Jan 5, 2019

சிவலிங்கத்தில் அணு அறிவியல்-முன்பே கண்டறிந்த தமிழர்கள்.!உலகம் முழுக்க சிவ வழிபாடு பரவி விரிந்து கிடக்கின்றது. சிவலிங்கத்தை முதன்மையாக வணங்கியவர்கள் என்றாலே அதுவும் தமிழர்கள். அந்த அளவுக்கு சிவலிங்கத்தை பற்றி தெரிந்து வைத்துள்ளார்கள் தமிழர்கள்.
சிவ பெருமானால் முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்ட மொழி தமிழ் என்று சிறப்புகள் கூறப்படுகின்றது. இதற்கு பிறகே தமிழுக்கு உண்டான கடவுளாக சிவன் முருகனை நியமித்தார். சிவலிங்கத்தை குறித்து நம் முன்னோர்கள் நன்கு அறிந்துள்ளனர். சிவலிங்க வழிபாட்டில் அணு அறிவியலே மறைந்துள்ளது. லிங்கத்தில் இருந்து நியூட்ரான், புரோட்டான், எலக்ட்ரான்கள் வெளிப்படுகின்றன. இதை நம் தமிழர்கள் முன்பே கண்டறிந்து வழிப்பாடும் நடத்தியுள்ளனர். 

சிவ லிங்க வழிபாடு: சிவனை உருவமற்ற வழிபாடாகவும், லிங்க வழிபாடாகவும் வணங்குவது சைவத்தின் சிறப்பாகும். சாதி, மதம், இனம் என்று இல்லாமல் சிவனை உருவம் இல்லாமலும் வழிபடுகின்றனர். லிங்க வழிபாடு என்பது தமிழகத்தில் தான் அதிகம் காணப்படுகின்றது. தமிழகத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் பரவி விரிந்து கிடக்கின்றது. சிவன் தமிழை தோற்றுவித்த கடவுளாவும் இருக்கின்றார்.

தென்னார் உடைய சிவன்: தென்னார் உடைய சிவனே போற்றி, என்னாட்டாட்டவருக்கும் இறைவா போற்றி, தென்கயிலை மலையானே போற்றி என்ற பாடலின் வழியிலும் அவர் தமிழகத்தை சேர்ந்த கடவுகள் என்று விளங்குகின்றது. மேலும், தமிழகத்தில் 63 நாயன்மார்களும், சமயக்குறவர்ளான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர் ஆகியோரும் போற்றி பாடியுள்ளனர். ராவணன் சிவ பக்தர்களில் முதன்மையானவராக இருக்கின்றார். இதனோல் அவருக்கு இலங்கேஷ்வரர் என்ற பட்டம் சிவனால் வழங்கப்பட்டுள்ளது.

அணுவின் வடிவமே லிங்கம் : அ(சி)வன், அணுவின்றி எதுவும் இயங்காது என்று முன்னோர்கள் கூறுவார்கள். லிங்கத்தில் புரோட்டான் என்ற அணுவின் மையக்கருவை (நேர்மின்அணுத்துகள்) எலக்ட்ரான் என்ற மின் அணுத்துகள் வலமாக நீள் வட்டப்பாதையிலும், நியூட்ரான் என்ற மின்அற்ற சிற்றணுத்துகள் இடமாக எலக்டரான் எதிர்பாதையிலும், புரோட்டானைச் சுற்றிவந்த வண்ணமாகவே இருக்கின்றன.


அணுவின் தொகுப்பு: ஒவ்வொரு அணுவும் பிரணவவடிவமாக (ஓம் ) உள்ளதென்பர். புரோட்டான் ஸ்ரீ அகாரமாயும், எலக்ட்ரான் ஸ்ரீ உகாரமாகவும், நியூட்ரான் ஸ்ரீ மகாரமாகவும் இருக்கிறது. அகரமே இறைவன், உகரம் உயிர் சக்தி, மகரம் இருசக்திகள் இணையும் மாயா சக்தியாகவும், இருக்கின்றன. இதை நம் தமிழர்கள் முன்பு கண்டுபிடித்து வழிபாடு நடத்தியுள்ளனர்.

பிரம்மா, விஷ்ணு, சிவன்: மேலும் பிரம்மா, விஷ்ணு, சிவன், மூன்றின் பாங்காய் சிவலிங்கம் சேர்ந்திருப்பதால் ஆணவம், கன்மம், மாயை முறையே தொம்பதம், தற்பதம், அசிபதம்,எனவாகிறது. தற்பதம் ஜீவனுக்குள் பரந்து நிற்கின்ற அருட்சக்தி, அசிபதம், மூம்மலம் நீங்கிய சுத்த ஆன்மாவாகவும், ஜீவனுக்குள் தங்கியுள்ளது. பரவி வியாபித்துள்ள அருட்சக்தி கலக்குமிடமாகிறது.

அணுக் கூட்டங்களின் மாறுப்பட்ட குணம்: இம்மூன்று வேத வாக்கியப்பதங்கள் பிரவணத்தின் அணுபதமாகும். பிரபஞ்ச தோற்றமாய் விளங்கும் அனைத்துப் பொருட்களும் இவ்வித அணுக்கூட்டங்களின்மாறுபட்ட குணங்களுக்குத் தக்கவாறே பொருட்களும் தன்மையும் மாறுகிறது. 

அணுக் கூட்டங்கள்: எந்த ஒரு தனிமங்களும், அதன் தோற்றப் பரிமாணம்,அடர்த்தி,மற்றும் எடை வித்தியாசம், ரசாயன குணத் தன்மைகள், இவைகள் யாவும் அணுக்கூட்டங்களின் வேறுபாடுகளுக்கு ஏற்ப அமைகின்றன. உதாரணமாக, நியூட்ரான்களின் எண்ணிக்கையைப் பொறுத்து எடை கூடுதல் குறைவு ஆகும்.
அணுகளின் எடைகள்: புரோட்டான்களின் எண்ணிக்கையை மாறுபடும் போது தனிமங்களின் இராசயன குணங்கள் மாறுபடும். இம்மாற்றத்தத்துவத்தின் மையப்படுத்தப்பட்ட அலகே, அணு எண்ணும் எடையும், என விஞ்ஞானம் கூறுகிறது. முன்பே சொன்னபடி, ஒவ்வொரு அணுவினூள் நடைபெறும்.

நடராஜர் நடனம்: அணுச்சலனம் (திருநடனக்கூத்து) இவ்வடிப்படையில் ஒரு உலோகத்திலிருந்து மற்றொரு உலோகத்தை உருவாக்க, மாற்ற, மறைக்க இயலும் என்பதையும், உருக்குலைந்த எதையும் உருவாக்க செய்தும் (உடம்பு உட்பட) அணுமாற்றங்களைச் செய்யும் வழியறிந்துள்ளனர்.

அணுன் மாற்றங்கள்: மனக்காந்த அலைகளை உருவாக்கி அருட்காந்த அலைகளாக்கி, அணுமின் மாற்றங்களை உமிழும் சக்திமிக்க வல்லவர்களே ஞானிகள், உற்பத்தி (படைப்பு) என்ற சக்தி, ஒவ்வொரு அணுவும் தன்னிலிருந்து தனது உருவமான மற்றொரு அணுவை வெளியிடும் தன்மை படைத்தது. அஃதேபோல் நம் உடலிலுள்ள செல்(திசு)களுக்கும், உண்டு.

சுயம்பு லிங்கம்: புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே பழைமை வாய்ந்த சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. மேகமலை மேல்பரப்பில் பல்லாண்டுகாலமாக அருவி சிங்கம் என்ற சுனையில் நீர் நிறைந்து காணப்பட்டது. கல்வெட்டு ஆய்வுகளில் இந்த சுனையின் உள்ளே எட்டுக்கு எட்டு அடி கொண்ட லிங்கம் ஒன்று சுயம்புவாக கோவில் கொண்டிருப்பதாக தெரிய வந்தது.

சுனைநீர் வெளியேற்றம்: இதையடுதது தொல்லியல் துறையின் அனுமதியுடன் தன்னார்வ அமைப்பினர் மற்றும் பக்தர்கள் அந்த சிவலிங்கம் உள்ள குகையைத் தேடினர். கடந்த 4 நாட்களாக சுனையில் இருந்த நீர் வெளியேற்றப்பட்டு சகதியுடன் இருந்த சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது.

Previous Post
Next Post

0 Comments: