கோடி ரூபாய் நிதி கிடைத்தது. ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீபன் வாஸ்னிக், மைக் மற்குலா மூவரையும் பங்குதாரர்களாகக் கொண்ட ஆப்பிள் இங்க் நிறுவனம் 1976-ல் பதிவு செய்யப்பட்டது.

1977-ல் வெளிவந்த ஆப்பிள் 2 மேசைக் கணினிகள் மாபெரும் வரவேற்பைப் பெற்றன. ஆப்பிள் நிறுவனம், 1980-ல் பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டபோது முதலீடுகள் குவிந்தன. மொத்த பங்குச் சந்தையும் ஆப்பிள் பக்கம் திரும்பியது. பெப்சிகோலா கம்பெனியில் துணைத் தலைவராக இருந்த ஜான் ஸ்கல்லியைச் சந்தித்த ஸ்டீவ் ஜாப்ஸ், அவரை ஆப்பிள் நிறுவனத்தில் இணையுமாறு கேட்டுக்கொண்டார். ஜான் ஸ்கல்லி தயங்கியபோது, “எஞ்சிய வாழ்நாள் முழுவதும் அந்தச் சர்க்கரை கலந்த தண்ணீரை விற்கப் போகிறாயா அல்லது எங்களுடன் சேர்ந்து உலகை மாற்றும் உன்னதப் பணிக்கு வருகிறாயா?” என்று ஸ்டீவ் ஜாப்ஸ் கிடுக்கிப்பிடி போட்டார். ஆப்பிள் நிறுவனத்தில் சி.இ.ஓ ஆக இணைந்தார் ஜான் ஸ்கல்லி.

ஆப்பிள் நிறுவனத்தில் நிதி குவிந்தபோதும் வேறுவகையான சிக்கல்கள் தலைதூக்கின. வியாபாரப் போட்டி பெரிதாகியது. ஐ.பி.எம் நிறுவனம் கம்ப்யூட்டர் தயாரிக்கத் தொடங்கி, பெர்சனல் கம்ப்யூட்டர்களைப் பிரபலமாக்கி பந்தயத்தில் முந்திச் சென்றது. பெரிய விளம்பரத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் லிசா கம்ப்யூட்டர்கள் தோல்வியைத் தழுவின.
 
கிராஃபிக்ஸ் நுட்பத்துடன் கூடிய மாக் கம்ப்யூட்டர்கள் தயாரிப்புப் பிரிவு, ஸ்டீவ் ஜாப்ஸ் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆப்பிள் 2 கம்ப்யூட்டர்கள் பிரபலமான அளவுக்கு மாக் கம்ப்யூட்டர்கள் பிரபலமாகவில்லை. எனினும், சந்தைத் தேவைக்கும் அதிகமாக மாக் கம்ப்யூட்டர்கள் தயாரிக்கப் பட்டன. ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் கட்டுப்பாட்டில் மாக் கம்ப்யூட்டர் தயாரிப்புப் பிரிவு இருந்த காரணத்தால் சி.இ.ஓ ஜான் ஸ்கல்லியால் அதனைக் கேள்வி கேட்க முடியவில்லை. 

தோல்விகளுக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் காரணம் என்று சுட்டிக் காட்டப்பட்டபோது அவரால் ஜீரணிக்க முடியவில்லை. ஆப்பிள் நிறுவனத்திலிருந்து வெளியேறுமாறு ஜான் ஸ்கல்லிக்கு சொல்லி அனுப்பினார் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆனால், நிர்வாகக்குழு வேறு மாதிரி முடிவு எடுத்தது. ஸ்டீவ் ஜாப்ஸ் வெளியேறுமாறு நிர்பந்தித்தது. தனது நண்பர்கள் அனைவரும் எதிரிகளாக மாறி, தான் உருவாக்கிய ஆப்பிள் நிறுவனத்தில் இருந்தே தன்னை வெளியேற்றியபோது ஸ்டீவ் ஜாப்ஸ் மன நிலை எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். 21 வயதில் தொழில் முனைவோர். 23 வயதில் கோடீஸ்வரர். 25 வயதில் மிகப் பிரபலமான மனிதர். 30 வயதில் தனது நிறுவனத்திலிருந்தே துரத்தியடிக்கப்பட்ட தோல்வியாளர்.  

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக உரையின்போது அந்த துயரமான நாட்களைப் பற்றி இப்படிக் குறிப்பிட்டார் ஸ்டீவ் ஜாப்ஸ்: “அப்போது அதனை நான் எதிர்பார்க்கவில்லை என்பதால், அதிர்ச்சி அடைந்தது உண்மைதான். ஆனால், அதுதான் எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசு என்பதை பின்னர் உணர்ந்தேன். வெற்றியாளரின் கனத்த இதயத்துக்குப் பதில், தொடங்குபவரின் மென்மையான இதயம் எனக்குக் கிடைத்தது. பரபரப்பிலேயே ஓடிக்கொண்டிருந்த நான் மிகவும் ஆக்கபூர்வமாகச் சிந்திக்கத் தொடங்கிய காலம் அதுதான்.’’

ஆப்பிளில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், தொழில் வணிக நிறுவனங்களை இலக்காகக் கொண்டு நெக்ஸ்ட் என்ற புதிய கம்ப்யூட்டர் நிறுவனத்தைத் தொடங்கினார் ஸ்டீவ் ஜாப்ஸ். அதேபோன்று கணினி வரைகலை நிறுவனமான பிக்சர் நிறுவனத்தின் பாதிக்கும் மேற்பட்ட பங்குகளை வாங்கி அதன்  தலைவரானார். இவை இரண்டுமே அவரது வெற்றிகரமான முடிவுகளாக அமைந்தன. பிக்சர் நிறுவனத்தை பின்னாட்களில் 50,000 கோடி ரூபாய்க்கு டிஸ்னி நிறுவனம் வாங்கியது. ஸ்டீவ் ஜாப்ஸ் வெளியேற்றத்துக்குப் பின்னர் சிறிதுகாலம் வளர்ச்சி பெற்ற ஆப்பிள் நிறுவனம், 1990-க்குப் பின்னர் பெரும் நிதிச் சிக்கல்களை எதிர்கொண்டது. ஸ்டீவ் ஜாப்ஸ் வெளியேறக் காரணமாகக் கருதப்பட்ட ஜான் ஸ்கல்லி 1993-ம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். 


வரலாறு சுழன்றது. ஆப்பிள் நிறுவனத்தின் மாக் கம்ப்யூட்டருக்கு, நெக்ஸ்ட் நிறுவன மென்பொருளை உபயோகிப்பது என்று 1996-ல் முடிவானது. நெக்ஸ்ட் நிறுவனத்தைப் பெரும் தொகை கொடுத்து ஆப்பிள் நிறுவனம் வாங்கிக்கொண்டது. நெக்ஸ்ட் நிறுவனத் தலைவரான ஸ்டீவ் ஜாப்ஸ், ஆப்பிள் நிறுவன ஆலோசகரானார். பின்னர், ஆப்பிள் நிறுவனத்தின் முடிசூடா மன்னரானார். 

சவால்களை எதிர்கொண்டு ஆப்பிள் நிறுவனத்துக்குப் புதுரத்தம் பாய்ச்சும் புதிய பொறுப்பு அவருக்குத் தரப்பட்டது. ஐ போன்,     ஐ பாட், ஐ புக்  என விதவிதமான, வெற்றிகரமான தயாரிப்புகளை ஊக்குவித்து வெளியிடச் செய்த ஸ்டீவ் ஜாப்ஸ், ஆப்பிள் நிறுவனத்தை உன்னத இடத்துக்கு இட்டுச் சென்றார். ஆப்பிள் நிறுவனத்தை 30 லட்சம் கோடி ரூபாய் பெருமானம் உள்ள ராட்சச நிறுவனமாக மாற்றிக் காட்டினார்.

தனது தொழில் துறை சவால்களுக்கு இடையே ஸ்டீவ் ஜாப்ஸ், மற்றொரு போராட்டமும் நடத்திக்கொண்டிருந்தார். 2003-ம் ஆண்டிலேயே அவருக்கு கேன்சர் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மரணத்துடன் அவர் நடத்திய நீண்ட போராட்டம், 2011-ம் ஆண்டு அவரது 56-வது வயதில் முடிவுக்கு வந்தது. 
தனது வாழ்நாளில் பிறப்பு முதல் இறப்புவரை, தோல்விகளைத் தாங்கிக்கொண்டு, மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கப் பழகிய ஸ்டீவ் ஜாப்ஸ், இளைஞர்களுக்குச் சொல்லிய முக்கிய அறிவுரை: “வாழ்க்கை சில வேளைகளில் உங்கள் தலையில் செங்கல்லைக் கொண்டு தாக்கும். மனம் தளராதீர்கள். நம்பிக்கையை மட்டும் ஒருபோதும் இழக்க வேண்டாம்.” 

சுசி திருஞானம் 

நன்றி- விகடன்

ஒன்பது வயது இந்திய வம்சாவளிப் பெண்ணுக்கு ஆப்பிள் புரோகிராமர் பரிசு

ஒன்பது வயது இந்திய வம்சாவளிப் பெண்ணுக்கு ஆப்பிள் புரோகிராமர் பரிசு


இந்த ஆண்டு நடைபெற்ற ஆப்பிள் நிறுவனத்தின், உலக அளவிலான செயலிகள் வடிவமைப்பாளர்கள் கருத்தரங்கில் அனைவரது ஆச்சரியமும் மதிப்பும் கலந்த கவனத்தை ஈர்த்தவர் அன்விதா விஜய் என்னும் ஒன்பது வயதே ஆன, இந்திய வம்சாவளிப் பெண் ஆவார். இவர் தற்போது தன் பெற்றோர்களுடன் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசித்து வருகிறார். மவுண்ட் வியூ என்னும் தொடக்கப்பள்ள்யில், மூன்றாம் நிலை வகுப்பில் படித்து வருகிறார். இதுவரை நடைபெற்ற அனைத்து ஆப்பிள் டெவலப்பர் கருத்தரங்குகளில் கலந்து கொண்டவர்களில், மிகக் குறைந்த வயதுடையவர் (9) இவர்தான். புரோகிராமர்களுக்க்கு, ஆப்பிள் நிறுவன அழைப்பின் பேரில், இக்கருத்தரங்கில் கலந்து கொள்வது, ஒரு பெரிய விருது ஆகும்.

குழந்தைகளுக்கான செயலி ஒன்றை வடிவமைக்க வேண்டும் என அன்விதா விஜய் முடிவெடுத்து, புரோகிராமிங் அறிந்து, செயலிகளை உருவாக்கியுள்ளார். முதலில் உருவாக்கிய GoalsHi செயலிக்கு, ஆப்பிள் நிறுவனம் பத்தாயிரம் டாலர் பரிசளித்துள்ளது. இரண்டாவதாக உருவாக்கிய ஸ்மார்ட்கின்ஸ் அனிமல்ஸ் (Smartkins Animals) என்ற செயலி அவருக்கு, ஆப்பிள் நிறுவன அழைப்பின் பேரில், புரோகிராமர்கள் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பினைத் தந்துள்ளது. புரோகிராமர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் இலக்காகக் கொண்டிருப்பது, இந்த கருத்தரங்கில், ஆப்பிள் நிறுவனத்தின் அழைப்பாளராகக் கெளரவம் பெற்று கலந்து கொள்வதைத்தான். இதனைத் தன் ஒன்பது வயதில் பெற்றுள்ளார், அன்விதா விஜய்.

100 விலங்குகளைக் காட்டி, சிறுவர்களை அவற்றின் பெயர் சொல்லிப் பழக்கப்படுத்த இவர் அமைத்து வழங்கிய “ஸ்மார்ட்கின்ஸ் அனிமல்ஸ்” செயலியை, ஆப்பிள் ஸ்டோரில் இலவசமாகவும், கட்டணம் செலுத்தியும் பெறலாம். இலவசமாக ஐபோனிலும், ஐ பேடிலும் பதிந்து கொண்டால், குறைந்த எண்ணிக்கையில் மிருகங்கள் காட்டப்படுகின்றன. இவற்றை எப்படி அழைப்பது என குழந்தைகள் கற்றுக் கொண்டு, அந்தப் பக்கத்திலேயே தரப்பட்டுள்ள மைக் படத்தினை அழுத்தி, குழந்தைகள் மிருகங்களின் பெயர்களைக் கூறலாம். இது பதிவாகும். பின், அதனை இயக்கிச் சரியாகக் குழந்தைகள் கூறியுள்ளார்களா என்று சோதித்துக் கொள்ளலாம். மேலும் மிருகங்களை இணைக்க ஒரு டாலர் செலுத்திப் பெறலாம். இதனைப் பற்றி அறிய http://www.smartkins.com/ என்னும் தளம் செல்லவும். செயலியை ஐபேட் மற்றும் ஐபோனில் பதிந்து இயக்கிப் பார்க்க, ஆப்பிள் ஸ்டோர் செல்லவும்.

இந்த செயலியில், செல்லப் பிராணிகளாகவும், பண்ணை வீடுகளில் வளர்க்கும் பிராணிகளாகவும், (நாய், பசு, குதிரை போன்றவை) 30க்கும் மேற்பட்டவை உள்ளன. சிங்கம், புலி, சிறுத்தை மற்றும் யானை போன்ற காட்டு விலங்குகள் 30க்கும் மேலாகக் காட்டப்படுகின்றன. கடல் வாழ் பிராணிகள் (ஷார்க், கடல்குதிரை மற்றும் டால்பின் போன்றவை)பத்துக்கு மேல் உள்ளன. 20க்கும் மேற்பட்ட பறவைகள் வரிசையாக இடம் பெற்றுள்ளன. முதலை, ஆமை, வண்ணத்துப்பூச்சி போன்றவை ஒரு குழுவாகத் தரப்பட்டுள்ளன.

இதற்கு முன்னரும் GoalsHi என்ற ஒரு செயலியை, ஆப்பிள் சாதனங்களில் இயங்கும் வகையில் வடிவமைத்து ஆப்பிள் நிறுவனத்தின் பரிசைப் பெற்றிருந்தார். ஏழு வயதிலிருந்து செயலிகளை உருவாக்கி வருகிறார்.

இவர் இதற்காக, எந்த கம்ப்யூட்டர் பள்ளியிலும் புரோகிராமிங் குறித்துப் படிக்கவில்லை. யு ட்யூப்பில், புரோகிராம் எழுதுவதற்கான ‘கோடிங் பாடங்களை’ மீண்டும் மீண்டும் பார்த்து, கற்றுக் கொண்டு, இந்த செயலியை உருவாக்கியுள்ளார். 

அன்விதாவை ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், கருத்தரங்கில் அறிமுகப்படுத்தினார். “உலகின் மிகச் சிறந்த புகழ் பெறக் கூடிய, மிகக் குறைந்த வயதுடைய புரோகிராமர்” என அவரைப் புகழ்ந்தார். “நான் ஒரு அப்ளிகேஷன் டெவலப்பராக உருவாக விரும்புகிறேன். அதன் மூலம், இந்த உலகில் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்த முடியும்” என்கிறார் அன்விதா. அவர் ஒரு புரோகிராமராக உருவாவதன் மூலம், சிறந்ததொரு தொழில் முனைவோராக வர வேண்டும் என விரும்புகிறார். ஆப்பிள் கருத்தரங்கில் கலந்து கொண்ட தொழில் முதலீட்டாளர்களிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்து கலந்துரையாடினார். 

பத்தாயிரம் டாலர் பரிசு பெற்ற இவருடைய GoalsHi என்னும் செயலி, குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்குமானது. எப்படி இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும், நேரத்தினை எப்படி நிர்வகிக்க வேண்டும், இலக்கு நோக்கிய நம் பணியை எப்படி கண்காணித்து தரம் உயர்த்த வேண்டும், குழுவாக எப்படி செயல்பட வேண்டும் எனப் பல வழிகளைக் காட்டுகிறது. இதனைப் பின்பற்றி, பயன்படுத்தினால், கடினமான வேலைப் பணி கூட எளிதாகத் தெரியும் என ஒருவர் பாராட்டுரை வழங்கியுள்ளார்.

அன்விதாவின் தாயார், புவனா விஜய், ஐ.பி.எம். நிறுவனத்தில், வர்த்தக ஆலோசகராக உள்ளார். அதனாலேயே, அன்விதாவிடம் வர்த்தக ரீதியாக உயர வேண்டும் என்ற ஆசையும், இலக்கும் ஆரம்ப முதலே இருந்து வந்ததாக அவர் தாயார் தெரிவித்துள்ளார். சிறு வயது முதல், ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு சிறந்த முன் மாதிரி தலைவராக இருந்தார் என்றும் இவர் குறிப்பிட்டுள்ளார்.

அன்விதாவிடம் புரோகிராம் அமைப்பது குறித்து கேட்டபோது, “கருத்தாகத் தோன்றும் மிகப் பெரிய பணி முதலில் ஒரு தோற்றமாக நம் முன் இருக்கும். ஆனால், அதனைச் செயலியாக மாற்றுவது சற்று கடினமான பணியாகும். புரோட்டோ டைப், டிசைன் அமைப்பு, இணைப்பு, பயனர் இடைமுகம் அமைப்பது, புரோகிராம் எழுவது, அதனைச் செயல்படுத்திச் சோதனை செய்வது, பிழைகளைச் சரி செய்வது எனப் பன்முகப் பணியாகும் அது” என்று குறிப்பிட்டுள்ளார்.

நீ வளர்ந்து பெரியவளாக வருகையில் என்னவாக உருவாக விரும்புகிறாய்? என்று கேட்டபோது, “நான் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குபவராக வளர விரும்புகிறேன். அப்போதுதான், மக்கள் கற்றுக் கொண்டு, அதன் மூலம் பயனடையும் வகையிலான கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும்” என்றார். “தொழில் நுட்பத்தின் மூலம், மக்களுடைய வாழ்க்கையில், ஒரு மாற்றத்தை உருவாக்க விரும்புகிறேன்” என்று தன்னுடைய பெயர் மற்றும் நிறுவன அட்டையில் குறிப்பிட்டுள்ளார். “என்ன ஓர் அருமையான உயர்ந்த நோக்கம்” எனப் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டு, ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிக் குக் அவர்களைச் சந்திப்பது தன் பல நாள் இலக்காக இருந்தது என இவர் தெரிவித்துள்ளார். எனவே, அதற்கான விண்ணப்பத்தினை ஆப்பிள் நிறுவனத்திற்கு அனுப்பி, தேர்ந்தெடுக்கப்பட்டு, சிறப்பு பெறுள்ளார். 

ஆப்பிள் நிறுவனத்தின் உலகளாவிய இந்த டெவலப்பர் கருத்தரங்கில், மாணவர்களாயுள்ள 350 புரோகிராமர்கள் அழைக்கப்பட்டு கலந்து கொண்டனர். இவர்களில், 120 பேர், 18 க்கும் குறைவான வயதுடையவர்களே. இதற்கென விண்ணப்பித்தவர்களில், பெண்களே அதிகம் இருந்தனர். சென்ற ஆண்டைக் காட்டிலும் மூன்று மடங்கு எண்ணிக்கையில், பெண்கள் விண்ணப்பம் அனுப்பி இருந்தனர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில், 22 சதவீதம் பேர் பெண்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

Jun 25, 2016

ஆன்ராய்ட் போனில் ஆபாசப்படம் பார்ப்பவரா நீங்கள்..? எச்சரிக்கை!

இன்டர்நெட் பார்ன்’ (Internet Porn) அதாவது இணையம் மூலம் ஆபாசப்படங்களை பலர் பாக்கின்றனர் . கம்ப்யூட்டர் மற்றும் பிசிக்களை விட ஸ்மார்ட்போன்களில் தான் (ஆப்ஸ்கள் முதற்கொண்டு இருக்கிறது ) அதிக அளவிலான ஆபாசம் சார்ந்த அணுகல்கள் நடைபெறுவதே இன்டர்நெட் பார்ன் வளர்ச்சிக்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்..!
 
 
 
எது எப்படி இருப்பினும் ஆபாசப்படங்கள் பார்ப்பது என்பது முற்றிலும் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விடயம் ஆகும், உடன் அதற்கான எந்த விதமான சட்டப்பூர்வமான தடைகளும் இல்லாத தேசத்தில் தான் நாம் வாழ்கிறோம். இருப்பினும் ஆபாச படங்கள் சார்ந்த அணுகலில் ஈடுபடும்போது இதர சைபர் தந்திரங்களிலும் நாம் சிக்கும் வாய்ப்புண்டு, குறிப்பாக ஆண்ராய்டு போனில், ஆபாசப்படம் படங்கள் அணுகும் போது..!
அப்படியாக, ஆண்ராய்டு போனில், ஏன் ஆபாச படம் பார்க்க கூடாது என்பதற்கான 4 காரணங்களை பற்றிய தொகுப்பே இது..!

காரணம் 1 : சட்டவிரோத வாஸ் சந்தாக்களுக்கு வழிவகுக்கும் (illegal VAS subscriptions)

பெரும்பாலான ஆபாச வலைத்தளங்கள் இலவசமாகத் தான் பெறப்படுகின்றன. இதனை பயன்படுத்தி சில வலைத்தளங்கள் லாபம் பார்க்க சட்ட விரோதமான சட்டவிரோத வாஸ் சந்தாக்களை நடைமுறைப் படுத்தலாம்.

பின்பு நீங்கள் உங்கள் ஆண்ராய்டு போன் வழியாக குறிப்பிட்ட வலைதளத்தை கிளிக் செய்தாலே போதும் வாஸ் சந்தா ஆட்டோமட்டிக்காக செயல்படத் தொடங்கிவிடும்.

காரணம் 2 : மேலும் பல டிக்கர்ஸ்களை ஈர்க்கும் (Attracts more porn tickers)
 
பார்ன் டிக்கர்ஸ் அதாவது போலியான ஆண்ராய்டு ஆப்ஸ்கள், ஆபாசப் படங்கள் அனுகலாம் என்று உள்ளே நுழைந்தால் நீங்கள் கிளிக் செய்யும் அனைத்திற்கும் பின்னாலும் எதோ ஒரு கேம் எதோ ஒரு ஆப் டவுன்லோட்டிங் இருக்கும்.

காரணம் 3 : பெரிய அளவிலான செக்யூரிட்டி ரிஸ்க் (Huge security risks)
 
உங்கள் வங்கி மற்றும் இதர பெர்சனல் விடயங்களுக்கான ஜிமெயில் ஐடி மூலம் ஆபாச வலைதளங்களை அணுகினால் நீங்கள் பெரிய அளவிலான சைபர் குற்ற சம்பவங்களில் சிக்க வாய்ப்புள்ளது.

காரணம் 4 : ரான்சம்வேர்ஸ் (Ransomwares)
 
ஒன்றை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் ஆன்லைனில் எதுவுமே இலவசம் இல்லை, எல்லாவற்றிக்கும் பின்னாலும் ஒரு வியாபாரம் இருக்கிறது. அப்படியான ஒன்று தான் ரான்சம்வேர்ஸ் எனப்படும் தீம்பொருள் (மால்வேர்)..!

இதுபோன்ற மால்வேர்கள் ஒரு சாதனத்தை முழுமையாக ‘லாக்’ செய்துவிடும், பின்பு அதை ‘அன்லாக்’ செய்ய பயனாளியை குறிப்பிட்ட தொகையை செலுத்தும்படி கட்டாயப்படுத்தும்.

இது போன்ற முரட்டுத்தன்மான ரான்சம்வேர்ஸ் மால்வேர்கள் ஆபாச வலைதலங்களில் மிகவும் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இதனைப்போன்று பல தகவல்களை தெரிந்துக்கொள்ள எமது லங்காபுரி Facebook பக்கத்தினை லைக் செய்யவும்…

கூகுள் மறைக்கும் உலகின் ரகசிய இடங்கள் !

கூகுள் மறைக்கும் உலகின் ரகசிய இடங்கள் !
எல்லாமே எல்லாருக்கும் கிடைச்சிடாது, எல்லாமே எல்லாருக்கும் கிடைச்சிட்டா, நல்லாவும் இருக்காது. இதை தான் இப்போ கூகுள் செய்திட்டு இருக்கு.

ஆமாம் அவங்க கிட்ட இருக்கும் தரவுகளை மறைத்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது. அந்த வகையில் கூகுள் மறைக்கும் உலகின் சில ரகசிய இடங்களின் தொகுப்பு தான் இது.

தெற்கு கரோலினா மறைக்கப்பட்ட இடம் 01:
1
கீயோவ் அணை, தெற்கு கரோலினா
கீயோவ் அணை, தெற்கு கரோலினா

2

மனிதர்களால் கட்டமைத்த அணை கூகுளில் இருந்து மறைக்கப்பட்டுள்ளது. இந்த அணையின் உதவியோடு ஒகோனீ என்ற அணு நிலையம் இயங்க உதவி வருகின்றது. இதன் பாதிப்பு எந்தளவு இருந்தால் இவ்விடம் பொதுவாக மறைக்கப்படும்.

நெதர்லாந்து மறைக்கப்பட்ட இடம் 02 :
3
வோல்கெல் விமான தளம், நெதர்லாந்து
வோல்கெல் விமான தளம், நெதர்லாந்து
4
மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்படும் இந்த விமான தளத்தில் அமெரிக்கா தயாரித்த சுமார் 22 அணு வெடி குண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதோடு பி61 வெப்பாற்றல் வெடி குண்டுகள் மற்றும் ஹிரோஷிமா மற்றும் நாகசாக்கியில் வீசப்பட்டதை விட நான்கு மடங்கு சக்தி வாய்ந்த அதிபயங்கரமான வெடி குண்டுகள் இங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
இத்தகவல்கள் விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல்களில் இருந்து உறுதி செய்யப்பட்டது.

நுனாவட் மறைக்கப்பட்ட இடம் 03 :
6
பேக்கர் ஏரி, நுனாவட்
பேக்கர் ஏரி, நுனாவட்
7
கனடாவின் வடக்கு பகுதியில் அமைந்திருக்கும் இந்த ஏரியின் சுற்று வட்டார பகுதிகளில் விசித்திர நடவடிக்கைகள் அரங்கேறுவதாக கூறப்படுகின்றன. இதனை நிரூபிக்கும் வகையில் இப்பகுதி கூகுளில் இருந்து மறைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மறைக்கப்பட்ட இடம் 04 : கேஸ்கேடு, அமெரிக்கா
8
கேஸ்கேடு, அமெரிக்கா
9
இப்பகுதியானது வாஷிங்டன் மற்றும் ஆரிகான் பகுதிகளின் எல்லையில் அமைந்துள்ளதாகவும், இங்கு அமெரிக்காவின் மிகவும் சர்ச்சைக்குரிய ஹார்ப் அதாவது ஹை ஃப்ரீக்வன்ஸி ஆக்டிவ் ஆரோரல் ரிசர்ச் ப்ரோகிராம் நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது.

ரஷ்யா மறைக்கப்பட்ட இடம் 05 : ரஷ்யாவின் மர்ம பகுதி
10
ரஷ்யாவின் மர்ம பகுதி
11
ரஷ்யாவில் இப்படி ஒரு இடம் இருப்பதே பலருக்கும் தெரியாது. இப்பகுதியானது சைபேரியாவின் துந்த்ராவின் அருகில் அமைந்துள்ளது. 1986 ஆம் ஆண்டு ரஷ்யாவில் பல்வேறு மூடப்பட்ட நகரங்கள் இருக்கின்ற, இங்கு பலர் வாழ்ந்து வருகின்றனர்.

இப்பகுதிகளுக்கு மர்மமான முறையில் எண் அடிப்படையில் பெயர் சூட்டப்பட்டுள்ளது போன்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.
ஹங்கேரி மறைக்கப்பட்ட இடம் 06 : ஹங்கேரி எண்ணெய் நிறுவனம்
13
ஹங்கேரி எண்ணெய் நிறுவனம் கூகுளில் இருந்து இந்த நிறுவன கட்டிடங்கள் முழுமையாக மறைக்கப்பட்ட போதும், இதனினை மற்ற மேப்களை பயன்படுத்தும் போது தெளிவாக காண முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நெதர்லாந்து மறைக்கப்பட்ட இடம் 07 :
14
ஹியுஸ் டென் போஷ் பேலஸ், நெதர்லாந்து
15
ஹியுஸ் டென் போஷ் பேலஸ், நெதர்லாந்து இந்த அரண்மனையை சுற்றி இருக்கும் பகுதிகள் மிகவும் தெளிவாக காணப்படுகின்றது, ஆனால் இதன் கட்டிடம் மட்டும் கூகுளில் மழுங்கடிக்கப்பட்டுள்ளது.

கோலோனல் சான்டர்ஸ் மறைக்கப்பட்ட இடம் 08 :
16
கோலோனல் சான்டர்ஸ்
கோலோனல் சான்டர்ஸ்
17
கென்டக்கி வகை வறுத்த கோழி வகைகளை கண்டறிந்தவர் என்ற பெருமையை கொண்டவராக அறியப்படுகின்றார், ஆனால் இவர் குறித்த தகவல்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக மழுங்கடிக்கப்பட்டுள்ளது.

கூகுள் மேப்ஸ் சென்று கேஎஃப்சி உணவகத்தை தேடும் போது கோலோனல் முகம் மங்கலான படி இருப்பதை காண முடியும்.

ஈராக் மறைக்கப்பட்ட இடம் 09 : பேபிலான், ஈராக்
18
பேபிலான், ஈராக் கூகுள் மங்கலாக காணப்படும் இந்த பழைமை வாய்ந்த நகரம் ஆகும். இப்பகுதியினை சதாம் ஹூசைன் பல கோடி செலவில் கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டார் என்றும் கூறப்படுகின்றது.

அலெக்ஸி மில்லர் மறைக்கப்பட்ட இடம் 10 : அலெக்ஸி மில்லர்
20
அலெக்ஸி மில்லர் ரஷ்யாவை சேர்ந்த நிறுவனம் ஒன்றின் சிஇஒ’வான மில்லர் தனது இல்லம் கூகுளில் இருந்து மழுங்கடிக்கப்பட்டுள்ளது.