May 31, 2017

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாம்பழம்

உயிர்ச்சத்து அதிகம் உள்ள பழங்களில் மாம்பழம் முக்கியமானது. இதை சாப்பிடுவதன் மூலம் ரத்த விருத்தி அதிகரிக்கும். உடலுக்கு நல்ல பலம் கிடைக்கும்; நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். “உடல் சூடு அதிகரிக்கும்’ என்று பலரும் மாம்பழம் சாப்பிட தயங்குகின்றனர். ஆனால், இதற்கு மருத்துவ அடிப்படையில் எந்த சான்றும் இல்லை என, மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மாம்பழத்தில் வைட்டமின் “ஏ’வும், வைட்டமின் “சி’யும் அதிகம் உள்ளன. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால், இந்த இரண்டு வைட்டமின்களும் எளிதாக நமது உடலுக்கு கிடைத்து விடும். பலர், மாம்பழத்தை முழுவதுமாக சாப்பிடாமல், தோல் பகுதியை எறிந்துவிடுகின்றனர். அதன் மேல் தோல் பகுதியில்தான் வைட்டமின் “சி’ சத்து அதிகமாக உள்ளது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவை, மாம்பழத்தில் அதிகமாக உள்ளன.

மாம்பழத்தில் “ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ்’ எனப்படும் எதிர் ஆக்சிகரணிகள் நிறைய அடங்கியுள்ளன. அவை, இருதய நோய் வராமல் தடுக்கும் திறன் கொண்டவை. விரைவில் முதுமை தோற்றம் அடைவதையும் தடுக்கின்றன. மாம்பழத்தில் இருக்கும் இரும்புச்சத்து, கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது. ரத்த சோகை உள்ளவர்களுக்கு, பாதிப்பை குறைக்கும்; நல்ல பலனும் தரும். நாளொன்றுக்கு எத்தனை மாம்பழம் சாப்பிடலாம் என்பது குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டுக்கொள்வது நல்லது.

வறண்ட தோல் சருமம் இருந்தாலோ அல்லது செதில் செதிலாக உதிர்ந்து காணப்பட்டாலோ, மாம்பழத் துண்டுகளை அந்த இடத்தில் சுமார், 10 நிமிடங்களுக்கு வைத்திருந்து பின்னர் கழுவி விட்டால், நல்ல பலன் கிடைக்கும். அஜீரண பிரச்னை உள்ளவர்களுக்கு மாம்பழத்தைப் போன்று உதவுவது வேறு எதுவும் இல்லை. வயிற்றில் அமில சுரப்பு போன்றவை உள்ளவர்களுக்கும் நிவாரணம் அளிப்பதோடு, சரியான ஜீரணத்திற்கும் உதவுகிறது.

தினமும் மாம்பழம் உண்பதன் மூலம் மாலைக்கண் கோளாறு, நரம்புத்தளர்ச்சி, மேனியில் சுருக்கங்கள் நீங்க வாய்ப்பு உள்ளது. மாம்பழம் பழுத்திருந்தால் மட்டுமே சாப்பிடலாம்; கனியாத பழங்களை சாப்பிட்டால் கண் கோளாறு, மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மனிதர்களுக்கு தினசரி 5 ஆயிரம் யூனிட் வைட்டமின் தேவை. மாம்பழம் அத்தேவையை நிறைவு செய்கிறது. இதை உண்பதன் மூலம் இருதயம் வலிமை பெறும்; பசியை தூண்டுகிறது. உடல் தோல் நிறம் வளமை பெறுவதுடன், முகத்தில் பொலிவும் உண்டாகும்.

கல்லீரல் குறைபாடுகள் விலகும். புது ரத்தஅணுக்கள் உற்பத்தியாகும். இயற்கையான முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் மட்டுமே சாப்பிடவேண்டும். செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழம் உடலுக்கு கெடுதலை உண்டாக்கும். மாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும். தீராத தலைவலியை மாம்பழச்சாறு தீர்க்கும். மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்தைக் கூட்டும்.
பல்வலி, ஈறுவலி போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை கொண்ட மாம்பழம், கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் போன்றவற்றுக்கும் நல்ல பலன் தரும். மாம்பழச்சதையை மிக்சியில் இட்டு, சிறிதளவு பால் சேர்த்து, ஏலக்காய், ஐஸ் துண்டுகளைச் சேர்த்து அருந்த சுவையாக இருப்பது மட்டுமின்றி, கோடை வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பையும், தோல் நோய் தொல்லைகளையும் போக்கும்.

நோக்கியா 6, 5 மற்றும் 3 : தள்ளிப்போன இந்திய வெளியீடு, கூடவே இன்னொரு சிக்கல்.!

இதையே தான் 7 மாசமா சொல்லிட்டு இருக்கீங்க ஆனா நோக்கியா போன் கைக்கு வந்த பாடில்லை என்று வாசகர்களே கடுப்பாகும் அளவு நோக்கியா சார்ந்த தகவல்களை நாங்கள் வெளியிடுகிறோம் என்று கூறுவதை விட, நோக்கியா நிறுவனம் மற்றும் அதன் கருவிகள் சார்ந்து தொடர்ந்து வெளியாகும் தகவல்கள் எங்களையும் சேர்த்தே கடுப்பாக்குகிறது என்று கூறினால் சற்று பொருத்தும். அதற்காக உங்களுக்கு தகவலை வழங்காமல் இருக்க முடியுமா.?? முடியாது அல்லவா.? ஆக, இதோ நோக்கியாவின் இந்திய வெளியீடு சார்ந்து வெளியான புதிய தகவல்கள், உங்களுக்காக.!

ஆன்லைனில் 
 
நோக்கியா 3310 (2017) கருவியானது இந்தியாவில் ரூ.3310/- என்ற விலை நிர்ணயத்தில் மே மாத மத்தியில் ஆன்லைனில் மட்டுமே ஆன்லைனில் கிடைக்கும் வண்ணம் க்ரோமா வழியாக விற்பனையை தொடங்கியது. இதனை தொடர்ந்து நோக்கியா ஆண்ட்ராய்டு கருவிகளும் விற்பனைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியது.
 
நடுப்பகுதி 
 
நோக்கியா 6, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 3 உட்பட நோக்கியா ஸ்மார்ட்போன்கள் ஜூன் மாதத்தில் இந்திய நாட்டில் வெளியிடப்படும் என்று சில நாட்களுக்கு முன்னர் தகவல் வெளியானது. ஆனால் சமீபத்திய தகவல் இந்த வெளியீடு ஜூன் மாதம் நடுப்பகுதிக்கு தள்ளிப்போகலாம் என தெரிகிறது.

முதலில் கிடைக்கும் 
 
மேலும், அனைத்து ஸ்மார்ட்போன்களும் ஒரே நேரத்தில் கிடைக்காது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. நோக்கியா 3 ஸ்மார்ட்போன் முதலில் கிடைக்கும் மற்றும் நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 தொடர்ந்து வெளியாகும் வரும் என்று வெளியான அறிக்கை கூறுகிறது.

உறுதி 
 
இதிலிருந்து நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் ஜூன் 15-க்கு வெளியாகலாம். ஆக மொத்தம் ஜூன் முடிவில், மூன்று நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களும் இந்திய சந்தையைத் தாக்கும் என்பது உறுதி.

நோக்கியா 6 அம்சங்கள் 
 
 - ரூ.20,000/- என்ற விலை நிர்ணயம் - 5.5 அங்குல முழு எச்டி 1080பி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே - 3 ஜிபி / 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி சேமிப்பு - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 430 செயலி - 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு - 8எம்பி செல்பீ கேமரா - 16எம்பி ரியர் கேமரா - கைரேகை சென்சார் - 4ஜி எல்டிஇ - 3000எம்ஏஎச் பேட்டரி - ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட்
 
நோக்கியா 5 (அம்சங்கள்) 
 
- ரூ.15,000/- என்ற விலை நிர்ணயம் - 5.2 அங்குல எச்டி 720பி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே - ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 430 எஸ்ஓசி - 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்பு - 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு - 13எம்பி பின்புற கேமரா - 4ஜி எல்டிஇ - 3000எம்ஏஎச் - ஓடிஜி ஆதரவு
 
நோக்கியா 3 அம்சங்கள் 
 
ரூ.10,000/- என்ற விலை நிர்ணயம் - 5 அங்குல எச்டி 720பி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே - க்வாட்கோர் மீடியா டெக் எம்டி6737 செயலி - 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்பு - 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு - 8எம்பி ரியர் கிம் - 8எமி செல்பீ கேம் - ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் - ஓ.டி.ஜி. ஆதரவு - 4ஜி எல்டிஇ - 2650எம்ஏஎச் பேட்டரி

May 18, 2017

ஐடியா ஃப்ளிப் கார்ட் கூட்டணி : 30ஜிபி டேட்டா யாருக்கெல்லாம் கிடைக்கும்?


ஜியோ தற்போது பல்வேறு சலுகைகளை அறிவித்துவருகிறது, அதற்க்குப் போட்டியாக ஐடியா பல்வேறு சிறப்பு சலுகைகள் மற்றும் கட்டணகுறைப்பு போன்றவற்றை அறிவத்துவருகிறது, இதனால் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்ப்பட்டுள்ளது.

தற்போது ஐடியா,ஃப்ளிப் கார்ட் இணைந்து 30ஜிபி இலவச டேட்டாவை அறிவித்துள்ளது, இவை தேர்ந்தேடுக்கப்பட்ட 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.


ஐடியா ப்ரீபெய்ட்:

ஐடியா ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் ரூபாய்.356 மற்றும் ரூபாய்.191க்கு ரீசார்ஜ் செய்தால் இலவச தரவுகளை பெறமுடியும் என மும்பையை சார்ந்த டெல்கோ ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐடியா வாடிக்கையாளர்கள்:

தற்போது அறிவிக்கப்பட்ட இந்த ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் தேர்ந்தேடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இலவச டேட்டா ஆபர்களை வழங்குகிறது என ஐடியா மற்றும் ஃப்ளிப் கார்ட் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

ரூபாய்.356 ரீசார்ஜ்:

ஜியோ வாடிக்கையாளர்கள் ரூபாய்.356க்கு ரீசார்ஜ் செய்தால் 30ஜிபி இலவச இலவச டேட்டாவை பெறமுடியும், மேலும் தினசரி டேட்டா வரம்பில்லாமல், உபயோகப்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூபாய்.191 ரீசார்ஜ்: ஜியோ வாடிக்கையாளர்கள் ரூபாய்.191க்கு ரீசார்ஜ் செய்தால் தினசரி 10ஜிபி டேட்டாவை மட்டுமே பெறமுடியும்.

4ஜி ஸ்மார்ட்போன்கள்:

 டெல்கோவின் கருத்துப்படி லெனோவா, மைக்ரோமேக்ஸ், மோட்டோரோலா மற்றும் பானாசோனிக் போன்ற 4ஜி ஸ்மாரட்போன்களுக்கு மட்டுமே இந்த ஆபர் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.